Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
அர்ஜுனன் மற்றும் யாத்ராவின் திருமணத்திற்கு இன்னும் இரெண்டு வாரங்களே இருக்கவும், இரு வீடுமே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது.



யாத்ராவுக்கு இறுதி ஆண்டு தேர்வு மட்டும் தான் இருப்பதால், வீட்டின் பெரியோர்கள் திருமணத்தை தள்ளி போடாது, தேதியை முடுவு செய்திருந்தனர்.



நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவருக்கும் பத்திரிக்கை வைப்பது முதல், பட்டுப்புடவை, நகைகள் வாங்குவது என ஆரி அர்ஜுனன் மற்றும் யாத்ராவின் குடும்பத்தினர் பம்பரமாக சுழன்றனர்.



இருவீட்டினரும் சேர்ந்து நடத்தும் திருமணம் என்பதால், திருமண வேலைகளை தங்களுக்குள் சமமாக பிரித்து கொண்டு செயல்பட்டனர்.



கல்யாணம் ஒருபக்கம் நெருங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஆரிக்கு வேலை சுமையும் அதிகரித்துக்கொண்டிருந்தால், யாத்ராவிடம் பேசுவதற்கு ஆரியால் நேரம் ஒதுக்க முடியவில்லை.



மேலும் திருமணம் வரை அவளுக்கு தனிமை கொடுக்க விரும்பிய அர்ஜுனன், ஒன்று இரெண்டு முறை மட்டும் அலைபேசியில் அவளிடம் தொடர்புகொண்டு வழக்கமான நல விசாரிப்புகளுடன் நிறுத்தி கொண்டவன், வேறு எதுவும் அவளுடன் பேசிக்கொள்ளவில்லை.



அப்படியே இரெண்டு வாரமும் சட்டென்று கடந்துவிட, திருமணத்திற்கு முந்தைய நாளும் வந்தது.



மாலையில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் இரு வீட்டு உறவினர்கள், யாத்ராவின் நண்பர்கள், வைகுண்டராஜன், வைத்தீஸ்வரன் தொழில் முறை நண்பர்கள் என மண்டபமே உறவுகளால் நிரம்பியிருந்தது.



அர்ஜுனனின் நெருங்கிய நண்பர்களும், காவல் துறை அதிகாரிகளுமான அழலன் மற்றும் அகரன், ஆரி அர்ஜுனனுடன் இணைந்து, கமிஷனரின் உத்தரவின் படி ஒரு கேஸ் விடயமாக வெளியூர் சென்றிருந்ததால், ஆண்கள் மூவரும் வேலையெல்லாம் முடித்து விட்டு நேராக மண்டபத்திற்கே வந்துவிட்டனர்.



என்ன தான் தொடர் வேலை காரணமாக உடம்பில் அவ்வளவு அலுப்பு இருந்தாலும் ஆரி அர்ஜுனனின் மனம் தன்னவளை காண தான் மிகவும் ஏங்கியது.



அந்நேரம் தோழிகள் புடை சூழ யாத்ராவுக்கு மெஹந்தி போடும் படலம் நடந்துக் கொண்டிருப்பதை தன் அறையின் வாசலில் இருந்து கண்ட ஆரியின் கண்கள் காதலால் மின்னியது.



இத்தனை நாட்கள் தன்னவளை பார்க்காததால் உண்டான ஏக்கம் அவனது தயக்கத்தை உடைத்தெறிய செய்ய, எதை பற்றியும் யோசிக்காதவன் உடனே கீழே வந்தான்.



ஏற்கனவே மதனா மற்றும் கார்த்திக் மூலமாக ஆரி அர்ஜுனனை பற்றி அறிந்திருந்த யாத்ராவின் தோழிகள், ஆரியை அங்கு பார்த்ததும் தங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்லி கட்டாயப்படுத்த, யாத்ராவோ வேண்டாவெறுப்பாக அவர்களை அழைத்து கொண்டு, அவன் அருகில் சென்று, ஆரியை தன் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.



ஆரியின் கம்பீரமான தோற்றத்தையும், சிரித்தமுகமாக அவன் பழகிய விதத்தையும் கண்டவர்களுக்கு, முதல் பார்வையிலேயே அவனை மிகவும் பிடித்துப் போயிற்று.



"ஹேய் யாத்ரா உன் ஆளு சூப்பர்டி, சும்மா ஜம்முன்னு இருக்காரு" என அவளது தோழிகளில் ஒருவள் ரசித்து, அனைத்து தோழிகளிடமும் கூற, அதற்கு இன்னொரு தோழி,



"ஆமா ஆமா மாம்ஸ் செமையா இருக்காரு பா" என்று ஆமோதித்தாள்.



அப்பொழுது, "ஏய் ஓவரா சைட் அடிக்காதிங்கடி அவர் நமக்கு பிரதர் மாதிரி" என்று கூறினாள் இன்னொருத்தி.



அந்த பெண் அவ்வாரு கூறவும், "இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது? ராசிக்காம இருக்க முடியலையே, அதுல என்ன தப்பு, நம்மளால ரசிக்க மட்டும் தான் முடியும்" என்று என இன்னொரு பெண் சொன்னது தான் தாமதம், தோழியர் அனைவரும் கலகலத்து சிரித்தனர்.



அவர்களின் சிரிப்பை கண்ட ஆரி,



"என்னாச்சு சிஸ்டர்ஸ்? எதுவானாலும் சொல்லிட்டு சிரிச்சா நானும் சிரிப்பேனே" என்று சொல்லவும், "இவ உங்கள சைட் அடிக்கிறா அண்ணா" என்று ஒரு பெண்ணை கை காட்டியப்படி மற்ற பெண்கள் சிரிக்க, அதை கேட்ட ஆரியோ யாத்ராவை ஓரக் கண்ணால் பார்த்தபடி,



"ஐயோ சிஸ்டர்ஸ், கல்யாணத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவீங்க போல, நான் இந்த ஆட்டதுக்கு வரல" என்க, "ஏய் யாத்ரா அண்ணா உனக்கு ரொம்பதான் டி பயப்படுறாரு" என்று பெண்கள் அனைவரும் அவனிடம் கேலி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.



'என்னது இது? எல்லாரும் இவனை என்னமோ ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி வச்சுபேசிட்டுத் திரியுறாங்க. ஆனா நம்ம கண்ணுக்கு அப்படி எதுவும் தெரியலையே. அப்படி என்னதான் இருக்கு இவன்கிட்ட? எல்லாரும் இவனையே புகழ்றாங்க' என மனதிற்குள் எண்ணிய யாத்ராவின் கண்கள் முதல் முறையாக ஆரியை முழுதாக அளவெடுக்க ஆரம்பித்தது.



பார்ப்போரின் மனதை அலைபாயவைக்கும் காற்றில் அலைபாயும் கருத்தடர்ந்த கேசம். அறிவையும், ஆளுமையையும் பறைசாற்றும் அகன்ற நெற்றி. கன்னிப்பெண்களின் மனதை பற்றவைக்கும் அக்னி விழிகள்.



ஆண்களுக்கே தனி ஒரு கம்பீரத்தை தரும் அளவான, அழகான தாடியுடன் கூடிய மீசை. பாவையரின் மனம் மயக்கும் மந்திரப்புன்னகையை உதிர்க்கும் உதடுகள்.



திரண்ட புஜங்கள். அகன்ற தோள்கள். பெண்ணவளை சாய்த்து கொள்ள காத்திருக்கும் பரந்த மார்பு. முழங்கை வரை மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டையில் அடங்கியிருந்த வலுவான கைகள்.



யாரையும் வீழ்த்தும் சதைப் பிடிப்பற்ற கம்பீரமான உடற்கட்டு. மொத்தத்தில் கம்பீரமான ஆண்மகனாக வீற்றிருந்தான் ஆரி அர்ஜுனன் .



ஆரியை விழிகளால் அளவெடுத்துக் கொண்டிருந்த யாத்ராவுக்கு என்ன தான் அவன் மீது கோபம் இருந்தாலும், அவளது மனதின் ஓரம் அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு இப்பொழுது விழித்துக்கொள்ள, பெண்ணவளால் அவனது கம்பீரமான அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைமறந்து அவனை ரசித்தவள், 'எவ்வளவு மேன்லியா இருக்கான்' என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள்.



உறவினருடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு கண்ணை தன்னவளின் மேலேயே வைத்திருந்த ஆரிக்கு தன்னவள் தன்னை இமைத்தட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.



யாத்ரா ஆரியையே தன் விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருப்பதை கண்ட அவளது தோழியர் அவளை பார்த்து கேலியாக சிரித்து கொண்டு,



"போதும்டி சைட் அடிச்சது. இப்படி பாக்குற, நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை" என கேலி செய்து, அவள் எதிர் பார்க்காத நேரம் வேண்டுமென்றே அவளை பிடித்து ஆரியின் பக்கம் நகர்த்தி, அவன் மீதே தள்ளி விட்டு சிரித்தனர்.



இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத யாத்ரா, அவர்கள் தன்னை தள்ளி விட்டதில் அர்ஜுனனின் மீதே மோதியவள், சமநிலை இல்லாது தடுமாறி, அவனது மேல் சட்டை மேல், மார்பு பகுதியில் அழுத்தமாக தன் இதழை பதித்து விட்டாள்.



தன்னவளின் இதழ் தீண்டியது தன் மேல் சட்டையை தான், என்றாலும் தன்னவளிடம் இருந்து வந்த முதல் தீண்டலை சுகமாக ரசித்தவனின் உணர்வுகள், அவளது இதழ் பட்ட ஸ்பரிசத்தில் உயிர் பெற, ஆரி தான் மிகவும் சங்கடப்பட்டுப்போனான்.



தான் செய்த செயலில் அனைவரின் கேலியும், சிரிப்பும் மேலும் அதிகரிக்கவும், கூச்சத்தில் யாத்ராவின் முகம் செவ்வனமாய் சிவந்து விட்டது.



ஒரு முத்ததிற்கே உணர்வுகள் வெடிக்கும் நிலையில் நின்றிருந்த ஆரிக்கோ, அவளது செவ்வானமென சிவந்த முகத்தைக் கண்டதும், அவனால் அவனது உணர்வுகளை சுத்தமாக கட்டுப்படுத்த முடியவில்லை.



"என்ன இது, இன்னைக்கு பார்த்து ரொம்ப டெம்ப்ட் பண்றா" என்று முணுமுணுத்தவன், மெல்ல அவளது காதருகில் குனிந்து கிசுகிசுப்பாக,



"சத்தியமா என்னால முடியல, தனியா வா கொஞ்சம் பேசணும்" என்றான் .



அவளுக்கு பக்கென்று ஆனது, உடனே நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள், எப்பொழுதும் போல அதில் அவளுக்காக கனன்று கொண்டிருக்கும் தாபப்பார்வையை கண்டவள், அதில் சிக்கிக்கொள்ள துடித்த தன் மனதை மிகவும் சிரமப்பட்டு மீட்டடுத்து,



"பேசணுமா! நீங்களா! ம்ஹூம் முடியாது" என்று கூறிவிட்டு, அவனிடம் இருந்து கொஞ்ச தூரம் சென்று, தள்ளி நின்றாள்.



அதை பார்த்துவிட்டு அவள் அருகே நெருங்கி வந்தவன் மீண்டும் அவள் செவியோரமாக,



"அப்போ ரிங் போடும் பொழுது எல்லார் முன்னாடியும், ஏதாவது செஞ்சா என்னை திட்ட கூடாது, சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது" என கிசுகிசுத்தான்.



அதை கேட்டு முறைத்த யாத்ரா, தனது கைகளில் மருதாணி இருந்ததால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் போகவும், யாருக்கும் தெரியாமல் அவனது காலில் நன்றாக தன் ஹீல்ஸ் பதியும்படி மிதித்து வைத்து விட்டாள்.



யாத்ராவின இந்த திடீர் செய்கையில் கத்த முடியாமல் வலியை அடக்கிக் கொண்ட ஆரி,



"ஏய் உன்னை இரு, நாளைக்கு நைட் உனக்கு இருக்கு டி" என ஒரு மாதிரி குரலில் கூறவும், அரண்டு போனவள், அவனை விட்டு தள்ளி போக பார்க்க, யாரும் அறியாமல் அவளது விரல்களை தன் விரல்களுடன் கோர்த்துக்கொண்டான்.



யாத்ராவோ அவனை விட்டு விலக முடியாது தவித்தவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து ஏதோ சொல்ல வர, அதற்குள் ஆரி,



"சத்தியமா சொல்றேன், கண்டிப்பா ரிங் போடும் பொழுது கிஸ் பண்ணுவேன்" என்று செய்தே தீருவேன் என்னும் பிடிவாதத்துடன் கூறினான்.



ஆரி அவ்வாறு விஷம சிரிப்புடன் சொல்லவும்,



"இப்போ என்ன வேணும் ஆரி? ஏன் படுத்துறீங்க?" என கெஞ்சளுடன் வினவினாள் யாத்ரா.



"ம்ம் உள்ள வா என்ன வேணும்னு சொல்றேன்" என்றவன் தன் தலையை கோதியபடி முன்னே செல்ல, அவளுக்கு தான் சங்கடமாக போனது.



போகவில்லை என்றால் சொன்னதை போல ஏதும் செய்து விட்டால்? என்ன செய்வதென்று எண்ணியவளோ வேறு வழி இல்லாது, தன் தோழி மதனாவிடம்,



"மச்சி வாஷ் ரூம் போயிட்டு வரேன்" என்றாள்.



யாத்ரா அவ்வாறு சொல்லவும் அவளை பார்த்து சிரித்த மதனா,



"நீ மாம்ஸை பார்க்க தானே போற" என்று கேட்டாள்.



அதைக் கேட்ட யாத்ரா, மதனாவை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளது பார்வையை உள்வாங்கிய மதனாவோ,



"மாம்ஸ் போனதும் அவர் பின்னாடியே நீயும் போறியே அதான் கேட்டேன். போ போ வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்,டு இப்போ நீ தான் ரொம்ப வேகமா இருக்க டி" என்றவள் யாத்ரா முறைக்கவும்,



"சரி சரி முறைக்காத, யார்கிட்டையும் சொல்ல மாட்டேன் போ, என் மாம்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு" என்ற மதனா ஒற்றை கண் சிமிட்டி யாத்ராவை பார்த்து கேலியாக சிரித்தாள்.



தன் தோழியின் கேலி சிரிப்பை எண்ணி, மானசிகமாக தன் தலையிலே தட்டிக் கொண்ட யாத்ரா,



"எல்லாம் இவனால வந்தது" என்று ஆரியை திட்டிக்கொண்டே அவனை தேடினாள்.



அப்பொழுது சட்டென்று அவளது கரத்தை பிடித்திழுத்த ஆரி, மாடி படிக்கு கீழே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறைக்குள் அவளை அழைத்து சென்று, கதவை சாற்றிவிட்டு, தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு கதவின் மீதே சாய்ந்து நின்றான்.



தனது அதிரடியில் மிரண்டு விழித்த தன்னவளின் மருண்ட விழிகளை ரசித்த ஆரி,



"என்னடி பொண்டாட்டி பயந்துட்டியா.?" என கேலி செய்தவாறே நெருங்கவும் விலகியவள்,



"அங்கையே நில்லுங்க, கிட்ட வந்தீங்க நான் போய்டுவேன்” என்றாள்.



"ஆஹான் போ" என்ற ஆரி புன்னகையுடன் அவளை நெருங்கி வர யாத்ராவோ,



"உங்களை பார்த்தா பேச கூப்பிட்டது போல இல்லை, நான் போறேன்" என்றவள் கதவின் அருகே செல்லவும், அவள் அங்கிருந்து செல்ல முடியாது அவளது இடைபிடித்திழுத்து தடுக்க, பதறி ஆரியின் விழிகளை பார்த்த யாத்ராவின் முகம் எங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பியது.



நெஞ்சம் படபடக்க நின்றிருந்தவளோ, "நான் போக.." போகணும் என்று முழுவதும் சொல்லி முடிப்பதற்குள், அவளை ஜன்னல் அருகே அழைத்து வந்த ஆரி, தன்னையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளின் வதனத்தை பிடித்து திருப்பி, அவள் எதிரே இருந்த, இருண்ட வானில், ஒளிர்ந்து கொண்டு இருக்கும் முழுநிலவை பார்க்க செய்தவன், அப்படியே யாத்ராவை, பின்னால் இருந்து தன்னுடன் நெருக்கி அணைத்திருந்தான்.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.


அத்தியாயம் 4
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 3
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Dec 16, 2024
Messages
5
விடிஞ்சா கல்யாணம் அதுக்குள்ளே ஆரிக்கு 😄😄😄😄😄😄யாத்ரவை வம்பு பண்ணனும்
 
Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
விடிஞ்சா கல்யாணம் அதுக்குள்ளே ஆரிக்கு 😄😄😄😄😄😄யாத்ரவை வம்பு பண்ணனும்
ஆமா சிஸ் அவன் எனி டைம் லவ் மோட்ல தான் இருப்பான்.
தேங்க்ஸ் டியர் ❤️
 
Top