Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

டீசர் 1

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
IMG-20240712-WA0028.jpg

title_reserved
ராதை_இங்கே_கண்ணன்_எங்கே
டீசர்_1

அபய விஜயனின் அணைப்பில் இருந்து திமிரி விடுபட்டவள்,
"இப்போ வர உனக்கு ஒரு ஐ லவ் யூ சொல்லணும்னு கூட தோனலைல" கோபம் கலந்த கண்ணீருடன் தன்னவனிடம் வினவினாள்.
"ஐயோ பொண்டாட்டி" என்ற படி p நெருங்கி அவளை மீண்டும் அணைத்துக்கொண்ட அபய்,
"அதை சொல்ல தான்டி நான் ரொம்ப நேரமா முயற்சி பண்றேன், நீ தான் என்னை சொல்லவே விட மாட்டிக்கிற" என்றான்.
அபய் சொன்னதை கேட்டு அவனை முறைத்த ஆராவோ, அவனது அணைப்புக்குள் சிக்குண்டபடியே அவன் கண்களை பார்த்துக்கொண்டே,
"சொல்லு டா" என்று கட்டளையாக கூறினாள்.
"ஐ லவ் யூ டி பொண்டாட்டி" அவனும் அவளது கண்களை பார்த்துக்கொண்டே காதலோடு கூறினான்.
"ம்ஹூம்" மறுப்பாக அவனை பார்த்துக்கொண்டே தலையசைத்தவள், "இன்னும் பெட்டரா, ரொமான்டிக்கா, அழகா, கவிதை போல சொல்லு" நாசியை உறிந்தபடி கட்டளையாக கூறினாள். தன்னவள் கூறியதை கேட்டு லேசாக புன்னகைத்த அபய், அவளின் கன்னத்தை தன் இரு கரங்களுக்குள் வைத்துகொண்டு, அவளது சிவந்த நாசியில் இதழ் பதித்து,
"ஐ லவ் யூ என் அழகு பொண்டாட்டி" முத்து பற்கள் தெரிய சிரிப்புடன் கூறினான்.
ஆனால் அவனவளோ,
"ஹம் இவ்வளவு தானா" என்று குறும்பாக சொல்லவும்.
தன்னவளது விழிகளை ஆழமாக பார்த்த ஆணவனோ,
"பேசி லவ்வை சொன்னது என் தப்பு தான்" என்றவன் செயலில் இறங்கினான்.


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அலுவலகத்துக்கு செல்லவதற்காக வேகமாக மாடியில் இருந்து கீழே வந்த ஆராத்யாவிடம்,
"இன்னைக்கு வீட்ல வரலக்ஷ்மி பூஜை இருக்கு டி, சீக்கிரம் வீட்டுக்கு வந்திரு" என்று உத்தரவாக கூறினார் மாதாவி. தன்னை முறைத்து பார்த்தபடி, கண்டிப்பான குரலில் கூறிய தன் தாயை எரிச்சலுடன் பார்த்த ஆராத்யா,
"ட்ரை பண்றேன்" என்றவள், அனைவரிடமும் விடை பெற்றுவிட்டு வாசலை நெருங்கிய தருணம்,
"தியா ஒரு நிமிஷம் நில்லு" என்ற நாகம்மாள், ஆராத்யாவை நெருங்கி,
அவளின் வெறுமையான கழுத்தை திகைப்புடன் பார்த்தவர்,
"என்னமா உன் கழுத்து வெறுமையா கிடக்கு, தாலிய எங்க?" என்று பதற்றதுடன் வினவினார்.
நாகம்மாள் கேட்ட பிறகே தான் தாலி அணியவில்லை என்பதை உணர்ந்த ஆராத்யா நேற்று இரவு நடந்த நிகழ்வை எண்ணி பார்த்து கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள்,
"அதுவந்து பாட்டி.." என்ன சொல்வது என்று தெரியாது திணறிக் கொண்டிருக்க, இப்பொழுது மொத்த சொந்தமும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
அப்பொழுது தான் அவளது கழுத்தை கவனித்த ஆராத்யாவின் அத்தை விசாலாட்சியோ,
"தாலிய எங்க தியா" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, "எல்லாரும் கேக்குறாங்கல்ல பதில் சொல்லு டி" அதட்டலும் தவிப்பும் கலந்த குரலில் வினவினார் மாதவி.
குடும்பமும் மொத்தமும் தன்னிடம் இதையே கேட்க ஆராத்யாவோ என்ன பதில் சொல்வதென்று தெரியாது நெற்றியை நீவிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்நேரம்,
"என்னாச்சு?" என்று கேட்ட கணீர் குரலில் அனைவரும் குரல் வந்த திசையை பார்க்க, நேற்று அணிந்திருந்த கருப்பு நிற ஆம்கட் பனியனுடன், சோம்பலை முறித்தபடி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் அபய விஜயன்.
ஆராத்யாவை தவிர அனைவரும் அபயனை திகைப்புடன் பார்க்க, ஆராத்யா உட்பட அனைவரின் முக பாவத்தையும் உள்வாங்கிக் கொண்ட அபயன் தன் பாட்டியை பார்த்து,
"என்னாச்சு நாகு டார்லிங்? ஏன் டென்ஷனா இருக்க?" என்று நிதானமாக கேட்டான்.
அவரோ,
"நல்ல நாள் அதுவுமா உன் பொண்டாட்டி தாலி இல்லாம வந்து நிக்கிறா டா, எங்கன்னு கேட்டா பதிலும் சொல்ல மாட்டிக்குறா" என ஆதங்கம் கலந்த கோபத்துடன் பேரனிடம் புகார் வாசித்தார்.
மாதவியால் நிலை கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே பல விடயங்களால் மகள் மீது கோபத்தில் இருப்பவருக்கு இது இன்னும் கோபத்தை கொடுக்க,
"சொல்லுடி எல்லாரும் கேக்குறாங்கல்ல தாலி எங்க?" கன்னங்கள் அதிர சற்று காட்டமாகவே தன் மகளிடம் வினவினார்.
ஆராத்யாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, கோபத்தில் நேற்று இரவு கழட்டி வீசியதையா கூற முடியும், ஆக
பதில் சொல்லமுடியாது பெண்ணவள் நின்றியிருக்க, அவளது தவிப்பை கண் குளிர ரசித்த அவளின் தவிப்பிற்கு சொந்தக்காரனோ,
"நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா" மெல்ல அவளது காதில் கேட்டான்.
அவனது குரலை கேட்டதுமே பற்களை இறுக்கமாக கடித்த பெண்ணவளோ பக்கவாட்டாக திரும்பி அவனை முறைத்து பார்க்க,
"முறைச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போதைக்கு உன்னை காப்பாத்த என்னை தவிர வேற யாராலும் முடியாது" கண் சிமிட்டி அவள் காதில் இன்னும் மெல்லிய குரலில் தன் மூச்சு காற்று பட கூறியவன்,
"பதிலுக்கு நீ எதுவும் பண்ண வேண்டாம், உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி ரொம்ப நேரமா என் மனசு துடிச்சிட்டே இருந்துச்சு அதான் ஹெல்ப் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான்.
அதை கேட்ட பெண்ணவளோ அவனை இன்னும் அதிக சந்தேகத்துடன் பார்க்க, "நம்பலைனா போ, உனக்கு தான் லாஸ். மொத்த குடும்பமும் உன்னை வச்சி செய்ய ரெடியா இருக்காங்க. உனக்கு மீட்டிங் வேற இருக்குல்ல" என்றவனை இயலாமையுடன் பார்த்தவள், வேறு வழியின்றி சரி என்பதாய் தலையசைக்க,
"அச்சோ அத்தை" என்றவன் அப்பொழுது தான் நினைவு வந்தது போல, தனது பேண்ட் பாக்கட்டில் இருந்து தாலியை எடுத்து,
"தாலி என்கிட்ட தான் இருக்கு" என்று கூறி ஆராத்யாவிடம் நீட்டினான்.
அப்பொழுது அவனது பாட்டியோ,
"தாலி எப்படி உன்கிட்ட வந்தது" என்று கேட்டார்.
அதற்கு அவனோ, "அது நைட் டிஸ்டர்பன்சா இருக்குன்னு நான் தான் டார்லிங் கழட்ட சொன்னேன்" தன் இரு கரங்களையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்து,
இயல்பாய் கூறுவது போல கூறி, ஆத்திரத்தில் பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்த ஆராத்யாவை பார்த்து ஒற்றை கண் அடித்தான்.
இதற்கிடையில் சுற்றி இருந்த அனைவரும் அபயின் வெளிப்படையான பேச்சில் சங்கடத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தலை கவிழ்ந்த நிலையில், தன் நெஞ்சில் வந்தாடிய மாங்கல்யத்தை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த ஆராத்யா, "இதோட இது மூனாவது தடவை" என்ற அபயனின் குரலில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
ஒரு கணம் ஆராத்யாவின் முகத்தைப் பார்த்த அபயனும்,
"எப்படியும் கழட்டி வீச போற, இதெல்லாம் தேவை இல்லைன்னு சொன்னா இவங்களுக்கு புரிய மாட்டிக்குது. நான் தாலி கட்டுறதும், நீ கழட்டி வீசறதும் இவங்க எமோஷனல் ஆகிறதும். முடியல.. தாலி கட்டி கட்டி போர் அடிக்குது" தன்னவளின் கழுத்தில் தன் தாடியடர்ந்த முகம் பதிய, தாலி கட்டியப்படி அவள் காதில் கூறினான்.
பின்பு நிமிர்ந்து ஆராத்யாவின் முகம் பார்த்து, அவளது நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து,
"நமக்கு இந்த எமோஷன் எல்லாம் செட்டே ஆகாது, அதனால ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ஆரா" தீவிரமான முகபாவனையுடன் ஆராம்பித்தவன், "பேசாம இனிமே தாலிக்கு பதிலா உனக்கு, புடவை கட்டலாம்னு இருக்கேன்." இன்னும் தீவிரமான குரலில் கூறிவிட்டு, ஆராத்யாவின் யோசனையான முகபாவத்தை உள்வாங்கிக்கொண்டு, "எனக்கும் கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கும்ல" என்று இறுதி வாக்கியங்களைக் மட்டும் சற்று அழுத்தமாக கூறி, அவளை பார்த்து விஷமமாய் சிரித்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அபயின் இந்த அதிரடியில் பெண்ணவள் திகைப்புடன் நின்றியிருக்க, தன்னவளை விட்டு நகர்ந்தவனோ, மதுரா மற்றும் வானதியை பார்த்து,
"அப்போ எப்பிடியோ ஆனா இப்போல்லாம் எனக்கு பட்டர் சக்காட்ச் வித் ஸ்ட்ராபெரி தான் ரொம்ப புடிக்குது" என்றவன் தன்னவளின் அதிர்ந்த விழிகளை அழுத்தமாக பார்த்தபடி, தன் கீழ் அதரத்தின் ஓரத்தில் இருந்த சிறு துளி ஐஸ்க்ரீமை தனது பெருவிரலால் துடைத்து, அந்த விரலை தன் நாவால் சுவைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் ஆராத்யாவுக்கு சற்று தள்ளி இருந்த வானதியோ,
"பட்டர் சக்காட்ச் வித் ஸ்ட்ராபெரியா? ஏய் தியா நீ பட்டர் சக்காட்ச் தானே சாப்பிடுற, அப்போ ஏன் அத்தான் பட்டர் சக்காட்ச் வித் ஸ்ட்ராபெரினு சொல்லிட்டு போறாங்க,அப்படி கூட ஃப்லேவர் இருக்கா என்ன?" என்று புரியாமல் கேட்க, திகைப்பிலிருந்து இன்னும் வெளிவந்திடாத பெண்ணவளோ தங்கையின் கேள்வி எதற்கும் பதில் அளிக்காது, பனி சிற்பம் போல உறைந்துவிட்டாள்.
 
Top