- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
#டீசர்
"கட்! கட்! கட்!" என்றவன், ஒருவித எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கி நடந்து வந்த, அந்த படத்தின் புதுமுக கதாநாயகனான ஜிக்னேஷின் தோள்களைத் தட்டி,
"வெல்டன் ஜிக்னேஷ்! சீன்ஸ் எல்லாமே பெர்ஃபெக்ட்டா வந்திருக்கு. யு ஹேவ் அ ப்ரைட் ஃபியூச்சர்!" என்றான்.
"தேங்க் யு ஸோ மச் சார்! நீங்க இல்லன்னா என்னால இவ்வளவு பெட்டரா பெர்ஃபார்ம் பண்ணிருக்க முடியாது." என்று சொல்ல,
மீண்டும் அவனது தோள்களைத் தட்டி மெலிதாக புன்னகைத்து, தனது கழுத்தில் கரத்தை வைத்து நெட்டி முறித்தபடி தன் கேரவனுக்குள் நுழைந்தவன், தொடர்ந்து ஒருவாரமாக ஓய்வின்றி வேலை பார்த்ததின் காரணமாக உண்டான சோர்வில், அப்படியே நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிய தருணம், அவனது அலைபேசி தன் இருப்பிடத்தைச் சொன்னது.
"ப்ச்!" சலிப்புடன் நெற்றியை நீவியவன், அலைபேசியைத் தன் கையில் எடுத்து தொடுதிரையைப் பார்த்த நொடி, அவ்வளவு நேரம் அவனிடம் இருந்த சோர்வு மொத்தமும், எங்கோ மாயமாய் மறைந்து போக அவனது இதழ் புன்னகையில் விரிந்தது.
🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️
"வரு, கிளம்பலாம்..." என்று சொல்லவும், அவனது இதழ் மீது விரல் வைத்து மறுப்பாக தலையசைத்தவள், அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவனது அதரத்தைக் கவ்விக்கொள்ள, தனக்கு உரிமைப்பட்டவளின் நெருக்கத்தில் ஆணவனோ மொத்தமாகத் தடுமாறி தன்னிலை மறந்தான்.
இருவருக்கும் இடையே முதலில் இருந்த நூலளவு இடைவெளி கூட இப்பொழுது இல்லாமல் போக, அவள் வதனத்தை இரு கரங்களால் பற்றியிருந்த ஆணவனின் உஷ்ண மூச்சுக் காற்று அவளது முகத்தில் பட்டு உணர்வுகள் பெருக, அவனது சட்டையின் காலரை இறுக்கமாகப் பற்றியபடி விழிகள் மூடி நின்றிருந்தாள்.
அவளது சாயம் பூசிய செவ்விதழ்களை ஆணவன் சிறு தயக்கத்துடன், நிதானமாக தன் இதழ் கொண்டு ஒற்றியெடுக்க, உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்த பெண்ணவளோ, ஆர்ப்பரிக்கும் ஆவலுடன் அவனது இதழ் மீது தனது இதழால் போர்தொடுத்து, இறுதியில் தன் வசமாக்கினாள்.
காதலுக்கும் காதலர்களுக்கும் தேவைப்படும் தனிமை!
பனி பொழியும் இரவு!
கவிதை பாட வைக்கும் பூரண சந்திரன்!
அருகே அவளுக்கு உரிமையாகப் போகின்றவன்!
வேறு என்ன வேண்டும்?
இதற்குத் தானே, இந்த இனிமையான தருணத்திற்கு தானே பல நாட்கள் காதலோடு காத்திருந்தாள்.
அந்த தருணம் பல வருடங்கள் கழித்து கிடைக்கவும், அவளது உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓட ஆரம்பித்துவிட, அவனது அகண்ட தோள்களைப் பிடித்திருந்த அவளது கரம் மெல்ல நகர்ந்து, அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை பொத்தானை ஒவ்வொன்றாக விடுவித்தது.
ஏற்கனவே பெண்ணவளுக்கு நிகராக உணர்வுகளின் பிடியில் சிறை பட்டு கிடந்தவனின் கரம், பெண்ணவளின் இடையை அழுத்தமாக வருட ஆரம்பித்தான்.
🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️
தான் அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு, இறுதியாக தன் கழுத்தில் இருந்த பெரிய மாலையை, தன் அறையில் உள்ள கண்ணாடியின் முன்பு அமர்ந்து கழற்றிக் கொண்டிருந்த வர்ஷாவின் விழிகள், கண்ணாடியில் தெரிந்தவனைப் பார்த்து அதிர்ந்து விரிந்தது.
அவளது அறையின் கதவை அடித்துச் சாற்றியபடி உள்ளே வந்தவன் அவளை அனல் தெறிக்கப் பார்க்க, மிகவும் குழம்பிப் போன பெண்ணவளோ தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.
அவனது விடயத்தை அறிந்ததில் இருந்தே அவனுக்காக மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு, அவனை இங்கே... அதுவும், இந்த நேரத்தில் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
"சார் என்னாச்சு? நீங்க இங்க என்ன பண்றீங்க?" தயக்கத்துடன் கேட்டாள்.
"நான் இங்க வருவேன்னு எதிர்பார்க்கலைல? என் வாழ்க்கையையே அழிச்சிட்டு, இங்க வந்து உட்கார்ந்துட்டா உன்னை நான் விட்டுடுவேன்னு நினைச்சியா?" விழிகள் கனலைக் கக்க பற்களைக் கடித்தபடி கேட்டான்.
அவளுக்கு ஒன்றுமே புரியாமல் போகவும்,
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல." என்று பெண்ணவள் சொல்ல, "புரியலையா? என்னடி புரியல?" என்று அவன் சத்தமிடவும் பதறியவள்,
"சார் ப்ளீஸ்... கத்தாதீங்க... யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு நிஜமாவே புரியல. ப்ளீஸ் வெளில போறீங்களா?" என்று அவள் கேட்ட மறுநொடி,
வேகமாக அவளை நெருங்கி அவளது இரு கரங்களையும் தன் நகங்கள் பதிய அழுத்திப் பிடித்தவன், தனது வெப்பமான மூச்சுக் காற்று, அவள் முகத்தில் மோத அவளது அதிர்ந்த விழிகளைப் பார்த்து,
"ஐ டோன்ட் கேர்!" என்று இன்னும் பயங்கரமாகக் கத்தினான்.
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே க்ளிக் செய்யவும்
ஆதவன் 1

Last edited:
Author: Naemira
Article Title: டீசர் 1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.