- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
Title_reserved
பிழை_தாண்டி_நேசிப்பாயா
Coming Soon
நாயகன் - ஆத்விக் ரவிச்சந்திரன்
நாயகி - அகல்நிலா
டீசர் 1
ஒருவாறு தனக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி பில் போட்டு விட்டு இரெண்டு கைகளிலும் பைகளோடு வந்து லிஃப்ட் திறப்பதற்காக காத்திருக்க, அவள் காத்திருப்பு வீண் போகாதபடி சில நொடிகளிலேயே லிஃப்ட்டும் வந்து விட, ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் உள்ளே வந்தவளை தொடர்ந்து அவள் பின் வந்த சில ஆண்களும் பெண்களும் அவளை ஒருவிதமாக பார்க்கவும், குழப்பத்துடன் தன் பார்வையை தாழ்த்தி ஒருகணம் தன்னை ஆராய்ந்தாள்.
ஆடை எதுவும் விலகாமல் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு என்னவோ எதோ என்று அவர்களின் பார்வையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தவள் இன்னும் சில வினாடிகளில் தான் இறங்க வேண்டிய ஃப்ளோர்க்காக காத்திருக்க, அப்பொழுது அவளுக்கு பின்னால் இருந்து அவளது இடையை உரசியபடி வந்த அந்த வலிய இரு கரங்களை கண்டு முதலில் அதிர்ந்தவள்,
"எவ்வளவு தைரியம் இருக்கனும்" என்று, கோபத்துடன் பின்னால் திரும்ப போனவள் அந்த கரம் செய்த செயலில் மிகவும் குழம்பி, ஒருவித தடுமாற்றத்துடன் திரும்பிய தருணம்,
"ரிலாக்ஸ் மேக் யுவர் செல்ஃப் கம்ஃபர்ட்டபுள், ஐ திங்க் யு காட் யுவர் பீரியட்ஸ்" சூடான மூச்சு காற்று தன் செவி உரசிச்செல்லும் இடைவெளியில் சற்று நெருக்கமாக கேட்ட அந்த திடமான குரலில் இதயம் பந்தைய குதிரையின் வேகத்தில் துடிக்க மொத்தமாக ஸதம்பித்து போன பெண்ணவள், நன்றி சொல்ல கூட முடியாது தடுமாற, அவளுக்கு சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு அவளை கடந்து சென்றான்.