- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 27
கலைந்த கேசம், கசங்கிய ஆடை, சிறிதளவு இடைவெளி கூட இல்லாமல் ஆஷிக் ஜியாவை இறுக்கமாக அணைத்திருந்த நிலை, பார்ப்பவர்களின் விழிகளுக்கு வேறு விதமாகத் தோன்ற, கூடியிருந்தோர் அனைவரின் பார்வையும் ஆஷிக்கை விட அதிகமாக ஜியா மீது பட, தங்களுக்குள் அவளைக் கண்டவாறே ஏதேதோ பேச, அப்பொழுது ஷாஹித்தின் உறவுகாரர் அஸாத்தைப் பார்த்து,
"என்ன இது இப்படிக் கூப்பிட்டு அசிங்கபடுத்துறீங்க. என்ன பையன வளத்து வச்சுருக்கீங்க?” என்று கேட்க, அஸாத், 'எப்பவும் உன் பையன மெச்சுக்குவியே இப்போ என்ன சொல்ற?' என்பது போலத் தன் மனைவியை முறைத்து பார்க்க, ஹாஜரா கவலையில் தலை தாழ்த்தி நின்றார்.
இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று கூற, அப்பொழுது கூட்டத்தில் ஒரு பெண், “பையன சொல்லி என்ன பண்ண? பசங்க அப்படித்தான் இருப்பாங்க, பொண்ணுக்கு தெரிய வேண்டாம். வசதியான இடம் கிடைச்சதும் வளைச்சு போட்டுட்டா.” என்று கூறவும், ஜியா கூனி குறுகி நின்றாள்.
அதுவரை இறுக்கமாக இருந்த ஆஷிக்கின் புத்திக்கு அந்தப் பெண் கூறிய பிறகுதான், தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துள்ளோம் என்பது புரிய, அவனுக்கு அந்தப் பெண்ணின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் செருப்பால் அடித்தது போல இருந்தது. அதற்கு பிறகு அவனுக்குக் கிடைத்தது எல்லாம் அதுபோன்ற அறைதான்.
"தாய், தங்கச்சி பத்தி கூடவா ஒருத்தன் யோசிக்க மாட்டான்?” என்று அவனை வார்த்தையாலே அனைவரும் அறைந்தனர்.
தன் தாய், தங்கை நிச்சயமாகத் தன் தரப்பில் உள்ள நியாத்தை எடுத்துக் கூறினால், புரிந்து கொள்வார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் நிம்மதியடைந்தவனின் உள்ளம், ஜியாவை நினைத்துதான் கலங்கியது. ஏற்கனவே தன் மீது தவறான கருத்தில் இருக்கும் அவள், எங்கே தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாளோ என்று தவித்தான்.
"இதைத்தான் உன் வீட்ல சொல்லி குடுத்தாங்களா?” என்று ஒரு பெண் கேட்க,
வெகுண்டெழுந்த ஆஷிக், "ஒரு வார்த்தை... இனிமே என் ஜியாவை பத்தி யாராவது பேசுனீங்க?” என்று தன் விரலை உயர்தியாவாறு ஆஷிக் கண்களில் கோபம் தெறிக்க சுற்றி உள்ள அனைவரையும் பார்த்து, "நான் ஜியாவ லவ் பண்றேன், ஜியாவ தவிர வேற யாரையும் என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது.” என்றவன் ஷாஹித்தை பார்த்து, “சாரி சார் உங்க பொண்ணை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதை நான் நேற்றே சொல்லிருக்கணும். சூழ்நிலை என்னால சொல்ல முடியலை, என்னை மன்னிச்சுருங்க.” என்றவாறு ஜியாவை பார்க்க,
"என்னைப் பழிவாங்கிட்டியா ஆஷிக்? இப்போ சந்தோஷமா இருக்கியா? பணத்துக்காக உன்னை நான் வளைச்சு போட்டேன்னு சொல்றாங்க. அதோட அர்த்தம் உனக்குப் புரியுதா?” என்று கதறியவள், யார் முகத்தையும் தன் கண்கொண்டு காணயிலாது அவமானத்தோடு அழுதுகொண்டே அங்கிருந்து ஓடாத குறையாகச் செல்ல, அவளைத் தடுக்கக் கூட முடியாது கூனி குறுகி நின்றான்.
ஷாஹித் குடும்பத்தினர் முன் தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டானே என்று கோபம் கொண்ட அஸாத், ஷாஹித்திடம் எதோ பேச முனைய, அவர் அஸாத்தைப் பார்த்து எதுவும் வேண்டாம் என்பது போலத் தன் கைகளை உயர்த்தி, "அஸாத் சார், நீங்க சமூதாயத்துல அந்தஸ்த்தும் மரியாதையும் நிறைஞ்ச குடும்பம், உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கலை.” என்றவர் அனைவரும் கேட்கும்படி, “இங்க எதுவும் நடக்கப் போறதில்லை, எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க.” என்று தன் சொந்தபந்தங்களோடு அங்கிருந்து சென்றார்.
எந்த உணர்ச்சியும் இல்லாமல் கல் சிலையைப் போல நின்று கொண்டிருந்த ஆஷிக்கைப் பார்த்து அஸாத், "என்னைப் பழிவாங்குறதா நினைச்சுட்டு உன்னை நீயே அசிங்கபடுத்திட்ட. ஷேம் ஆன் யு. உன்னால என்னோட சோசியல் ஸ்டேட்டஸே போச்சு. கண்டவன் எல்லாம் என்னைக் கேள்வி கேட்குற மாதிரி பண்ணிட்ட.” என்றவர் ஹாஜராவைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, அவரது பேச்சை பொருட்படுத்தாதவன் தன் தாயின் அருகில் வந்து,
"அவரை விடுமா, நீங்க என்னைப் புரிஞ்சுக்குவீங்கனு எனக்குத் தெரியும்.” என்ற மறுநொடி ஆஷிக்கின் கன்னங்களில் பளார் பளார் என்று மாறி மாறி அடித்தவர்,
"இன்னும் என்னடா புரிஞ்சிக்கணும்?” என்று ஆதங்கத்தோடு கேட்க,
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஆஷிக் கண்கள் குளமாக, “மா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிகிட்டீங்க, நான் எதையும்..." என்று அவன் முடிப்பதற்குள், அவனைக் குறுக்கிட்ட ஹாஜரா, "இல்லப்பா, நீ சரியாதான் இருந்திருக்க. நான், நீ என் பையன், கண்டிப்பா தப்பு பண்ணமாட்டனு இவ்வளவு நாள் தப்பாவே நினைச்சுட்டு இருந்துட்டேன். என்னதான் நான் பெத்திருந்தாலும் அவரோட ரத்தமும் தானே உன் உடம்புல ஓடுது. ஆக உன் அப்பா மாதிரிதான் நீயும்னு நிரூபிச்சுட்டல.
இன்னைக்கு உன்னால மூணு பொண்ணுங்க அழுதுட்டு நிக்காங்க. உன் தங்கச்சி முகத்தைப் பாரு, ஒரு அண்ணனா அவளுக்கு நீ எந்தக் கடமையும் ஒழுங்கா பண்ணல. இனிமே நீ என் மூஞ்சிலையே முழிக்கக் கூடாது." என்று தன் வேதனையை வார்த்தையால் கொட்டி தீர்த்தார்.
ஏக்கத்தோடு தன் தாயைப் பார்த்தவன், அவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள, எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல போன நேரம், தன் தாயிடம் ஆஷிக்கை எங்கையும் போக வேண்டாம் என்று கூறுமாறு ஆயிஷா வேண்டி கேட்க, அவளது வேண்டுதலை நிராகரித்த அவளது தாய் கோபத்தோடு அங்கிருந்து செல்ல,
ஓடி சென்ற ஆயிஷா, “எங்கையும் போகாத அண்ணா, உன்னோட சந்தோஷத்தை பாதிக்கிற மாதிரியான எந்த விஷயமும் எனக்கு வேண்டாம். இந்த மாப்பிள்ளை இல்லனா வேற மாப்பிள்ளை. எனக்கு நீதான் அண்ணா முக்கியம்.” என்று ஆஷிக்கை கட்டி அணைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதவாறு கூற, நெகிழ்ந்து போனவனின் விரல்கள் முதல் முறையாக அவனையும் மீறி தன் தங்கையின் சிகையைத் தடவியதை உணர்ந்தான். முதன் முதலில் தன் தங்கைக்கும் தனக்குமான பிணைப்பை பற்றி அவன் உணரும் பொழுது அவனது விழிகள் கசிந்தது.
தன்னை அணைத்துக் கொண்ட தன் தங்கையை வறட்டு புன்னகையோடு தன்னிடம் இருந்து விலக்கிவிட்டவன், லேசாக அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, பதில் ஏதும் பேசாமல் தன் வீட்டில் இருந்து கிளம்பினான்.
யாருமில்லாத தனிமையை அவனது மனம் நாட, கால்போன போக்கில் நடந்தான். கண்ணீர் துளிகள் மட்டுமே அவனது துணையாகி போனது.
"நீயும் உன் அப்பா மாதிரிதான்!" என்று அவனது தாய் மொழிந்த வார்த்தைகள், அவனை நெருப்பாய் சுட தன் காதை இறுக்க மூடியவாறு கதறி அழுதான்.
தன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று பெண்களின் மனதை, இப்படி ஒரு நொடியில் உடைத்துவிட்டதை நினைத்து நினைத்து நொந்து போனான்.
ஆயிஷா மீது அதீத பாசம் இல்லாவிட்டாலும் தன் தங்கை என்ற உள்ளுணர்வு அவனது மனதில் எப்பொழுதும் உண்டு.
தாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஜியாவை பற்றிக் கேட்கவே வேண்டாம். முதன் முதலாகத் தனக்குள் காதலை விதைத்தவள். இன்று தனக்கான அத்தனை உறவையும் ஒரு நொடியில் சிதைத்து விட்டோம் என்று எண்ணி வேதனைபட்டவன், எங்கே தன் தாய் கூறியது போல ஒருவேளை தான் தன் தந்தையைப் போல் தானோ என்கின்ற எண்ணம் வர நிமிடத்தில் மறுத்தவன், “இல்லை, நிஜமா இல்லை... நான் அவர் இல்லை. சத்தியமா இல்லை... நம்மளால ஏற்பட்ட பிரச்சனைய நாமதான் சரி பண்ணணும்.” என்று முடிவெடுத்தவனது கால்கள் ஜியாவின் வீட்டை வந்தடைந்தது.
இன்று தனக்கு நடந்ததை எண்ணி மிகவும் வேதனைபட்டவள், பூட்டிய தன் அறைக்குள்ளே தன்னை முடக்கிக்கொண்டு, வேதனை தீயிலே வாடி கொண்டிருந்தாள்.
தன் பணியில் இருந்து வீடு திரும்பிய ஷங்கர், தன் மகள் சரண்யாவிடம் ஜியா வீட்டுக்கு வந்துவிட்டாளா என்று விசாரிக்க சரண்யா பதில் கூறுவதற்குள்,
"ஆமா, வந்தவ நான் கூப்பிட்டதுக்குக் கூடப் பதில் சொல்லாம ரூம்குள்ள போய்க் கதவை சாத்திக்கிட்டா.” என்று கூறியவரே, காஃபி டம்ளரை தன் கணவனிடம் நீட்டினார். தன் மகளைக் காய்ந்த துணிகளையெல்லாம் எடுத்து முடிக்குமாறு கட்டளையிட்டு, தன் கணவனின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள, அப்பொழுது ஷங்கர் திவ்யாவிடம், "ஜியா வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது?"
“ஒரு மணி நேரம் இருக்கும்."
"இன்னுமா ரூம்குள்ளையே இருக்கா?” என்று தன் மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து ஜியாவைப் பற்றி விசாரித்தவாறே உள்ளே வந்த ஆஷிக்கைப் பார்த்ததும், திவ்யாவின் மூளைக்கு எதோ பிரச்சனை நடந்திருக்கின்றது என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.
ஷங்கரிடம் ஆஷிக் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருக்கும் பொழுதே, அவனது குரல் கேட்டு கீழே வந்த ஜியா தன் சித்தி, சித்தப்பா இருப்பதைக் கூட உணராமல், “உன்னைக் காதலிச்சதுக்கு எனக்கு நல்ல பேரு வாங்கிக்குடுத்துட்ட ஆஷிக். என்கிட்ட என் உயிர் மட்டும்தான் இப்போதைக்கு மிச்சம் இருக்கு. அதையும் என்னை இழக்க வச்சுராத...” என்று அவன் என்ன பேச வருகிறான் என்பதைக் கூடக் கவனிக்காமல், தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துவிட, யாரும் இல்லா தனி மரம் போல மிகுந்த வேதனை அடைந்தான்.
ஜியாவின் மன்னிப்பிற்காக அவளது வீட்டு வாசலிலே நின்று கொண்டிருந்தான். ஆஷிக்கை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போக, இறுதியாக ஜியாவின் வீட்டிற்கு வந்த ஆதர்ஷ், அங்கே எதோ பித்துப் பிடித்தவன் போல அவளது வீட்டு வாசலிலே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், வலுக்கட்டாயமாகத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஆதர்ஷின் கெஸ்ட் ஹவுஸில் ஆதர்ஷ், ஆஷிக்கிடம், "ஏற்கனவே பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு, இந்த நேரத்துல ஏன்டா ஜியா வீட்டுக்கு போன? உன்கிட்டதான்டா நான் பேசிட்டு இருக்கேன், பதில் சொல்லு.” என்று கேட்க,
ஆஷிக், "ஜியாகிட்ட மன்னிப்புக் கேட்கலாம்தான் அங்க போனேன், நான் சுயநலவாதியா ஆகிட்டேன்ல?"
"அப்படி இல்லடா."
"கோபத்துல ஜியாவை ரொம்பக் காயப்படுத்திட்டேன்டா.” என்றவன்,
"இந்தக் கை தானே என் ஜியாவை காயப்படுத்துச்சு?” என்றவாறு கண் இமைக்கும் நொடியில் தன் கையில் இருந்த க்ளாஸ் டம்ளரை டேபிள் மீது தட்டி, ஆதர்ஷ் தடுப்பதற்குள் தன் உள்ளங்கையை ரணமாக்கினான். உதிரம் பெருக்கெடுத்து ஓட பதறிய ஆதர்ஷ், “என்ன காரியம்டா பண்ணிருக்க?” என்றவாறு முதலுதவி செய்ய,
அவனைத் தடுத்த ஆஷிக், “விடுடா, நான் நிஜமாவே ஒரு அருவறுப்பானவன்தான், எனக்கு இதுதான் சரி.” என்று அடம்பிடிக்க, 'பளார்' என்று அறைந்த ஆதர்ஷ்,
"எல்லாப் பிரச்சனையும் பண்ணிட்டு, அதெல்லாம் சரி பண்ணாம இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு இருக்க. ஜியாவை அடிச்சது தப்புன்னா, இப்போ நீ பண்றது அதை விட முட்டாள்தனம். எங்கடா போச்சு உன் நிதானம் எல்லாம்?” என்றவாறு தன் நண்பனின் காயத்துக்கு மருந்திட்ட ஆதர்ஷிடம்,
ஆஷிக், "உண்மை தான்டா, அந்த நேரம் நான் என்னையே இழந்துட்டேன். ஒரு மிருகம் மாதிரி நடந்துக்கிட்டேன். வலியில துடிச்சுருப்பால? என்னை இனிமே அவ மன்னிக்கவே மாட்டால? என்னால எல்லாரும் கஷ்டப்படுறாங்க.
சத்தியமா அவளை அவமானப்படுத்தணும்னு நான் ஒருநாளும் நினைக்கலை. மனசு விட்டு பேசணும்னுதான் நான் போனேன். எந்த தப்பும் பண்ணாம அவகிட்ட நான் மன்னிப்பும் கேட்டேன். கால்ல விழாத குறையா கெஞ்சினேன். ஆனா அவ என் காதலையே கொச்ச படுத்துற மாதிரி பேசிட்டாடா, அப்படியே ஒரு மாதிரி உடம்பெல்லாம் கூசிடுச்சுடா.
அவ அப்படிப் பேசினதும் எனக்கு ரொம்பக் கோபம் வந்துட்டு. சொல்ல போனா கொஞ்ச நேரம் நான் நானாவே இல்லை. என்ன பண்றேன்னு உணராம அவளை அடிச்சுட்டேன். நான் என் கோபத்தை அவகிட்ட காட்டிருக்கக் கூடாது. எல்லாரும் அங்க வருவாங்க, ஜியாவ தப்பா பேசுவாங்கனு நான் சத்தியமா நினைக்கவே இல்லை.
என்ன பண்றதுனே எனக்குத் தெரியலை. ஆயிஷா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், ஜியா இன்னொரு பக்கம்.” என்று தன் நண்பனை கட்டி தழுவியவாறே தன் மனதில் உள்ள பாரத்தைக் கொட்டி தீர்த்தவனுக்கு, மனதில் கொஞ்சம் தெளிவு பிறந்தது. அவ்வளவு நேரம் நடந்ததைப் பற்றி யோசித்தவன், இனிமேல் நடக்கப் போவதை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.
தனிமையில் ஜியாவிடம் அவளது சித்தப்பா ஆஷிக்கைப் பற்றிக் கேட்க முதலில் தயங்கியவள், பிறகு தனக்கும் அவனுக்குமான காதலை பற்றியும் அவன் தனக்குத் துரோகம் செய்ததால் அவனை விட்டு பிரிந்து வந்ததைப் பற்றிக் கூறினாள்.
அவர் ஜியாவிடம், "நீ துரோகம் பண்ணிட்டான்னு சொல்ற, ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அவன் உன்னை மட்டும்தான் நினைச்சுட்டு இருக்கிற மாதிரி இருக்கே? நீங்க மனசு விட்டு பேசினா எல்லாம் சரியாகிரும்னு தோனுதுடா” என்று அவர் கூற,
"பேசி எந்த யூசும் இல்லை. எனக்கு அவன் வேண்டாம். நான் கடைசி வர இப்படியே இருந்திடுறேன் சித்தப்பா.” என்றவளிடம்,
"இப்படி எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பேச கூடாதுமா. இந்தப் பிரச்சனைய என்கிட்ட விட்டுடு, ரெண்டு நாள் சித்தப்பா வெளியூர் போறேன். போயிட்டு வந்ததும், அடுத்தது என்ன பண்ணணும்னு நான் யோசிக்கிறேன்.” என்றவரிடம் ஜியா மறுபடியும் சொன்னதையே சொல்ல,
இப்பொழுது இவள் தெளிவான மனநிலையில் இல்லை, ஆகப் பேசி எந்தப் பயனும் இல்லை. இப்பொழுது இவளுக்குத் தேவை ஆறுதல் என்பதை உணர்ந்தவர், ஜியாவுக்கு ஒரு நண்பனாகத் தோள் கொடுத்து, நல்ல தந்தையாக ஆறுதல் அளித்து அவளது மனதை தேற்றினார்.
பல யோசனைக்குப் பிறகு சமீரின் வீட்டாரிடம் பேசி, முதலில் ஆயிஷாவின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த ஆஷிக்கின் மனதில், முழுக்க ஜியாவை பற்றிய சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்தது.
"இவன் இப்படி இருக்கான்னா அதுக்கு நீதான் நீ மட்டும்தான் காரணம். நான் கண்டிக்கும் போதெல்லாம் குறுக்கக் குறுக்க விழுந்து, இன்னைக்கு அவன் என் மானத்தையே கப்பல் ஏத்திட்டான்.” என்று வசைபாடிய கணவருக்குப் பதில் ஏதும் பேசாது ஹாஜரா, ஆஷிக்கைப் பற்றி நினைத்தவாறே கவலையில் இருந்தார்.
"ஏங்க இன்னும் எவ்ளோ நேரத்துக்குத்தான் இப்படியே கோபமா இருப்பீங்க? தாஹிரா இன்னும் சாப்பிடாம ரூம்குள்ளையே அடைஞ்சி கிடக்குறா.” என்ற ரஸ்மினிடம்,
ஷாஹித், "எப்படிக் கோபப்படாம இருக்க முடியும்? அத்தனை பேருக்கு முன்னாடி எனக்கு எவளோ அசிங்கமா போச்சு. என் பொண்ண அழ வச்சுட்டாங்கல்ல?” என்று கத்தியவரிடம்,
"சரிங்க, அடுத்து என்ன பண்றதுனு யோசிங்க."
"என்ன பண்றது? என் பொண்ணு அழுறத பார்க்க முடியலை. அவளோட அப்பாவா இருந்துட்டு என்னால அந்த நேரத்துல எதுவும் பண்ண முடியாம போச்சே?"
"அப்படி பார்த்தா ஆயிஷாவும் பாவம் தாங்க, அந்தப் பொண்ணும் பல கனவுகளோடு இருந்திருப்பால்ல. சமீர் கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று கேட்க, தன் மனைவியின் வார்த்தையில் உள்ள நியாயத்தை இப்பொழுது ஏற்றுக்கொள்ளும் மனதில் இல்லாதவர்,
"இப்போதைக்கு என்னோட பொண்ணைப் பத்தி மட்டும்தான் என்னால யோசிக்க முடியும். நான் போய் தாஹிராவை கூட்டிட்டு வரேன், நீ சாப்பாட எடுத்து வை.” என்றார்.
அன்று இரவு அனைவருக்கும் கனமானதாகவே இருந்தது. ஒவ்வொருத்தரின் மனதும் தண்ணீர் இல்லாத மீனை போலத் தவித்துக் கொண்டிருந்தது.
சமீரை சந்தித்துக் காதல் ராகம் பாடாவிட்டாலும், இவன்தான் தன் வருங்காலக் கணவன் என்ற ஒரு எதிர்பார்ப்போடு பல கனவுகளுடன் இருந்தாள். திடீரென்று கண்ட கனவெல்லாம் கானல் நீராகிப் போனால், எப்படி ஒரு பெண்ணால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியும்?
ஆஷிக், ஜியாவின் உறவோ ஏற்கனவே பல சிக்கலில் சிக்கி கொண்டிருந்தது.
அதில் இந்தப் புதுச் சிக்கல் வேறு. தன் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டதே, ஜியா மன்னிப்பாளா என்கின்ற கவலை ஆஷிக்கிற்கு.
தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, இன்னும் எத்தனை முறைதான் தான் காதலித்த பாவத்திற்கு, ஆஷிக் தன்னைக் காயப்படுத்துவான் என்கின்ற கவலை ஜியாவிற்கு.
ஜியா, ஆஷிக்கின் உறவால் தன் மகளின் எதிர்காலம் கேள்வி குறி ஆகிவிடுமோ என்ற கவலை திவ்யாவிற்கு.
தன் மகனா இன்று அத்தனை பேர் முன்னிலையில் தன்னைத் தலை குனிய செய்தான்? ஆயிஷாவை எவ்வாறு சமாதானம் செய்யப் போகிறோம் என்கின்ற கவலை ஹாஜராவிற்கு.
நல்ல பிஸ்னஸ் டீலிங் ஆஷிக்கால் முறிந்து விட்டதே? விட்டதை எவ்வாறு பிடிக்கப் போகின்றோம் என்கின்ற யோசனையில் அஸாத் அஹமத்.
தன் இரு புத்திரர்களின் சோகத்தை எவ்வாறு தீர்க்க போகிறோம் என்கின்ற கவலை ஷாஹித்துக்கும் ரஸ்மினுக்கும்.
ஆஷிக்கைப் பார்த்தால் எந்தப் பெண்ணும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாள். தாஹிராவும் விதி விலக்கல்ல, பார்த்த நொடியே அவளுக்கு அவனைப் பிடித்துப் போக, அதிகம் நேரம் பழக்கம் இல்லை இருந்தும், இவன் தனக்கானவன் என்கின்ற சிறு ஆசை மனதிற்குள் வந்துவிட்டதே. அது இல்லை என்பது மூளைக்கு எட்டிவிட்டது, ஆனால் மனமோ ஏற்க மறுக்கிறதே. பெண்ணின் மனம் அல்லவா? கற்பனைகள் அதிகம்!
ஆஷிக்கிற்குத் தாஹிரா இல்லையென்று ஆனதில் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், ஆஷிக் இன்னும் ஜியாவை மறக்கவில்லையே என்கின்ற ஆதங்கம் ஒரு பக்கம். ஒருவேளை தான்தான் அவர்கள் இருவரின் பிரிவிற்கு காரணம் என்று தெரிந்தால் என்ன ஆகும்? என்கின்ற பயம் ஒரு பக்கம் என்ற தவிப்பில் தியா.
இன்று நடந்த அனைத்திற்கும் அடிப்படை காதல். காதல்னா இவ்வளவு வலியா என்று தன் அறையில் உட்கார்ந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்த ஆதர்ஷின் நினைவில், உடனே வந்தது நடாஷாவின் முகம். கால் செய்ய ஃபோனை எடுத்தவனது விரல்கள் ஏனோ பாதியிலே நின்றுவிட,
‘வலினு தெரியுது, அப்புறமும் ஏன் மனசு அதையே தேடுது? நான் ஏன் நடாஷா பத்தி யோசிக்கிறேன்? நான் ஒன்னும் அவளை லவ்... நோ... இல்லை... இது வயசுக்கேத்த அட்ராக்ஷன்.’ என்று தன் மனதை சமாதானம் செய்ய, அது உன்னை விடுவேனா என்பது போல,
‘ஆனா நான் ஒன்னும் பதினாறு வயசு பையன் இல்லையே? புதுசா ஒரு பொண்ணைப் பார்த்ததும் அட்ராக்ட் ஆகுறதுக்கு. ஐ யம் அபோவ் தர்டி. என்னடாது இது, கொஞ்சம் யோசிச்சதுக்கே இப்படித் தலை வலிக்குது, ஐ நீட் கிரீன் டீ.’ என்றதும்,
"சார் யுவர் கிரீன் டீ” என்று புன்னகைத்தவாறு அவனது ஜன்னலின் வழியே, வந்த காற்றில் அசைந்தாடிய தன் அவிழ்ந்த கூந்தலுடன் நடாஷா அவன் முன்பு வந்து நிற்க, ஒரு நொடி அதிர்ந்தவன்,
"நீயா! எப்படி இங்க வந்த?” என்று ஆச்சரியத்தோடு கேட்க,
"சார் எப்பவும் போலத்தான் வந்தேன். தண்ணி ரூம்க்கு எடுத்துட்டு வர மறந்துட்டீங்க, அதான் கொண்டு வந்தேன்.” என்று தன்னை ஆச்சரியமாய் பார்த்த வேலைக்காரனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த ஆதர்ஷ்,
‘என்னடா காதல் இது? மனுஷனை ஒரு செகண்ட்ல பைத்தியமாக்குது. பட் நைஸ்! ஆனா நானும் இதுல மாட்டணுமா என்ன?’ என்ற ஆதர்ஷ் வெகுளியாக யோசிக்க, நீ ஏற்கனவே மாட்டிவிட்டாய் என்று அவனது மனது கேலி பேசியது.
தான் விரும்பியவனுக்குத் தன்னை விட அந்தஸ்த்துதான் பெரிதாக இருக்கிறதே என்கின்ற கவலையில் நடாஷா.
ஆக அனைவரது மனமும் உணர்ச்சி போராட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்க, இவர்களது வலிகள் தீருமா? காதல் கைகூடுமா? என்பதைக் காலம்தான் கூறவேண்டும்.
***
நிலவே 28
காலை பொழுது புலர்ந்த வேளையில் என்றும் இல்லாது சீக்கிரமே எழுந்த ஆஷிக், கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு தன் தலையை ஒப்பனை செய்து கொண்டிருக்க,
"குட் மார்னிங் ஆஷிக்!” என்றவாறு உள்ளே நுழைந்த ஆதர்ஷைப் பார்த்து, "குட் மார்னிங்டா!” என்று தன் வேலையைத் தொடர்ந்து கொண்டே கூறினான் ஆஷிக்.
"டேய் எங்க கிளம்பிட்ட?” என்ற ஆதர்ஷிடம், ஆஷிக் தன் முழுக்கை சட்டையைத் தன் முழங்கை வரை மடக்கி விட்டவாறே அவன் புறம் திரும்பி,
"சமீர் வீட்டுக்கு"
"டேய் இப்போவேவா? ஒரு ரெண்டு நாள் போகட்டும்..."
"இல்லை, இன்னைக்கே பேசியாகணும்."
"சரி, நானும் வரேன்."
"வேண்டாம் மச்சான், நான் பார்த்துக்கிறேன்."
"டேய், அவரு கோபத்துல உன்னை எதாவது பேச, நீ பதில் பேச பிரச்சனை எதுவும் ஆகிற போகுதுடா."
"என் தங்கச்சியோட வாழ்க்கைடா, என்ன நடந்தாலும் பொறுமையா இருப்பேன்.” என்று முதன்முறை ஆயிஷாவை தன் தங்கை என்று உரிமையாய் கூறிய ஆஷிக்கைப் பார்த்து புன்னகைத்த ஆதர்ஷ்,
"சரிடா, ஆல் த பெஸ்ட். ஏதும்னா ஃபோன் பண்ணு சரியா?” என்று ஆதரவாக அவனது தோளில் தட்டி வழியனுப்பி வைத்தான்.
ஆதர்ஷிடம் விடைபெற்ற ஆஷிக் ஒரு சில மணி நேரத்தில் சமீரின் இல்லம் அடைந்தான். கதவு திறந்திருப்பினும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஆஷிக் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
ஷாஹித் டைனிங் டேபிளில் தன் வீட்டாருடன் சாப்பிட்டுகொண்டிருக்க, யாராக இருக்கும் என்று வெளியே சென்று பார்த்த ரஸ்மின்,
"எப்படிப்பா இருக்க, என்ன விஷயம்?” என்று கேட்க, அவரைப் பார்த்து லேசாகத் தன் தலையை அசைத்தவன், “ஷாஹித் ஸார பார்க்கணும்.” என்று கூற, அதற்குள் வீட்டினுள் இருந்து ஷாஹித், "ரஸ்மின் யாரு வந்திருக்காங்க?” என்று கேட்க,
"அதுங்க...” என்றவர் தயக்கத்துடன் ஆஷிக்கை, உள்ளே வருமாறு செய்கை செய்ய,
தன் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வந்த ஆஷிக்கைப் பார்த்த ஷாஹித் கோபமுற்று,
"இங்க எதுக்கு வந்த, உன்னை யாரு உள்ள விட்டது?” என்று கடுமையாய் பேச,
வந்த கோபத்தைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டவன், மிகவும் பொறுமையாக அவரிடம்,
"சார் நேற்று நடந்ததைப் பத்தி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."
"என்ன பேச போற? அதான் மொத்தமா எங்களைக் கேவலப் படுத்திட்டியே?” என்று எரிச்சலுடன் கூற,
"என்னால புரிஞ்சிக்க முடியுது, கனவுகள் உடையும் பொழுது அது எவ்வளவு கஷ்டம் குடுக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். நடந்த எதையும் நான் நியாயப்படுத்த விரும்பலை. அது தப்புதான், ஆனா அது எந்த அளவுக்குத் தப்போ, அந்த அளவுக்கு உண்மை, நான் நினைச்சுருந்தா என் தங்கச்சிக்காக, விருப்பமே இல்லாம உங்க பொண்ண கல்யாணம் பண்ணிருக்கலாம். அப்படி நான் பண்ணிருந்தா, அது நான் உங்க பொண்ணுக்கு பண்ற பெரிய துரோகமா இருந்திருக்கும்.
சரி எல்லாம் போகட்டும், உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன் உங்களுக்கு என்னைப் பத்தி என்ன சார் தெரியும்? என் அப்பா பெரிய பிஸ்னஸ் மேன்னா, உங்க பொண்ணை எனக்குக் குடுத்திருவீங்களா? நான் யாரு என்னனு தெரிஞ்சிக்க மாட்டீங்களா?
நான் அதிகமாகப் பொண்ணுங்க கூடத்தான் பேசுவேன். மோஸ்ட்டா நைட் பப்ல நீங்க என்னை பார்க்கலாம். வீக்கெண்ட்ல பியர் இல்லாம இருக்க முடியாது. பார்ட்டி, பியர், ஃப்ரண்ட்ஸ் இதுதான் ஆஷிக், இதுதான் என்னோட ரொட்டின் லைஃப். இப்படித்தான் டெல்லியில வாழ்ந்துட்டு இருக்கேன்.
ஆனா இப்படிப்பட்ட ஆஷிக்குள்ள இருக்கிற ஒரு அழகான காதல்தான் ஜியா. என் காதலை உங்ககிட்ட சொல்லலாமானு கூட எனக்குத் தெரியலை, ஆனாலும் சொல்றேன்.
எங்களோட லவ் அட்ஜஸ்ட்மெண்ட்ல போகல, அண்டர்ஸ்டாண்டிங்ல போகுது. எங்களுக்குள்ள எதுவமே ஒத்து வராது. ஆனாலும் அவ எனக்கு, நான் அவளுக்குனு வாழ்ந்துட்டு இருக்கோம். அஞ்சி வருஷமா லவ் பண்ணி, சண்டை போட்டு பிரிஞ்சி ஆறு வருஷம் ஆச்சு, இத்தனை நாள்ல ஒரு பொண்ண கூட என்னால ஜியாவோட இடத்துல வச்சு பார்க்க முடியலை. அவளைத் தவிர என்னால இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது.
இந்த விஷயத்தை நான் அன்னைக்கே சொல்லிருக்கணும். ஆனா என்னால எதுவும் சொல்ல முடியலை. எங்க வீட்ல யாருக்கும் இது தெரியாது, எல்லார் முன்னாடியும் சட்டுனு சொல்ல முடியலை. யாரும் என்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பமானு கூடக் கேட்கலை. உங்களைத் தனியா சந்திச்சாவது பேசிருக்கணும், அதைச் செய்யாதது என் தப்புதான்.
ஜியா, அம்மா, தங்கச்சினு யோசிச்சேன், ஆனா உங்க பொண்ணைப் பத்தி யோசிக்காம போய்ட்டேன். தப்பெல்லாம் என்னோடது, இதுல என் தங்கச்சிக்குத் தண்டனை குடுக்காதீங்க. என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன், எனக்குக் குடுங்க. என் தங்கச்சி பாவம், அவ அழும் பொழுது கஷ்டமா இருக்கு.
இதுவரைக்கும் நான் என்னைப் பத்தி சொன்னது எல்லாமே உண்மை. நான் இவ்ளோ பேசுனதுக்கு அப்புறமும் உங்களுக்கு என் மேல உள்ள கோபம் போகலைனா பரவாயில்லை. என்னை மன்னிக்க கூட வேண்டாம், நீங்க என்னை எவ்வளவு திட்டணும்னாலும் திட்டுங்க. ஏன் உங்க முகத்துலையே நான் முழிக்கலை, நான் போயிடுறேன்.
என் தங்கச்சி பாவம், அவளைத் தயவு செஞ்சி ஏத்துக்கோங்க. உங்க எல்லார் மனசையும் ரொம்பக் காயப்படுத்திட்டேன், முடிஞ்சா என்னை மன்னிச்சுருங்க.” என்றவன் தாஹிராவின் பக்கம் திரும்பி,
"யம் ரியலி சாரி.” என்று மூச்சு விடாமல் தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
***
ஜியாவின் வீட்டில், "அட வாங்க அக்கா, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்.” என்று திவ்யா அந்தப் பெண்மணியை முக மலர்ச்சியோடு உள்ளே அழைக்க,
அதைப் பொருட்படுத்தாத அந்தப் பெண்மணி, “இப்போ என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்க விஷயம் புரியாமல் குழம்பியவர்,
"எதைப் பத்தி அக்கா கேட்குறீங்க?” என்று கேட்க,
"எதைப் பத்தியா? உனக்கு விஷயம் தெரியுமா இல்லையா?” என்று ஆரம்பித்தவர், முகத்தில் பாவனைகளுக்குக் குறைவின்றிக் கூறி முடித்து, திவ்யாவின் பதிலுக்காகக் காத்திருக்க, அவர் எதிர்பார்த்தது போலவே அதிர்ச்சியடைந்த திவ்யா முகத்தில் கோபம் ததும்ப,
"என்ன அக்கா சொல்றீங்க, ஜியா பிரச்சனைனு சொன்னா, இதை பத்தி மூச்சு விடல அக்கா."
"நீ இப்படி ஏமாளியா இரு, ஊரு முழுக்க இந்தப் பேச்சுதான். அந்தப் பெரிய வீட்ல வேலை பார்க்குற வேலைக்காரி மூலமா எனக்குத் தெரியும்."
"அவளை என்ன பண்றேன்னு பாருங்க.” என்ற திவ்யாவைத் தடுத்த அந்தப் பெண்மணி, “ஏய் ஆத்திரப்பட்டு என்ன ஆகப் போகுது. போன மானம் போனது தானே? புத்தியோட யோசி, இவளுக்கு ஒரு வரனை பாரு. இவ விஷயம் தெரிஞ்சா சரண்யாவோட வாழ்க்கைக்குத் தான் பிரச்சனை."
"அது சரி, இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறம் யாரு ஜியாவ கல்யாணம் பண்ணுவாங்க?"
"அதுக்கெல்லாம் ஏற்பாடு இல்லாமலா வருவேன். நீ சரி சொன்னா நாளைக்கே தட்டு மாத்திக்கலாம்."
"அப்படியா?"
"ஆமா, பையன் வெளிநாட்ல வேலை பார்க்குறேன். வீட்ல ரொம்ப வசதி, வரதட்சணை எதுவும் வேண்டாம், பொண்ணு அழகா இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க, உனக்கு ஒரு செலவு இல்லை."
"வெளிநாட்ல வேலையா? பையன் எப்படி?"
"அதெல்லாம் விசாரிக்காம சொல்லுவேனா? பையன் ரொம்ப நல்லவன், என்ன சொல்ற?"
"அவரு ஊர்ல இல்லை, நாளை மறுநாள்தான் வருவாரு. அவர் வந்ததும் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்."
“ஆனா அவங்க நாளைக்கே உறுதி பண்ணணும்னு சொல்றாங்களே?"
"நாளைக்கா? அவர் இல்லாம எப்படி அக்கா?"
"பையன் ஊருக்கு வந்திருக்கான், நாளைக்கு நைட் ஊருக்குக் கிளம்பிருவான். போனா ரெண்டு மாசம் கழிச்சுதான் வருவான், அதான் உடனே உறுதி பண்ணினா நல்லா இருக்கும்னு அவங்க வீட்ல நினைக்கிறாங்க."
"அவர் கேட்டா என்ன சொல்றது?"
"நீ என்ன ஜியாக்குக் கெட்டதா செய்யிற? நல்ல விஷயம் தானே, வந்ததும் சொல்லு புரிஞ்சுக்குவாரு. யோசிக்காத திவ்யா."
"இல்லை அக்கா, அவரு இல்லாம... மனசுக்கு நெருடலா இருக்கு.” என்றவரிடம், “உனக்கு சரண்யாவை பத்தி கவலை இருக்கா? இல்லையா? இவ எதுவும் ஏடா கூடமா பண்ணிட்டா, சரண்யாவை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க? இப்போ என்ன கல்யாணமா நடக்கப் போகுது? கையில காப்பு கட்டி உறுதி பண்ண போறாங்க அவ்வளவு தானே. இவ பண்ணின காரியத்துக்கு இப்படிப்பட்ட சம்பந்தம் கிடைக்கிறது பெரிய விஷயம். விட்டா இதை மாதிரி அமையாது.
சரண்யாவோட வாழ்க்கை உனக்கு முக்கியம்னா இதுக்குச் சரி சொல்லு.” என்று அவர் அழுத்தமாய் கூற,
சரண்யாவின் பெயரை அந்தப் பெண்மணி கூறியதும், பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத திவ்யா, “பையன் நல்லவன்னு சொல்றீங்க, உங்களை நம்பி சரினு சொல்றேன்." என்று இருமனதாய் கூற,
"அப்படிச் சொல்லு, நாளைக்குக் கொஞ்சம் பேரு மட்டும் கூப்பிட்டு உறுதி பண்ணிக்குவோம்.” என்றவர், தான் சென்று வருவதாகக் கூறி அங்கிருந்து செல்ல,
அவர் சென்றதும், "யாருக்கு உறுதி பண்ணணும்.” என்றவாறு வந்த ஜியாவை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த திவ்யா பிறகு அவளது முகத்தைக் கூடப் பார்க்காது,
"உனக்குத்தான்.” என்று எரிச்சலோடு கூற,
"சித்தி எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்று கெஞ்சி கேட்டவளிடம்,
"வேண்டாம்னா என்னடி அர்த்தம்? சொல்ல சொல்ல கேக்காம அந்தப் பையன் வீட்டுக்கு போய், வம்ப விலை குடுத்து வாங்கிட்டு இப்போ என்ன வேண்டாம். அங்க நடந்த எல்லாத்தையும் மறைச்சுட்டு, ஓங்கி ஒன்னு போட்டேன்னா? வாய் பேசிறாத.
இங்க பாரு நல்லா கேட்டுக்கோ, நாளைக்கு நான் சொல்ற மாதிரி கேட்டு ஒழுங்கா நடந்துக்கணும். இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. கொஞ்சம் சரண்யாவையும் நினைச்சு பாரு, உன்னால அவ வாழ்க்கை வீண் ஆகணுமா? அப்புறம் உன் சித்தப்பாக்கு சொல்லலாம்னு எதாவது திட்டம் போட்ட, என் சாவதான் பார்ப்ப.” என்றவர் வார்த்தைகளை விஷத்தை போல அவளிடம் கொட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஜியா மிகவும் மன வேதனை அடைந்தாள். தன் நிலையை நினைத்து மிகவும் நொந்து கொண்டாள்.
"ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? என் வாழ்க்கையில வலி வேதனையைத் தவிர வேற எதுவமே கிடையாதா?” என்று கண்ணீர் மல்க கதறினாள். துக்கம் பொங்க கண்ணீரில் கரைந்தாள்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 29, 30 & 31

Last edited: