- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 12
ஐந்து வருடங்களாய் உருகி உருகி காதலித்து, விதியின் மதியால் ஆறு வருடங்களாய் பிரிந்து இன்று மீண்டும் சந்திக்கும் பொழுது கூட அவளது கண்களில், அதே காதலை பார்த்தவனுக்கு எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஆறு வருடங்களின் பிரிவெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றியது.
மெல்ல இரு கைகளில் இருந்து அவனது சட்டையைக் கழற்ற, தனது வெற்று மார்பில் ஜியாவின் மென்மையான விரல்கள் பட்டதில் அவனுக்குள் மின்சாரமே பாய, நூலளவு இடைவெளியில் அவளது மூச்சு காற்று, மேலும் தன் தேகத்தின் உஷ்ணத்தைக் கூட்ட, உணர்ச்சியின் போரில் சிக்கிக்கொண்டவன், உயிரோடு உயிர் கோர்க்காமல், சின்னச் சின்னத் தீண்டல்கள் கூடக் காதலில் இன்பம் அளிக்கும் என்பதை அன்று முதன்முதலாய் உணர்ந்தான்.
இதழின் சேர்க்கையைத் தாண்டி மனதின் சேர்க்கையின் சுகத்தை உணர்ந்தவனுக்கு இந்த நொடி மறுஜென்மமாய் தோன்றியது.
ஆஷிக் காதலில் மூழ்கிருந்த வேளையில் ஜியா, "எங்க வலிக்குது?” என்று கேட்டவாறு அவனைப் பார்க்க, அவன் தன்னையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சில நொடிகள் யோசித்தவள் சட்டென்று அவனது முதுகைத் தட்ட, எந்தவித துடிப்பும் இன்றி புன்னகையோடு,
"என்ன?” என்று ஆஷிக் கேட்டதும் அவன் வலி என்று கூறியது அனைத்தும் நடிப்பு, தன்னை ஏமாற்றுகிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிய,
"எங்க வலிக்குதுனு கேட்டேன்?” என்று அவள் கோபத்தில் பற்களைக் கடித்தவாறு கேட்ட பிறகே தன்னிலையை அடைந்தவன்,
"ஆமா வலிக்குது முதுகுல...” என்று வலிப்பது போல நடித்து குப்புற படுத்தான்.
"ஆஷிக் உனக்கு ரொம்ப வலி இருக்கும்னு நினைக்கிறேன், இதுக்கு இந்த மருந்தெல்லாம் கேட்காது. நான் சுடுதண்ணியால ஒத்தடம் குடுத்துட்டு, ஆயில் மசாஜ் பண்றேன் வலியெல்லாம் சரியாகிரும். நீ இப்படியே படுத்துக்கோ, நான் மசாஜ் பண்றதுக்குத் தேவையானதை எடுத்துட்டு வரேன்.” என்று அவள் சொன்னதும் உள்ளம் குளிர்ந்தவன்,
"ஓகே பேபி...” என்று கண்சிமிட்டிவிட்டு நன்றாகக் குப்புற படுத்துக்கொண்டு தனக்குள்,
‘அச்சோ என் பேபி இவ்வளவு மக்கா இருக்குதே? நான் நடிக்கிறத கூடக் கண்டுபிடிக்கத் தெரியலை. இன்னும் அப்படியே இருக்கா, நீ யாருடா ஆஷிக்காச்சே, உன் நடிப்புக்கு மயங்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன?’ என்றவாறு ஆஷிக் தன் காலை ஆட்டிக்கொண்டிருக்க,
ஆஷிக்கை என்ன செய்வதென்று யோசித்த ஜியாவிற்கு ஒரு யோசனை வர, சட்டென்று தியாவிற்கு அழைப்பு விடுத்தவள் தியாவிடம், “தியா!"
"ஆமா, நீங்க யாரு?"
"ஜியா” என்றதும் கோபம் கொண்ட தியா,
"என்னடி வேணும் உனக்கு? ஏன் கால் பண்ணிருக்க?"
"உனக்கு உன் பேபி வேணும்னா, சீக்கிரமா என் வீட்டுக்கு வா."
"ஆஷிக்கையா சொல்ற?"
"ஆமா, ஏன் உனக்கு வேற பேபி இருக்காங்களா என்ன?"
"என்னாச்சு? அவன் உன் வீட்ல என்ன பண்றான்?"
"கேள்வி கேட்காம நீயே வந்து பாரு, அவனுக்கு என்னாச்சு, இங்க என்ன பண்றான்னு?" என்றவள் தன் ஃபோனை வைத்துவிட்டு,
ஆதர்ஷ்க்கும் கால் செய்து உண்மையைக் கூற, இருவரும் அவனைக் காண ஜியாவின் வீட்டிற்கு வந்தனர்.
உள்ளே வந்த தியா வேற எதுவும் பேசாமல், "ஆஷிக் எங்கே?” என்று கேட்க,
"வாங்க” என்றவாறு அவர்களைத் தன் அறையினுள் அழைத்துச் செல்ல அங்கே ஆஷிக்,
"ஜியா எவ்ளோ நேரம்? கம் ஆன்... வலிக்குதுடா செல்லம்...” என்று கொஞ்சிக் கொண்டிருக்க,
"ஆஷிக்!” என்றவாறு தியா அவனது அருகில் சென்று, "என்னாச்சு?” என்று கேட்க ஆஷிக், தியாவைக் கண்டதும் குழப்பத்தில் இருக்க,
ஜியா, “அவருக்குக் கீழ விழுந்து முதுகு பக்கத்துல பயங்கரமான அடி. எழும்பக் கூட முடியாம கஷ்டப்படுறாரு. அதான் உன்னைக் கூப்பிட்டேன். மே பீ உன் கை பட்டா கேப்டன் சாருக்கு சீக்கிரமா குணமாகலாம்ல?” என்று கூறி ஆதர்ஷைப் பார்த்து கண்ணசைக்க பதிலுக்கு ஆதர்ஷ்,
"எஸ் ஜியா, நீ சரியா சொன்ன. ஒருவேளை தியாவால முடியலைனா நான் வேணும்னா மசாஜ் பண்றேன்.” என்றவன் ஆஷிக்கின் அருகில் சென்று,
"எங்கடா அடி?” என்று கேட்க,
சட்டென்று படுக்கையில் இருந்து எழும்பியவன் ஆதர்ஷிடம், "ஒரு அடியும் இல்லை."
"அடி பட்டுருக்குனு ஜியா சொன்னாளேடா..."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை வா.” என்றவன், தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த ஜியாவைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, அவனைப் பின்தொடர்ந்து சென்ற தியா, ஜியாவை பார்த்து முறைக்க,
ஜியா அவளிடம், "ஹாவ் சம் கிரிப் ஆன் யுவர் பாய் ஃப்ரண்ட்.” என்று கூற தியா, ஜியாவைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்து சென்றாள்.
ஆதர்ஷ் ஜியாவிடம், "சாரி ஜியா, அவன் சின்னப் புள்ள மாதிரி எதாவது பண்ணுவான். ஆனா மனசுல எதுவும் இருக்காது. எதுவும் நினைச்சுகாத..."
"பரவாயில்ல ஆதர்ஷ், நான் இந்த ராத்திரில போய் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன், ஆனா எனக்கு வேற வழி தெரியலை."
"பரவாயில்ல ஜியா, எனி டைம் ஃபார் யு.” என்றவன் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் ஆஷிக் உள்ளே வர,
ஆதர்ஷ் அவனிடம், "என்னடா?” என்று கேட்க,
ஆஷிக் அவனிடம், "இப்படியேவா வர முடியும்? போ, வரேன்.” என்று கூறிவிட்டு உள்ளே வந்து தன் ஷர்ட்டை தேட பின் ஜியாவின் அருகில் வந்தவன், "நான் வேண்டாம், என் ஷர்ட் மட்டும் வேணும்.” என்றவாறு அவளது தோளில் இருந்த தன் ஷர்ட்டை எடுத்தவாறு அங்கிருந்து செல்ல, அவன் சென்றதும் ஜியா நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் தன் கட்டில் மீது இரு கரங்களையும் ஊன்றியவாறு, தன் கண்களை மூடி அமர்ந்திருக்க, சட்டென்று உள்ளே வந்த ஆஷிக் அவளது மூக்கில் தன் இதழைப் பதித்து,
"என்னை ஏமாத்துனல அதுக்கு...” என்று கண்சிமிட்டிவிட்டு அங்கிருந்து ஓட,
அவனது செய்கை ஜியாவிற்குப் புன்னகையை வரவழைத்தது. ஆனால் அது சில மணி துளிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஜியா, ஆஷிக்கின் செய்கையை நினைத்து புன்னகைக்க, மறுநொடி அவன் தனக்குச் செய்ததாய் நினைத்த துரோகம் ஞாபகத்திற்கு வர, அவளது முகத்தில் மீண்டும் கோபம் குடிகொண்டது.
***
நிலவே 13
சாயங்கால வேளையில் தன் பணியில் இருந்து திரும்பிய ஆஷிக் வாஷ்ரூமிற்கு செல்லும் வழியில், தன் செல்ஃபோன் சிணுங்கியதும் அட்டென்ட் செய்தவன்,
"ஹாய்மா, என் அம்மா செல்லம் எப்படி இருக்கீங்க?" என்று கொஞ்ச,
"என்னடா ஹாய்? ஒரு நாளாவது ஃபோன் பண்ணி அம்மா எப்படி இருக்கீங்க, சாப்டீங்களானு உனக்குக் கேட்க தோனுச்சாடா? உனக்கு வேலைனு வந்துட்டா யாரையும் நினைக்கிறது இல்ல, அப்படியே உங்க அப்பா மாதிரி...” என்று கூற அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன், “இப்போ எதுக்கு அந்த ஆள பத்தி பேசுறீங்க?” என்று தன் வார்த்தைகளில் அனலைத் தெறிக்கவிட,
அவர் அவனிடம், "அப்படி சொல்லாதடா, அவரு பேசிருந்தாரு நீ அவர் சொல்ற எதையுமே கேட்க மாட்டிக்கியாமே? அவர் பேச்ச கேளுடா."
"அம்மா...!"
"டேய் நான் ஒன்னும் முழுசா அவரோட பிஸ்னஸ பார்த்துக்கச் சொல்லல, அப்போ அப்போ உனக்கு டைம் கிடைக்கும் போது அப்பாக்கு உதவியா இருனுதான்...” என்று அவர் தொடர்வதற்குள்,
"இப்போ நான் உங்ககிட்ட பேசவா இல்லை ஃபோனை கட் பண்ணவா?" என்று அவன் கூறவும்,
"டேய் வச்சுராத, உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? நான் சொல்ல தானே செய்யுறேன், ஒரு தாய் இதுகூடச் சொல்ல கூடாதா?"
"மா எனக்கு வேலை இருக்கு."
"எனக்கும் வேலை இருக்குடா, நானும் இங்க சும்மா இல்லை. ஆயிஷாவை பொண்ணு பார்க்க அடுத்த வாரம் வராங்க. நீ, ஆதர்ஷ், தியா மூணு பேரும் வந்துருங்க, இதைச் சொல்லதான் நான் அடிச்சேன்."
"பொண்ணு பார்க்கவா? நான் யாரையும் வர சொல்லலையே, உங்களுக்குத் தெரிஞ்ச இடமா?"
"உங்க அப்பாவோட நண்பரோட பையன்.” என்று அவர் கூற, அதற்கு ஆஷிக்கிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்க,
"ஆஷிக் பேசுடா"
"என்ன பேசுறது? அதான் எல்லாம் முடிவு பண்ணிடீங்கள்ல, அப்புறம் ஏன் என்னை கூப்புடுறீங்க?"
"நீ வரமா எப்படி..."
"அந்த ஆளு வருவாரா?"
"உன் அப்பாவா?"
"அதான்..."
"அவர் வராம எப்படி?"
"அப்போ ஆதர்ஷும் தியாவும் வருவாங்க."
"டேய் பொண்ணோட அண்ணன் எங்கேனு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?"
"அப்போ அந்த ஆள வரவேண்டாம்னு சொல்லுங்க.” என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு ஆஷிக் பேசிக்கொண்டிருக்க,
அவன் பின்னால் வந்த ஜியா மேலும் தொடர முடியாமல் அவதி பட, "வழி விடு.” என்று அவள் சிடுசிடுக்க,
"பார்த்தா தெரியலை, ஃபோன் பேசிட்டு இருக்கேன்."
"அதைத் தள்ளி இருந்து பேசலாம்ல?"
"முடியாது” என்று ஆஷிக் கூற,
ஆஷிக்கின் தாய் ஹாஜரா, “என்னடா முடியாது?” என்று கேட்க,
"ஐயோ அம்மா நீங்க இல்லை, இது வேற.” என்றவன் ஃபோனை ஹோல்டரில் போட்டுவிட்டு,
"என்னடி எங்க போனாலும் பின்னாடியே வர?"
"நானா? நீதான் என் முன்னாடி போற?"
"ஏய், வெயிட்... நேற்று நைட் நடந்ததை வச்சு நீ ஒன்னும் என் மேல...” என்று அவன் விஷமமாய் கேட்க,
"ஷட் அப்!” என்று வார்த்தையாலே சுட்டெரித்தவள், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல,
அவள் பின்னாலே சென்றவன் தன் தாயிடம், "ஒன்னும் இல்லைமா, என் வழியில ஒரு காட்டு வெள்ளை பூனை குறுக்க வந்திருச்சு, அதை ச்சீ போனு துரத்தி விடுறதுக்கு நேரம் ஆகிட்டு.” என்று ஜியாவிற்கு கேட்குமாறு சத்தமாகக் கூறி,
அவளது காதில், "மியாவ்...” என்று கத்த, அவள் திரும்பி முறைக்கும் நேரம் தன் தாயிடம்,
"சொல்லுங்கமா, அந்தப் பூனையா அது லேடிஸ் வாஷ்ரூம்குள்ள போயிடுச்சு.” என்று கூறி சிரிக்கவும் ஜியா, ஆஷிக்கைக் கண்டு முறைத்தவாறே வாஷ்ரூமுக்குள் நுழைந்தாள்.
அவனது தாய் குழப்பமாய், "என்னடா சொல்ற, பூனை எப்படி லேடிஸ் வாஷ்ரூம்குள்ள போச்சு?"
"ம்ம்... அது லேடி பூனைமா... இப்போ உனக்குப் பிரச்சனை நானா இல்லை அந்தப் பூனையா?"
"நீதான்டா."
"ம்ம் சொல்லுங்க."
"அதான்டா, நீ வராம எப்படி இருக்குறது? ஒரு தங்கச்சி, வர்றதுக்கு என்ன?"
"இப்போ எதுக்கு ஆயிஷாவை உள்ள இழுக்கிறீங்க?"
"பின்ன என்ன, நீ வந்து ஒரு ஓரமா நிக்கப் போற... அவர்கிட்ட நீ பேசக்கூட மாட்ட. அப்புறம் என்னடா? அம்மாக்காக வேண்டாம், ஆயிஷாக்காக வாடா. நீ வரமாட்டனு சொன்னா அவ கஷ்டப்பட மாட்டாளா?"
"சரிமா, அவகிட்ட எதுவும் சொல்லாதீங்க, நான் வரேன். ஆனா ஒரு கண்டிஷன், ஆயிஷாக்கு எல்லாமே நான்தான் செய்வேன், அந்த ஆளு எதாவது சீன் போட்டாரு, அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்."
"நீ முதல்ல வா, மற்றது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்."
"சரிமா, நீங்க உடம்ப பார்த்துக்கோங்க, வச்சிடுறேன்.” என்று தன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வாஷ்ரூமிற்குள் நுழைந்த மறுநொடி,
ஆஷிக், “எனக்குனு ஒரு ஜாப் என் விருப்பப்படி அமைஞ்சிட்டா, அந்த ஆளுகிட்ட இருந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் விடுதலை கிடைச்சுரும்னு நினைச்சா, எங்க போனாலும் பின்னாடியே வராரு. இந்த அம்மா வேற தங்கச்சி விஷயத்துல எதுக்கு இவரை இன்வால்வ் பண்றாங்க? என் மொத்த வாழ்க்கையும் இந்த ஆள்கூடச் சண்டை போட்டே முடிஞ்சிரும் போல? அந்த ஆள பார்க்கவே பிடிக்கல, எப்படி அவர்கூட ஒருநாள் ஸ்பென்ட் பண்ண போறேன்னு நினைச்சாலே...” என்று தன் தலையைப் பிடித்தவன் பின்பு,
"ஆஷிக் நோ நோ... டோன்'ட் கெட் ஆங்கிரி, யு ஷுட் பீ கூல் யு ஆர் டூயிங் திஸ் ஒன்லி ஃபார் யுவர் ஃபாமிலி.” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி, தண்ணீர் கொண்டு தன் முகத்தை நான்கைந்து முறை கழுவ, அந்த நொடி தன் தந்தை மீது அவனுக்கு இருந்த கோபம் சற்றுத் தளர்ந்தாலும், அவர் மீது உள்ள வெறுப்பு கொஞ்சம் கூடக் குறையவில்லை.
கொஞ்ச நேரம் தன் கண்களை இறுக்க மூடிகொண்டவன் தன் குழந்தைப் பருவத்தை நினைவில் கொண்டான். அப்பொழுது ஆஷிக்கிற்கு ஒரு எட்டு வயது இருக்கும், அன்றிரவு அவனது தாய்க்கும் தந்தைக்கும் எதோ பெரிய வாக்குவாதம் நடக்க, சத்தம் கேட்டு தன் கண்களைக் கசக்கியவாறே எழுந்து வந்தவன், தன் தாயை தன் தந்தை அடிப்பதைப் பார்த்து குறுக்கே வந்து, “அப்பா, அம்மாவ அடிக்காதீங்க.” என்று சொல்ல,
குடிவெறியில் இருந்த அவர், "முளைச்சு மூணு இலை விடல, என்னையே எதிர்கிறியா உன்னை...” என்றவர், கோபத்தில் அவனைத் தள்ளிவிட, அவர் தள்ளிய வேகத்தில் டேபிளில் மோதி நெற்றியில் ரத்தம் வழிய கீழே விழுந்தான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனை ஓடிச்சென்று தன் மடியில் ஏந்திய ஹாஜரா தன் கணவரிடம்,
"என்ன பண்ணணுமோ பண்ணுங்க, எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணுங்க. தயவு செஞ்சி இங்க இருந்து கிளம்புங்க.” என்றவர் கண்ணீர் மல்க ஆஷிக்கை இறுக்க அணைத்துக் கொண்டார்.
கண்களில் நீர் வழிந்தவாறு தன்னையே அறியாமல் தன் வலது நெற்றியில் கை வைத்தவனுக்கு அன்று ஏற்பட்ட அந்த வடு தட்டுப்பட இப்பொழுதும் வலித்தது.
வெளியில் உள்ள காயம் வேண்டுமானால் ஆறிருக்கலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வலி இன்னும் அவனது உள்ளத்தில் ஆறாத காயமாகவேதான் இருக்கிறது.
அன்று தன் தந்தையின் மேல் ஏற்பட்ட வருத்தம் நாளடைவில் கோபமாக உருவெடுத்து இன்று வெறுப்பாக வளர்ந்து நிற்கிறது. இந்த வெறுப்பு நீங்குமா? குறையுமா? இல்லை நீடிக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தன் பணியை முடித்த ஜியா ஏர்போர்ட்டில் இருக்கும் பார்க்கிங் ஏரியாவிற்கு டாக்ஸியில் செல்வதற்காக வந்தாள்.
அப்பொழுது அங்கே நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் டாக்ஸியில் அமர்வதற்காக டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அவருக்குத் திடீரென்று இடுப்பு வலி வர வலியில் அலறினார்.
வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த ஜியாவின் கண்களில் நீர் வழிய, மனதில் ஒருவித படபடப்பு ஏற்பட முகமெல்லாம் வியர்த்து கொட்டி கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
சுற்றி இருந்த அனைவரும் ஒன்று கூடி அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய, ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் சிலரும் உதவிக்கு வந்தனர். அப்பொழுது அவர்களில் ஒருவர் ஜியாவைக் கண்டு,
"அதோ அவங்க ஒரு டாக்டர், அவங்கள கூப்பிடலாம்.” என்று ஜியாவைக் கை காட்டி அழைக்க,
வேறு வழியின்றித் தயக்கத்துடன் சென்றவளிடம் சுற்றி இருந்தவர்கள்,
"மேம் இந்தப் பொண்ணு வயிறு வலிக்குதுனு சொல்றாங்க, கொஞ்சம் என்னனு பாருங்க.” என்று கூற, தயக்கத்துடன் அந்தப் பெண்ணை நெருங்கியவள் அவளை உற்று பார்க்க, அந்தப் பெண் ஜியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு,
"மேடம் ப்ளீஸ்... என் குழந்தையைக் காப்பாத்துங்க.” என்று கண்ணீர் மல்க வலியில் துடித்தவாறே கேட்க,
ஜியாவின் கண்முன்னே, ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் தன் இருக்கரங்களையும் பற்றிக்கொண்டு, "உங்களை நான் நம்புறேன்.” என்று தன் கடைசி மூச்சை இழுத்தவாறு, தன் கரத்தில் மடிந்து போன பழைய நினைவுகள் அலை போல வந்து பாய மனதிற்குள் இடி இடித்தது போல இருந்தது.
"மேடம் ப்ளீஸ்...” என்று பலமுறை முறையிட்ட பிறகு மூடியிருந்த தன் கண்களைத் திறந்து தன்னிலைக்கு வந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட, பலமுறை யோசித்த பிறகு பெருமூச்சு விட்ட ஜியா,
"லேபர் பெயின் வந்திருக்கு, உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் ஆம்புலன்ஸ்...” என்றதும் கூட்டத்தில் ஒருவர்,
"ஃபோன் பண்ணியாச்சு, இப்போ வந்திரும்.” என்று சொல்லி முடிக்கவும் ஆம்புலன்ஸ் வர, அந்தப் பெண்ணை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
மருத்துவமனைக்குப் போகும் வழியெல்லாம் எப்படியாவது இந்தப் பெண்ணையும் குழந்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே சிந்தனையை மட்டும் தனக்குள் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டாள்.
ஹாஸ்பிடல் வந்ததும் மெல்ல வீல் சேரில் அமரவைத்து வலியில் கதறிய அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறியவாறே அழைத்துக் கொண்டு சென்று, அங்குள்ள நர்ஸிடம் ஜியா விஷயத்தைக் கூற அவர், “இப்போ தானே வலி வந்திருக்கு, அவங்கள உள்ள படுக்க வைக்கலாம். டாக்டர் மீட்டிங் போயிருக்காங்க, டூட்டி டாக்டர்ஸ் இன்னும் வரல.” என்று அலட்சியமாய் கூற, தன் பார்வையாலே அந்த நர்ஸை சுட்டெரித்தவள்,
"தண்ணி குடம் உடைஞ்சிருச்சு, அப்படினா குழந்தை எப்போ வேணும்னாலும் பிறக்கலாம், நார்மல் டெலிவரி சிட்டுவேஷன தாண்டிட்டாங்க, வேற வழியே இல்லை ஆபரேஷன் பண்ணிதான் ஆகணும்."
"மேடம் டாக்டர் இல்லை."
"நானும் ஒரு டாக்டர், எனக்கு சர்ஜெரி பண்ண தெரியும்.” என்று ஜியா கூற,
"மேடம் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க, டாக்டர் வெளியில போயிருக்காங்க எங்களால எந்த முடிவும் எடுக்க முடியாது."
"ஒரு உயிரை விட உங்களுக்கு முடிவெடுக்கிறது பெருசா போச்ச?, நான் ஒரு டாக்டர்னு சொல்றேன், இதுக்குமேலயும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா உங்க டாக்டரை வர சொல்லுங்க. ஆனா அவரு வர்ற வரைக்கும் ஒரு டாக்டரா என்னால பொறுமையா இருக்க முடியாது.” என்றவள்,
"இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல இத்தனை பேஷண்ட்ஸ் இருக்காங்க, ஆனா அவங்க எல்லாரையும் விட்டுட்டு உங்க டாக்டர் வெளியில போயிருக்காரா? என்ன ஹாஸ்பிடல் நடத்துறீங்க, இப்போ நீங்க சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ண போறீங்களா, இல்லை நான் உங்க மேல புகார் கொடுக்கவா?” என்றதும், அந்த நர்ஸ் வேறு வழியில்லாமல் ஆபரேஷன்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள்.
ஜியா அறுவை சிகிச்சைக்காக தேவையான மருந்துக்கள் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அலைபேசியில் பேசியவாறே ஆறடி உயரத்தில், திடமான உடற்கட்டுடன், நேர்த்தியான உடையில், கம்பீரமான நடையில் ஒருவன் நடந்து வர, ஹாஸ்பிடலின் வரவேற்பு அறையில் இருந்த பெண் உட்பட அங்கிருந்த ஊழியர்கள் எல்லாரும் எழுந்து அவனுக்கு மாலை வணக்கம் தெரிவிக்க, அனைவருக்கும் தன் கண்களாலே பதிலளித்தவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும் நேரம் பார்த்து, வேகமாக ஓடி வந்த அந்த நர்ஸ் நடந்த அனைத்தையும் தெரிவித்து, ஜியா இருக்கும் இடத்தையும் கூறிவிட்டு, அவன் போ என்கிறவாறு கையசைத்ததும் அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் ஜியாவைத் தேடி சென்றவன் கண்களில் கோபம் மிளிர ஜியா இருக்கும் அறைக்குள் செல்ல முனையும் நேரம், கண்ணாடியின் வழியே ஜியாவைப் பார்த்தான்.
அவ்வளவு நேரம் கோபமாக இருந்தவனின் கண்களில் திடீர் வானிலை மாற்றம் போல, கோபம் தணிந்து, இதழோரம் புன்னகை வழிந்தது.
அவனது முகத்திலோ பல நாள் தேடுதலை திடீரென்று கண்டுகொண்ட மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.
ஆபரேஷனுக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க, ஜியா ஆபரேஷன் அறைக்குள் நுழைந்து, வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணிடம்,
"உங்க வீட்ல உள்ளவங்களுக்குத் தகவல் சொல்லிட்டேன், நீங்க கவலைப்படாதீங்க, தைரியத்தை விட்றாதீங்க.” என்று ஆறுதல் கூறிவிட்டு, மயக்க ஊசியை அந்தப் பெண்ணிற்குப் போட, அந்தப் பெண் பயத்தில் ஜியாவின் கைகளைப் பற்றிக்கொள்ள, ஜியா அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தவாறு, "ப்ளீஸ் நீங்க பயப்..." என்று தொடரும் முன்,
"எஸ் பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்.” என்று கணீர் குரல் ஒன்று கேட்க, அறுவை சிகிச்சை அறையின் கதவைத் திறந்துகொண்டு ஆப்ரேஷன் செய்யும் போது உடுத்திக்கொள்ளும் உடையையும் முகத்தில் மாஸ்க்கையும் அணிந்துகொண்டு, ஒரு ஆண்மகன் கம்பீர நடையுடன் ஜியாவின் அருகில் நெருங்கி வர வர, ஜியாவின் முகத்தில் ஒளி மறைந்து இருள் சூழ்ந்துகொண்டது. அந்த மயக்க ஊசியின் தாக்கத்தில் அந்தப் பெண் தன்னிலை மறக்க, முகத்தை மூடிக்கொண்டு வந்த அந்த நபர், "ஹலோ மிஸ் ஜியா!” என்று கூறவும்,
ஜியாவின் கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அதை ரசித்தவன் மெல்ல ஜியாவின் அருகில் நெருங்கி வந்து, "ஐயம் டாக்டர்...” என்று கூறுவதற்குள் ஜியா படபடத்த குரலில்,
"ஜீவா...” என்று கண்களில் பயம் சூழ்ந்துகொள்ளக் கூறினாள். அதைக் கேட்டவன் சிந்திய புன்னகை அவனது கண்களில் தெரிய,
தன்னை அறியாமலே பின்னால் சென்ற ஜியா டேபிளில் மோதி விழ போகும் நேரம் பார்த்து தன் கரம் கொண்டு அவன் பிடிக்க, முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, தலை சுற்றி அவன் மேலே விழுந்தாள்.
***
நிலவே 14
தன் மேல் விழுந்தவளைக் கண்டவனின் கண்களில் வஞ்சக புன்னகை குடிகொண்டது. சில நொடிகளுக்குப் பிறகு ஆபரேஷன் அறையில் இருந்து வெளியே வந்தவன்,
வெளியே காத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் உறவுக்காரரிடம், ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள், மயக்கம் தெளிந்ததும் பார்க்கலாம் என்று கூறிவிட்டு, வேகமாகத் தன் நடையைச் செலுத்தியவனின் கால்கள் சென்றது டாக்டர் ஜீவா MBBS MS என்ற பெயர் பலகை இருக்கும் அறைக்குள்.
அறைக்குள் அவன் நுழைந்த கம்பீரமே இது அவனுக்கான அறை என்பதைத் தெரிவித்தது.
உள்ளே சென்றவன் மயக்க நிலையில் இருந்த ஜியாவையே கண் இமைக்காமல் பார்த்துவிட்டு, மெலிதாய் புன்னகைத்து தன் மொபைலில் அவளது புகைப்படத்தை எடுத்தவன், வாட்சப் மூலமாய் யாருக்கோ அன்னுப்ப, அவன் அனுப்பிய சில நொடியில் அந்த நபரிடம் இருந்து அழைப்பு வர, அழைப்பைக் கண்டு சிரித்தவன் கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து,
"நான் சொன்ன போது நம்பலை, இப்போ பயந்து போய் கால் பண்ற?"
"ஆமாடா, இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?"
"நான்தான் சொன்னனே..."
"அவ பழைய மாதிரி நார்மல் ஆகிட்டாளா என்ன? மறுபடியும் சர்ஜரி பண்ண ஆரம்பிச்சுட்டாளா?"
"நார்மல் எல்லாம் ஆகல, என்னைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விழுந்திட்டா."
"இருக்கட்டும், ஆனாலும் சர்ஜரி பண்ண ரெடியா இருந்தனால தானே இவ்வளவும் நடந்திருக்கு. அவ பழைய ஃபார்ம்க்கு வந்துட்டா அவ்வளவுதான்."
"வரமாட்டா, அவளுக்கு நம்ம மேல பயம் இருக்கிறவரைக்கும் அவ நாம சொல்றபடியெல்லாம் கேட்குற ஒரு பொம்மை. அந்தப் பயத்தை நாம அப்போ அப்போ காட்டணும், இவ்வளவு நாள் அதைப் பண்ணாம போனதுதான் தப்பு."
"எனக்கு என்னமோ பண்ணுது..."
"டேய் அவளோட ட்ரம்ப் கார்ட் நம்மகிட்ட இருக்கிற வரைக்கும் நோ டென்ஷன், நீ ஊருக்கு வா அப்புறம் பேசிக்கலாம்."
"ஓகே ஜீவா, அவளை விட்றாத. முடிஞ்சா அவ கதையை க்ளோஸ் பண்ணிரு."
"அப்புறம் மேல சொல்லுடா, என்னைப் போலீஸ் புடிச்சுட்டு போகட்டும், நான் கம்பி எண்ணறது இப்படி எல்லாத்தையும் சொல்லு. ஒழுங்கா ஒரு தப்பை தடயம் இல்லாம செய்ய வழியில்லை, இதுல நீயெல்லாம் ஐடியானு எதையும் தராத புரியுதா? அவளைக் கொலை பண்ணணும்னா அன்னைக்கே பண்ணிருக்கலாமே? ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ணணும்? ஏற்கனவே ஒரு விஷயத்தைப் பண்ணி கஷ்டப்பட்டதெல்லாம் போதும். அப்புறம் இவளையும் கொலை பண்ணி ஒருவேளை மாட்டிக்கிட்டா அவ்வளவுதான், மறுபேச்சே கிடையாது நம்மளை நாமளே குத்திட்டுச் சாகுறதுதான் ஒரே வழி.
நாம சாகாட்டாலும் சாவு நம்மளை தேடி வரும், என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா, ஏற்கனவே இந்த ஐடியாவை குடுத்துட்டு சாவோட விளிம்பு வர நீ போய்ட்டு வந்தது உனக்கு மறந்துட்டுனு நினைக்கிறேன், நியாபகப்படுத்தணுமா என்ன?"
"சாரிடா"
"அவளுக்கு நாம தள்ளி இருந்தே டார்ச்சர் குடுக்கணும், மெண்டல் டார்ச்சர் குடுக்கணும். சாகவும் முடியாம வாழவும் முடியாம அவ தவிக்கணும்."
"சரியா சொன்ன."
"ம்ம் சரி, எதோ ஃபோன் அடிக்குது அவளோட ஹாண்ட் பேக்ல இருந்து சத்தம் கேட்குது. நான் அப்புறம் பேசுறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.
ஜியாவின் கைப்பையில் இருந்து சிணுங்கி கொண்டிருந்த அலைபேசியை எடுத்தவன் ஸ்க்ரீனில், ஹோம் காலிங் என்று வருவதைப் பார்த்து கட் செய்து, ஜியாவின் மொபைல் ஸ்க்ரீனில் அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தவன், சில நொடிகள் யோசித்துவிட்டு, அவளது அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து, அவளது மொபைலில் தன்னையும் அவளையும் சேர்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டு இந்தப் புகைப்படத்தை ஸ்க்ரீன் சேவராய் செட் செய்து, அவளது மொபைல் நம்பரையும் நோட் செய்தவன்,
"பெர்ஃபெக்ட், யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்! எத்தனை நாள் எங்க தூக்கத்தைக் கெடுத்த? இப்போ நான் குடுக்கப் போற டார்ச்சர்ல நீ தூங்கவே கூடாது.” என்று கூறும் பொழுதே, அவனது பேச்சில் ஒருவித அரக்கத்தனம் தலை தூக்கியது.
அங்கிருந்து செல்ல போனவன் தன் உதட்டில் தளும்பிய புன்னகையோடு அவள் பக்கம் திரும்பி, தன் கண்களால் அவளை விழுங்குவது போலப் பார்த்து,
"மதுவையும் மாதுவையும் நாமதான் தேடி போகக் கூடாது, அதுவா வந்தா..." என்று சிரித்தவனின் சிரிப்பில், அவனது வக்கிரபுத்தி தெளிவாகத் தெரிந்தது.
அதே வெறியோடு அவளது இதழ் நோக்கி குனிவதற்குள் ஜியாவின் கண்கள் அசைய, அவள் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு கொள்வதை உணர்ந்தவன்,
உன்னைப் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்பது போலப் பார்த்து, தன் கண்களாலே அவளை வேட்டையாடிவிட்டு தன் அறையை விட்டுக் கிளம்பினான்.
சில மணி நேரத்துளிகளுக்குப் பிறகு கண் முழித்தவள், தன் நெஞ்சைப் பிடித்தவாறே எழுந்து அமர, அவளுக்கு ஆப்ரேஷன் அறையில் நடந்தது தன் பழைய கசப்பான நிகழ்வுகள் என்று அனைத்தும் நினைவிற்கு வர, சுற்றும் முற்றும் பார்த்தவள், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடினாள். இதை அனைத்தையும் தூரமாகக் கவனித்துக் கொண்டிருந்த ஜீவா அதே சிரிப்புடன், "தப்பிச்சுட்டோம்னு ஓடுறியா, ஓடு ஆனா நீ எங்க ஓடுனாலும் என்கிட்டதான் வந்தாகணும்.” என்றான் அழுத்தமாக.
ரோட்டில் எந்த ஆட்டோவும் நிற்காமல் போகப் பின்னால் திரும்பி தன்னை யாரும் துரத்துகிறார்களா என்று பார்த்தவாறே பதற்றத்துடன் ஜியா சென்றாள்.
அப்பொழுது ஜியாவின் செல்ஃபோன் தன் இருப்பிடத்தைக் காட்ட, பெயர் இல்லாத நம்பர் வரவும் அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட,
மேலும் அவளது அலைபேசி சிணுங்க, இந்தமுறை வாட்சப்பில் குறுஞ்செய்தி வர, கைகள் நடுநடுங்க தட்டிப் பார்த்தவளின் கண்களில் முதலில் பட்டது, "அவ்வளவு சீக்கிரமா நீ தப்ப முடியாது.” என்ற செய்தி அதைத் தொடர்ந்து மாண்டு போன ஒரு சிசுவின் புகைப்படம் இருக்க, முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, கைகள் வெடவெடக்க நின்றவளை மேலும் அச்சுறுத்தும் வண்ணமாய் வந்த வீடியோ மொத்தமாக ஜியாவைப் புரட்டிப் போட்டது.
மீண்டும் அலைபேசி சிணுங்க முன்பு வந்த அதே பெயர் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வர, ஒருமுறை அட்டென்ட் செய்யாததுக்குக் கிடைத்த தண்டனை அவளை உயிரோடும் புதைக்க, இந்தமுறை முதல் ரிங்கிலே அவசர அவசரமாய் அட்டென்ட் செய்தவள்,
எதிர்முனையில் பயங்கரச் சிரிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து, "ஐ லைக் இட்! என்ன என்னோட கிஃப்ட்டை பார்த்துட்டியா? எப்படி இருந்தது என் கிஃப்ட்? உனக்குப் பிடிச்சுருந்துச்சா? இன்னைக்கு இந்தச் சர்ப்ரைஸ் போதும்னு நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம் இனிமே நான் ஃபோன் பண்ணினா இக்னோர் பண்ணாத, எனக்கு அது சுத்தமா புடிக்காது. கிஃப்ட் இன்னும் கொடூரமா இருக்கும், அப்புறம் என் மேல வருத்தப்படக்கூடாது சரியா?
ஜியா டார்லிங் சர்ஜரி பண்ணணும்னு இனிமே ஆசைப்படுவ?” என்று அவன் கேட்டதற்கு ஜியா எந்தப் பதிலும் கூறாமல் இருக்க கோபமுற்றவன்,
"உன்கிட்டதான் கேட்குறேன், ஆன்ஸர் மீ.” என்று கர்ஜிக்க நடுங்கியவள், "இல்லை... இனிமே மாட்டேன் ஜீவா.” என்று கண்ணீர் பொங்க அவள் கூறினாள்,
அவன், "ஏன் செல்லம் அழுற? நான் கேட்டவுடனே பதில் சொல்லிருக்கலாம்ல... நான் கத்திருக்க மாட்டேன்ல? ஓகே பாய் டியர்.” என்று அவன் அலைபேசியைத் துண்டிக்க, ஜியா முற்றிலுமாய் உடைந்து போனதுக்கு அவளது வதனமே சாட்சியாகும்.
தன் கண்களில் நீர் வழிய எதோ பித்துப் பிடித்தவள் போல ரோட்டில் தன்னை மறந்து நெஞ்சம் படப்படக்க லாரி, பஸ்கள், கார், பைக் என்று பலவிதமான வாகனங்களுக்கு நடுவே உணர்ச்சியற்றவளைப் போல ஜியா நடந்து சென்று கொண்டிருந்தாள்.
தியா முன் சீட்டிலும் ஆதர்ஷ் பின்னாலும் ஆஷிக் காரை ஒட்டிக்கொண்டிருக்க அப்பொழுது தியா, "நேற்று ராத்திரி நீ அவ வீட்ல என்ன பண்ணிட்டு இருந்த?” என்று ஆஷிக்கிடம் கேட்க,
"அதான் சொல்றேன்ல, அவதான் கொஞ்சம் ப்ராப்ளம் வானு என்னைக் கூப்பிட்டா, நானும் இரக்கப்பட்டு போனேன். கடைசில பிளேட்டை மாத்திட்டா, நான் என்ன பண்றது? உனக்கே தெரியும்ல, யாரும் உதவினு கேட்டா என்னால ஹெல்ப் பண்ணாம இருக்க முடியாதுனு. உனக்கு சந்தேகமா இருக்குனா ஆதர்ஷ்கிட்ட வேணும்னா கேளு. என்னடா ஆதர்ஷ்?” என்றவாறு கண்ணாடி வழியாக ஆதர்ஷைப் பார்த்து கண்ணடிக்க,
"டேய் முன்னாடி பாரு.” என்று ஆதர்ஷ் கத்தியதில், முன்னே பார்த்தவன் தன் முன்னால் ஜியா வந்து கொண்டிருப்பதைப் பார்த்து சட்டென்று தன் ஸ்டீயரிங்கை திருப்ப, அது ஒரு போஸ்ட்டில் மோதி நின்றது.
அந்த சடன் பிரேக்கால் தியாவிற்கு மட்டும் சிறிது காயம் ஏற்பட, இந்த நிகழ்வால் மொத்த ட்ராபிக்கும் ஸ்தம்பித்து நிற்க, தன் சீட் பெல்ட்டை கழற்றிய ஆஷிக் கோபமாகத் தன் காரை விட்டு கீழே இறங்கி, தன்னை மறந்து நடந்து சென்று கொண்டிருந்த ஜியாவை அழைக்க, ஜியாவோ எதைப் பற்றியும் யோசிக்காமல் எதிரே வந்த லாரியை கூடப் பார்க்காமல் பித்துப் பிடித்தவள் போல நடந்து செல்ல,
அதைக் கண்டு பதறிய ஆஷிக், ஓடிச்சென்று அவளைத் தன் பக்கம் இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தன் மீது விழுந்த ஜியாவை ஏந்தியவாறே, அவனும் சாலையோரமாக விழுந்தான்.
ஆதர்ஷ், தியா அங்கே வர ஆதர்ஷ், ஆஷிக்கிடம், “ஆஷிக் எப்படிடா இருக்க?” என்று பதற்றமாய் கேட்க,
"ம்ம்..."
"பாரு ஆஷிக், எனக்கு எப்படி அடிபட்டிருக்கு?” என்று தியா தன் சிறு காயத்தைப் பெரிதாக்க, அதைக் கண்டுக்காத ஆஷிக், ஜியாவைப் பார்த்து,
"என்ன திருதிருனு பார்த்துட்டு இருக்க? அறிவு இருக்கா? இதென்ன உன் அப்பன் போட்ட ரோடா, உன் பாட்டுக்கு போற? ஜஸ்ட் மிஸ்... இல்லனா அடி பட்டு செத்து போயிருப்ப. பைத்தியமா நீ? பேசிட்டு இருக்கேன், பதில் சொல்லாமா அப்படியே நிக்கிற?” என்றவன், அவளது தோளைப் பிடித்து உலுக்க, அதில் தன் நிலையை அடைந்தவள் அவனைப் பார்த்து,
அவனது சட்டையைப் பற்றியவாறு, “ஆஷிக்... ஆஷிக்... எனக்குப் பயமா இருக்கு. அங்க அங்க...” என்றவள் கண்ணீர் மல்க, "எப்பவும் என் கூடவே இருப்பேன்னு சொன்னியேடா, ஏன் எனக்கு இப்படியொரு துரோகத்த பண்ணின? நீ என்னை விட்டுப் போனதாலதான் எனக்கு இப்படி ஒரு நிலைமை. நீ மட்டும் போகாம இருந்திருந்தா எனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? எனக்குப் பயமா இருக்கு, என்னை விட்டு போகாத ஆஷிக்...” என்றவள் பதற்றமுற்று மயக்கமாகி அவனது மார்பில் சாய்ந்தாள்.
ஜியாவின் நிலையைக் கண்டு பதற்றமுற்றவன் அவளைத் தன் கரத்தில் ஏந்தி, "ஆதர்ஷ் பல்ஸ் ரேட் ரொம்ப லோவா இருக்கு, ஹாஸ்பிடல் போகணும்.” என்று கூறிய மறுநொடி ஆதர்ஷ் ஹாஸ்பிடல் நோக்கி வண்டியை செலுத்த ஆஷிக், ஜியாவின் தலையைத் தன் மடியில் ஏந்தியவாறு தன் கண்கள் கலங்க,
ஜியாவின் இரு கரங்களையும் தேய்த்து விட்டவாறே மிகவும் பதற்றத்துடன், “ஜியா, ஜஸ்ட் ப்ளீஸ் ஓபன் யுவர் ஐஸ், உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.” கூற, அவனது குரலில் எங்கே ஜியாவிற்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம் தெரிந்தது.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 15, 16 & 17

Last edited: