Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 29, 30 & 31

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 29

ஷாஹித்திடம் தன் மனதில் பட்ட அனைத்தையும் பேசிவிட்டு வந்த ஆஷிக், அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை நினைத்து ஒருவித நெருடலில் இருந்தாலும், அவனது மனம் முழுவதையும் ஜியாவின் நினைவுகளே ஆக்கிரமைத்துக் கொண்டிருந்தன.

ஜியாவைப் பற்றி நினைக்க நினைக்க, அவனது கண்களில் இருந்து கண்ணீர் அவனையும் மீறி உருண்டோடின. பால்கனியில் நின்று கொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை இருக்கரங்கள் தழுவ,

"ஜியா!” என்றவாறே சட்டென்று திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் காத்திருந்தது.

"ஜியா இல்லபா, நான் உன் அம்மா.” என்ற ஹாஜராவை, அழுதுகொண்டே கட்டி அணைத்துக்கொண்டான். இறுகிப்போய் இருந்தவன் மனதுக்கு அந்த இதமான அணைப்பு மிகவும் தேவைப்பட்டது. தன் தாயின் அணைப்பில் இருந்து விடுபட்டவன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,

"நீங்க ஏன் இங்க வந்தீங்க, நான் பண்ணின காரியத்துக்கு உங்க மூஞ்சில முழிக்கக் கூட எனக்குத் தகுதி இல்லை.” என்று தொண்டை விம்பக் கூறியவனின் கரம் புடித்துத் தன் அருகில் இருந்த சோபாவில் உட்காரவைத்த ஹாஜரா,

"ஆஷிக், இங்க பாரு."

"சாரிமா, எனக்கு அந்த நேரம் என்ன பண்ணணும்னே தெரியலை. நான் பண்ணினதெல்லாம் தப்புதான். ஆனா என்னை ஒதுக்கிராதீங்க.” என்று தன் மடியில் தலை சாய்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் மகனின் சிகையை ஆதரவாகக் கோதியபடி,

"அம்மாக்கு எப்படிடா உன்னைப் புடிக்காம போகும்? நீ என் பையன்டா... ஆயிஷா மேல நீ எவ்வளவு அன்பு வச்சுருக்கனு நீ எனக்கு நிரூபிச்சுட்ட, எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு.” என்றதும் அவரது மடியில் இருந்து சட்டென்று எழும்பியவன்,

"உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியமாய் கேட்க,

"சமீரோட அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு கேட்டாங்க. நான் என்ன சொன்னேன்னு கேட்க மாட்டியா?” என்றவரிடம்,

"என்னமா?” என்றவனிடம்,

"என் பெரிய பையனோட கல்யாணம் முடிஞ்ச கையோட ஆயிஷாவோட கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னேன். சொல்லு எப்போ என் மருமகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு வர போற?” என்று அவர் கூறவும், ஆஷிக்கின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சந்தோஷத்தில் வார்த்தைகள் எதுவும் வராமல் தடுமாறியவனிடம்,

ஹாஜரா, “அம்மாவை மன்னிச்சுருப்பா, உன் விருப்பம் தெரியாம அவரு சொன்ன எல்லாத்துக்கும் உன்னைச் சம்மதிக்க வச்சு, அம்மா உனக்கு அநியாயம் பண்ண பார்த்தேன். நீ ஜியாவை விரும்புற விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா அன்னைக்கே சமீர் குடும்பத்துக்கிட்ட சொல்லிருப்பேன்.”

"அம்மா ப்ளீஸ் நீங்க, என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு ப்ளீஸ்மா..."

"இல்லைபா, நானும் அவர்கூடச் சேர்ந்துட்டு உனக்கு விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை உனக்குப் பண்ண பார்த்தேன். இனிமே அப்படி நடக்காது, என்ன நடந்தாலும் பரவாயில்லை. நீ முதல்ல போய் ஜியாகிட்ட பேசு, அம்மா உன் கூடவே இருக்கேன்."

"அம்மா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம், ஆதர்ஷ் எனக்கு எல்லாத்தையும் சொல்லிட்டான். ஜியா உன் மேல கோபமா இருக்கிறதா சொன்னான். அது என்ன கோபமா இருந்தாலும், சரி பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு."

"மா ஆயிஷா என்ன சொன்னா?"

"ஆயிஷா நீ வீட்டை விட்டு போனதுல இருந்து எதுவும் சாப்பிடல. நான்தான் சமாதானம் படுத்திச் சாப்பிட வச்சேன். உன்னையும் ஜியாவையும் பார்க்கணும்னு சொன்னா. நீ எதைப் பத்தியும் யோசிக்காம நேரா போய் ஜியாவை பாரு, அவளோட கையில கால்ல விழுந்தாவது அவளைச் சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா, இது என்னோட ஆர்டர்.” என்று அன்போடு கண்டித்தவரிடம், சந்தோஷமாக விடை பெற்றுக்கொண்டு ஆதர்ஷுடன் ஜியாவைக் காண சென்றான்.

ஆஷிக் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்க, ஜியாவோ அவளது அறைக்குள் தன்னைச் சிறைவைத்துக் கொண்டு, தன் விதியை நினைத்துக் கடவுளிடம், "நான் என்ன தப்பு பண்ணினேன்? நீயே சொல்லு, எனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது? சின்ன வயசுல என் அப்பா அம்மாவை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட, நான் ஒன்னும் சொல்லல.

அப்புறம் ஆஷிக் எனக்குக் கிடைச்சான், உண்மையா காதலிச்சேன். அவனும் எனக்குத் துரோகம் பண்ணிட்டான். அப்போ கூட நான் ஒன்னும் சொல்லல. ஆனா அதுக்கப்புறம் நீ எனக்குக் குடுத்த வலி இருக்கே, அது எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதது. என்னை ஏன் இன்னும் விட்டு வச்சுருக்க? மொத்தமா சாகடிச்சுட வேண்டியது தானே?

