- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 34
அவனது பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக்கொள்ள, "உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா?" என்ற ஜியாவின் வார்த்தைகள் ஆஷிக்கை மிகவும் பாதித்தது. பதில் கூற முடியாது சிலையென்று நின்றவன், தன்னை மீறி வந்த சீற்றத்தை அடக்க இயலாது கோபமாக இருக்க, அவனது தோள் மீது கை வைத்த ஆதர்ஷ், தன் கண்களால் ஆஷிக்கை பொறுமையை இருக்கச் சொல்ல, பொங்கி வந்த சீற்றத்தை தனக்குள்ளே அடக்கிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தி,
"ஓகே ஜியா கோபப்படாத, நீ இன்னும் பழைய கோபத்துலையே இருக்க அப்படித் தானே? எனக்குச் சத்தியமா இப்போ வரை நீ அந்த விஷயத்துக்காகதான் என் மேல இவ்வளவு கோபமா இருக்கனு என்னாலை நம்பவே முடியலை. சரி எல்லாம் போகட்டும், பழசை பற்றிப் பேச வேண்டாம். எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஆரம்பிக்கலாம். தப்பெல்லாம் என்னோடதுதான், உன் மனசை காயப்படுத்திருந்தா என்னை மன்னிச்சுரு, ஐயம் ரியலி சாரி.” என்று கூற ஜியா ஆஷிக்கிடம்,
"என்ன சாரியா? சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா? சொல்லுடா... சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா? உன்னை மன்னிக்கிற மாதிரியான துரோகத்தையாடா எனக்கு நீ பண்ணிருக்க? உன்னை நம்புனனே...?” என்று கண்ணீர் மல்க ஜியா அழ, ஆஷிக்கோ ஒன்றும் விளங்காமல் அமைதியாய் நின்றான். தன் கண்களைத் துடைத்துக்கொண்ட ஜியா,
"நான் ஒன்னே ஒன்னு கேட்குறேன், அதுக்கு மட்டும் எனக்குப் பதில் சொல்லு. நீ பண்ணின அதே தப்பை நான் பண்ணிருந்தா என்னை நீ மன்னிப்பியா?"
"ஜியா நீ எந்தத் தப்ப சொல்றனு எனக்குச் சத்தியமா தெரியலை."
"தெரியலை? ஆஷிக் நடிப்பெல்லாம் போதும், உன் நடிப்பை நான் இன்னும் நம்புவேன்னு நீ எப்படி நம்புற? உன்னை பார்க்கவே புடிக்கலை, துரோகி!” என்றவள் அங்கிருந்து செல்ல அவளைத் தடுத்தவன்,
"துரோகி! துரோகி! துரோகி! செத்துப் போயிறலாம் போல இருக்கு. அப்படி என்ன துரோகம்தான் பண்ணினேன்னு சொல்லிட்டு போ.” என்று கோபமாய் கூறியவனுக்கு எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ஜியா,
"முடியாது!” என்று மெதுவாகவும் அழுத்தமாகவும் பதில் கூறினாள்.
கோபத்தில் ஜியாவைப் பிடித்துச் சுவற்றோடு சாய்த்து அவளது இரு கரங்களையும் பற்றிகொண்டவன் அவளிடம்,
"என்ன நடந்தாலும் சரி, சொன்னாதான் நீ இங்க இருந்து போக முடியும்.” என்றவன் சில நொடிகள் அமைதிக்கு பின்பு மேலும் தொடர்ந்து, "ஏன்டி என்னை கொல்ற? உன்னை நினைச்சு தினம் தினம் தவிக்கிறேனே, அது உனக்குப் புரியலையா?” என்று கோபமும் வலியும் தன் கண்களில் மின்ன கூறினான்.
சுற்றும் முற்றும் உள்ள அனைவரும் அவர்களையேப் பார்ப்பதை உணர்ந்த ஜியா, ஆஷிக்கின் பிடியில் இருந்து தன்னை விலக்க முயற்சித்தவாறே,
"ஆஷிக் எல்லாரும் பார்க்கிறாங்க, என்னை நீ இப்போ விடப் போறியா, இல்லையா?"
"பார்க்கட்டும், ஐ டோன்'ட் கேர். எனக்குப் பதில் வேணும், கஷ்டமா இருக்குடி."
"இதெல்லாம் தியாக்கூடத் தப்பான உறவு வைக்கிறதுக்கு முன்னாடி நீ யோசிச்சுருக்கணும்.” என்ற மறுநொடி, “ஜியா!” என்று ஆஷிக் கர்ஜிக்க அவனைத் தள்ளியவள்,
"கத்துனா அவளுக்கும் உனக்கும் தப்பான தொடர்பு இல்லனு ஆகிறாது. நீ எவ்வளவு முறைச்சாலும் சரி, எவ்வளவு கத்துனாலும் உனக்குத் தியாக்கும் தொடர்ப்பு இருந்தது இருந்ததுதான்.” என்று அழுத்தமாய் கூறினால்.
கோபம் தாங்காமல் ஆஷிக், ஜியா மீது தன் கைகளை ஓங்க, அவளோ சிறு அசைவும் இல்லாமல் அவனையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.
அடிக்க வந்த அவனது கையின் வேகம், அவளது முகத்தைக் கண்டதும் குறைய, ஓங்கிய கரத்தை தளர்த்தியவன் தன் ஆள்காட்டி விரலை அவள் முன் காட்டி,
"பிரச்சனை எனக்கும் உனக்கும். தேவையில்லாம என் ஃப்ரண்ட பத்தி பேசாத.” என்று மிரட்டும் தோரணையில் கூற,
"ஃப்ரண்ட்? ஓ... உங்க ஊர்ல இதுக்குப் பேர்தான் நட்பா? நம்புனேன்டா... எப்படிடா எனக்குத் துரோகம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு?” என்று கண்களில் கண்ணீர் மல்க கூறியவளிடம்,
"உனக்கெல்லாம் நட்ப பத்தி என்னடி தெரியும்? முன்ன பின்ன உனக்கு ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இருந்தால் தானே?"
"ஆமா தியா, அப்புறம் உன்னை மாதிரி ஆளுங்க தங்களோட தப்பான உறவை, என்னை மாதிரி முட்டாளுங்ககிட்ட இருந்து மறைக்கிறது யூஸ் பண்ற வார்த்தைதான் நட்புனு எனக்கு முன்னாடி வேணும்னா தெரியாம இருந்திருக்கலாம். ஆனா இப்போ தெளிவாவே தெரியுது."
"ஜியா எனக்குக் கோபமா வருது, தயவு செஞ்சி எதுவும் பேசாத.” என்று ஆஷிக் கோபத்தை உள்ளடக்கியவாறு அழுத்தமாய் கூற, அவனுக்குப் பதில் பேச வந்த ஜியாவைத் தடுத்த ஆதர்ஷ், ஆஷிக்கை அமைதி படுத்திவிட்டு, “ஜியா பிரச்சனை வேற மாதிரி போகுது, அதைப் பேசி தீர்க்கிறதுதான் சரி."
"அதுல எனக்கு விருப்பம் இல்லை ஆதர்ஷ்.” என்று எரிச்சலோடு கூற,
"ஜியா இதுல நீயும் ஆஷிக்கும் மட்டும் சம்பந்த பட்ருந்தீங்கனா நான் தலையிட மாட்டேன். ஆனா நீ தியாவையும் ஆஷிக்கையும் பற்றிச் சொல்ற, ஸோ பேசிதான் ஆகணும்."
"அந்த அசிங்கத்தை மறுபடியும் வேற பேசணுமா? என்ன வேணுமோ, அதை ஆஷிக்கோட ஆசை காதலி தியாகிட்டையே கேட்டு தெரிஞ்சிக்கோங்க. ஏன் ஆஷிக், அவ உன்கிட்ட எதுவும் சொல்லலையா? ம்ம்... சொல்ல டைம் இருந்திருக்காது. சார்தான் வேற வேலையில பிசியா இருந்தீங்களே? ஆனா தியாக்கு நான் நன்றி சொல்லணும், அன்னைக்குத் தியா மட்டும் என்கிட்ட உண்மையைச் சொல்லாம இருந்திருந்தாள்னா, என் நிலமையைக் கொஞ்சம் யோசிச்சு பாரு. உன்னை இப்போ வரை நம்பி ஏமாந்துட்டு இருந்திருப்பேன். தப்பெல்லாம் நீ பண்ணிட்டு, ஏதோ ஒரு லெட்டரை என்கிட்ட காட்டி நான் எழுதினேன்னு சொல்ற?
உன் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணினது, ஆயிஷா உன்னோட ஸ்டெப் சிஸ்டர், இப்படி எல்லாமே உன்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இதெல்லாத்தையும் காரணம் காட்டி உன்னை விட்டு போற ஆள் நான் இல்லை.
எவ்வளவு பெரிய டிராமா? உன் தப்ப மறைக்க எப்படி எல்லாம் யோசிச்சு என் மேல பழியைப் போட்ருக்க? என்ன தியாவும் நீயும் சேர்ந்து போட்ட ப்ளனா இது?” என்று ஜியா கூற ஆதர்ஷ்க்கு குழப்பம் இன்னும் அதிகமானது.
வெகுண்டெழுந்த ஆஷிக் தனல் தெறிக்கும் விழிகளோடு ஜியாவை வெறித்துப் பார்த்தவாறு,
"ஷட் அப்! ஒருவார்த்தை இனிமே பேசுன, என்னை நீ வேற மாதிரி பார்ப்ப." என்று மிகக் கடினமாகக் கோபம் தெறிக்கப் பற்களைக் கடித்தவாறு கூற, பதிலுக்கு ஜியா திமிற இருவரையும் சமாதானம் செய்த ஆதர்ஷ்,
"சண்டை போடுறதுனால எந்தப் பயனும் இல்லை. தியாவ வச்சு பேசி இதை இன்னைக்குத் தெளிவுபடுத்திறதுதான் என்னைக்கும் நல்லது.” என்ற ஆதர்ஷிடம் ஆஷிக்,
"டேய் இவதான் ஏதோ உளர்றான்னா, நீயும் அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிகிட்டு இருக்க? இவளோட சந்தேகப் புத்திக்காக நாம நம்ம தியாவ சந்தேகப்படணுமா என்ன? சின்ன வயசுல இருந்து நமக்கு அவளைத் தெரியும்டா. ஜியா சொல்றத கேட்டா அவளால சத்தியமா தாங்கிக்கவே முடியாது.” என்று தன் தோழிக்காகப் பரிந்து பேச,
"ஆஷிக் பிரச்சனைனு வந்ததுக்கு அப்புறம் பேசி தீர்க்கிறதுதான் சரி. அவளுக்குப் ஃபோன் பண்ணி உடனே என் வீட்டுக்கு வர சொல்லு."
"ஆதர்ஷ்...” என்று ஆஷிக் தயங்க,
"சொன்னதைச் செய்." என்று கட்டளையிட்டான்.
இதை அனைத்தையும் கவனித்த ஜியாவின் சித்தி, ஜியாவிடம் என்ன பேச என்று விளங்காமல் அவளையே பார்க்க அவள் அவரிடம்,
"பழைய விட்டுப் போன கணக்கெல்லாம் தீர்க்க வேண்டியிருக்கு சித்தி, முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திடுறேன். நீங்க சரண்யா கூடப் பத்திரமா வீட்டுக்கு போங்க.” என்று கூற,
அவர் அவளிடம், "கொஞ்சம் பொறுமையா இருமா, எனக்கென்னவோ இப்போ கூட ஆஷிக் மேல தப்பு இருக்கிற மாதிரி தெரியலை.” என்று தன் மனதில் உள்ளதைக் கூற, அவளது அமைதியே ஜியா சமாதானம் ஆகவில்லை என்பதை உணர்ந்தவர், தன் மகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
சில மணிநேர பயணத்திற்குப் பிறகு ஜியா, ஆஷிக், ஆதர்ஷ் மூவரும் ஆதர்ஷின் இல்லத்திற்கு வர,
அவர்கள் வந்த சில மணிநேரத்தில், "ஆஷிக், ஆதர்ஷ் எங்கடா இருக்கீங்க?” என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்த தியா, ஆஷிக்கை பார்த்து, “என்னடா வர சொல்லிருக்கீங்க, ஏதும் பார்ட்டியா?” என்று எப்பொழுதும் போல அவனது தோளில் தன் கையைப் போட்டவாறு கேட்க,
"வாங்க தியா, உங்களுக்காக உங்க ஃப்ரண்ட். ஆஷிக்...” என்று அழுத்திய ஜியா, ஆஷிக்கைப் பார்த்தவாறே, "ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காரு.” என்று கூற,
அங்கே ஜியாவை அவர்களுடன் கண்டவுடன் தியாவின் முகம் நெருப்பில் பட்ட சருகாய் மாறியது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டவள் தனக்குள்,
‘என்ன ஆனாலும் இவ ஆஷிக்கை விடமாட்டா போலையே?’ என்று கடிந்து கொண்டவள் பிறகு,
தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டு, "ஜியா எப்படி இருக்கு, உன் ஹெல்த்?” என்று கேட்க,
கோபமுற்ற ஜியா, "போதும்! இன்னும் எவ்வளவுதான் ரெண்டு பேரும் நடிப்பீங்க? உனக்கும் ஆஷிக்குக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி நீயா சொல்றியா, நானா சொல்லட்டா?" என்று அதட்டலோடு கேட்க,
"என்ன பேசுற? என்ன ரிலேஷன்ஷிப்? ஆஷிக் ஜியாக்கு என்னாச்சு?” என்று தியா ஒன்றும் அறியாதது போல ஜியாவின் கேளிவிக்குப் பதிலாய் கேள்வியையேக் கேட்டாள்.
"நடிக்காத தியா, நவம்பர் முப்பது, 2012. ஆஷிக்கோட பிறந்தநாள் பார்ட்டி இப்போ கூட உனக்கு எதுவும் ஞாபகம் வரலையா? அன்னைக்கு நைட் உனக்கு ஆஷிக்குக்கும் எதுவும் நடக்கலை?"
"அன்னைக்கு நைட் எங்களுக்குள்ள என்ன நடந்தது? ஆஷிக், ஜியாக்கு என்ன ஆச்சு? நமக்கு என்ன நடந்தது? ஏதாவது சண்டை போட்டுக்கிட்டோமா?” என்று வெகுளி வேடம் தரிக்க,
"நடிக்காத தியா, அடுத்தநாள் காலையில நான் வந்த அப்போ நீ எதுவும் என்கிட்ட சொல்லல?"
"நான் என்ன சொன்னேன்? ஆமா நீ அன்னைக்கு வந்தியா? எப்போ வந்த? நாங்க எல்லாரும் போனதுக்கு அப்புறம் வந்தியோ?” என்று அப்பாவியாகக் கேட்க,
"ஆஷிக் இவதான் எல்லாம் சொன்னா, இப்போ எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறா."
"போதும், அவ நடிக்கலை. நீதான் நடிச்சுட்டு இருக்க.” என்று ஆஷிக் க்ரோதம் ததும்பக் கூற மிரட்சியுடன் அவனை நோக்கினாள்.
மேலும் தொடர்ந்தவன், “நீ சொல்ற நவம்பர் முப்பது 2012, நைட் நான் என் வீட்லையே இல்லை. ஆதர்ஷ் கூட அவனோட வீட்ல இருந்தேன்." என்றவன் கண்களில் அனல் தெறிக்கக் கூர்மையாக அவளைப் பார்க்க,
அவன் கூறியதைக் கேட்ட ஜியாவுக்குத் தலையே சுற்றியது. அவளது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை, கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் கணக்கில்லாமல் வழிந்தது. ஆஷிக் கூறியதையும் தியா கூறியதையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு, தியாவின் சூழ்ச்சியில் தான் ஏமாந்தது தெளிவாகப் புரிந்தது.
அவளது மனம் மெல்ல அந்தக் கசப்பான நினைவுக்குள் அவளைக் கொண்டு சென்றது.
***
ஆஷிக், ஜியா இருவரது காதலும் ஐந்து வருடத்தை மிகவும் சுகமாய் கடந்திருந்த நேரம் அது. ஆஷிக் தன் ஏரோநாட்டிகல் படிப்பை முடித்து பைலட் ட்ரையினிங்கில் சேர்ந்திருக்க, ஜியா தன் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் மேல் படிப்பு படிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஆஷிக்கின் பிறந்த நாளான நவம்பர் முப்பது 2012 அன்று ஜியாவுக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்க, அவளால் ஆஷிக்கின் இல்லத்தில் நடந்த அவனது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே எக்ஸாம் முடிந்த அன்று இரவே கிளம்பியவள், அடுத்தநாள் காலையில் மும்பை வந்தடைய, வந்த அடுத்த நிமிடம் ஆஷிக்கை காண அவனது இல்லத்திற்கு மிகவும் ஆசையோடு சென்றாள்.
***
நிலவே 35
ஆஷிக்கின் இல்லத்தை அடைந்த ஜியா கதைவைப் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாமல் இருக்க, காலிங் பெல்லை அழுத்தினாள்.
நிமிடங்கள் கழிந்தும் கதவை யாரும் திறக்காமல் இருக்க எரிச்சல் அடைந்தவள், மீண்டும் ஆஷிக்கின் பெயரை சொல்லி அழைத்தவாறு கதவைத் தட்ட, திடீரென்று கதவு அசையவும் கதவு ஏற்கனவே திறந்திருப்பதை உணர்ந்தவள்,
"கதவு திறந்துதான் இருந்திருக்கா? அது தெரியாம... ஜியா, நீ இருக்கியே சரியான மடச்சிடி.” என்று செல்லமாய் தன்னையே கோபித்துக் கொண்டவள். 'நேத்து நல்லா ஆட்டம் போட்டுட்டு, இப்போ சார் தூங்கிட்டு இருப்பாங்க.' என்று மனதிற்குள் எண்ணியவள் புன்னகைத்தவாறே அவனது அறைக்குள் நுழையும் நேரம்,
அவள் கண் முன் தியா அரங்கேற்றிய நாடகத்தை மெய் என்று நம்பி உருக்குலைந்து போனாள்.
ஏற்கனவே ஜியா வந்திருப்பதைப் பால்கனியில் வைத்தே பார்த்த தியா, தன் தோழியரின் உதவியோடு அமைந்த சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள். அறையின் வாசலிலே நின்ற ஜியா உள்ளே சென்று பார்த்திருந்தால் இப்பொழுது இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
பெட்டில், “போதும் ஆஷிக், இப்போவாது என்னை விடுடா” என்றவாறு முழுதாய் மூடியிருந்த போர்வையில் இருந்து தன்னை மட்டும் விடுவித்து, தன் கரத்தை பற்றி முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பி படுத்திருந்த நபரின் கைகளில் இதழை பதித்து, தன் கரத்தை விடுவித்துகொண்டு வெட்கப்பட்டவாறே திரும்பிய தியா,
விழிகளில் நீர் வழிய வாசலிலே நின்று கொண்டிருந்த ஜியாவைப் பார்த்ததும் பதற்றம் கொள்வது போல நடிக்க, ஜியா அழுதுகொண்டே அங்கிருந்து செல்ல, அவளைப் பின் தொடர்ந்த தியா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து ஜியாவை தடுத்து நிறுத்தினாள். அவளைப் பார்த்து முறைத்த ஜியா, தான் முந்தின நாள் ஆஷிக்கிற்குப் பரிசளித்த சட்டையைத் தியா அணிந்திருந்ததைப் பார்த்து நெஞ்சம் கலங்க, தன் விழிகளை இறுக மூடியவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஜியா மெல்ல மெல்லமாய் உடைவதை ரசித்த தியா, ஜியாவின் கண்களில் வழிந்த ஒவ்வொரு துளி கண்ணீரிலும் ஜியாவிற்கு ஆஷிக்கின் மீதுள்ள நம்பிக்கை உடைவதைக் கண்டு இன்பம் கொண்டு மேலும் அவளைச் சுக்கு நூறாக உடைத்தாள்.
தயங்கி தயங்கி தளர்ந்த குரலில் தியா ஜியாவிடம், "எனக்கும் ஆஷிக்குக்கும் எதுவும் நடக்கலைனு பொய் சொல்லி உன்னை ஏமாத்த மாட்டேன். இதெல்லாம் எதோ போதையிலே நடந்ததுனு சொல்லி சமாளிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. ஆமா எங்க ரெண்டு பேரோட சம்பந்தத்தோடதான் இது நடந்தது. ஆனா உன்னைக் கஷ்டப்படுத்துறது எங்களோட நோக்கம் இல்லை.” என்று தொடர,
"போதும் ஸ்டாப் இட்!” என்று கதறியவாறு ஜியா தன் காதை மூடிக்கொள்ள, உள்ளுக்குள் சிரித்த தியா, ‘காதை மூடினா விட்ருவேனா' என்பது போல ஜியா, 'ஸ்டாப் இட் தியா! ஸ்டாப் இட் தியா!' என்று கதறி அழ அழ, மேலும் மேலும் ஜியாவை கஷ்டப்படுத்தினாள்.
"நான் தடுத்தேன், ஆனா ஆஷிக் கேட்கவே இல்லை. என்ன நடக்கக் கூடாதோ அது நடந்திருச்சு. ஜியா நான் என்ன பண்றது? ஆஷிக் கேட்டு என்னால மறுக்க முடியலை. நான்தான் முன்னாடியே சொன்னேன்ல ஆஷிக் எப்படின்னு... அவன் நிமிஷத்துக்கு நிமிஷம் பொண்ணுங்களை மாத்திட்டே இருப்பான்னு. நீதான் நம்பலை, அஞ்சி வருஷம் நீயும் அவனும் லவ் பண்ணிருக்கீங்க, ஆனா அவன் என்கிட்ட இத எதிர்பார்த்திருக்கான்னா அது உன்கிட்ட கிடைக்கலைனு தானே அர்த்தம். ஆனா ஒருவிஷயம், ஆஷிக் சொல்லித்தான் எனக்கே தெரியும், அவன் என் மேல அவ்வளவு லவ் வச்சுருக்கான்னு. அவன் உன்னை எப்படி விடுறதுனு தெரியாமதான் ரொம்ப குழம்பிருக்கான். இப்போ சந்தர்ப்பம் அமைஞ்சதும் அவன் மனசுல உள்ள எல்லாத்தையும் என்கிட்ட கொட்டி தீர்த்துட்டான்." என்று தன் வார்த்தைகளால் ஜியாவை சுக்கு நூறாக உடைத்தாள்.
ஜியா கண்ணீருடன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
"இங்க பாரு ஜியா, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமே நீதான் முடிவெடுக்கணும். எதுவா இருந்தாலும் நீ ஆஷிக்கிட்ட பேசிட்டு முடிவெடு, அதுதான் சரி. உள்ள வா, ஆஷிக்கிட்ட மனசுவிட்டு பேசு.” என்று தியா அவளது கரத்தைப் பற்றி அழைக்க, தியாவின் கரத்தை உதறி தள்ளியவள் கண்ணீர் மல்க,
"இப்படிச் சொன்னா நான் நம்பிருவேனா என்ன? நீ பொய் சொல்ற, என் ஆஷிக் அப்படிப் பண்ணமாட்டான்.” என்று தேம்பி தேம்பி அழுதவாறு ஆஷிக் மீதுள்ள நம்பிக்கையில் கூற,
"ஜியா ஒரு பொண்ணா உன்னைப் பார்த்தா, எனக்கு ரொம்பப் பாவமா இருக்கு, நீ ரொம்ப முட்டாளா இருக்க. கண் முன்னாடி பார்த்ததுக்கு அப்புறம் கூட நான் பொய் சொல்ற மாதிரி உனக்குத் தோனுதா?” என்றவள், ஏற்கனவே தன் தோழியின் உதவியோடு தன் கழுத்தில் தானே ஏற்படுத்திய கீறலை காண்பித்து,
"நான் பொய் சொல்லலாம், ஆனா இந்தக் காயம் பொய் சொல்லுமா? இது எனக்கும் ஆஷிக்குக்கும் உள்ள காதலோட அடையாளம். இது எப்படிப் பொய் சொல்லும்? இன்னும் நம்பலையா, சரி உள்ள வா. அவன் உள்ளதான் இருக்கான், அவன்கிட்டயே பேசு.” என்று ஜியாவின் கரங்களைப் பற்றி இழுத்தாள்.
தியாவின் நம்பிக்கை கலந்த பேச்சில் தன் நம்பிக்கையைத் பாதித் தொலைத்தவள் இருமனதாய் மீதம் இருந்த நம்பிக்கையில் உள்ளே நுழையும் தருவாயில் அறைக்குள் இருந்து, “தியா டார்லிங், சீக்கிரம்..." என்று ஒரு ஆண் அழைப்பது போல குரல் ஒன்று கேட்க,
"எஸ் ஆஷிக்!” என்ற தியா ஜியாவைப் பார்க்க,
ஜியாவோ அலைபேசியில் இருக்கும் சாதாரண வாய்ஸ் சேஞ்சிங் கருவியில் இருந்து வெளிப்பட்ட அந்தக் குரலை, ஆஷிக்கின் குரல் என்று தவறாக நினைத்துக்கொண்டு மிகவும் மனமுடைந்து கதறி அழுதாள்.
மொத்தமாக உருக்குலைந்து போய் இருந்த அந்த நேரத்தில் ஜியாவால் நிதானமாக யோசிக்க முடியவில்லை. அந்தக் குரலை விட 'தியா டார்லிங் சீக்கிரம்' என்ற வார்த்தைகள் அவளது நெஞ்சத்தை ஆணி போலக் குத்தி கிழித்து ரணமாகியது. மூளை செயல் இழந்து போக, தியாவின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டு ஆஷிக் மீதும் தன் காதல் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்தாள்.
'உன்கிட்ட கிடைக்காதது, அதான் என்கிட்ட வந்திருக்கான்.' இந்த வார்த்தைகள் எல்லாம் ஜியாவின் உடலை கூச செய்தது.
‘இதுதான் உனக்கு வேணுமா ஆஷிக்? இதுக்குத்தான் என்னை ஏமாத்தினியாடா? என் மனசு உனக்குப் புரியவே இல்லையாடா?’ என்று ஜியா ஊமையாய் கதறினாள்.
அவன் மீதிருந்த மொத்த நம்பிக்கையும் தியாவின் சூழ்ச்சிக்கு இரையாக்கிவிட்டு கண்ணீர் மல்க தியாவிடம், “அவன்கிட்ட இனிமே என் மூஞ்சிலையே முழிக்கக் கூடாதுனு சொல்லிரு.” என்று கோபமாய் கூறி உக்கிர பார்வை பார்த்தபடி அங்கிருந்து சென்றாள்.
***
இந்த நிகழ்வு அனைத்தும் அவளது கண்முன் ஒரு மின்னலைப் போல வந்து போக, ஆஷிக் கூறியதையும் அன்று நடந்ததையும் எண்ணி பார்த்த நொடியே ஜியாவிற்குத் தனது முட்டாள்தனம் வெளிப்படத் தன் தவறை எண்ணி தவியாய் தவித்தாள்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தியா சொன்ன பொய்யான வார்த்தைகளை நம்பி ஏமாந்து, ஆஷிக்கை சந்தேகித்ததை நினைத்து அவளது உள்ளம் கலங்கியது.
'துரோகி துரோகி!' என்று பலமுறை தனது கூர்மையான வார்த்தைகளால் அவனது உள்ளத்தை ரணமாக்கியதின் வலியை இப்பொழுது உணர்ந்தவள்,
வார்த்தைகள் முடங்கிப் போகச் சிலையென அசைவின்றி இருந்தாள்.
ஆஷிக் உலுக்கியதில் தன் நினைவிற்கு வந்த ஜியா அவனையே பார்க்க, அவனோ இறுகிய முகத்தோடு கோபமும் ஆத்திரமும் புடைத்துக் கொண்டு வர, “அவ்வளவு நேரமும் அப்படிப் பேசுன? இப்போ வாயடைச்சு போய் நிக்குற? என்ன பேசணும்னு தெரியலையா?” என்று உறுமியவனிடம்,
குற்ற உணர்ச்சியில் தவித்தவள் தயங்கியபடி, "ஆனா ஆஷிக் அடுத்த நாள் காலையில நான் வந்தேன். தியா என்னலாமோ சொன்னா. இப்போ மாத்தி பேசுறா.” என்று கண்களில் திரண்ட கண்ணீர் தன் வதனத்தை நனைத்தபடி ஏங்கியவாறு கூற,
"போதும் ஜியா, மறுபடியும் மறுபடியும் பொய் சொல்லாத.” என்ற குரலில் எரிச்சல் தொனிக்க கூறினான் ஆஷிக்.
கலங்கியவள், “இல்ல ஆஷிக், நா... ன் சொல்றத..." என்று ஆரம்பிக்க, "ப்ச்...” என்று தன் கரத்தை உயர்த்தி நீ சொல்லும் எதையும் நான் நம்பத் தயாரா இல்லை என்பதைப் போல, தலையைக் குறுக்காக ஆட்ட மிகவும் வருந்தினாள். செய்வதறியாது திகைத்து போய் நின்றவளிடம் ஆதர்ஷ்,
"ஜியா, ஆஷிக் சரியாதான் சொல்றான். அன்னைக்கு நைட் பார்ட்டில எல்லாரும் கொஞ்சம் அதிகமா ட்ரிங் பண்ணிட்டாங்க. அவங்களால வீட்டுக்கு கிளம்ப முடியலை, அதனால பொண்ணுங்க எல்லாரும் ஆஷிக் வீட்ல இருந்தாங்க. நான் ஆஷிக் அப்புறம் மத்த பசங்க எல்லாரும் என் கெஸ்ட் ரூமுக்கு போய்ட்டோம் இதுதான் நடந்தது. ஆஷிக் தியாகூட இல்லை, என் கூடத்தான் இருந்தான். அவன் வாய்ஸ் கேட்ருக்க சான்ஸே இல்லை. நீ எதோ குழம்பிப் போய் இருக்க.” என்று நடந்ததைக் கூற,
"இல்லை ஆதர்ஷ், இப்போ நான் ஆஷிக்கை நம்புறேன். நான் அடுத்த நாள் வந்தேன் தியாக்கு தெரியும், ஆனா இப்போ இல்லைனு பொய் சொல்றா."
"போதும் ஜியா” என்று ஆஷிக் தன் சுட்டு விரல் காட்டி கடுமையான குரலில் எச்சரித்ததும், ஜியா தன் விழிகள் துடிக்க, நடுங்க, அவளது நடுக்கம் அவனது உள்ளத்தில் எதோ செய்ய வேறு பக்கமாக ஆஷிக் திரும்பி நிற்க,
அவனது கரத்தைத் தயக்கத்துடன் பற்றிக்கொண்டவள், "அவ பொய் சொல்றா ஆஷிக்.” என்று கூற, தன் மீதிருந்த அவளது மென் கரத்தை நீக்கியவன் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு,
"போதும் ஜியா, பொய் அவ சொல்லல, நீதான் சொல்ற. என் மேல உனக்கு நம்பிக்கையே கிடையாது, அதான் என்னைக் கழட்டிவிட நீ போட்ட மாஸ்டர் பிளான்தான் இது. நான்தான் தியா எவ்வளவு சொல்லியும் கேட்காம உன்னையே நினைச்சுட்டு ஒரு முட்டாள் மாதிரி இத்தனை நாள் வாழ்ந்திருக்கேன். இப்போ எனக்கு எல்லாம் தெளிவாகிட்டு.” என்று கசப்பான புன்னகையைச் சிந்தியபடி கூற,
"அப்படி இல்லை ஆஷிக்...” என்று கெஞ்சிய ஜியாவிடம்,
ஆஷிக் தளர்ந்த குரலில், "உனக்குக் கொஞ்சம் கூட என் மேல நம்பிக்கையே கிடையாதுல? லவ் பண்ணும் போது நீ சந்தேகப்பட்டு என்மேல கோபப்படும் போதெல்லாம், என்மேல உள்ள அதீத அன்புலதான் அப்படிப் படுறனு நான் ரொம்பச் சந்தோஷப்படுவேன். உன் சந்தேகத்தைக் கூட நான் காதலாதான் பார்த்தேன். உன் மனசு முழுக்க நான்தான் இருக்கேன்னு நினைச்சேன். ஆனா உன் மனசுல இப்படி ஒரு கேவலமான எண்ணம் வரும்னு நினைக்கவே இல்லை.
அதுவும் தியாவையும் என்னையும் உன்னால எப்படிச் சேர்த்து வச்சு பேச முடிஞ்சிது, அருவருப்பா இருக்கு. எனக்கே இப்படி இருக்குனா தியாக்கு எப்படி இருக்கும்? தியா உன்னைப் பத்தி எவ்வளவோ சொன்னா, நான்தான் முட்டாளாவே இருந்துட்டேன்.
நீ என்னை விட்டு போய் ஆறு வருஷம் ஆச்சு, உன் மேல கோபம் இருந்தாலும் அதை விட நூறு மடங்கு அதிகமா காதல் வச்சுருந்தேன். ஒவ்வொரு நாளும் நீ வரமாட்டியா, உன்னைப் பார்க்க மாட்டேனானு நான் ஏங்கினதுதான் அதிகம். ஒவ்வொரு நொடியையும் உன்னை நினைச்சே வாழ்ந்தேன்.
உன்னால எப்படி அப்படி நினைக்க முடிஞ்சிது? இத்தனை வருஷத்துல ஒரு செகண்ட் கூடவா என் கண்ல நான் உன் மேல வச்ச காதலை நீ பார்க்கலை? மனசு வலிக்குதுடி. இப்போ கூடப் பாரு, உன் மேல எனக்கு அவ்வளவு கோபம் இருக்கு. உள்ளுக்குள்ள அனலா அடிக்குது. ஆனாலும் என் கோபத்தை எல்லாம் அடக்கிட்டு, உன்கிட்ட ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து பேசுறேன். ஏன் தெரியுமா?
எங்க கோபமா எதாவது பேசி உன்னைக் காயப் படுத்திருவேனோனு ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பேசுறேன். இப்போ கூட உன்னை என்னால வெறுக்க முடியலை. ஆனா இப்படிச் சொன்னா நான் என்ன ஃபீல் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நீ யோசிக்கலைல?" என்று சோர்ந்து போய் தளர்வாகப் பேசினான். குரலிலும் வார்த்தையிலும் அவ்வளவு வலி தென்பட்டது.
"ஆஷிக் என்னை மன்னிச்சுரு.” என்று கெஞ்சியவளிடம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டவன்,
"ஜியா உன்னை என் மூஞ்சிலையே முழிக்காதனு சொல்ல என்னால முடியலை. அதனால நான் இங்க இருந்து போறேன்.” என்றபடி அங்கிருந்து செல்ல போக,
ஜியா அழுதுகொண்டே, ஆஷிக்கை தன்னோடு இறுக்க அணைத்து கொண்டாள்.
ஜியாவின் அணைப்பில் இருந்து விலக மனமில்லாத பொழுதும் அவளை விட்டு விலக முயற்சிக்க, அவளது கண்ணீர் துளிகள் அவனது மார்பை நனைக்க நனைக்க, அதன் ஸ்பரிசத்தில் மெல்ல மெல்ல இளகியவன் தன் விழிகளை அழுந்த மூடியவாறு நிற்க,
சில நொடிகள் கழித்து எதைப் பற்றியோ யோசித்த ஜியா சட்டென்று அவனை விட்டு விலகி, "உன்னைச் சந்தேகப்பட்டது தப்புதான் ஆஷிக், முடிஞ்சா என்னை மன்னிச்சுரு. ஆனா நானும் பொய் சொல்லல. நான் இப்படிச் சொல்றது உனக்கு ரொம்பக் கோபம் வரும், இருந்தாலும் சொல்றேன். உன் ஃப்ரண்ட் நீ நினைக்கிற மாதிரி கிடையாது, அவ உன்னை ஏமாத்துறா.
நீ எங்கையும் போக வேண்டாம், நான் போறேன்.” என்று கூறிவிட்டு அவனது முகத்தைக் கூடப் பார்க்காது அழுது கொண்டே அங்கிருந்து சென்றாள்.
அழுது கொண்டே அங்கிருந்து அவள் சென்றதும் அவளைத் தடுப்பதற்காக, “ஜியா!” என்று அவன் அழைத்த மறுநொடி,
தியா ஆஷிக்கிடம், "விடு ஆஷிக், அவளை ஏன் கூப்பிடுற? உன்னைப் புடிச்ச சனியன் போய்டுச்சுனு சந்தோஷப்படு. எவ்வளவு பொய் சொல்லிட்டா?” என்ற தியாவிடம் ஆஷிக்,
"தியா ப்ளீஸ், ஜியா பேசுனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன், நீ அவளைத் தப்பா சொல்லாத. என்னால...” என்று ஆரம்பித்தவனைத் தடுத்தவள்,
"உன்னால தாங்கிக்க முடியாது. வாவ் ஆஷிக்! அவ என்னை அவ்வளவு தப்பா பேசிட்டு போறா, நியாயப்படி நீ அவளுக்குப் பளார்னு ஒன்னு குடுத்திருக்கணும். ஆனா அவகிட்ட கொஞ்சி கொஞ்சி பேசிட்டு, நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு என்கிட்ட மூஞ்ச காட்டுற. ரொம்ப மாறிட்ட ஆஷிக். உனக்கு நான் முக்கியமே இல்லல, என்ன ஆனாலும் அவதான் உனக்கு முக்கியம்ல?” என்று வெறுப்போடு கூற,
"அப்படி இல்லை தியா நான்..."
"போதும் எதுவும் பேசாத.” என்றவள் ஆஷிக் எவ்வளவோ தடுத்தும் கோபமாய் அங்கிருந்து கிளம்பினாள்.
செய்வதறியாது மனமுடைந்த ஆஷிக் கோபத்தில் தன் அருகில் கிடந்த டேபிளை தன் காலால் தள்ளிவிட, அவனை ஆசுவாசபடுத்திய ஆதர்ஷ் அவனது கரம் பற்றி சோபாமீது அமரவைத்து,
"இப்போ டென்ஷன் ஆகுறனால, எந்த யூசும் இல்லடா, பொறுமையா யோசி."
"எப்படிடா? ஜியாவை திட்ட முடியலை, இதனால தியா கோபமா இருக்கா. நான் என்னடா பண்ண?"
"உன் மனசு என்ன சொல்லுதோ அதைக் கேளு."
"என் மனசு ஜியாகிட்ட போகச் சொல்லுது. சத்தமா பேசுனதும் ரொம்பப் பயந்துட்டாடா. ஒரு மாதிரி ஆகிடுச்சு, அழுதுட்டே போறா வலிக்குது. ஆனா அப்படி நான் ஜியாக்கு சப்போர்ட்டிவா இருந்தா தியாக்கு அநியாயம் பண்ற மாதிரி ஆகிரும்.
உண்மைய சொல்லணும்னா ஜியா மேல என்னால ரொம்ப நேரம் கோபமா இருக்க முடியாது. ஒருபக்கம் ஜியா, ஒருபக்கம் தியா. நான் என்னடா பண்றது? ஜியா சொல்றது தப்புனு தெரியுது, ஆனாலும் அவ அழும் பொழுது கஷ்டமா இருக்கு."
"முதல்ல நீ ஜியாக்கிட்ட மனசு விட்டு பேசு, எனக்கென்னவோ ஜியா சொல்றத முழுசா ஒதுக்கி வைக்க முடியலை.” என்ற ஆதர்ஷிடம்,
"லூசாடா நீ? அவ எதையோ நினைச்சுட்டு உளறிட்டு இருக்கா. ஜியாக்கு தியாவை சுத்தமா புடிக்காது, அதனால ஏதேதோ பேசிட்டு இருக்கா. பேசுனா பிரச்சனைதான் அதிகமாகும். அவளுக்கு என் மேல எப்பவும் சந்தேகம், அதுதான் இன்னைக்கு அது இப்படி வளர்ந்து நிக்குது.
இப்போ நான் ஜியாவை இல்லை, தியாவைதான் சமாதானம் பண்ணணும். தியா ரொம்ப உடைஞ்சி போய் இருப்பா.” என்றவன் தியாவைக் காண அவளது இல்லத்திற்குச் சென்றான்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 36 & 37

Last edited: