- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 38
ரெண்டு நாட்கள் கழிந்திருந்த வேளையில் தன் தாய் தன் அறைக்கு வந்ததைக் கூடக் கவனிக்காது, ஏதோ ஒரு யோசனையில் ஆஷிக் ஆழ்ந்திருக்க, "என்னபா ஆதர்ஷ், தியாவோட சேர்ந்து எங்கையும் வெளியில போகலையா? ஆதர்ஷும் வாரான், கொஞ்ச நேரத்துல போயிடுறான். ரெண்டு நாளா நீயும் ரூம்குள்ளயே அடைஞ்சி கிடக்குற, என்னப்பா விஷயம்?” என்று அவனது தலையை மெல்ல கோதியவாறே ஹாஜரா கேட்டார்.
“ஒன்னும் இல்லைமா, நீங்க எப்போ வந்தீங்க?"
"எதை பத்தியோ நீ தீவிரமா யோசிச்சுட்டு இருந்தியே, அப்போதான் வந்தேன்."
"சாரிமா, நான் கவனிக்கல."
"அது எப்படிக் கவனிக்கத் தோனும்? இதெல்லாம் காதல் செய்யிற வேலைமா...” என்று சிரித்தவாறே உள்ளே வந்தாள் ஆயிஷா.
ஆஷிக்கை பார்த்து கண்ணசைக்க அதைக் கண்டவன் அவளுக்குப் பதிலாய் தன் அக்மார்க் வசீகரப் புன்னகையைச் சிறு வெட்கத்தோடு சிந்த, எப்பொழுதும் இவ்வாறு தான் ஏதும் வம்பிழுத்தால் பதிலுக்கு, "\உன் வேலைய பாரு, அடிச்சுருவேன்.” என்று ஏதாவது பதிலுக்குத் தன்னிடம் வம்பு பண்ணும் சகோதரன், இன்று எதுவும் கூறாமல் புன்னகைத்ததோடு விடாமல் வெட்கம் வேறு பட அசந்து போனாள்.
"ஐயோ! என் அண்ணனுக்கு வெட்கப்படலாம் தெரியுமா? அம்மா இதுக்கு மேலயும் நீ நேரத்தை கடத்தாம சீக்கிரமா ஒரு நல்ல அம்மாவா உன் பையனுக்குக் கால்கட்டு, கை கட்டு இப்படி என்னலாம் உண்டோ எல்லாத்தையும் போட்டுடு.” என்று அவள் கூற ஹாஜரா புன்னகைத்தார்.
"ம்மா நீங்களுமா?” என்று ஆஷிக்கிடம்,
"எல்லாரும் தான்டா.” என்றவாறே உள்ளே வந்த ஆதர்ஷ்,
"ஆயிஷா அவன் இன்னைக்கு மட்டும் இல்லை, ரொம்ப வருஷமா இப்படித்தான் வெட்கப்பட்டுட்டு இருக்கான். நீங்கதான் கவனிக்கல.” என்று கூற,
"எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா?” என்ற ஆஷிக்கிடம்,
"அவங்க கிண்டல் பண்ணினாலும் சொன்ன விஷயம் சரி தானேடா?"
"இல்லைமா, நான் சும்மாதான்..."
"எதுவும் பேச வேண்டாம்.” என்றவர் ஆயிஷாவிடம், "ஆயுஷுமா போய் கபோர்ட்ல வச்சுருந்த பார்சலை எடுத்துட்டு வா.” என்று அன்பு கட்டளையிட்டார்.
"சரிமா” என்றவள் ஓடி சென்று கப்போர்டில் இருந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்து ஹாஜராவிடம் கொடுக்க, அதை வாங்கியவள் ஆஷிக்கிடமும் ஆதர்ஷிடம் கொடுத்து, "இதுல புது டிரஸ் இருக்கு, சீக்கிரமா போட்டுட்டு கிளம்புங்க.” என்றவர் அங்கிருந்து கிளம்பப் போக உடனே ஆஷிக், "எங்க போறோம்?"
"எங்க போறோம், யாரை பார்க்க போறோம் இந்தக் கேள்விக்கெல்லாம் எனக்குப் பதில் சொல்ல டைம் இல்லை. ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க.” என்றவர் மேலும் தொடர்ந்து, "ஆமா தியா இப்போல்லாம் ஏன் வீட்டுக்கு வர்றது இல்லை? அவளுக்கும் டிரஸ் வாங்கியிருந்தேன்.” என்றதும் ஆஷிக்கின் முகம் மாற உடனே சுதாரித்த ஆதர்ஷ், "ம்மா அவ கொஞ்சம் வேலையா வெளியில போயிருக்கா, அதான்மா வரல. நீங்க என்கிட்ட குடுத்திருங்க, நான் குடுத்துடுறேன்."
"சரிபா, அப்புறம் வந்து வாங்கிக்கோ, சரி சீக்கிரம் ரெடி ஆகுங்க.” என்றவர் ஆஷிக்கின் தலையை அன்போடு கோதிவிட்டு அங்கிருந்து சென்றார்.
புது ஆடையில் அழகாகத் தயாராகி இருவரும் கம்பீரமாகத் தங்களின் அறையில் இருந்து நடந்து வந்தனர்.
அப்பொழுது ஆஷிக், "என்னவா இருக்கும், அம்மா எங்க கூட்டிட்டுப் போகப் போறாங்க? ஒன்னும் புரியல..."
"எனக்கும்தான் தெரியல.” என்று அவர்கள் மாடியில் நின்று பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது கீழே சத்தம் கேட்டு வேகமாக வந்தார்கள்.
அங்கே அஸாத், ஹாஜராவிடம், "உன் பையன் என்னை மதிக்கிறதே இல்லை, அவனுக்காக நான் பொண்ணு கேட்டு போகணுமா என்ன? என் பேச்சை கேட்காம நடந்துகிறவனுக்காக நான் ஏன் இறங்கி வரணும்? எல்லாம் என்னைக் கேட்டா முடிவெடுக்கிறான்? இதுல மட்டும் நான் எதுக்கு? அவனையே பார்த்துக்கச் சொல்லு.” என்று கடுகடுக்க,
"அம்மா...” என்று முறைத்தவாறு ஆஷிக் மாடியில் இருந்து கீழே இறங்கி வர அந்த நேரம் பார்த்து,
"சம்பந்தி...” என்று அழைத்தவாறு ஷாஹித்தும் அவரது துணைவியார் ரஸ்மீனும் வந்தனர்.
அந்த நொடி தந்தைக்கும் மகனுக்கும் நடக்கவிருந்த ஒரு பெரிய போரைத் தடுத்து நிறுத்திய புண்ணியம் அவர்களுக்கே சேரும்.
இன்முகத்தோடு உள்ளே நுழைந்த ஷாஹித், அனைவரும் பதற்றமாய் இருப்பதைக் கண்டு, "என்ன எல்லாரும் பதற்றமா இருக்கிற மாதிரி இருக்கு, பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று கேட்க உடனே அஸாத்,
"அட ஷாஹித் சார், அதெல்லாம் ஒன்னும் இல்லை. வாங்க, முதல்ல வந்து உட்காருங்க.” என்று சூழ்நிலையைச் சமாளித்து அவரை அமர செய்ய, ஹாஜராவிடம் சென்று அவரிடம் நலம் விசாரித்த ரஸ்மீன் ஆயிஷாவின் உச்சியில் முத்தம் பொழிந்து,
"எப்படிடா இருக்க?” என்று ஆவலாய் விசாரிக்க பதிலுக்கு அவளும் விசாரித்த நேரம்,
"ம்ம், என்ன மாமியாரும் மருமகளும் இப்போவே ராசியாகிட்டீங்க போல?” ஷாஹித் கேலியாக கேட்க,
"என் மருமக, நான் கொஞ்சுறேன், உங்களுக்கு என்ன வந்தது?” என்று தன் கணவருக்குப் பதிலளித்தவர் மேலும் தொடர்ந்து, “இவரு எப்பவுமே இப்படித்தான், என்னை ஏதாவது கிண்டல் பண்ணிட்டே இருக்கணும்.” என்று செல்லமாய் தன் கணவரை கடிந்துகொண்டு அவரது அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.
தன் துணைவியைக் கண்டு சிரித்தவர் ஆஷிக்கிடம், "வாபா ஆஷிக், ஏன் அங்கையே நிக்கிற? வா வந்து பக்கத்துல உட்காரு.” என்று அவனைத் தன் அருகில் அழைத்து இயல்பாகப் பேசினார்.
அஸாத்திடம், “அஸாத் சார், நாளை மறுநாள் சமீர், ஆயிஷா நிச்சயதார்த்தத்தை வச்சுக்கிட்டா நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்களா?” என்று கேட்கவும்,
"என்ன கேட்குறீங்க? அது எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்? அந்த நாளுக்காகத் தானே காத்துக்கிட்டு இருக்கேன். இன்னைக்கேனு சொன்னாலும் நான் தயார்.” என்று அவர் தன் முழுச் சம்மதத்தையும் மகிழ்வுடன் தெரிவித்தார்.
"சமீர் ஊர்ல இருந்து நாளை மறுநாள் காலையிலே வந்திருவான், வந்த கையோட நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க அஸாத்?"
"சொல்றதுக்கு என்ன இருக்கு? ரொம்பச் சந்தோஷம், ஊரே அசந்து போற மாதிரி பண்ணிடலாம்.” என்று அஸாத் பெருமிதத்தோடு கூறினார்.
இனிப்புகள் பரிமாறப்பட்டிருந்த நேரம் ஷாஹித், "ஆமா நான் வரும் பொழுதே கவனிச்சேன், எல்லாரும் எங்கையோ வெளிய போறதுக்காகக் கிளம்பிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு?"
"அதெல்லாம் ஒன்னும்..." என்று அஸாத் கூறுவதற்குள் ஹாஜரா,
"அதுவந்து அண்ணா, ஜியா வீட்ல ஆஷிக், ஜியாவோட கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னுதான் கிளம்பிட்டு இருந்தோம்.” என்று தன் கணவரின் முறைப்பைக் கண்டு தயங்கி தயங்கி கூற, அவரிடம் ஷாஹித், "இதைப் பத்தி இன்னுமா நீங்க அந்தப் பொண்ணு வீட்ல பேசாம இருக்கீங்க? நல்ல விஷயத்தைத் தள்ளி போடவே கூடாது. இதெல்லாம் உடனே பண்ணிட வேண்டாம். சரி, இனிமேலும் தள்ளி போட வேண்டாம், நாங்களும் உங்க கூட வரோம். இப்போவே நாம எல்லாரும் சேர்ந்தே போய் நம்ம ஆஷிக்குக்கு பொண்ணு கேட்கலாம், என்ன சொல்ற ரஸ்மீன்?"
"நான் யோசிச்சேன், நீங்க சொல்லிட்டீங்க. இன்னொரு விஷயமும் எனக்குத் தோனுது, எல்லாம் கூடிவந்தா ஆயிஷா, சமீர், ஜியா, ஆஷிக் இவங்க ரெண்டு பேரோட...” என்றவரைத் தொடர்ந்த ஷாஹித்,
"நிச்சயதார்த்தத்தை ஒரே நாள்ல வச்சுக்கலாம் அதானே?"
"சரியா சொன்னீங்க."
உன் மனசு தெரியாதா என்பதைப் போலப் புன்னகைத்தவர், "காலையில ஆயிஷா வீட்ல வச்சு சமீர், ஆயிஷாவோட நிச்சயதார்த்தம், சாயங்காலம் ஜியா வீட்ல வச்சு ஆஷிக், ஜியாவோட நிச்சயதார்த்தம்." என்று மகிழ்ச்சித் ததும்பக் கூற, அஸாத்தை தவிர அனைவரது முகத்திலும் புன்னகை மகிழ்வோடு எட்டிப்பார்த்தது.
அமைதியாய் இருந்த அஸாத்தை கண்டு ஷாஹித், "என்ன அஸாத் சார் நாங்க எல்லாரும் இவ்வளவு சந்தோஷமா இருக்கோம், உங்க முகத்துல அது கொஞ்சம் கூடத் தெரியலையே?” என்று கேட்க,
அஸாத் கோபத்தை அடக்கியவாறு ஒருவித எரிச்சலோடு, “என்னை மதிக்காம, என் பேச்சை கேட்காம இருக்கிறவனுக்காக நான் எப்படிச் சந்தோஷப்பட முடியும்?” என்று ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே கூறினார்.
அஸாத்தின் கோபத்தைப் புரிந்துகொண்ட ஷாஹித் ஹாஜராவிடம், "நீங்க எல்லாரும் போய் கார்ல உட்காருங்க, நான் சம்பந்திய கூட்டிட்டு வரேன்.” என்றவர் அவர்கள் சென்றதும்,
ஷாஹித் அஸாத்தை ஆசுவாசப்படுத்தியவாறே, "என்ன அஸாத் நீங்க, இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க? காதல் கல்யாணம்லாம் இப்போ சர்வ சாதாரணமாகி போச்சு. என்னடா நம்ம பசங்க நம்ம பேச்சை கேட்கலைனு நினைச்சா தானே அவங்க மேல கோபம் வருது.
நம்ம பசங்க நமக்குக் கஷ்டம் குடுக்கக் கூடாதுனு அவங்களே அவங்க கல்யாணத்தை முடிவு பண்ணிட்டாங்களே, ச்ச... நம்ம மேல எவ்வளவு அக்கறை வச்சுருக்காங்கனு நினைச்சு பாருங்க, கோபம் வராது. காலத்தோட எதார்த்தம் புரியும். முதல்ல நானும் கோபப்பட்டேன்தான், அப்புறமா நான் மனசு மாறல. உங்க பையன் சார், கோபத்தை விடுங்க.
பையன் ஒரு பொண்ணை லவ் பண்றானேனு சந்தோஷப்படுவீங்களா? அதை விட்டுட்டு இன்னும் நீங்க ஸ்டேட்டஸ் அது இதுனு பார்த்துட்டு இருக்கீங்க. பிள்ளைங்களோட சந்தோஷம் அதுலதான் இருக்குனு ஆனதுக்கு அப்புறம் நாம இறங்கி வந்துதான் ஆகணும் சார்."
"ஷாஹித் சார் நீங்க...” என்று அஸாத் உணர்ச்சிவசப்பட,
அவரை ஆசுவாசப்படுத்தியவாறே ஷாஹித், “அஸாத் சார் உங்க பையன் ஒன்னும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலையே? ஒரு பையனா அவன் மனசுல உள்ள ஆசைய சொல்லிட்டான்.
இப்போ ஒரு நல்ல அப்பாவா பையனோட விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. அதை நல்லபடியா செய்யுங்க."
"இதுல நான் செய்யுறதுக்கு என்ன இருக்கு, அதான் அவனே எல்லாம் செஞ்சிட்டானே?"
"ஒரு அப்பாவா நீங்கதான் பொண்ணு வீட்டுக்கு வந்து பேசணும்."
"அதுதான் அவங்க அம்மா போறாளே?"
"அம்மா போனாலும் அப்பா நீங்களும் போகணும் தானே?"
"சார் நீங்க அங்க வந்து சும்மா உட்கார்ந்திருந்தா போதும், மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.” என்று ஷாஹித் அவ்வளவு எடுத்து கூறிய பிறகு தன் பிடியில் இருந்து இறங்கி வந்த அஸாத், இரண்டு மனதாய் அவர்களோடு ஜியாவின் வீட்டிற்கு வந்தார்.
ஜியாவின் இல்லத்தில் திவ்யா தன் கணவர் ஷங்கரிடம், ”திடீர்னு அந்தப் பையனோட அம்மா ஃபோன் பண்ணி இன்னைக்கு வீட்டுக்கு வரோம்னு சொல்லிட்டாங்க, எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல. வரலாமான்னு கேட்டாங்க, நானும் அப்படிக் கேட்டதும் என்ன சொல்லனு தெரியாம வாங்கனு சொல்லிட்டேன். இப்போ என்ன சொல்ல போறாங்கனு நினைக்கும் பொழுது ஒரு மாதிரியா இருக்கு."
"எனக்கு என்னவோ எல்லாம் நல்லதா நடக்கும்னுதான் தோனுது. அவங்க வராட்டா, நானே ஜியா விஷயமா அவங்களைப் போய் பார்க்கணும்னுதான் நினைச்சேன், நீ எல்லாம் ரெடி பண்ணிடல்ல?"
"ஆமா பண்ணிட்டேன்."
"என் மனசுக்கு எதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகுதுனு தோனுது, அதனால நீ இப்படிக் குறுக்கும் நெடுக்கும் நடக்காம இங்க வந்து இப்படி உட்க்காரு.” என்று அவர் கூறவும்,
"உள்ள வரலாமா?” என்றவாறு ஆஷிக்கின் குடும்பத்தினர் வாசலில் நிற்க,
அவர்களுக்கு வணக்கம் சொன்னவாறே திவ்யாவும் ஷங்கரும் வாசல் வரை சென்று, "உள்ள வாங்க ப்ளீஸ், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தோம்.” என்று அவர்களை வரவேற்று தங்களின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
நொடிகள் நிமிடங்களாய் உருண்டோட அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "திடீர்னு வரோம்னு சொல்லிட்டோம், அது உங்களுக்கு ஒன்னும் சங்கடத்தைத் தரலையே?” என்ற ஹாஜராவின் வார்த்தைகள், அங்கு நிலவிக்கொண்டிருந்த மௌன உரையாடலை கலைக்கும் விதமாய் அமைந்தது.
அவரைத் தொடர்ந்து ஷங்கர், "என்ன சொல்றீங்க, நீங்க வர்றது எங்களுக்கு எப்படிச் சங்கடமா போகும்?"
"வீடு ரொம்ப அழகா, ரொம்ப நீட்டா வச்சுருக்கீங்க."
"அதுக்கான க்ரெடிட் என் மனைவிக்குத்தான் போய் சேரும். அவங்களுக்கு எல்லாமே சுத்தமா இருக்கணும், என்ன திவ்யா சொன்ன மாதிரியே சொல்லிட்டேனா?” என்று ஷங்கர் கேலியாய் பேச, அஸாத், ஆதர்ஷைத் தவிர மீதமுள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க,
ஆஷிக், ஆதர்ஷிடம், "டேய் என்னடா சிரிக்காம இருக்க?” என்று யாரும் அறியாமல் கேட்க,
"இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்லையேடா?"
"இல்லாதான், ஆனா நான் சிரிக்கல. நீயும் சிரி, என் மாமனார் கஷ்டப்பட்டுக் காமெடி பண்ணிருக்காரு. என் அத்தை வேற வெட்கப்படுறாங்க, சிரிடா. அவங்க மனசு கஷ்டப்படப் போகுது."
"டேய் உன் மாமனார்காக நீ சிரிடா, நான் ஏன் சிரிக்கணும்? சிரிப்பே வராம சிரிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று முணுமுணுத்தான்.
"அதை நான் பண்ணலை."
"டேய்...” என்று முறைத்த ஆதர்ஷிடம்,
"சிரி...” என்று அன்பு கட்டளையிட்டவாறு தானும் கஷ்டப்பட்டுச் சிரித்தான்.
பரிமாறப்பட்ட பலகாரத்தில் ஒன்றான ரசகுல்லாவை சாப்பிட்ட ஷாஹித், "அட அட... ரசகுல்லா பிரமாதம் போங்க, எங்க வாங்குனீங்க?” என்று கேட்க,
"அட வாங்கலை அண்ணன், இது எல்லாம் வீட்டுலயே செஞ்சோம்.” என்று திவ்யா பெருமையாகக் கூற,
"வீட்லயே செஞ்சீங்களா? என்னால நம்பவே முடியலை. இப்படி ஒரு ருசியான ரசகுல்லாவை நான் எங்கையும் சாப்பிட்டதே இல்லை. தங்கச்சி ஸ்டார் ஹோட்டல் தோத்து போச்சு போங்க, அஸாத் சார் நீங்களும் சாப்பிட்டு பாருங்க ரொம்பப் பிரமாதம்.” என்றவரிடம் அஸாத் கடமைக்காகப் புன்னகைத்துவிட்டு தன் மனைவியைப் பார்த்து ஒரு இறுக்கப் பார்வை பார்த்து வைத்தார்.
ஆஷிக் ஆதர்ஷிடம், "எதுக்கு வந்தமோ அதை விட்டுட்டு எதையெல்லாம் பேசிட்டு இருக்காங்க? ரசகுல்லா இப்போ ரொம்ப முக்கியமாடா? ஏன்டா என்னைப் படுத்துறாங்க.” என்று கடுகடுக்க,
ஆஷிக்கின் முகபாவனையில் இருந்தே அவனது மனதில் உள்ளதை அறிந்துகொண்ட ஹாஜரா, ஒருவித தயக்கத்தோடு ஷங்கர், திவ்யாவை நேருக்கு நேராகப் பார்த்து, "நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே உங்கள பார்க்க வந்திருக்கணும், சில சூழ்நிலை காரணமா என்னால வர முடியலை.
என் பையன் ஆஷிக் உங்க பொண்ணு ஜியாவ ரொம்ப விரும்புறான். எங்களுக்கும் ஜியாவ ரொம்பப் புடிச்சுருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா உங்க பொண்ணு ஜியாவ என் பையன் ஆஷிக்குக்கு கல்யாணம் பண்ணித்தர முடியுமா?
நான் உங்களை வற்புறுத்தல, எனக்குத் தெரியும் நம்ம ரெண்டு குடுபத்துக்கும் இடையிலே மதம் ஒரு பெரிய தடங்கள்தான். ஆனா அதைப் பார்த்தா நம்ம புள்ளைங்களோட சந்தோஷத்தை நிறைவேத்த முடியாம போயிரும். ஜியாவும் ஆஷிக்கை உயிருக்கு உயிரா நேசிக்கிறா. அவங்களோட விருப்பத்துக்கு முன்னாடி வேற எந்தத் தடையும் எனக்குப் பெருசா தெரியலை.
உங்க பொண்ண என் பொண்ணா நான் பார்த்துக்குவேன். உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்க நல்ல முடிவா செல்லுங்க.” என்று அவர் சொன்னதும்,
சந்தோஷத்தில் பூரித்துப் போன ஷங்கர், "இதைப் பத்தி உங்ககிட்ட எப்படிப் பேசுறதுனு நான் ரொம்பவே குழப்பத்துல இருந்தேன். நீங்களே பேசுனது எங்க எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம். எங்களுக்கும் எங்க பொண்ணோட சந்தோஷம்தான் முக்கியம். இதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நாங்க மனப்பூர்வமா சம்மதிக்கிறோம்.” என்று மகிழ்ச்சி ததும்பக் கூறினார்.
"அட இப்போதான் சார் ஆஷிக் முகத்தில சிரிப்பே பார்க்க முடியுது. கங்கிராட்ஸ் ஆஷிக்!” என்ற ஷாஹித் மேலும் தொடர்ந்து, “அப்புறம் ஷங்கர் சார், ஆயிஷாவுக்கும் சமீருக்கும் நாளை மறுநாள் என்கேஜ்மென்ட். அப்படியே கையோட ஏன் நாம ஜியாக்கும் ஆஷிக்குக்கும் பண்ணிற கூடாது? நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்க,
"நீங்க சொன்னதுக்கு அப்புறம் மறுபேச்சே இல்லை சார். எங்களுக்கு முழுச் சம்மதம். ஆனா..." என்று தயங்கிய ஷங்கர், ஷாஹித்தின் வற்புறுத்துதலில் ஒருவித தயக்கத்தோடு,
"வந்ததுல இருந்து அஸாத் சார் எதுவும் பேசாம அப்படியே இருக்காங்க, அதுதான் ஒருமாதிரியா இருக்கு. சாருக்கு இதுல விரும்பம் இருக்கா இல்லையான்னு...” என்று அவர் கூறியதும் இதற்குத்தான் காத்திருந்தது போலப் பெருமூச்சு விட்ட அஸாத்,
"என்ன சார் பண்றது, தகுதி இல்லைதான். ஆனா பையன் விரும்பிட்டானே? என்ன பண்றது? இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எப்படி வாழணும்னு நல்லா தெரிஞ்சிருக்கு. விவரமா இருக்காங்க...” என்றவரின் வார்த்தைகள் அனைவரின் மகிழ்ச்சியையும் ஒருநொடியில் கெடுத்து விட, ஷங்கருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
கோபத்தில் அவர் எதோ பேச வாயெடுக்க அவரைத் தடுத்த திவ்யா பொறுமையாக இருக்குமாறு கூற, ஆஷிக்கிற்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் வந்த இடத்தில் அமைதி காத்தவன், கோபத்தை மிகக் கடினத்தோடு அடக்கியவாறு பொறுமையோடு இருந்தான்.
அவனைச் சீண்டி பார்க்க எண்ணிய அஸாத், “சரி பேசி என்ன பயன், எல்லாம் கைய மீறி போயிடுச்சு. நடக்கப் போறத பத்தி பேசுவோம். இந்தக் கல்யாணம் நடக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. ஜியா எங்க மதம் மாறணும்.” என்று அவர் அழுத்தமாய் கூற,
"ஜியாகிட்ட பேசிட்டுதான் நாங்க எதுவும் சொல்ல முடியும். அவளுக்கு ஓகேனா எங்களுக்கு ஒன்னுமில்லை." என்று திவ்யா கூற,
"இல்லை...” என்று மறுத்த ஆஷிக் மேலும் தொடர்ந்து, “இதுல ஜியாகிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை. யாரும் மாறப் போறதில்லை. லவ் பண்ணும் பொழுதே நாங்க எங்க கல்யாணத்தைப் பத்தி பேசிட்டோம். ஒருத்தருக்கொருத்தர் அப்படியே ஏத்துகிறதுதான் கல்யாணம். நான் வேணும்னா நீ மாறணும்னு சொல்றது சரியில்லை.
அப்படிக் கண்டிப்பா மாறணும்னா ஜியாதான் மாறணுமா என்ன? ஏன் நான் மாறக் கூடாது. பொண்ணுங்கதான் மாறணும், பசங்க அப்படியே இருக்கணும்னா அதுல என்ன நியாயம் இருக்கு.?” என்று அழுத்தமாய் கூறியவன் தன் தந்தையைப் பார்த்து முறைக்க,
"மாறிதான் ஆகணும், இல்லனா என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க முடியாது.” என்று அஸாத் உறுதியாய் கூறிய மறுநொடி,
"என்னுடைய கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க நீங்க யாரு?” என்று ஆஷிக் விழிகளில் கோபம் திமிர அனைவரின் முன்பும் கேட்டான்.
ஆஷிக்கின் இல்லத்தில் அனைவரும் சோகமாக இருக்க, அஸாத்தின் முகத்தில் மட்டும் அப்படி ஒரு மகிழ்ச்சி. கோடி மதிப்புள்ள பிஸ்னஸ் டீலை ஒப்பந்தம் செய்திருந்தால் கூட அவர் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். எதிரியை போர்களத்தில் வீழ்த்திய உவகை அவரது கண்களில் தொணித்தது.
ஒருவித மிடுக்குடன் கோபத்தில் விழிகள் சிவக்க அமர்ந்திருந்த ஆஷிக்கின் அருகில் வந்தவர், "என்ன பண்ண போற ஆஷிக்?” என்று ஏளனமான குரலில் கேட்க, ஆஷிக் அவரைத் தன் பார்வையாலே எரித்தான்.
***
நிலவே 39
"உன்னை இந்த மாதிரி பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு ஆஷிக். அத்தனை பேருக்கும் முன்னாடி அந்தப் பெண்ணுக்காக என்னை அசிங்கப்படுத்துனல, இன்னைக்கு அவ வீட்டாளுங்க முன்னாடி நீ அசிங்கப்பட்டு நிக்குற. என்னை நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாதான் பொண்ணைத் தருவேன்னு அவங்க சித்தப்பா சொல்லிட்டானே, என்ன பண்ண போற ஆஷிக்?
என்னை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போற? என் கால்ல விழுவியா? ஆஷிக்கோட ஈகோ அதுக்கு ஒத்துக்குமா? என் மனசுல இருந்து சொல்றேன், எனக்கு உண்மையாவே உன்னைப் பார்த்தா ரொம்பவே கஷ்டமா இருக்கு, ஐ ரியலி மீன் இட்.
நமக்குப் புடிச்ச பொருள் நம்ம கண்ணு முன்னாடியே நமக்கு இல்லாம போறது கஷ்டமா இருக்குல்ல, அதே மாதிரிதான் ரொம்ப ஈஸியா நீ என்கிட்ட ஐம்பது கோடி குடுனு கேட்டியே, அப்போ எனக்கு இருந்துச்சு. உன்னை எங்க அடிச்சா வலிக்கும்னு நினைச்சுகிட்டே இருந்தேன், அதுவா அமைஞ்சிருச்சு. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்.
அப்புறம் ஆஷிக், என்கிட்ட எப்படிலாம் கெஞ்சணுமோ சீக்கிரமா கெஞ்சிறு. ஏன்னா ஆயிஷா என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் ஒரு முக்கியமான பிஸ்னஸ் டீலிங்க்காக நான் ஃப்ரான்ஸ் போறேன். அப்புறம் நீ என்னைப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டமாகிரும், வர்றதுக்கு நாளாகும். ஏன் சொல்றேன்னா அதுக்குள்ள ஜியாவுக்கு அவளோட வீட்ல வேற இடத்துல கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்கன்னா? அதான் சொல்றேன்.
உன் முகத்துல இன்னும், 'ஈகோ, திமிரு, கொழுப்பு, ரோஷம்' எல்லாம் தெரியுதே? என்கிட்ட கெஞ்ச வரும் பொழுது இதெல்லாத்தையும் தூக்கி போட்ரு. எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது. பாய் ஆஷிக்! ஆல் த பெஸ்ட்!” என்றவர் அவனை ஏளன பார்வை பார்த்தபடி கடந்து சென்றார்.
தன் கண்களில் கோபம் தெறிக்க ஆஷிக் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து தன் நடையைச் செலுத்தினான்.
"ஆஷிக் ஆஷிக்...” என்று ஹாஜரா எவ்வளவோ அழைக்க, அது எதையுமே தன் காதில் வாங்காதவன் ஜியாவின் இல்லத்தில் நடந்ததை நினைத்துக்கொண்டே நடந்து சென்றான்.
'என்னுடைய கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க நீங்க யாரு' என்று ஆஷிக் கேட்ட கேள்வியை நன்கு கட்டியாகப் பிடித்துக் கொண்ட அஸாத், “நான் அப்பாடா."
"அந்த ஸ்தானத்தை நான் உங்களுக்கு என்னைக்குமே கொடுத்தது இல்லை."
"அப்போ வேற யாருக்குக் குடுத்திருக்க? உன் அம்மாக்கு நான் தானே ஒரே புருஷன்? இல்லை வேற யாரும் இருக்காங்களா?” என்று அவர் வார்த்தையால் கொட்டிய விஷம் ஆஷிக்கின் உடம்பில் சீறிப்பாய, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த தன் உணர்ச்சிகளைக் காற்றில் பறக்க விட்டவன்,
"ஹவ் டேர் யு..." என்று தன் பற்களைக் கடித்தவாறு ஆஷிக் அஸாத்தின் சட்டையைப் பிடித்து, தன் கரங்களை முறுக்கியவாறு அவரது முகத்தில் ஓங்கி குத்த போக, அவனது கரத்தை பிடித்துத் தடுத்த ஷங்கர், “ஆயிரம்தான் இருந்தாலும் அவர் உங்களோட அப்பா. உங்க அப்பா கூட உங்களுக்குச் சரியான உறவு இல்ல போலையே? எனக்கு எதுவும் சரியாபடல. முதல்ல உங்க அப்பாவ சம்மதிக்க வச்சுட்டு வாங்க, அப்புறம் கல்யாணத்தைப் பத்தி பேசிக்கலாம்.
உங்க அப்பாவோட சம்மதம் இல்லாம என்னால ஜியாவை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி தர முடியாது.” என்று ஷங்கர் தன் முடிவைத் தெரிவித்தார்.
"அதை ஜியா சொல்லட்டும்.” என்று ஆஷிக் பிடிவாதம் பிடிக்க,
"இல்லை, உங்க அப்பாவ சம்மதிக்க வைங்க. இப்படி அப்பாவும் பையனும் சண்டை போட்டுட்டு இருந்தா, அங்க என் பொண்ணு எப்படிச் சந்தோஷமா இருப்பா? முதல்ல உங்க கோபத்தைக் குறைங்க, உங்க வீட்ல உள்ள பிரச்சனைய சரி பண்ணுங்க.” என்றவர் பிடிவாதமாய் கூற, அவரது பிடிவாதம் ஆஷிக்கின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.
இதற்கு மேல் விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்த ஹாஜரா, ஆஷிக் கோபத்தில் எதுவும் செய்து விடுவானோ என்கின்ற பயத்தில், ஜியா வந்தால்தான் அங்கிருந்து செல்வேன் என்று பிடிவாதமாய் இருந்தவனை வலுக்கட்டாயமாக அழைத்து இல்லை இழுத்து சென்றார்.
அவர்கள் வந்த நேரம் ஜியா வெளியே போயிருந்ததால், அவளுக்குத் தன் வீட்டில் நடந்த கலவரம் எதுவும் தெரியாது. தங்கையுடன் இரவு வீடு திரும்பியவளிடம் ஷங்கர், “ஜியாமா சித்தப்பா உன்கிட்ட கேட்காம, நீ தப்பா நினைக்க மாட்டனு நம்பி ஒரு முடிவு எடுத்திருக்கேன்."
"நான் ஏன் உங்களை தப்பா நினைக்க போறேன். சொல்லுங்க சித்தப்பா என்ன முடிவு?” என்று கேட்க,
"எனக்குத் தெரியும்டா, எங்க என் முடிவ நீ ஏத்துக்காம போயிருவியோனு உன் சித்திதான் பயந்துட்டா.” என்றவர் இன்று நடந்த அனைத்தையும் கூற, அதிர்ச்சியில் கண் கலங்கி நின்றவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.
"என்னாச்சு, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனாமா?” என்ற ஷங்கரிடம், ஜியா பதில் பேசாமல் தன் கைகளைப் பிசைந்தவாறு நிற்க, "என் முடிவுதான் உன் முடிவுனு தெளிவா சொல்லிட்டேன்மா. உனக்கு எந்த வருத்தமும் இல்ல தானே?” என்று கேட்க,
ஏற்கனவே ஆஷிக்கை விட்டு பிரிய வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தவள், தன் சித்தப்பாவின் மனதையும் காயப்படுத்த விரும்பாதவள், அவரிடம் தன் மனதில் உள்ள எண்ணத்தை மறைத்து அவரது முடிவில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினாள்.
காலை ஒரு எட்டு மணியளவில் ஆதர்ஷ் ஒருவித தயக்கத்துடன் ஆஷிக்கிடம், "நல்லா யோசிச்சுட்டியாடா, எல்லாம் சரியா வருமா? எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ நல்லா...” என்று முடிப்பதற்குள்,
"எல்லாம் பண்ணிட்டல?” என்று ஆஷிக் கூறியதில் இருந்தே அவன் தான் கூறிய எதையும் கேட்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தவன், இனி தான் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதையும் நன்கு புரிந்துகொண்டான்.
அவர்கள் பேசி கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த ஜியா, "என்ன ஆஷிக் திடீர்னு ஃபோன் பண்ணி, புதுசா பிள்ளையார் கோவிலுக்கு வர சொல்லிருக்க? ஏன் வர சொன்ன, நீயும் ஆதர்ஷும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்கவும்,
ஆதர்ஷ், "ஒரு ஃபோன் பண்ணணும், இதோ வந்திடுறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல,
"என்னாச்சு, ஆதர்ஷ் ஏன் ஒரு மாதிரியா இருக்கான்? நீ ஏன் எதுவும் பேசமாட்டிக்கிற? ஃபோன்ல எதோ முக்கியமா பேசணும்னு சொன்ன?"
"முக்கியம்தான்...” என்று இழுத்த ஆஷிக்கிடம்,
"என்னது ஆஷிக்?” என்று வினவியவளின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தவன்,
"இன்னைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்.” என்று கூற, ஜியாவிற்கோ அது பேரதிர்ச்சியாக இருந்தது.
"என்ன ஆஷிக் சொல்ற?"
"என்னன்னா எனக்குப் புரியலை, நான் என்ன புரியாத பாஷையா பேசுறேன்?"
"ஆனா இது எப்படி நடக்கும்?"
"இப்போ இந்த நிமிஷம் நம்ம கல்யாணம் நடக்கும், நடக்கணும், நடந்தே ஆகணும்.” என்றவனின் வார்த்தைகளில் அப்படி ஒரு உறுதி.
"சித்தி, சித்தப்பா...” என்று தயக்கத்துடன் கூறிய ஜியாவிடம் கர்ஜித்தவாறு,
"உன் சித்தி, சித்தப்பாகிட்ட கேட்டா என்னை லவ் பண்ணின? என்ன எல்லாரும் என்னை வச்சு விளையாடிட்டு இருக்கீங்களா? இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் உன்னை விரும்புறேன், நீ என்னை விரும்புற. கல்யாணம் பண்ணி வைக்கிறத விட்டுட்டு என் அப்பாவை சமாதானம் பண்ணு, ஆட்டுக்குட்டியை சமாதானம் பண்ணுனு உன் சித்தப்பா கதை சொல்லிட்டு இருக்காரு.” சிடுசிடுக்க,
"ஆஷிக் கொஞ்சம் பொறுமையா இரு..."
"ஜியா எதுவும் பேசாத, உனக்காக நூறு வருஷம் கூட என்னால பொறுமையா இருக்க முடியும். ஆனா அதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. ஏன்னா அப்போ உன்னை நான் நம்புனேன், இப்போ எனக்கு உன்மேல அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது. நேத்து அவ்வளவு நடந்திருக்கு, உன் வீட்ல சொல்லாமலா இருந்திருப்பாங்க?
நீ ஒருவார்த்தை கூட நீ எனக்குப் ஃபோன் பண்ணி பேசல. நீ இப்போலாம் சரியே இல்லை, நானா வந்தாலும் விலகி விலகி போற. என் மேல உள்ள கோபத்துல இவ்வளவு நாள் அப்படி இருந்த ஓகே, ஆனா ரெண்டு பேருக்கும் உள்ள ப்ராப்ளம் தீர்ந்த பிறகும் நீ இப்படி என்னை விட்டு விலகி விலகி போறது, எனக்கு உன் மேல உள்ள நம்பிக்கைய மெல்ல மெல்ல குறைக்குது. எங்க உன் சித்தப்பா பேச்ச கேட்டுட்டு, நீ மறுபடியும் என்னை விட்டுட்டு போயிருவியோனு பயமா இருக்கு."
"ஆஷிக் நான் சொல்றத கொஞ்சம் கேளு..."
"கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் என்ன வேணும்னாலும் சொல்லு, நான் கேட்டுக்கிறேன்."
"ஆஷிக் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?"
"நீதான் புரிஞ்சிக்க மாட்டிக்கிற."
"ஆஷிக்..."
"ஜியா இப்போ நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கில் வருவாரு, அவர் முன்னாடி மாலைய மாத்திக்கிறோம். எல்லாம் ஒரு ஐ விட்னஸ்க்காகத்தான், அப்புறம் நாம ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். இந்தக் கல்யாணம் எல்லாம் இந்த ஊர் உலகத்துக்காகத்தான். மத்தபடி என் மனசுல நீ என் மனைவியாதான் வாழ்ந்துட்டு இருக்க.” என்றான் மிக உறுதியாக.
"இவ்வளவு ஏற்பாடு பண்ணிருக்க, என்கிட்ட எதுவுமே கேட்கல?"
"என்ன கேட்கணும், நீ என்னை லவ் பண்ற, நான் உன்னை லவ் பண்றேன். வீட்ல பேசுனோம் ஒத்துவரல, அதனால இப்படிக் கல்யாணம் பண்றோம். இதுல கேட்க என்ன இருக்கு?"
"இதுதான் உன் முடிவா?"
"ஆமா"
"என்னால திருட்டுக் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது, இது வேண்டாம்.” என்றவள் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து, “உன் அப்பா சொல்றதும் சரிதான், நான் உனக்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவ. பேசாம நீ உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து...” என்று அவள் முடிப்பதற்குள்,
"ஷட் அப்!” என்று உரக்க கத்தியவன், அவளது கரம் பிடித்துத் தன் பக்கம் திருப்பி,
"என்ன பேசிட்டு இருக்கோம்னு தெரிஞ்சிதான் பேசுறியா?"
"ஆஷிக் கோபப்படாம நான் சொல்றத கேளு, நாம சேர்றது யாருக்கும் புடிக்காத அப்போ, நாம சேர்ந்துதான் எதுக்கு..."
"அப்போ இந்த ஆஷிக் உனக்கு வேண்டாம்?"
"இந்த ஜியா உனக்கு வேண்டாம், நீ நல்ல பொண்ணா..."
"போதும்... என்னை வேண்டாம்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இருக்கு, ஆனா நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லுற ரைட்ஸ் உனக்குக் கிடையாது. நான் வேண்டாம்ல, ஆஷிக் வேண்டாம்ல, போறேன்... இனிமே நான் யாருக்கும் கிடைக்க மாட்டேன்.” என்று கலங்கியவனைத் தடுத்தவள்,
"ஆஷிக் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?"
"புரிஞ்சிக்க என்னடி இருக்கு, நீதான் வேணும்னு உருகிட்டு இருக்கேன். ஆனா நீ அதைப் புரிஞ்சிக்காம என்னை வேண்டாம்னு சொல்ற. அப்போ நான் ஏன் வாழணும்?” என்றதும் அவனது இதழை தன் கரத்தால் மூடியவள்,
"நீ ஏன் சாகணும்? நான்தான் சாகணும். நான் செத்து போறேன், எப்பவும் உனக்குக் கஷ்டத்தை மட்டும்தான் கொடுக்கிறேன். வாழுறதுக்கான தகுதியே இல்லாத நான்தான் சாகணும். எல்லாருக்கும் என்னால கஷ்டம். வீட்ல உள்ளவங்களுக்குக் கஷ்டம், உனக்குக் கஷ்டம். நான் கஷ்டப்பட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன். யாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியாத அதிர்ஷ்டம் கெட்டவ...” என்று ஜியா கண்ணீர் மல்க ஏதேதோ பேச அவள் அழுவதைத் தாங்க இயலாதவன்,
"ஜியா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, நீ என் ஏஞ்சல்! நீதான் என் சந்தோஷம்!" என்று சமாதானம் கூற,
"இல்ல ஆஷிக், என்னை இவ்வளவு நேசிக்காத, அதுக்கு எனக்குத் தகுதி இல்லை. என்னால உனக்குக் கஷ்டம் மட்டும்தான் குடுக்க முடியும். நீ நல்லா இருக்கணும், நான் இருந்தா உனக்குப் பிரச்சனைதான். உனக்குச் சந்தோஷமே இருக்காது. நான் போயிடுறேன், செத்து போயிடுறேன், நீ நல்லா இரு.” என்றதும் எரிச்சல் அடைந்த ஆஷிக் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, எவ்வளவோ அவளைச் சமாதானம் செய்ய முயற்சித்தும்,
ஜியா, "நான்தான் சாக வேண்டியவ, உன் காதலை புரிஞ்சிக்காம உன்னைச் சந்தேகப்பட்டு ச்ச... எனக்கு என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு.” என்று அவன் கூறியதை கேட்கமால் தான் சொல்லியதையே மீண்டும் மீண்டும் கூறி, “நான் செத்து போறேன்..." என்று அடுத்த அடி எடுத்து வைத்தவளிடம் ஆஷிக்,
"செத்து போ...” என்று கூற, அவனிடம் இருந்து அப்படி ஒரு பதிலை ஏதிர்பாராதவள் அவனை ஆச்சரியமாய் பார்க்க, அவள் கிரகிக்கும் முன்பே அவளது கரம் பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டவன்,
"அதுக்கு முன்னாடி உன்னை மாதிரி...” என்று காதோரத்தில் ரகசியம் பேசி, அவள் இமைக்கு நொடி பொழுதில், அசைந்தாடி கொண்டிருந்த அவளது ஒற்றை இதழை தன் இதழால் வளைத்து பிடித்து, மேவும் கலைஞனை போலத் தன் அதரம் என்னும் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினான்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 40 & 41

Last edited: