- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 15
ஜியாவிற்கு உள்ளே டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் அளித்துக் கொண்டிருக்க, வெளியே ஆஷிக் சுவற்றில் சாய்ந்துகொண்டு தன் கண்களை மூடியவாறு, சற்று முன்பு ஜியா கூறியதையே நினைத்துக் கொண்டிருந்தான்.
அவனது காதில் அவள் கடைசியாக, "என்னை விட்டு போகாத ஆஷிக்..." என்ற கதறிய வரி மட்டும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, இன்னும் அவனுக்கு ஜியா மீதுள்ள காதல் குறையவில்லை என்பதற்கு ஆதாரமாக அவனது கண்களில் வழிந்த நீரே சாட்சி ஆகும்.
தியா ஆஷிக்கிடம், "ஆஷிக் அதான் ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டுட்டோம்ல, அவ வீட்ல உள்ளவங்ககிட்ட சொல்லிட்டு நாம கிளம்புவோம்.” என்று கூற,
ஆனால் அவள் கூறிய எதையும் தன் காதில் வாங்காத ஆஷிக், ஜியாவைப் பற்றிய கவலையிலே மூழ்கியிருந்தான்.
நண்பனின் மனதைப் புரிந்து கொண்டவனாய் ஆதர்ஷ் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, ஆஷிக்கின் அமைதி தியாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. வெளியே வந்த டாக்டரிடம் ஆஷிக்,
"ஜியா உடம்புக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என்று பதற்றம் ததும்ப கேட்டான்.
"இல்லை, அவங்க நல்லா இருக்காங்க. பேஷண்ட்டுக்கு நீங்க என்ன வேணும்?"
"நான் அவளோட ல..." என்றவனைத் தடுத்த தியா, "கூட ஒன்னா வேலை பார்க்கிறோம்.” என்று கூறி, ஆஷிக்கை கோபமாக பார்க்க அவனும் தயக்கத்துடன் ஆமாம் என்பதைப் போலத் தன் தலையை மட்டும் அசைத்தான்.
"வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா, பேஷண்டுக்கு சொந்தகாரங்க யாரும் வரலையா?"
"இல்லை, எதுவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க. அவங்க வீட்ல எல்லாரும் மும்பையில் இருக்காங்க, ஜியா உடம்புக்கு எந்தப் பிரச்சனை இல்லைல? அவங்க நல்லாதானே இருக்காங்க." என்று ஆஷிக் மீண்டும் பதற்றமாய் கேட்க,
அதற்கு மருத்துவர், "அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்காங்க. சரியா தூங்காம, சாப்பிடாம, மெண்டலி டிஸ்டர்பா இருக்காங்க. இப்போதைக்கு அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும், நான் எழுதி தர்ற மாத்திரையைக் குடுங்க. நல்லா தூங்கி ஓய்வு எடுத்தாலே எல்லாம் சரியாகிரும்." என்று அவர் கூறிய பின்பே ஆஷிக்கிற்கு அவனது உயிர் அவனிடம் மீண்டும் வந்தது போல இருந்தது. அதுவரை வெட்டப்பட்ட கிளை போல உளர்ந்திருந்தவன், டாக்டர் ஜியாவின் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்ன பிறகே நிம்மதியடைந்தான்.
ஆதர்ஷ், "ரிலாக்ஸ் ஆகு, அதான் டாக்டர் எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்கல்ல?"
"ஆமாடா, இப்போதான் நிம்மதியா இருக்கு. கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டா, சரி நீ தியாவை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பு, நான் ஜியா கண் முழிச்சதும் டாக்டர்கிட்ட பேசிட்டு அவளோட வரேன்.” என்று கூற,
"சரிடா பார்த்துக்கோ, எதுவும்னா கால் பண்ணு.” என்று தன் நண்பனிடம் விடைபெற்றவன் தியாவிடம், “கம் ஆன் தியா, நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன்."
"நீ போ ஆதர்ஷ், நான் இப்போ வந்திருவேன்.” என்றவள் ஆஷிக்கைப் பார்க்க, அவனோ தியா தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவள் எதுவும் கூறுவதற்குள்,
"ப்ளீஸ் தியா நீ கிளம்பு, இப்போ நீ என்ன கேட்டாலும் அதுக்கு என்கிட்ட சுத்தமா பதில் இல்லை.” என்று இயலாமையோடு அவன் கூற, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு தியா,
"ஆனா ஆஷிக்..."
"ப்ளீஸ்...” என்றவன் நேராக உள்ளே சென்று ஜியாவின் அருகில் அமர்ந்துகொண்டு, அவளது கையைத் தன் மார்போடு வைத்து மெல்ல அவளது கேசத்தைக் கோதி விட்டவாறு, அவளது உச்சந்தலையில் தன் இதழைப் பதித்தான்.
இதைக் கண்ட தியா, “ச்ச... போற போக்க பார்த்தா இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திருவாங்க போலையே? இவங்க மட்டும் ஒன்னு சேர்ந்துட்டா எல்லாமே கெட்டு போயிடும். இவங்க பிரிஞ்சதுக்கு நான் காரணம்னு மட்டும் ஆஷிக்குக்கு தெரிஞ்சா? அப்புறம் அவன் மொத்தமா என்னை விட்டு விலகிருவான். நான் எதாவது ஒன்னு பண்ணணும்.” என்று கோபமாய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
கனவில் யாரோ தன்னை நெருங்கி வருவது போலத் தோன்ற, சட்டென்று விழித்த ஜியா படுக்கையில் இருந்து எழும்ப முயற்சிக்க, அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த ஆஷிக் உள்ளே வர அவள் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து,
"ஏய் என்ன பண்ற?” என்றவாறு அவளது அருகில் வந்தவன்,
"என்னடி பண்ற? இதுவரை பண்ணுனதெல்லாம் போதாதா? இப்போ நீ எதுவும் பண்ண வேண்டாம், ஜஸ்ட் டேக் ரெஸ்ட் ஓகே!” என்றவாறு ஆஷிக் மீண்டும் அவளைப் படுக்க வைக்க முயற்சி செய்ய,
அவனைத் தடுத்தவள், "ஆஷிக் இங்க அது...” என்று எதோ கேட்க,
"எதுவும் சொல்ல வேண்டாம் இப்போ உனக்கு ரெஸ்ட் தேவை. மற்றது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முகம் எல்லாம் எப்படி வியர்த்திருக்குனு பாரு ரெஸ்ட் எடு."
"இல்ல, நான்... அதுவந்து... உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...” என்று பதற்றமாகக் கண்களில் நீர் வழிய கூறியவளை,
ஆஷிக் ஆறுதலாய் தலையைக் கோதி, கண்களின் நீரை துடைத்துவிட்டு அவளது முகத்தைத் தன் இரு கரங்களில் ஏந்தி
"ஓகே ஓகே, சொல்லு, என்ன சொல்லணும் ம்ம்...” என்றவாறு அவளது கலைந்த கேசத்தைச் சரி செய்தவாறே, தனது புருவம் உயர்த்தி, "என்ன?” என்று கேட்க,
"அதுவந்து ஆஷிக்...” என்றவாறு சற்று நேரம் அவனது கண்களைப் பார்த்தவள்,
"நான் கொஞ்ச நேரம் உன் மேல சாஞ்சிக்கலாமா?” என்று கண்ணீர் மல்க கேட்க,
சில நொடிகள் அவளது கண்களையே உற்று பார்த்தவன் கண்ணிமைக்கும் நொடிக்குள், தன் அகன்ற கரங்களுக்குள் தன்னவளை தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்துக்கொண்டான்.
சில மணிநேரம் கழித்து ஆஷிக், ஜியாவின் கேசத்தைக் கோதி விட்டவாறே, “ஆர் யு ஓகே? எதுவா இருந்தாலும்...” என்று தொடரவும்,
அவனது மார்போடு ஒன்றியவாறே நிமிர்ந்தவள் தன் விரல் கொண்டு அவனது இதழை மூடி, "ப்ளீஸ் டோன்'ட்...” என்று கூறி மீண்டும் அவனது மார்பில் தன் தலை வைத்துச் சாய்ந்துகொள்ள, தன் இதழோரம் புன்னகைத்தவன் எதுவும் கூறாமல் அவளது தலையை மட்டும் ஆறுதலாய் வருடி கொண்டிருந்தான். அவனது அணைப்பின் ஸ்பரிசத்தில் தன் சோகத்தை எல்லாம் தற்காலிகமாய் மறந்து சிறு குழந்தையைப் போலக் கவலை இன்றி, அவனது வருடலில் தன் காயத்திற்கு மருந்து தேடிக்கொண்டிருந்தாள் ஜியா.
நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிநேரமாய் கரைந்தோட, அவனது மார்பில் தன் முகத்தைப் புதைத்திருந்தவள், ஏனோ சட்டென்று அவனை விட்டு விலக, இந்தமுறை அவளது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் ஏதோ சிறு தைரியம், ஒருவித தெளிவு.
"ஆர் யு ஓகே?” என்றவனை, நேருக்கு நேராகக் கூடப் பார்க்காதவள்,
"ம்ம்...” என்று மட்டும் கூறி அங்கிருந்து கிளம்ப,
"ஏய் பார்த்து, எங்க போற நீ? ரெஸ்ட் எடுக்கணும்."
"நான் வீட்டுக்கு போகணும்."
"சரி அட்லீஸ்ட் நான் ட்ராப் பண்ணவாது செய்றேன்?"
"ஆஷிக் ஐ வாண்ட் டு பீ அலோன் ப்ளீஸ்...” என்றுவிட்டு அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் நடக்க,
"ஏய் நில்லு, உன்னோட ஹாண்ட் பேக், அப்புறம் மொபைல்.” என்று அவன் கூற, சட்டென்று திரும்பியவள் அவனது கையில் இருந்து அதை வாங்கிவிட்டு, அவனைச் சரியாகக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து சென்றாள்.
அவளது இந்த விசித்திரமான செய்கையைக் கண்ட ஆஷிக் மிகவும் குழம்பினான். அவனது உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழ, தீவிரமாய்ச் சிந்தித்தவனுக்கு டாக்டர், ஜியா ஸ்ட்ரஸாக இருப்பது பற்றிக் கூறியது நினைவிற்கு வர, எழுந்த எல்லாக் கேள்விகளுக்கும் இதைப் பதிலாய் கூறி தன் மனதின் குழப்பத்திற்கு விடை கொடுத்தவன்,
"ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும், எப்பவும் என்னையே திட்டிட்டு இருந்தா இப்படித்தான். ஒரு செகண்ட்ல என் கண்ணையே வியர்க்க வச்சுட்டா...” என்று முனங்கியவன், அங்கிருந்து நேராகத் தன் இல்லத்திற்குச் சென்றான்.
இரவு ஒரு எட்டரை மணியளவில், தன் டின்னரை முடித்துவிட்டு டைனிங் டேபிளை விட்டு அகல இருந்தவளை தடுக்கும் விதமாக,
‘கனவெல்லாம் நீ தானே விழியே உனக்காக உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே’ என்ற பாடல் மொபைலில் இருந்து கேட்க,
"இது என்னோட ரிங் டோன் இல்லையே?” என்றவாறு ஃபோனை எடுத்து பார்த்தவளின் கண்ணில், தியா ஃப்ரெண்ட் காலிங் என்று வர, அதை அப்படியே அட்டென்ட் செய்யமல் விட்டவளுக்கு ஸ்க்ரீன் சேவரில் ஆஷிக்கின் புகைப்படத்தைப் பார்த்த பிறகே, தான் அவசரத்தில் தவறுதலாக ஆஷிக்கின் மொபைலை எடுத்து வந்தது புரிந்தது.
மீண்டும், ‘கனவெல்லாம் நீ தானே...’ என்ற பாடல் இசைக்க, ஃபோனை கட் செய்யப் போனவளின், கைவிரலை ஏனோ அவளது உள்ளம் தடுக்க, அலையென அடித்த தன் பழைய நினைவுக்குள் தன்னையும் மறந்து சுகமாய் அடித்துச் செல்லப்பட்டாள் ஜியா.
***
பூங்காவில் உள்ள மரத்தடி ஒன்றில் ஜியா, ஆஷிக்கின் மார்போடு சாய்ந்தவாறு ஹெட் போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்க,
அப்பொழுது ஆஷிக், "ஏய் எவ்வளவு கஷ்டப்பட்டு மீட் பண்ணிருக்கோம். என்னைக் கவனிக்காம அப்படி என்ன பாட்டு கேட்டுட்டு இருக்க? அதைக் குடு."
"இதைக் கேட்டாலும் உனக்கு அவ்வளவா புரியாது, இது தமிழ் சாங்."
"ஓ..."
“கனவெல்லாம் நீ தானே, விழியே உனக்காக உயிரானேன்... எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச சாங், ரொம்ப புடிக்கும். பிடிச்ச சாங் நிறையா இருக்கு, ஆனா இது ஸ்பெஷல்."
"அப்படியா? அப்போ நான்...” என்று தாபமாக நெருங்கி தன் இதழை வசப்படுத்த வந்த தன்னவனின் கன்னங்களைக் கிள்ளி,
"நீயும்தான், சரி உன் ஃபோனை குடு."
"ஏன்?"
"குடு"
"இந்தா, என்ன பண்ற?"
"வெயிட், நான் கால் பண்றேன் உனக்கே புரியும்."
"என்னடி, இந்த போரிங் சாங்க போய் என் மொபைல்ல ரிங் டோனா வச்சுருக்க?"
"ஆஷிக்..."
"சரிடா, நல்ல சாங்தான் கொஞ்சம் போரிங்கா இல்லை..."
"அதெல்லாம் தெரியாது, நமக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து அவங்க எல்லாரும் வளந்து நமக்குப் பல்லெல்லாம் போயி சாகுற நிலைமைக்கு வந்தாலும், உன் மொபைல்ல இந்த சாங்தான் ரிங் டோனா இருக்கணும். யாரு உனக்குக் கால் பண்ணினாலும் உனக்கு என் ஞாபகம் வரணும், இன்க்ளூடிங் யுவர் கேர்ள் ஃப்ரண்ட்ஸ்." என்று செல்லமாய் உத்தரவு போட்டவளைக் கண்டு புன்னகைத்து, தன் நெற்றிக் கொண்டு அவளது நெற்றியை முட்டி, "ஓகே டன்!” என்று கண்சிமிட்டியவன், அவளது கண்களை உற்று நோக்கி,
"உன் கண்ணு எதோ சொல்லுதே..."
"அப்படியா, என்ன சொல்லுது?"
"ஒரு நிமிஷம்!” என்றவன் தன் செவியை அவளது கண்களின் அருகே கொண்டு சென்று,
"ஓகே சரி.” என்று தன் தலையை ஆட்டிவிட்டு ஜியாவைப் பார்க்க,
"என்ன சொல்லுச்சு என் கண்ணு?” என்று விழி விரித்தவளைப் பார்த்து,
"அது என்ன சொல்லுச்சுன்னா...” என்று அவன் அவளை நெருங்கி வர ஜியா, ஆஷிக்கின் கரத்தில் நறுக்கென்று கிள்ள,
“ஆ...” என்று கத்தியவாறு, “வலிக்குதுடி” என்று பாவமாய் சொல்ல, அவனது மூக்கைப் பிடித்து ஆட்டியவள், அவனது இருக்கரங்களையும் எடுத்து தன் மீது போட்டுகொண்டு, தன்னவனது மார்போடு இடைவெளியில்லாமல் சாய்ந்து, தன் ஐவிரலோடு அவனது ஐவிரல்களையும் கோர்த்துக்கொண்டு,
"ஆஷிக்!"
"ம்ம்..."
"நீ தமிழ் சாங் கேட்ருக்கியா?"
"ம்ம் கொஞ்சம்... அதுவும் உன்னை லவ் பண்ணினதுக்கு அப்புறம்."
"எது ரொம்பப் பிடிக்கும்?"
"அதிகமா கேட்டதில்லை, ஆனா ஒன்னே ஒன்னு ரொம்பப் பிடிக்கும்."
"அது என்ன சாங்னு சொல்லு, நான் அதை என் ரிங்டோனா வைக்கிறேன்.” என்று ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்தவளை,
"அதை நீ ரிங்டோனாலாம் வைக்க வேண்டாம், ஜஸ்ட் அதுல உள்ள மாதிரி நடந்துக்கிட்டா போதும்.” என்றவன் கள்ள பார்வையுடன் விஷமமாய்ச் சிரிக்க,
"ம்ம் சொல்லுடா” என்றவளை தன் பக்கம் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவளது காதில் மட்டும் கேட்க்குமாறு, "கட்டிப்பிடி கட்டிப்பிடிடாடா... என்ன ரெடியா இருக்கியா?” என்று கண்ணடிக்க,
"போடா பொறுக்கி” என்று செல்லமாய் முறைத்தவளைப் பார்த்து,
"நான் பொறுக்கியாடி?” என்றவாறு அவளது காதில் செல்லமாகத் தன் தாடி கொண்டு உரச,
"ஆஷிக் விடு.” என்றவாறு அவள் ஓட, அவன் அவளைப் பின்தொடர்ந்தான்.
***
அதை நினைக்கும் பொழுதே ஜியாவின் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது. தன் கடந்தகால நிகழ்வில் இருந்து வெளியே வந்தவள், அதை நினைத்து புன்னகைக்க அதைக் கலைக்கும் விதமாய் தியாவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர சோகமான ஜியா,
"ஆஷிக் நீ உண்மையாகவே என்னைக் காதலிச்சியா? இல்லையா? உண்மையாகவே என்னை நீ காதலிச்சிருந்தா ஏன் எனக்கு அப்படி ஒரு துரோகம் பண்ணின? இந்த நிமிஷம் வர வெறும் வார்த்தைக்காக உன்னை வெறுக்கிறேன்னு சொன்னாலும், மனசுல இருந்து என்னால சொல்ல முடியலை. உன்னை என் பக்கத்துலயே வச்சுக்கணும் போல இருக்கு, உன் நெஞ்சோட சாஞ்சி அப்படியே என் மனசுல உள்ளதெல்லாம் சொல்லி அழணும். நீ என்கூட இருக்கும் போது எனக்கு அவ்வளவு நல்லா இருக்கு.” என்றவாறு தன் கண்களின் ஓரம் வழிந்த நீரை துடைத்தாள்.
***
நிலவே 16
சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு, “ஆஷிக் ஃபோன் என்கிட்ட அப்படினா, என்னோட ஃபோன்... ஓ காட்! ஒருவேளை அவன் ஃபோனை பார்த்துட்டா? ஜீவா அனுப்புன மெசேஜ்... ஒருவேளை ஜீவா கால் பண்ணிட்டா? நோ... ஆஷிக்குக்கு எதுவும் தெரியக்கூடாது, அதுக்குள்ள நான் எதாவது பண்ணணும். அங்க போறத தவிர வேற வழியே இல்லை.” என்றவள்,
"கடவுள் ஏன் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறார்? என் வாழ்க்கையில சந்தோஷமே கிடையாதா? என்னோட ஓட்டம் எப்போதான் முடியும்? இன்னும் யாருக்கெல்லாம் பயந்துட்டு நான் ஓடணும்?” இவ்வாறு அவளது கண்களோடு சேர்ந்து உள்ளமும் குமுறியது.
ஆஷிக்கின் இல்லத்திற்குத் தயங்கி தயங்கி வந்தவள் காலிங் பெல்லை அழுத்த, அப்பொழுது வெளியே வந்த வேலைக்காரர்,
"நீங்க யாரு?"
"ஆஷிக்கை பார்க்கணும்."
"சார் இன்னும் வரல, நீங்க யாரு?"
"நான்... என்னை அவருக்குத் தெரியும்."
“வாங்க, வந்து உள்ள உக்காருங்க."
"சரி” என்று உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தவள் தனக்குள்,
"கடவுளே! ஆஷிக் என் ஃபோனை மட்டும் பார்த்திருக்கக் கூடாது. ஏன் இன்னும் வரல? ஒருவேளை மெஸேஜ் எதையும் படிச்சுருப்பானோ? என்னைத் தேடி என் வீட்டுக்குப் போயிருக்க மாட்டான்ல?” என்று புலம்பியவாறே அமர்ந்திருந்தாள்.
ஆஷிக் வீட்டின் வேலைக்காரர் ஜியாவிற்கு ஜூஸ் பரிமாற, அவள் இருந்த டென்ஷனிற்கு அது அவளுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. அவருக்கு நன்றி தெரிவித்தவள், அதைத் தன் கையில் ஏந்தி பருகும் நேரம் பார்த்து உள்ளே வந்த ஆஷிக், "ஜியா!” என்றழைக்க, திடீரென்று அவன் அழைத்ததில் வெடுக்கென எழுந்தவள் தவறுதலாகத் தன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை தன் மேல் சிந்த,
"ஏய் பார்த்து பண்ண கூடாதா? பாரு, உன் மேலயே சிந்திகிட்ட."
"உன்னை யாரு இப்படி திடீர்னு வர சொன்னா?"
"ஹலோ, இது என் வீடு. நான் எப்படி வேணும்னாலும் வருவேன்... சரி ரெஸ்ட் எடுக்காம என் வீட்ல இந்த நேரத்தில என்னப் பண்ற?"
"அது வந்து...” என்று அவள் பதில் கூறுவதற்குள்,
"நீ ஒன்னும் என்னை மிஸ் பண்ணலையே?” என்று கேலியாக அவன் கேட்கும் பொழுதே, அவன் தன் மொபைலில் எதையும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தவள், நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் ஆஷிக்கையேப் பார்க்க,
ஆஷிக்கோ அவளைச் சீண்டுவதற்காக மீண்டும் அவளிடம், "நீ இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறத பார்த்தா, என்னை நீ நிஜமாவே மிஸ் பண்ற போல?” என்று தன் புருவம் உயர்த்திப் பார்க்க, எரிச்சல் அடைந்த ஜியா, "பேசியாச்சா? இல்லை, இன்னும் பாக்கி இருக்கா? உன் உளறலை கேட்கிறதுக்கு எனக்கு மூட் இல்லை, பாரு உன்னால என் சாரீல எப்படிக் கறையாகிடுச்சு..."
"சரி சரி... ஜூஸ் தானே கொட்டுச்சு, பாம்பு ஒன்னும் கொட்டலையே?"
"என்ன கலாய்க்கிறியா?"
"என்ன சமாளிக்கிறியா?” என்று அவன் கூற, அவள் தன் முகத்தை வேறுபக்கமா திருப்பிக்கொள்ள,
"ஓகே கோபப்படாத, என் வாஷ்ரூம் யூஸ் பண்ணிக்கோ, நேரா போ அதோ தெரியுதுல அந்த ரூம்தான் சரியா?"
"ம்ம்...” என்றவள், தன் மொபைலை அவன் எங்கே வைத்திருப்பான் என்று அவனையே மேலும் கீழுமாகப் பார்க்க,
அவளது கை பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன், “என்ன ம்ம்... என்னை அப்படிப் பார்க்கிற? இதான் அடிச்சு பார்க்கிறதா? முதல்ல போய் க்ளீன் பண்ணிட்டு வா, நான் எங்கேயும் போக மாட்டேன். அப்புறம் வந்து நிதானமா பாரு சரியா?” என்று கூற,
"அதெல்லாம் ஒன்னும் இல்லை, என்னை விடு.” என்றவள் அவனிடம் இருந்து விடுபட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்ற பிறகு இன்று நடந்த அனைத்தையும் யோசித்தவன், "ஜியா ரொம்ப வித்தியாசமா இருக்காளே? அவளுக்கு எதோ ஒரு ப்ராப்ளம் இருக்கிற மாதிரியே என் மனசுக்கு தோனுதே? என்னவா இருக்கும்? சரி, பொறுமையா கேட்போம்.” என்று தனக்குள் கூறினான்.
ஜியாவைக் காப்பாற்றும் பொழுது முதுகில் ஏற்பட்ட காயம், தான் இருக்கும் இடத்தை நினைவு கூற, வலியில் முகத்தைச் சுளித்தவன், மேலும் உள்ள உடல் அலுப்பின் காரணமாய் தன் தலையைப் பிடித்தவாறு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து, "ஷேக்கர் டீ..." என்று கூற, அவனது குரல் கேட்ட சில மணி துளிகளில் அவனுக்கு டீ பரிமாறப்பட, "சார் டின்னர் எல்லாம் டேபிள்ள எடுத்து வச்சுட்டேன்."
"சரி, டைம் வேற ஆச்சு நீங்க கிளம்புங்க."
"செர்வ் பண்ணிட்டு போறேன்."
"இல்ல ஷேக்கர், நானே பார்த்துகிறேன் நீங்க எல்லாம் எடுத்து வச்சுட்டீங்கல்ல..."
"ஆமா சார்"
"தென் யு மே லீவ்"
"தாங்க் யு சார்.” என்றவன் அவனிடம் இருந்து விடுபட,
ஜியா வெளியே வந்து, "ஆஷிக், உன் வீட்ல உள்ள எல்லாமே உன்னை மாதிரிதானா?"
"என்ன?"
"எதுவும் ஒழுங்கா இல்ல, பைப் சரியா ஒர்க் ஆகல."
"ஒர்க் ஆகலையா இல்ல மேடம்கு யூஸ் பண்ண தெரியலையா?” என்று நக்கலடிக்க,
"ஆஷிக்!"
"சரி வரேன்” என்றவன், “தப்பு இவ மேலயாதான் இருக்கும், ஆனாலும் என்னைத்தான் திட்டுவா.” என்று புலம்பியவாறு பாத்ரூமிற்குள் நுழைந்து,
"என்ன?"
"நீயே பாரு, எவ்ளோ ப்ரஸ் பண்ணினாலும் சரியா ஆகமாட்டிக்குது."
"ம்ம் உனக்குத் தானே... ஆகாதே... நீ தள்ளு.” என்று கூறிவிட்டு,
"இதைச் சும்மா ப்ரஸ் பண்ணினா போதாது, ரொட்டேட் பண்ணணும்.” என்று கூறியவாறே செய்ய, டேப்பில் இருந்து தண்ணீர் கலகலவென வர,
"பார்த்தியா? இதுக்கெல்லாம் மூளை வேணும். அதான் உனக்குச் சுத்தமா கிடையாதே. எதுக்கெடுத்தாலும் என்கிட்ட சண்டை போட மட்டும் தெரியும்.” என்றவன் தன் காலரை தூக்கிவிட, தவறுதலாக அவனது கை ஷவருக்கான டேப்பில் பட, ஷவரில் இருந்து வந்த தண்ணீர் அவனை முழுவதுமாய் நனைத்தது.
இதைக் கண்ட ஜியா தன் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து, "இதுக்குத்தான் ஓவரா பேச கூடாதுனு சொல்றது. ஆனா ஒத்துக்கிறேன், உன் அளவுக்கு மூளை இந்த உலகத்துலயே வேற யாருக்கும் கிடையாது.” என்று மீண்டும் சிரிக்க, பொய்யாக அவளைப் பார்த்து முறைத்தவன், அவளது கையைப் பிடித்து இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொள்ள, அவனது அணைப்பின் ஸ்பரிசத்தில் தன்னையே மறந்தவள், ஆஷிக்கின் விழியோடு மூழ்கியவாறே நொடிபொழுது கூட இமை தட்டாமல், தன் பார்வையாலே அவனைக் கைது செய்து கொண்டிருந்தாள்.
ஜியாவின் விரிந்த விழிகளில் தன்னைத் தொலைத்தவன், அவளது பிறை நுதலை மறைத்தவாறு சரிந்து விழுந்திருந்த கேசத்தை மெல்ல சரி செய்து, தன் இதழால் அவளது நுதலை அலங்கரிக்க, தன்னவனது இதழின் தீண்டலில் தேகம் சிலிர்த்தவள்,
அவனிடம் இருந்து விடுபட முனைந்த நேரம் பார்த்து, தன் இரு கரங்கள் கொண்டு பின்னால் இருந்து இடுப்பை வளைத்து தன் விரிந்த மார்பிற்குள் சிறை வைக்க, திக்கு முக்காடிப் போனாள் ஜியா.
மெல்ல அவளது காதோரத்தில் இதழ் பதித்தவன், தன் கரம் கொண்டு அவளது வதனத்தை நிமிர்த்தித் தன் முகம் கொண்டு அவளது முகத்தை உரசியவாறே நிற்க, இதற்கு மேல் முடியாதவளாய்,
"ஆஷிக்!” என்று தடுமாற்றத்தோடு அழைத்தவள், மெல்ல அவனது அணைப்பில் இருந்து நழுவ, மேலும் இறுக்க அணைத்தவாறே ஆஷிக்,
"ம்...” என்று மட்டும் கூற, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, வாஷ்ரூமில் இருந்து வெளியே சென்று அவனது அறையில் மூச்சு வாங்க, தன் கண்களை மூடி நின்றுகொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றவன்,
தண்ணீர் துளிகள் சூறையாடிய கருப்பு நிற புடவையில், மஞ்சள் நிற இடை மட்டும் மிச்சம் இன்றி மொத்தமாய் எட்டிப் பார்த்து தனது கனன்று எரியும் தன் ஆசை தீக்குத் தூபம் போட, அழகு வென் சிற்பம் என்று தன் கண்முன் இருந்தவளைத் தன் தாபத் தீயால் அணைக்க எண்ணியவன்,
அவளது அருகில் சென்று அவளது பின்னந் தோளில் விரகத் தீயினால் கொந்தளித்துக் கொண்டிருந்த, தன் அதரங்களைத் தன் காதலின் ஆதாரமாய் அதிகாரத்தோடு பதித்து, தன் ஈரமான கேசம் கொண்டு அவள் மேல் சிலுப்ப,
குளிர்ந்த நீரில் வென் சிற்பமாய் உறைந்திருந்தவள், அவனது சூடான முத்தத்தில் தேகம் சிலிர்த்து, தன் கண்களைத் திறந்து அவன் பக்கம் திரும்பியவள்,
தன் எதிரே தன்னையே மறக்க செய்யும் மயக்கும் பார்வையுடன் தன்னை முற்றிலும் தன் வசமாக்க துடிக்கும் அக்மார்க் வசீகரப் புன்னைகையோடு, நீரில் நனைந்தபடியால் வெள்ளை நிற மேல்சட்டை உடலோடு ஒட்டிக்கொண்டு, தன்னை அணைத்துக் கொள்ளத் துடிக்கும் அகன்ற மார்பின் வளைவுகளை, வடிவம் மாறாது தெள்ளத்தெளிவாய் காட்டி, தன் பெண்மையைப் பந்தாடிய தன்னவனை ஏனோ காண இயலாது நாணி தரையை நோக்கினாள்.
தன்னவளின் வெட்கத்தைத் தன் வேட்கை தீர ரசித்தவனின் விழிகளில், தன் தழுவலுக்காகக் காத்திருக்கும், அவளது தேகத்தின் வளைவுகள் தெள்ளத் தெளிவாக நனைந்த புடவையைத் தாண்டி எட்டிப் பார்க்க, அதில் அவன் சிக்கிதான் போனான் என்றால் மிகையில்லை.
தன் தழுவழுக்காய் காத்திருந்த தன்னவளின் மஞ்சள் நிற இடுப்பை தன் ஐவிரலுக்குச் சொந்தமாக்கியவன், விலகியிருந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,
அவனது அணைப்பின் இறுக்கத்தில் தண்ணீர் பட்டு ஜில்லென்று இருந்த, அவளது தேகத்தில் திடீரென்று தீயின் சுவையை உணர்ந்தாள்.
வெறித்தவாறு அவனையே பார்த்தவளின் கண்களில் இருந்து நீர் கசிய, முகத்தில் வடியாமல் இருந்த அந்தத் தண்ணீர் துளிகளுக்குள் நடுவே, அவளது கண்ணீர் துளிகளைக் கண்டவனின் மனதில் மீண்டும் கவலை ஆட்கொண்டது.
ஆனால் ஜியாவோ அவனது அரவணைப்பில் தன் அனைத்து கவலைகளையும் மறந்து போனாள். அவனது அணைப்பு அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது என்றால் அது மிகை அல்ல.
மெல்ல மெல்ல அவனது அணைப்பின் கதகதப்பில் மெழுகாய் உருகியவள், இறுதியில் அவனில் தன்னையே மறந்தும் போனாள். அவன் மீதுள்ள கோபம் சில நொடிகள் மறைந்து போக, அவன் மீதுள்ள அதீத காதல் வெளிப்பட்டது.
ஜியாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதால் கவலையுற்றவன், மெல்ல தன் இறுக்கத்தைத் தளர்த்த, ஆனால் இந்தமுறை அவளது இறுக்கம் அவன் மீது உறுதியாகியது.
தன் வலக்கரம் கொண்டு அவனது முதுகை இறுக்கமாக பற்றியவள், தன் இடக்கரத்துக்குள் தன்னவனது தோள்களைச் சொந்தமாக்கினாள்.
திடீர் வானிலை மாற்றம் போல, அவளது கண்களில் சோகம் மறைந்து அலாதியான காதல் வெளிப்பட, செய்வதறியாது திகைத்தான். இதுதான் ஆணின் வெட்கமா என்ன? அப்படி ஒன்று இருந்தால் அதுவே உலகிலே மிக அழகான எட்டாவது அதிசயமாகும். அத்துணை அழகு.
அவனது திகைப்பை ரசித்தவள் மெல்ல தன் இதழ் ஓரம் புன்னகைத்து, தன் பாதங்களை உயர்த்தி அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
காதல் தீயில் கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது மனம், தன்னவளின் ஒற்றை முத்தத்தில் அடங்கியே போனது.
தன்னவளின் காதல் பரிசில் தன்னையே தொலைத்தவன் தன்னவளையே வெறித்துப் பார்க்க, அவன் எதிர்பார்க்கும் முன்பே தன்னவனின் மறு கன்னத்திலும் தன் இதழை, காதலோடு பதிக்க அவளோடு மூழ்கினான் ஆவலாய்.
மேலும் முன்னேறியவள் தன் இதழ் கொண்டு அவனது இதழை மூட, உருகினான் உறைபனியாக. அவளது இதழ்கள் தன் வேலையைச் செய்ய, தன் அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டியவள், நன்கு அவனது முதுகைப் பற்றிக்கொள்ள, அவளது விரல் நகம் ஏற்கனவே இருந்த அவனது காயத்தின் மீது அவனது மேல் சட்டையும் தாண்டி பட, லேசாகத் துடித்தவன் தன்னவளின் முத்தத்தில் மொத்தமாய் தன்னை இழக்க, வலியை கூட மறந்தான் அவள் அள்ளி தந்த காதலில்.
தன்னை வென்றவளின் கண்களில் தெரிந்த கரை காண முடியாத காதல் நீரில் நீந்தி சென்றான்.
சில மணித்துளிகள் கழித்து அவனிடம் இருந்து அவள் விடுபட, இந்த முறை அவன் தீண்டினான் அந்த மெல்லிய இதழை இதமாக.
ஆறு வருடங்களாய் அடக்கி வைத்திருந்த காதலென்னும் வேட்கை தீயை, ஒரு முத்தத்தால் அணைத்துவிட முடியுமா என்ன?
வேட்கை தனியும் வரை வன்மை இன்றி மென்மையாய் தீண்டியவன், பின்பு மெல்ல தன்னவளை தன் இருக்கரங்களிலும் ஏந்தி, அருகே இருந்த மெத்தை மீது மெதுவாகக் கிடத்தி முன்னேறினான் மெல்ல மெல்ல.
காதலின் முதல் மொழியான முத்தம் கொண்டு தன்னவளை வெல்ல நினைத்தவன் அவளது கண்களைப் பார்த்து, “நான் இந்த உலகத்துல உயிரோடு இருக்கிற கடைசி நொடி வரைக்கும், உன் அன்பு எனக்கு வேண்டும்.” என்றவாறு அவளது நுதலில் இதழ் பதித்து, மெல்ல அவளது இரு கண்களிலும் தன் இதழ் பதித்து, “எப்பவும் நான் உன் கூடவே சேர்ந்திருக்கணும்னு விரும்புறேன்.” என்று காதலாய் மொழிந்தவன், செல்லமாகத் தன்னவளின் மூக்கின் நுனியில் தன் இதழ் பதித்து, “இந்த உலகத்திலையே உன்னை மாதிரி ஒரு அழகு யாரும் இல்லை, எதுவும் இல்லை.
ஐ ப்ராமிஸ் யு, நான் உனக்கு ஒரு நல்ல தோழனா...” என்றவாறு அவளது கன்னங்களில் மிக அழுத்தமாக இதழ் பதித்து, மெல்ல அவளது கரங்களைத் தன் கரங்களோடு கோர்த்து, “எப்பவும் உன்னை ரெஸ்பெக்ட் பண்ற நல்ல ஆம்பளையா...” என்றவாறு அவளது கைகளில் உள்ள ஒவ்வொரு விரலிலும் தன் முத்தத்தை மோதிரமாய் அணிவித்தான்.
அவளது இதழில் லேசாகத் தன் அதரத்தை ஒற்றி எடுத்து, “உன்னை என் உயிரை விட அதிகமா நேசிக்கிறேன்.” என்றவன், “இப்படியே எப்பவும் நான் உன்னைக் காதலிக்கணும், அதுக்கு நீ எப்பவும் என்கூட வேணும் ஜியா.” என்றவாறே அவளது கழுத்தில் மிக அழுத்தமாகத் தன் இதழை பதித்துத் தன் முகத்தை அவளது கழுத்தின் வளைவுகளில் புதைத்துக்கொண்டான்.
அவனது ஒவ்வொரு வரிகளிலும் உள்ள அவனது காதலைக் கண்டு மெய் சிலிர்த்தவள், தன் கண்களை மூடி அவன் மீது சாய்ந்துகொள்ள, அதை ரசித்தவாறே முன்னேறியவனது கரங்கள் அவளது ஆடையோடு விளையாட, அதைத் தடுத்தவள் அங்கிருந்து செல்ல போக, அவளைத் தடுத்தவன் அவளது முதுகில் படர்ந்திருந்த முடியை நீக்கிவிட்டு அங்கும் தன் அதரத்தை ஆதூரமாய் பதிக்கும் நேரம் தன்னவனை மெல்ல தடுத்தவள், அவனது இரு கரங்களையும் தன் மீது போட்டவாறு அவனது மார்போடு சாய்ந்துகொண்டாள்.
தன்னிடம் தஞ்சம் வந்தவளைத் தன் நெஞ்சோடு இன்னும் நெருக்கமாய் சாய்த்து கொண்டவனின் உள்ளத்தில்,
'இப்போ பார்க்கிற ஜியாவா இது? இவ்வளவு காதல் தனக்குள்ள இருந்தால், ஏன் என்னை விட்டுட்டு பிரிஞ்சு போகணும்? நேற்று வரை கோபமா இருந்தவ இப்போ எப்படி? இவ்வளவு காதலை என் மேல வச்சுக்கிட்டு ஏன் என்கிட்ட கோபமா இருக்கிற மாதிரி நடிக்கணும்? ஆனா அந்தக் கோபத்துலயும் நடிப்பு தெரியலையே? இப்போ என்மேல காட்டுற இந்த அன்புலயும் நடிப்பு இல்லை?' என்று ஆயிரம் கேள்விகள், எழுந்து நின்று அவனது நிம்மதியைக் கெடுக்க,
ஜியாவிற்கும் அதே நிலைமைதான், அவள் உள்ளம் மட்டும் அவளைச் சும்மா விடுமா என்ன? 'என் மேல இவ்வளவு காதலை வச்சுட்டு ஏன்டா எனக்கு அப்படி ஒரு துரோகத்தைப் பண்ணின? இன்னும் உன் கண்கள்ல என் மேல அதே காதலை நான் பார்க்கிறேன். உன்கிட்ட இருந்து என்னால தள்ளி போகவே முடியலை. இப்படியே உன்மேல சாஞ்சிட்டே செத்து போகணும்னு தோனுதுடா.’ என்று அவளது மனமும் தன் பங்கிற்கு அவளது நிம்மதியைக் கெடுத்தது.
சில நொடிகள் அமைதி காத்தவன் ஒருவித தடுமாற்றத்துடன், "சத்தியமா சொல்றேன் ஜியா, அந்த ஒரு விஷயத்துக்காக நீ என்மேல இவ்வளவு கோபமா இருக்கியானு என்னால இன்னும் நம்ப முடியலை.” என்றவனின் இதழைத் தன் விரல் கொண்டு தடுத்தவள், அவனை ஒருகணம் இமைகொட்டாமல் பார்த்தவள், "இப்போ வேண்டாம் ஆஷிக், ப்ளீஸ்...” என்று கூறியதும் அவளது கண்களில் கண்ணீர் வடிய, வடிந்த கண்ணீரைத் தன் கையில் ஏந்தியவன், தன்னவளைத் தன் நெஞ்சோடு சாய்த்து தன் இருகரம்கொண்டு அணைத்துக்கொண்டான்.
ஒருவேளை ஆஷிக் கூற வருவதை ஜியா தடுக்காமல் கேட்டிருந்தால், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கோபமும், தவறான புரிதலும் இன்றே இந்த நொடியே சரியாகி, இவர்கள் இணைந்திருப்பார்களோ? காலம்தான் கூற வேண்டும்.
***
நிலவே 17
தன்னவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவாறே தன் விரலை அவளது கழுத்தில் விளையாட விட, கூச்சத்தில் லேசாக அவனைத் தள்ளிவிட்டவள் அங்கிருந்து செல்ல போக, ஜியாவின் கரம் பற்றி இழுத்தவன் அவளைத் தன் பக்கம் இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவளும் விருப்பமாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
தன் கழுத்தின் வளைவில் தன் முகத்தைப் புதைத்தவனின் மூச்சு காற்று வெப்பத்தைச் சேர்க்க, இதற்கு மேல் முடியாதவளாய் தன்னவனது முதுகை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.
அவள் இறுக்கி அணைத்ததில் அவனது காயத்தில் இருந்து ரத்தம் கசிந்து அவளது விரல்களில் பட,
அதைக் கண்டவள் பதற்றமாய், "ஆஷிக்!” என்றழைக்க,
காதலில் மிதந்து கொண்டிருந்தவன் "ம்..." என்று மட்டும் கூற, ரத்த கசிவு அதிகமானதால் அவனைத் தன்னிடம் இருந்து விலக்க,
"என்னாச்சு?"
"ஆஷிக், பிளட் உன்னோட முதுகு..."
"என்னோட...” என்றவாறு தன் முதுகைத் தொட்டு பார்த்த பிறகே அவனுக்கு எல்லாம் நினைவில் வர,
"அது ஒன்னுமில்லை, சின்ன ஆக்சிடென்ட், ஒன்னுமில்லைமா...” என்று அவன் கூறியதில் புரிந்துகொண்டவள், கவலையுற்று தன் கண்கள் ஈரமாக,
"என்னால தானே ஆஷிக்?"
"அப்படிலாம் ஒன்னும் இல்லை..."
"அப்படித்தான்."
"ஜியா!"
"ப்ளீஸ், ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க இருக்கு?” என்று கேட்டவாறே தன் கண்களைத் துடைத்தவள், அவனை உட்கார வைத்து அவனது காயத்திற்கு மருந்து இட்டவாறு,
"ஆஷிக் இப்படியே விட்டா இன்ஃபெக்சன் ஆகிரும், ஸோ ஒரு ஊசி மட்டும் போட்ரு."
"என்ன இன்ஜெக்சனா? நோ வே..."
"நீ இன்னும் சின்னக் குழந்தையா?"
"ஆமா"
"ஆஷிக் இன்பெக்சன் ஆகிரும்."
"ம்ம்... அதான் நீ இருக்கல, இன்பெக்சன் ஆகாம பார்த்துக்கோ."
"எப்படி?"
"இப்படி.” என்று பின்புறமாகத் தன்னோடு அணைத்துக்கொண்டவன்,
"அதான் பெரிய டாக்டர் அம்மா நீங்க இருக்கீங்களே? அதுவும் அறுவை சிகிச்சை எக்ஸ்பெர்ட்...” என்று கூறிய மறுநொடி, ஜியாவின் விழிகள் ரெண்டும் நீரில் மிதந்தது.
மேலும் தன் அணைப்பை இறுக்கியவாறே ஆஷிக், "ஆமா ஜியா, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன், லண்டன்ல MS முடிச்சதுக்கு அப்புறம், நீ எங்க வொர்க் பண்ணின? இந்தியா வந்துட்டியா, இல்லை அங்கையே கண்டினியு பண்ணுனியா? லண்டன்ல இருந்து இந்தியா ஏன் வந்த? அதுவும் ஏர்போர்ட்ல சாதாரண டூட்டி டாக்டரா ஏன் வொர்க் பண்ற? உன்னை மாதிரியான நல்ல டாக்டர்ஸ் இந்தக் காலத்துல பார்க்கிறதே கஷ்டமா இருக்கு, அதான் கேட்குறேன்.” என்று கேள்விகளை அடுக்கியவன், இப்பொழுது அவளது பதிலுக்காகக் காத்திருக்க,
அவனது ஒவ்வொரு கேள்விகளும் உரையில் இருந்து வெளிவந்த கடி நுனைப் பகழி போல அவளது நெஞ்சைத் துளைக்க, பதில் கூறயிலாது தடுமாறினாள்.
"உன்கிட்டதான் கேட்குறேன்.” என்று தன் கன்னத்தை அவளது வதனத்தோடு உரசியவாறே அவன் கேட்க,
"அது வந்து... ஆஷிக்...” என்ற ஒருவித தடுமாற்றத்தோடு அவனிடம் இருந்து விலக எத்தனித்தவளை, நன்கு பிடித்துக் கொண்டவன், தன் நாடியை அவளது தோளில் ஊன்றி கன்னமும் கன்னமும் உரசியவாறே,
"ம்ம்... இப்படியே எங்கேயும் போகாம என்ன சொல்லணுமோ சொல்லு.” என்று தாபமாய் புன்னகைத்தான்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், "அது ஆஷிக்...” என்று தொண்டை விம்ம அழைக்க, அப்பொழுது ஆஷிக்கின் பேண்டின் பாக்கெட்டில் இருந்த அலைபேசி தன் இருப்பிடத்தைக் காட்ட, ரிங்டோனின் சத்தத்தால் ஜியா, ஆஷிக்கிடம் இருந்து விடுபட, அந்த நேரம் ஆஷிக், “இது என்ன புது ரிங்டோன்?” என்று கேள்வியாய் கேட்க, அப்பொழுதான் ஜியாவிற்கு அந்த ரிங்டோன் வந்தது தன்னுடைய அலைபேசியில் இருந்து என்பது புரிய, ஒருவேளை அழைப்பு ஜீவாவிடம் இருந்து வந்திருக்குமோ என்று பயத்தில் தன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
ஆஷிக் ஜியாவிடம், "ஒரு நிமிஷம்!” என்று தன் கைகளைக் காட்டிவிட்டு, தன் பேண்டின் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்து, "இந்தப் ஃபோன் என்னுடையது இல்லையே, யாரது ஜீவா?” என்று கேட்ட மறுநொடி, ஜியாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. பதற்றமுற்றவள் அவனது கையில் இருந்து அலைபேசியைச் சட்டென்று வாங்கிக் அழைப்பை சைலென்டில் போட்டுவிட்டு,
தன் கைப்பையில் இருந்த ஆஷிக்கின் அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்து, "ரெண்டு பேரோட ஃபோனும் மாறிடுச்சு." என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போனவளைத் தடுத்தவன்,
"எங்க போற?"
"வீட்டுக்கு போகணும், மொபைலை வாங்குறதுக்காகத்தான் நான் வந்தேன்."
"இந்தப் ஃபோன்காக ராத்திரில என் வீட்டுக்கு வந்தியா?"
"ஆமா” என்று பட்டும் படமால் ஜியா கூற,
"நாளைக்குக் கூட வாங்கிருக்கலாமே?"
"எனக்கு வேணும்.” என்று தன் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஜியா கூற கடுப்பான ஆஷிக் தனக்குள்,
"ம்ம்... என்னைப் பார்க்கணும்னு ஆசை, ஃபோனை ஒரு சாக்கா சொல்ற. உன்னை என்னை பண்றேன்னு பாரு?” என்று கங்கணம் கட்டிக்கொண்டு,
"ராத்திரில ஃபோனை வாங்குறதுக்காக என் வீடு வரை வந்திருக்கனா கண்டிப்பா இதுல எதோ இருக்கு, அப்படி என்ன இதுல இருக்கு? ஜீவா யாரு? உன் ஃப்ரெண்டா?” என்று வேண்டுமெனக் கேட்பதை போலக் கேட்க பயமுற்ற ஜியா, ஆஷிக்கிடம் இருந்து தப்பிப்பதற்காக,
"யாரா இருந்தா உனக்கென்ன? நீ கேட்டா நான் பதில் சொல்லணுமா என்ன?"
"ஏன் கோபப்படுற? நான் சும்மா கேஷுவலா தானே கேட்டேன்."
"எப்படிக் கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன், எங்க இருந்த, ஏன் இந்தியா வந்த, ஜீவா யாரு எவ்வளவு கேள்வி கேட்குற?”
"அதுல என்ன இருக்கு? நான் கேட்க கூடாதா?” என்று உரிமையாக ஆஷிக் கேட்க,
"கேட்க கூடாது, அது எனக்குப் புடிக்காது. என்னோட பெர்சனல யார்கிட்டயும் சொல்றது எனக்குப் பிடிக்காது. ஸோ என்னை விட்டு தள்ளியே இரு.” என்று தேளாய் கொட்ட, விஷமாய் அவள் கொட்டிய வார்த்தைகள் அவனது உள்ளத்தில் நஞ்சாய் கலந்தோட நெருப்பில் பட்ட புழுவாய் துடித்தான். தன் கண்கள் கலங்க அவளை நேருக்கு நேராகப் பார்த்த ஆஷிக்,
"வாட்! நான் உன்னை விட்டு தள்ளி இருக்கணுமா? ரியலி நான் யாரோவா உனக்கு? அப்போ இப்போ நமக்குள்ள நடந்துச்சே, அதை என்ன சொல்ல போற?” என்று அவன் கேட்க, சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,
தன் மௌனம் கலைந்து அவன் முகத்தைக் கூடப் பார்க்காது, “கெட்ட கனவா...” என்று அவள் முடிப்பதற்குள்,
"நினைச்சு மறந்திறணும் சரியா? பழகிடுச்சு... நீ குடுத்த முத்தத்துடைய ஈரம் கூட இன்னும் காயல, ஆனா அதுக்குள்ள உன் மனசுல உள்ளம் ஈரம் காஞ்சிருச்சா என்ன? உனக்கென்ன கல் மனசா? அது ஏன் என்னை மட்டும் ஒவ்வொரு தடவையும் சுக்கு நூறா உடைக்குது?" என்று கலங்கிய ஆஷிக்கை நேருக்கு நேராகக் கூடப் பார்க்க திராணியற்றவளாய் தலை குனிந்தே நிற்க,
கோபமுற்றவன், "உன்கிட்டதான் கேட்குறேன்..." என்று தன் கையில் இருந்த தனது ஃபோனை தூக்கி போட்டு உடைக்க,
"ஆஷிக் ப்ளீஸ்..."
"ப்ளீஸ்... ஃபார் வாட்? என் மனசு உடைஞ்சி போற சத்தம் உனக்குக் கேட்கலையா? என் வலியை உன்னால் பார்க்க முடியலையா? உன்கிட்ட காதலை மட்டும் தானே எதிர்பார்க்கிறேன், ஏன் என் மனசை ரணமாக்குற?"
"ஆஷிக்..."
"ஜியா, எனக்கு உன்னை நல்லாவே தெரியும், நீ ரொம்பவே மாறிட்ட. நீ என்கிட்ட நடத்துக்கிற விதம் ஒரு மாதிரியா இருக்கு, பேசுற வார்த்தை வேற மாதிரி இருக்கு. உன் பார்வை வேற எதையோ சொல்லுது. எதையோ நீ மறைக்கிற, உன்கிட்ட பதற்றமும் உன் கண்ல பயமும் அதிகமா தெரியுது. எதோ ஒன்னு உன் மனசை கஷ்டப்படுத்திட்டு இருக்கு.
இங்க பாரு ஜியா, பயத்துல இருந்து தப்பிக்க ரெண்டு வழி இருக்கு. ஒன்னு பயத்தைப் பார்த்து பயந்து ஓடுறது, ரெண்டாவது பயத்தை எதிர்த்துப் போராடுறது. இதுல நீ என்னவா இருக்கப் போற? வாழ்க்கை முழுக்க ஓடிட்டே இருக்கப் போறியா, இல்லை அதை எதிர்த்து போராட போறியா?"
"நீ சொல்ற மாதிரி எதுவும் இல்லை, யாரையும் பார்த்து பயப்படணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை சரியா?"
"நீ பேசுன இந்த ரெண்டு வரியில கூட உன் கண்ல உண்மை இல்லையே ஜியா. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன், ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், எப்போ உனக்கா என்கிட்ட மனசை விட்டு பேசணும்னு தோனுதோ, எப்போ என்கிட்ட பேசுனா உன் மனசுல உள்ள பாரம் குறையும்னு உனக்கு நம்பிக்கை வருதோ அப்போ சொல்லு, அந்த நாளுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்."
"என் மனசுல எதுவும் இல்லை, உன்னை மாதிரி ஒரு துரோகியோட சப்போர்ட் எனக்கு என்னைக்கும் தேவைப்படாது."
"நான் துரோகியா? அது இப்போ என்னைக் கட்டி பிடிச்சியே அப்போ தோனலை?"
"தகுதி இல்லாதவங்க மேல அன்பு வைக்கிறது கூட ஒருவித முட்டாள் தனம்தான், என்கின்ற விஷயத்தை உன்னால எனக்கு ஞாபகபடுத்தாம இருக்க முடியாதுல?"
"எனக்குத் தகுதி இல்லையா? ஆமா, ஏன் சொல்லமாட்ட? இன்னும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ... தகுதி உள்ளவங்க மேலயே உன் அன்பை காட்டு. என் மனசுல இருந்து நான் அவ்வளவு பேசுனேன், ஆனா உன் மனசு எதை எடுத்துக்குது? நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டல்ல?" என்றவனின் வார்த்தைகள் அவளை எதோ செய்ய,
தான் ஏதும் தவறு செய்கிறோமோ என்று ஒருவித தயக்கத்துடன், "ஆஷிக்!” என்று அவள் அழைத்ததில்,
கோபம் தலைகேறியவன், “ஷட் அப் அண்ட் கெட் லாஸ்ட்!” என்று கர்ஜித்ததில் நடுநடுங்கியவள்,
தனக்குள், ‘உன் மேல எனக்குக் கோபம் இருக்கு ஆஷிக், ஆனாலும் இன்னைக்கு என்னோட வார்த்தை உன்னைக் காயப்படுத்திட்டு என்கிறது எனக்குப் புரியாம இல்லை. உன் கண்ல உள்ள வலி எனக்குத் தெரியுது. ஆனா நானும் சந்தோஷமா இல்லை ஆஷிக். உன்னை உடைக்கிறதுக்கு முன்னாடியே நான் உடைஞ்சு போயிடுறேன். உன்கிட்ட மனசு விட்டு பேசணும் போல இருக்கு. ஆனா உன்னை என்னால மறுபடியும் நம்ப முடியும்னு எனக்குத் தோனலை.’ என்று தனக்குள் வருந்தியவள், கண்கள் ஈராமாக அங்கிருந்து சென்றாள்.
கோபத்தில் தன் அறையில் உள்ள அனைத்தையும் கீழே தட்டிவிட்டு, தன் கண் எதிரே இருந்த கத்தியை எடுத்தவன் தன் மார்பில் குத்த போக, அதன் மேல் அவள் அள்ளி தந்த முத்தத்தின் முத்திரை, அவளது இதழின் வடிவாய் இருக்கத் தன் பிடியைத் தளர்த்தியவன்,
"ஏன் ஜியா, நான் நெருங்கி வந்தா விலகி போற? நான் விலகி போனா என்னை இன்னும் உன் பக்கம் நெருக்கமாக்குற? அப்புறம், என்னை அதே தனிமையில தள்ளிவிட்டுட்டு போயிடுற ஏன்? முடியலைடி...” என்றவன், நெருப்பென அவன் மொழிந்த வார்த்தைகளில் வெந்துருகி கொண்டிருந்தான்.
பல ரிங்கிற்கு பிறகு அட்டென்ட் செய்த ஜியா, அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வரும் முன்பே, "சாரி ஜீவா, பக்கத்துல ஒருத்தங்க இருந்தாங்க அதான் ஃபோன் எடுக்க முடியலை.” என்று கண்ணீர் தளும்பக் கூற,
"அப்போ நான் சொல்றதெல்லாம் உனக்கு முக்கியம் இல்லை, யாரும் உன் பக்கத்துல இருந்தா என் கால அட்டென்ட் பண்ண மாட்ட?"
"இல்லை ஜீவா..."
"உனக்குப் பனிஷ்மென்ட் பத்தாது, வேற எதாவது பெருசா தரணும்."
"ஜீவா ப்ளீஸ்..."
"எங்க இருக்க?"
"நான் மெயின் பசார்ல ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."
"சூப்பர், பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன் நீ அங்கேயே இரு.” என்றவன், ஜியாவிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதற்குள், தன் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் கூறியது போலவே அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் தன் ஆடி காரில் விருட்டென்று அவள் முன்பு வந்தவன் புன்னகை தளும்ப, "ஹாய் டார்லிங்!” என்று கண்ணடிக்க, “டார்லிங் உனக்கு மேனர்ஸே தெரியலை, உன் பழைய ஃப்ரண்ட் ஆசையா ஹாய் சொல்றேன், பதிலுக்கு ஒரு ஹலோ கூடச் சொல்ல மாட்டிக்கிற? போடா, நீ என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துற?
சரி அதை விடு, எனக்கு உன்கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. நீ என்ன பண்ற, ஓடி போய் அதோ தெரியுதா? ரொம்பக் கூட்டமா இருக்கே, அந்த ஒயின் ஷாப்தான் அங்க போய் சில்லுன்னு ஒரு பியர் வாங்கிட்டு... ஏய் ஏன் அப்படிப் பார்க்கிற? இன்னும் அப்படியே கொஞ்சம் தள்ளி போனா ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கும். அங்க போய் ***” என்று வன்மமாய் புன்னகைத்தவன், "இந்த நேரத்துல உன் நண்பனுக்கு என்ன தேவைனு உனக்கே தெரியும், சீக்கிரமா வாங்கிட்டு வந்திரு. நான் இங்கேயே வெயிட் பண்றேன்.” என்றான்.
"ப்ளீஸ் ஜீவா, அதெல்லாம் எப்படி ஜீவா நான்... ப்ளீஸ் என்னை விட்ரு." என்று கெஞ்சியவளைப் பார்த்து முறைத்தவன்,
"என் கன்னத்துல பளார்னு ஒன்னு கொடுத்தியே, அப்போ யோசிச்சுருக்கணும். போ, அவ்வளவு சீக்கிரம் உன்னை நிம்மதியா வாழ விட்றமாட்டேன், சீக்கிரமா போயிட்டு வா.” என்றான் உறுதியாக.
டாஸ்மாக் கடையில் அனைத்து ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாய் ஜியா அங்கு வர, அத்தனை ஆண்களும் தகாத பார்வையோடு பார்க்க, ஒவ்வொருவரின் கொடூர பார்வையாலும் புழுவாய் துடித்தாள்.
கவுண்டரில் குடிபானத்தை விநியோகம் செய்து கொண்டிருந்தவன், ஜியாவை வக்கிரமமாய் பார்க்க, ஆஷிக் தன்னிடம், 'பயத்தைப் பார்த்து ஓடாம எதிர்த்து நில்லு.' என்று கூறிய வார்த்தைகள் அவளது செவிகளில் ரீங்காரமிட ஒரு நொடி சிந்தித்தவள், இழந்த தன் தன்னம்பிக்கையை மீட்டெடுத்தவளாய், முகத்தில் தைரியமும் கண்களில் கோப வெறியோடு தீ பிழம்பெனத் தன் பார்வையாலே எரிப்பது போலப் பார்க்க, அதுவரை அவளை வக்கிரத்தோடு பார்த்தவன் ஒருவித அச்சத்தோடு பார்க்க, அவனையும் சேர்த்து மற்றவர்களையும் பார்த்து முறைத்துவிட்டு. அதே தைரியத்தோடு ஜீவாவின் முன் வந்து நின்றவள், மதுபானத்தை அவனிடம் கொடுத்துவிட்டு விழிகளில் தீப்பொறி தெறிக்க,
"அவ்வளவு தானா? அவ்வளவு தான் உன்னால முடியமா? அத்தனை பேரும் என்னைத் தரக்குறைவா பார்க்கணும், அதுக்குத் தானே? பழிவாங்கி முடிச்சுட்டியா? இதுக்கு மேல பண்றதுக்கு என்ன இருக்கு? அதான் என்னை என்னவெல்லாம் பண்ணணுமோ அது எல்லாத்தையும் பண்ணிடீங்களே? மிச்சம் ஏதாவது இருந்தால் தானே? இனிமே ஏதும் பண்ணணும்னா புதுசா யோசிக்கணும்ல? யோசி, நான் வெயிட் பண்றேன்.
இதெல்லாம் பத்தாது, இன்னும் நல்லா அப்படியே நான் நொறுங்கிப்போகணும் அந்த அளவுக்குப் பெருசா ஏதாவது பண்ணு. தனியா பண்றதுக்குக் கஷ்டமா இருந்தா உன்னோட கூட்டாளிகளையும் சேர்த்துக்கோ.” என்று அவனைத் தன் பார்வையாலும் வார்த்தையாலும் சுட்டெரித்தவள், அங்கிருந்து கிளம்பப்போனவள் பின்பு எதையோ யோசித்தவளாய் தன் கையில் இருந்த பாக்கெட்டை எடுத்து அவன் பக்கம் திரும்பி, அருவறுப்போடு அவனைப் பார்த்து, “சீ...” என்றவாறு தன் கையில் இருந்த பாக்கெட்டை, அவன் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து ஒரு புயலை போல அவனைக் கடந்து சென்றாள்.
நடையில் ஒரு மிடுக்கு, பார்வையில் ஒரு திமிர், தன் எதிரில் இருந்த அந்த மிருகத்தைப் பகைத்துக்கொண்டால் தனக்கு என்ன நடக்கும் என்பதை அவள் அறியாமல் இல்லை. தான் இப்பொழுது அவனிடம் நடந்து கொண்டதுக்காகத் தான் எதிர்கொள்ளப் போகும் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும் என்பதைக் குறித்த அச்சம், அவளது குருதியோடு கலந்து நாடி நரம்பு வரை சென்று அவளை நடுங்கவைக்காமல் இல்லை. இருந்தும் அந்த நொடி எதையும் பொருட்படுத்தாமல் தன் பார்வையாலே அவனைப் பளார் என்று அறைந்தாள்.
அந்த நேரம் அந்த இடத்தில வேறு எந்த ஆண்மகன் இருந்தாலும் தன்னிலையை எண்ணி வெட்கியே மாண்டிருப்பான். ஆனால் அங்கு இருந்தது ஆண் இல்லை, அவன் ஒரு மனித பிறவி கூட இல்லையே? ஏன், அவனை மிருகம் என்றாலும் அது மிகைதான். அவன் வெறும் ரத்தமும் சதையும் கொண்ட உணர்ச்சியற்ற ஓர் ஊன் வெறியன் என்பதை ஜியா தன் நினைவில் வைத்திருந்தால்! இனி நிகழ இருப்பதைத் தடுத்திருக்கலாமோ?
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 18, 19 & 20

Last edited: