- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
தன் தோழியின் வீட்டில் உள்ள மொட்டைமாடியில், வானத்தை வெறித்தபடி நின்றிருந்த யாத்ரா, இன்று தன் வீட்டில் காலை உணவு உண்ணும் பொழுது நடந்த சம்பவத்தை, தான் நினைத்து கொண்டிருந்தாள்.
காலை உணவிற்கு விஜயன், நந்தினி உட்பட அனைவரும் அமர்ந்திருக்க, அப்பொழுது தட்டில் இருந்த சாப்பாடை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனனிடம் ஜானகி,
"அர்ஜுன் மா என்னடா பார்த்துட்டே இருக்க? உனக்கு புடிச்சது தானே சாப்பிடு" என்றார்.
அதற்கு தன் அன்னையிடம், "ம்ம் சரி மா" என்றவன் சப்பாத்தியை பிய்த்து வாயில் எடுத்து வைக்க போகவும், மாடியில் இருந்து இறங்கி வந்த யாத்ரா வழமை போல அவன் அருகில் வந்து அமர, அடுத்த கணமே தன் இருக்கையில் இருந்து, ஆரி எழுந்து கொண்டான்.
'என்னாச்சு சாப்பிடமா எழுந்துட்டான்' என்று தன் மனதிற்குள் எண்ணியபடி யாத்ரா தன் கணவனை ஏறிட்டுப் பார்க்க, தன்னவளின் பார்வையை உணர்ந்தவன் தானும் அவளை ஏறிட, கோபத்தின் குருதியாய் சிவந்திருந்த அவனது கண்களைக் கண்டு மிரட்சியாக விழித்தாள் யாத்ரா.
ஆரியின் விழிகளில் தெரிந்த கோபம் அதை தாண்டி அதில் தெரிந்த ஒருவித அன்னியத் தன்மை, அது தன்னால் ஏற்பட்டது என்பதை அவள் என்னும் பொழுது ஏனோ யாத்ராவின் மனம் கனத்தது.
தன் கணவன் தன்னை விட்டு விலக வேண்டும் என்று ஆரம்பம் முதல் எதிர் பார்த்தவள், இப்பொழுது அதன் ஆரம்பத்தையே தாங்க முடியாமல் மிரண்டாள்.
ஏனோ அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாத ஆரி அங்கிருந்து கிளம்ப போக, அப்பொழுது தான் ஒன்றை கவனித்தான், அது அவன் வேகமாக எழுந்து கொள்ளவும், அனைவரும் அவனை கேள்வியாக பார்த்து கொண்டிருப்பதை கவனித்துவிட்டவன், ஒட்டவைத்த புன்னகையுடன் அனைவரையும் பார்த்துவிட்டு விஜயனிடம்,
"சாரி மாமா அவசர வேலை உடனே போகணும், நீங்க கிளம்பும் பொழுது என்னால இருக்க முடியாது" என்றான்.
அதற்கு, "பரவாயில்ல ஆரி நீ போய்ட்டுவா, நாங்க காலை சாப்பாடை முடிச்சிட்டு கிளம்பிடுவோம். இப்பவே கிளம்பினா கருக்களுக்குள்ள வீட்டுக்கு போய்டலாம்" என்றவரிடம் சரி என்பதாய் லேசாக புன்னகைத்தவன் நந்தினியிடமும் விடை பெற்றுக்கொண்டு, ஒரு வாய் கூட சாப்பிடாது அங்கிருந்து சென்று விட, தன் மகன் சாப்பிடாமலேயே எழுந்து செல்வதைக் கண்டு மருமகளை ஏறிட்ட ஜானகி, அவள் முகம் பொலிவில்லாமல் வாடி இருப்பதை பார்த்து இன்னும் கவலைகொண்டார்.
'அச்சோ யாத்ரா முகமே சரியில்ல, இவனும் ஒரு மாதிரி இருக்கான். என்னவா இருக்கும்?கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல அப்படி என்ன ரெண்டு பேருக்கும் இடையில நடந்திருக்கும்?' என மனதிற்குள் எண்ணிய ஜானகி அனைவரும் சென்ற பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காக்க, யாத்ராவும் சில நொடிகள் ஆரியின் செயலில் வருத்தப்பட்டவள் அதன் பிறகு, 'சாப்பிடு சாப்பிடாம போ எனக்கென்ன' என்று வழமை போல அவள் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட, நந்தினிக்கு தான் யாத்ராவை பார்க்க பார்க்க அவ்வளவு ஆத்திரம் வந்தது.
