- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 18
கோபத்தின் உச்சியில் இருந்த ஜீவாவை, 'உன்னால இதைத் தவிர வேற என்ன பண்ண முடியும்' என்று ஜியா கூறிய வார்த்தைகள், ஊசி போலத் துளைக்க க்ரோதத்தில் தன்னால் முடிந்த வரை காரின் ஹாரனை வேகமாக அழுத்தியவன், தன் அருகில் இருந்த மதுபானத்தை வெளியில் தூக்கி எறிய, காரின் பாதித் திறந்திருந்த கண்ணாடியில் பட்டு, எறிந்த பாட்டிலின் கண்ணாடி துண்டுகள் அவனது தோளையும் இமையையும் பதம் பார்க்க அது, 'எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல' அவனது க்ரோதத்தை இன்னும் தூண்டிவிட்டது.
ஜீவாவின் கண்களில் தன்னை அவமதித்த ஜியாவை பழி வாங்கவேண்டும் என்கிற வெறி அப்பட்டமாக வெளிப்பட்டதற்கு, சிவந்த அவனது கண்களை விடப் பெரிய சாட்சி எதுவும் இல்லை.
அவனது கோபத்தைச் சிறிது நேரத்திற்குக் கலைக்கும் விதமாய் அவனது அலைபேசி தொடர்ந்து சிணுங்கிக்கொண்டே இருக்க, சில நொடிகளுக்குப் பிறகு தன் அலைபேசியைக் கையில் ஏந்தியவனின் கண்களில் Sk காலிங் என்ற பெயர் புலப்பட்டது.
அவ்வளவு நேரம் கோபமாய் இருந்தவனின் விழிகளில் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக்கொள்ள மெய் விதிர்த்தான் ஜீவா.
அலைபேசியை அட்டென்ட் செய்யாமல் விட்டவன், "இந்த நேரத்துல கால் பண்றான், ஜியா பத்தி கேட்குறதுக்காகத்தான் ஃபோன் பண்ணிருப்பானோ? இப்போ நடந்தது மட்டும் தெரிஞ்சா, ஒரு பொண்ணைக் கூட ஹாண்டில் பண்ண முடியாதானு கத்துவானே?"
என்றவனின் முகத்தில் கோபம், பயம் என இரண்டும் ஆட்கொள்ள, அவனிடம் என்ன பேசவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவா.
***
நியூயார்க் நகரமே பனியின் துளியில் மூழ்கிருக்க, ஒருவன் மட்டும் அந்தக் குளிரிலும் பல ஐஸ் கட்டிகளுக்குள்ளே ஸ்விமிங் ஃபூலில் தன் மூச்சை அடக்கிக்கொண்டு கிடக்க, விடாமல் ஒலித்த அலைபேசியில் நீந்தி கொண்டு வெளியே வந்தவன், தன் தலையைத் துவட்டியவாறே க்ளாசில் மதுபானத்தை ஊற்றி, அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் பருகிவிட்டு அலைபேசியை அட்டென்ட் செய்து,
"ஐ வில் பீ இன் தர்ட்டி மினிட்ஸ்.” என்றவன், மீதமுள்ள மதுபானத்தை ஒரே தடவையில் தன் வாயில் சரித்துவிட்டு, தன் அறைக்குச் சென்று தன்னைக் கருப்பு நிற கோர்ட் சூட்டிற்குள் புகுத்திக்கொண்டு, தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தான்.
அங்கே கார்னரில் இருந்த டேபிளில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் கைகளைப் பிசைந்தபடி, அமர்ந்திருப்பதைப் பார்த்தவனின் இதழில் புன்னகை தானாக வந்து ஒட்டிக்கொள்ள, தன் கோர்ட்டின் பொத்தானை அவிழ்த்துவிட்டு,
"ஹாய் பேபி!” என்று அழைத்தவாறு அவளது கன்னத்தில் இதழ் பதித்து அவளது எதிரே வந்து அமர்ந்தான்.
அவன் வந்ததும் அந்தப் பெண் அவனது கையைப் பற்றிக்கொண்டு, "ஏன் இவ்வளவு நேரம்?” என்று பதற்றத்துடன் கூற,
அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், "சொன்னேன்ல தர்ட்டி மினிட்ஸ்ல வரேன்னு... ஸோ அயம் நாட் லேட், யு கேம் இயர்லியர்.” என்று தன் தோள்களைக் குலுக்கியவாறே கூறி, தன் அலைபேசியில் கேண்டி க்ரஷ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்க,
அவளோ தன் முகத்தில் பயம் தொனிக்க, “ஓகே, ஐ ஹாவ் சம்திங் இம்பார்ட்டண்ட் டு ஸே.” கூற,
அவனோ, “தென் ஸே, ஐ டோன்'ட் ஹாவ் மச் டைம்.” என்று கேமில் மூழ்கியவாறே தொடர, அவளோ பதற்றம் மாறாமல், "ஐ ஹாவ் மிஸ்ட் மை பீரியர்ட்ஸ். ஐயம் ப்ரெக்னன்ட்...” என்று கண்கள் கலங்க கூற, அவள் கூறிய மறுநொடி அவனது போனில் லெவல் கம்ப்ளீடட் என்று குறுஞ்செய்தி வர, “ஏய் ஐ காட் இட்!” என்று கத்தியவன் நிமிர்ந்து அவளை நோக்கி,
"கங்கிராட்ஸ் சந்தியா! சந்தோஷமான விஷயத்தை ஏன் சோகமா சொல்ற?"
"ஆர் யு சீரியஸ் அபௌட் இட்?"
“எஸ் பேபி!” என்று அவன் கூறியதும், முகத்தில் இருந்த பதற்றம் மறைந்து அந்தப் பெண் நிம்மதி பெருமூச்சு விட்டு,
"நீ என்ன சொல்லுவியோனு நான் பயந்துட்டேன், உங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துக்குவாங்கல்ல?"
"வாட்! கல்யாணமா? உன் கூடவா? குட் ஜோக்!"
"நோ ஐயம் சீரியஸ்."
"சந்தியா, குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாத."
"நான் உன் குழந்தைக்கு அம்மா ஆக போறேன், நீ இப்படிப் பேசுற?"
"அதான் கங்ராட்ஸ் சொன்னேனே?"
"ரெஸ்பான்சிபிலிட்டி..."
"அது உன்னுடையது."
"நீ இல்லாம நான் மட்டும் தனியா ப்ரெக்னன்ட் ஆனேனா என்ன?" என்றவளின் பேச்சில் கோபம் தெரிய அவனோ எந்தவித சலனமும் இன்றி,
"இல்லைதான்... ஆனா நான் ப்ரெக்னன்ட் ஆகலையே? குழந்தை யார் வயித்துல இருக்கு? உன் வயித்துல இருக்கு, அப்போ யாரு ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்கணும்? நீ எடுக்கணும்."
"இப்போ முடிவா என்ன சொல்ல போற?"
"டேக் ரெஸ்ட், உடம்பப் பார்த்துக்கோ, வேலைக்குச் சாப்பிடு, அப்புறம் இந்த மாதிரி ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. ஓகே, ஐயம் டன் பாய்!” என்று அவன் தன் இருக்கையில் இருந்து எழும்பும் நேரம் அவனது கரம் பிடித்துத் தடுத்தவள்,
"எல்லாம் பண்ணிட்டு இப்போ நழுவ பார்க்கிறியா?"
"உனக்கு இவ்வளவு ப்ராப்ளமா இருந்தா, நீ சரியான ப்ரீகாஷன்ஸ் எடுத்திருக்கணும்."
"நான் எடுக்கணுமா, ஏன் நீ எடுக்கக் கூடாதா?” என்று கண்கள் கலங்கிய நிலையில் அவள் கேட்க,
"நான் ஏன் எடுக்கணும்? நானா ப்ரெக்னன்ட் ஆனேன்?” என்று ஏளனமாய் சிரிக்க,
"அப்போ என்கூடப் பழகுனது?"
"அதுவா... லெட் மீ எக்ஸ்ப்ளெயின் இட்... கடைக்குப் போறோம், மார்க்கெட்ல புதுசா ஒரு ஒயின் வந்திருக்கு டேஸ்ட் பண்ணி பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும்னு கடைக்காரன் சொல்றான். சரினு டேஸ்ட் பண்றோம், சொன்ன மாதிரியே நல்லா இருக்கு. மறுபடியும் வாங்கிக் குடிக்கிறோம். அப்புறம் இது பழசாகும் வேற புது ப்ராண்ட் வரும், அது நல்லா இருக்கும்.
மறுபடியும் வாங்கிக் குடிச்சோம் என்கிறதுக்காகப் பழசையே வாழ்க்கை முழுக்கக் குடுச்சுட்டு இருக்க முடியுமா என்ன? அதே மாதிரிதான் உன் சர்வீஸ் எனக்குப் புடிச்சுருந்தது, அதனால உன்கூடக் கொஞ்சம் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணினேன். புடிச்சுருந்தது என்கிறதுக்காக வாழ்க்கை முழுவதும் உன்னை என் கூடவே வச்சுக்க முடியுமா என்ன?
கொஞ்சம் மெச்சூர்டா திங்க் பண்ணு, நீ ஒன்னும் பதினாறு வயசு பொண்ணு இல்லை. நானும் உன் ஃபர்ஸ்ட் லவ் இல்லை. இப்படி டிராமா பண்றதுக்கு..."
"ஸ்மார்ட்டா பேசுறியா? ஆனா உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறத தவிர வேற வழியேயில்லை. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் ஆகணும், இல்லனா நான் கோர்ட்டுக்கு போவேன். எந்த கோர்ட்டும் DNA டெஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.” என்றவளின் பேச்சில் தைரியம் வெளிப்பட,
வாடிய முகத்துடன், "கல்யாணமா? நாம பொறுமையா பேசலாம்.” என்றவன் நொடி பொழுதில் ஏளன சிரிப்புடன், “நீ யார்கிட்ட பேசிட்டு இருக்குற என்கிறதை மறந்துட்டனு நினைக்கிறேன். மேல் இடத்துல பேசுறது, ஐ விட்னஸ ரெடி பண்றதெல்லாம் எனக்கு அவ்வளவு பெரிய கஷ்டமான வேலை இல்லைனு நினைக்கிறேன். ஆனா நான் உன்னை ரொம்பவே பாராட்டுறேன் கோர்ட், DNA டெஸ்ட் நீ என்னைப் பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிட்ட ஐ மீன் இட்... நீ இவ்வளவு யோசிக்கும் பொழுது நானும் யோசிக்கணும்ல? என்ன பண்ணலாம்? ஹான்!
நீ முதல்ல பொண்ணே இல்லையாமே? அப்படியா?"
"வாட் நான்சென்ஸ்?"
"நோ ஐயம் இன் சென்ஸ், பேசிட்டு இருக்கேன்ல, ப்ளீஸ் குறுக்கப் பேசாத."
"நீ இப்படிச் சொன்னா எல்லாரும் நம்பிருவாங்களா என்ன?"
"கண்டிப்பா நம்புவாங்க, நம்பணும்! உன் வயித்துல வளர்ற குழந்தையைச் செகண்ட்ஸ்ல உன் கண்ணு முன்னாடியே க்ளோஸ் பண்ணிருவேன். உன்னை ஒரு பொண்ணே இல்லைனு சொல்லுவேன். ஒரு பெண்ணுக்குரிய எந்த அடையாளமும் உன்கிட்ட இல்லைனு மெடிக்கல் ஆதாரத்தோடு பப்ளிக்கா சொல்லுவேன்.
அப்புறம் இந்த DNA டெஸ்ட்டுக்கெல்லாம் எந்தப் பயனும் இல்லை. நீ ஒரு பொண்ணே இல்லாதப்போ உன்னோட வயித்துல என் குழந்தை எப்படினு கோர்ட்ல எல்லார் முன்னாடியும் கேட்பேன். அப்புறம் இந்த உலகம் உன்னை ஒரு...” என்று முடிப்பதற்குள் அவள்,
"நோ! அப்படிப் பண்ணணும்னு கனவுலையும் நினைக்காத.” என்று கதற,
"நான் அப்படித்தான் பண்ணுவேன், என்னை யார் தடுப்பாங்க? இப்படிப் பண்ணுறதுனால எனக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனா உனக்கு... எல்லா இழப்பும் உனக்குத்தான். என்கிட்ட மோதுறதை விட்டுட்டு வாழ்றதுக்கான வழிய பாரு இல்லனா...” என்றவன் நெருங்கி அவளது அருகில் வந்து, வன்மையோடு அவளது அதரத்தில் தன் ஆண் ஆதிக்கத்தைச் செலுத்தி அவளது காதோரத்தில் உரசியவாறு,
"என்னால என்ன முடியும்னு சொன்ன எனக்கு, செய்ய ரொம்ப நேரம் ஆகாது.” என்றவனின் கண்களிலும் உதட்டிலும் வக்கிரம் தலைவிரித்தாட அவள் கண்கள் கலங்க,
"உன்னை மாதிரி ஒரு சதை வெறி பிடிச்சவனை நான் பார்த்ததே இல்லை, பொறுக்கி ராஸ்கல்!” என்றவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல,
“எஸ் ஐயம்!” என்று வன்மமாய் சிரித்தான்.
பிறகு ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியவன் கான்ஃப்ரன்ஸ் ஹால் என்று பெயரிடப்பட்ட அறைக்குள் நுழையும் நேரம், அவனது அலைபேசி சிணுங்க அட்டென்ட் செய்தவன்,
"என்ன பிசியா?” என்று கேட்கும் தோரணையிலே ஒருவித ஆளுமை தெரிய, எதிர்முனையில் இருந்து எந்தப் பதிலும் வருவதற்குள் மேலும் தொடர்ந்து, “என் ஃபோனை கூட அட்டென்ட் பண்ணல?” என்று கூற, எதிர்முனையில் உள்ள நபர் பதுங்கும் குரலில்
"அது ஹாஸ்பிடல்...” என்று ஆரம்பிக்கவும்,
"கால் பண்ணிருந்தேன், நீ லீவ்னு சொன்னாங்க.” என்று எந்தவித சஞ்சலமும் இன்றி பதில் வர, எதிர்முனையில் உள்ள நபர் பதில் கூற முடியாமல் அமைதி காக்க,
அவன் அதே தோரணையில், “என்ன ஜீவா, என்ன பதில் சொல்லனு யோசிக்கிறியா?" என்று கேட்கவும்,
ஜீவா பதறிக்கொண்டு, "இல்லை, நான் ஏன் யோசிக்கணும்? ஹாஸ்பிடல் போகலை, கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் நல்லா தூங்கிட்டேன். இப்போதான் ஃபோன் பார்த்தேன்னு சொல்ல வந்தேன்.” என்றதும்,
"வீடியோ கால்ல வா.” என்று அதிகார தோரணையில் கட்டளையிட்டவன், ஜீவாவிடம் இருந்து பதில் வருவதற்குள் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் கட் செய்த மறுநொடி ஜீவாவின் அலைபேசியில் sk வீடியோ காலிங் என்று அழைப்பு வர தாமதிக்காமல் அட்டென்ட் செய்த ஜீவா, அவனைப் பேசவிட்டால் தானே ஆபத்து, நாமே முந்திக்கொள்வோம் என்று எண்ணி இயல்பாகப் பேசுவது போல, தன் உரையாடலைத் தொடங்கினான்,
"என்னடா நியூயார்க் எப்படி இருக்கு?” என்று கேட்க,
எதிர்முனையில் உள்ளவனோ முகத்தில் சிறிதும் சலனம் இன்றி, "சொல்லவே இல்லை, எப்போ உன் பெட்ரூமை நடுரோட்டுக்கு ஷிப்ட் பண்ணின?” என்று கேட்க,
அதன் பின்பே தான் ரோட்டில் நின்றுகொண்டு பேசுகிறோம் என்பது ஜீவாவின் மூளைக்கு புரிய அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. தான் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் கைகள் படபடக்க நிற்க,
எதிர்முனையில் இருந்தவனோ ஜீவாவின் பதற்றத்தைக் கண்டு தன் உதட்டில் புன்னகை தளும்ப, “செக் மேட்!” என்று கூறி, மேலும் தொடர்ந்து,
"நான் இல்லாதப்போ என்னலாமோ நடந்திருக்கு போல?" என்று விஷமமாய் கேட்க,
ஜீவாவோ அசடு வழிய, “வருண் சொல்லிட்டானா? உன்கிட்ட இப்போதைக்கு சொல்லி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நானே சமாளிச்சுக்கிறேன்னு சொல்லிருந்தேன், அவன் ஏன் சொன்னான் அவனை..."
"என்ன? நீ சமாளிக்கப் போறியா? குட் ஜோக்! அப்புறம் ஜீவா வருண் என்கிட்ட சொல்லல, ஃபோன்ல குடிச்சுட்டு உளறினான். யார்கிட்ட என்ன சொல்லணும்னு தெரியாதா உனக்கு? அவன் வேற யார்கிட்டயும் உளறிட்டா என்ன பண்றது? ஆமா ஜீவா, எனக்குத் தெரியாம நீ எதுவும் கேம் ஆடுறியா?” என்று அவன் கேட்கவும், பதறிய ஜீவா, “என்ன பேசுற? நான் உன் ஃப்ரண்ட்டா. நான் போய் அப்படியெல்லாம் பண்ணுவேனா?"
"பண்ணுவேனா இல்லை, பண்ண கூடாது. மீறி பண்ணினா என்னால என்ன பண்ண முடியும்னு நான் சொல்லி உனக்குத் தெரியணும்னு அவசியம் இல்லை.” என்று அழுத்தமாய் அவன் கூறியதின் அர்த்தத்தை, ஜீவா உணர்ந்ததிற்கு அவனது மௌனமே சாட்சியாகும்.
மேலும் தன் கேள்வி கணையைத் தொடுத்தவன், "கன்னத்துல என்ன ரத்தம் வருது?” என்று கேட்க,
"அதுவந்து..." என்று ஜீவா தடுமாறவும், "பொய் சொல்ல போறியா?” என்றவன், ‘வேஸ்டு ஜீவா, நீ சொல்றதுக்கு முன்னாடியே நான் கண்டுபிடிச்சுட்டேன்.' என்பது போலப் புருவம் உயர்த்திப் பார்க்க,
"நான் ஏன் பொய் சொல்லணும்? அது...” என்று அவன் கூறுவதற்குள்,
"ஜியாவை பார்த்தியா?” என்று மேலும் கணையை ஜீவா மீது தொடுக்க, இதற்குள் மேல பொய் சொல்லி பயன் இல்லை என்பதை உணர்ந்த ஜீவா, வேறு வழியின்றி இன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்கவும், வாய்விட்டு சிரித்தவன் சில நொடிகள் கழித்து அரக்க பார்வையோடு,
"நீ முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி நடிக்கிறியா ஜீவா? ஒன்னு தப்ப தப்பில்லாம பண்ணணும், இல்லைனா தப்ப யாருக்கும் தெரியாமலாவது பண்ணணும். ஆனா அதெல்லாம் பண்றதுக்கு மூளைனு ஒன்னு வேணும். அது உனக்குத்தான் கிடையாதே? அப்புறம் ஏன் அவளைச் சீண்டுறேன், பயமுறுத்துறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க? ஏற்கனவே உன் முட்டாள்தனத்துக்கு அவகிட்ட கன்னம் பழுக்க ஒன்னு வாங்கினியே, புத்தி வரல. ஏற்கனவே நீங்க யாரும் சரியா பண்ணாதனாலதான்...
நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கேன். மறுபடியும் ஏதாவது பண்ணின, முதல்ல உன்னைக் காலி பண்ணிருவேன். ஃப்ரண்ட்னு எல்லாம் பார்க்க மாட்டேன். இந்த கேமை ஸ்டார்ட் பண்ணினது நான், முடிக்கிறதும் நானாதான் இருப்பேன். அதை விட்டுட்டு நீ இடையில புகுந்து கத்திய என் பக்கம் திருப்பணும்னு நினைச்ச, நீ நினைச்சு முடிக்கும் பொழுது கத்தி உன் கழுத்துல இறங்கியிருக்கும்.” என்று அவன் கர்ஜிக்கவும் பதறிய ஜீவா,
"அவ நார்மல் ஆன மாதிரி தெரிஞ்சா, அதான்..."
"நார்மல் ஆனா ஆகிட்டு போறா, நம்ம லைன்ல வராத வரைக்கும் ஏன் அவளைத் தூண்டி விடுற? அவ என்ன சாதாரணமான பொண்ணுனு நினைச்சியா? ஜியாடா! இதே அவ இடத்துல வேற எந்தப் பொண்ணு இருந்திருந்தாலும், நமக்கு இவ்வளவு ரிஸ்க் இருந்திருக்காது. அது ஜியாவா இருக்கிறனாலதான் நமக்கு இவ்வளவு பிரச்சனை. நீ அவளைப் பயமுறுத்துறேன்னு ஏதாவது தூண்டிவிட்டு ஒரு கட்டத்துல என்னடா வாழ்க்கைனு அவ துணிஞ்சிட்டா, அவளை விடப் பெரிய பிரச்சனை நமக்கு வேற எதுவும் இருக்காது. நான் சொல்ற வரைக்கும் அவளை விட்டு தள்ளியே இரு புரியுதா?” என்றவனிடம்,
"புரியுதுடா, இனிமே நானா எதுவும் பண்ண மாட்டேன்.” என்ற ஜீவா, அவனைத் திசை திருப்புவதற்காக கான்ஃப்ரன்ஸ் எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்க ஜீவாவை ஒரு பார்வை பார்த்தவன்,
"போகுது” என்று ஒரே வார்த்தையில் பதிலைக் கூற,
சில நொடிகள் அமைதியாய் எதையோ உற்று கவனித்த ஜீவா கேள்வியாய், “டேய் பக்கத்துல யாரு இருக்காங்க? அந்த வாய்ஸ்...” என்றதும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவன்,
"ம்ம் அவன்தான்...” என்று பதிலளிக்க,
"இங்க இருக்கானா?” என்று தொடர்ந்த ஜீவாவிடம்,
"அவனும் வந்திருக்கான்."
"பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்காது, எப்படி இருக்கான்?” என்ற ஜீவாவிற்கு,
கோபம் தளும்ப, “இன்னும் அப்படியேதான் இருக்கான், என்னைக் கொலைகாரனை பார்க்கிற மாதிரி பார்க்கிறான். எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் வந்த இடத்துல எதுவும் பண்ண வேண்டாமேனு பொறுமையா இருக்கேன்.” என்றதும் ஜீவா தன் நண்பனின் கோபத்தைத் தனிப்பதற்காக,
"விடுடா, அவன் எல்லாம் ஒரு ஆளு? நாலு தட்டு தட்டுனா கால்ல விழுந்திருவான் நீ டென்ஷன் ஆகாத. ஆமா கல்யாண டிஸ்கஷன் எல்லாம் எப்படிப் போகுது?"
"நான் இங்க இருக்கேன், போனாதான் தெரியும். அவனுக்கும் நெக்ஸ்ட் மன்த் என்கேஜ்மெண்ட்னு கேள்வி பட்டேன்."
"உன்கிட்டயே திமிர காட்டுறானா? அவனை எதாவது பண்ணணும்டா." என்று கோபமாய் பொங்கிய ஜீவாவிடம், தன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் மிகவும் இயல்பாக,
"என்ன பண்ணுவ?" என்று முகம் கோணாமல் கேட்க,
அதற்கு ஜீவா, "என்னடா இப்படிக் கேக்குற?"
"இது என் கேள்விக்குப் பதில் இல்லையே? சும்மா வாயில பந்தா காட்டதான் உனக்குத் தெரியும். என்கிட்ட இருந்து தப்பிக்கணும், அதுக்காக சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்க." என்றவன் ஜீவா பதில் பேசுவதற்குள்,
"கான்ஃப்ரன்ஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது பாய்." என்று கூறி தன் அலைபேசியை அவன் துண்டித்த பிறகே நிம்மதி அடைந்தான் ஜீவா.
ஒரு புயல் வந்து ஓய்ந்தது போல உணர்ந்த ஜீவா நீண்ட பெருமூச்சு விட்டவாறு,
"அது எப்படிடா நீ சும்மா இருனா நான் இருக்கணுமா என்ன? சும்மா இருந்தா எப்போ நான் என் பழியைத் தீர்த்துக்கிறது? என்னால என்ன முடியுமா? ஜியா என்ன முடியும்னு நான் காட்டுறேன்டி." என்று கூறும் பொழுது அவனது குரலிலும் கண்களிலும் அதே அரக்கத்தனம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
***
நிலவே 19
ஏர்போர்ட்டில் மேனேஜர் சந்தீப் ஆதர்ஷிடம், "ஆஷிக் ஏன் இன்னும் ரிப்போர்ட் பண்ணல? யூ கைஸ் நீட் டு போர்ட் தி ஃப்ளைட்."
"சார் ஈவன் ஐயம் திங்கிங் அபவுட் இட், சார் ஆஷிக் இஸ் தேர்.” என்றவாறு ஆதர்ஷ், ஆஷிக்கின் அருகில் சென்று, "ஏன்டா லேட்?"
"ஒன்னும் இல்லை, கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்..."
"என்னாச்சு? ஆர் யு ஓகே?"
"ஓகேடா, நீ டென்சன் ஆகாத ஐயம் ஃபைன்."
"யா கம் வீ ஆர் கெட்டிங் லேட்."
இருவரும் ஃப்ளைட்டை நோக்கி தங்களின் நடையைச் செலுத்தினர். ஃப்ளைட்டில் இருந்த சில பயணிகள் விமானப் பணிப்பெண்களிடம் ஃப்ளைட் டிலே ஆனதால் சற்று சத்தம் போட, தியா அவர்களைச் சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே,
அவள் தன் சக பணிப்பெண்களிடம், "ஐ திங்க் வீ ஹாவ் டு இன்ஃபார்ம் திஸ் டு கேப்டன்.” என்று கூறிய மறுநொடி,
காக்பிட்டில் இருந்து, “குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் ஐஸ் யுவர் கேப்டன் ஆஷிக் அண்ட் கேப்டன் ஆதர்ஷ் கண்ணா, ஸ்பீக்கிங் வெல்கம் ஆல் ஆஃப் யூ ஆன் CJ 311 ட்ராவலிங் டெல்லி டு மும்பை, அப்பாலஜிஸ் ஃபார் டிலே டேக் ஆப், பட் ஐ அஷுயர் யு கைஸ் தி ஃப்ளைட் வில் பீ லேண்ட் இன் மும்பை ஆன் டைம், வீ ஹோப் யூ ஆல் வில் என்ஜாய் த ஜர்ணி வித் அஸ், ஸிட் பாக் அண்ட் ரிலாக்ஸ் பாஸ்டன் யுவர் சீட் பெல்ட் அண்ட் என்ஜாய் தி ஃப்ளைட். கேபின் க்ரூவ் ப்ரீப்பர் ஃபார் டேக் ஆப் கிராஸ் செக் அண்ட் ரிப்போர்ட்." என்றவன், ஆதர்ஷைப் பார்க்க அவன் லேசாகப் புன்னகைத்தான்.
சில நேரம் கழித்து உள்ளே வந்த தியா, "குட் மார்னிங் கேப்டன் ஆதர்ஷ்!"
"குட் மார்னிங் தியா!"
"வாவ்! கேப்டன் ஆஷிக் யு மேட் இட், யு நாட் ஒன்லி ஹாவ் மேஜிக் இன் யுவர் லுக். யு ஆல்சோ ஹாவ் இன் யுவர் வாய்ஸ்."
"ஆல் செட்."
"எஸ்"
"தியா"
"சாண்ட்விச் தானே?"
"இல்லை, தலை சுத்துற மாதிரி இருக்கு. சோ கேன் ஐ கெட் சம் லெமன் வித் சுகர்."
"ஆஷிக் என்னாச்சு?” என்று ஆதர்ஷ், தியா இருவரும் கவலையாகக் கேட்க,
"கைஸ் ஐயம் ஓகே, ஐ ஜஸ்ட் ஃபீல் லைக் டு ட்ரின்க்." என்று அவர்களை அவன் சமாதானம் செய்ய,
"ஓகே” என்றவாறு தியா அங்கிருந்து சென்றாள். சில நொடிகள் கழித்து உள்ளே வந்தவள், "ஆஷிக் யுவர் லெமன் ஜூஸ்."
"தாங்க் யு."
"கேப்டன் ஆதர்ஷ், ஹியர் இஸ் யுவர் பிளாக் டீ."
"பிளாக் டீ?"
"யா!"
"நோ தியா, ஐ ப்ரீபர் கிரீன் டீ."
"சாரி"
"இட்ஸ் ஓகே, கேன் ஐ கெட் கிரீன் டீ. இஃப் யு டோன்'ட் மைண்ட்."
"ஷுயர் கேப்டன்."
"தியா, நடாஷா இங்க இல்லையா என்ன? கொஞ்ச நாளா நான் அவளை பார்க்கவே இல்லை?"
"எஸ், ஷீ இஸ் ஆன் லீவ்."
"ஓகே” என்று அவன் கூறிய மறுநொடி, ஆஷிக்கின் கையில் இருந்த ஜூஸ் கிளாஸ் கீழே விழ, மெல்ல பாதிக் கண்கள் மூடியும் திறந்துமாய் இருக்கும் நிலையில் ஆஷிக் கீழே சரிந்தான்.
பதறிய ஆதர்ஷ் ஃப்ளைட்டில் ஆட்டோ பைலட் மோடை செட் செய்துவிட்டு, ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய ஆதர்ஷ், தியா இருவரும் சேர்ந்து செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாக, ஆஷிக் மயக்க நிலையை அடைந்தான்.
"தியா இன்னைக்கு டூட்டி டாக்டர் யாரு?"
"ஜியா"
"கால் ஹெர் ரைட் நவ்.” என்றவுடன், அவள் அங்கிருந்து ஜியாவை அழைப்பதற்காகச் செல்ல,
"கம் ஆன் தியா, கால் ஹெர் த்ரூ இன்டெர்காம்."
"எஸ் கேப்டன்” தியா கால் செய்த சில நொடிகளில் காக்பிட்டை அடைந்த ஜியா, பதற்றத்தோடு அவனது அருகில் வந்து அவனது நாடியைப் பிடித்துப் பார்த்து,
"பயப்படுறதுக்கு எதுவும் இல்லை, பல்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு, பீவரும் ஜாஸ்தியா இருக்கு, லெட் மீ ட்ரீட் ஹிம்."
"எனி எமெர்ஜென்சி லேண்டிங்?"
"நோ ஆதர்ஷ், இஃப் ஐ நீட் ஐ வில் இன்ஃபார்ம் யு." என்றவள் தியாவைப் பார்க்க, இருவரும் மெல்ல ஆஷிக்கை பிஸ்னஸ் கிளாஸிற்கு கைத்தாங்கலாகக் கொண்டு சென்று பத்திரமாகப் படுக்க வைத்தனர்.
இன்டர்கால் மூலமாக ஆதர்ஷ், ஆஷிக்கின் நிலையைப் பற்றிக் கேட்க தியா, ஜியாவிடம், "கேப்டன் ஆதர்ஷ் வாண்ட் டு ஸ்பீக் டு யு.” என்று மட்டும் கூறிவிட்டு, ஆஷிக்கின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் கண்விழிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
"ஆஷிக் எப்படி இருக்கான்?"
"இன்ஜெக்ஸன் போட்ருக்கேன், ஹீ வில் பீ ஓகே."
"ஓகே” என்றவன் தன் ஃபோன் காலை துண்டிக்க,
ஆஷிக்கின் அருகில் வந்தவள், தியா அவனது கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சங்கடமாகப் பார்க்க தியாவோ,
"என்ன? இங்கேயே நின்னுட்டு இருக்க? அதான் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டல, எமெர்ஜென்சினா கூப்பிடுறேன்.” என்று கூற,
ஆஷிக் தன் கண்களைத் திறந்து மெல்ல நிமிர்ந்து உட்கார, ஜியா அவனது முகத்தைத் தன் கையில் ஏந்தி, "ஆஷிக் ஆர் யு ஓகே? ஐ க்நோ யு வில் பீ ஓகே.” என்று தன் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய கூற, சற்று நேரம் அவளையே பார்த்தவன் அவளது கையைத் தட்டிவிட்டுவிட்டு அங்கிருந்து எழும்ப முயற்சி செய்ய,
மேலும் கண்கள் இருண்டு அதே இருக்கையில் அமர்ந்தவனைக் கைத்தாங்கலாக பற்றிய ஜியா, "ஆஷிக் வாட் யு ஆர் டூயிங், யு நீட் ரெஸ்ட்."
"ஷட் அப், டோன்'ட் டச் மீ காட் இட்!” என்று அவளது கையை உதற, ஜியாவைப் பார்த்து புன்னகைத்தவாறே ஆஷிக்கின் அருகில் வந்து அமர்ந்த தியா, "ஆஷிக் இட்'ஸ் மீ, யு ப்ளீஸ் ரிலாக்ஸ்."
"அவளை இங்க இருந்து போகச் சொல்லு.” என்று அவன் மீண்டும் கோபமாகக் கூற,
"ப்ளீஸ் டாக்டர் ஜியா இங்க இருந்து போங்க.” என்று தியா விஷயமமாய் புன்னகைக்க,
ஆஷிக், தியாவின் கையைப் பற்றியவாறே எழும்ப முயற்சிக்க, "ஆஷிக் கொஞ்சம் ரெஸ்ட் எடு."
"நோ தியா ஐயம் ஓகே, லெட் மீ கோ டு காக்பிட்."
"ஆர் யு ஷுயர்?"
"எஸ் தியா, லீவ் மை ஹாண்ட், ஐ வில் கோ பை மை ஸெல்ப்.” என்றவன் அங்கிருந்து செல்ல,
நிதானத்தை இழந்தவன் தன் கண்கள் சொருக தரையில் நெடுஞ் சாண்கிடையாகக் குப்புற வீழ்ந்தான்.
தியாவின் சத்தம் கேட்டு உள்ளே வந்த ஜியா, ஆஷிக் முதுகில் ரத்தம் வர பேச்சு மூச்சு இல்லாமல் கீழே கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, அவனது முகத்தைத் தன் மடியில் ஏந்தியவாறு கண்கள் ஈரமாக, ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய,
"ஜியா டூ சம்திங்."
"தியா ஹீ நீட் டு பீ ஹாஸ்ப்பிட்டலைஸ்ட்.”
"வாட்?"
"இன்ஃபார்ம் கேப்டன் அபௌட் எமெர்ஜென்சி லேண்டிங்."
"யா ஐ வில், ஆஷிக்கப் பாத்துக்கோ."
"எஸ்"
ஆதர்ஷிடம் விஷயத்தைக் கூறிய தியா, ஆஷிக்கின் அருகிலே இருக்க ஜியா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தாள்.
காக்பிட்டில் ஆதர்ஷ், ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலர் (ATC) அதிகாரியிடம், “ATC ஜெய்ப்பூர் கம் இன் திஸ் இஸ் CJ 311, கேன் யு ஹீயர் மீ ஓவர் அண்ட் அவுட்"
"எஸ் CJ 311 ஐ கேன் ஹீயர் யு ஓவர் அண்ட் அவுட்."
"ATC ஜெய்ப்பூர் மெடிக்கல் எமெர்ஜென்சி ஆன் போர்டு வீ ரெக்யூஸ்ட் பெர்மிஷன் டு லேண்ட் ஓவர் அண்ட் அவுட்."
"ஓகே வீ வில் கெட் பேக் டு யு ஓவர் அண்ட் அவுட்."
"ATC ஜெய்ப்பூர் ப்ளீஸ் கம் இன்.” என்று அவன் பேச பேச, மும்பை ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் அதிகாரியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
மீண்டும் முயற்சி செய்தவன், "ATC ஜெய்ப்பூர் ப்ளீஸ் கம் இன், மெடிக்கல் எமெர்ஜென்சி வீ ஆர் ரெடி டு லேண்ட் கேன் யு ஹீயர் மீ ஓவர் அண்ட் அவுட்."
"எஸ் CJ 311 ட்ராபிக் இஸ் கிளீயர்ட் பெரமிட்டட் டு லேண்டிங்.” என்று அங்கிருந்து பதில் வர, ஃப்ளைட்டை தரையிறக்க தயாரானான்.
மும்பையில் தரையிறக்க வேண்டிய ஃப்ளைட்டை ஜெய்ப்பூரில் தரையிறக்க வேண்டியதாகி போனதால், மக்களுக்கு அறிவிப்பு விடுக்கத் தாயரானான்.
"குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் ஐஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் கண்ணா ஃப்ரம் தி டெக், பிக்காஸ் ஆஃப் மெடிக்கல் எமெர்ஜென்சி இன் தீ ஃப்ளைட் வீ நீட் அ எமெர்ஜென்சி லேண்டிங், ஸோ ஐ ரெக்யூஸ்ட் எவெரி ஒன் டூ கோ ஆப்ரேட் வித் அஸ், ப்ளீஸ் எவெரி ஒன் பாஸ்டன் யுவர் சீட் பெல்ட். கேபின் க்ரூவ் ப்ரீப்பர் ஃபார் லேண்டிங், க்ராஸ் செக் அண்ட் ரிப்போர்ட்."
ஃப்ளைட் அடுத்தப் பத்து நிமிடத்தில் பத்திரமாகத் தரையிறங்க, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்சில் இருந்த கம்போண்டர்களின் உதவியுடன் ஆஷிக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அரை மணிநேர இடைவெளிக்கு பிறகு ஃப்ளைட் மீண்டும் புறப்பட்டது.
***
நிலவே 20
பலமணிநேர ட்ரீட்மெண்ட்டிற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து ஆஷிக் கண்விழிக்க, அவன் அருகில் வந்த ஆதர்ஷ், என்னடா ரோமியோ, ஒரு செகண்ட்ல என் கண்ணையே வேர்க்க வச்சுட்டியே?” என்று விளையாட்டாக அவனது தோளில் தட்ட,
"ஆ..." என்று புன்னகைத்தவாறே ஆஷிக் எழும்பி உட்கார,
"என்னடா வலிக்குதா?"
"லைட்டா..." என்றவன் அமைதியாய் இருக்க,
"என்ன எதுவும் பேசமாட்டிக்கிற?"
"என்ன பேச சொல்ற? இது ஏதோ ஸ்வாமிஜியோட ஆஷ்ரமத்துக்கு வந்த மாதிரி ரொம்ப அமைதியா இருக்கு, ஒரு நர்ஸ் கூட இல்லை கடுப்பா இருக்குடா. கண்முழிச்சு பார்த்தா ஒரு ஹாட் நர்ஸ் என் முன்னாடி இருப்பாங்கனு நினைச்சா பாகுபலி, ராணா மாதிரி நீ என்னையே விறைச்சு பாத்துட்டு இருக்க.” என்று கூற,
"அடப்பாவி! நீ திருந்தவே மாட்டியாடா? உன்னை எல்லாம்...” என்று ஆதர்ஷ் அடிக்க வர ஆஷிக், "விளையாட்டுக்குடா..." என்று சிரிக்க,
தன்னைக் காப்பாற்ற போய்தான் தன் ஆஷிக்கிற்கு இந்த நிலைமை என்று எண்ணியே, அவன் எப்பொழுது கண்விழிப்பான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜியாவிற்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. சில நொடிகள் கழித்து உள்ளே வந்த நர்ஸ், "சத்தம் போடாதீங்க, பேஷண்ட் டிஸ்டர்ப் ஆவாங்க, டாக்டர் வர்ற டைம்.” என்று கூற,
ஆதர்ஷைப் பார்த்துக் கண் சிமிட்டிய ஆஷிக், "உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ணு என் பக்கத்துல இருந்தா, காலத்துக்கும் பேஷண்டா இருக்கலாம். அட சிரிக்கிறீங்களா என்ன? செமையா இருக்கீங்க.” என்று கூற,
அந்த நர்ஸ், "நல்லாதான் பேசுறீங்க...” என்று அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் ஜியா உள்ளே வர அந்தப் பெண், “குட் ஈவினிங் மேடம்."
"குட் ஈவினிங்” என்று பதிலளித்துவிட்டு ஆஷிக்கைப் பார்க்க, ஆஷிக்கோ ஜியாவைப் பார்த்து முறைத்தவண்ணம் இருந்தான்.
"ஹாய் ஜியா!"
"ஹாய் ஆதர்ஷ்!” என்று ஆதர்ஷும் ஜியாவும் சின்னதாகப் புன்னகைத்தனர்.
ஜியா நர்ஸிடம், "பேஷண்ட் ஹெல்த் எப்படி இருக்கு?” என்று கேட்க,
ஆஷிக் சத்தமாக ஜியாவிற்குக் கேட்கும்படி ஆதர்ஷிடம், “இவ்ளோ நேரம் நல்லாதான் இருந்துச்சு, அதான் மேடம் வந்துட்டாங்கல்ல இனிமே...” என்று ஓரக்கண்ணால் ஜியாவைப் பார்க்க
அவள் தன்னைப் பார்த்து முறைப்பதை அறிந்து, "அட இனிமே எல்லாம் சரியாகிரும்னு சொன்னேன்டா ஆதர்ஷ்.” என்று கூற, அவனைப் பார்த்து முறைத்த ஜியா, ரிபோர்ட்ஸை பார்த்த வண்ணம் நர்ஸிடம், "டெம்ப்ரேச்சர் எப்படி இருக்கு?"
"லாஸ்ட் டைம் பண்ணும் போது நார்மலாதான் இருந்துச்சு."
"சரி இப்போ செக் பண்ணுங்க."
"ஓகே மேடம்” என்றவள் ஆஷிக்கிற்கு டெம்ப்ரேச்சர் பார்த்துவிட்டு, "மேடம் 102 இருக்கு."
"வாட்! பட் அவ்ளோ டெம்ப்ரேச்சர் இருக்கக் கூடாது.” என்றவள் மேலும் தொடர்வதற்குள் குறுக்கிட்ட ஆஷிக் அந்த நர்ஸை பார்த்து,
"நான் என்ன பண்ணுவேன், என்னோட இந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம். இவ்ளோ ஹாட்டான ஒரு பொண்ணு அதுவும் இவ்ளோ பக்கத்துல வந்து நின்னா என் டெம்ப்ரேச்சர் ஆட்டோமெட்டிக்கா ஹாட் ஆகுது. ஐ மீன் ரைஸ் ஆகுது.” என்று கூறி கண்சிமிட்டியவன் ஜியாவைப் பார்க்க, கோபத்தில் அவள் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். அந்த நர்ஸ் அவன் கூறியதிற்கு வெட்கப்பட, அதைக் கண்ட ஜியா மேலும் எரிச்சல் அடைந்தவளாய்,
"அச்சச்சோ சாரி ஆஷிக், எங்களோட ஸ்டாப் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். மன்னிப்பு கேட்டா போதுமா என்ன? ப்ராய்சித்தமும் பண்ணணும்ல?"
"ம்ம் அதெல்லாம் ஒன்னும் வேணாம், சீக்கிரமா இங்க இருந்து விடுதலை பண்ணினா அதுவே போதும்.” என்று முணுமுணுத்தவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவள்,
"அது எப்படி சார் அப்படியே விட முடியும்? ட்ரீட்மெண்ட் பண்ணிதான் ஆகணும்.” என்றவள்,
நர்ஸிடம், "பேஷண்டுக்கு இந்த இன்ஜெக்ஸன் போட்ருங்க."
"எஸ் மேடம்” என்று அவள் முடிப்பதற்குள் வெகுண்டெழுந்த ஆஷிக்,
"என்ன இன்ஜெக்ஸனா? ஏன், எதுக்கு? யாருக்கு? எனக்கு வேண்டாம். காய்ச்சல் எல்லாம் அப்படியே சரியா போயிரும்.” என்று மூச்சு விடாமல் கேள்வியும் கேட்டு பதிலும் கூறி முடிக்க, தன் சிரிப்பை அடக்கிக்கொண்ட ஜியா,
"இல்லை இல்லை, கண்டிப்பா போட்டுதான் ஆகணும்."
"டேய் ஆதர்ஷ் இங்க என்ன டுவெண்ட்டி டுவெண்ட்டி மேட்சா நடக்குது? ரசிச்சுட்டு இருக்க வேண்டாம்னு சொல்லுடா."
"ஜியா, ஆஷிக் என்னோட உயிரு... என்ன வேணும்னாலும் பண்ணுங்க, ஆனா வலிக்காம பண்ணுங்க. அவன் அழுறத என்னால தாங்கிக்க முடியாது. நான் வெளியில போயிட்டு வரேன். வரேன்டா...” என்றவன், ஜியாவைப் பார்த்து சிரித்தவாறு அங்கிருந்து கிளம்ப,
"டேய் துரோகி நில்லுடா.” என்று ஆஷிக், ஆதர்ஷை திட்ட,
"என்ன பார்த்துட்டு இருக்கீங்க? இன்ஜெக்ஸன் போடுங்க.” என்று ஜியா கூறியதும் நர்ஸ், “எஸ் மேடம்” என்றவாறு தன் கையில் இன்ஜெக்ஸனை ஏந்தி அவனது அருகில் வர, நர்ஸின் கையில் உள்ள ஊசி அவனது கண்ணுக்கு போர் வாள் போலத் தெரிய, பெட்டில் இருந்து எழும்பியவன், "ஜஸ்ட் கெட் அவுட்! ஜியா ப்ளீஸ், ஆஸ்க் ஹெர் டு கெட் அவுட்.” என்று கூற,
ஜியா, "நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று நர்ஸை வெளியே போகச் சொல்ல, ஜியாவின் அருகில் வந்த ஆஷிக்,
"தாங்க் காட்! நல்ல வேளை போய்ட்டா.” என்று தன்னை ஆசுவாசப்படுத்த,
"ஒழுங்கா வாய மூடிட்டு உக்காரு, இன்ஜெக்ஸன் போடலைனா பீவர் ஜாஸ்தியா ஆகிரும் சரியா?"
"ஜியா ப்ளீஸ், உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஊசினா பயம்னு. ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம்."
"வேண்டாம்னா காய்ச்சல் சரியாக வேண்டாமா?"
"ஆகணும், ஆனா ஊசி வேண்டாம்."
"அப்போ என்ன பண்ண? நான் வேணும்னா உன்னைக் கட்டி பிடிச்சுக்கவா?” என்று எதேர்ச்சையாக கேட்டவள் பிறகு தான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு செய்வதறியாது திகைக்க, அவள் கேட்ட மறுநொடி,
"ஆமா என்னை அப்படியே கட்டி பிடிச்சுக்கோ, என் காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்." என்று புன்னகைத்தவாறு அவளது கையைப் பிடிக்க, இருவரும் பழைய நினைவுக்குள் தங்களைப் புகுத்திக் கொண்டனர்.
***
அது பசுமையான காலம் அவர்கள் இருவரும் காதலில் மூழ்கியிருந்த நேரம்,
அன்றொருநாள் ஆஷிக், ஜியாவின் மடியில் படுத்துக்கொள்ள, ஜியா அவனது தலையைக் கோதிவிட்டவாறு, “ஆஷிக் உடம்பெல்லாம் கொதிக்குது, என்னாச்சு? இப்போதான் பார்க்குறேன்."
"ஆமா ஜியா பீவர், நேத்து மலையில மேட்ச் விளையாடுனேன்ல அதான்மா."
"அப்போ ஏன் என்னைப் பார்க்க வந்த? வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல?"
"நீயும் நானும் மீட் பண்றதே அவ்ளோ கஷ்டமா இருக்கு, அதான்டா."
"ஹாஸ்பிடல் போனியா?"
"என் செல்லமே... போனேன், மருந்து தந்திருக்காரு."
"எப்போ போன?"
"காலையில."
"அப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கணுமே, ஊசி போட்டியா, இல்லையா?"
"இந்த உலகத்துலயே ஆஷிக் பயப்படுற ஒரே விஷயம் இந்த ஊசிதான், உனக்குத்தான் தெரியுமே?"
"நீ என்ன குழந்தையா?"
"ஆமா...” என்றவன் நிமிந்து அவளது முகத்தைப் பார்க்க,
"எல்லாம் விளையாட்டுதான்... ஊசி போட்ருந்தா இப்போ பீவர் போயிருக்கும்ல?” என்று அவள் கூற எழுந்து நின்றவன்,
"அட என்ன நீ? இதை விடமாட்டியா? உன்னைப் பார்க்க ஆசையா வந்தா... ஜியா விடுமா, பீவர்தான சரியாகிரும்."
"மருந்து சாப்பிடாம எப்படிச் சரியாகும்?"
"ஆகும், மருந்து வேண்டாம்."
"என்ன வேண்டாம், காய்ச்சல் சரியாக வேண்டாமா?"
"ஆகணும், ஆனா ஊசி வேண்டாம்."
"அப்போ என்ன பண்ண? நான் வேணும்னா உன்னை கட்டி பிடிச்சுக்கவா?"
"அட நல்லா ஐடியாவா இருக்கே?” என்று அவளது அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டவனை விலக்க முயன்றவள்,
"ஆஷிக் விடு."
"இங்க பாரு, நீ மட்டும் என்னை இப்படியே கட்டி பிடிச்சுக்கிட்டே இருந்த, காய்ச்சல் எல்லாம் படிபடியா குறைஞ்சிரும்."
"அப்படியா? அப்போ காய்ச்சல் ஒரேடியா குறைய என்கிட்ட நல்லதா ஒரு மருந்து இருக்கு."
"அது என்னது?"
"ஆனா அதுவேணாம்."
"ஏன்?"
"அது வேணும்னா நீ ஒன்னு பண்ணணும்."
"என்னது?"
"நீ பண்ணமாட்ட."
"ஏய் என்னனு சொல்லு, கண்மூடி திறக்குறதுக்குள்ள பண்ணி காட்றேன்."
"ம்ம்...” என்றவள் மெல்ல அவனது காதுக்குள், "ஹண்ட்ரட் கிஸ்ஸஸ்..."
"வாட்! தென் ஐயம் ரெடி!"
"ம்ம் அதுக்கு முன்னாடி நீ ஊசி போட்டுக்கணும்."
"என்ன?"
"நான்தான் சொன்னேன்ல, உன்னால முடியாதுனு... யோசிச்சுக்கோ, நாளைக்கு ட்ரெயினிங் போயிருவ ஹண்ட்ரட் டேஸ் கழிச்சுதான் மீட் பண்ணுவோம். அதுவரை என்னோட ஞாபகர்த்தமா குடுக்கலாம்னு நினைச்சேன். சரி வேண்டாம், இப்போ என் கூட ஹாஸ்பிடல் வந்து ஊசி போட்டா நான் சொன்னது கிடைக்கும் இல்லனா, பாய்."
"ஏய் போகாத ப்ளீஸ்..."
"என்ன?"
"ஃபைன்! நான் ஊசி போட்டுகிறேன், பட் நீ என்னை ஏமாத்த கூடாது."
"ஓகே” என்றவர்கள், ட்ரீட்மெண்ட் முடிந்து ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வரும் பொழுது ஆஷிக், "ச்ச... நல்லா வலிக்கிற மாதிரி குத்திட்டான் அந்த டாக்டர்."
"ஆஷிக் உன்னோட ஒரே சிரிப்புதான்."
"அதெல்லாம் இருக்கட்டும், ம்ம்... சீக்கரம் ஸ்டார்ட் பண்ணு, டைம் இல்லை."
"ஓகே” என்றவள் அவனைக் கண் மூட சொல்லிவிட்டு, அவனது பைக்கின் சாவியையும் எடுத்துவிட்டு மெல்ல அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி, "ஆஷிக் பாய்!” என்று கூற அவள் தன்னை ஏமாற்றியதை அறிந்து,
ஆட்டோவை ஃபாலோ செய்ய பைக்கை பார்க்க, அப்பொழுதுதான் சாவியை அவள் எடுத்ததைப் பார்த்தவன்,
"இது சரியில்லை ஜியா."
"எனக்கும் தெரியும் ஆஷிக், டேக் இட்.” என்றவள் சாவியைத் தூக்கி போட்டவாறு, "டேக் கேர், பாய்!” என்று அவனுக்குப் போக்கு காட்டிவிட்டு சென்றாள்.
***
இருவரது புன்னகையில் அவர்களது அமைதி கலைய ஆஷிக், ஜியாவைப் பார்த்து, "ஸோ..."
"ஸோ..."
"ஆர் யு ரெடி?” என்றவன் அவளது அருகில் வர,
"ஆஷிக்!"
"வாட்?” என்றவன் அவளை இன்னும் நெருங்கி சுவற்றோடு சாய்த்து, தன் இருக்கரங்களுக்குள் கைது செய்ய,
"ஆஷிக்!"
"ஆர் யு ரெடி?"
"இங்கேயா?"
"ஆமா."
"பட் யாராவது பார்த்தா?"
"பார்த்தா என்ன?” என்று அவளது கன்னத்தோடு மெல்ல உரசியவன் அவளது காதில், “ஸ்டார்ட் வீ டோன்'ட் ஹாவ் மச் டைம்.” என்று கூற திகைத்து போய் நின்றவளைப் பார்த்து ரசித்தவன், "ப்ளீஸ்பா, நான் உன்னை இன்ஜெக்ஸன்தான போட சொன்னேன்.” என்று விஷமமாய் சிரிக்க, நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவனைப் பார்க்க ஆஷிக் விஷமத்தோடு,
"ஏய், நீ என்ன நினைச்ச?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை."
"யு... சீரியஸ்லி நீ அதை நினைச்சியா? யு நாட்டி! இஃப் யு ரியலி டெஸ்ப்பரேட் அபௌட் ஹண்ட்ரட் கிஸ்ஸஸ் தென் ஐ டோன்'ட் ஹாவ் எனி ப்ராப்ளம்.” என்றவன் அவளை நெருங்கியவாறு புன்னகைக்க,
"ஆஷிக் ப்ளீஸ்..."
"ஓகே"
"யு ஆர் கிரேசி!"
"ஆமா"
"சரி டைம் ஆகிடுச்சு, ஊசி போட்டுக்கோ."
"ஏய் என்ன பண்ற?"
"இப்போதான நீ சொன்ன?"
"அது உன்னை நக்கல் பண்ண சொன்னேன், ஊசிலாம் வேண்டாம். முதல்ல அதைத் தள்ளி வை, ரொம்ப ஷார்ப்பா இருக்கு."
"ஆஷிக் ப்ளீஸ்..."
"ஜியா ப்ளீஸ் நோ வே..."
"ஆஷிக் லுக் அட் மீ."
"என்ன?"
"அன்னைக்குத் தரேன்னு சொன்னதை இப்போ நான் தந்தா வேண்டாம்னு சொல்லுவியா?” என்று கூறியதில் உருகி போனவன் அவளையேப் பார்க்க, அவன் அசந்த நேரம் அவனது கையில் மெதுவாக ஊசி போட்டவள், “ம்ம் முடிஞ்சிருச்சு."
"எங்க நீ சொன்னது?"
"ம்ம் கனவுல...” என்று அங்கிருந்து அவள் செல்ல போக,
"மறுபடியும் நீ என்னை ஏமாத்திட்ட?"
"இல்லை, நீங்க ஏமாந்துட்டீங்க."
"எஸ் பழகிடுச்சு.” என்ற அவனது கூற்றில் சிறு காயம் தெரிய, அதற்குப் பதிலளிக்க மறுத்தவள்,
"ஆஷிக், பட் என்னால நம்பவே முடியலை. நீ இன்னும் ஊசினா பயப்படுறதை. சத்தியமா சொல்றேன், என்னால சிரிப்பை அடக்கவே முடியல.” என்று சிரித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
"ஜியா நாம மறுபடியும் சந்திச்சதுக்கு அப்புறம் நீ இன்னைக்குத்தான் சிரிச்சுருக்க, அழகா இருக்க."
"ம்ம்...” என்றவள் மீண்டும், "நீ இன்னும் மாறாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு, குழந்தை மாதிரி ஊசிக்கு பயப்படுற.” என்றவள் மீண்டும் சிரிக்க,
"மே பீ நீ சிரிக்கணும்ங்கிறதுக்காக கூட நான் இன்னும் மாறாம இருக்கலாம்." என்று அவன் கூறியதில் உள்ள ஆழத்தை உணர்ந்தவள்,
"ஆஷிக் ஐ ரியலி...” என்று தன் மனதில் உள்ளதை கூற வாய் எடுத்தவள் ஆதர்ஷின் வருகையால் மௌனமானாள்.
"என்ன ஜியா, வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா?"
"ம்ம் ஆமா."
"உன்னைப் படுத்தி எடுத்திருப்பானே?"
"இல்லை, சரி பார்த்துக்கோ வரேன்.” என்று அங்கிருந்து சென்றவள்,
கண்ணாடி வழியாக ஆஷிக், ஆதர்ஷுடன் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘ஆஷிக் ஐ ரியலி மிஸ்ட் யு!’ என்று தன் மனதிற்குள் கூறினாள் தன் கண்கள் ஈரமாக.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 21 & 22

Last edited: