- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
Sorry for late update friends ❤️ நேரம் கடந்து பதிவு செய்ததிற்கு மன்னித்து விடுங்கள் தோழமைகளே ❤️
அந்திவானம் மணப்பெண்ணின் குங்கும வதனமாய் சிவந்திருக்கும் இந்த சாயங்கால வேளையில், யாத்ராவின் அறையில் உள்ள பால்கனியில்,
"காயம் நல்லா ஆறிடுச்சுல" என தன் கரம் பிடித்து பார்த்தபடி, வினவின தனது தோழி மதனாவிடம்,
"ஆமா டி இப்போ நல்லா ஆறிடுச்சு, இந்தா இந்த ஜூஸை குடிச்சிட்டே பேசு" என்று தன் கரத்தில் இருந்த பழச்சாரை கொடுத்த யாத்ரா மதனாவிடம்,
"அப்புறம் சொல்லு, கார்த்தி எப்படி இருக்கான்? அவன் ஏன் வரல" என்று வினவினாள்.
"இன்னைக்கு மாமாவும் அப்பாவும் சரக்கு வாங்க சூரத்துக்கு போயிருக்காங்க, அதனால அவன் தான் கடையில இருக்கான் அதான் வரல, ஹால்ட்டிக்கெட் வாங்க நாளைக்கு போகலாம்னு உன்கிட்ட சொல்ல சொன்னான்" என்றாள் மதனா.
அதை கேட்ட யாத்ராவோ, "அப்படியா பரவாயில்லையே, பையன் பொறுப்பாக ஆரம்பிச்சுட்டான் போல" என்று புன்னகையுடன் கூறினாள்.
அதை கேட்டு, "யாரு அவனா?" என பெருமூச்சை வெளியிட்ட மதனாவோ, தன்னை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த யாத்ராவிடம்,
"அவனை அனுப்புறதுக்குள்ள நான், என் அம்மா, அத்தை எல்லாரும் ஒரு வழியாகிட்டோம் தெரியுமா? கடைக்கு போகமாட்டேனு அவ்வளவு அடம் பண்ணினான்." என சலிப்புடம் கூறினாள்.
அதற்கு, "எங்க எக்ஸாம் முடிஞ்சதும் கடையில உக்கார வச்சிருவாங்களோனு அவனுக்கு பயம் டி, அதான் போக மாட்டிக்கிறான்" என்றாள் யாத்ரா.
அதை கேட்ட மதனாவோ, "ஆமா ஆமா வீட்ல மாமாவும், அப்பாவும் கூட அந்த ஐடியால தான் இருக்காங்க" என்றாள்.
"ஐயோ! பாவம் டி அங்கிள் கிட்ட அவனுக்கு புடிச்ச வேலைய, அவனை பார்க்க விட சொல்லு"
"கண்டிப்பா பேசணும் யாத்ரா, அவன் நிச்சயம் மாமாகிட்ட எல்லாம் பேசிக்க மாட்டான். அவனுக்காக நான் தான் பேசியாகணும்"
"ம்ம் சீக்கிரம் பேசு" என்ற யாத்ரா மதனாவின் கரத்தை பிடித்துக்கொண்டு, "உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் டி" என்று வருத்தத்துடன் கூறினாள்.
"நாங்களும் தான் டி, பழைய மாதிரி நாம அடிக்கடி மீட் பண்ணிக்கவே முடியல யாத்து" என்ற மதனா தோழியின் வாடிய முகத்தை பார்த்து,
"என்னடி பண்றது கல்யாணம் ஆனா முன்ன மாதிரி இருக்க முடியாதுனு நாம பேசிக்கிட்டது தானே. ஆனாலும் இதை சொல்லியே ஆகணும் டி ஆரி மாம்ஸ் சூப்பர் கேரக்ட்டர்.
ஏன் உன் மாமனார் மாமியார் கூட சூப்பர் டி, நாம அடிக்கடி பார்த்துக்காட்டாலும் நினைச்ச நேரம் ஃபோன்ல பேசிக்கிறோம் இதோ உன்னை பார்க்கணும்னு நினைச்சேன், நினைச்ச உடனே எந்த தயக்கமும் தடையும் இல்லாம வந்துட்டேன்ல" என்று சொல்ல, மதனா கூறியதை யோசித்து பார்த்த யாத்ரா,
"உன் மாம்ஸ் எப்படியோ, ஆனா என் அத்தையும் மாமாவும் சோ சுவீட் தெரியுமா" என்று தன் இதழ் நிரம்ப புன்னகையுடன் கூறினாள்.
உடனே யாத்ராவை பார்த்து பார்த்து முறைத்த பெண்ணவள்,
"நீ சொல்லாட்டாலும் மாம்ஸ் சுவீட் தான்" என்று ஆரிக்கு குடை பிடிக்க, வழக்கமாக இப்படி ஆரிக்கு ஆதரவாக ஏதும் கூறினால் பயங்கரமாக சண்டையிடும் யாத்ராவோ இன்று எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், யாத்ராவின் வதனத்தை ஆராய்ச்சியாக பார்த்த மதனா,
"என்னாச்சு? மேடம் கிட்ட ஏதோ மாற்றம் தெரியுதே" என்று வினவினாள்.
"என்ன மாற்றம்? அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்று யாத்ரா சலித்துக்கொள்ளவும்,
"ம்ம்" என்று இதழரோம் கேலி புன்னகை அரும்ப ராகம் போட்ட மதனா, "சரி, சொல்லு லைஃப் எப்படி போகுது" என்று வினவினாள்.
"ம்ம் போகுது"
"என்கிட்ட ஏதும் சொல்லனுமா யாத்ரா" என்ற மதனாவின் விழிகளை சில நொடிகள் மெளனமாக பார்த்த யாத்ரா ஒருவித தயக்கத்துடன்,
"ஆரி நாம நினைச்ச அளவுக்கு ஒன்னும் கெட்டவர் இல்லைனு தோணுது டி" என்று சொல்ல,
"நாம இல்லை நீ" என்று மதனா கேலியாக அவள் கூறிய வாக்கியத்தை திருத்தவும், அவளை முறைத்து பார்த்த யாத்ரா,
"சரி மா நான் தான்" என்று தன் முகத்தை நொடித்து கொள்ள, தன் கரத்தில் இருந்த ஜூஸ் கிளாஸை அருகில் இருந்த திண்டின் மீது வைத்த மதனா யாத்ராவின் இரு கரங்களையும் இறுக்கமாக பிடித்து கொண்டு,
"கொஞ்சம் லேட் தான் ஆனா இப்போவாச்சு தோணுச்சே, அன்னைக்கு உன்னை காணும்னு எவ்வளவு பதறுனாரு தெரியுமா?" என்று மதனா உருக்கமாக யாத்ராவிடம் சொல்லிக்கொண்டிருக்க, அதை எந்தவித மறுப்பும் இன்றி கேட்டுக் கொண்டிருந்த யாத்ரா, "மூணாவது தடவை" என்றாள்.
அதைகேட்டு யாத்ராவை புரியாது பார்த்த மதனா, "புரியல"என்று சொல்லவும்,
"இப்போ சொன்னியே ஆரி பதறுனாருனு, அதை அடிபட்ட உடனே என்னை பார்க்க வரும் பொழுது சொன்ன, அப்புறம் ஃபோன்ல பேசும் பொழுது சொன்ன, இதோ இப்பவும் சொல்ற சோ மொத்தமா மூணு தடவை" என்று சொல்லி கேலியாக சிரித்த யாத்ராவை பார்த்து மதனா பயங்கரமாக முறைக்கவும் யாத்ராவோ,
"ஏய் சும்மா தான் கிண்டல் பண்ணினேன்" என்று தோழியை சமாதானம் செய்ய முயல, ஆனால் மதனாவோ,
"யாத்ரா உனக்கு புரியல, இதுல உன் வாழ்க்கையும் இருக்கு, மாம்ஸ் வாழ்க்கையும் இருக்கு.
இது சிரிக்கிற விஷயம் கிடையாது. கடந்த காலத்தை நிகழ்காலத்தோட சம்பந்தப்படுத்தி உன் வாழ்க்கையை கெடுத்துக்காத, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, அதை ஏத்துக்க முயற்சி பண்ணு.
ஏற்கனவே சொன்னது தான், திரும்பவும் சொல்றேன், நான் பார்த்த வரை ஆரி மாம்ஸ்கிட்ட தப்பா எதுவும் இருக்கிறது போல தெரியல, நீ சீக்கிரம் மாம்ஸை புரிஞ்சிக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன். இதுக்கு மேல உனக்கு எப்படி புரியவைக்கிறதுனு எனக்கு தெரியல. ஆனா இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தாலும் ரெண்டு பேருக்கும் சண்டை தான் வரும்னு மட்டும் தெளிவா தெரியுது, நான் கிளம்புறேன்" என்ற மதனா அமைதியாக சிந்தனையுடன் நின்றிருந்த தன் தோழியின் தோளை ஆதுரமாக தட்டி விட்டு, கீழே வந்து, ஜானகியிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட, யாத்ராவின் மனம் மீண்டும் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்க துவங்கியது.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ கீழே ஜானகியின் குரல் கேட்கவும் மாடியில் இருந்து இறங்கி வந்த யாத்ரா,
"என்னாச்சு அத்தை எங்கையும் கிளம்புறீங்களா என்ன?" என்று உடை மாற்றி வந்த தன் மாமியாரை பார்த்து வினவினாள்.
அதற்கு அவர்,
"ஆரி தங்கச்சி அதான் உன் மாமாவோட தம்பி பொண்ணு சௌம்யாக்கு இன்னைக்கு ஆபரேஷன் டா" என அவசர அவசரமாக ட்ராவல் பேகில் பொருட்களை எடுத்து வைத்தபடி கூறினார்.
"ஆனா டெலிவரிக்கு இன்னும் பத்து நாள் இருக்கே அத்தை" என்று தன் அத்தை சொல்லும் பொருட்களை எடுத்து வந்து அவருக்கு உதவி செய்தபடி யாத்ரா கேட்க,
"ஆமாம் டா, செக்கப்க்கு போயிருக்கா, தண்ணியில்லனு டாக்டர் இன்னைக்கே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம், பாவம் டா அவ அம்மா தனியா அங்க கிடந்து கஷ்டப்படுறா, சௌமியா அப்பா அம்மா ரெண்டு பேரும் ஹார்ட் பேஷண்ட்ஸ் அதான் நானும் உன் மாமாவும் போறோம் டா" என்றார் ஜானகி.
அதைக் கேட்ட யாத்ராவோ,
"அத்தை நான் வேணும்னா வரட்டுமா" என கேட்க,
"இல்லை டா மா, நீ உன் பரிட்ச்சைக்கு படி, அதான் நாங்க போறோமே பார்த்துக்குறோம். உன் எக்ஸாம் முடிஞ்சதும் நீயும் அர்ஜுனனும் போய் பார்த்துட்டு வாங்க" என்றார்.
அப்போழுது அங்கே வந்த வைத்தீஸ்வரன் தன் மருமகளை அழைத்து ஒரு பையை கொடுத்து,
"இதுல வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் இருக்கு, நாளைக்கு கணக்கு புள்ளை வருவாரு அப்படியே கொடுத்திரு மா, அப்புறம் யாத்ரா மா விடியற்காலையில கடை பையன் வருவான் அவனுக்கு சாவியை எடுத்து அர்ஜுனனை கொடுக்க சொல்லிடு, அப்புறம் நைட் கடை மூடியதும் அந்த பையன் சாவி கொண்டு வருவான், அவனை வாங்கி உள்ள வைக்க சொல்லுடா டா" என்றவர்,
"அர்ஜுனனை நைட் சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்லு டா, இப்போ வர்ற மாதிரி ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கும் வர கூடாதுனு சொல்லிடு. நானும் அவன் கிட்டை பேசியிருக்கேன். லேட்டா வர மாட்டான், வந்தா என்கிட்ட சொல்லு" என்பதை அழுத்தமாக சொன்னவர் மனைவியிடம்,
"நீ பேசிட்டு வா ஜானு நான் கார்ல இருக்கேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
"உன்னை தனியா விட்டுட்டு போறதில்ல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லைடா, என்ன பண்றது நான் போய் தான் ஆகணும், சமாளிச்சிக்குவல்ல?" என்று கவலைப்பட்ட மாமியாரிடம்,
"அத்தை மா நீங்க போயிட்டு வாங்க நான் சமாளிச்சிக்குவேன்" என புன்னகையுடன் கூறினாள் யாத்ரா.
"இங்க பாரு டா இப்படி சொல்றேன்னு நினைக்காத என் பையன் ரொம்ப நல்லவன் தான், என்ன கோபம் மட்டும் கொஞ்சம் அதிகமாவே வரும். அவன் கிட்ட பேசும் பொழுதும் மட்டும் பார்த்து பேசுடா, அப்புறம் அவன் கிட்ட அத்தை ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன், இனிமே உன்கிட்ட சண்டை போடமாட்டான் டா சரியா" என்றவர்,
"லேட்டா வந்தாலும் வெளில ஒரு டீ கூட குடிக்காம தான் வருவான்" என ஆரம்பிக்கவும் அவரை தன் கரம் நீட்டி தடுத்த யாத்ரா,
"நம்ம தூக்கம் கெடும்ன்னு பசிக்குதுன்னு வாய திறந்து உங்க புள்ளை சொல்ல மாட்டாரு, நாமளா சாப்பிடுங்கன்னு சொல்லி சாப்பாடு போட்டு கொடுத்தாதான் சாப்பிடுவார். காலைக்கு இனிப்பா எதுவும் சாப்பிட மாட்டாரு. ஸோ ஆப்பத்துக்கும் இடியாப்பத்துக்கும் கடலை கறி இல்லைன்னா சட்டினி போதும்.
தோசை போதுமான்னு கேட்டா, நமக்கு கால் வலிக்கும்னு போதும்னு சொல்லிடுவாரு. ஸோ செஞ்சிட்டேன் சாப்பிடுங்கன்னு சொன்னா சாப்பிடுவார் அதானே" என்று கேலியாக சிரித்த மருமகளின் காதை திருகிய ஜானகி,
"சின்ன கழுத்தை எப்பவும் உன் மாமா மாதிரி என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு" என்று செல்லமாக திட்டியவர், மேலும் தன் மருமகளுக்கு ஆயிரம் பத்திரங்களை சொல்லி விட்டே தன் கணவருடன் விழுப்புரம் புறப்பட்டார்.
@@@@@@
இத்தனை நாட்களில் பலவிதமான விசாரணைகளை முடித்திருந்த அர்ஜுனன், தனது அடுத்த கட்ட விசாரணைக்காக ஆனந்தியுடன் படிக்கும் சக மாணவர்களை சந்திக்க சென்றிருந்ததால் குழந்தைகள் பயந்துவிட கூடாது என்பதற்காக தனது காக்கி சீருடையை தவிர்த்திருந்தவன், வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளிடம் மிக இயல்பாக பேசியபடி தன் விசாரணையை ஆரம்பித்தான்.
ஆனந்தி வகுப்பறையில் எங்கு உக்கார்ந்திருப்பாள்? என்கின்ற கேள்வி துவங்கி அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறும் அனைவருக்கும் ஒரு சிறிய பரிசு என்று குழந்தைகளை கவரும் விதமாக அவர்களிடம் உரையாடினான்.
"சரி இப்போ அடுத்த கேள்வி ஆனந்தியோட ஃப்ரண்ட்ஸ் யாரெல்லாம்" என்று கேட்க ஒரு சிறுவன் எழுந்து "மீனா" என்று கூறி வகுப்பறையில் கடைசியாக அமர்ந்திருந்த சிறுமியை கைகாட்டிவிட்டு அவனிடம் பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு வந்து உட்கார, வகுப்பு ஆசிரியரிடம் மீனாவை பார்த்து ஏதோ கூறியவன் பரிசு பொருட்களை அனைவருக்கும் பகுந்து கொடுக்கும் படி கூறிவிட்டு சிறுவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியேறி, சிறுமி மீனாவின் வருகைக்காக காத்திருந்தான்.
மீனாவை அழைத்து வந்த ஆசிரியர் ஆரி அர்ஜுனனிடம்,
"சார் எல்லாம் சொல்லி தான் கூட்டிட்டு வந்திருக்கேன் நீங்க கேளுங்க" என்றவர் அர்ஜுனனின் சொல்படி சிறிது தூரம் தள்ளி சென்று நின்றுகொள்ள,
சிறுமியின் முன் அவள் உயரத்திற்கு முட்டியிட்ட ஆரி, புன்னகையுடன் தன் கேள்விகளை அவளிடம் வினவினான்.
"ஆனந்தியும் நீயும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸா?"
"ம்ம் ஆமா" அவனது அன்பான அணுகுமுறையால், சிறுமியும் பயம் இன்றி இயல்பாக பேசினாள்.
"இரெண்டு பேரும் ஒண்ணா தான் ஸ்கூல் போய்ட்டு வருவீங்களா?"
"ம்ம்" தலையசைத்தாள்.
"உங்க ரெண்டு பேரோட வீடும் பக்கத்துல தானே?"
"இல்லை என் வீட்ல இருந்து கொஞ்சம் தூரம் கழிச்சு தான் ஆனந்தி வீட்டுக்கு போகணும்"
"ஓ உன் வீட்ல இருந்து ஆனந்தி வீட்டுக்கு போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் பாப்பா?"
"வேகமா போனா பத்து நிமிஷத்துல போய்டலாம்"
"சரி அங்க இருந்து யாரெல்லாம் ஆனந்தி கூட போவாங்க"
"யாரும் இல்லை, ஆனந்தி மட்டும் தான் போவா"
"சரி உங்க கூட வேற பசங்க யாரும் வருவாங்களா?"
"இல்லை அங்கிள் நானும் ஆனந்தி மட்டும் தான் போவோம்"
"ஓ சரி காணாம போன அன்னைக்கு, நீயும் ஆனந்தியும் போகும் பொழுது வேற யாரும் உங்கள பின்தொடர்ந்து வர்றது போல ஏதும் தோணுச்சா? நீ யாரையும் பார்த்தியா? கார் ஏதும் நின்னுச்சா? கொஞ்சம் யோசிச்சு சொல்லு டா"
"ம்ஹ்ம்" என மறுத்தவள், "நான் அன்னைக்கு லீவு என் அம்மாகூட சொந்தகாரங்க வீட்டுக்கு போய்ட்டோம்" என்று சொல்லவும் ஆரிக்கு, 'என்னடா' என்று இருந்தது. தான் நினைத்தபடி இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதில் அவனுக்கு சற்று ஏமாற்றம் தான்.
அப்பொழுது பார்த்து அங்கு வந்த காக்கி உடை அணிந்த பியூன்,
"மீனா க்ளாஸுக்கு போகாம யார்கிட்ட பேசிட்டு இருக்க" என்று அதட்டலாக வினவவும், அச்சிறுமி "அப்பா" என்றபடி அந்த பியூனின் அருகே சென்று நின்று கொண்டாள்.
ஆரி தன்னை அவனிடம் அறிமுகம் செய்துகொண்டதும், சிறு பதற்றத்துடன் ஆரியை பார்த்த மீனாவின் தந்தை,
"சாரி சார் நான் மீனா அப்பா, இங்க பியூனா இருக்கேன், என்னாச்சு என் குழந்தைகிட்ட பேசிட்டு இருந்தீங்க ஏதும் பிரச்சனையா?" என்று வினவ, அதற்குள் அங்கு வந்த ஆசிரியர் அவரிடம் விடயத்தை சொல்லவும்,
"அப்டியா சார், எப்படியாவது அந்த பொண்ணை கண்டு புடிச்சிருங்க" என்றவருக்கு, சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்த ஆரி சிறுமியிடம்,
"சரி பாப்பா உனக்கு வேற ஏதாவது நியாபகம் வந்தா டீச்சர் கிட்ட சொல்லு சரியா, அவங்க என் கிட்ட சொல்லிடுவாங்க" என்றவன் கிளம்பவும் அவனது கரத்தை பிடித்த அச்சிறுமி,
"நீங்க பெரிய போலீஸுனு டீச்சர் சொன்னாக ஆனந்தியை கண்டுபுடிச்சிடுவியல அவ வந்திருவாள்ல" என்று கேட்கவும் 'ஆம்' என்பதாய் சிறு புன்னகையுடன் தலையசைத்த ஆரி அர்ஜுனன் அடுத்து நேராக, மீனாவும் ஆனந்தியும் வீட்டிற்கு ஒன்றாக செல்வதாக சொன்ன பாதைக்கு தன் ஜீப்பில் சென்று பார்வையிட்டான்.
சுற்றும் முற்றும் ஏதாவது சிசிடிவி இருக்கிறதா என்று தேடியவனுக்கு, அங்கு ஒரு இடத்தில் கூட சிசிடிவி இல்லாதது எரிச்சலை கொடுக்க தன் சிகையை அழுத்தமாக கோதியவன் தன் மனதை ஒருநிலை படுத்திவிட்டு அந்த இடத்தை நன்றாக ஆராய்ந்தான்.
என்ன தான் மீனா வரவில்லை என்றாலும், மீனா வீடுவரை ஆள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மீனா சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது கடத்தல், மீனா வீட்டிற்கும், ஆனந்தி வீடு இருக்கும் தெருவுக்கும் இடையே தான் நடந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் ஐந்தில் இருந்து பத்து நிமிடத்திற்குள் நடந்திருக்கின்றது. காட்டுப்பகுதி, ஆள் நடமாட்டம் இல்லை, என்று அனைத்தையும் ஆராய்ந்து திட்டமிட்டு கடத்தியிருக்கிறார்கள். அதாவது பல மாதங்கள் பின்தொடர்ந்து அவர்கள் எங்கு எப்பொழுது செல்கிறார்கள் என காண்காணித்துக்கொண்டே இருந்து சமயம் பார்த்து கடத்தல் நடந்திருக்கின்றது.
ஆக காலை மீனா வரவில்லை என்றதும், மாலை திட்டம் போட்டு கடத்தியிருக்கின்றனர். ஆனால் அந்த நேரம் அங்கே ஒருவர் கூடவா வரவில்லை, சரி ஆனந்தி கடத்தும் பொழுது சத்தம் போட்டிருப்பாளே ஒருத்தர் கூடவா பார்க்கவில்லை. ஒருவேளை கடத்தியவன் அவளுக்கு நன்கு பழக்கப்பட்டவனாகவோ/ பழக்கப்பட்டவளாகவோ இருந்திருந்தால் நிச்சயம் கத்திருக்க மாட்டாளே. யார் அவள் /அவன்?
ஆனந்திக்கு தெரிந்த அந்த நபர் யார்? என்று சிந்தித்தபடி மீனா வீட்டு பகுதியில் ஆரம்பித்து சுற்றும் முற்றும் பார்த்தபடி நடக்க துவங்கியவனின் பார்வை ரோட்டோரத்தில் உள்ள புதரில் வீசப்பட்டு கிடந்த சிகரெட் துண்டுகள் மீது விழ, யோசனையுடன் அந்த துண்டுகளை பார்வையிட்ட ஆரி, அங்கே கிடந்த காலி சிகரெட் அட்டையை தன் கையில் எடுத்தான்.
@@@@@@@@@@
அதே நேரம் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்திருந்த அந்த பங்களாவில்,
"விடுங்க யார் நீங்க? அம்மா, அப்பா" என்று கண்கள் கட்டப்பட்ட நிலையில், கரங்களில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும், ஒருவனின் கரத்தில் இருந்து திமிறியபடி வடமொழியில் கத்திக்கொண்டிருந்தார்கள் அந்த சிறுமியர்கள்.
அப்பொழுது, "ஏய் கத்தாதீங்க" என்று பதிலுக்கு அவர்களிடம் வடமொழியில் கடுமையாக சீறியவனை, அந்த பங்களாவின் வாசலில் காவலுக்கு நின்றிருந்த தடியர்களில் ஒருவன் உள்ளே அழைத்து சென்று ஒரு அறையை காட்டிவிட்டு சென்றுவிட,
அழுது கொண்டிருக்கும் அச்சிறுமிகளை இழுத்து கொண்டு வந்து அந்த அறையில் தள்ளி கதவை சாற்றினான் அவன் பவன் குப்தா.
வடமாநிலத்தை சார்ந்தவன், ஊருக்கு அவன் லாரி ஓட்டுபவன் ஆனால் உண்மையில் ஆங்காங்கே தாய் தகப்பன் இல்லாத மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தை சார்ந்த சிறுமிகள், சில நேரம் இளம் வயது பெண்களை தன் கூட்டாளிங்களின் உதவியுடன் கடத்தி இங்கே கொண்டு வருவது தான் இவனது முக்கிய தொழில்.
அவன் கதவை சாற்றிய சில நொடிகளில் மாடியில் இருந்து இறங்கி வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவள் அவன் முன்பு வந்து, கத்தையான பணத்தை அவனிடம் நீட்டி,
"அடுத்தது தேவை படும் பொழுது சொல்றேன், அதுவரை கவனமா இரு" என்று கூறினாள்.
அவனோ சரி என்று தலையசைத்து, பணத்தை வாங்கி முகர்ந்து பார்த்தவன் அதில் உள்ள ஒவ்வொரு தாள்களையும் எண்ணியபடி,
"அடுத்த தடவை கொஞ்சம் அதிகமா கொடுங்க காஞ்சனா மேடம், ஸ்டேட் தாண்டி போலீஸ் கிட்ட மாட்டாம கொண்டு வர்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். போலீஸ்காரங்க முன்னாடி மாதிரி தொழில் பண்ண விட மாட்டிக்கிறாங்க, உங்ககிட்ட வாங்குறது என் கூட்டாளிங்களுக்கும் போலீஸ்காரங்களுக்கும் கொடுக்கவே பத்த மாட்டிக்குது" என்று குறைபட்டுக்கொண்டான்.
"ம்ம் அடுத்தது நல்லதா கொண்டு வா சிறப்பா கவனிக்கிறேன்" என்ற காஞ்சனா அவன் சென்றதும் தனக்கு கீழ் பணிபுரியும் இரெண்டு பெண்களை பெயர் சொல்லி அழைத்தவள், அவர்களுடன் சிறுமியர்கள் இருக்கும் அறைக்குள் சென்றாள்.
மொத்தமாக பத்து சிறுமிகள் கண்கள் கட்டப்பட்டிருக்க தங்களை காப்பாற்ற சொல்லி கதறிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் பார்த்து இகழ்ச்சியாக சிரித்த காஞ்சனா, தனது வலது பக்கத்தில் நின்றிருந்த பெண்ணை அழைத்து சிறுமியர்களின் கண்களில் இருந்த துணியை அகற்றுமாறு தன் கண்களாலே உத்தரவு போட, அடுத்த நிமிடமே அவர்கள் அனைவரின் கண்களில் இருந்த கட்டும் அவிழ்க்கப்பட்டது.
அவ்வளவு நேரம் கண்கள் கட்டப்பட்டிருந்ததால், திடிரென்று கட்டுகள் அவிழ்க்கப்படவும், விழிகளுள் பட்ட வெளிச்சத்தால் கண்கள் கூச, இமைகளை பிரிக்க சிரமப்பட்ட்டார்கள்.
பின்பு எப்படியாவது எதிரில் இருப்பவர்களைப் பார்த்து, கை கால்களில் விழுந்தாவது தப்பித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் போராடி கண்களை திறந்தவர்கள், பயத்தில் தங்களை விட்டுவிடும் படி கெஞ்ச, தொடர்ந்து கேட்ட அழுகுரலில் தன் காதைக் குடைந்த காஞ்சனா,
"சுப்... சத்தம் வரக் கூடாது" என்று சத்தமாக மிரட்டி,
"சத்தம் போடாம அமைதியா இருந்தா நேரத்துக்கு சாப்பாடு, வகை வகையாகத் துணிமணிங்கன்னு ராணி மாதிரி இருக்கலாம். ஆனா அதை விட்டுட்டு இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தீங்க கழுத்தை அறுத்துட்டு போயிட்டே இருப்பேன்" என வடமொழியில் பேசியவள், தனது இடது புறம் நின்ற பெண்ணை அழைத்து அவர்கள் அனைவரையும் மாடியில் இருக்கும் ஆறாவது தளத்திற்கு அழைத்து செல்லுமாறு கட்டளையிட்டாள்.
அப்பொழுது அதில், ஒரு சிறுமி மட்டும் அவருடன் செல்ல மறுக்கவும், சிறுமி என்று கூட பார்க்காமல் அவளை காஞ்சனா ஓங்கி அறைய, வலி தாங்காமல் அவள் சுருண்டு விழவும் மற்ற சிறுமிகள் அனைவரும் பதறிக் கதறினர்.
அப்பொழுது காஞ்சனா அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை தான் பார்த்தாள். அடுத்த கணமே எல்லாரும் கண்களில் இருந்து கண்ணீர் வடிய, அமைதியாக அந்த பெண்ணுடன் செல்ல கீழே விழுந்த சிறுமியும் தன் கன்னத்தைத் தாங்கியபடி அவர்களுடன் அழுதுகொண்டே சென்றாள்.
அதன் பிறகு அங்கிருந்து நேராக வீட்டில் இருக்கும் லிஃபிட் மூலமாக இரண்டாம் தளத்திற்கு சென்ற காஞ்சனா, அங்கிருந்த ஒரு அறையின் வாசலில் வந்து நிற்கவும், வாயிலில் ஏற்கனேவே நின்றிருந்த இரெண்டு பெண்கள் தங்களின் தலை தாழ்த்தி அவளை வணங்கிவிட்டு கதவை திறக்க, உள்ளே ஒரு பருவ பெண் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அந்த பெண் அருகே கழுத்தில் செத்தோஸ்க்கோப் அணிந்திருந்தபடி, அவளை பரிசோதித்து கொண்டிருந்த பெண் மருத்துவர்உள்ளே வந்த காஞ்சனாவிடம்,
"ஷீ இஸ் ரெடி" அவள் தயாராக இருக்கிறாள் என்று ஆங்கிலத்தில் சொல்ல காஞ்சனாவின் முகத்தில் வெற்றி புன்னகை.
அதே புன்னகையுடன் அமர்ந்திருந்த பெண்ணை தலை முதல் கால் வரை ஆராய்ந்த காஞ்சனா, வாசலில் நின்றிருந்த தன் கையளை பார்த்தாள்.
காஞ்சனாவின் பார்வையை உணர்ந்த அவளது கையாளோ, மாத்திரையையும் தண்ணீர் பாட்டிலையும் கொண்டு வர, மாத்திரையை வாங்கிய காஞ்சனா அதை கட்டிலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிடம் நீட்டினாள்.
அச்சத்துடன் காஞ்சனாவை ஏறிட்டவள் மாத்திரையை வாங்க மறுக்க, அவளை முறைத்த காஞ்சனா அவள் மறுக்க மறுக்க, மாத்திரையை வலுக்கட்டாயமாக அவளது வாயில் போட்டு, அது அவளது தொண்டை குழி வழியாக உள்ளே இறங்குவதை திருப்தியாக பார்த்து ரசித்தாள் காஞ்சனா.
பிறகு தன்னை கண்ணீரோட ஏறிட்ட அந்த பெண்ணின் கன்னங்களை புன்னகையுடன் தட்டி, தன் அருகே இருந்த தன் கையாளிடம்,
"இன்னைக்கு விருந்துக்கு இவளை ரொம்ப அழகா தயார் பண்ணுங்க, அப்புறம் முக்கியமா அவளுக்கு புரியவைங்க இப்படி அழுது வடிஞ்சு அங்க வந்து அவ நிக்க கூடாது" என்று கட்டளையாக கூறிய காஞ்சனா, அங்கிருந்து மருத்துவருடன் வெளியேறவும் அவளை நோக்கி வந்த அவளது பெண் பணியாட்களுள் ஒருவள்,
"மேடம் அந்த புது பொண்ணு இன்னைக்கும் சாப்பிடலை" என்றாள்.
"யாரு அந்த ஆனந்தியா?"
"ம்ம்" என அவள் தலையசைக்க,
"ச்ச அவளை நாலு சாத்து சாத்த வேண்டியது தானே" என காஞ்சனா பல்லை கடிக்க, சரி என்பதாக அந்த பணி பெண் தலையசைத்து விட்டு நகரவும், மூன்றாவது தளத்தில் இருந்து ஒரு பெண் அழும் குரல் கேட்டது.
உடனே கண்ககளை இறுக்கமாக மூடி திறந்த காஞ்சனா,
"இவளோட வந்ததுல இருந்து பிரச்சனை தான், இவளை நம்ம தலையில கட்டிட்டு காசை வாங்கிட்டு போய்ட்டான், நான் தான் இப்போ சிங்கி அடிக்கிறேன்?" என்று எரிச்சளுடன் கத்தியவள், நிதானமாக அங்கே செல்ல, சுற்றி இரெண்டு மூன்று பெண்கள் சூழ்ந்திருக்க அங்கு வயிற்றை பிடித்துக்கொண்டு ஒரு வாலிப பெண் அழுது கொண்டிருந்தாள்.
"இன்னைக்கு என்ன உனக்கு?" காஞ்சனாவின் அழுத்தமான குரலில் அனைவரும் அப்பெண்ணை விட்டு தள்ளி செல்ல, நிதானமாக அவள் அருகில் வந்த காஞ்சனா கவிழ்ந்திருந்த அவளது வதனத்தை நிமிர்த்தி கண்களாலே என்னை என்பது போல வினவ,
"வயிறு வலிக்குது" என்றாள் வலியுடன்.
"அதென்ன உனக்கு அடிக்கடி வலிக்குது ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே மருந்து சாப்பிட்ட"
"தெரியல ரொம்ப வலிக்குது"
"டாக்டரு வந்து என்னன்னு பாருங்க" என்றவள் ஒரு ஓரமாக சென்று விட, அவளை பரிசோதித்த மருத்துவர்,
"பில்ஸ் எல்லாம் சரியா எடுத்துகிட்டியா" என்று கேட்கவும், அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.
அப்பொழுது தீவிரமான சிந்தனையுடன் காஞ்சனாவிடம் வந்த மருத்துவர் அவர் காதில் எதையோ சொல்ல, அதிர்ச்சியுடன் மருத்துவரை ஏறிட்ட காஞ்சனா,
"அதெப்படி அதான் மாத்திரை எல்லாம் சரியா கொடுக்குறோமே" என்றாள்.
"இருக்கலாம் ஆனாலும் சில நேரம் இப்படி ஆக வாய்ப்பு இருக்கு, என் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு வாங்க டெஸ்ட் எடுத்து பார்க்கணும் அப்போ தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்" என்று மருத்துவர் சொல்லவும், நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு பாதுகாப்பிற்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரெண்டு பேரை அவளுடன் அனுப்பி வைத்த காஞ்சனா, வலியோட மெதுவாக நடந்து சென்ற அந்த பெண்ணின் கரத்தை வேகமாக பிடித்து,
"ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வரணும், அதை விட்டுட்டு தப்பிக்க முயற்சி பண்ணின, நீ உயிரோட இருக்க மாட்ட" என்று அவளை எச்சரித்தவள், அவளுடன் காவலுக்கு செல்லவிருந்த தன் சகாக்களை அழைத்து அவள் மீது எப்பொழுதும் ஒரு கண் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு, மருத்துவரிடமும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறிவிட்டே, அவர்களை அனுப்பி வைத்தாள்.
@@@
சென்னையில் இரவு அந்த பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர உணவு விடுதி, வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, அங்கே போடப்பட்டிருந்த வட்ட வட்ட மேஜைகளில் குடும்பமாகவும் ஜோடிகளாகவும் மக்கள் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது பலத்த கரகோஷத்துடன் மேடை ஏறினாள் வட இந்தியாவை சேர்ந்த, வளர்ந்து வரும் பாடகியான மஹிஷா ஷர்மா.
"முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே.." என அவள் பாட துவங்கவும் கூட்டத்தில் இருந்த கரோகோஷம் நின்று போக, 'முன்பே வா' என்னும் அழகான தமிழ் பாடலை இன்னும் அழகாக தனது வசீகரிக்கும் குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.
மஹிஷாவின் இனிமையான குரல் அரங்கத்தில் உள்ள அனைவரின் செவிகளையும் தென்றலாக வருடி சென்றுகொண்டிருக்க, அதே நேரம் அதே இனிமையான குரல் அந்த ஆண்மகனின் மனதையும் சேர்த்து வருடியதோ என்னவோ, போதிய இடைவெளியில் போட பட்டிருந்த மேசையில் அமர்ந்தபடி மஹிஷாவை விட்டு தன் விழிகளைத் திருப்ப முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் ஆதித்தன்.
@@@@@@@@@
மருத்துவமனையில் உள்ள தனி அறையில் படுக்கவைக்க பட்டிருந்த அந்த பெண்ணின் மனம் முழுவதிலும் எப்படியாவது இந்த அரக்க கூட்டத்தில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.
இரெண்டு நாட்களுக்கு முன்பும் இது போல வயிறு வலிக்குது சென்று சொன்னாள் ஆனால் அவர்களோ ஒரு வலி மாத்திரையை மட்டும் கொடுத்து படுக்கும் மாறு சொல்லிவிட, இன்று கொஞ்சம் அதிகமாகவே வலிப்பது போல நடித்தவள் இதை விட்டால் இது போன்ற சந்தர்ப்பம் இனி அமையாமல் கூட போகலாம் என்று எண்ணி என்ன ஆனாலும் சரி இனி அவர்களிடம் மட்டும் திரும்பி செல்ல கூடாது என்று உறுதியாக இருந்தாள்.
உள்ளே மருத்துவர் வரவும் வலிப்பது போன்ற முக பாவனையுடன் முகத்தை சுருக்கி வைத்தபடி அடிவயிற்றை தன் கரங்களால் அழுத்தி பிடித்து கொண்டு அவள் படுத்திருக்க, அவள் அருகில் வந்த மருத்துவர்,
"எங்கெல்லாம் வலிக்குதும்மா? இங்க வலி இருக்கா?" என்று சில பல கேள்விகளை கேட்டவர், நர்ஸிடம், "யூரின் டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட்டை எனக்கிட்ட சொல்லுங்க, இந்த பொண்ணு கூடவே இருங்க" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட, தப்பி தவறி கூட தன் முகத்தில் எதுவும் காட்டாது தனது நாடகத்தை அவள் தொடர நர்ஸ் அவளை அழைத்து கொண்டு டெஸ்ட் எடுப்பதற்காக சென்றாள்.
@@@@@@@@@@
தொடர்ந்து இரெண்டு மூன்று பாடல்களை பாடிவிட்டு இறுதி பாட்டை, மஹிஷா பாடி முடித்த பொழுது பலத்த கரோகோஷங்களுக்கு மத்தியில் மெல்லிய புன்னகையுடன் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தன் வலக்கரத்தை தன் நெஞ்சில் வைத்து லேசாக தலையசைத்துவிட்டு, மேடையில் இருந்து பாதுகாவலர்கள் சூழ வெளியேறி சென்றாள்.
அவள் சென்றுவிட்டாலும் அவளது குரல் அந்த அறையெங்கும் எதிரொலிப்பது போன்றதொரு பிரம்மை தோன்றவும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தன் செவியை தீண்டும் அவளது குரலை ரசித்த ஆதித்தனின் இதயத்தில் ஒருவித இதம் பரவ,
"மஹிஷா என்னை என்ன பண்ணிட்டு இருக்க நீ" என்று வாய்விட்டே கூறியவனின் இதழ் அவனையும் மீறி வசீகரமாக புன்னகைக்க, இந்த இதமான உணர்வில் இருந்து வெளிவர விரும்பாதவன் போல அப்படியே கண்களை மூடிய நிலையில் அதே நாற்காலியில் நீண்ட நேரம் அவன் அமர்ந்திருந்தான்.
பாடி முடித்த மறுநிமிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் பேசிவிட்டு தன் காரில் ஏறியவள், தன் சொந்த ஊரான மும்பைக்கு திரும்பி கொண்டிருக்க, அப்பொழுது எதிர்பாராத விதமாக திடிரென்று மஹிஷாவின் காரின் முன்னே ஓடி வந்த பெண் ஒருவள், தனக்கு மிக அருகே காரை கண்டதும் பயந்துவிட, மஹிஷாவின் காரோ அப்பெண்ணை பார்த்ததும் சடென் பிரேக் போட்டு நிற்கவும், மஹிஷா பார்க்க அப்பெண் தலைசுற்றி சாலையிலே மயங்கி சரிந்தாள்.
@@@
கதவு திறக்கும் சத்தம் கேட்டு தன் கையில் இருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு எட்டிப்பார்த்த யாத்ரா அங்கே ஆரியை கண்டதும், படுக்கையில் இருந்து எழுந்து நிற்க அவளை பார்த்து புன்னகைத்தபடி உள்ளே வந்தவன்,
"இன்னும் தூங்கலையா நீ" என்று கேட்டான்.
அதற்கு அவள், "இல்லை படிச்சிட்டு இருந்தேன்" என்றாள்.
"ஹால் டிக்கெட் வாங்க போறேனு சொன்னியே வாங்கிட்டியா?"என்று ஆரி கேட்கவும் அவனிடம்,
"இல்லை நாளைக்கு தான் போகணும்" என்று அவள் சொல்ல, அப்பொழுது கப்போர்டில் இருந்து மாற்று உடையை எடுத்து கொண்டு அவளை நோக்கி வந்தவன், பார்க்கும் தொலைவில் நின்றுகொண்டு அவளது காயங்களை பார்வையிட்டபடி,
"காயம் நல்லா ஆறிடுச்சுல, தளும்பும் சீக்கிரமா ஆறிடும்" என்று சொல்ல, இவள் உள்ளுக்குள் முறைத்தாள்.
அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள், அவள் காயங்கள் ஓரளவு சரியாகி அவளுக்கான காரியங்களை அவளே செய்யும் நிலைக்கு வந்ததில் இருந்து, எங்கே தொட்டால் ஒட்டிக்குமோ என்பது போல் அவனது விரல் நுனி கூட தன்னவள் மேல் படாமல் தள்ளி நின்று தானே உரையாடுகின்றான்.
திருமணம் ஆனா ஆரம்பத்தில் யாத்ரா உடை மாற்றும் பொழுது அவனை வெளியேற கூறினால், 'நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு இருக்குது' என்று வசனம் பேசி அவளுடன் மல்லுக்கு நிற்பவன், இப்பொழுதெல்லாம் அவள் உடை மாற்ற ஆயத்தம் ஆனாலே, யாருடனோ பேசுவது போல, அலைபேசியுடன் பால்கனிக்கு ஓடி விடுவான்.
இரவெல்லாம் கேட்கவே வேண்டாம் அவள் தூங்கிய பிறகு தான் வருவான். அவள் விழிக்கும் பொழுது அவன் பயன்படுத்தும் மெத்தை விரிப்பு நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்கும், அவன் வந்திருக்கிறான் என்று இவள் புரிந்து கொள்வாள்.
ஆரம்பத்தில் ஒரு இரெண்டு நாட்கள் அவனது விலகல்கள் அவளுக்கு தொல்லை விட்டது என்று நன்றாக தான் இருந்தது. ஆனால் நாள் போக போக அவனிடம் தெரிந்த ஒரு அந்நியத்தன்மை யாத்ராவின் மனதில் ஓரம் ஏதோ செய்ய, ஏனோ அவள் மனம் அவளையறியாமலே தன்னவனின் அருகாமைக்காக ஏங்க ஆரம்பித்தது.
இதோ இப்பொழுது கூட அவள் ஏதோ தீண்டத்தகாதவள் போல அவளை விட்டு தள்ளி நின்று கொண்டு அவன் பார்வையிடுவது அவளுக்கு அவ்வளவு எரிச்சலை கொடுத்தது, இருந்தும் அதை அவனிடம் காட்டிகொள்ளாதவள்,
"ஆமா" என்று என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று புரியாமல் ஒருவித தயக்கத்துடனே நின்றவள், ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக,
"அத்தையும் மாமாவும் விழுப்புரம் போயிருந்தாங்கல்ல, சௌமியாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்காம்" என்று சொல்ல, மெதுவாக தலையசைத்த ஆரி,
"எனக்கு தெரியும் பா அம்மா சொன்னாங்க" என்றான்.
"ம்ம் கடை பையன் சாவி கொண்டு வந்தான் நான் கீ ஹோல்டர்ல போட்ருக்கேன்" என்றவளை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தவன், 'ம்ம் பரவாயில்லையே இப்போவெல்லாம் நம்மகிட்ட மூஞ்சை வெட்டாம பேசவெல்லாம் செய்றாலே நல்ல முன்னேற்றம் தான்' என மனதிற்குள் எண்ணியவன், 'சீக்கிரம் நீ என் காதலை புரிஞ்சிகிட்டு என்னை ஏத்துக்கணும் யாத்ரா அதுவரை நான் காத்துட்டு இருப்பேன்' என்று தன் மனதிற்குள் பேசியவன், அவளிடம்,
"ம்ம் பார்த்தேன் பா" என்று கூறி சிறு புன்னகையுடன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் உள்ளே சென்றதும், "முன்னாடியெல்லாம் வாய்மூடாம பேசிட்டே இருப்பான், இப்போ 'பார்த்தேன் பா, தெரியும் பான்னு' எரிச்சலை கிளப்புறான்" என்றவளின் மனம்,
"இப்போ அவன் பேசாட்டா என்ன வந்துச்சு, நீ அதை தான எதிர்பார்த்த இப்போ ஏன் அவனை திட்டுற" என்று அவளை கேள்வி கேட்கவும் தான் உணர்வு வந்தவளாக,
"ஆமா தானே அவன் முகத்தை கூட பார்க்கப் புடிக்கலைனு சொன்ன நாமளா அவன் பேசலனு கவலை படுறோம், ச்ச பேசுறான் பேசாம போறான். இனிமே இப்படியெல்லாம் யோசிக்க கூடாது" என்று தனக்கு தானே கூறியவள், அவனுக்கு உணவு கொண்டுவருவதற்காகக் கீழே சென்று, தோசைகளை அவனுக்குப் பிடித்தது போல முறுகலாகச் சுட்டுகொண்டுவந்து தன் அறையில் டேபில் மேலே வைத்தபொழுது, டேபிளில் இருந்த ஆரியின் அலைபேசி தன் இருப்பிடத்தை காட்ட, முதலில் விட்டுவிட்டவள், பின்பு அது விடாமல் ஒலிக்கவும் மணியைப் பார்த்தாள்.
பன்னிரெண்டை இதோ தொட்டுவிடுவேன் என்று பெரியமுள் நகர்ந்து கொண்டிருக்க, 'இந்த நேரத்துல யார் கால் பண்ணிட்டு இருக்காங்க' என மனதிற்குள் எண்ணியவள் பல யோசனைக்குப் பிறகு அவனது அலைபேசியை எடுத்துப் பார்க்க, "மஹிஷா ஷர்மா காலிங்" என்று அலைபேசியின் தொடு திரை மஹிஷாவின் பெயருடன் சேர்த்து அவளது அழகான புகைப்படத்தையும் தாங்கி ஒலித்து விட்டு அடங்கியது.
'இவ இந்த ரீல்ஸ் எல்லாம் போடுற சிங்கர் ஆச்சே, இவ ஏன் இவருக்கு அதுவும் இந்த நேரத்துல கால் பண்ணிட்டு இருக்கா' என எண்ணிய யாத்ராவுக்கு ஒருவிதமாக நெருடலாக இருக்க, அப்பொழுது குளியல் அறையிலிருந்து வந்த ஆரி,
"டைம் ஆச்சு பா இன்னுமா தூங்கல? நீ படுத்துக்கோ நானே போட்டுச் சாப்ட்டுக்குவேன்" என்று அவன் சொல்லவும் அவனது கையில் தான் ஏற்கனவே எடுத்து வந்த உணவுகள் அடங்கிய தட்டைக் கொடுத்தவள்,
"சாப்பிடுங்க நான் நீங்கக் குடிக்க தண்ணி கொண்டு வரேன்” என்று கூற மென்மையாகப் புன்னகைத்தவன் சாப்பிட ஆரம்பித்துக் கொண்டிருக்க, மீண்டும் அலைபேசி ஒலிக்கவும் புன்னகையுடன் இந்த முறை அழைப்பை ஏற்ற ஆரி எதிர் தரப்பில் என்ன கூறப்பட்டதோ,
"நான் வரேன்" என்றவன், பிளேட்டை அப்படியே கீழே வைத்துவிட்டு,
"யாத்ரா ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்து சாப்பிட்டுகிறேன்" என்றவன் வேகமாக அறையிலிருந்து வெளியேற,
"பசிக்குதுனு மூஞ்சை பார்த்தாலே தெரியுது, வேலை இருந்தா சாப்டுட்டு வரேனு சொல்ல வேண்டியது தானே, அவ கூப்பிட்டதும் பாய்ஞ்சிட்டு போறாரு" என்று வாய்விட்டே கூறியவள் பின்பு,
"போனா போகட்டும் எனக்கென்ன நிம்மதி ஹ்ம்ம்" என்று பல்லை கடிக்க, அவள் மனதை சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு ஒன்று பலமாக தாக்க, புத்தகத்தை எடுத்து படிக்க முயற்சித்தவளின் முயற்சிகள் அனைத்தும் முயற்சிகளாகவே இருந்துவிட, கோபமாக புத்தகத்தை மூடி டேபிளில் வைத்தவள் கண்களை இறுக்கமாக மூடி கொண்டு படுக்க, ஏனோ யாத்ராவுக்கு உறக்கம் வர மறுத்தது.
@@@@@@@@@
"அவ தப்பிச்சு போற அளவுக்கு நீங்க அவ்வளவு சிறப்பா காவல் காத்துட்டு இருந்திருக்கீங்க ம்ம்" என்று தன் முன் கரங்களைக் கட்டிக்கொண்டு தான் அடித்ததில் கன்னம் சிவக்க நின்றிந்த தனது சகாக்களிடம் சீறிய காஞ்சனா, மருத்துவரை முறைக்க,
"அந்தப் பொண்ணு அப்படி பண்ணும்னு எனக்குத் தெரியாது மேடம்" எங்கே தனக்கு அடி விழுமோ என்கின்ற பயத்தில் அந்த மருத்துவர் சரணடைய, பல்லைக் கடித்தவள், "உங்களுக்கு முழுசா ஒருநாள் டைம் தரேன், அவ இங்க வரணும் இல்லை ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன், போங்க போய் தேடுங்க" என்று காஞ்சனா அவர்களை கடுமையாக எச்சரித்தாள்.
@@@@@@@@@
காலைப் பொழுது நன்றாகப் புலர்ந்திருக்க தன் அலைபேசியின் தொடர் சிணுங்களில், மிகவும் சிரமப்பட்டு கண்விழித்த யாத்ரா நேற்று இரவு, நேரம் கடந்து தூங்கியதின் பரிசாகக் கிடைத்த தலைவலியுடன் நெற்றியை இறுக்கமாகப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தாள்.
உயிரே போவது போலத் தலைவலி அவளைப் படுத்தி எடுக்க, விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் அலைபேசியை கையில் எடுத்தவளுக்கு, அவள் மீதே கோபம் வந்தது. சட்டென்று அட்டென்ட் செய்தவள்,
"சாரி மாமா இதோ இப்போ சாவிய கொடுத்துடுறேன்" அலைபேசியின் தொடு திரையில் வைத்தீஸ்வரனின் அழைப்பைப் பார்த்ததும், அவரது அழைப்பிற்கான காரணத்தைப் புரிந்துகொண்டவள் அவர் பேசுவதற்குள் தானே சிறு மன்னிப்புடன் விடயத்தைச் சொல்லிவிட,
"உன் குரல் ஏன் ஒருமாதிரி இருக்கு பா? பிரச்சனை ஏதும் இல்லையே"
"இல்லை மாமா நல்லா இருக்கோம்" எனச் சாவியை எடுத்தபடி கூறியவள் அவரிடம் பேசிக்கொண்டே படிகளிலிருந்து இறங்கி வந்தாள்.
"அவனை எங்க? அவனுக்கும் கால் பண்ணினேன் கால் போகவே இல்லை, அவனைக் கொடுக்கச் சொல்லுமா நீ போயிட்டு இருக்காதே" என்று அவர் சொல்லவும் ஒருகணம் அமைதி காத்தவள் பின்பு,
"அவரு தூங்கிட்டு இருக்காரு மாமா நானே கொடுத்துடுறேன்" என இரவு அவன் வெளியே சென்றதையும் இன்னும் அவன் வீடு திரும்பாததையும் சொல்லித் தேவை இல்லாமல் தந்தை மகனுக்கு இடையில் மனஸ்தாபம் வருவதை விரும்பாது பொய் சொல்லிவிட,
"சரி பார்த்துக்கோ உன் அத்தை உள்ள வேலையா இருக்கா, அப்புறம் பேசுவா மா" என்றவர் அழைப்பை வைத்துவிட, யாத்ரா கதவைத் திறந்து வாசலில் நின்றிருந்த பையனிடம் சாவியை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவள் 'நைட் போனது இன்னும் வரல, ஒரு ஃபோன் கூடப் பண்ணி சொல்லலை ச்ச' என்றவளுக்கு கோபம் தான் வந்தது. அதைவிடக் காரணமே இல்லாமல் முன் பின் தெரியாத மஹிஷா மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு அவள் குறுக்கும் நெடுக்கும் நடக்க,
'உனக்குத் தான் அவன் வேண்டாமே, பிடிக்காதே, பிறகு அவன் யாருடன் எங்குச் சென்றால் என்ன? ஏன் இவ்வளவு கோபம்?' என்று அவளது மனசாட்சி கேள்வி எழுப்ப, சில நொடிகள் தீவிர சிந்தனைக்குப் பிறகு, "அதானே ஏன் நான் கவலைப்படணும் அவன் எங்கையும் போகட்டும் யாரு வேணும்னாலும் அவனுக்குக் கால் பண்ணட்டும் எனக்கென்ன வந்துச்சு" என்று வீம்பாக எண்ணியவள், தன்னையும் மீறித் தன்னவனை பற்றி நினைக்கும் தன் மனதை வலுக்கட்டாயமாக நெட்டித்தள்ளி தன் வேலையில் கவனமானாள்.
காலை உணவை தயாரித்து மேசையில் வைத்தவள், உணவு உண்ண அமர்ந்த பொழுது மீண்டும் ஆரியின் நினைவு வர, 'அவன் ஏதும் சாப்ட்டானா இல்லையான்னு தெரியலையே' என்று எண்ணியவள் சில நிமிட யோசனைக்கு பிறகு, தன் கோபத்தை விடுத்து தனது அலைபேசியில் இருந்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரெண்டு ரிங்கில் அழைப்பு துண்டிக்க பட்டது. அவ்வளவு தான் இருந்த பொறுமையெல்லாம் எங்கோ சென்றிருக்க, அதீத கோபத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்தவளுக்கு அவள் கொண்ட தலைவலி வேறு இன்னும் ஆத்திரத்தை கொடுக்க,
"ஃபோனை எடுக்காட்டா போ டா" என்று பல்லை கடித்தவள் இயல்பை தாண்டி இரெண்டுக்கு நான்கு இட்டிலிகளை உள்ளே தள்ளிவிட்டு, குளித்து முடித்து கிளம்பி வெளியே செல்ல கதவை திறந்த பொழுது, தன் ஜீப்பில் இருந்து இறங்கினான் ஆரி.
அதுவரை சோர்வுடன் காணப்பட்டவனின் விழிகள் தன்னவளை எதிரே கண்டதும் பளிச்சிட, எப்பொழுதும் போல நெஞ்சம் முழுவதும் நிறைந்த காதலுடன் அவளை அவன் பார்க்க, அவளும் அவனை தான் பார்த்தாள்.
அதுவரை அவன் மீது இருந்த கோபம் மொத்தமும் அவனது களைப்பான தோற்றம் கண்டு மறைந்து, அவளை அறியாமலே அவளது இதழோரம் பரவசத்துடன் கூடிய புன்னகை அரும்பியது.
இந்த பரவசமும், புன்னகையும் தான் வேண்டாம் என்று வெறுக்கும் ஒருவனை, தனக்கு பிடிக்காத ஒருவனை பார்த்ததும் எதனால் தனக்கு வரவேண்டும், என்று பெண்ணவள் ஒரு நொடி உணர்ந்திருப்பாள் என்றால், இந்த நிமிடமே தன் மனதினை கணவனிடம் உரைத்திருப்பாள். ஆனால் பெண்ணவளின் மரத்து போன இதயத்திற்கு இதுதான் தன்னவன் மீது தான் கொண்ட காதல் உணர்வு என்று புரியாது போனதன் விளைவு என்னவோ?
"வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றவளின் அலைபேசி தன் இருப்பிடத்தை காட்ட, அழைப்பது யார் என்பதை பார்த்தவள் அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட அதை கவனித்த ஆரி,
"உன் ஃப்ரண்ட்ஸ்னு நினைக்கிறேன் நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்" என்று கூறினான்.
ஆனால் அவளோ, "இல்லை நான் பார்த்துகிறேன் நீங்க வாங்க" என்க,
"சரி ஒரு பத்து நிமிஷம் குடு ஃப்ரஷ் ஆகிட்டு வரேன், சாப்டுட்டு நானே உன்னை ட்ராப் பண்றேன்" என்று தன் சோர்வை மறந்து ஆரி உற்சாகமாக கூற, அவளும் மறுக்கவில்லை.
ஜீப் ஆரியின் கரங்களில் மிதமாக சாலையில் சென்று கொண்டிருக்க,
"மஹிஷா என் ஃப்ரண்ட் தான், வந்திருந்த இடத்துல ஒரு ப்ராப்லம் எமெர்ஜென்சி அதான் திடீர்ன்னு கிளம்ப வேண்டியதா போய்டுச்சு, சாரி நைட்டும் வர முடியல" மன்னிப்பும் விளக்கமும் இதுவரை யாரிடமும் கூறி பழகிறாதவன், இப்பொழுது மனைவி கேட்காமலே விளக்கம் கூற, தன் மனதில் ஓடிய உணர்வுகளை புரிந்து கொண்டு தான் கேட்காமலே அதற்கு விளக்கம் கொடுத்த கணவன் மீது மதிப்பு இன்னும் கூடியது.
ஆரிக்கும் சமீப நாட்களாக யாத்ரா காட்டும் சின்ன சின்ன நெருக்கமும் அக்கறையும் மனதிற்குள் இனிமையை தர, எப்பொழுதும் தன்னிடம் இருந்து ஒதுங்கியே இருக்கும் தன்னவள் இன்று தான் கேட்டதும் வழக்கம் போல மறுக்காமல், தன்னுடன் வரும் இந்த கார் பயணம் கூட மிகவும் பிடித்திருந்தது.
மனைவி தன்னை புரிந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்பியவனுக்குள், ஒருவித இனம் புரியாத இதம் பரவ, தன்னை சுற்றியிருக்கும் வேலை பழுக்களையெல்லாம் கொஞ்சம் நேரத்திற்கு மறந்தவன், மனம் முழுவதும் நிம்மதியுடன் முக மலர அமர்ந்திருக்க, கணவனின் மகிழ்வான முகத்தைக் பார்த்த அவளும் காரணம் புரியாமல் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யுங்கள்.
அத்தியாயம் 13

Last edited:
Author: Naemira
Article Title: அத்தியாயம் 12
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.