- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 4
ஜியா கோபமாகத் தன்னைப் பார்ப்பதை கவனித்த ஆஷிக் வேண்டும் என்றே அவளை வம்பிழுப்பதற்காக, தன் இதழில் விஷமம் ததும்ப,
"என்ன சந்தீப் சார், ரொம்ப ஹாட்டா இருக்கே?"
"ஆமாப்பா, லைட்டா எனக்கும் அப்படித்தான் இருக்கு, ஏசி சர்வீஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்."
"ஷப்பப்பா... அங்க இருந்து பார்த்தா அனல் இங்க அடிக்குது.” என்று அவன் கூறிய பின்பு, அவருக்கு அவன் ஜியாவை வம்பிழுப்பது புரிய,
அவர், ”ஆஷிக், அப்படிலாம் சொல்லாதீங்க. ஜியா மும்பையில உள்ள பெரிய காலேஜ்ல எம்பிபிஸ் முடிச்சுட்டு, லண்டன்ல பெரிய யூனிவர்சிட்டில ஸ்காலர்ஷிப்ல ஹார்ட்க்கான ரிசெர்ச் முடிச்சுட்டு, அங்க குடுத்த வேலைய வேண்டாம்னு சொல்லிட்டு, நம்ம ஊருக்கு சேவை செய்ய வந்திருக்காங்கப்பா.” என்று மூச்சு விடாமல் அவர் சொல்லி முடிக்க,
கொஞ்சம் கூட அலட்டிக்காதவன் மிகவும் இயல்பாக அதே விஷம புன்னகையோடு, "பார்த்தீங்களாடா, ஹார்ட்டே இல்லாதவங்கலாம் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டாம்? செம காமெடியா இருக்குல்ல... மே பீ இவங்க லண்டன்ல மத்தவங்க ஹார்ட்ட எப்படி எல்லாம் டிசைன் டிசைனா உடைக்கலாம்னு ரிசெர்ச் பண்ணிருப்பாங்கனு நினைக்கிறேன், நீங்க என்னடா சொல்றீங்க?” என்றவனைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ்,
"ஷட் அப் ஆஷிக்!” என்று கூற,
"ஓகே நான் எதுவும் சொல்லலப்பா...” என்று தன் வாயை மூடுவது போல செய்கை செய்ய,
மிகவும் தர்மசங்கடத்தில் இருந்த சந்தீப், அசடு வழிந்த புன்னகையோடு, “ஜியா, ஆஷிக் எப்பவுமே அப்படித்தான் விளையாட்டா ஏதாவது சொல்லுவாரு, ஆனா மனசுல எதுவும் இருக்காது.” என்று சமாளிக்க, ஜியா அதற்கு பதில் எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கூறினாள்.
ஆதர்ஷ் தன் பங்கிற்கு, “ஜியா அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்றான், உனக்குத்தான் அவனைப் பத்தி தெரியுமே?"
"இட்'ஸ் ஓகே ஆதர்ஷ், கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பார்க்கலாமே?” என்றவள், ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, சிரித்துக் கொண்டே இருந்த ஆஷிக் திடீரென்று மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு ரோஹித்தின் தோளில் சாய்ந்தவாறே கீழே விழுந்தான்.
அவன் விழுந்ததைக் கண்டதும் ஆங்காங்கே இருந்த அனைவரும் கூட்டம் கூடினர், ரோஹித் பதறி போய் ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய, ஆஷிக்கோ பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தான். இதைக் கண்ட ஜியா பதறி போய் அவன் அருகில் வந்து அவனை எழுப்ப முயற்சி செய்ய எந்தப் பயனும் இல்லை.