அனைவரும் அருகில் இருந்ததால் தன் உணர்வுகளை முயன்று மறைந்து கொண்டவள், தனிமையில் யாத்ராவிடம் சீறினாள்.
"என்ன நினைச்சிட்டு இருக்க நீ ஹான், நேத்தே நீ பேசினத்துக்கு உன்னை நாலு வார்த்தை மாறி கேட்ருக்கனும், ஆனா அந்த இடத்துல என்னால எதுவும் பேசமுடியல. உன் இஷ்டத்துக்கு நடந்துகிறதுக்கு உன் வாழ்க்கை உனக்கு விளையாட்டா போச்சா?
எது பேசினாலும் யோசிச்சு பேசு, நீ பேசினது மட்டும் அத்தை மாமாக்கோ இல்லை, உன் வீட்டுக்கோ தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க தெரியுமா?
சரி எல்லாம் போகட்டும் உன்னால தானே அத்தான் சாப்பிடாம எழுந்து போறாரு, நீ கல்லு மாதிரி உக்கார்ந்திருக்க, எப்படி உன்னால இப்படி யாருக்கோ வந்தது போல இருக்க முடியுது? எழுந்து போய் அவரை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.
யாத்ரா அவரு உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறாரு, நீ பதிலுக்கு அவரை விரும்பாட்டாலும் பரவாயில்லை, அவரோட காதலையும், அவரையும் மட்டும் இப்படி உதாசீனப்படுத்தாத, தயவு செஞ்சு அவரோட அன்பை புரிஞ்சிக்கப்பாரு.
இதை நான் அவருக்காக மட்டும் சொல்லல, உனக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். உனக்கு ஏன் அவரை புடிக்கலைன்னு எனக்கு தெரியல, ஆனா சின்ன வயசுல இருந்து அவர் கூட பழகினதை வச்சு சொல்றேன், அவரை வேண்டாம்ன்னு சொல்ல ஒரு காரணம் கூட இருக்குற மாதிரி எனக்கு தெரியல.
அதுக்காக உன்னை கட்டாயப்படுத்தல, ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சு எடுன்னு சொல்றேன். திரும்பவும் சொல்றேன், வாழ்க்கை விளையாட்டு இல்லை யாத்ரா, நிதானம் ரொம்ப முக்கியம் அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது" என்று சீற்றத்தில் ஆரம்பித்து இறுதியில் தன்மையாக பேசிய நந்தினி, எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கும் யாத்ராவை ஒருகணம் நின்று பார்த்துவிட்டு,
"அப்புறோம் யாத்ரா, உன் புருஷனை நீ வேணும்னா வேண்டாம்ன்னு தூக்கி கொடுக்க தயாரா இருக்கலாம், ஆனா அடுத்தவங்க புருஷனை ஏத்துக்குற அளவுக்கு நான் ஒன்னும் அவ்வளவு சீப்பானவ கிடையாது. ஆரி இஸ் யுவர் ஹஸ்பண்ட், ஹீ இஸ் யுவர் மேன் அண்ட் யுவர் ஹஸ்பண்ட் லவ்ஸ் யு யாத்ரா, ட்ரை டு வேல்யூ இட்" என்றவள் வேகமாக நடந்து செல்ல, நந்தினி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் யாத்ராவின் மனதை ஏதோ செய்தது.
சொல்ல முடியாத ஏதோ ஒன்று யாத்ராவின் இதயத்தை போட்டு அழுத்துவது போல இதயம் முழுவதும் ஒருவித வலி பரவி யாத்ராவை நிலை குலைய செய்ய, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டவளை, மீண்டும் மீண்டும் அவளது சிந்தனைகள் வாட்டிவதைக்க, இன்னும் அறைக்குள்ளே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கவும், கைப்பையுடன் யாத்ரா கீழே வந்தாள்.
சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த ஜானகியிடம் வந்தவள் தயங்கியபடி,
"அத்தை நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரட்டா என் ஃப்ரண்ட்ஸை பார்த்துட்டு வந்த நல்லா இருக்கும்ன்னு தோணுது. ரூம் உள்ளே இருக்க மூச்சு முட்டுறது போல இருக்கு ப்ளீஸ் அத்தை போயிட்டு வரேன்” என யாத்ரா வாய்விட்டே கேட்டு விட,ஜானகிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
ஏற்கனவே ஆரிக்கும் யாத்ராவுக்கும் இடையே ஏதும் பிரச்சனையோ என்று எண்ணியிருந்த ஜானகி இப்பொழுது யாத்ராவின் வார்த்தைகளை வைத்தே ஆம் பிரச்சனை தான் உறுதி படுத்திக்கொண்டவர், உடனே எதுவும் கேட்டு ஏற்கனவே சங்கடத்தில் இருப்பவளை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் பொறுமையாக விசாரிக்கலாம் என்று முடிவெடுத்து,
"அச்சோ இது என்ன கேள்வி? தாராளமா போயிட்டு வா டா" என்றவருக்கு தன் மருமகளின் மனநிலை நன்றாக புரிந்திருக்க, மென்மையாக அவளது தலையை வருடிய ஜானகி, அவளை மகிழ்வுடன் சென்றுவரும்படி அனுப்பி வைத்தார்.
யாத்ராவும் தன் மாமியாரிடம், "தேங்க்ஸ் அத்தை" என்றவள் தன் தோழி மதனாவை காண அவள் வீட்டிற்கு சென்றாள்.
தோழியை சந்தித்தாலாவது மனதிற்கு அமைதி கிடைக்கும் என்று அவளது இல்லத்திற்கு வந்த யாத்ராவுக்கு, மதனாவின் அன்னை துவங்கி தன் தோழி வரை அனைவரும் அவளது திருமண வாழ்க்கை பற்றியே குசலம் விசாரிக்க, அங்கும் அவளுக்கு அவன் நியாபகமாகவே தான் இருந்தது .
"எனக்கு என்ன தான் வேணும்? அவன் வேண்டாம்னும் தோணுது, அதே நேரம் அவன் நம்மகிட்ட பேசாட்டாலும் ஒரு மாதிரியா இருக்கு. ஆனா அவன் கூட வாழ முடியும்ன்னு மட்டும் எனக்கு தோணவே இல்லை, இப்போ என்ன தான் செய்ய? இந்த நந்தினி வேற கண்டதையும் பேசி என் மனசை குழப்பிட்டு போய்ட்டாங்க" என்று எண்ணிய யாத்ராவுக்கு ஏதேதோ நினைவுகளில், கண்கள் குளமானது.
அந்நேரம் பார்த்து கரங்களில் ஜுஸ் க்லாஸுடன் அங்கே வந்த அவளது தோழி மதனா,
"ஹே ஒருமாதிரி டல்லாவே தெரியுற?? நல்லா இருக்க தானே" என்று யாத்ராவின் கரத்தில் ஜுஸ் கிளாஸை கொடுத்தபடி வினவினாள்.
"இருக்கேன் டி" என்ற யாத்ராவின் குரல் உற்சாகமே இல்லாமல் உள்ளே சென்றது.
"என்னாச்சு டி எல்லாம் ஓகே தானே, மாம்ஸ் உன்னை நல்லா பார்த்துகிறார் தானே" என கேட்ட மதனா யாத்ராவின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து,
"என்னாச்சுடி? ஏன் அழுதுட்டு இருக்க" பதற்றதுடன் வினவினாள்.
"நான் தான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேன்ல, ஆனா யாருமே கேட்கல."
"சரி இப்போ என்னடி ஆச்சு"
"இன்னும் என்ன ஆகணும்" என்று கோபமாக ஆரம்பித்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வர அனைத்தையும் கூறி முடித்தாள்.
யாத்ரா கூறிய அனைத்தையும் கேட்ட மதனாவுக்கோ தன் தோழி மீது அத்தனை வர, "நீ பேசின பேச்சுக்கு அடிக்காம என்ன பண்ணுவாங்க.
என்ன யாத்ரா பண்ணிட்டு வந்திருக்க, நந்தினிகிட்ட போய் இப்படியெல்லாம் பேசி வச்சிருக்க, அண்ணா மனசு எவ்வளவு கஷ்ட்டப்பட்டிற்கும். வீட்டு பெரியவங்களுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படமாட்டாங்க, என்ன இது?"
"ஓ நான் பேசினது தப்பு ஆனா அவன் அடிச்சது மட்டும் தப்பில்லை அப்படி தானே" கோபமாக மதனாவிடம் வினவினாள் யாத்ரா.
"யாத்ரா அவரு உன்னை அடிச்சது தப்பு தான், ஆனா அவர் அடிக்கிற அளவுக்கு நீ நடந்து கிட்டதும் தப்பு தானே" மதனா தன் தோழிக்கு பொறுமையாக நியாயத்தை கூறினாள்.
ஆனால் யாத்ராவோ, "ஆமா நான் தான் தப்பு நான் பண்றது தப்பு, நான் பேசுறது தப்பு, நான் பண்ற எல்லாமே தப்பு தான் போதுமா. எல்லாரும் அவன ரொம்ப நம்புறீங்க, ஒரு நாள் அவன் தன் சுய ரூபத்தை காட்டுவான், அப்ப நீங்க எல்லாம் என்ன பண்றீங்கன்னு பார்க்கலாம்" என்று கோபமாக கூறிய யாத்ராவின் கரத்தைப் பற்றிக் கொண்ட மதனாவோ,
"யாத்ரா உனக்கு எப்படி சொல்லி புரியவைக்கிறதுன்னு தெரியல, நான் பார்த்த வரை மாம்ஸ் தப்பானவரா தெரியல டி. நீ உன் மனசை மாத்திக்கிட்டு அவரை ஏத்துக்க பாரு டி. எதை பத்தியும் யோசிக்காதே, எல்லாத்தையும் மறந்துட்டு ஆரி அண்ணா கூட சந்தோஷமா வாழு டி" என்று மதனா சொல்ல,
"எதை பத்தியும் யோசிக்காம மறந்துட்டு வாழணுமா?" என யாத்ராவின் கண்கள் சற்றென்று கோபத்தில் சிவக்க, அப்பொழுது தான் தான் சொன்ன வார்த்தைகளை உணர்ந்த மதனா,
"யாத்ரா சாரி டி ஆனா என்னைக்கு இருந்தாலும் மறந்து தானே ஆகணும், முடிஞ்சதையே யோசிச்சிட்டு இருந்தா நிகழ்காலம் நரகமாயிடுமே" என்று மதனா மேலும் ஏதோ பேச வரும் பொழுது தன் கரம் உயர்த்தி தடுத்த யாத்ரா,
"யாரும் என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க, என் நிலைமையில இருந்து பார்க்கவே மாட்டிக்கிறீங்க, பேசறது ரொம்ப ஈஸி மதனா, ஆனா மனசுக்குள்ள நான் படுற அவஸ்தை எனக்கு தான் புரியும். நிம்மதி தேடி தான் நான் இங்க வந்தேன் நீயும் எல்லாரையும் மாதிரி என்னை கட்டாயம் தான் படுத்துற, நான் போறேன்" என அழுகையினூடே யாத்ரா சற்று கோபாமாகே கூறவும்,
"யாத்ரா உன்னை கட்டாயப்படுத்தல, உனக்கு எடுத்து சொல்றேன். நீ நினைக்கிற மாதிரி மாம்ஸ் கெட்டவர் இல்லை, மாம்ஸ் கிட்ட நான் பேசின வர அவர் ஒரு பக்கா ஜென்டில் மென், நீ தான் அவரை தப்பாவே புரிஞ்சி வச்சிருக்க, பழசை யோசிச்சு இப்போ வாழ்ந்துட்டு இருக்கிற வாழ்க்கையை விட்றாத" என்று மதனா அக்கறையுடன் கூறினாள்.
"எனக்கு மட்டுமே அட்வைஸ் பண்ணாத ஏதோ நான் பெரிய குற்றவாளி போல தோணுது. கொஞ்சம் என் சைட் இருந்தும் பாரு, அப்போ உனக்கு புரியும்" என்ற யாத்ரா மதனா அழைக்க அழைக்க அங்கிருந்து சென்றாள்.
@@@@@@@@@
தன்னை பார்த்துச் சல்யூட் அடிக்கும் கடைநிலை காவலாளிகளுக்கு சிறு தலையசைப்பை கொடுத்தபடி வேகநடையோடு ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஆரி,
"வேல்கமுருகன் அந்தச் செயின் ஸ்நச்சிங் கேஸ் ஃபைல எடுத்துட்டு வாங்க" என்று கூறியபடி அதே வேகநடையுடன் தன் அறைக்குள் வந்து அமர்ந்தான்.
ஆரி உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்ததும், அவன் கேட்ட கோப்புடன் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த ஏட்டு வேல்முருகன்,
"சார் நீங்கக் கேட்ட கேஸ் ஃபைல்" என்று ஆரியிடம் அவர் கோப்பை நீட்ட, சிறு தலையசைப்புடன் அதைப் பெற்றுக்கொண்டவன் ஃபைலை பிரிக்கும் பொழுதே வெளியே சத்தம் கேட்கவும்,
"அங்க என்ன சத்தம் வேல்கமுருகன்? என்னன்னு பாருங்க" என்று ஆரி சொல்லிக் கொண்டிருக்கவும், கான்ஸ்டபிள் ஓடி வந்து ஆரியிடம் எதையோ சொல்ல அழுத்தமான காலடிகளுடன் இரெண்டே எட்டில் வெளியே வந்தவன், வந்த வேகத்தில் மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றிக்கொண்டு நின்றிருந்த ஒரு கைப்பெண்ணின் கரத்தில் இருந்த வத்திப்பெட்டியை பறித்துத் தூக்கி எறிந்திருந்தான்.
நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தையெல்லாம் கலைத்து விட்டு அப்பெண்ணை தன் அறைக்கு அழைத்து வந்து,
"என்ன வேலைமா பண்ண பார்த்தீங்க?" என விசாரித்த ஆரியின் குரலில் அத்தனை கோபம் இருந்தது.
"நான் என்ன ஐயா செய்ய? ஒத்தபுள்ளைய தொலைச்சுபுட்டு நிக்கிறேனே, என் பொண்ணை பார்த்து முழுசா இரெண்டு நாளாச்சு பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்த புள்ளைய காணும் ஐயா" என அந்த பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
"கம்ப்ளெயிண்ட் கொடுத்தீங்களா?"
"கொடுத்தேன் அய்யா, ஆனா எந்தத் தகவலும் சொல்ல மாட்டிக்கிறாங்க, அப்புறம் வா நாளைக்கு வான்னு அலைய விடுறாங்க, பணம் கொடுத்தா தான் உங்கள பார்க்க முடியும்னு சொல்றாங்க, இதோ இப்போ கூட உங்களைப் பார்க்க விடாம என்னைத் துரத்தி அனுப்புனாங்க.
பணம் கொடுக்குறதுக்கெல்லாம் எல்லாம் எனக்கு வசதி இல்லையா, நீங்க தான் எப்படியாவது என் பொண்ண கண்டு புடிச்சுதரனும்" என்று அந்தப் பெண் ஆரியை பார்த்து கை கூப்பியபடி சொல்லவும், ஆரி பார்த்த தீப்பார்வையில் அனைத்து காவலாளிகளுக்கும் கிலி பிடித்துக் கொண்டது.
"உங்க கிட்ட வந்தா கண்டு புடிச்சு தருவாங்கன்னு சொன்னாங்க, என் பொண்ணு எனக்கு வேணும். நீங்க கண்டு புடிச்சு தரலைன்னா, நாண்டுக்கிட்டு சாகுறத தவிர வேற வழியில்லையா. எப்படியாவது கண்டு புடிச்சு தாங்க, சின்ன புள்ளையா, நாதி இல்லாம இருக்கேன்" என கதறி கொண்டு அவனது காலில் விழ வந்தவரை தடுத்து பிடித்து நாற்காலியில் அமரவைத்து,
"என்ன மா இது? அழாதீங்க முதல்ல நீங்க யாரு? உங்க பொண்ணு பேரு என்ன?உங்க பொண்ணுக்கு என்ன வயசு? இது எப்போ நடந்துச்சு? இப்படி எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க" என அவரிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட ஆரி, அவர் கூறியதை வைத்து, சிறுமி காணாமல் போனது பள்ளியில் இருந்து வீடு வரும் இடைப்பட்ட இடத்தில் தான் இருக்கக்கூடும் என்பதை கணித்தவன், அவரது அலைபேசி எண்ணை வாங்கி குறித்து கொண்டு தன் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு,
"வீட்டுக்கு போய் நல்லா யோசிங்க, வேற எதுவும் நியாபகம் வந்தாலும் சொல்லுங்க சீக்கிரம் உங்க பொண்ணை கண்டு புடிச்சி தரேன், அழாம போய்ட்டுவாங்க எந்த தேவைன்னாலும் என்னை கூப்பிடுங்க" என்றவன் அவர் சென்றதும், சுத்தி இருந்த அனைத்து காவலாளிகளை பார்த்து,
"அசிங்கமா இல்லை என்ன ***** நீங்க எல்லாம் போலீஸ் வேலைக்கு வாறீங்க"என காட்டுக்கத்து கத்தி, சப் இன்ஸ்பெக்டரை பார்த்து,
"நீயெல்லாம்" என பல்லை கடித்தவன், "இது நான் பார்க்க நீ பண்ற ரெண்டாவது தப்பு, அடுத்த தடவை சொல்லிட்டெல்லாம் இருக்க மாட்டேன், கேஸ் டீடைல்ஸ் எங்க?" என்று கேட்க அதற்கு அவர் ஒரு காரணம் சொல்லவும் கோபத்தில் முகம் சிவக்க அவரை பார்த்தான்.
அவரோ ஆரியிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க,
"யோவ் ஏதாவது சொல்லிற போறேன், அந்த அம்மா கொடுத்த கம்ப்ளெயிண்ட் நான் வெளிய போய்ட்டு வரும்பொழுது என் டேபிள்ள இருக்கணும் போ" என்று கட்டளையாக கூறியவன், அனைவரையும் எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தான்.
அவர்கள் அனைவரும் சென்றதும் தொப்பியை தன் சிரசில் மாட்டிக்கொண்டு, கண்களில் குளிர் கண்ணாடியை போட்டபடி தனது ஜீப்பில் ஏறிய ஆரி காணாமல் போன அந்த சிறுமி ஆனந்தி படிக்கும் பள்ளிக்கு விசாரணை நடத்த சென்றான்.
பள்ளி முதல்வரிடம் ஆனந்தி காணாமல் போனதை பற்றி இவன் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே, அவனது அலைபேசி சினுங்க அலைபேசியை சைலன்ட்டில் போட்டவன், முதல்வரிடம் ஒருசில கேள்விகள் கேட்டுவிட்டு,
"இந்த கேஸ் முடியிற வர அடிக்கடி நான் வருவேன், எனக்கு அனந்தி கூட படிக்கிற அப்புறம் அவளுக்கு க்ளாஸ் எடுக்கிற ஃஸ்டாப் டீடைல்ஸ், அனந்தி காணாம போன அன்னைக்கு ஸ்கூலுக்கு வந்த அப்புறம் வராத ஃஸ்டாப் டீட்டையில்ஸ் இதெல்லாம் வேணும்" என்று கேட்க முதல்வரோ,
"ஓகே சார் நான் ஈவினிங் மெயில் பண்ணிடுறேன்" என்றார்.
ஆனால் ஆரியோ,
"இல்லை ரைட் நவ், இப்பவே" என கால்மேல் கால் போட்டபடி 'வந்தாகவேண்டும்' என்னும் தோரணையில் நன்கு சாய்ந்து அமர, சரி என்றவர் உடனே தன் அஸிஸ்டன்டுக்கு அழைத்து விபரம் கூறினார்.
அவர் பேசி முடிக்கவும் ஆரி,
"இப்போ நான் ஸ்டாப்ஸ் அண்ட் ஸ்டூடெண்ட்ஸை பார்க்கணும்" என்று சொல்ல, மறுக்க முடியுமா என்ன,
"வாங்க சார்" என ஆரியை அழைத்து கொண்டு அவரும் சென்றார்.
ஆரி அங்கே ஒவ்வொருவரிடமும் நடத்தியவிசாரணையையும் அதற்கு ஒவ்வொருவரும் கூறிய பதிலையும் கான்ஸ்டபிள் வேல் முருகன் குறிப்பெடுத்து கொண்டே வந்தார்.
ஓரளவு அனைத்து ஆசிரியர்களையும் விசாரிக்கும் பொழுதே மணி ஐந்தை தொட்டிருக்க, இது பள்ளி முடியும் நேரம் என்பதால் மற்ற விசாரணையை நாளைக்கு செய்வதாக கூறிவிட்டு முதல்வர் கொடுத்த சில தகவல்கள் அடங்கிய கோப்பை மற்றும் பெற்றுக்கொண்டு பள்ளி வளாகத்தில் இருந்து கான்ஸ்டபிளுடன் வெளியேறி, அந்த பள்ளி இருக்கும் இடத்தை நன்கு பார்வையிட்டவன் அதன் பிறகு அங்கிருந்து தன் ஜீப்பில் நேராக ஆனந்தி வீட்டிற்கு சென்றான்.
@@@@@@@@
இரெண்டு புறமும் குடிசை வீடுகள், வீட்டின் முன்பு சேரும் சகதியோடும் தேங்கியிருக்கும் நேற்று பெய்த மழைநீர், பரட்டை தலை ஓட்டை பனியன் மற்றும் கிழிந்த பாவாடையிலும் மகிழ்ச்சியுடன் தங்களிடம் இருக்கும் பண்டத்தில் கொஞ்ச பகுதியை, நலிவுற்ற உடலில் ரோமங்களை இழந்து தங்களை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருக்கும் தெருநாய்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் சிறுவர் சிறுமிகள், உழைத்த சொச்ச சில்லறைகளையும் டாஸ்மாக்கில் தொலைத்து விட்டு கிடக்கும் பொறுப்பற்ற ஆண்கள், அவர்களை திட்டிக்கொண்டே அவர்களுக்காக சோற்றை வடிக்கும் பெண்கள், என பொருளாதாரத்திலும் சாதி அடிப்படையிலும் பின்தங்கியுள்ளோர்களுக்காகவே பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்ட அந்த குடியிருப்புக்குள் ஆரியின் ஜீப்பால் ஒரு அளவிற்கு மேல் நுழைய முடியாமல் போகவும், ஜீப்பில் இருந்து இறங்கியவன் அந்த குறுகிய பாதையில் நடந்து சென்றான்.
அங்கே ஓடியாடி சிறுவர் சிறுமிகளிடம் ஆனந்தியின் வீடு எங்கு இருக்கின்றது என விசாரித்தவன், சில நிமிடங்களில் ஆனந்தியின் வீட்டை அடைந்திருந்தான். முள்வேலிகளுக்கு நடுவே அமைந்திருந்த அந்தக் குடிசைவீட்டின் கதவு திறந்து கிடக்க, உள்ளே ஆனந்தியின் தாய் வேணி சுருண்டு படுத்திருந்தார்.
"வேணி வேணி" அவனது முதல் அழைப்பில் விழிக்காத வேணி, இரெண்டாவது முறை அவன் கதவை தட்டிக்கொண்டு அழைக்கவும் சட்டென்று எழுந்தவர், வாசலில் ஆரியை கண்டு கண்ணீரை துடைத்தபடி,
"வாங்க ஐயா என் பொண்ணு பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சிதுங்களா?" தவிப்புடன் கேட்டார்.
"இன்னும் இல்லைம்மா விசாரிச்சிட்டு இருக்கோம், உங்ககிட்ட கொஞ்சம் கேள்விகள் கேட்கணும்" என்றான்.
@@@@@
மதனாவுடன் சண்டை போட்டுகொண்டு கிளம்பிய யாத்ராவின் மனதிற்குள் பலவித சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.
இதோ மன அமைதி வேண்டி அவள் கோவிலுக்கு வந்து இரெண்டு மணிநேரத்திற்கு மேல் கடந்துவிட்டது. இருந்தும் அவள் வேண்டியது அவளுக்கு கிடைக்க வில்லை.
பலமுறை சிந்தித்து பார்த்துவிட்டாள் ஆனால் அவள் மனம் திரும்ப திரும்ப ஒரே விடயத்திற்குள் தான் அவளை சிறை வைத்தது, ஒரு மனம் 'ஆரியை நம்பாதே' என்று சொல்ல, இன்னொரு மனமோ 'ஒரு வாய்பு கொடுத்து பார்' என்று சொல்ல, மீண்டும் ஒரு மனம் உடனே 'வேண்டாம்' என்று மறுக்க என கடந்தகாலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையே கிடந்தது கொண்டு வலிகளும், காயங்களும் கொண்ட அவளது மனம் சுழலில் சிக்கிய ஓடம் போல தத்தளித்து கொண்டிருந்தது.
நிலையில்லாது தவிக்கும் மனதை அடக்க வழி தெரியாது சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் கவனத்தை அவளது அலைபேசியின் சிணுங்கல் ஈர்க்க, அலைபேசியை எடுத்து பார்த்தாள், அவளது அன்பு மாமியார் தான் அழைத்திருந்தார்.
வந்த ஒரு வாரத்திற்குள் அவருக்குத் தான் அவள் மீது எத்தனை அன்பு, அவரை நினைக்கும் பொழுது அவள் மனதிற்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது,
"அத்தைமா"
"எங்க இருக்க டா" பதற்றத்துடன் வினவினார்.
"கோவில் வந்தேன் இப்போ வந்திர்றேன் அத்தைமா"
"எப்படி வருவ டா மாமாவை வரச் சொல்லட்டா"
"வேண்டாம் மா நான் வந்துருவேன்"
"சரி சீக்கிரம் வாடா நேரம் ஆகுது" என்று அவர் வைத்துவிட, பெருமூச்சை வெளியிட்டவள் கோவிலுக்கு வெளியே வந்து ஆட்டோவிற்காகக் காத்திருந்தாள்.
@@@@@@@
வீடு, வீட்டைவிட்டால் பள்ளிக்கூடம், தனியாக எங்கும் செல்லும் பழக்கம் இல்லை, உறவினர்கள் இல்லை, பள்ளியில் அனைத்திலும் முதல் மதிப்பெண் வாங்கும் பெண் ஆக யாரும் திட்டி மனமுடைந்து எங்கும் சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. ஆதலால் ஆரியின் கணிப்பு படி கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
பணத்திற்காக கடத்த வாய்ப்பில்லை, அது வேணி புகார் கொடுக்க வந்த நேரமே கணித்திருந்தான். சரி குடும்ப பகை ஏதும் காரணமாக இருக்கலாம் என்று எண்ணி தான் இப்பொழுது விசாரிக்க சென்றான். அதுவும் இல்லை என்று உறுதியாகி விட்டது.
அப்படியென்றால் கடத்தப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன? என்று ஸ்டேஷனில் தன் அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வெள்ளை போர்டில் தான் எழுதியிருந்தவற்றை பார்த்தபடி தீவிர யோசனையில் இருந்தவன்,
"சார்" என்று கதவை தட்டும் சத்தத்தை கேட்டு,
"எஸ் உள்ள வாங்க" என்றான் கண்களை வெள்ளை நிற பலகையில் எழுதியிருந்த 'எங்கே? ஏன்? எப்படி?' என்ற வரிகளில் இருந்து அகற்றாது.
"உங்க வீட்ல இருந்து கால் சார், ரொம்ப நேரமா உங்க மொபைலுக்கு ட்ரை பண்றங்களாம்" என்று ஏட்டு சொல்லும் பொழுது ஆரிக்கு, தான் அலைபேசியை விசாரணையின் பொழுது சைலென்டில் போட்டது நினைவிற்கு வர, "நான் பார்த்துகிறேன்" என்றவன் தன் வீட்டிற்கு அழைப்பு விடுத்தான்.
அங்கே எதிர் தரப்பில் அழைப்பு ஏற்கப்பட்டு சில நொடிகள் கடந்திருக்க,
"யாத்ரா வீட்டுக்கு வரலையா, சரி சரி நான் வீட்டுக்கு வரேன்" என்றவன் நெஞ்சம் பதைபதைக்க வேகமாக வீட்டிற்கு விரைந்தான்.
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.
அத்தியாயம் 10

Last edited:
Author: Naemira
Article Title: அத்தியாயம் 9
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.