இப்போ இந்தக் கல்யாணம் எனக்குத் தேவையா? ஒன்னு எனக்கு நிம்மதியான வாழ்க்கையைக் குடு, இல்லனா என்னை சாக விடு. எனக்குத் தெரியும், நீ எனக்கு அந்த நிம்மதிய கூடக் குடுக்க மாட்டனு. நீ தந்த வர போதும் நானே எடுத்துக்கிறேன். இனிமே இந்த உலகத்துல வாழ்றதுக்கு எனக்குத் தகுதியே இல்லை. சித்தப்பா, சித்தி, சரண்யா என்னை எல்லாரும் மன்னிச்சுருங்க. செத்து போறத தவிர எனக்கு வேற வழியில்லை.” என்று மனம் உடைந்து அழுதவள், தனது அறையில் கொசுவை கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் திரவத்தை எடுத்துக் கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வாயில் சரித்தாள். ஜியா உட்கொண்ட சில நொடியில் உள்ளே வந்த சரண்யா,

"அக்கா உங்கள எல்லாரும் வர சொன்னாங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வாங்க.” என்று கூறி அழைக்க, அழுது வடிந்த முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு, சரண்யாவுடன் ஹாலுக்கு வந்தாள்.

முகமெல்லாம் வியர்த்து கொட்ட, அழுது அழுது வீங்கி போயிருந்த அவளது விழிகளைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டார், "என்னாச்சு பொண்ணோட முகம் ரொம்ப வாடி போய் இருக்கு?” என்று விசாரிக்க,

அதற்குள் அவளது சித்தி, "அட அப்படியா இருக்கு? அது வேற ஒன்னும் இல்லை, ஜியாக்கு அவங்க சித்தப்பானா உயிரு. அவரு இந்த நேரம் பார்த்து வெளியூர் போயிருக்காருல, அதான் கொஞ்சம் வாட்டமா இருக்கா, வேற எதுவும் இல்லை.” என்று சமாளித்தார்.

பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, ஜியாவிற்கு நெஞ்சில் படபடப்பு அதிகமாகிக்கொண்டே போனது. அவசரத்தில் இப்படிச் செய்துவிட்டாள், ஆனால் நேரம் போகப் போகச் சாவின் பயம் அவளுக்குள் குடிகொண்டது.

முகமெல்லாம் வியர்த்து கொட்ட, மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், அதை வெளிகாட்டாமல் பொய்யாய் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாப்பிள்ளையின் தந்தை, "அப்புறம் என்ன, அதான் எல்லாம் பேசியாச்சே, ஆரம்பிக்கலாமா?” என்று கேட்கவும்,

திவ்யா, “ஆமா” என்று கூற, காப்பு போடுவதற்கான சடங்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கும் நிலையில் இருக்க, ஜியாவோ எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்கிற அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.

ஒருவழியாக ஜியாவின் இல்லத்தை அடைந்த ஆஷிக், "என்னடா, வீட்ல எதோ விஷேசம் மாதிரி இருக்கு."

"ஆமாடா ஆஷிக், இந்த நேரத்துல நீ உள்ள போறது சரியா இருக்குமா?"

"இருக்காதுதான், அஞ்சு மணிக்கு என்ன விஷேசம்டா வைக்கப் போறாங்க? எதுக்கும் உள்ளே போறேன், ஜியாகிட்ட பேசியே ஆகணும்டா."

"சரி அவசரப்படாம, கோபப்படாம, பொறுமையா பேசு சரியா? நான் வெளியில வெயிட் பண்றேன்.” என்ற ஆதர்ஷிடம் விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்றான்.

ஜியா பட்டு புடவை கட்டி மணப்பெண் போல் நின்றுகொண்டிருந்த தோற்றம் கண்டு மிகவும் அதிர்ந்து போனான். அவனது விழிகளில் தீயின் ஜுவாலை தெறித்தது. ஜியாவின் கையில் மாப்பிள்ளை வளையல் அணிவிக்கும் நேரம் பார்த்து, வேகமாக வந்து ஜியாவின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன் ஜியாவை கோபமாகப் பார்க்க, அவையில் இருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் ஏதேதோ பேச ஆரம்பித்தனர்.

அப்பொழுது அவளது சித்தி ஆஷிக்கிடம், "நீ ஏன்டா இங்க வந்த? முதல்ல வெளியில போ.” என்று கூற, அவன் அவருக்குத் தன் பார்வையை மட்டும் பதிலாகக் கூற, அதைப் பார்த்தவர் விழிகளில் கலவரம் ஒட்டிக்கொள்ள ஓரடி அவனை விட்டு தள்ளி நிற்க,

வெண்பனி போல இருந்த வதனம் அழுது அழுது சிவந்து போய் இருந்ததைக் கூடக் கவனிக்காது, ஆஷிக் ஆக்ரோஷத்தோடு ஜியாவின் கரங்களைப் பற்றி, "உனக்கு என்ன சொன்னாலும் புரியாதுல? உன்னை நினைச்சு நான் அழுதுட்டு இருக்கேன், நீ என்னனா நல்லா அலங்காரம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்க. ஏன்டி என்னை சாகடிக்கிற?" என்றவனின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்தவள் தடுமாறும் குரலில்,

"இங்கிருந்து, போ உன்னைப் பார்க்கவே புடிக்கலை, துரோகி!” என்று கூற, தன் நிதானத்தை இழந்தவன் அவளது கரம் பிடித்து வேகமாகத் தன் பக்கம் இழுத்து கோபம், வருத்தம், வலி என்று உணர்ச்சி பொங்க,

"என்னைப் புடிக்கலையா? நான் துரோகிதான்! அப்படியே இருந்துட்டு போறேன். ஆனா நீ எனக்கு வேணும், உன்னால முடிஞ்சது பார்த்துக்கோ. என்னோட காதலை இத்தனை பேர் முன்னாடிதான் நிரூபிக்கணும்னா அதுக்கும் நான் தயார்.” என்றவன் அவளது இதழை நோக்கி குனிய, அவளது மூக்கில் இருந்து கசிந்த ரத்தத் துளிகள் அவனது கையில் பட அதிர்ச்சியில் உறைந்து போனான். நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்க்க, அவளோ மூச்சு வாங்க முடியாமல் இமை மூடியவாறு நொடியில் அவன் மார்போடு சாய்ந்தாள்.

***

நிலவே 30

ஜியா மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனவன் செய்வதறியாது திகைத்தான்.

"ஜியா என்னாச்சு? என்ன பண்ணுது?” என்று என்ன செய்வது என்று புரியாமல் அவளை அவன் மார்போடு சாய்த்த சில நொடியில் அவள் மயங்கி விழ,

தன் உயிரே போனது போல் துடித்தவன், அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான். ஆதர்ஷ் வேகமாகக் காரை செலுத்த, அடுத்து பத்து நிமிடத்தில் அவர்கள் ஜியாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

வந்த சொந்தங்கள், மாப்பிள்ளை வீட்டார் என அனைவரும் தங்களின் வாய்க்கு வந்தது போல் ஏதேதோ கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, திவ்யாவும் சரண்யாவும் கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த நிகழ்வால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மருத்துவமனையில் ஜியாவிற்கு சிகிச்சை நடக்க, ஆஷிக் அறையின் கண்ணாடி வழியே பேச்சு மூச்சுன்றிச் சிலையென உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன்னவளின் நிலையைக் கண்டு, நெருப்பில் பட்ட புழுவைப் போல் துடித்தான். அவளது இந்த நிலைக்குத் தான் மட்டுமே காரணம் என்று, ஆதர்ஷிடம் கதறி அழுதான்.

ஆதர்ஷ், ஆஷிக்கிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, திவ்யாவும் சரண்யாவும் பதறிக்கொண்டு அங்கே வந்தனர். திவ்யா, ஆஷிக்கின் சட்டையைப் பற்றிக்கொண்டு, "உனக்கு இப்போ நிம்மதியா? நல்லா இருந்த பொண்ணை இப்படிக் கிடையில கிடத்திட்டியே? நீயெல்லாம் நல்லா இருப்பியா?” என்று பொரிந்து தள்ள,

ஆதர்ஷ் அவர்களைக் குறுக்கிட்டு, "ஆன்ட்டி ப்ளீஸ்... இது ஹாஸ்பிடல். ஜியாக்கு ட்ரீட்மெண்ட் நடக்குது. இப்போ இதைப் பத்தி பேச வேண்டாம்." என்று கூறி அவரைச் சமாதானம் செய்ய,

திவ்யா கண்ணீர் மல்க, "கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னியே? நான் தானே புத்தி கெட்டுப் போய்த் தப்புப் பண்ணிட்டேன். அதுக்கு இப்படியாடி பண்ணுவ? உன் சித்தப்பாக்கு நான் என்ன பதில் சொல்ல? செத்து போறதுக்கா உன்னை வளர்த்தேன்?” என்று துக்கம் தொண்டையை அடைக்கப் புலம்பிய திவ்யாவை, சரண்யா சமாதானம் செய்தாள்.

என்னதான் திவ்யா, ஜியாவை திட்டிக்கொண்டே இருந்தாலும், ஜியாவை சிறுவயது முதலே தாய்க்கு தாயாய் இருந்து வளர்த்ததால் அவள் மீது அவருக்குப் பாசம் உண்டு. காலப்போக்கில் நடந்த சில நிகழ்வால் ஜியா தன் மகள் சரண்யாவை விட அதிகம் படித்திருப்பதால், பொறாமை என்னும் திரை அவரது கண்ணை மறைத்துவிட்டது. ஆனால் ஜியாவை இப்படிப் பார்ப்போம் என்று அவர் நினைக்கவில்லை. அவளை இந்த நிலையில் பார்த்ததால் அவரது உள்ளம் பதறியது. என்ன இருந்தாலும் அவரும் ஒரு தாய் தானே? பெற்றால்தான் பிள்ளையா?

***

ஆஷிக்கின் இல்லத்தில், "என்னமா இது ஜியாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர ஆஷிக் போயிருக்கான்னு சொன்ன, ஆனா இன்னும் வரல மணி ரொம்ப ஆகிடுச்சே?"

"அதான்டி, எனக்கும் தெரியலை."

"ஒருவேளை ஜியா இன்னும் கோபமா இருக்காளா?"

"அதான் நான் உன்னை பேச சொன்னேன்."

"நான் எப்படிப் பேசுவேன்? ஏன்னா நான் அவ மேல கோபமா இருக்கேன்ல? ஒருவார்த்தை என்கிட்ட சொல்லல அந்த கள்ளி. வரட்டும் பார்த்துக்கிறேன்."

"முதல்ல அவங்க வரட்டும், அப்புறம் நீ என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ."

"ஆஷிக், ஜியா கல்யாணத்த சீக்கிரமா பண்ணிரலாம்.” என்று உள்ளம் நெகிழ ஆயிஷா கூற,

"நாளைக்கே பண்ணிருவோம்.” என்ற ஹாஜராவிடம்,

"உங்க பையனுக்கு இன்னைக்கே கல்யாணம்னு சொன்னாலும் ஓகேனுதான் சொல்லுவான்.” என்று கேலி பேச,

"உனக்கு வேற வேலையே இல்லை, அவனை எதாவது சொல்லிக்கிட்டு... கல்யாணம் என்ன, அவ்ளோ ஈஸியா? ஜியா வீட்ல பேசி சம்மதம் வாங்கணும், அவங்க இதுக்கு ஒத்துக்கணும். எல்லாத்துக்கும் மேல உங்க அப்பா ஏற்கனவே செம கோபத்துல இருக்காரு. அவர் என்ன சொல்றாரோ? எவ்வளவோ இருக்குடி, எல்லாத்துக்கும் மேல ஜியாவோட கோபம் எல்லாம் தனியனும். அது ரொம்ப முக்கியம்."

"அதெல்லாம் உன் பையன் கால்ல விழுந்தே சரி பண்ணிருவான். அம்மா இதுக்கு மேல எனக்குப் பொறுமை இல்லை, அவனுக்குக் கால் பண்ணு."

"ரொம்ப நேரமா ட்ரை பண்றேன், அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறான்டி."

"அப்போ ஆதர்ஷ் அண்ணாக்கு கால் பண்ணு."

"அவனும் ஃபோனை எடுக்க மாட்டிக்கிறான்."

"அப்போ தியா அக்காக்கு கால் பண்ணு, அவங்களுக்குத் தெரியாம எப்படி இருக்கும்?"

"சரிடி கேட்குறேன்.” என்றவர், தியாவிற்கு அழைப்பு விடுக்க, ஆஷிக்கின் நினைப்பிலே மூழ்கிருந்த தியா, கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து, "ஹலோ ஆன்ட்டி!"

"தியாமா, ஆஷிக், ஜியா எங்க? உன் கூடயா இருக்காங்க?"

"ஆஷிக், ஜியாவா இல்லையே? ஏன் கேட்குறீங்க?"

"உனக்கு விஷயமே தெரியாதா? ஆஷிக் எதுவும் சொல்லலையா?”

"இல்லை ஆன்ட்டி."

"ரெண்டு சந்தோஷமான விஷயம், ஒன்னு ஆயிஷாவோட கல்யாணம் மறுபடியும் நடக்கபோகுது."

"அட ரொம்பச் சந்தோஷம், என்னோட வாழ்த்துகளைச் சொன்னேன்னு..." என்று அவள் சொல்வதற்குள் அவளைத் தடுத்தவர்,

"நில்லுமா, உன் சந்தோஷத்தையும் வாழ்த்துகளையும் அப்படியே சேர்த்து வச்சுக்கோ. ஏன்னா நீ ஆயிஷாவோட சேர்த்து ஆஷிக்குக்கும் விஷ் பண்ணவேண்டிருக்கும்."

"என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை.” குழப்பத்தில் கேட்க,

"அப்படியே அடி போட்டேன்னா... உனக்குப் புரியலை? ஜியாவும் ஆஷிக்கும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறத நீ ஏன் என்கிட்ட சொல்லல?"

"அதுவந்து ஆன்ட்டி..."

"சரி பரவாயில்ல, எல்லாம் நல்லதுக்குத்தான்."

"என்ன சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியலை."

"ஆஷிக், ஜியாவை சமாதானம் பண்ணதான் போயிருக்கான். ஆதர்ஷும் கூடப் போயிருக்கான், ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் வரல. அதான் உனக்குத் தெரியும்னு நினைச்சு கேட்டேன்."

"ஓ... எனக்குத் தெரியலை ஆன்ட்டி.” என்று உள்ளடக்கிய கோபத்தோடு கூறினாள்.

"சரிடா உனக்குத் தெரிஞ்சா சொல்லு.” என்று அவர் கூறுவதற்கு முன்பே கோபத்தில் ஃபோனை கட் செய்தவள், ஆஷிக், ஜியாவை தேடி சென்றுள்ளான் என்று ஹாஜரா கூறியது அவளுக்கு எரிச்சலூட்ட, ஃபோனை எறிய போனவள் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, ஆஷிக்கிற்குப் ஃபோன் செய்தாள். ரெண்டு முறை தாண்டி மூன்றாம் முறை அட்டென்ட் செய்தவனிடம்,

"ஆஷிக் நீ எங்க இருக்க?” என்று கோபமாகக் கேட்க,

"என்னாச்சு தியா, ஏன் கோபமா இருக்க?"

"ஆதர்ஷ் நீயா? ஆஷிக் எங்க?"

"தியா ஒரு பெரிய பிரச்சனை.” என்று அனைத்தையும் கூறியவன்,

"நீ ஹாஸ்பிடல் வரும்பொழுது அம்மாவையும் ஆயிஷாவையும் கூடக் கூட்டிட்டு வந்திரு. இங்க வந்த டென்ஷன்ல நான் அவங்களுக்கு எதுவும் சொல்லல."

"கண்டிப்பா ஆதர்ஷ்.” என்றவளது உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடியது.

அழைப்பை துண்டித்தவள், "ஜியா, உன்னைப் பார்க்கவே எனக்குப் புடிக்காது. இருந்தாலும் உன்னை இந்த நிலைமையில பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. இதுக்கப்புறம் உன்னைப் பார்க்க முடியாம கூடப் போகலாம்ல?” என்றவள், இனி ஆஷிக் தனக்குத்தான் என்ற ஆனந்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள், ஜியாவைப் பிரிந்த இத்தனை வருஷத்தில் மாறாத ஆஷிக், இனிமேலா மாறப் போகிறான்? ஆஷிக்கின் மனதில் ஜியாவைத் தவிர வேற யாருக்கும் இடம் இல்லை என்பதைத் தியா இப்பொழுதாவது உணர்வாளா?

ஹாஸ்பிடலில் திடீரென்று ஜியா மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட, நர்ஸ் விரைந்து வந்து டாக்டரை அழைத்ததில் பதறியவன், அறைக்கு வெளியே நின்று ஜியா உயிருக்கு போராடி கொண்டிருப்பதைப் பார்த்து நிலை குலைந்து போனான்.

எதற்காகவும் பெரிதாய் கவலைப்படாதவன் இன்று மிகவும் உடைந்து போனான். எங்கே ஜியாவை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் மிகவும் தவித்தான்.

"ஏன் ஜியா? எதுக்கு இப்படி ஒரு தண்டனைய எனக்குக் குடுத்த? எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.” என்று தன்னைத் தானே வெறுத்தான்.

சில நொடிகளுக்குப் பின் ஜியா இயல்பு நிலைக்கு வர, ICUவில் இருந்து வெளியே வந்த டாக்டரிடம் கண்ணீர் மல்க, ஆத்திரம் பொங்க அவரது சட்டையைப் பற்றாத குறையாக, "ஏன் இப்படி ஆச்சு? இத்தனை பேர் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" காட்டு கத்து கத்தியவனிடம்,

"லிஸன் மிஸ்டர் ஆஷிக், உங்க எமோஷன்ஸ் புரியுது. அதைக் காட்டுற நேரம் இது இல்லை. அவ்வளவு அக்கறை இருக்கிற நீங்க அவங்களை ஒழுங்கா பார்த்துக்க வேண்டியது தானே? உங்க மேல ப்ராப்ளம் வச்சுட்டு எங்ககிட்ட கத்துறீங்க. எங்களால முடிஞ்சத நாங்க பண்ணிட்டுதான் இருக்கிறோம். நாங்க மட்டும் முயற்சி பண்ணினா போதாது, அவங்களும் வாழணும்னு நினைக்கணும்.

நீங்க இங்க கத்துறது கூட உள்ள இருக்கிற பேஷண்ட்ட பாதிக்கும். இங்க மத்த பேஷண்ட்ஸும் இருக்காங்க. புரிஞ்சு நடந்துக்கோங்க.” என்றவர் ஆதர்ஷைப் பார்த்து, “கன்சோல் ஹிம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த நொடி, ஹாஜரா, ஆயிஷா, தியா மூவரும் அங்கே வந்தனர்.

"என்னடா ஆஷிக், நீயும் ஜியாவும் சேர்ந்து ஒன்னா வீட்டுக்கு வருவீங்கனு சந்தோஷமா காத்துகிட்டு இருந்தேன். ஆனா ஜியாவை இப்படிப் பார்க்கணும்னு எழுதிருக்கே? என்னடா நடந்தது?” என்ற ஹாஜராவை இறுக்க அணைத்து கொண்டவன்,

"மா ஜியாவை பார்த்து பேசணும்னுதான் அங்க போனேன். ஆனா இவ இப்படிப் பண்ணுவானு நான் சத்தியமா நினைக்கல. ரொம்பப் பயமா இருக்கு.” என்று ஏங்கியவனை ஆறுதல்படுத்தியவர், திவ்யாவையும் சரண்யாவையும் பார்த்ததும் இது ஜியாவின் சித்தியும் தங்கையும்தான் என்று புரிந்து கொண்டார். அவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அனைவரது பிரார்த்தனையும் ஜியாவை சுற்றியே இருக்க,

தியா ஆஷிக்கிடம், "ஆஷிக் நீ அழாத, எல்லாம் சரியாகிரும்.” என்று வெறும் வார்த்தைக்குக் கூற, ஆதர்ஷ் அவளைத் தனியாக அழைத்து அவளிடம்,

"தியா, நீ என்னவோ ஜியாக்கு இவன் மேல லவ் இல்லை, இவனை வேண்டாம்னு சொல்லிட்டா அப்படினு சொன்ன. இவனை விரும்பலைனா ஏன் இவ இப்படி ஒரு காரியம் பண்ணணும்? இவங்க வீட்ல பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல? அன்னைக்கு சரியா உனக்கும் ஜியாக்கும் என்னதான் நடந்தது? ஜியா என்னதான் சொன்னா? அந்த லெட்டர் ஜியா கொடுத்தது தானே?” என்று தன் மனதில் உள்ளதைக் கேட்டுவிட,

"என்ன ஆதர்ஷ் என்னையே சந்தேகப்படுறியா நீ?” என்று பொங்கிய பதற்றத்தை மறைத்தவாறே கேட்க,

"அப்படி இல்லை, ஏதும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா கூட இருக்கலாம்ல, அதான் கேட்டேன். நீ ஏன் பதற்றமா இருக்க?"

"போதும் ஆதர்ஷ், பாதில விட்டுட்டு போன ஒருத்திக்காக நீ என்கிட்ட சண்டைக்கு வர. இவ ஏன் இப்படிப் பண்ணினானு எனக்கு எப்படித் தெரியும்? சரிபா, நான் பொய் சொல்றேனே வச்சுக்குவோம், இவ உண்மையாவே ஆஷிக்க விரும்பிருந்தா ஏன் விட்டுட்டு போறா? இவ தப்பானவ, இப்போ கூட இதெல்லாம் ஆஷிக்கிட்ட சிம்பதிய கிரியேட் பண்ண இவ போடுற ட்ராமா மாதிரிதான் தெரியுது.” என்று ஜியாவைப் பற்றி தியா தாறுமாறாகக் கூற,

"யாரு டிராமா பண்றதா சொல்ற?” என்ற குரல் அவர்களின் பின்னால் இருந்து வர,

திரும்பி பார்த்த தியா, "அது ஆஷிக்...” என்று விழிக்க,

"என்னாச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்ட மாதிரி இருக்கு.” என்ற ஆஷிக்கிடம்,

"ஆமாடா, இவன் என்கிட்ட சண்டை போடுறான். ஜியா இப்படிப் பண்ணினதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவ ட்ராமா பண்ணிட்டு இருக்கா, ஆனா நீங்கதான் அது புரியாம அவளுக்காக இப்படி உருகிட்டு இருக்கீங்க. அவ ரொம்ப மோசமானவ ஆஷிக்."

"ஸ்டாப் இட் தியா!" கோவத்தை உள்ளடக்கியவாறு அவன் கூற,

"ஆஷிக் நான் சொல்ல வர்றத..."

"போதும், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத.” என்று உள்ளடக்கிய கோபம் முட்டிக்கொண்டு வெளியே வர,

"நீ என்ன சொன்னாலும் சரி, எனக்கு அவ டிராமா பண்ற மாதிரிதான் தெரியுது. அவ பண்ணின எதையும் நீ மறந்து மட்டும் போயிறாத. அப்படி மட்டும் மறந்தனா உன்னை விட ஒரு முட்டாள் இந்த உலகத்துல வேற யாரும் இருக்க முடியாது.” என்று பொரிந்தவள் வேறெதுவும் பேசாது அங்கிருந்து சென்றாள்.

"என்னடா இப்படிப் பேசிட்டு போறா?” என்று ஆஷிக் கவலையாகக் கேட்க,

ஆதர்ஷ், "விடுடா, அவ அப்படித்தான். ஆனா அடுத்த நிமிஷமே சரியாகிடுவா, இதெல்லாம் நீ யோசிக்காத. இப்போதைக்கு ஜியாவை பத்தி மட்டும் யோசி சரியா?” என்ற ஆதர்ஷுக்கு தன் தலையை மட்டும் லேசாக அசைத்தவன் கண்களில் கவலையோடு,

"ஜியாக்கு வேற எதுவும் ஆகாதுல, பயமாவே இருக்குடா.” என்று தவிப்புடன் கேட்க,

"அவ உனக்கானவ, உன்னைவிட்டு எங்கையும் போகமாட்டா. இதுக்குச் சாட்சிதான், இந்த ஆறு வருஷத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சுக்கிட்டது. அவ உன்னைவிட்டு போகணும்னா விதி ஏன் உங்களைச் சந்திக்க வைக்கணும்? தைரியமா இருடா.” என்று தன் நண்பன் கூறிய ஆறுதலில் சற்றுத் தேர்ச்சியுற்றான்.

தன் தாயும் தன் நண்பனும் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் சாப்பிட மறுத்தவன், ஜியா இருக்கும் அறைக்குப் பக்கத்திலே தன் விழிகளை மூடி அமர்ந்தவாறு தன் கடந்தகால நினைவில் மூழ்கினான்.

***

நிலவே 31

கடந்தகாலம்... அதை நினைக்கும் பொழுது அவனது இதழில் புன்னகை வந்து ஆட்கொண்டது.

புத்தகத்தில் மூழ்கிருந்தவளைப் பார்த்து, "ஜியா... ஜியா!” என்று பல முறை அழைத்தும் எந்தப் பதிலும் வராமல் போக, தன் பொறுமையை இழந்தவன் தன் விரலால் அவளைச் சீண்ட, சிறு புன்னகையோடு விரலைப் பற்றியவள்,

"டேய் கைய, கால வச்சுட்டு சும்மா இரு.” என்று புத்தகத்தில் இருந்து தன் விழியை அகற்றாமல் கூற,

"மா... ட்... டேன்...” என்று ராகம் போட்டவன் மீண்டும், “ஜியா!” என்று கெஞ்சலாய் அழைக்க,

அவனிடம் கோபம் கொள்ள முடியாதவள், அவனைத் தன் மடியில் கிடத்தி அவனது மார்போடு தன் கரத்தை போட்டுக் கொண்டாள். அவன் அவளது கையில் தன் இதழைப் பதிக்க மேனி சிலிர்த்தாள்.

"ப்ளீஸ்டா, கொஞ்ச நேரம் சும்மா இரு, எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு.” என்று செல்லமாய் கெஞ்சியவளின் கையைத் தன் மார்பில் இருந்து நீக்கியவன், எழுந்து அமர்ந்துகொண்டு தன் விரலால் அவளது கையைச் சுரண்டினான்.

"ஆஷிக்!” என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன் அக்மார்க் புன்னகையை மட்டும் தன் இதழோரம் சிந்தியவன், தன்னவளது விரல்களைத் தன் இதழால் தீண்ட, கோபம் மறைந்து சின்னதாய் புன்னகைத்தவள்,

"ஆஷிக்!” என்று செல்லமாய் கண்டிக்க,

"ம்ம்...” என்றவாறு, தன் குறும்பை ஆரம்பித்தவன்,

தன் விரலால் மெல்ல அவளது கைகளில் படம் வரைந்து, தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்து, தன் முத்தத்தால் தன்னவளை சிலிர்க்க செய்ய,

"ம்ம் குத்துது...” என்று சிணுங்கலாய் கூறியவளின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தவாறே, "நேத்துதான் செல்லம் சேவ் பண்ணினேன், நீ வேணும்னா பாரு.” என்று தன்னவளது வதனத்தில் தன் கன்னத்தைக் கொண்டு காதலோட உரச, வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்தது.

அவனது முகத்தைத் தன் கரத்தில் ஏந்தி, "ஆஷிக், ஏம்பா இப்படி இம்சை பண்ற?” என்று கெஞ்சலாய் அவனைப் பார்க்க,

அவனோ இமை மூடினால் எங்கே மறைந்துவிடுவாளோ என்று இமைத்தட்டாமல் அவளையே பார்த்தான். இல்லை பார்வையிலே கிறங்கடித்தான். கிறங்கியவள் அவனது முகத்தைச் செல்லமாகத் தன் கரம் கொண்டு திருப்ப, முடியாது என்பது போல மீண்டும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனது செய்கையில் மெல்ல சிரித்தாள்.

சிரித்தவாறே, "அப்படிப் பார்க்காத."

"பார்ப்பேன்."

"பார்க்காத"

"என்னடி செல்லம் பண்றது, நீ என் பக்கத்துல வந்தாலே, அப்படியே எனக்குள்ள ஏதேதோ பண்ணுது."

"அப்படியா? அது ஒன்னு குடுத்தா எல்லாம் சரியாகிரும்."

"அப்படியா செல்லம், தாராளமா, ஏராளமா குடு.” என்று கிறக்கமாக கூறியவனைப் பார்த்து கையை ஓங்க, ஓங்கிய கையை மெல்ல பற்றி வருடியவன்,

"போ அம்மு, உனக்கு ஒழுங்காவே குடுக்கத் தெரியலை.” என்று தன் இதழை அவளது விரலோடு விளையாட விட,

தன் புத்தகத்தைத் தன் கையில் எடுத்தவள், "தப்பு என் பேர்லதான், நான் இன்னைக்கு இங்க வந்திருக்கவே கூடாது. அம்மாவும் தங்கச்சியும் இருக்கும் போதே நீ அந்த ஆட்டம் ஆடுவ, இன்னைக்கு என்னை விட்டு வைப்பியா? நான் வீட்டுக்கு போறேன்.” என்றவளைத் தடுத்தவன்,

"போகாதடி."

"என்ன போகாதடி? உள்ள வரும்போது நான் என்ன சொன்னேன்?"

"என்ன சொன்ன?"

"கை, கால வச்சுட்டு ஒழுங்கா இருப்பன்னா நான் வரேன், இல்லனா நான் வரமாட்டேன்னு சொன்னேன்ல?"

"ம்ம்..."

"அதுக்கு நீ என்ன சொன்ன?"

"சரினு சொன்னேன்."

"இப்போ என்ன பண்ற? ப்ராமிஸ் பண்ணிட்டு இப்படிப் பண்ணலாமா?"

"அட செல்ல குட்டி, ப்ராமிஸ் பண்றதே அத பிரேக் பண்றதுக்கு தானே?” என்று கண்ணடிக்க,

"நீ சரியில்ல, நான் கிளம்புறேன்.” என்றவளிடம், தன் முகத்தைச் சோகமாக மாற்றியவன்,

"போடி, உனக்குக் கொஞ்சம் கூடக் கவலையே இல்லை. மீட் பண்றதே எப்போவாதுதான். அப்போ கூடப் படிச்சுட்டே இருக்க. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கழட்டிவிட்டுட்டு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நான் இருந்தா, என்னைத் திட்டிட்டே இருக்க. உனக்காக ராப்பகலா முழிச்சிருந்து எத்தனை நாள் நான் ப்ராஜெக்ட் பண்ணி தந்திருப்பேன். உனக்காக நீ படிச்சத விட நான் படிச்சது தான்டி அதிகம். எவன்டி தான் லவ் பண்ற பொண்ணோட படிப்புக்கெல்லாம் ஹெல்ப் பண்றது? நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற...” என்று பாவமாய் பார்த்தவனைப் பார்த்து ஜியா,

"அடப்பாவி! அப்படி எத்தனை நாள்டா எனக்கு ப்ராஜெக்ட் செஞ்சி தந்திருக்க? ஒரு நாளாது என்னைத் தொல்லை பண்ணாம படிக்க விட்ருக்கியாடா? காலேஜ்ல ஒரு க்ளாஸாது என்னை ஒழுங்கா அட்டென்ட் பண்ண விட்ருக்கியா? டவுட் சொல்லித் தரேன்னு வெறும் வாய்ல சொல்லிருக்கியே தவிர, என்னைக்காது சொல்லி தந்திருக்கியா?”

"அடிப்பாவி! என்னடி இப்படிச் சொல்லிட்ட?"

"உண்மைய தான் சொல்றேன், ஒரு நாளாது இந்த புக்ல இருக்கிற ஒரு சாப்டர் வேண்டாம், ஒரு ஹெட்டிங் சொல்லி குடுத்திருக்கியா?” என்றவளைப் பார்த்தவாறு அவளது அருகில் வந்தவன்,

"இந்தப் புக்கு..." என்று அவளது கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கி மெத்தையில் எறிந்தவன்,

"மொத்த சயின்ஸையும் உனக்கு அப்படியே அக்குவேறு ஆணிவேறா க்ளாஸ் எடுத்திருக்கேன்.” என்று காதலாய் பார்த்தவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள்,

"நீ எனக்கு மொத்த சயின்ஸையும்... போடா...” என்று அங்கிருந்து சற்று நகர, தன் கரம் கொண்டு அவளைத் தன் பக்கம் இழுத்தவன்,

தன் மயக்கும் கண்கள் கொண்டு தன் பார்வையாலே வருடி, தன்னவளை உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் அளவிட்டான். ஏனோ அவனது பார்வை அவளை விட்டு நகர மறுக்க, இமைமூடாமல் அவளை ரசித்தான்.

அவனது மருண்ட பார்வை அவளைக் கசக்கி பிழிய, உடலும் உள்ளமும் சிலிர்க்க, அவனது பார்வையின் தீண்டலினாலே செவ்வண்ணமாய் சிவந்தவள், இதற்கு மேல் முடியாதவளாய் தன் முகத்தை வேறுபக்கமாய்த் திருப்ப, அவளது காதுமடல்களை உரசியவாறு,

"நோரெபினிஃப்ரைன்” என்றதும் கேள்வியாய் பார்த்தவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன்,

"நோரெபினிஃப்ரைன் இத ஸ்ட்ரெஸ் ஹார்மோன்னு சொல்லுவாங்க. எப்போ எல்லாம் நம்ம மனசுக்கு புடிச்சவங்க நம்மளோட பக்கத்துல நெருங்கி வராங்களோ, அப்போலாம் உடம்புக்குள்ள அனல் அடிச்ச மாதிரி இருக்கும், முகமெல்லாம் வியர்க்கும்.

கை, கால் எல்லாம் நடுங்கும், லிப்ஸ் ட்ரையாகும், வார்த்தை இடம் மாறும். முதல் முதலா நான் உன்னைக் கட்டிபுடிச்சப்ப கூட, இப்படித்தான் நீ என் முன்னாடி வெடவெடுத்து போய் நின்னுகிட்டு இருந்த.” என்றவனிடம் எதையும் வெளிக்காட்டிக்காதவள்,

"அது அப்போ திடீர்னு அப்படி நடந்ததால இருக்கும். இப்போ அப்படிலாம் இல்ல.” என்று பின்னால் சென்றவளை, அதே காதல் பார்வையோடு தொடர்ந்து மெல்ல தன் விரல்களால் அவளது நெற்றியை வருட, "ஏசி போடலல அதான்...” என்றவளைப் பார்த்து இதழ் ஓரம் புன்னகைத்தவன், தன் முகத்தால் தன்னவளது நெற்றியில் உள்ள வியர்வை துளிகளை ஒற்றி எடுத்து, ஜன்னலின் ஓரம் ஓயாமல் பெய்து கொண்டிருக்கும் மழையைச் சுட்டிகாட்ட,

தான் பொய் கூறி மாட்டிக்கொண்டதை நினைத்து தன் கீழ் உதட்டைக் கடித்தவளைப் பார்த்ததும் அவனுக்குள் அனல் அடிக்க, அவளது பற்கள் தீண்டிக்கொண்டிருந்த தன்னவளின் இதழைத் தீண்ட துடித்த தன் இதழ்களை அடக்கியவன், பற்களில் சிக்குண்ட கீழுதட்டை மென்மையாய் சுண்டி, தன் புருவம் உயர்த்தி என்னவென்று தன் மயக்கும் கண்களால் கேட்டான்.

"ஒன்னும் இல்லை...” என்று தடுமாறியவளது கரத்தைப் பற்றிகொண்டவன் நடுங்கிக்கொண்டிருக்கும் விரல்களைச் சுட்டிகாட்ட, சிணுங்கலுடன் அவனிடம் தப்பிப்பதாய் நினைத்து,

"உள்ளுக்குள்ள அப்படியே அனலா அடிக்குதுடா, அதான் லேசா கை நடுங்குது." என்று தான் மீண்டும் உளறியதை நினைத்து தன் ஒற்றை விழியை மூடியாவாறே தன் பல்லைக் கடித்தவளை, மேலும் தன் பார்வையாலே வருடினான். முடிவில்லாத காதல் பார்வையை வீச, அவள் மேலும் வெட்கி சிவக்க, மெல்ல கண்ணாடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றவன், அவளது விழிகளைச் சந்தித்தவாறு

"டோபமைன்." ஒருத்தொருக்கொருத்தர் அதிக காதலோடு பார்க்கும் பொழுது, புதுசா பிறந்த மாதிரி ஒரு உணர்வு வரும். இதோ இப்போ உனக்கு வந்திருக்கே?” என்று சிவந்த அவளது கன்னங்களைத் தட்டி விட்டவாறு வருடியவன் மெல்ல தன் இதழைப் பதிக்க,

"ஆஷிக், சும்மா எதாவது சொல்லிட்டு...” என்று அங்கிருந்து சென்றவளைத் தன் கரத்துக்குள் சிறைவைத்து, சுவற்றோடு சாய்த்து அவளது இதழ்நோக்கி குனிய, அவனது தாப பார்வையில் வெட்கியபடி தன் கண்கள் மூடி இதழ்கள் மலர்ந்தபடி நின்று கொண்டிருந்தவளை, மனம் குளிர ரசித்தவன் அவளது காதருகில் சென்று,

"ஆக்சிடோசின்.” என்றதும் தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து வெடுக்கென விழி மலர்ந்தவளின் உள்ளத்தை உணர்ந்தவனாய்,

"அப்புறம் தரேன்.” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்தான்.

"இதுதான் லவ் ஹார்மோன், நான் உன்னை நெருங்கி முத்தம் குடுக்க வந்தேன், ஆனா நீ என்னைத் தடுக்காம என்னை விட்டு விலகாம அப்படியே நின்ன. நான் குடுக்கலைனு தெரிஞ்சதும் உன் கண்ல ஏமாற்றம். இதெல்லாத்துக்கும் இதுதான் காரணம்.” என்று அவன் கூறவும், செல்லமாக அவனது மார்பில் அடித்தாள்.

தன் மார்போடு சிறிதளவு இடைவெளி கூட இல்லாது இறுக்கி அணைத்துக்கொண்டவன், அவளது செவ்விதழ் நோக்கி குனிந்து தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீ தன்னவளின் இதழ் தரும் காதல் மழையில் அணையும் வரை நனைந்தான்.

அவனது இதழின் ஸ்பரிசத்தில் அவளது கண்கள் மெல்ல சொருக, இருவரும் மாறி மாறி தங்களின் காதலை முத்தத்தில் பரிமாறிக்கொண்டனர். மூச்சு விடும் நொடி நெருங்க, தன்னை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டவளை,

கணப்பொழுதும் விலகமாட்டேன் என்பது போலத் தன் முகத்தை அவளது கழுத்தின் வளைவில் புதைத்துக்கொண்டான்.

"ஸோ எதுவும் சொல்லித் தரலனு சொல்லாத, மொத்த சயின்ஸையும் பிராக்டிகல் கம் தியரியாவே எடுத்திருக்கேன்.” என்று கழுத்தின் வளைவில் தன் இதழைப் பதிக்க,

ஜியாவோ புன்னகைத்தவாறே அவனது காது மடலை உரசி, "***” என்று மெல்லமாய் கூற, சிலநொடிகள் கழித்து அவள் கூறியதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டவன், வெடுக்கென்று நிமிர்ந்து குறும்பாய் தன்னைச் சீண்டிக்கொண்டிருந்த தன்னவளது விழிகளைப் பார்க்க, அதிர்ந்து போய் தன்னையே பார்த்தவனைப் பார்த்து கண்சிமிட்ட,

"உன்னை...” என்று நெருங்கியவனிடம் போக்கு காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடிவந்தவளை விரட்டிக்கொண்டு கீழே வந்தவன்,

"ஜியா!” என்று அழைக்கவும்,

"ஆஷிக், ஜியா!” என்று அழைத்தவாறு ஹாஜரா வரவும் சரியாக இருந்தது. தன் தாயைக் கண்டதும் அவன் அசடு வழிய, அவரோ அவன் அசடு வழியும் காரணம் அறியாமல்,

"என்னடா நெளிஞ்சிட்டு இருக்க? ஒழுங்கா ஜியாக்கு எல்லாம் சொல்லித் தரியா, இல்லையா?” என்றவர்,

"இங்க பாருடா ஜியா, இவனை விட்றாத நல்லா புடிச்சுக்கோ. என்ன வேணுமோ கேட்டு தெரிஞ்சிக்கோ சரியா? நீ வந்ததுக்கு அப்புறம்தான் இவன் ஒழுங்கா வீட்ல இருக்கான், இல்லைனா ஃப்ரண்ட்ஸ் கூட எங்கையாவது சுத்தப் போயிருவான்."

"சரி ஆன்ட்டி, ஆயிஷா வரலையா?"

"அவ அவளோட ஃப்ரண்ட பார்க்க போயிருக்கா, இப்போ வந்திருவா."

"ஓ சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன்.” என்றவளைத் தடுத்தவர்,

"நில்லுடா நான் டீ போடுறேன், குடிச்சுட்டுக் கிளம்பு.” என்று அவர் கிட்சனுக்குள் செல்ல, அவர் சென்றதும் அவளது மென்னிடையை வளைத்துப் பிடித்தவனிடம் இருந்து தன்னை விலக்க முயன்றவள்,

"ஆஷிக் விடு, என்ன பண்ற?” என்று விலக முற்பட்டவளை, மேலும் அணைத்தவன்,

"அம்மா தானே சொன்னாங்க, இவனை விட்றாத கட்டியா புடிச்சுக்கோனு. நீ புடிச்சா என்ன, நான் புடிச்சா என்ன?” என்று சில்மிஷித்தவனிடம் இருந்து தப்ப முயன்றவள்,

"அம்மா...” என்று கத்த, அவளைத் தன் அணைப்பில் இருந்து விடுவிக்கவும் அவர் அங்கே வரவும் சரியாக இருந்தது. வந்தவர், "என்னடா ஜியா?” என்று பதற்றமாய் கேட்க,

"இல்லமா, ஒரு தியரி சொல்லி குடுத்துட்டு ப்ராக்டிகலும் இப்போவே செஞ்சி காட்டிட்டு போனு என்னை தொல்லை பண்றாரு. ஆனா எனக்கு டயர்டா இருக்குமா.” என்று ஹாஜராவிடம் சென்று ஒட்டிக்கொள்ள,

அவர், "டேய் சும்மா அவளைப் படுத்தாத, ஏதோ நீ ரொம்பப் படிப்பாளி மாதிரி. நீ உட்காருமா, அவன் கிடக்குறான். இன்னும் இங்க என்னடா பண்ற, அந்தப் பொண்ணையே பார்த்து முறைச்சுகிட்டு? நீ என் கூட உள்ள வா.” என்றவர் அவனை அழைத்துக் கொண்டு கிட்சனுக்குள் சென்றார்.

ஜியாவோ ஹாலில் அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டு முகபாவனைக் காட்ட, அவனோ தன் தாயை தன் அருகில் வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் ஏக்கமாய் அவளது முகபாவங்களை ரசிக்க மட்டும் செய்தான். சோபாவில் இருந்து எழும்பியவள், "ஆன்ட்டி நான் போயிட்டு வரேன், டீ சூப்பர்."

"சரிடா, பார்த்து போ."

"ஓகே பாய் ஆன்ட்டி.” என்று அவரிடம் இருந்து விடை பெற்றவள், தன்னை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்கும் தன்னவனுக்கு முத்தத்தைக் காற்றில் பறக்கவிட, அதைத் தன் உள்ளங்கையில் ஏந்தி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டு அவனும் பறந்தான் இதமாக.

ஜியாவுடனான தன் நினைவுகளுக்குள் நுழைந்தவனுக்கு உதட்டில் புன்னகை வழிந்தாலும், அடுத்த நொடி தன்னால் அவளுக்கு ஏற்பட்ட வலியை நினைத்தவனுக்குக் கண்களின் ஓரம் கண்ணீர் வந்தடைந்தது.

ஆதர்ஷின் குரலில் தன் நிலையடைந்தவன் என்ன என்பது போல் பார்க்க ஆதர்ஷ், "டாக்டர் வந்துட்டாரு”. என்று கூற, டாக்டர் என்ன கூற போகிறாரோ என்ற ஒருவித பதற்றத்துடன் அவரிடம் சென்றான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்


நிலவே 32 & 33
 
Last edited:
Top