Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 1

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
அலாரம் தன் கடமையைச் செய்ய, வழக்கம் போல அதை ஆஃப் செய்ய முனைந்தவன் தவறுதலாகத் தள்ளிவிட, அது கீழே விழுந்து மேலும் மேலும் அடித்துக்கொண்டே இருந்தது. “ச்ச…” என்று சலித்தவன் தன்மீது மூடி இருந்த போர்வையை நீக்கியவாறு எழும்பினான்.

அவன்தான்... “வெயிட் வெயிட் மிஸ் கதாசிரியை, என்னைப் பத்தி தானே சொல்ல வர்றீங்க? நீங்க போங்க, இந்தமுறை ஒரு சின்ன வித்தியாசத்துக்காக நானே சொல்லிக்கிறேன் பபாய் டேக் கேர். பை த வே நெமி டியர், என்ன அப்படிப் பார்க்குறீங்க? உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உங்களை அப்படித்தானே கூப்பிடுவாங்க. இதை நான் சொல்லியே ஆகணும், உங்க பேருகூட உங்களை மாதிரியே அழகா இருக்கு. அப்படியே உங்க நம்பர் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.”

“பிரதர் என்கிட்டயேவா?”

“என்னங்க பேபினு கூப்பிடுவீங்கனு பார்த்தா ப்ரதர்னு கூப்பிடுறீங்க, நைட் எல்லாம் தூக்கம் வராதுங்க...”

“பே... பி... அமெரிக்கன் மாப்பிள்ளை, ஹீரோவோட கஸீன்னு கொஞ்சம் ரோல்ஸ் இருக்கு. அதுக்கு யாரை போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், ஆனா அதுக்குத் தேவையே இருக்காது போலயே என்ன சொல்றீங்க பிரதர் சாரி, பே... பி...”

“அட! சிஸ்டர் நான் பார்பி டால் வாங்கி தரேன்னு சொன்னேன் சொன்னதை, நீங்க தப்பா நினைச்சுட்டிங்கனு நினைக்கிறன், நீங்க போங்க.”

“நான் போறது இருக்கட்டும் நீங்க சீக்கிரமா போய் இன்ட்ரோ குடுங்க, அதுக்குள்ள நான் போய் அடுத்த ஸ்க்ரிப்ட் ரெடி பண்றேன்.”

“ஓகே சிஸ்டர்.”

“ஹாய் ஃப்ரண்ட்ஸ், என்னடா வழக்கமா ரைட்டர்தான இன்ட்ரோ குடுப்பாங்க இங்க என்ன நடக்குதுனு பார்க்குறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க வழக்கத்துக்கு மாறக் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாமேனுதான்... அதுமட்டும் இல்லை, என்னைப் பத்தி அவங்க சொல்றத விட நானே சொன்னா அது இன்னு கெத்தா இருக்கும்ல... அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கனு நெமி பேபி... நோ நோ நெமி சிஸ்டர அனுப்பி வச்சுட்டேன்.

ஆஹ்! இந்த தலைவலி... ஒன்னுமில்லைங்க நேத்து வீகென்ட்ல, அதான் பார்ட்டி. எல்லா வீகென்ட்டும் நடக்குறதுதான், நேத்து கொஞ்சம் பியர் அதிகமாகிடுச்சு. எல்லாம் அந்த ஆதர்ஷோட வேலைதான், யாருனு பார்க்குறீங்களா? எல்லார் லைஃப்லயும் ஒரு தளபதி இருப்பான்ல இவன் என் தளபதி.

அட அதாங்க என் ஃப்ரென்ட், சின்ன வயசு நட்பு இப்போவும் தொடருது. நிறையா நண்பர்கள் இருக்காங்க, இவன் கொஞ்சம் ஸ்பெஷல்.

இந்த ஹாங் ஓவர் இருக்கே, இப்போ கண்டிப்பா நான் லைம் ஜூஸ் குடிச்சே ஆகணும். வாங்க, அப்படியே என் கிட்சன் எல்லாம் எப்படி இருக்குனு பாருங்க, நில்லுங்க... சும்மா வரீங்க? காஃபி, டீனு ஏதாவது கையில எடுத்துட்டு வாங்க டைம் பாஸ் ஆகவேண்டாம்.

லைம் லைம்... இந்தா இருக்கு. கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது எந்த அளவுக்கு நிம்மதியானதோ, அதே அளவுக்கு கொஞ்சம் கொடுமையானது தலைவலி, காய்ச்சல்னா கூட நமக்கு நாமளே மருந்து போட்டு, எப்படி இருக்குனு கேட்டுக்கணும். பட் பழகிடுச்சு, அம்மா எல்லாரும் மும்பைல இருக்காங்க, நான் டெல்லில இருக்கேன்.

மோசம் இல்லை ஜூஸ் ஓகேதான், சொல்லியே ஆகணும் ஹாங்ஓவர்கு பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இந்த லெமன் ஜூஸ். நீங்களும் ட்ரை பண்ணுங்க, என்ன தாய்மார்களெல்லாம் முறைக்கிற மாதிரி இருக்கு. ஏங்க தப்பாவே நினைக்கிறீங்க? உங்க ஹஸ்பண்ட்டுகோ இல்லை உங்க ஃப்ரெண்ட்கோ ஹாங்கோவர் இருந்தா லெமன் ஜூஸ் போட்டுகுடுங்கனு சொன்னேன். உங்களைச் சொல்லுவேனா? பெண்கள் என் கண்கள் மாதிரிங்க. லேடிஸ் முதல்ல, 'லெமன் ஜூஸ் போடுங்க, அப்புறம் நாலு அடிய போடுங்க. ஏன்னா, 'குடி குடியைக் கெடுக்கும்.'

ஃபோன் வருது, கொஞ்சம் அப்படியே இருங்க, 'ஹாய் பேபி எப்படி இருக்க? ஐயம் இன் ஷவர் கேன் ஐ கால் யூ லேட்டர். ஓகே பாய், ஐ மிஸ் யூ.

ஹாய் ஃப்ரண்ட்ஸ், ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா? என்னங்க பார்க்குறீங்க, ஓ ஃபோன்ல யாருனு கேட்குறீங்களா? அது என் கேர்ள் ஃப்ரெண்ட். ஐம்பதா ஐம்பத்தி நாலானு கரெக்ட்டா தெரியல விடுங்க. லிஸ்ட் கொஞ்சம் பெருசா இருக்கும், எல்லாருக்கும் அந்தந்த வயசுல வர்ற ஈர்ப்புதான். என்ன எனக்குக் கொஞ்சம் ஓவர் ப்ளோ.

ஓ காட்! ஐயம் கெட்டிங் லேட். உங்ககிட்ட பேசுனதில நான் டைம் பார்க்கல, ஒன்னு பண்ணலாம் அப்படியே நான் ரெடி ஆகிட்டே என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்றேன். நீங்களும் என்னை ஃபாலோ பண்ணிட்டே, அப்படியே உங்க வீட்ல இருக்கிற சின்னச் சின்ன வேலையைப் பார்த்துட்டே என்னைப் பத்தி தெரிஞ்சுக்கோங்க.

அட எங்க வர்றீங்க? ஃபாலோ பண்ண சொன்னேன்தான், அதுக்குனு பாத்ரூம் உள்ளே கூடவா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் ரெடி ஆகிட்டு வந்துடுறேன். நீங்க அதுவரைக்கும் என் வீட்டை சுத்தி பாருங்க.

ஹாய்! ஹாய்! வந்துட்டேன் வாங்க, ஒரு நிமிஷம்... என்னோட வாட்ச், மொபைல் எல்லாம் சரியா இருக்கு, வீட்டை பூட்டிடலாம். ஐ ஹாவ் சம்திங் டூ ஷோ யூ கைஸ். இதோ இதுதான் என்னோட ஆடி கார். லைஃப்ல எதுக்காகவும் நான் போராடுனது இல்லை, எல்லாமே எனக்கு ஈஸியா கிடைச்சுடும். ஆனா முதல் தடவை நானே என் சொந்த காசுல வாங்குனதுனா அது இந்த கார்தான். இத வாங்கும்போது வந்த ஃபீல் இருக்கே... நோ வேர்ட்ஸ் டு ஸே. நான் நானா ஃபீல் பண்ணின நாள் அது. வாங்களேன், என்கூட கார்ல. பயப்படாதீங்க, நான் நல்லாவே ட்ரைவ் பண்ணுவேன்.

இப்போ என்னைப் பத்தி சொல்லணும்ல? நான் எப்படி இருப்பேன், என்ன கலர், என்ன ஹைட், எக்ஸட்ரா எக்ஸட்ரா...

உன்னோட கண்ணைப் பார்த்தா நான் இந்த உலகத்தையே மறந்து போகுறேன் அது என்னடா கண்ணு! என்னை அப்படி மயக்குதுனு மேகா சொல்லுவா. சிரிச்சே கவுக்குறேன்னு அடிக்கடி சீமா சொல்லுவா.

இப்பவும் எப்படிடா ஃபிட்டா இருக்கனு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காரை பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்.

பண்ணியாச்சு. அட வாங்க, டெல்லி ஏர்போர்ட் எப்படி இருக்குனு பாருங்க, அட சும்மா வாங்க...

என்ன பேசிட்டு இருந்தோம்... என் ஃபிட்னஸ்... அப்புறம் உன்னோட சிக்ஸ் பேக்... ஓ காட்! அவ்ளோ ஹாட்! என்னால முடியல. அவ்ளோ வேர்க்குதுனு ஷிம்லா ட்ரிப் போயிருந்தப்போ ரியாவா, ப்ரியாவா? ஐ டோன்'ட் நோ! எக்ஸாட்லி ரெண்டு பேருமே சொன்னாங்களா, இல்லை யாராவது ஒருத்தரானு தெரியல. ம்ம்... மொத்தத்துல டஷிங் ஹாட் ஸ்டன்னிங் ஹான்ட்ஸம்னு... என்ன அப்படிப் பார்குறீங்க? நான் சொல்லலை, நம்ம ரைட்டர் சொன்னாங்க. சத்தியமா தாங்க... வேணும்னா நீங்க அவங்ககிட்டயே கேட்டுக்கோங்க.

ஒன் செகண்ட், ஏய், ஹாய் மீனா!”

“வாட்! ஐயம் நேகா. என் பேரு கூட மறந்திருச்சா?”

“ஸ்வீட் ஹார்ட்! நீ இவ்ளோ அழகா இருந்தா நான் என்ன பண்றது? அப்படியே எல்லாத்தையும் மறந்திடுறேன்.”

“நைஸ்! இதுவரை எத்தனை பொண்ணுங்ககிட்ட சொன்னீங்க?”

“ஏய் கம் ஆன்! என்னை நம்பு. இதை நான் உன்கிட்ட மட்டும்தான் சொல்றேன். மத்தவங்ககிட்ட எல்லாம் வேற வேற லைன் சொல்லுவேன்.”

“நீங்க இருக்கீங்களே? சரி, நேத்து ஏன் ஃபோன் அட்டென் பண்ணல?”

“பார்ட்டிபா, பட் ஐ ரியலி மிஸ்ட் யூ!”

“ரியலி! ஐ டோன்'ட் திங்க் ஸோ...”

“கம் ஆன் நேஹா!”

“நீங்க இருக்கீங்களே? ஒன்னு சிரிச்சு மடக்குவீங்க, இல்லனா இப்படி அப்பாவி மாதிரி பார்த்தே மயக்குவீங்க உங்களை...”

“ஓ! ம்... பை த வே பெர்ப்யூம் வாஸ் நைஸ்!”

“தேங்க் யூ!”

“நேஹா, ரொம்பப் பசிக்குது ஒன் சாண்டவிச்...”

“ஒன் சாண்டவிச், கஃப்பச்சீனோ இதெல்லாம் நீங்க சொல்லணுமா? நான் கொண்டு வரேன்.”

“ஸோ ஸ்வீட், ஐ லைக் இட்!

ஓ சாரி! நேஹா கூடப் பேசிட்டு இருந்ததுல, நான் உங்களை மறந்துட்டேன். என்ன அங்கையே ஸ்டாப் ஆகிட்டீங்க, மேல ஏறி வாங்க.

வாங்க! அட பரவாயில்ல, சும்மா உள்ள வாங்க. கொஞ்ச நேரத்துக்கு உங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன்.

என்ன யோசிக்கிறீங்கனு நான் சொல்லட்டா? இவனை ஹீரோனு நினைச்சா, இவன் சரியான பொம்பளை பொறுக்கியா இருப்பான் போலயேனு, ஆன்ட்டிங்க எல்லாரும் என்னைக் கழுவி கழுவி ஊத்திட்டு இருப்பீங்க. ஏய் இவன் சரியான பிளே பாய்டி, பட் ஸோ க்யூட்னு யங் கேர்ள்ஸ் எல்லாரும் என்னை வருணிச்சுட்டு இருப்பீங்க கரெக்டா? இன்னும் கொஞ்சம் பேர் இவன் ஹீரோவா இல்ல வில்லனானு கன்ஃபியூஷன்ல இருப்பீங்க. அதே கன்ஃபியூஷன் தாங்க எனக்கும். எனக்கே நான் ஹீரோவானு தெரியல. ஆனா நம்ம ரைட்டர் ஸ்ட்ரிக்ட்டா நீதான் ஹீரோனு சொல்லிட்டாங்க.

மே பீ என்னடா ஹீரோத்தனம், மத்தவங்களுக்கு வில்லத்தனமாவும், என்னோட வில்லத்தனம் மத்தவங்களுக்கு ஹீரோத்தனமாவும் தெரியலாம்ல. எல்லா ஹீரோவும் பறந்து பறந்து அடிக்கணும்னு அவசியம் இல்லல்ல. நான் இப்படித்தான், ஆனா அப்படியே நான் எப்போவுமே இப்படித் தான்னு சொல்ல முடியாது.

லவ்! எனக்கும் வந்துச்சு. என் லைஃப்லையும் ஒரு பொண்ணு இருந்தா. இப்போ இருக்காளா? இனிமே இருப்பாளானு நீங்கதான் சொல்லணும்.

ஜியா! பேரை சொல்லும் போதே உள்ளே எதோ பண்ணுது. என்ன இந்த லிஸ்ட் அந்தப் ஃபிப்டி போர் உள்ளேயே முடிஞ்சிருமா, இல்லை இது வேற லிஸ்ட்டானு தான பார்க்குறீங்க. இது வேற... இது அந்த லிஸ்ட் கூடலாம் வராது, அதான் சொன்னேனே ல்வ்ன்னு... அவளை விட்டு வந்து ஆறு வருஷம் ஆகிடுச்சு. இந்த ஆறு வருஷத்துல அவளை நினைக்காத நாள் இல்லன்னுலாம் பொய் சொல்லமாட்டேன். ஆனா எப்போ எல்லாம் அவளை நினைக்கிறேனோ என்னோட ஹார்ட் வேகமா துடிக்கும், இப்போ துடிக்குதே அதே மாதிரி. உங்களுக்குக் கேட்குதா?

ம்ம் கேட்காது. ஏன்னா வலி ஏற்பட்டது எனக்குத் தானே. வலிக்குதுங்க, இங்க வலிக்குது. ஜியா, ஒரு நொடியில என்னை மொத்தமா புரட்டி போட்டவ.

அட! என்னங்க, ரொம்ப மொக்கை போட்டுட்டேன்ல, இதுக்கே இப்படி நொந்து போயிட்டீங்க. இன்னும் உங்ககிட்ட நிறையா மொக்க போடணுமே எப்படித் தாங்க போறீங்க? வேற வழியே இல்லை, நீங்க நாங்க போடுற மொக்கைய படிச்சுதான் ஆகணும், கமன்ட் போட்டுதான் ஆகணும் சரியா?

சரிங்க, டைம் ஆகிடுச்சு. போங்க, சீட்ல போய் உட்காருங்க. நீங்க இங்க நிற்க முடியாது. இது காக்பிட்(COCKPIT), இங்க பேஸஞ்சர்ஸ்க்கு அனுமதி கிடையாது.

"என்னாச்சு அப்படிப் பார்க்குறீங்க? ஓ... ஐ அண்டர்ஸ்டாண்ட், போங்க போய் உங்க சீட்ல உட்கார்ந்துக்கோங்க. செக்கிங் இன்ஸ்பெக்டர்லாம் வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் ஃப்ளைட் பறந்துட்டு இருக்கும் பொழுது நடுவுல இறக்கிவிட முடியாதுல, நான் பார்த்துக்கிறேன்.

இன்ட்ரோ எல்லாம் குடுத்து முடிச்சுட்டேன், இனிமே மத்ததெல்லாம் நம்ம ரைட்டர் சொல்லுவாங்க. நான் போட்ட மொக்கைய பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப நன்றி. நீங்க போய் உட்கார்ந்து என்னோட கதையை என்ஜாய் பண்ணுங்க, பாய் டேக் கேர்.”

காக்பிட்க்குள் அமர்ந்திருந்த ஆஷிக்கின் அருகில் வந்து அமர்ந்த ஒருவன், "ஹாய்டா ஆஷிக்!” என்று கூற,

பதிலுக்கு ஆஷிக்கும், "ஹாய்டா ஆதர்ஷ்!” என்றான்.

சிறிது நேரத்தில் விமானம் பறக்க இருப்பதால், பயணிகளுக்கும் விமானப் பணிப்பெண்களுக்கும் ஆஷிக்,

"குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்! திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆஷிக் அண்ட் கேப்டன் ஆதர்ஷ் கண்ணா ஸ்பீக்கிங், வெல்கம் ஆல் ஆஃப் யூ ஆன் CJ 314 ட்ராவல்லிங் டெல்லி டு சென்னை. வீ ஹோப் யூ ஆல் வில் என்ஜாய் த ஜர்னி வித் அஸ். சிட் பேக் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் தி ஃப்ளைட்.

கேபின் க்ரூவ் ப்பிரிப்பர் ஃபார் டேக் ஆஃப், கிராஸ் செக் அண்ட் ரிப்போர்ட்.” என்றவாறு அறிக்கை விடுத்தான்

ஃப்ளைட் ஆகாயத்தைக் கிழித்துத் தன் ரெக்கையை விரித்துப் பறந்து கொண்டிருக்க, விமானப் பணிப்பெண்களில் ஒருவள்

"மது, என்னாச்சுடி உன் பாய் ஃப்ரென்ட் என்னதான் சொன்னான்?"

"விடு நேஹா, அவனைப் பத்தி பேசாத. அவனை எப்படிக் கழட்டி விடுறதுனு யோசிச்சுட்டு இருக்கேன்.”

"என்னடி?”

"நேஹா என்னைப் பத்தி விடு, உன் ரூட் எப்படிப் போகுது? என்ன சொல்றாரு உன் கேப்டன் ஆஷிக்?”

"எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன், ஆனாலும் பிடி குடுக்கவே மாட்டிக்கிறானே?”

"டார்லிங், முதல்ல உன்னோட தகுதிக்கு பொருத்தமான ஆளா சூஸ் பண்ணு, ஆஷிக் எங்க? நீ எங்க? நீயெல்லாம் ஆஷிக்கப் பார்க்குறதே தப்பு, இதுல அவன் உன்னைக் கண்டுக்க மாட்டிக்கிறான்னு வருத்தம் வேற படுறியா? இந்த மாதிரி ஆஷிக்கிட்ட வழியிறத விட்டுட்டு நீ வேற யாரையாவது ட்ரை பண்ணு. உன் தகுதிக்கு பொருந்துற மாதிரி, என்ன புரிஞ்சிதா?” என்ற தியாவைப் பார்த்து நேஹா முறைக்க, தியாவோ, நேஹாவை அலட்சியம் செய்யும் விதமாய் ஒரு ஏளன சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள்.

மது, நேஹாவிடம், “நேஹா விடு அவ அப்படித்தான்னு தெரியும்ல. பத்தாகுறைக்கு அவளும் கேப்டன் ஆஷிக்கும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க. கேப்டன் ஆஷிக்கும் அவகூட நல்லா டைம் ஸ்பென்ட் பண்ற மாதிரிதான் தெரியுது. பேசாமா நீ ஆஷிக்கை விடுறதுதான் நல்லது.” என்று சமாதானம் செய்தாள்.

"இப்போ என்ன அவ ஆஷிக்கோட ஃப்ரெண்ட், அவளோட அப்பா கொஞ்சம் பணக்காரர் அவ்ளோதான். மத்தபடி லுக் வைஸ் நான் அவளை விட அழகா இருக்கேன். என்ன ஆமா தானே?"

"ஆமா நீ அவளை விட அழகுதான், இல்லன்னு சொல்லல. ஆனா ஆஷிக்கு அது தெரியலையே? எப்போ பாரு அவ கூடத் தான சுத்துறாரு.”

"அவரு சுத்தலை, இவதான் அவர் பின்னாடியே சுத்துறா.”

"சரி விடு நேஹா, தியாவை பத்தி பேசுனா நமக்குத்தான் தேவை இல்லாத டென்ஷன்.” என்று கோபமாய் இருந்த நேகாவை சமாதானம் செய்து கொண்டிருக்க, இதை அனைத்தையும் சிறு புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்த நடாஷா, நேஹாவின் கையில் பிளேட்டை கொடுத்து,

"டென்ஷனை விட்டுட்டுப் போய் கேப்டன்கிட்ட குடுத்துட்டு வாங்க, அப்படியே ஆதர்ஷ் சார்க்கு இந்தக் கிரீன் டீயும் குடுத்திருங்க.”

"ஓகே” என்று நேஹா வாங்குவதற்குள் குறுக்கே வந்து தட்டை வாங்கிய தியா, நேஹாவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தவாறு அங்கிருந்து சென்றாள்.

உள்ளே சென்றவள், "குட் மார்னிங் கேப்டன் ஆதர்ஷ்!”

"குட் மார்னிங் தியா!” என்றவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள் ஆஷிக்கைப் பார்த்து,

“ஹாய் பேபி!” என்று கூறி அவனது தோளில் தன் கரம் வைக்க, அவள் புறம் திரும்பிய ஆஷிக் தன் கண்களை விரித்துப் பார்க்க, அவனது பார்வையைப் புரிந்து கொண்டவள்,

"ஹாய் கேப்டன் ஆஷிக்!”

“எஸ்!"

"யுவர் பிரேக் ஃபாஸ்ட்."

"தேங்க் யூ!" என்று புன்னகைத்தவன், அதை வாங்கித் தன் அருகில் வைத்தான்.

அங்கிருந்து அவள் செல்ல போக ஆதர்ஷ், "தியா மை கிரீன் டீ.”

"சாரி கேப்டன், யுவர் டீ.”

"தேங்க் யூ!" என்று அவளது கையில் இருந்து வாங்கியவன், ஆஷிக்கைப் பார்த்து புன்னகைக்க,

ஆஷிக் அவள் சென்ற பிறகு, "என்னடா?”

"ஒன்னுமில்ல பேபி.” என்று சிரிக்க,

"போடா...”

"ஆஷிக், அவளும் ரொம்ப நாளா ட்ரை பண்றா. பேசாம நீ ஏன் இவளை கன்சிடர் பண்ண கூடாது? ஷி இஸ் குட், ஸ்கூல் படிக்கும் போதிருந்தே நம்ம கூட இருக்கா.”

"சோ வாட்? அவ எனக்கு ஃப்ரெண்ட் அவ்ளோதான். அதுக்கு மேல எனக்கு கமிட்மெண்ட்ல இண்ட்ரஸ்ட் இல்லடா."

"ஆஷிக்..”

"எப்பா நல்லவனே தயவு செஞ்சு உன் அட்வைஸ ஆரம்பிச்சுடாத. அப்புறம் நான் ஃப்ளைட்ட அப்படியே நேர கீழே இறக்கிருவேன்.” என்று கூற,

"சும்மா இருடா, நீ செஞ்சாலும் செய்வ.”

"சரி மச்சான், உன் பக்கத்து வீட்டு பொண்ணு எப்படி இருக்கா?"

"டேய்! இது எப்போதுல இருந்துடா?”

"அன்னைக்கு வீட்டுக்கு வந்தேன்ல...”

"உன்னை... டேய், நான் மட்டும் பொண்ணா இருந்தா நீ என்னையும் விட்டு வச்சுருக்க மாட்டல?"

"அட உனக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா? இதுக்குப் பொண்ணா ஆகணும்லாம் அவசியம் இல்லை. நீ இப்படியே இரு, எனி திங் ஃபார் யூ, ஐயம் ரெடி மேன்." என்று ஆஷிக், ஆதர்ஷை நெருங்க,

ஆஷிக்கை தள்ளிவிட்டவன், "டேய் ச்சீ... உன்னைலாம்...”

"என்னடா ச்சீ? இது பெஸ்ட் அண்ட் நிம்மதியான ஆப்ஷன். இப்படியே இந்தப் பொண்ணுங்க எல்லாரும் எனக்கு லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா, நான் கண்டிப்பா ஒருநாள் இப்படி மாறினாலும் மாறிருவேன்னு நினைக்கிறன்.”

"ம்ம்... இந்த டகால்டி வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்."

"டேய் சத்தியமா தான்டா சொல்றேன்."

"நீ என்னவா வேணும்னாலும் ஆகிட்டு போ, என்னை விடு.”

"என்ன மச்சான் இப்படிச் சொல்லிட்ட? நீ இல்லாம நான் எந்தக் காரியம் பண்ணிருக்கேன்? ஒருவேளை நான் அப்படி ஆனா நீதான் என் டார்லிங் டம்பக்கு...”

"போடா, என்னடா அப்படிப் பாக்குற?"

"என்னை ஏமாத்திடாதடா...”

"ஆஷிக் நீ கொஞ்சம் தள்ளியே இரு.” என்று ஆதர்ஷ் முறைக்க,

ஆஷிக், ஆதர்ஷைப் பார்த்து கண் சிமிட்ட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

"ஆதர்ஷ்!”

"சொல்லு ஆஷிக்.”

"வாஷ் ரூம் போயிட்டு வரேன்.”

"யா ஸுயர்!" என்ற ஆதர்ஷிடம், ஆஷிக் விடைபெற்றுக் கொண்டு காக்பிட்டை விட்டு வெளியே வந்தான்.

நேஹா, நடாஷாவிடம், "நடாஷா அந்த தியா எங்க?”

"முன்னாடி இருக்காங்க.”

"ஓ, சரி சொல்லு.”

"என்ன சொல்றது நேஹா?”

"உன்னைப் பத்தி சொல்லு, உன் பாய் ஃப்ரென்ட் பத்தி சொல்லு.” என்றவாறு நேஹா, மதுவைப் பார்த்து சிரிக்க,

"அந்த மாதிரியெல்லாம் யாரும் இல்லை."

"யாருமே இல்லையா?”

"இல்லை."

"யூ ஆர் சோ போரிங்." என்ற நேஹாவிற்குச் சிறு புன்னகையை மட்டும் நடாஷா பதிலாகக் கூறினாள்.

மது, நேஹாவிடம், "நேஹா அங்க பாரு.”

"என்ன?"

"யாரு அந்தப் பொண்ணு, ஜன்னல் ஓரமா புதுசா இருக்கு."

"ஆமா அப்பவே பார்த்தேன், யாருனு தெரியல."

அவர்களைக் குறுக்கிட்ட நடாஷா, "நம்ம ஏர்லைன்ஸ்ல இப்போ ஒவ்வொரு ஃப்ளைட்க்கும் ஒரு டாக்டர் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்கல்ல."

"ஆமா"

"அதுல உள்ளவங்கன், லண்டன் ரிட்டர்ன்ஸ். டெல்லிலதான் தங்கியிருக்காங்க."

"ஓ, ஆனா லண்டனை விட்டுட்டு இங்க ஏன் சாதாரண டூட்டி டாக்டரா வந்திருக்காங்க?"

"அது தெரியலை." என்று நடாஷா கூற,

மது, "டோன்'ட் யூ பைண்ட் ஷீ இஸ் ஹாட்!” என்று நேஹாவிடம் கூற,

நேஹா, “எஸ் ஹாட், பட் என்னைவிட இல்லை.” என்று பெருமை தொனிக்க கூற, நடாஷாவும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் வயது சுமார் இருபத்தியைந்து இருக்கும். தன் தலையைச் சாய்த்து தன் கண்களை இறுக்க மூடியவாறு அமர்ந்திருந்தாள்.

ஒரு இருட்டறையில் கண்கள் மட்டும் தெரிகிறது. அந்த உருவம் அவளை விரட்ட, அதனிடத்தில் இருந்து தப்பிக்க நினைத்தவள், தன் கால் தடுக்க கீழே விழுந்தாள். அந்த உருவம் பயங்கரச் சிரிப்பு சத்தத்துடன் அவளைப் பின் தொடர்ந்து, "உன்னை விடமாட்டேன்.” என்றவாறு, தன் கையில் இருந்த கத்தியால் அவளது கழுத்தை கீறியது.

திடுக்கென விழித்தவள், "வேண்டாம்...” என்று கத்தினாள்.

சத்தம் கேட்டு நடாஷா அவளது அருகில் வந்து, "ஹலோ மேம்...” என்று அழைக்க, அந்தப் பெண்ணோ தன் முகம் முழுவதும் வியர்வை துளிகள் பூத்திருக்க, இன்னும் அந்தக் கெட்ட சொப்பனத்தில் இருந்து மீண்டு வராதவளாய் நடாஷாவையே அதிர்ந்து பார்த்தாள்.

மீண்டும், “ஹலோ மேம்” என்ற நடாஷாவின் குரலில் உள்ள வேகத்தில் விழித்துக் கொண்டவள்,

"எஸ்"

"இஸ் எவ்ரிதிங் ஓகே மேம்?” என்று நடாஷா கேட்க, தான் கண்டது அனைத்தும் கனவு என்று உணர்ந்து, தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தன்னையே உற்று பார்த்த நடாஷாவிடம்,

"எஸ் நடாஷா, ஐயம் ஃபைன்!"

"ஓகே மேம்."

"நடாஷா..."

"மேம்?"

"வாஷ் ரூம்?"

"தட் சைட் மேம்."

"தேங்க் யூ!” என்று கூறியவாறு, அவள் வாஷ் ரூமை நோக்கி சென்றாள்.

எதிரே வந்த ஆஷிக்கும் இவளும் சேர்ந்து வாஷ் ரூமின் கைப்பிடியைப் பிடிக்க, இருவரும் வெடுக்கெனக் கையை எடுத்து, "சாரி" என்றவாறு ஒருவரை ஒருவர் பார்க்க,

வார்த்தைகள் ஏதும் இன்றி இரண்டு பேரும் மௌனமாய் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றனர். அந்த நேரம் வாஷ் ரூமின் உள்ளே இருந்த நபர் கதவைத் திறக்க, அதன் அருகில் இருந்த அந்தப் பெண், கதவு தன் முதுகில் பட்ட வேகத்தில் ஆஷிக்கின் கன்னம் ஓரத்தில் உள்ள காதுமடலில், தன் இதழ் பதித்தவாறு அவன் மீது சாய்ந்தாள்.

மௌனத்தை உடைத்து வெளியே வர துடித்த, கொஞ்சம் இருந்த வார்த்தைகளும் அவளது இதழ் அளித்த ஸ்பரிசத்தில் ஸ்தம்பித்துப் போயிற்று.

ஏற்கனவே சற்றுக் கவலையாக இருந்த அந்தப் பெண், இப்பொழுது நடந்த இந்த நிகழ்வால் லேசாகத் தன் கண்கள் கலங்க, வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

அவனோ சற்று நேரம் ஒன்றும் புரியாமல் அமைதியாய் நின்றுவிட்டு, பிறகு நேராகத் தன் காக்பிட்டுக்குள் நுழைந்து, பயணிகளின் செக் லிஸ்ட்டை ஆராய்ந்தான்.

"என்னாச்சு? நான் ஆல்ரெடி செக் பண்ணிட்டேன். அதான் சொல்றேன்ல, யாரை தேடுற?” என்று ஆதர்ஷ் கூறிய எதையும் காதில் வாங்காமல்,

"என்ன இது பேஸஞ்ஜர் லிஸ்ட்ல நேம் இல்லை, அப்போ நான் பார்த்தது கனவா என்ன? அப்போ இந்த...” என்றவாறு தனது கன்னத்தைத் தடவ, அவளது இதழின் ஈரம் இன்னும் காயாமல் அப்படியே இருக்க, தன் இதழ் ஓரம் லேசாகப் புன்னகைத்தான்.

"ஆஷிக் ஆர் யூ ஓகே? யாரைத் தேடுற? இப்போ நீ சொல்ல போறீயா, இல்லையா? ஏய் திரும்பு, கன்னத்துல என்னடா லிப் மார்க்? என்னடா பண்ணின? யாரு?"

"ஜியாடா"

"ஜியாவா? இங்கையா? நான் போய் பார்த்துட்டு வரேன்."

"ஏன், அவ என்ன கத்ரீனா கைஃபா? போய்ப் பார்த்து ஒரு செல்ஃபீ எடுத்துட்டு வர்றதுக்கு?"

"டேய் ஜியாடா!"

"ஜியா!"

"ஆஷிக் நான் பார்த்துட்டு வரேன்."

"ஏய் உனக்கு அவ வேணுமா இல்லை, நான் வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ."

"நீ தான்டா" என்று தயக்கத்துடன் கூறியவனை, புன்னகையோடு பார்த்தவன், "தட்ஸ் குட், உட்காரு."

"மச்சான் அவ உன்னை அறைஞ்சிருந்தாலும் ஓகே, அவ ஏன் கிஸ் பண்ணினா?"

"போடா, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை, ஜஸ்ட் ஆக்சிடென்ட். இந்த ஒத்த கிஸ் குடுத்துட்டு என்னை நூறு முறை அறைய போறா."

"ஏதாவது பேசினாளா?"

"இல்லை, அதே திமிரு."

"பேசஞ்ஜர் லிஸ்ட்ல பேரு இல்லை, அவ இங்க என்ன பண்றா?"

"சரியா தெரியலை, மே பீ எமர்ஜென்சிக்காக ஃப்ளைட்ல டாக்டர்ஸ் அப்பாயின்மென்ட் பண்ணிருக்கிறதா பேசிட்டு இருந்தாங்க. அதுக்காகக் கூட இருக்கலாம்."

"ஓஹ்! தட் வாஸ் கிரேட், உலகம் ஒரு வட்டம் தான்ல?"

"ஆஷிக் என்னடா, அதான் பிரேக் அப் ஆகிடுச்சுல?"

"நானா பண்ணினேன்? அவதான என் மனச உடைச்சுட்டு போனா, நவ் இட்'ஸ் மை டைம் டு பே பக்.” என்ற ஆஷிக் புன்னகைக்க,

"என்னடா சைக்கோ வில்லன் மாதிரி பேசுற?"

"அப்படித்தான் பேசுவேன், இவ்ளோ நாள் நான் ஃபீல் பண்ணினேன்ல, இனிமே அவ ஃபீல் பண்ணட்டும்."

"ஆஷிக்!” என்று அழுத்தமாக அழைத்த ஆதர்ஷ்க்கு, ‘ஆதர்ஷ் ப்ளீஸ் நீ இதுல எதுவும் பேசாத, வேடிக்கை மட்டும் பாரு.’ என்று தன் ஒரு பார்வையாலையே பதில் கூறியவன், விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பை கூற தயாரானான்

"குட் ஆஃப்டர் நூன் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆஷிக் அண்ட் கேப்டன் ஆதர்ஷ். ஆஜ் மே பஹூத் குஷ். (இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்) லுக் அட் தீ கிளவுட், இட் இஸ் வெரி ரொமான்டிக் சீன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி என் கைய விட்டு போன மேகம், இன்னைக்கு மறுபடியும் என் கூட ட்ராவல் பண்ணுது. ஐயம் ஹாப்பி! லாஸ்ட் டைம் ஐ மிஸ்ட் தட், பட் திஸ் டைம் ஐ வில் ஹோல்ட் இட் டைட்லி அண்ட் ஐ ஒன்'ட் கெட் எஸ்கேப் ஃப்ரம் மீ. நவ் இட்'ஸ் டைம் டு தேங்க் ஆல் ஆஃப் யு ஃபார் ஃப்ளையிங் Go On Air ஏர்லைன்ஸ். வீ நவ் ரெடி ஃபார் யுவர் டெஸண்ட் இண்டு சென்னை வீ ஹோப் தட் யு ஆல் ஹட்ட அ ப்ளஷரபுல் அண்ட் என்ஜாயபுல் ஃப்ளைட் வித் அஸ். வீ விஷ் டு ஃப்ளை யு அகைன் வெரி சூன்.

கேபின் க்ரூவ் ப்ரீப்பர் ஃபார் லேண்டிங்.” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தவன் ஆதர்ஷைப் பார்க்க,

"ஆஷிக் எது பண்ணினாலும் யோசிச்சு...” என்று தொடர்வதற்குள் ஆஷிக், “ப்ளீஸ்டா எதுவும் சொல்லாத, அவ ஏற்படுத்தின வலி இன்னும் இருக்குடா. மறக்க முடியல, அவளும் என்னை மறக்க கூடாது.” என்றவனுக்கு பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான் ஆதர்ஷ்.

வாஷ் ரூமில் ஜியா, "ஆஷிக் இங்கேயா? என்ன இது சோதனை? ச்ச... எந்த துரோகிய வாழ்க்கையிலயே பார்க்க கூடாதுனு நினைச்சேனோ, அவனை என் முதல் நாள் வேலையிலயே, அதுவும் இப்படி ஒரு சந்தர்ப்பத்துல பார்க்க வேண்டியதா ஆகிடுச்சே...” என்றவாறு, தன் கண்களில் நீர் வழிய தன் நிலையை நினைத்து நொந்து கொண்டிருந்தாள்.
***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்.


நிலவே 2
 
Last edited:
Top