- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 21
மறுநாள் காலையில் ஹாஸ்பிடலில் சூரியக் கதிர்களின் தீண்டலில் ஆஷிக் கண்விழிக்க, அவன் எதிரே இருந்த ஆதர்ஷ் முகத்தில் புன்னகை தளும்ப,
"குட் மார்னிங்டா.” என்று கூற,
"கு... ட்... மார்... னிங்.” என்று இழுத்தவாறு சோம்பலை முறித்து நிமிர்ந்து உட்கார்ந்தான் ஆஷிக்.
"சீக்கிரமா கண்முழிச்சுட்ட, பரவாயில்லையே?” என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்த ஆதர்ஷிடம், ஆஷிக் குறும்பு பார்வை தொனிக்க,
"என்னடா பண்றது, சூரியன் டார்லிங் என்னைக் கி... ஸ் பண்ணிடுச்சு.” என்று இதழோரம் புன்னகைத்தவனைக் கண்டு,
"மச்சான் சுள்ளுன்னு அடிக்கிற வெயிலை கூட இப்படி ரொமான்டிக்கா சொல்ல உன்னால தான்டா முடியும்."
"நான் யாரு?"
"சரிங்க காதல் ரோமியோ, இப்போ எல்லாம் என்கிட்ட நிறைய விஷயத்தை மறைக்கிற போல?"
"நான் என்னை மறைக்கிறேன்?"
"ஜியாவுக்கும் உனக்கும் எல்லாம் சரியாகிட்டு போல?"
"என்னடா சொல்ற?"
"நடிக்காதடா."
"சத்தியமா புரியல."
"அவளுக்கு ஒன்னுனா நீ துடிக்கிற, ஜியாவும் உனக்கு ஒன்னுனா துடிக்கிறா. ராத்திரி முழுக்கத் தூங்காம உன்னையே பார்த்துக்கிட்டா, இதுக்கு என்ன அர்த்தம்?"
"என்ன சொல்ற? ராத்திரி தியா தான என்கூட இங்க தங்க போறதா நீ சொன்ன?"
"நீ வேற... நான் வரும் போது அவ நல்லா இந்த சோஃபால படுத்து போர்வைய போத்திகிட்டு தூங்கிட்டு இருந்தா. நான் வந்தது கூட மேடம்குத் தெரியாது. அப்போ ஜியாதான் உன் பக்கத்துலயே தூங்காம இருந்தா."
"டேய் நீ வரும் பொழுது தானே அவளைப் பார்த்த, அப்போ எதேர்ச்சையா வந்திருப்பா. நாள் பூராவும் என்கூடச் சான்ஸே இல்லை. அவளுக்கு நான் வேண்டாம்டா, அப்படி இருக்கும் பொழுது எப்படி அவ எனக்காகத் தூங்காம இருந்திருப்பா?"
"இல்லை"
"எப்படி உறுதியா சொல்ற, ஜியாதான் என் கூட இருந்தான்னு?"
"எனக்கு ஜியாவையும் தெரியும், தியாவையும் தெரியும் அதான். சரி உனக்கும் ஜியாவுக்கும் எல்லாம் சரியாகிட்டா? அவ மேல உள்ள கோபம் எல்லாம் உனக்குப் போய்ட்டா? இல்லையா? ஜியா விஷயத்துல நீ என்ன முடிவு எடுக்கப்போற?"
"கோபமா... நானா... எதுக்குடா? எந்த விஷயத்துக்காக நான் கோபப்பட? எதுக்கு எல்லாம் நான் கோபப்பட? என்னை விட்டு போய் என் மனசை உடைச்சதுக்காகவா, இல்லை இப்போ மறுபடி வந்து என்னை உயிரோடு கொலை பண்ணிட்டு இருக்காளே அதுக்காகவா?"
"என்னடா சொல்ற?"
"ஆதர்ஷ், எனக்கு அவ மேல கோபம் இருந்தது உண்மைதான். ஆனா எப்போ அவளைப் பார்த்தேனோ ஒவ்வொரு நாளும் மறுபடியும் நாங்க சேர மாட்டோமானுதான் ஆசைப்படுறேன். எங்க ரெண்டு பேருக்கும் இடையில உள்ள பிரச்சனைய நான் சரி பண்ண முயற்சி பண்றேன். ஆனா, அவ என்னைத் துரோகி துரோகினு காயப்படுத்துறா. அவகிட்ட என்னைப் பத்தின உண்மையைச் சொல்லணும்னு எனக்குத் தோனலை. இதுக்காக ஏன் என்னைத் துரோகினு சொல்லி கஷ்டபடுத்துறானு தெரியலை.
எனக்கு என் அப்பாவை புடிக்காது, அதனால நான் அவகிட்ட அவரைப் பத்தி எதுவும் சொல்லல. வேணும்னே எதையும் மறைக்கலை. என் அப்பா எப்படி என்கிற விஷயத்தை வச்சுதான் அவ என்னை லவ் பண்ணுவாளா என்ன? இதுக்காக ஏன் என்னை துரோகினு சொல்றா? நியாயப்படி நான்தான் அவகிட்ட கோபப்படணும், ஆனா நான் கோபப்பட்டுச் சண்டை போட்டா எங்க மறுபடியும் என்னை விட்டுட்டு போயிருவாளோனு, பழசை எல்லாம் மறந்துட்டு அவகிட்ட நெருங்கி போனா, அவ என்னைக் காயப்படுத்திட்டே இருக்கா.” என்று கூறும் பொழுதே அவன் தொண்டைக்குழி அடைத்துக்கொள்ள, பெருகி வரும் கண்ணீரை வெளியிடாமல் அடைக்கிக்கொண்டு இறுக்கமாக அமர்ந்திருந்தான்.
நண்பனின் வலி புரியாமல் இல்லை, ஆனால் இதை விட நல்ல சந்தர்ப்பம் இனிமேல் அமையுமா என்று எண்ணினான் போல... தன் மனதில் உள்ளதை, "இப்போ உனக்கு அவ மேல கோபம் இல்லை?” கேட்டுவிட்ட ஆதர்ஷ் பதிலை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்க, நொடிகள் கழிய கழிய முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்தவனாய் ஆஷிக் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ள, அதுவரைக்கும் அடங்கியிருந்த கண்ணீர் கண்களின் ஓரமாய் எட்டிப்பார்க்க, பெருமூச்சு விட்டவனாய் கண்ணீர் இமையின் விளிம்பைத் தொடும் பொழுதே, தன் விரலில் ஏந்தியவன் அசட்டு சிரிப்போடு அதைப் பார்த்து பெரு விரலால் சுண்டிவிட்டு,
"அவ மேலதான் எனக்கு கோ... பமே... வராதே...” என்றவனின் கண்முன் ஜியாவின் முகம் மின்னலை போல வெட்டி மறைய, இதழோரம் புன்சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்ள ஆதர்ஷைக் கண்ணோடு கண்பார்த்து,
“கண்ணை உருட்டி ஒரு பார்வை பார்ப்பா பாரேன்... மனசுல எவ்வளவு பாரம் இருந்தாலும் சட்டுனு மறைஞ்சி போயிரும். அப்புறம் எங்க கோபப்பட முடியும்? எங்க கண்ணை மூடினா, மறைஞ்சி போயிருவாளோனு இமை தட்டாம பார்த்துட்டு இருப்பேன்.
இந்த ஜென்மத்துல என்னால அவகிட்ட கோபப்பட முடியாது, அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் அப்பவும் இப்படியே அவளை நான் உருக உருக காதலிக்கணும். அவ என்னை அலைய விடணும். அவ என்னை விட்டு விலகி விலகி போகும் பொழுது கஷ்டமாதான் இருக்கு, ஆனா எப்பவாவது அவளே என்னை நெருங்கிவருவா பாரேன், கொஞ்ச நேரம்தான் நெருங்கி இருப்பா, ஆனா அந்தக் கொஞ்ச நேரமும் எனக்குச் சொர்கம் தான்டா. அவ்வளவு லவ் எனக்குக் குடுப்பா, கொஞ்சம் கூடத் தெகட்டாது."
"அப்புறம் என்னடா, ஏன் இன்னும் வெயிட் பண்ணிக்கிட்டு... நானே அவகிட்ட கேட்கிறேன்."
"வேண்டாம்டா."
"ஏன்டா?"
"அவளே வருவாடா, என் பக்கத்துல உள்ள நியாயத்தைப் புரிஞ்சிகிட்டு...” என்று கண்களில் நம்பிக்கை தொனிக்க ஆஷிக் ஆதர்ஷிடம் கூறிய மறுநொடி,
'ஆமா நான் உனக்குத் தான்டா, எங்க போகப் போறேன்? உன்னைத் தேடி வருவேன்.' என்பது போல ஜியா கதவைத் திறந்து கொண்டு வந்தாள்.
ஆஷிக் புன்னகை தளும்ப அவளையேப் பார்க்க, ஆனால் ஜியாவோ அவனை எட்டிக்கூடப் பார்க்காது உள்ளே வந்தாள்.
ஆஷிக்கை செக் செய்து, "ஹீ இஸ் கம்ப்ளீட்லி ஓகே. ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு நீங்க கிளம்பலாம், ஆனா ட்ரெஸ்ஸிங் கரெக்ட்டா பண்ணிடணும். மறுபடியும் இன்ஃபெக்சன் ஆகாம பார்த்துக்கோங்க.” என்று ஆதர்ஷிடம் கூறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து ஆதர்ஷிற்கு ஆஷிக்கின் வீட்டில் இருந்து கால் வர ஆஷிக்கிடம், “அம்மா பேசுறாங்கடா.” என்று ஃபோனை கொடுக்க,
"ஹலோ ம்மா!"
"டேய் என்னடா, உன் ஃபோன் என்னாச்சு? எவ்ளோ நேரம் ட்ரை பண்ணினேன் தெரியுமா, லைன் போகவே இல்லை.” என்று கூற, கோபத்தில் முன்தினம் இரவு, தான் அலைபேசியைத் தூக்கி எறிந்தது நினைவிற்கு வர ஜியாவைப் பார்த்தவாறு,
"அது உடைஞ்சி போச்சுமா."
"எப்படிடா?"
"கை தவறி..."
"டேய் எதுவும் என்கிட்ட மறைக்கலையே? பிரச்சனை எதுவும் இல்லையே?" என்று ஹாஜரா கேட்க,
சலிப்புடன் “மா காலையிலே ஃபோன் பண்ணி என்கிட்ட குய்ஸ் கம்பெட்டிஷன் நடத்துறீங்களா என்ன? விளையாடுற மூட்ல நான் இல்லை, ஃபோன் உடைஞ்சி போச்சு ஓகே."
"டேய் எப்போடா கிளம்புறீங்க?"
"வெள்ளிக்கிழமை நைட்மா."
"சரி, வரும் போது ஜியாவையும் கூட்டிட்டு வா."
"ஜியாவா?" என்றதும், ஜியா தன் புருவம் உயர்த்தி என்ன என்பதைப் போலப் பார்க்க,
"அவ உன்கூடத் தான வேலை செய்றா, ஆயிஷா சொன்னா. உனக்கு ஜியா தெரியும்ல, ஆயிஷா ஃப்ரண்டு. நம்ம வீட்டுக்கெல்லாம் கூட வருவாளேடா, உன்கிட்ட டவுட் கேட்க.” என்று வெகுளியாக ஹாஜரா கூறியதும் ஆஷிக்கிற்குச் சிரிப்பு வர, அதைக் கட்டுப்படுத்திக்கொண்டவன்,
"ஆமா தெரியும்."
"ஆயிஷா சொல்ல சொன்னா, அவளையும் நீ வரும்போதே கூட்டிட்டு வந்திரு."
"நான் கூப்பிட்டா வர மாட்டா, பக்கத்துலதான் இருக்கா, ஸ்பீக்கர்ல போடுறேன் நீங்களே சொல்லுங்க.” என்று ஸ்பீக்கரில் போட,
ஹாஜரா ஜியாவிடம், "ஜியா!"
"மா எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்க?"
"நல்லா இருக்கேன்மா."
"ஆயிஷா என்கேஜ்மென்ட்க்கு கண்டிப்பா வந்திரு."
"சரிமா."
"ஆஷிக் கூடவே வந்திரு சரியா?"
"அது வந்துமா... ஞாயிற்றுக் கிழமை தானே என்கேஜ்மென்ட்?"
"என்னமா இது, ஆயிஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ, கரக்ட்டா ஞாயிற்றுக் கிழமை என்கேஜ்மென்ட் அன்னைக்கா வருவ? ஒரு நாளைக்கு முன்னாலே நீ வந்தா அவளுக்கு நல்லா இருக்கும்ல?"
"சரிமா."
"நல்லதுமா, டேய் ஆஷிக் நீ, ஆதர்ஷ், தியா எல்லாரும் வரும் போது ஜியாவையும் பத்திரமா கூட்டிட்டு வாடா. அவகிட்ட கோபம் எதுவும் படாத சரியா?"
என்று ஹாஜரா கூறவும், 'நான் கோபம் ம்ம்ம்... இவ என்னைக் கடிச்சு துப்பாம இருந்தா அதுவே போதும். அல்லாஹ்! என் கொடுமைய எங்க போய்ச் சொல்ல?' என்று இறைவனை அழைத்தவன், ஜியாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, "ம்ம்..." என்று பதில் கூறினான்.
"டேய் ஆதர்ஷ்!"
"ம்மா...!"
"இவன் கரெக்ட் டைம்கு கிளம்ப மாட்டான், நீ பொறுப்பா கூட்டிட்டு வந்திரு."
"சரிமா, நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துகிறேன்."
"சரிபா வச்சிடுறேன்.” என்று அவர் ஃபோனை துண்டிக்க,
ஜியா அங்கிருந்து செல்ல போக அவளைத் தடுத்த ஆஷிக், "ஜியா அம்மா சொல்லிட்டாங்கனு இல்லை, உனக்கு வரணும்னு தோனுச்சுனா வா. அங்க நம்மளோட பழைய நினைவுகள் நிறையா இருக்கு, அது உனக்குக் கஷ்டத்தைக் குடுக்கும்னு எனக்குத் தெரியும். வெள்ளிக்கிழமை ஈவ்னிங் உன்னைப் பிக் அப் பண்ண வருவேன், வர்றதும் வராததும் உன் இஷ்டம். நீ வந்தா ஆயிஷா சந்தோஷப்படுவா...” என்றவன் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அவளையேப் பார்க்க,
அவளது உள்ளம் வேறு எதையோ எதிர்பார்ப்பதை உணர்ந்தவன் மெலிதாய் புன்னகைத்து, “நானும்தான்!” என்று கூற,
ஜியாவோ பதில் பேசாமல் அங்கிருந்து செல்ல ஆஷிக், ஆதர்ஷைப் பார்த்து, “பார்த்தியாடா உனக்கு வரணும்னு தோனுச்சுனா வானு சொல்றேன். பேசாமா நிக்கிறா, வருவேன்னு சொன்னா அவ ஹைட்டு குறைஞ்சிருமா என்ன?” என்றவன், "சரி அது போகட்டும், எனக்குச் சந்தோஷம்னு சொல்றேன், எதுவும் பேசாட்டாலும் அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல் பண்ணலாம்ல? அழுத்தக்காரிடா...” என்று அவன் கூறவும் ஆதர்ஷ் புன்னகைக்க ஆஷிக், ஜியாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆஷிக் கூறியது போல ஜியாவிற்கு அங்கே வருவது சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவளது மனம் அவனோடு இணைந்ததும், இணைந்த மனம் முறிந்ததும் அங்கே தானே!
ஆதர்ஷ், ஆஷிக்கின் டிஸ்சார்ஜ்கு தேவையானவற்றைச் செய்துவிட்டு அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
***
நிலவே 22
ஆதர்ஷ், ஆஷிக்கிடம், "கண்டிப்பா இப்போ நீ டூட்டி பார்த்துதான் ஆகணுமா என்ன? இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ல? நாளைக்கு நைட் வேற மும்பை கிளம்பணும்."
"பரவாயில்லைடா, வீட்ல போர் அடிக்கும்."
"சரிடா” என்றவன் ஆஷிக்குடன் ஏர்போர்ட் சென்றான்.
ஏர்போர்ட்டில் ஆதர்ஷ் மேனேஜரிடம், "என்ன சார் இது, எனக்கு இன்னைக்கும் நாளைக்கும் டர்ன் அரௌண்ட் ட்ரிப் போட்டு வச்சுருக்கீங்க? நான் நாளைக்கு நைட் ஊருக்கு வேற கிளம்புறேன், ட்ராவல் ஜாஸ்தியாகிரும். சேஞ் த ஷெட்யூல், அண்ட் ஐ நீட் லீவ் டுமாரா."
"கேப்டன் ஆதர்ஷ், யு ஆர் ஸச் அ சின்சியர் ஆபிசர்."
"ஸோ வாட்? ஐ கான்'ட் ஃப்ளை.” என்று சற்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அதைக் கவனித்த ஆஷிக் அவர்களது அருகில் வந்து,
"என்னாச்சு, எதுவும் பிரச்சனையா ஆதர்ஷ்?"
"ஒன்னும் இல்லடா."
"பார்த்தா அப்படித் தெரியலையே? நான் பார்க்கும் போது ரெண்டு பேரும் எதோ வாக்குவாதம் பண்ணிட்டு இருந்த மாதிரில தெரிஞ்சிச்சு. சந்தீப் சார் சொல்லுங்க, என்னாச்சு?"
"அது வந்து கேப்டன் ஆஷிக், கேப்டன் ஆதர்ஷ் ஷெட்யூல் சேஞ் பண்ண சொல்லறாரு. பட் அது முடியாது, அதைப் பத்திதான் பேசிட்டு இருந்தேன்." என்று சந்தீப், ஆஷிக்கிடம் கூறி முடிக்கவும் ஆதர்ஷ், ஆஷிக்கிடம்,
"டேய், நீயே பாரு ரெண்டு நாளும் தொடர்ந்து போட்டு வச்சுருக்காங்க. நாளைக்கு லீவ் கேட்கணும்னு நினைச்சேன்."
"இப்போ என்ன உனக்கு நாளைக்கு லீவ் வேணும்? ஓகே, எடுத்துக்கோ. உன் டூட்டிய நான் பார்க்கிறேன், நான் நாளைக்குப் ஃப்ரீதான். டென்க்ஷன் ஓவர்... என்ன சந்தீப் சார், உங்களுக்கு ஓகே தானே?"
"அபசல்யுட்லி கேப்டன்.” என்றவர் புன்சிரிப்போடு நகர,
தனக்கு நன்றி தெரிவித்த நண்பனை ஏற இறங்க பார்த்து, “என்னடா ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க,
"இல்லடா...” என்று ஆதர்ஷ் கூறியதை நம்பாத ஆஷிக், “இல்லையே, எதோ இருக்கிற மாதிரி இருக்கே?"
"டேய் இல்லடா, நல்லாதான் இருக்கேன்."
"சரி டைம் ஆச்சு, ஈவ்னிங் மீட் பண்ணுவோம். வெயிட் பண்ணு சரியா, கிளம்பிராத பேசணும். சரி நீ வரல?"
"இல்லடா, எனக்கு இன்னும் டைம் இருக்கு."
"ஓகே சி யு.” என்று ஆஷிக், ஆதர்ஷிடம் இருந்து விடைபெற்று கொண்டு செல்ல, ஆதர்ஷ் சற்று இறுக்கமாகவே காணப்பட்டான்.
ஆதர்ஷ் கேன்டீனிற்கு வந்து, "ஒன் கிரீன் டீ.” என்று ஆர்டர் செய்துவிட்டு தன் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க, இதைக் கவனித்த நடாஷா,
‘என்ன, நம்ம ஆளு ரொம்ப டென்ஷ்ன்ல இருக்கு? பின்ன எப்பப்பாரு இந்தக் கிரீன் டீயவே குடிச்சா இப்படித்தான் எண்ணையில் போட்ட கடுகு மாதிரி மூஞ்சி இருக்கும்.’ என்று தனக்குள் கூறி சிரித்தவள் அவனது அருகில் வந்து அமர்ந்து,
"ஹாய்!” என்று புன்னகைக்க,
நிமிர்ந்து பார்த்தவன் கடமைக்காக, "ஹா... ய்!" என்று முகத்தில் உள்ள இறுக்கம் சற்றும் குறையாமல் கூறினான்.
அப்பொழுது வெயிட்டர் அவனது ஆர்டரை கொண்டுவந்து கொடுக்க அப்பொழுது ஆதர்ஷ் கோபமாக, “என்ன இது, நான் என்ன கேட்டேன், நீ என்ன கொண்டுவந்திருக்க?"
"சார்..."
"நீங்க போங்க” என்ற நடாஷா,
ஆதர்ஷிடம், "அவர்கிட்ட கோபப்படாதீங்க, நான்தான் கூல் காஃபி கொண்டு வர சொன்னேன். டென்க்ஷனா இருக்கீங்கள்ல, போரிங் கிரீன் டீ வேண்டாம். இதைச் சாப்பிடுங்க, உங்க டென்ஷன் எல்லாம் பறந்து போயிரும். எனக்குக் கூல் காஃபினா ரொம்பப் புடிக்கும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.” என்று அவள் அவனுக்கு அதைக் கொடுக்க,
காஃபியை தட்டிவிட்டவன், "நீ யாரு, என் சாய்ஸ் டிசைட் பண்ண? எனக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லாவே தெரியும், என் லைஃப்ல யாரும் மூக்கை நுழைக்கிறது எனக்குச் சுத்தமா புடிக்காது மிஸ் நிஷா.” என்று இதற்குத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்பது போல யார் மீதோ உள்ள கோபத்தை அவள் மீது காட்ட,
சட்டென்று அவன் கோபப்பட்டதில் அதிர்ந்தவள் கண்களில் நீர் தளும்ப,
"நடாஷா!” என்று கனத்த குரலில் கூற,
அவளது குரல் அவனுக்குள் எதோ செய்ய, யார்மீதோ காட்ட வேண்டியதை இவள் மீது காட்டுகிறோம் என்பதை அவன் உணர்ந்தாலும், அவனது கோபம் அவனது மூளையை முற்றிலுமாய் ஆட்கொள்ள, அவளது கண்களைச் சந்திக்காமல் ஆனால் அதே கோபத்தோடு,
"வாட் எவர், எனக்குக் கிரீன் டீதான் புடிக்கும் அண்டர்ஸ்டாண்ட்!” என்றவன், தன் மொத்த கோபத்தையும் மனக் குமுறல்களையும் அவளிடம் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அங்கே இருந்த அனைவரும் நடாஷாவை ஒருவிதமாய் பார்க்க, அவளும் அழுது கொண்டே அங்கிருந்து சென்றாள்.
சாயங்கால வேளையில் ஆஷிக், ஆதர்ஷை சந்தித்து, "கிளம்பிட்ட போல?"
"ம்ம்... கொஞ்சம் வேலை இருக்கு, பரவாயில்லை சொல்லுடா."
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்."
"சொல்லுடா, என்ன புதுசா பெர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு..."
"அப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்ற ஆஷிக், ஆதர்ஷுடன் அமர்ந்து டீயை சுவைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
"என்னடா ஆச்சு உனக்கு? கொஞ்ச நாளா எல்லார்கிட்டயும் கோபமா பேசுறியாம், நீ நார்மலாவே இல்லனு சொல்றாங்க."
"யார் சொன்னாங்க? அப்ப... டிலாம்... ஒன்னும் இல்லை."
"அப்படியா? அப்போ காலையில நடாஷாகிட்ட ஏன் அப்படி நடந்துகிட்ட? ஒரு டீக்காக எந்த மடையனாவது ஒரு பொண்ணுகிட்ட சண்டை போடுவானா? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல அந்தப் பொண்ண எல்லார் முன்னாடியும் திட்டி அழ வச்சுருக்க, நல்லாவாடா இருக்கு?"
"இத உனக்கு யாரு சொன்னாங்க?”
“நம்ம ஏர்லைன்ஸ் மொத்தமும் இன்னைக்கு இதைப் பத்திதான் பேசுது."
"டேய் டென்க்ஷன்ல எதாவது சொல்லிருப்பேன்டா."
"உன்னை எனக்கு நல்லா தெரியும், விஷயம் பெருசா இருக்கணும். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் நீ இப்படி நடத்துகிற ஆள் இல்லை."
"ஒன்னும் இல்லடா."
"ஓங்கி ஒன்னு போட்டேன்னா... என்ன பிரச்சனை சொல்லு.” என்று அக்கறையோடு அதிகாரம் செய்ய, வேறு வழியில்லாமல் ஒரு பெருமூச்சுடன் தன் மௌனம் கலைந்தான் ஆதர்ஷ்.
"ஆஷிக், அப்பாக்கு பிஸ்னெஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம்டா, கடன் பிரச்சனை ப்ராப்ளம் சால்வாக, நான் அவரு சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணணுமாம்."
"செமடா, பொண்ணு எப்படி இருக்கு?"
"போடா... உன்கிட்ட போய் சொன்னேன் பாரு."
"இதுல என்னடா ப்ராப்ளம்?"
"டேய் கல்யாணம் பெரிய டெசிஷன், டக்குனு அவங்க சொல்றாங்கனு நான் ஒரு முடிவு பண்ண முடியாது மச்சான். பணத்துக்காக நான் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணினா, அவ என்னை மதிப்பாளா? அப்படிலாம் என்னால பண்ண முடியாது. என் லைஃப்ல முக்கியமான டெசிஷனை நான் எடுக்கணும்னு நினைக்கிறேன், அதுல என்னடா தப்பு இருக்கு? இதை வீட்ல சொன்னா எங்களுக்காக இதைக் கூடப் பண்ண மாட்டியானு சொல்றாங்க. முடியலை, கடுப்பா இருக்கு."
"நான் வேணும்னா உன் வீட்ல பேசிப் பார்க்கவா?"
"வேண்டாம்டா, கேட்க மாட்டங்க, உறுதியா இருக்காங்க. நானே பணம் அரேஞ் பண்ணலாம்னு என்னோட ப்ராப்பர்ட்டிய விக்கலாம்னு பார்த்தா, அடிமாட்டு ரேஞ்சுக்குக் கேட்குறான். சரினு அப்படி இப்படினு தேத்துனா கூட அவ்ளோ பணம் வராதுடா."
"இப்போ என்ன, பணம் இருந்தா உன் ப்ராப்ளம் சால்வ் ஆகிரும்?"
"ஆமா."
"கவலைய விடு, நான் பார்த்துக்கிறேன்."
"எப்படிடா?"
"அதான் என்னோட ATM மெஷின் ஒன்னு இருக்கே..."
"உன் அப்பாக்கிட்டயா? வேண்டாம்டா."
"என்ன வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்."
"டேய், நீ அவர்கிட்ட பேசவே மாட்டியே, எனக்காக வேண்டாம்டா."
"உனக்காக யாருடா பண்றாங்க, அப்பாக்காகப் பண்றேன். உன் அப்பா எனக்கும் அப்பா மாதிரி தானே? அதுமட்டுமில்லை, அந்த ATM மெஷின்..."
"அவரு உன் அப்பாடா."
"ம்ம் அந்த ஆளுதான்... அவருதான் நல்லா ஊரை ஏமாத்தி நிறையா சம்பாதிச்சு வச்சுருக்காரே? கொஞ்சம் தந்தா ஒன்னும் குறைஞ்சி போயிற மாட்டாரு. நான் ஒன்னும் அவரோட பணத்தைக் கேட்கலையே, இது என் அம்மாக்கு என் தாத்தா கொடுத்த பணம். இதுல பாதி ஷேர் என்னுடையது."
"வேண்டாம்டா, தெரிஞ்சா தப்பா நினைப்பாரு."
"டேய் நீ வேற, அவரு எல்லாம் ஒரு ஆளுனு..."
"எனக்குச் சரியா படலை."
"சரிடா கடனா வாங்கிக்கோ, அப்புறமா திருப்பிக் குடு."
“ஆனா..."
"மச்சான் நான் பார்த்துக்கிறேன், எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லு, சொல்லுடா?"
"50 c டா. ஆஷிக் நான் உன... க்கு எப்படி..."
"என்ன தேங்க்ஸா? அதெல்லாம் வேண்டாம், அங்க பாரு கூலிங் க்ளாஸ் போட்டுட்டு, பிளாக் டீஷர்ட் போட்ருக்கே அந்தப் பொண்ணு, அத உஷார் பண்ணி குடு.” என்று அவன் கேன்டீனில் இருந்த ஒரு பெண்ணைப் பார்த்து கூற,
"மாமா வேலை பார்க்க சொல்ற?"
"அப்போ நீ மாமா இல்லையா?"
"டேய்!"
"என் குழந்தைங்களுக்கு...” என்று கண்சிமிட்ட, அவனைப் பார்த்து சிரித்த ஆதர்ஷிடம், “சரி இப்போதான் கூல் ஆயிட்டீயே, நடாஷாகிட்ட பேசிரு, பாவம் சரியா?"
"ம்ம் சரிடா."
"அதைக் கொஞ்சம் சிரிச்சுட்டே சொல்லேன்?"
"சரிடா"
"பாய் மச்சான்.”
"நாளைக்குப் பார்க்கலாம்டா” என்று இருவரும் கட்டி தழுவியவாறு ஒருவருக்கொருவர் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
ஆஷிக்கின் வார்த்தைகள் நினைவிற்கு வர, சிறிது நேரம் யோசித்தவன் நடாஷாவிற்கு கால் செய்ய, முதல் ரிங்கிலே எடுக்கப் போனவள் அப்படியே விட்டுவிட,
அவளது தாய், "யாருமா ஃபோன்ல? அட்டென்ட் பண்ண வேண்டியது தானே?"
"விடுமா.” என்ற அவளது வார்த்தையிலே, மகள் ஏதோ கோபமாக இருப்பது தெரிய, தன் படுக்கையில் இருந்து சிரமப்பட்டு எழுந்தவரிடம் வேகமாகச் சென்று,
"ம்மா உனக்குத்தான் உடம்புக்கு முடியலல? அப்புறம் ஏன் சிரமப்படுற? என்ன வேணும்னாலும் என்கிட்ட கேட்க வேண்டியது தானே?"
"உடம்பு சரியில்லைனா அப்படியே படுத்தே இருக்க முடியுமா என்ன? செய்ய முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளை நான் செஞ்சா என் உடம்புக்கு தானே நல்லது."
"சரிமா"
"என்ன வேலையில எதுவும் பிரச்சனையா? ரொம்பக் கவலையா தெரியுற?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லமா."
"எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுடா."
"கண்டிப்பா, உன்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லுவேன்? ஆனா வேலையில நிஜமாவே எந்தப் பிரச்சனையும் இல்லை."
"சரி யாருடா ஃபோன்ல? எதோ அவசரம் போல உனக்குப் ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க எடுத்து பேசிறேன்."
"அத விடுமா."
"பேசுடா."
"சரிமா” என்றவள் சற்று தள்ளி சென்று அட்டென்ட் செய்து, "என்ன வேணும் ஆதர்ஷ்?” என்று நறுக்கென்று கேட்க,
"நீதான் வேணும்” என்று அவன் இமைக்கும் நொடிக்குள் கூற, அதைச் சற்றும் எதிர்பாராதவள் ஒருவித தயக்கத்துடனே இருக்க,
மேலும் தொடர்ந்தவன், "அது வந்து... ஏன் என் ஃபோன் அட்டென்ட் பண்ணல?"
"அட்டென்ட் பண்ணலனா பேச புடிக்கலனு அர்த்தம்."
"எனக்குப் புடிச்சுருக்கே!" என்று கூற, 'என்ன இவன் இப்படிப் பேசுறான்? இப்படிப் பேசுனா நான் எப்படிக் கோபப்படுறது?' என்று அவள் தனக்குள் புலம்பியதை அவன் எப்படி அறிந்தானோ சட்டென்று,
"உனக்குக் கோபம் வந்தா திட்டிரு, நான் கேட்டுக்குறேன்.” என்று சொல்ல, அதுகாறும் மனதில் தேக்கிவைத்திருந்த கோபம் எல்லாம் இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போக,
மென்மையான குரலில், "பரவயில்லை, நானும் அப்படிப் பண்ணிருக்கக் கூடாது. ஹலோ இருக்கீங்களா?"
"சாரி"
"பரவாயில்லை."
"தப்பு அப்படிக் கோபப்பட்ருக்கக் கூடாது, கொஞ்சம் ப்ராப்ளம் அதான் சாரி, இப்போ கூடச் சாரி சொல்லதான் கால் பண்ணினேன்."
"இட்'ஸ் ஓகே."
"நீ இன்னும் என்னை மன்னிக்கலைனு நினைக்கிறேன்."
"அப்படி எல்லாம் இல்லை..."
"நிஜமாவே? இல்லனா நீ என்கூட டின்னர்க்கு வரணும்."
"இல்லை, இப்போ முடியாது."
"அப்போ மேடம் இன்னும் என் மேல கோபமாதான் இருக்கீங்க?"
"அப்படி இல்லை..."
"இல்லனா வா, என் கூட டின்னர் சாப்பிட."
"ஆனா..."
"ஓகே?"
"எங்க போறோம்?"
"நீயே சொல்லு."
"சரி, போகும் போது சொல்றேன்."
"ஓகே, உன் அட்ரஸ மெஸேஜ் பண்ணு. நானே உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்."
"சரி"
"நடாஷா!"
"என்ன?"
"தேங்க்ஸ்!” என்று கூறிவிட்டு தன் ஃபோனை வைத்தவன், நன்கு கோர்ட் சூட்டில் தன்னைத் தயார் செய்துவிட்டு, கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு, தன்னை நன்கு ஒப்பனை செய்து கொண்டவன், சில மணி நேரத்தில் நடாஷாவின் இருப்பிடத்திற்குச் சென்று, அவளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவளுக்காகக் காத்திருந்த நேரம் பார்த்து ஆஷிக்கின் கால் வர அட்டென்ட் செய்தான்.
"ஹாய்டா ஆஷிக்!"
"ஹாய்டா! ரொம்ப போர் அடிக்குது, ஷால் வீ ஹவ் சம் ட்ரிங்க்ஸ், வாட் யு ஸே?"
"ஆனா மச்சான், நான் நடாஷா கூட வெளியிலே போறேனே..."
"என்னடா நடாஷாவா? இன்னைக்குத் தானடா அவ கூடச் சண்டை போட்ட, அதுக்குள்ள பிக் அப் பா? நீ என்னை விடப் பாஸ்டா இருக்கியே, என்னடா டேட்டிங்கா?"
"டேய் டேட்டிங்லாம் இல்லடா, சும்மா அப்படியே அவ்ளோதான்."
"ம்ம் தம்பி வளந்துட்ட, என்னை மறந்துட்ட."
"அப்படி இல்லடா, சொல்லணும்னு தான் நினைச்சேன்..."
"விடுடா சமாளிக்காத."
"டேய் ஆஷிக்..."
"என்னடா இழுத்துட்டு இருக்க?"
"டேய் எதோ ஒரு மாதிரியா உள்ளுக்குள்ள எதோ பண்ணுதுடா."
"முதல் தடவ ஒரு பொண்ணு கூட வெளியில போறல, அப்படித்தான் டென்க்ஷனா இருக்கும். ஆனா அதை வெளியில காட்டிக்காத என்ன? அப்புறம் பொண்ணுங்க கூட வெளியில போகும் போது நிறையா ரூல் இருக்கு நல்லா கேட்டுக்கோ.
ரூல் 1, கார் டோர நீதான் திறந்து விடணும், பிக் அப் பண்ணும் போதும் சரி ட்ராப் பண்ணும் சரி.”
"ஏன்டா என் கார் புதுசுதான், திறக்க நல்லா ஈஸியாதான் இருக்கும்."
"மச்சான் வாய மூடுடா, எதாவது சொல்லிற போறேன். யாருக்குடா வேணும் உன் புது கார் கதை எல்லாம்? டேய் அவகிட்ட உன் கார் கதையெல்லாம் பேசிறாத, பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி கேரக்டர் உள்ள பசங்கள சுத்தமா புடிக்காது."
"ஓகேடா."
"அப்புறம் ரூல் 2, அவுட்டிங் போகும் போது அவ முன்னாடி போகணும், நீ பின்னாடி போகணும். ஆனா எதுவும் பிரச்சனைனா அந்த இடத்துல நீ முன்னாடி நிக்கணும் புரியுதா?"
"ம்ம்..."
"ரூல் 3, அப்புறம் உக்காரும் போது உனக்கு சீட் இருக்குனு நீ பாட்டுக்கு சட்டுனு போய் உக்கார்ந்துக்கக் கூடாது, முதல்ல அவளை உட்கார வச்சுட்டு, ஆர் யு கம்பர்ட்டபுள்னு கேட்டுட்டு அப்புறமா நீ உக்காரணும்."
"ரூல் 4, ரெண்டு பேரும் ஆர்டர் குடுத்துட்டீங்க, உனக்கு வந்துட்டு அவளுக்கு இன்னும் வரல. பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதிரி, நீ மட்டும் நல்லா அமுக்கக் கூடாது. அவளுக்கு வர்ற வர நீ காத்துகிட்டு இருக்கணும் புரியுதா?"
"ஆனா மச்சான்..."
"பசிச்சாலும் தான்...” என்று அவன் கேட்பதற்குள் ஆஷிக் பதிலளிக்க,
"சரிடா."
"அப்புறம் ரூல்..."
"டேய் போதும்டா, இதெல்லாம் கேட்டா டேட்டிங் பண்ணணும்னே தோன மாட்டிக்குது, அப்புறம் பேசுறேன்."
"ஓகேடா, ஆல் த பெஸ்ட். நான் சொன்ன ரூல் எல்லாத்தையும் மறந்துராத."
"சரிடா."
"ம்ம் சரிடா பாய்.” என்று இவன் ஃபோனை வைக்கவும், அவள் வரவும் சரியாக இருந்தது.
"ஹாய் ஆதர்ஷ்!” என்றவாறு காரில் அமர்ந்தவளிடம்,
"ஹாய், இங்க வேற ரூட் இருக்கா?"
"ஏன், என்னாச்சு?"
"இல்ல, உங்க ஏரியா ரொம்பச் சின்னதா இருக்கு, கார் கொண்டு வர்றதுக்குள்ள ஷப்பா ஒரு வழியாகிட்டேன்."
"உங்க கார் ரொம்பப் பெருசா இருக்குல, மே பீ அதனால கஷ்டப்பட்ருக்கலாம்.” என்று அவள் கூறியதில் உள்ள அர்த்தத்தை உணர்ந்தவன்,
"நான் வரும் போது கார் கொண்டு வர ரொம்பச் சிரமபட்டுட்டேன், அதான் கேட்டேன். வேற ஈஸியான ரூட் இருந்தா நல்லா இருக்குமேனுதான் கேட்டேன், வேற எதுவும் இல்லை."
"தட்'ஸ் ஓகே, பட் இந்த ஒரு ரூட்தான். ஆகாயத்துல காத்தோட விளையாடுற உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
"சரி கிளம்பலாம்.” என்றவாறு தன் காரை ஸ்டார்ட் செய்தவன்,
"அப்புறம் சொல்லு, எங்க போறோம், தாஜ் ஓபராய் எனி ஸ்டார்?"
"வெயிட், அங்கலாம் போறோம்னு யார் சொன்னது?"
"அங்க போகலனா வேற எங்க?"
"அதெல்லாத்தையும் விட ரொம்ப நல்லா ஹோட்டலுக்குத்தான் போறோம். அங்க சைனீஸ் புட் அவ்ளோ ஃபேமஸ், அந்த டேஸ்ட்க்கு எந்த ஸ்டார் ஹோட்டலும் கிட்ட கூட வர முடியாது."
"அப்படியா?"
"எனக்குத் தெரியாம டெல்லில அப்படி ஒரு ஹோட்டலா? ஸ்ட்ரேஞ்..."
"வாங்க, உங்களுக்கே தெரியும்."
"ஓகே."
"ஸ்ட்ரெய்டா போய் ரைட் கட் பண்ணுங்க, இங்கதான் ஸ்டாப், இதுக்கு மேல உங்க கார் போகாது. நாம நடந்துதான் போகணும்.” என்றவள் காரில் இருந்து இறங்க அவனோ தனக்குள், ‘என்ன மாதிரி இடம் இது?’ என்று கூறியவாறு தயங்கியபடி காருக்குள்ளே அமர்ந்திருந்தான்.
"என்னாச்சு?"
"நத்திங்” என்றவாறு மெதுவாக இறங்கியவன்,
"நடாஷா, இங்க கார் பார்க்கிங் எல்லாம் கிடையாதா?"
"இங்க தினம் தினம் கூலி வேலைக்குப் போறவங்க, ட்ரைவர்ஸ், அப்புறம் சின்னச் சின்ன வேலைக்குப் போறவங்க சாப்பிட வருவாங்க. அவங்களாம் கார்ல வரமாட்டாங்க, ஸோ நோ பார்க்கிங்."
"ஒஹ்..."
"இதுக்கு முன்னாடி நீங்க இங்க வந்தது இல்லையா?"
"கம் ஆன், இப்படி ஒரு இடம் டெல்லில இருக்குனே உன்கூட வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது."
"அப்படினா உங்க லைஃப்ல ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டீங்க."
"அது சரி."
"ஆதர்ஷ் அங்க பாரு அங்கதான், வாங்க.” என்று அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றவள், “இங்க சைனீஸ் புட் அவ்ளோ அருமையா இருக்கும், நீங்க என்ன சாப்பிட போறீங்க?"
"இங்கையா? நோ வே."
"ஆதர்ஷ் ட்ரஸ்ட் மீ, அவ்ளோ நல்லா இருக்கும். சாப்பிட்டுதான் பாருங்களேன்."
"நோ நோ... ஸி, நான் சாப்பிட மாட்டேன். நீயும் சாப்பிடாத ப்ளீஸ்... வீ வில் மூவ்."
ஆதர்ஷ் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாகத் திரும்ப, அப்பொழுது ஒருவன் தெரியாமல் அவன் மீது மோத அவனது கையில் இருந்த சாப்பாடு தவறுதலாக விழுந்து, ஆதர்ஷின் வெள்ளை நிற சட்டையில் மஞ்சள் நிற கறை படிய, கோபமுற்ற ஆதர்ஷ் அவனது சட்டையைப் பிடித்து, "கண்ண எங்கடா வச்சுருந்த?"
"சாரி சார், தெரியாம பட்ருச்சு."
"என்ன தெரியாம? இதோட விலை என்னனு தெரியுமாடா? அதுசரி, உன்னை மாதிரி தர டிக்கெட்கெல்லாம் அது எப்படித் தெரியும்?"
"என்ன... யாரை பார்த்து தர டிக்கெட்னு சொன்ன? ஏறி மிதிச்சேன், கோட்டு சூட்டெல்லாம் பறந்திரும். சார் பெரிய மைனர்னா ஏன் இங்க வராரு?” என்று அவன் பதிலுக்குச் சட்டையைப் பிடிக்க, ஆதர்ஷ் அவனைத் தரையில் தள்ளிவிட்டவாறு, "மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம், உள்ள தள்ளிருவேன்.” என்று கூற,
"என்னையே தள்ளிவிட்டுட்டல, உன்னைச் சும்மா விடமாட்டேன்டா.” என்று அவன் விழுந்து வாக்குவாதம் செய்ய,
நிலைமை மோசமானதை உணர்ந்த நடாஷா, ஆதர்ஷை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
"எல்லாம் உன்னால ச்ச..." என்று ஆதர்ஷ் எரிச்சல் அடைய,
"சட்டையில லேசா கறை பட்டுடிச்சு, இதுக்கு யாராவது கோபப்படுவாங்களா? வாஷ் பண்ணினா சரியா போய்டும்."
"லுக், இதோட வேல்யு தெரியுமா? ரேர் பீஸ்... லண்டன்ல இதோட ஷோரூம்ல போய் ஸ்பெஷலா வாங்குனது. என்னோட ஃபேவரட் ஷர்ட் இது."
"ஓகே புரியுது, நல்லா வாஷ் பண்ணினா கறை போயிரும்."
"போகாது, எப்படி உன்னோட மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி மாறாதோ, அதே மாதிரிதான் இந்த வைட் ஷர்ட்ல பட்ட கறையும்.” என்றவன் வேகமாகக் காரை ஓட்ட,
"ஸ்டாப்! ஐ செட் ஸ்டாப் த கார்.” என்றவளின் சத்தத்தில் காரை நிறுத்தியவன்,
அவளையே பார்க்க அவள் காரில் இருந்து வேகமாக இறங்க போக அவளது கையைப் பிடித்துத் தடுத்து, "ஐ வில் ட்ராப் யு.” என்றவனைக் கண்களில் நீர் வலிய பார்த்து, "லீவ் மை ஹண்ட்.” என்றவள் காரில் இருந்து இறங்க போக,
"ஐ செட் ஐ வில் டிராப் யு."
"நோ நீட், உங்களோட பெரிய கார் என்னோட சின்ன ஏரியாக்குள்ள வந்தா உங்களுக்குத்தான் கஷ்டம், குட் பாய்!” என்றவள், எதிரே வந்த ஆட்டோவில் ஏறி செல்ல,
கோபத்தில் தான் கூறிய சுடுசொல் அவளை எப்படிக் காயப்படுத்திருக்கும் என்பது அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
ஆஷிக்கிற்குப் ஃபோன் போட்டவன், "எங்கடா இருக்க?"
"சின்ன வேலை விஷயமா வெளியில வந்தேன், ஆமா என்னாச்சு, அதுக்குள்ள உன்னோட டேட் முடிஞ்சிட்டா என்ன?"
"கடுப்புல இருக்கேன், நீ வேற எதாவது சொல்லாத."
"என்னனு சொல்லுடா, அப்போதான தெரியும்."
"என்னனு சொல்றது...” என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்து, "என்னடா பண்ண?” என்று கேட்க,
ஆஷிக் அவனிடம், "என்னது என்ன பண்ண? அறிவில்லை, இப்படியா பேசுவ?"
"அது... அந்த மாதிரி இடம்டா. நீ கூட அப்படித்தான் பேசுவ."
"நீதான் சொல்ற அந்த இடம் லோ கிளாஸா இருந்துச்சுனு, அப்போ நீயும் லோ கிளாஸ் மாதிரி சண்டை போட்ருக்க. அறிவு இருக்காடா? அங்கே போய் ஒருதன்கிட்ட சண்டை போட்ருக்க? ஒருவேளை மொத்தமா எல்லாரும் சேர்ந்து வந்திருந்தா, என்ன பண்ணிருப்ப? நடாஷாவுக்கு எதுவும் ஆகிருந்தா, இடம் சரி இல்லைனா அங்கிருந்து கிளம்புறத விட்டுட்டு சட்டைக்காகச் சண்டை போட்டுட்டு வந்திருக்க. டேட்டிங்கு போனியா இல்லை பாக்சிங்கு போனியாடா? சரி, அவன்கிட்டதான் சண்டை போட்ட, அவளை ஏன்டா அப்படிப் பேசின?"
"வாய் தவறி...” என்றவனிடம் ஆஷிக், “வாயிலையே போட்டேன்னா... டேய் எனக்கு ஒரு விஷயம் கிளீயர் பண்ணு, உனக்கு லைஃப் பார்ட்னர் வேணுமா இல்லை பிஸ்னஸ் பார்ட்னர் வேணுமா?"
"டேய், நீ ஏன்டா பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?"
"பதில் சொல்லுடா."
"லைஃப் பார்ட்னர்டா."
"அப்போ நல்லா சொல்றேன் கேட்டுக்கோ...” என்றவன், தன் பின்னால் யாரோ இருமும் சத்தம் கேட்டு திரும்பி தன் முன்னால் இருந்த அவனது தந்தை அஸாத்தை பார்த்தவாறே, "நடாஷா மட்டும் இல்லை, எந்தப் பொண்ணையும் உன் வாழ்க்கையில அப்படி ட்ரீட் பண்ணாத, உன் ஆம்பளை திமிர எந்தப் பொண்ணுகிட்டயும் காட்டணும்னு நினைக்காத, அப்புறம் கோடீஸ்வரி இல்லை பிச்சைக்காரி கூட வரமாட்டா.
பொண்ண பொண்ணா பாரு, வெறும் ரத்தமும் சதையுமா பார்க்காத. முதல்ல ஒரு பொண்ண ரெஸ்பெக்ட் பண்ணு, அப்புறம் கேர், அப்புறம் ட்ரஸ்ட், அப்புறம் லவ் என்ன புரியுதா? நீ ஆம்பளைங்கிறதுக்காக உன்னோட கருத்துகள் எல்லாத்தையும் அவகிட்ட திணிக்கணும்னு நினைக்காத."
"மச்சான், என்னடா ஒருமாதிரியா பேசுற?"
"கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறம் பேசுறேன்.” என்றவன் ஆதர்ஷிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதற்கு முன் தன் அழைப்பைத் துண்டித்து, தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த அஸாத்திடம், "என்ன அப்படிப் பார்க்கிறீங்க, நான் உங்கள சொல்லல. என் ஃப்ரண்ட சொன்னேன், நீங்க ஒன்னும் உங்களைச் சொன்னதா நினைச்சுக்கலையே?"
"வாட் டூ யு வாண்ட்?” என்று கண்கள் சிவக்க கேட்க,
"செம... டைரக்டா மேட்டர்கே வந்துட்டீங்க...” என்றவன், அவர் முன்னால் இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டவாறு அமர்ந்து கொண்டு, “அட நிக்கிறீங்களே, உக்காருங்க."
"எனக்கு நிறைய டைம் இல்லை, சீக்கிரம் சொல்லு."
"ரொம்பச் சூடா இருக்கீங்க, ஜில் தண்ணி சொல்லவா? சின்ன வீடா தெரியுதே, ஐ மீன் வீடு சின்னாதா தெரியுதே. உங்களுக்கு வசதியா இருக்கானு கேட்டேன்."
"ஆஷிக் என்ன வேணும்?"
"ஐம்பது கோடி."
"வாட்!"
"ஐம்பது கோடி பணம் வேணும்."
"முடியாது, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ."
"என்ன சவால் விடுறீங்களா?"
"முடியாதுனு சொல்றேன், நான் போட்ட விதையில முளைச்சவன் நீ, என்கிட்ட உன் வேலையைக் காட்டாத."
"அதைத்தான் நானும் சொல்றேன், நீங்க போட்ட விதைதான், உங்க புத்தி கொஞ்சம் கூடவா எனக்கு இல்லாம இருக்கும்? சின்னப் பையன் நான் தப்பா எதாவது செய்யப் போய், உங்களுக்குப் பிரச்சனையாகிற கூடாது பாருங்க."
"என்ன வேணும்னாலும் பண்ணு, இப்போ இங்க இருந்து வெளியில போ."
"அப்படினா இதோட விளைவுகள் ரொம்பவே மோசமா இருக்கும்."
"ஃபேஸ் பண்ண ரெடியா இருக்கேன்."
"உங்க இஷ்டம், நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க இன்னும் நாற்பத்து எட்டு மணி நேரத்துல, நீங்களே என்கிட்ட பணம் கேஷா வேணுமா இல்லை அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ணணுமானு கேப்பீங்க. யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.” என்றவன், விஷமமாய் அவரைப் பார்த்து சிரித்தவாறே அங்கிருந்து செல்ல, அவர் அவனைக் கோபமாகப் பார்த்தார்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 23 & 24

Last edited: