Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 2

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
தங்களது ஷிஃப்ட் முடிந்ததும் ஆஷிக், ஆதர்ஷ் இருவரும் ஒன்றாக டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த மேனேஜர் சந்தீப், அவர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டிருக்க ஆஷிக் அவரிடம்,

"என்ன சார் நம்ம ஏர்லைன்ஸ்க்கு புதுசா டாக்டர்ஸ் அப்பாயிண்ட் பண்ணிருக்கீங்க போல?"

"ஆமாப்பா, எமர்ஜென்சிக்காக டூட்டி டாக்டர்ஸ் அப்பாயிண்ட் பண்ணிருக்கோம். ரெண்டு நாளைக்கு முன்னாடியே பண்ணிட்டோம், நீ லீவ்ல இருந்ததால உனக்குத் தெரியல."

"அங்கிள்தான் செலக்ட் பண்ணினாங்களா?"

"இல்லப்பா, சார்தான் பண்றதா இருந்தது. அப்புறம் கடைசி நிமிஷத்துல சாரால வர முடியல. நானும் ரிஷி சாரும்தான் செலக்ட் பண்ணினோம். என்னப்பா நீ, யாரையும் ரெக்கமண்ட் பண்ணலாம்னு நினைச்சியா?" என்று அவர் கேட்க,

"இல்ல சார், நான் சும்மாதான் கேட்டேன். இன்டெர்வியூல எல்லாரும் எப்படிப் பண்ணினாங்க, யாரெல்லாம் செலக்ட் பண்ணுனீங்க?” என்று அவன் கேட்க,

அப்பொழுது, “ஹாய்!” என்று கூறிக்கொண்டே வந்த ஒருவன் ஆஷிக்கிடம், "ஏன்டா சுத்தி வளைக்கிற? ஏதாவது பொண்ணுங்களை செலக்ட் பண்ணுனீங்களானு நேரடியா கேட்க வேண்டியது தானே?” என்று கூறி, ஆதர்ஷுடன் ஹைஃபை அடித்துக்கொள்ள,

ஆஷிக், "டேய் ரோஹித், உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன், டாக்டர்ஸ் செலக்ட் பண்ணினது பத்தி சொல்லவே இல்லை?"

"எனக்குத் தெரிஞ்சாதானே சொல்றதுக்கு? நானும் உன்கூடத் தானே இருந்தேன்.” என்று கூறியவன் மேலும் தொடர்ந்து, “சரி, நீ ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்க?” என்று கேட்க,

"சும்மாதான்...” என்ற ஆஷிக்கை, ஏற இறங்க பார்த்த ரோஹித்,

"சரியில்லையே?” என்றவாறு ஆதர்ஷைப் பார்க்க, அவனது இதழோரம் வழிந்த புன்னகை, ரோஹித் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்த, ஆஷிக்கையே உற்றுக் கவனித்தான். ஆஷிக்கோ அதைச் சட்டை பண்ணாமல் சந்தீப்பிடம்,

"சுமார் எத்தனை பேர் செலக்ட் பண்ணிருப்பீங்க?” என்று தன் விசாரணையைத் துவங்கினான்.

"அது பன்னிரெண்டு பேர்பா."

"யாரெல்லாம்?” என்று அசராமல் அவன் கேட்க,

அவரோ, "மொத்தம் பன்னிரெண்டு பேர்பா. எல்லாரும் ஞாபகத்துல இல்லை, இப்போதான் வந்திருக்காங்க. முதல்ல அவங்க என் டிபார்ட்மென்ட் இல்லல, அதான் அவங்க கூட இன்னும் சரியா பேச முடியல.” என்று அவர் கூற,

"அது எப்படி, நீங்க தானே செலக்ட் பண்ணுனீங்க?"

"ஆமாப்பா” என்றவரிடம் தன் பொறுமையை இழந்தவன்,

"ஜியானு யாரையும்...” என்று இழுக்க,

அவளது பெயரைக் கேட்டதும் உதட்டில் புன்னகையோடு தன் கண்கள் விரிய, "ஆமாப்பா, உனக்கு அந்தப் பொண்ண தெரியுமா? நல்ல பொண்ணுப்பா, இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு. வந்ததுல ரொம்ப பெஸ்டா பெர்ஃபார்ம் பண்ணினது இந்தப் பொண்ணுதான். பன்னிரெண்டு பேர்ல இவ மட்டும்தான் பொண்ணு, அதுவும் வந்த பொண்ணுங்கள்ள ஏரோமெடிக்கல் கோர்ஸ் முடிச்சது ஜியாதான். மறக்கமுடியாத முகம்.” என்று அவர் கூற, ஆஷிக்கின் சந்தேகம் முழுவதுமாய்ச் சரியாகியது.

உள்ளத்தில் மகிழ்ச்சி, கோபம் என்று இரண்டும் அவனை வாட்டியது.

ஜியாவின் பேரைக் கேட்டதும் ரோஹித்துக்கும் எல்லாம் விளங்க, அதுவரை அவனைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தவன், அமைதியானான்.

ரோஹித் பைலட் ட்ரைனிங்கின் பொழுது ஆஷிக்கிற்கும் ஆதர்ஷ்க்கும் கிடைத்த நண்பன். ரோஹித்தின் தந்தைதான் கோ ஆன் ஏர்லைன்ஸின் மேனேஜிங் டைரக்டர். ஆதர்ஷிற்குப் பிறகு ஆஷிக்கிற்கு நெருக்கமான நண்பன் என்றால் அது ரோஹித்தான்.

கோபமாக இருந்த ஆஷிக்கை என்ன கூறி சமாதானம் செய்வது என்று புரியாமல் இருவரும் அமைதியாய் நின்றனர்.

பைலட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் சற்று கூட்டமாய் இருக்க ஆதர்ஷ், சந்தீப்பிடம், "என்னாச்சு? அங்கே ஏன் கூட்டமா இருக்கு?” என்று வினவ,

"அதைத்தான் நானும் பார்த்துட்டு இருக்கேன், சரிப்பா நான் என்னனு பார்த்துட்டு வரேன்.” என்றவர் உள்ளே செல்ல,

ஆஷிக்கின் கண்கள் ஜியாவின் நினைவால் லேசாகக் கலங்க, அதைக் கண்ட ரோஹித்,

"ஆஷிக் நீ எதுக்கும் ஃபீல் பண்ணாத, நான் அப்பாகிட்ட பேசி ஜியாவை வேலைய விட்டு நிப்பாட்ட சொல்றேன். அவளால நீ ஃபீல் பண்ணாத.” என்று கூற,

உடனே, "டேய் இதெல்லாம் ஓவர், என்னனு சொல்லி வேலைய விட்டு நிப்பாட்டுவ? அதெல்லாம் ரொம்பத் தப்பு. அவதான் இவன் வழிக்கே வரலைல, இதை இப்படியே விட்ருங்க.” என்று கூறிய ஆதர்ஷிடம்,

ஆஷிக், "ஆமாடா, ஏன் சொல்ல மாட்ட? ஏமாத்திட்டுப் போனது என்னைத் தானே? அதெல்லாம் உனக்கு எப்படிப் புரியும்?"

"நான் அப்படிச் சொல்லல, பழசை பேசி எதுக்குக் கஷ்டப்படணும்னு தான் சொல்றேன். உனக்கு வலிதான், ஆனா இன்னும் எத்தனை நாளுக்கு அதைப் பத்தியே பேசுறது? அதை மறந்துட்டு வெளிய வர்றதுதானே புத்திசாலித்தனம். அவளே வந்துட்டா நீயும் வானுதான் நான் சொல்றேன்."

"வரேன், ஆனா அதுக்கு முன்னாடி அவ எனக்குப் பதில் சொல்லணும். என்னை அழ வச்சுட்டு அவ மட்டும் சிரிக்கலாமா?” என்றவனிடம், இப்பொழுது என்ன கூறினாலும் பயனில்லை என்று உணர்ந்த ஆதர்ஷ்,

"ரிலாக்ஸா இருடா, எல்லாம் சரியாகும்.” எனச் சொல்லி சமாதானம் செய்தான்.

அப்பொழுது சந்தீப், ஜியாவை அழைத்துக்கொண்டு அவர்களிடம் வந்து, "ஜியா இவங்களை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க, இவருதான் கேப்டன் ரோஹித்."

"ஹலோ ரோஹித்!"

"ஹலோ ஜியா!"

"இது கேப்டன் ஆதர்ஷ்!"

"ஹாய் ஆதர்ஷ்!"

"ஹாய் ஜியா, எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்."

"பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்."

"அட நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஏற்கனவே தெரிஞ்சவங்களா என்ன?"

"அஃப்கோர்ஸ்! இவங்களைத் தெரியாம இருக்குமா? அவ்ளோ சீக்கிரமா மறக்குற மாதிரியான காரியமா இவங்க பண்ணிருக்காங்க, என்ன ஜியா?” என்ற ஆஷிக், தன் பழைய நினைவுகளுக்குள் நுழைந்தான்.

***

ஆறு வருடத்திற்கு முன்பு...

அப்பொழுது ஆஷிக் மருத்துவப்படிப்பின் ரெண்டாம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தான். ஆதர்ஷ், தியா இருவரும் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் ரெண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தனர். ஆஷிக், ஆதர்ஷ் இருவருக்கும் பைலட் ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

ஆனால் ஆஷிக் தன் தந்தையின் வற்புறுத்தலால், தன் தந்தைக்குச் சொந்தமான மெடிக்கல் கல்லூரியிலே, தனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத மருத்துவப் படிப்பில் சேர்ந்தான். மூவரும் மும்பையில்தான் படித்தனர். ஆஷிக்கிற்காக ஆதர்ஷும் வெளியூர் எங்கும் போகாமல் மும்பையில் உள்ள கல்லூரியிலே சேர்ந்து படித்தான். அப்படி இருக்க ஒருநாள் ஆஷிக்கின் இல்லத்தில்,

"அண்ணா ரெண்டு பேரும் எங்க போறீங்க?"

"ரெண்டு பிஸியான ஆளுங்கள பார்த்து கேட்குற கேள்வியா இது? முக்கியமான மீட்டிங் போறோம்."

"உங்க உருப்படாத ஃப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து ஊர் சுத்த தானே போறீங்க அதான?"

"ஏய் லூசு கத்தாதடி, அம்மாக்கு கேட்டுற போகுது."

"ம்... கேட்கட்டும்."

"என்ன கேட்கட்டும்?” என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ஹாஜரா,

"வாப்பா ஆதர்ஷ், உக்காரு.” என்று கூறிவிட்டு,

"என்ன ஆயிஷா, என்னது எனக்குக் கேட்க கூடாது?"

"அது வந்துமா...” என்ற ஆயிஷாவை குறுக்கிட்ட ஆஷிக்,

"அம்மா அது ஒன்னும் இல்லை, சும்மா விளையாடிகிட்டு இருந்தோம்.” என்று ஆயிஷாவைப் பார்த்து கண்ணசைக்க,

ஆயிஷாவும், ‘ஆமாம்’ என்று தன் தலையை அசைக்க,

"ம்ம்... அண்ணனும் தங்கச்சியும் எதோ மறைக்கிறீங்க, என்னமோ போங்க.” என்றவாறு கூறிவிட்டு, "சரி ஆதர்ஷ், இவங்க இப்படி எதாவது பண்ணிட்டு இருப்பாங்க, நீ மறக்காம இந்தப் பாலை குடிச்சுரு."

"சரிம்மா, குடிச்சுடுறேன்.” என்றான்.

"அம்மா ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டாங்களா?"

"ஆமா, இப்போதான் ஃபோன் பண்ணினாங்க."

"சரிபா.” என்றவர் சமையல் அறைக்குள் செல்ல,

ஆயிஷா, "டேய் அண்ணா இங்க பாரு, அம்மாகிட்ட போட்டு குடுக்காம இருக்கணும்னா நான் சொல்றத நீ கேக்கணும்."

"ச்ச, உன்னோட ஒரே ரோதனையா போச்சு, சொல்லு என்ன பண்ணணும்?"

"என் ஃப்ரெண்ட் ஜியா இருக்காள்ள..."

"உன் ஃப்ரெண்ட் ஜியா என்ன உலக அழகியா? யாருனு சொன்னா தானே தெரியும்."

"அண்ணா சின்ன வயசுல நம்ம வீட்டுக்கெல்லாம் கூட வருவாள்ல..."

"ஆமா ஆமா... இந்த டைனோசரஸ் மாதிரியே இருப்பாளே, எப்ப பாரு என்கிட்ட திட்டு வாங்கிட்டே இருப்பாளே?"

"யாருடா?” என்ற ஆதர்ஷிடம்,

"அது ஒரு அவதார்டா, உடம்பு புஸ்புஸ்னு இருக்கும், மண்டை சின்னதா இருக்கும் நீ பார்த்திருப்ப."

"டேய் அண்ணா, ஓவரா போற... அப்புறம் அம்மாகிட்ட போட்டு குடுத்திருவேன்."

"உண்மைய தான சொல்றேன்."

"உன் டப்பா மூஞ்சு ஃப்ரெண்ட்ஸ்க்கு என் ஃப்ரெண்ட் எவ்வளவோ பெட்டர்."

"அம்மா தாயே, உன் ஃப்ரெண்ட் அழகு சுந்தரிதான் போதுமா? மேல சொல்லு."

"அவ நம்ம காலேஜ்லதான் மெடிசின் ஜாயின் பண்ணிருக்கா ஃபர்ஸ்ட் இயர்."

"அப்படியா, நான் பார்த்ததே இல்லையே?"

"மச்சான் அதுக்கு அட்லீஸ்ட் அப்போ அப்போ காலேஜ் பக்கம் போகணும்.” என்று ஆதர்ஷ் கூற,

அவனைப் பார்த்து முறைத்தவன், "இப்போ அவளுக்கு என்ன?"

"அவளுக்கு எதோ ப்ராஜெக்ட் குடுத்திருக்கங்கலாம், அது பண்றதுக்கு நீ தான் ண்ணா ஹெல்ப் பண்ணணும்." என்ற ஆயிஷாவைப் பார்த்து சிரித்த ஆதர்ஷ்,

"ப்ராஜெக்ட்டா? நல்ல ஜோக். இவன் ப்ராஜெக்ட் எப்படிச் சொல்லி குடுப்பான்னு எனக்கு ஐடியா இல்லை. ஆனா அனாடமி கிளாஸ் நல்லாவே எடுப்பான்.” என்று கூற,

ஒன்று விளங்காதவளாய் ஆயிஷா விழிக்க ஆஷிக், "டேய், என்னடா வாய மூடு, தங்கச்சி முன்னாடி..."

"சாரிடா"

"அண்ணா என்னவோ எனக்குப் புரியல, இப்போ அவ வருவா நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணுவியா, மாட்டியா?"

"சரி சரி பண்றேன்."

"அண்ணா”

“ம்ம்”

"அவ வர்றதுக்குத் தான் இன்னும் டைம் இருக்குல, நாம மூணு பேரும் ஹைட் அண்ட் சீக் விளையாடி எவ்வளவு நாளாச்சு? ப்ளீஸ் ண்ணா விளையாடுவோமா?"

"என்ன? ஹைட் அண்ட் சீக்கா? அட போமா, எங்களைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

"ப்ளீஸ் அண்ணா."

"உன்னோட ஒரே தொல்லையா போச்சு, இதெல்லாம் விளையாடுற வயசா எனக்கு?"

"ப்ளீஸ் அண்ணா!"

"சரி வா” என்று அவன் கூற, ஆயிஷா, ஆதர்ஷ் இருவரும் ஒன்று சேர்ந்து, "நீ கண்ணைக் கட்டிக்கோ” என்று ஆஷிக்கிடம் கூற,

"வாங்கடா பாசமலர்களா! இதுக்கு மட்டும் ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்திருவீங்களே? கட்டி தொலைங்க." என்றவன் தன் கண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களைத் தன் கரங்களை விரித்துத் தேட துவங்கினான்.

அவர்களோ அவனைச் சுற்றிவிட்டு, அமைதியாக உள்ளே வந்து சோபா மீது அமர்ந்தனர்.

அப்பொழுது, "தேங்க்ஸ் ஆதர்ஷ், அண்ணா சின்ன வயசுல எத்தனை நாள் நம்மள இப்படி ஃபூல் பண்ணிருப்பான், இன்னைக்கு இவன் மாட்டட்டும்.” என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

அப்பொழுது தன் கரங்களுக்கு யாரோ தட்டுப்பட, சட்டன்று பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன், "வாடா ஆதர்ஷ், வசமா மாட்டினியா?” என்று தன் நண்பன் ஆதர்ஷ் என்று நினைத்து, வேறு ஒரு பெண்ணைப் பிடித்தான்.

அந்தப் பெண்ணோ எதிர்பாராத இந்தத் திடீர் நிகழ்வால், அதிர்ச்சியில் எதுவும் பேசாமல், அவனின் முரட்டுப் பிடியில் இருந்து விடை பெறுவதிலே முயன்று கொண்டிருக்க,

ஆஷிக்கோ, "மாட்டுனியாடா என்கிட்ட? நாலாம் யாரு...” என்று சிரித்தவன்,

மேலும் அவளது இடுப்பை இறுக்கிப் பிடித்து, "என்னடா திடீர்னு கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்க? ஓவரா துள்ளாதடா, அவுட் ஆனத ஒத்துக்கோ." என்றவன்,

தனது பிடியை இன்னும் பலமாக்க முற்படும் போது, அவள் ஸ்கர்ட் அணிந்திருந்ததால், அவளது டாப் சற்று விலக ஆஷிக்கின் முரட்டுக் கையில் அவளது மெல்லிடை சிக்க, அவளுக்குள் ஒரு உணர்ச்சி போராட்டமே நடந்தேறியது.

மெல்லினமும் வல்லினமும் உரசிக்கொள்ள, வார்த்தைகள் உறைந்து போய் அவளது தேகம் பூவாய் மலர்ந்தது.

அவளது இதயம் வேகமாய்த் துடிக்க, அவனுக்குள்ளும் ஏதோ தோன்ற, புதுவித உணர்வு மலர, மனமோ அதற்கான அர்த்தத்தைத் தேடி அலைந்தது.

அந்த பெண்ணோ தான் இப்போதிருக்கும் நிலையை நம்ப முடியாமல், தன் இரு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு, பயத்தில் அவனது சட்டையின் காலரை தன்னை அறியாமல் இறுக்கிக் கட்டிக்கொண்டு இருந்தாள்.

அவளது பிடியில் உள்ள இறுக்கமும், இதயத் துடிப்பின் சத்தமும் உறங்கிக் கொண்டிருந்த அவனது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிய நேரம், அவளது மூச்சு காற்று அனலாய் அவனது தொண்டை குழியைத் தீண்ட, எழும்பிய உணர்ச்சிகள் அனைத்தும் அதில் மெழுகாய் உருகின. அவனையும் அறியாமல் அவனது பிடியின் இறுக்கம் இன்னும் அதிகரிக்க வலியில், “ஆ..." என்று கத்தினாள்.

குரலை வைத்து இது வேறு யாரோ என்று உணர்ந்தவன், தன் கண்களில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு பார்க்க, அந்தப் பெண்ணோ அதிர்ந்து போய் என்ன பேசுவதென்று புரியாமல், பயத்தில் அவனது மார்போடு சாய்ந்து தன் கண்கள் விரிய அவனையே பார்த்தாள்.

ஆஷிக்கின் நிலையோ இன்னும் மோசம்தான் என்று சொல்ல வேண்டும். அவளைக் கண்ட அந்த நொடியே அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான்.

அதுவரை இரும்பாய் அவளது இடையைச் சிறை வைத்தவன், அவளது மென்மையில் மெல்ல மெல்ல கரைந்து, எறும்பாய் தேய்ந்து தன்னிலை இழந்தான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 3
 
Last edited:
Top