Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
காலையில் ஆதவனின் வருகையில், உறக்கம் கலைந்தாலும் எழுந்து கொள்ள மனம் இல்லாது, நேற்று தன்னவளுடன் நடந்த இனிமையான தருணங்களை, எண்ணிப் பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டு கிடந்தவன், தன் மேல் ஏதோ நகர்வது போல தோன்றவும், உடனே தன் விழிகளை மலர்த்தி பார்த்தான்.



அர்ஜுனனின் காதல் மனைவி, இடையோடு அவனை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.



நேற்று இரவு கூடலின் முடிவில், தன்னவனின் அணைப்புக்குள் ஒருவித தவிப்புடன் இருந்தவள், இப்பொழுது தானே அவனை அணைத்துக்கொண்டு சுகமான துயிலில் இருந்தாள்.



தனது திடமான மார்பில், தன் மென் கன்னத்தை பதித்துக்கொண்டு, சிறு இடைவெளி கூட இல்லாது, தனது தேகத்தோடு நெருங்கி உறவாடிகொண்டிருந்த தன்னவளை கண்டு, தாபம் தலைவிரித்தாடியது அர்ஜுனனுக்கு.



இப்பொழுது மெல்ல யாத்ராவின் உறக்கம் கலையாமல் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், தன் நாசியை தீண்டிய அவளது வாசனையை நுகர்ந்து அதன் சுகந்தத்தை உள்ளிழுத்து சுவாசிக்க, ஏசியின் குளுமைக்கும் அவனுக்குள் தகிக்கும் வெம்மைக்கும் நடுவே அவனது உணர்வுகள் தத்தளித்தது.



கட்டவிழ்ந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சிவந்திருந்த தன் மனைவியின் அதரங்களை மெதுவாக தன் இதழ்களால் ஒற்றியெடுத்தான் ஆரி அர்ஜுனன்.



நேற்று அவன் தீண்டிய மென் இடையோ மீண்டும், அவன் ஆசையை கிளறிவிட, தன் முகத்தின் மீது அவளது மூச்சுக் காற்று மோதும் நெருக்கம், தந்த சுகத்தில் அவனுக்குள் காதல் தீ பற்றிக்கொண்டு எரிந்தது.



தன்னவளை தன் இஷ்டம் போல ஸ்பரிசித்து, முத்தங்களால் மீண்டும் காதல் யுத்தம் செய்ய ஆவல் இருந்தும், ஏனோ குழந்தைபோல உறங்கும் தன்னவளின் உறக்கம் கலைவதை விரும்பாத அர்ஜுனன், தன்னவளை விலக்கி விட்டு எழவும் மனம் வராமல், அவளோடு கூடவும் முடியாமல், தவிப்புடன் அவளை ஆசை தீர பார்த்தபடி படுத்திருந்தான்.



நேரம் கடந்த பிறகு மெல்ல தன் உறக்கம் கலைந்து கண்விழித்த யாத்ராவுக்கு, மனதிற்குள் ஏதோ தோன்றவும், திரும்பி பார்த்தாள்.



அவள் கண்களில் முதலில் தென்பட்டது, விழிகளாலேயே தன்னை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்த தன் கணவன் அர்ஜுனன் தான். நேற்று இரவு நடந்த அனைத்தும் அவளுக்கு இப்பொழுது நினைவிற்கு வர, பெண்ணவளோ சொல்ல முடியாத உணர்வில் சிக்கி கொண்டு தவித்தாள்.



நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமலே, அவனது பார்வையின் வீச்சு தன்னுள் ஊடுருவதை வைத்து, ஆரியின் விழிகள் தன்னை விட்டு அகல வில்லை என்பதை, உணர்ந்து கொண்டவளுக்கு, அவனது முகம் பார்க்க அவ்வளவு தயக்கமாக இருந்தது.



போதாக்குறைக்கு அவள் இருந்த நிலை வேறு அவளுக்கு சங்கடத்தை கொடுக்க, உடனே போர்வையை இழுத்து போர்த்திவிட்டு, அதனுள் நத்தை போல ஒளிந்துகொண்டு, அவனை விட்டு விலகி ஓரமாக சென்று அமர்ந்துகொண்ட யாத்ராவுக்கு, 'உன்னை பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம்' என்று ஆரியிடம் அவ்வளவு பேசிவிட்டு, நேற்று அவன் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து அவனுடன் உருகி கரைந்ததை எண்ணி, தனக்குள்ளே மருகியவளுக்கு அர்ஜுனனை நிமிர்ந்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.



போதாக்குறைக்கு நிச்சயம் ஆரி தன்னை கேவலமாக நினைத்திருப்பான், என அவளாகவே ஒன்றை தன் மனதிற்குள் எண்ணி கொண்டவள், ஒருவித அவமான உணர்வுடன் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.



யாத்ரா விழித்தது துவக்கம், அவளது முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வுகளையும் கண்ட அர்ஜுனனுக்கு தன்னவளின் தயக்கமும், ஒதுக்கமும் வலித்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாது, தன்னவளை இயல்பாக்கும் முயற்சியில் இறங்கினான்.



"ஏய் கண்ணம்மா நிமிர்ந்து என்னை பாரு டா" என்றான் ஆரி, ஆனால் அவள் நிமிராமல் அப்படியே இருக்கவும், வலுக்கட்டாயமாக அவளது முகத்தை பிடித்து மென்மையாக நிமிர்த்தி,



"எதுக்கு இந்த தயக்கம்? இந்த குட்டி மூளை அப்படி என்ன யோசிக்குது" என சுருங்கியிருந்த அவளின் நெற்றியை மென்மையாக நீவியபடி ஆரி வினவினான்.



ஆனால் யாத்ராவோ அவனது கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல், மீண்டும் குனிந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்காது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அமர்ந்திருக்கவும்,



"என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா? இல்லை உன்கிட்ட தான் எனக்கில்லாத உரிமையா? நான் ஒண்ணும் யாரோ மூனாவது மனுஷனில்ல, உன் புருஷன் தான், நிமிர்ந்து என்னை பார்க்கலாம் ஒன்னும் தப்பில்லை"என புன்னகையுடன் கூறிய ஆரி, அவளது கரங்களை பிடித்து தன் கரங்களுக்குள் பத்திரப்படுத்திக்கொன்டான்.



அப்பொழுது சட்டென்று அவனிடம் இருந்து தன் கரங்களை விடுவித்து கொண்டவள், ஆரியை அழுத்தமாக பார்த்து,



"போதும் போதும் எப்படியோ அதை இதை பேசி, உங்க ஆசைய தீர்த்துக்கிட்டிங்கள்ல, இன்னும் என்கிட்ட இருந்து என்ன வேணும்?" என்று சொல்ல, இப்பொழுது யாத்ராவின் விழிகளை தனது அழுத்தமான பார்வையுடன் எதிர்கொண்டவன்,



"என்ன சொன்ன ஆசைய தீர்த்துக்கிட்டேனா. அப்போ உனக்கு என் மேல எந்த விருப்பமும் இல்லை, அப்படி தானே?" என்று வினவினான்.



அவளோ நொடி பொழுது தயக்கத்திற்கு பின், "இல்லை, எனக்கு உங்களுக்கு மேல எந்த விருப்பமும் இல்லை" என அவனது கண்களை பார்த்து பட்டென்று கூறியவள், ஆரியின் ஊடுருவும் பார்வையை தாங்க இயலாது தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.



யாத்ராவின் செய்கையில் பல்லை கடித்த ஆரி, 'கொஞ்சம் விட்டா ரொம்ப தான் பண்ற டி’ என தன் மனத்திற்குள் எண்ணிக்கொண்டவன்,



"ஓகே, உன் மனசுல என் மேல ஒரு சதவீதம் கூட நேசம் இல்லைன்னு ப்ரூப் பண்ணிரு, நீ சொன்னதை நான் நம்புறேன்" என்று யாத்ராவிடம் கூறினான்.



ஆரி அவ்வாறு கூறவும் யாத்ராவோ, "நிரூபிச்சிட்டா, எனக்கு டைவர்ஸ் கொடுப்பீங்களா" என்று கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டுவிட, ஆரிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.



இதுவரை எப்படியோ ஆனால் நேற்றைய இரவுக்கு பிறகு, யாத்ரா இவ்வாறு பேசுவது ஆரிக்கு அவள் மீது கோபத்தை கொடுத்தாலும், தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், கண்களை இறுக்கமாக மூடி திறந்து, ஒருகணம் தன் நாடியை நீவியபடி அவளை அழுத்தமாக பார்த்தான், 'நான் இருக்கிற ஸ்பீட்க்கு குழந்தை வேணும்னா தரலாம் டைவர்ஸ் எல்லாம் சான்ஸே இல்லை' என்று தன் மனதிற்குள் எண்ணி கொண்டவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன்,



"தரலாம் தரலாம் முதல்ல ப்ரூப் பண்ணு" என்று சொல்ல, அவளோ, "என்ன பண்ணனும்?" என்று கேட்டாள்.



அதற்கு ஆரியோ,



"ஒரு நிமிஷத்துக்கு நான் உன்னை என்ன பண்ணினாலும், நீ எந்த ஃபீலிங்சையும் காட்ட கூடாது. என் கண்ணை மட்டும் பார்க்கணும், ஜஸ்ட் ஒன் மினிட் தான். நான் சொன்ன மாதிரி நீ கண்ணை மூடலைன்னா, நீ கேட்டதை சிறப்பா பண்ணிடலாம்" என விஷமாய் அவளை பார்த்து கொண்டே கூறினான்.



யாத்ராவோ,



"நம்பலாமா" என புருவம் உயர்த்தி கேட்க, "நம்புமா உனக்கும் வேற வழி இல்லை, நான் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டா நீ அசைப்பட்டது கிடைக்கும். இல்லைன்னா என்கூட வாழ்ந்து தான் ஆகணும், எப்படி உனக்கு ஓகே வா?" என்று கேட்க, அமைதியாக அவன் சொன்னதை யோசித்தவள்,



"ஓகே, ஒரு நிமிஷம் தான் ஆனா, அதுக்காக நீங்க என்ன பண்ணினாலும் எல்லாம் என்னால சும்மா இருக்க முடியாது. அதனால நீங்க என் போர்வை மேல மட்டும் கை வைக்க கூடாது. இந்த கண்டிஷன் ஓகேன்னா எனக்கும் ஓகே" தான் போர்த்தியிருந்த போர்வையை தன்னை சுற்றி நன்கு போர்த்திக் கொண்டவள், அதை அழுத்தமாக பிடித்தபடி கூறினாள்.



யாத்ரா சொன்னதையும் சொல்லிவிட்டு அவள் நடந்து கொண்டதையும் பார்த்து சத்தமாக சிரித்த ஆரி,



"நீ அப்படி வரியா சரி அப்போ டீல மாத்தி வச்சுக்கலாம்." என்றவன் யாத்ரா தன்னை புருவம் சுருக்கி பார்க்கவும்,



"ஒரு நிமிஷத்துக்கு, நான் உட்கார்ந்து இருக்கிற இந்த இடத்துல இருந்து, ஒரு இன்ச் கூட நகர மாட்டேன், ஏன் என் விரலோட நுனி கூட உன் மேல படாது. ஆனா நீ எந்த ஒரு ஃபீலிங்சையும் காட்டாம, என் கண்ண மட்டும் பாக்கணும். ஒருவேளை நீ வின் பண்ணிட்டா டிவோர்ஸ் பேப்பர்ல அடுத்த செகண்ட் சையின் பண்ணி தந்துருவேன்" அவளது விழிகளை பார்த்துக்கொண்டே உறுதியாக கூறினான்.



"லிப்ஸ் கூட படக்கூடாது" கண்டிப்புடன் கூறினாள்.



அதைக் கேட்டு சத்தமாக சிரித்த ஆரி, தங்களுக்குள் இருக்கும் சிறிதளவு இடைவெளியை பார்த்துவிட்டு, யாத்ராவை பார்த்து,



"நமக்குள்ள சின்ன இடைவெளி தான், ஆனாலும் நீயோ நானோ அரை இன்ச் நகர்ந்து வந்ததா தான் கிஸ் பண்ண முடியும். ரூல்ஸ் படி நான் வர மாட்டேன்" புன்னகையுடன் கூறினான்.



"நானும் தான்" உறுதிகள் எல்லாம் நொடியில் உடைப்படலாம் என்பதை அறியாமல் உறுதியாக கூறினாள்.



ஆரியும் யாத்திராவை பார்த்தபடி சரியென்று தலையசைத்தவன், சில நொடிகளுக்கு எதுவும் பேசாது, தன்னவளையே பார்த்து கொண்டே இருக்க, ஆளை விழுங்கும் ஆணவனின் பார்வையின் வீச்சு தாங்காமல் பெண்ணவள் தான் இப்பொழுது தடுமாறினாள்.



'என்ன இவன்? பார்த்தே என்னை ஒரு வழி பண்ணிருவான் போலையே' என்று மனதிற்குள் பயந்தவளின், கண்களில் முதலில் இருந்த உறுதி மெல்ல மெல்ல குறைய துவங்கியிருக்க, யாத்ராவால் ஆரியின் விழிகளை பார்க்கவே முடியவில்லை.



உணர்வுகள் கிளர்ந்தெழ கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற துவங்கிய யாத்ரா, அவனிடம் தோற்று விட கூடாது என்பற்காக, மிகவும் சிரமப்பட்டு கண்களை மூடாமல் விழிகளை அகல விரித்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.



ஆரியும் தன் கண்களில் காதல் நிரம்ப, யாத்ராவை பார்த்தபடியே,



"என்னுடைய காதலை உனக்கு புரிய வைக்கிறதுக்கோ, என் மேல உனக்கு இருக்கிற காதலை உனக்கு புரிய வைக்கிறதுக்கோ, உன்னை தொடனும்னு அவசியம் இல்லை யாத்ரா, உன் மனசை தொட்டாலே போதும்" தன் மூச்சுக்காற்று தன்னவளின் முகத்தின் மோத, கண்களில் காதல் வழித்தோட கூற, பெண்ணவளோ மொத்தமாக உருகிவிட்டாள்.



ஏற்கனவே அவனது காதல் பார்வையில் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கிய யாத்ரா, அவன் பேச்சில் இப்பொழுது மொத்தமாக சுயம் மறந்திருக்க, அவளுக்கு இப்பொழுது ஆரியை எதிர்கொள்ள முடியவில்லை. உடனே படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள முயற்சித்தவள், "ஏய் பார்த்து" என்று ஆரி சொல்லவும், போர்வை தடுக்கியத்தில் மீண்டும் மெத்தை மீதே விழுந்தவள், தடுமாறி தன்னவனின் வெற்று தோள்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.



"பத்து செகண்ட்ஸ் இன்னும் மிச்சம் இருக்கும் பொழுது பாதியிலே ஓடுனா எப்படி?" மென்னகையுடன் அவளை பார்த்து கேட்டவனின் மூச்சுக்காற்றும் கூட பெண்ணவளை நிலை தடுமாற செய்ய,



"அது எனக்கு.." வார்த்தைகள் தொண்டைக்குள் சூழ் கொள்ள தடுமாறினாள்.



"உனக்கு" மென்மையாக அவளது காதோரம் இதழ் படாது தன் மூச்சு தீண்ட வினவினான்.



அவ்வளவு தான், தன்னை மறந்து உணர்வின் பிடியில், யாத்ரா தன் கண்களை மூடிக்கொள்ள, இனியும் தாமதிப்பானா அவன்?



"இன்னும் ரெண்டு செகண்ட்ஸ் இருக்கு" டேபிளில் இருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு புன்னகையுடன் அவளது காதில் கூறியவன், தன்னவளின் தாடையை தடையின்றி பற்றி, அவளது இதழில் அழுத்தமாக தன் இதழ் பதித்தான் .



காதல், மோகம், தாபம் என உணர்ச்சிகள் நிறைந்த அந்த அழுத்தமான முத்தத்தினை, பெண்ணவளால் தாங்க முடியவில்லை.



பிடிக்கவில்லை, நீ வேண்டாம், என ஆயிரம் சொன்னாலும், அவளது மனதிற்குள் அவளையும் அறியாமல் நுழைந்து இருப்பவனின் தீண்டலில், மெல்ல மெல்ல கரைந்தவளின் இடக்கரம் தன்னை மறந்து அவனது சிகையை இறுக்கமாக பற்றிக்கொள்ள, அவளது வலகரமோ அவளையும் மீறி அவனது புஜங்களை பிடித்துக்கொள்ள, அங்கே கொடுக்கப்படவில்லை பரிமாறப்பட்டது.



நீண்ட நேரம் நீடித்த இதழ் தீண்டலை முடித்து வைத்த அவளவன் அவளில் தன் தேடலை தொடங்கினான்.



அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் அவளால் அவனது தீண்டலுக்கு முன்பு எதுவுமே பேச முடியவில்லை.



எதிர்ப்பதற்கு மனம் இல்லாததால் அவளும் எதிர்க்க வில்லை, விடுவதற்கு மனம் விடாததால் அவனும் விடவில்லை. ஆக அவர்கள் நடத்திய காதல் யுத்தத்தின் முடிவில் தன்னவளிடம் தனக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு, விலகி அமர்ந்து அவள் முகம் பார்த்தவன், அவளது காதருகே மெல்ல குனிந்து,



"தேங்க் யு சோ மச்" என்று கூறி கலைந்திருந்த அவளது கேசத்தை மெதுவாக ஒதுக்கி, அவளின் நுதலில் ஆரி முத்தமிட, பெண்ணவளோ எந்த அசைவும் இன்றி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு படுத்திருக்க, அதை கண்ட ஆரிக்கு சிரிப்பு தான் வந்தது.



தான் இங்கு இருக்கும் வரை அவள் கண் திறக்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்டவன், முதலில் எழுந்து குளியல் அறைக்குள் சென்றுவிட்டு மீண்டும் அறைக்குள் வரை, அப்பொழுது தான் வந்ததும் கண்களை வேகமாக மூடிக்கொண்ட மனைவியின், அருகில் வந்து அவளது கேசத்தை வருடியபடி,



"எப்பவும் சொல்றது தான், ரொம்ப எதையும் யோசிக்காத கண்ணம்மா, ஹீட்டர் ஆன் பண்ணிருக்கேன், நீ ஃப்ரஷ் ஆகு நான் ப்ரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வரேன்" என்றவன் கீழே செல்லவும் கண் திறந்தவளுக்கு நடந்ததை நினைத்து இதயம் நிதானம் இன்றி தவித்தது.



"என்ன பண்ணி வச்சிருக்க யாத்ரா, இது தான் உன் மன உறுதியா? அவ்வளவு பலவீனமானவளா நீ? நீ என்ன இப்படி இருக்க? அன்பா பேசுறான்னு நம்பிராத, அவன் நடிக்கிறான் நம்பி ஏமாந்து போயிராத. சீக்கிரம் அவனை விட்டு போய்டணும்" என தனக்கு தானே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள்.



யாத்ரா குளித்து முடித்துவிட்டு வெளியே வரவும் அவளுக்காக காலை உணவோடு ஆரி அறைக்குள் வர, அவனையும் அவன் கொண்டு வந்த சாப்பாடையும் ஒரு பார்வை பாத்தவள், உடைமாற்றும் அறைக்குள் நுழைய போகவும் அவளது கரம் பிடித்து தடுத்தவன்,



"வா ரொம்ப சோர்வா இருக்கிற வந்து சாப்பிடு, அப்புறம் சேஞ் பண்ணிக்கலாம்" என்றான்.



அவளோ, "ம்ஹூம் வேணாம்" என்றவள் அவனை பார்த்து முறைக்க,



"ஏய் கண்ணம்மா உன் புருஷனை இப்படி பாசமா எல்லாம் பார்க்காதடி, என் மூடு மாறிடும். அப்புறம் என்னையே என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.



நீ வேற ரொம்ப சோர்வா இருக்க, இன்னொரு ரவுண்டெல்லாம் நீ தாங்கமாட்ட, சோ வந்து சாப்பிடு" என ஆரி அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லவும், இன்னும் முறைத்தவள், "சீ பேச்சை பாரு " என தன் உதட்டை சுளித்தாள்.



"ஏய் ஏண்டி என்னை கெட்ட பையனா மாத்துற" என்றவன் பெருமூச்சொன்றை விடுவித்து ,



"வேற வழியில்லை அடுத்த ரவுண்டை ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்" என்றவனின் பார்வை அவள் அணிந்திருந்த பாத்ரோபின் முடிச்சி மேல் விழ, பதறியவள்! பட்டென்று அவன் கையில் இருந்த தட்டை வாங்கி இரண்டடி பின்னால் சென்று, உணவை வேக வேகமாக தன் வாயில் திணிக்க துவங்க, தன்னவளின் செய்கையை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் ஆரி அர்ஜுனன்.



மனைவி தன்னிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறாள், நம்முடன் ஒன்றவில்லை, போதாக்குறைக்கு யோசிக்காமல் அவள் விடும் சொற்கள், என தன்னவள் மீது ஆரிக்கு ஏகப்பட்ட வருத்தம் இருந்தது. ஆனாலும், என்னதான் மனைவி தன்னுடன் கொஞ்சி பேசாவிட்டாலும் குறைந்தபட்சம் உரிமையாக சண்டையாவது போடுகிறாளே என்று நிம்மதி கொண்டவன் ஒரு கணம் கூட மனைவியை விட்டு விலகி இருக்க நினைக்கவில்லை.



நீ என்னை விட்டு விலகி இருக்கிறாயா, இருந்துகொள் அது உன் விருப்பம், நான் ஏன் விலகிருக்க வேண்டும்? நீ என்னவள்! எனக்கானவள்! என யாத்ரா விலக விலக ஆரி அவளை மேலும் தன்னுடன் நெருக்கமாக வைத்துக்கொண்டான்.



ஆக தீண்டல்களும் சீண்டல்களுமாக ஆரி மற்றும் யாத்ராவின் திருமண வாழ்வு கடந்து ஒருவாரம் ஆகியிருக்க,



ஆரி அர்ஜுனனின் தாய்மாமா விஜயன் மற்றும் அவரது மகள் நந்தினி ஆரியின் திருமணத்திற்கு வராததால், நேரில் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.



இனி தன் அண்ணன் தன்னிடம், பேசவே மாட்டானோ என்று மனதிற்குள் தவித்து கொண்டிருந்த ஜானகிக்கு, அவரது சகோதரனை நேரில் கண்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.



கண்கள் கலங்க சகோதரனை அணைத்து கொண்டவர், மறைந்து போன தன் தாயின் ஜாடையில் இருக்கும் தன் அண்ணன் மகளை ஆசையோடு கட்டி அணைத்து கொண்டார்.



ஆரியும், வைகுண்டராஜனும் அவர்களை வரவேற்க, பெயருக்கு புன்னகைத்த விஜயன்,



"எப்படி இருக்கீங்க மாப்பிளை?" ஏதாவது கேட்க வேண்டுமே என கேட்டுவிட்டு அதன் பின்பு எதுவுமே பேசவில்லை.



ஆரியும் யாத்ராவும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது கூட,



"நல்லா இருங்க" என்றவர், தன்னை சிரித்தமுகமாக பார்த்து கொண்டிருக்கும் யாத்ராவிடம், முகத்தை தூக்க விரும்பாது பதிலுக்கு லேசாக புன்னகைத்தவர், பெரிதாக ஒன்றும் உறவாடிக்கொள்ளவில்லை.



"பேசவே மாட்டாரோன்னு இருந்தேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று கண்களை துடைத்தபடி அடுப்பில் பாலை சூடு பண்ணிக்கொண்டிருந்த, ஜானகியை பார்த்து மெலிதாக புன்னகைத்த யாத்ரா,



"நான் தான் சொன்னேன்ல அத்தைமா, சீக்கிரம் கோபம் போய் உங்க அண்ணன் உங்க கூட பேசுவாங்கன்னு, இப்போ சந்தோஷமா?" என்று கேட்டாள்.



"ஆமா டா இவ்வளவு சீக்கிரம் கோபம் மறந்து வருவாருன்னு, நினைக்கவே இல்லை எல்லாம் நீ வந்த நேரம்" என்று புன்னகைத்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் வர,



"ப்ச் ஏன் இந்த அழுகை, என் அத்தை சிரிச்சா தான் அழகு" என்ற யாத்ரா அவரது கண்ணீரை துடைத்து விட்டு,



"நீங்க அங்க போய் பேசிட்டு இருங்க, நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சொல்ல, "பார்த்துடா கைல சுட்டுக்காத" என்றவர் யாத்ரா வற்புறுத்தவும் அங்கிருந்த சென்றார்.



அப்பொழுது தோட்டத்தில் அகரனிடம் அலைபேசியில் பேசிவிட்டு வீட்டிற்குள் வந்த ஆரி, சமையல் அறையில் தன்னவள் மட்டும் இருப்பதை கண்டவன் முகத்தில் குறுநகை அரும்ப உள்ளே சென்றான்.



அங்கே சிவப்பு நிற சல்வாரில் ஒப்பனைகள் இன்றி முகத்தில் ஆங்காங்கே மலர்ந்திருந்த வியர்வை துளிகளோடு வேலையில் மும்முரமாக இருந்த தன் மனைவியின் மீது ஆரியின் பார்வை காதலாய் படிந்தது.



அவன் வந்ததை கவனிக்காத யாத்ராவோ ட்ரேவில் பிஸ்கட்களை அடுக்கிக்கொண்டிருக்க, நெருங்கி வந்து தன்னவளை இடையுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன்.



"சரியான ஆள்மயக்கி டி நீ" என அவளது காதில் காதலாய் கிசுகிசுத்தான்.



தன் செவிமடலை அவனது குரல் தீண்டவும் கண்களை இறுக்கமாக மூடித் திறந்த யாத்ரா, எதுவும் பேசாமல் அவனிடம் இருந்து விலகப்பார்க்கவும், உடனே தன்னவளை இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டவன்,



"இந்தப் ட்ரெஸ்ல அழகா இருக்க டி" அவளது செவி மடலை உரசியபடி கூறினான்.



அவனை ஒரு பார்வை பார்த்தபடி விலகியவளின் கரத்தை மென்மையாகப் பற்றியவன்,



"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன எக்ஸ்பிரஷன் குடுத்திட்டு இருக்க, உனக்குத் தான் ரொமான்ஸ் வரல, பண்ற என்கிட்டையும் ஏன் டி மூஞ்சை தூக்கிவச்சிட்டு இருக்க" என்று அர்ஜுனன் தன்னவளை தன் கைவளைவுகளுக்குள் வைத்துக்கொண்டு புன்னகையுடன் கேட்க, உக்கிரமாய் முறைத்தவள்,



"ஏன் மூஞ்சே அப்படி தான், என்னை விடுங்க" என்று கூறி அவனிடம் இருந்து விடுபட போராட, தன் பிடியை இன்னும் உறுதியாக்கியவன்,



"பொய் மத்தவங்க கிட்ட எல்லாம், நல்லா தான் இருக்க, என் கிட்ட தான் மூஞ்ச மூஞ்ச காட்ற" என்றான்.



"தெரியுதுல அப்புறம் ஏன் என்னை விடாம துரத்துறீங்க"



"அதெப்படி, ஐ லவ் யு ஆரின்னு உன் வாயால சொல்ல வைக்காம, ஓயமாட்டான் இந்த ஆரி அர்ஜுனன்" எனக் கண்ணடித்த கணவனின் சிரிப்பில் ஒரு கணம் தடுமாறியவள் பின்பு சுயம்பெற்று,



"அது கனவுல கூட நடக்காது" எனப் பட்டென்று கூறி விலகவும்,



"ஆஹான்" என்று அவளது கரத்தை ஆரி மீண்டும் பிடித்துக் கொண்டான்.



"என்ன பண்ணிட்டு இருக்கீங்க யாரும் பார்த்திட போறாங்க விடுங்க" என வாசலை பார்த்து கொண்டு சிறு பதற்றத்துடன் கூறியவளிடம்,



"ஓ அப்போ யாரும் பார்க்கலைன்னா ஓகே வா" என தன் ஒற்றை கண்ணை அடித்து கேட்டவனை, முறைக்க முடியாமல் தோற்று போனவள், அவனை பார்க்காது, "விடுங்க" என்று மட்டும் கூறினாள்.



ஆரியோ அவளின் மென்விரல்களை ஒவ்வொன்றாகப் பற்றி, அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே தன் இதழால் ஒற்றி எடுக்க, மீண்டும் மீண்டும் அவனது தீண்டலில் உருகி குலையும் தன் பெண்மையை என்ன செய்ய என்று புரியாமல் தடுமாறியவள்,



"ப்ளீஸ் ஏன் ஆரி என்னைப் படுத்துறீங்க" எனக் கெஞ்சினாள்.



அதற்கு அவனோ,



"நீயும் தான் டி என்னைப் படுத்துற" என்றபடி தன்னவளை அப்படியே திருப்பி, பின்னால் இருந்து அணைத்து கொண்டு தன் முகத்தை அவளது தோள் வளைவில் புதைக்க, அந்நேரம் தண்ணி அருந்துவதற்காக உள்ளே நுழைந்த ஆரியின் மாமன் மகள் நந்தினிக்கு உயிரே போவது போல வலித்தது.



அங்கிருந்து செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் கால்கள் தரையில் வேரூன்ற நின்றிருந்தவளின் விக்கல் சத்தத்தில், ஆரியிடம் இருந்து விலகிய யாத்ரா, நந்தினியை அங்கே கண்டத்தில் ஒரு வித சங்கடத்துடன் நின்றிருந்தவள், ஆரியை கண்டனப்பார்வை பார்த்தாள்.



ஆனால் ஆரி பெரிதாகவெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை 'என் மனைவி' இதில் தவறு என்ன உள்ளது என்னும் தோரணையில் நின்றிருந்தவன் நந்தினியிடம்,



"ஏய் நந்து வா, என்ன வேணும்?" என கேட்க, அவனது குரலில் அங்கு நிலவிய மௌனம் முற்றுப்பெற, அடிபட்ட தன் உணர்வுகளை வெளிக்காட்டாதவள்,



"தண்ணி குடிக்க வந்தேன் அத்தான்" என்றாள் வலுக்கட்டாயமாக வரவைத்த புன்னகையுடன்.



அவள் உதட்டில் இருந்த புன்னகையில் உயிர்ப்பில்லாமல் இல்லாமல் இருக்க, யாத்ராவோ நந்தினியின் முக மாற்றத்தைத் தவறாமல் படித்துவிட்டாள்.



"யாத்ரா நந்தினிக்கு தண்ணி கொடு, நான் எல்லாருக்கும் காஃபி கொடுக்குறேன்" என்ற ஆரி ட்ரெவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட, யாத்ரா கொடுத்த நீரை பருகிய நந்தினி, அவளை பார்த்து நாகரீகத்திற்காகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.


அத்தியாயம் 7
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 6
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top