ஜியா தனது இரு கரங்களைக் கொண்டு அவனது நெஞ்சை அழுத்த அப்பொழுதும் எந்தப் பயனும் இல்லாமல் போக, அவள் செய்வதறியாமல் நின்றாள். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவன், "ஐ திங்க் ஹீ நீட் ஸிபிஆர்” (CPR) என்று கூற,
ஒரு நொடி என்ன செய்வது என்று யோசித்த ஜியா, பின்பு பல்லைக் கடித்துக் கொண்டு அவனது உயிரை காப்பாற்றுவதற்காக, அவனுக்கு ஸிபிஆர் கொடுக்க முடிவு செய்து,
ஆஷிக்கின் இதழ் நோக்கி குனிந்தவள், அவனுக்கு ஸிபிஆர் முறைப்படி முதலுதவி கொடுக்க, ஆஷிக்கோ தன் ஒற்றைக் கண்ணைத் திறந்தவாறு கண் விழித்து ஆதர்ஷ், ரோஹித் மற்றும் சுத்தி இருந்தவர்களைப் பார்த்து கண்ணடிக்க,
அனைவரும் சிரித்தனர். ஆதர்ஷ், ரோஹித் மட்டும் ஆஷிக்கை பார்த்து முறைக்க, என்னது, ஏன் அனைவரும் சிரிக்கிறார்கள் என்று நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்த ஜியாவிற்கு ஒன்றும் விளங்காமல் போக, கீழே இருந்த ஆஷிக்கைப் பார்க்க, அவனோ அவளைப் பார்த்து சிரித்தவாறு கண்ணடித்தான். தன்னிடம் விளையாடுகிறான் என்று உணர்ந்தவள் சட்டென்று எழும்பி,
‘இன்னும் எவ்வளவு தான்டா என்னை அழ வைக்கப் போற? ஆனா அழுறதுக்கு என் மனசுலையும் தெம்பில்லை, என் உடம்புலையும் தெம்பில்லை.’ என்று தன் மனதிற்குள் விம்மியவள், கண்களில் நீர் முட்ட அங்கிருந்து சென்றாள்.
"ஜியா ப்ளீஸ்...” என்ற மேனேஜர் ஆஷிக்கிடம், "என்னப்பா எப்போ எதுல விளையாடணும்னு உனக்குத் தெரியாதா? அதுவும் ஒரு பொண்ணுக்கிட்ட போய்...” என்றவர், தன் வருத்தத்தை ஆஷிக்கிடம் கூறிவிட்டு, ஜியாவை சமாதானம் செய்ய அங்கிருந்து சென்றார்.
ஆதர்ஷ், ரோஹித் இருவரும் அவனைப் பார்த்து முறைத்தவாறு அங்கிருந்து செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ஆஷிக், "டேய் எங்கடா என்னை விட்டுட்டு போறீங்க? நில்லுங்க.” என்றவாறு அவர்களைத் தடுத்தவன், "என்னடா கூப்பிட்டுட்டே இருக்கேன், நீங்க என்னனா எங்களுக்கு என்ன வந்ததுனு போயிட்டே இருக்கீங்க?"
"வழிய விடுடா.” என்ற ஆதர்ஷிடம்,
"ஏன்?"
"ஆஷிக், நாங்க கோபமா இருக்கோம்.” என்று ரோஹித் கோபமாய் கூற,
"அதுதான் ஏன்?"
"ஏன்டா அப்படி பண்ணின? ஜியா உன் மனசை காயப்படுத்திருக்கா, அதனால எனக்கு அவ மேல கோபம்தான். ஆனா அதுக்காக இப்போ நீ பண்ணினதை என்னால ஏத்துக்க முடியாதுடா. நீ...” என்று தொடர்ந்த ரோஹித்தை தடுத்த ஆதர்ஷ்,
"இவன்கிட்ட ஏன்டா இதெல்லாம் சொல்ற? சார் பெரிய மகான் ஆகிட்டாரு. ஆமா லவ் பத்தி எல்லாருக்கும் அவ்வளவு அட்வைஸ் பண்ணுவ, இதுதான் உன் லவ்வா? அவதான் உன் மனசை உடைச்சா, நீ உண்மையா தானே காதலிச்ச? அப்போ நீ ஏன் அவள் மனசை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிற? நான் ஒன்னு கேட்குறேன், உனக்கெல்லாம் அறிவுனு ஒன்னு இருக்கா, இல்லையா?
ஒரு பொண்ணை இப்படியா எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ணுவ? பாவம்டா அழுதுட்டே போறா. விளையாடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு ஆஷிக். இனிமே எல்லாரும் அவளைப் பார்த்தா சிரிக்க மாட்டாங்க?"
"டேய் இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் அவ சைட் எடுக்குறீங்க?"
"இதுல யாரு யார் பக்கம் நிக்குறாங்க என்பது முக்கியம் இல்லை, நடந்த விஷயத்தைப் பாரு. நீ டக்குன்னு விழுந்தது பார்த்து நானும் ரோஹித்தும் எவ்வளவு பதறிப்போயிட்டோம் தெரியுமா? எதுல விளையாடுறதுனு ஒரு அறிவு வேண்டாம். இனிமே எல்லாரும் அவளைப் பார்த்தா சிரிக்க மாட்டாங்க? ஒரு மாதிரியா பார்க்க மாட்டாங்க? அவளுக்கு மத்தவங்களை பேஸ் பண்ண கஷ்டமா இருக்காது? ஒன்னும் கேக்குறேன், எப்போவும் ஷீ ஐஸ் மை கேர்ள் அவ எனக்கு மட்டும் தான்னு கர்வத்தோட சொல்லுவியே, அந்தக் கர்வம் இன்னைக்கு எங்கடா போச்சு? உன் கேர்ள நாலு பேர் தப்பா பார்த்து, தப்பா சிரிச்சா உனக்கு ஓகேவா?"
"ஐ டோன்'ட் கேர்.” என்று சிறு தடுமாற்றத்தோடு சொல்ல,
"அப்படியா அதை அப்படியே என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க சார்.” என்று இடைவெளி விட்டவன் அசட்டு சிரிப்புடன், "எனக்கு அவளைப் பிடிக்காது, அவளுக்கு என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லன்னு சொல்லி, உன்னை நீ வேணும்னா ஏமாத்தலாம். ஆனா என்னை இல்லை.
இப்போ வரை அவளை மறக்க முடியாம நீ எவ்வளவு கஷ்டப்படுறனு எனக்கு நல்லாவே தெரியும். பார்ட்டி, பப், பொண்ணுங்கனு சுத்திட்டு திரியிறியே, இதெல்லாம் நான் அவளை மறந்து மூவ் ஆன் பண்ணி, எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு காட்டுறதுக்காக, இந்த உலகத்துக்கு முன்னாடி நீ போடுற வேஷம்னு எங்களுக்குத் தெரியாதா? எங்க நான் சொன்னது எல்லாம் பொய்னு நெஞ்சுல கை வச்சு சொல்லு பார்ப்போம்.” என்று ஆதர்ஷ் கடிந்து கொண்டிருக்க, அவர்களோடு பணி புரியும் சக பைலட் ஒருவன் அவர்களிடம் வந்து,
"டேய் ஆஷிக், நீ இன்னைக்குக் கலக்கிட்டடா. செம போ...” என்று கூற,
ஆதர்ஷ் எரிச்சலோடு ஆஷிக்கைப் பார்க்க, "சும்மாதான், நாம அப்புறமா பேசுவோமே...” என்று ஆஷிக் மழுப்ப,
"பேசுவோம்டா, ஆனா உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கும் அப்படிப் பண்ணணும்னு ஆசை வந்திருக்கு, ஷீ இஸ் ஹாட் மேன்!” என்று கூற,
கோபமுற்ற ஆஷிக் அவனது சட்டையின் காலரை பற்றிக்கொண்டு, "ஹவ் டேர் யு? மைண்ட் யுவர் லாங்குவேஜ்?” என்று கூற, அவன் பதிலுக்கு ஆஷிக்கின் சட்டையைப் பிடிக்க, ரோஹித் அவர்களைக் குறுக்கிட்டு சமாதானம் செய்து அந்தப் பைலட்டிடம்,
ப்ளீஸ்டா விடு, அவன் கொஞ்சம் டென்ஷனா இருக்கான். ப்ளீஸ் இதை இப்படியே விட்ரு.” என்று அவனை அனுப்பி வைக்க,
ஆஷிக், "கொழுப்பை பார்த்தியாடா? இவனை எல்லாம் விட்டு வைக்கவே கூடாது.” என்று எகிற,
ஆதர்ஷ், "ஏன் இப்போ அவன் அப்படி என்ன பண்ணிட்டான்? நீ பண்ணினதை விட அவன் பெருசா எதுவும் பண்ணல. அவன் பேசுனது தப்புனா, நீ பண்ணினது அதைவிடப் பெரிய தப்பு."
"டேய் ஆதர்ஷ், ரோஹித் நில்லுங்கடா..."
"அவளைச் சமாதானம் பண்ணிட்டு எங்ககிட்ட வா, கீழே பார்க்கிங்ல வெயிட் பண்றோம்.” என்றவன் ரோஹித்துடன் அங்கிருந்து செல்ல,
ஆதர்ஷ் கூறியதையும் ஜியா அழுததையும், தன் பழைய நினைவுகளையும், தனக்குள் சில நொடிகள் நினைத்து பார்க்கும் பொழுதே ஆஷிக்கின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிய, வடிந்த கண்ணீரைத் துடைத்தவனின் கால்கள் ஜியாவைத் தேடி தன் நடையைச் செலுத்தியது.
***
நிலவே 5
அவள் எங்குத் தேடியும் கிடைக்காமல் போக, அவனையும் அறியாமல் அவன் நெஞ்சினில் சிறு அச்சம் ஆட்கொள்ள, தன் மடத்தனமான செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவன்,
இத்தனை நாள் நீ இல்லாத ஒவ்வொரு பொழுதையும், நம்மளோட பழைய நினைவுகளை நினைச்சு நினைச்சு வாழ்ந்துட்டு வந்தேன். இப்போ மறுபடியும் என் முன்னாடி வந்திருக்க, நீ வந்துட்டனு சந்தோஷப்படவா இல்லை, என்னை நீ விட்டுட்டு போனதை நினைச்சு கோபப்படவா? இல்லை எங்க மறுபடியும் என் மனசை உடைச்சுருவியோனு பயப்படவா? கொல்றியேடி! என்று தவித்தவனின் கண்களுக்கு விருந்தாக,
ஜியா லேடிஸ் வாஷ் ரூமில் இருந்து வெளியே வருவதைக் கண்டவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். சில நொடிகள் தன்னிடம் இல்லாத உயிர் மீண்டும் தன்னிடமே வந்ததாய் உணர்ந்தான். தன் தவிப்பை மறைத்துக்கொண்டு அசட்டுச் சிரிப்பைக் கஷ்டப்பட்டு வரவழைத்து அவள் அருகில் செல்ல, அவனைப் பார்த்து முறைத்த ஜியா அங்கிருந்து செல்ல முற்பட,
அவளது கரம் பிடித்துத் தடுத்தவன், "நான் கொஞ்சம் பேசணும்."
"உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை, ஸோ என் கையை விடு."
"முடியாது"
"ஆஷிக் இப்போ நீ மட்டும் என் கையை விடல, நான் கத்தி ஊரை கூட்டுவேன்."
"கத்தாத, எல்லார் முன்னாடியும் ட்ராமா வேண்டாம்.” என்று அவன் கூற,
அவள் அதே கோபத்தோடு இருக்க, "சரிம்மா, தாயே சாரி! போதுமா? உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்.” என்று கெஞ்சாத குறையாய் கேட்க,
"என்ன?" என்று அவனது முகத்தைக் கூடப் பார்க்காது கூறியவளைப் பார்த்து தனக்குள், "திமிரு பிடிச்சவ” என்றவன்,
"சொல்றேன் வா."
"எங்க கூட்டிட்டு போற?"
"பேசணும்ன்னு சொன்னேன்ல?"
"இங்கேயா? அதுவும் ஜென்ட்ஸ் டாய்லெட்க்குள்ள? என்னால வர முடியாது."
"லேடிஸ் வாஷ் ரூமுக்குள்ள என்னாலையும் வர முடியாது."
"அப்படியா? இதுக்கு முன்னாடி சார் வந்ததே இல்லை?” என்று கூற, இருவரையும் அவர்களது பழைய நினைவுகள் சூழ்ந்து கொண்டது.
***
அப்பொழுது ஆஷிக் தன் மருத்துவப் படிப்பை இரண்டாம் ஆண்டுப் பாதியிலேயே விட்டுவிட்டு, ஆதர்ஷ் படிக்கும் கல்லூரியில் ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் சேர்ந்திருந்தான்.
ஜியா வாஷ்ரூமில் தன் முகத்தைக் கழுவி கொண்டிருக்க, அவள் பின்னால் எதோ உருவம் இருப்பது போல் தோன்ற, சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் கண்ணாடியில் ஆஷிக் தெரிய, “ஆ...” என்று கத்த, அவனோ தன் கரம் கொண்டு அவளது இதழை மூடி,
"கத்தாதடி, நான்தான்."
"நீ இங்க என்ன பண்ற?"
"ஏன் என் ஃபோனை எடுக்கல?"
"அதான் நான் வேண்டாம்னு சொல்லிட்டியே, நான் ஃபோன் எடுத்தா என்ன, எடுக்காட்டா என்ன?"
"சரி நான்தான் சொன்னேன், நீயும் அதுக்கு ஓகேன்னு சொன்னல?"
"கோபத்துல சொல்லிட்டேன், ம்ம்... நீ ஓகே சொன்னது மட்டும் சரியா?"
"நீ வேண்டாம்னு சொன்ன, நான் ஓகேன்னு சொன்னேன்.” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய,
"அழாதடி, நீ அழுதா என் மனசை அப்படியே கசக்கி பிழியுற மாதிரி இருக்கு. ப்ளீஸ் அழாத, தப்புதான். கமிட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு சொன்னது ரொம்பத் தப்பு, சாரி சரியா? உன்னைக் காதலிக்கிறதே உன்கூட ஒன்னா சேர்ந்து வாழத்தான்டி. நான் இப்போதைக்கு நம்மளோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கலைனு சொல்றதுக்குப் பதிலா, மொத்தமா கமிட்மென்ட் வேண்டாம்னு சொல்லிட்டேன். அன்னைக்கு வீட்ல அப்பா நான் MBBS பாதிலையே விட்டுட்டேன்னு ரொம்ப டென்ஷன் பண்ணிட்டு இருந்தாரு. அந்தக் கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன், நீ வேற நிலைமை தெரியாம கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருந்த."
"பேசுனேன், ஆனா இப்போவே பண்ணுன்னா சொன்னேன்? வீட்ல சித்தி, சித்தப்பா பேசுனாங்க, அதான் சின்னப் பயத்துல உன்கிட்ட சொன்னேன். நீ இப்படிச் சொல்லிட்ட?” என்று செல்லமாய் கோபித்தவளின் முகத்தைத் தன் கையில் ஏந்திக்கொண்டு,
"சாரிடா என் செல்லம்!"
"ஒன்னும் வேண்டாம், நீ என்னை வேண்டாம்னு சொன்னதும் எவ்வளவு அழுதேன் தெரியுமா?” என்று சிணுங்கியவளை ரசித்தவன்,
"அச்சோ என் செல்லத்தை அழ வச்சுட்டேனா? ம்ம்... என்ன பண்ணலாம்?” என்றவன், தன் கையில் ஏந்திய தன்னவளின் முகத்தில் வழிந்த கண்ணீரை உற்று நோக்கி,
"உன் கண்ணில் இருந்து கண்ணீர் வர்றது இதுதான் கடைசியா இருக்கணும், இனிமே கண்ணீருக்கு இடமே இல்லை.” என்றவாறு தன் இதழால் அதைத் துடைத்தான். அவனது இதழ் முற்றுகையிட்ட நேரம் அவனது மீசை அவளது கன்னத்தில் குறுகுறுக்க, சிரிப்போடு சிணுங்கியவள்,
"போதும்...” என்று வெட்கப்பட,
"ஏன்?” என்று குறும்பாய் கேட்டவனின் நெஞ்சில் செல்லமாய் குத்தியவள் அவன் மார்போடு சாய்ந்து கொள்ள, மெல்ல அவளது கேசத்தை வருடினான்.
"ஜியா உன்னோட குடும்பம் மாதிரி என் குடும்பம் கிடையாது. என் வாழ்க்கையில நிறையா காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. என்னோட அப்பா எப்பவும் அவரு முடிவுக்கு என்னைக் கட்டுப்பட வைக்கிறாரு, அதை என்னால தட்டவும் முடியல. மாட்டேன்னு சொன்னா என் மேல உள்ள கோபத்தை என் அம்மாகிட்ட காட்றாரு, என் அம்மா பாவம். இத்தனை நாளா நான் என் வாழ்க்கைக்கு என்ன தேவைனு தெரியாம அந்த ஆளு சொன்னதைக் கேட்டு நடந்துகிட்டேன். இப்போதான் எனக்கு என்ன வரும்னே தெரிஞ்சிருக்கேன், இனிமே அதுல நிறைய சாதிக்கணும்.
MBBS பாதிலையே விட்டுட்டேன்னு செம டார்ச்சர் பண்றாரு. எப்பவும் பயப்படுற அம்மா இந்த தடவை அந்த ஆளை எனக்காக எதிர்த்திருக்காங்க. அதை நான் வீணாக்க விரும்பல. உன்னை நான் என்னைக்கும் விடமாட்டேன். ட்ரெயினிங் முடியட்டும், பைலட் லைசென்ஸ் வாங்கிக்கிறேன். அப்புறம் நல்ல வேலை, நீயும் உன் படிப்பை முடி. அப்புறம் நானே உங்க சித்தப்பாகிட்ட வந்து பேசுறேன்."
"அதுக்குள்ள என் சித்தப்பா என்னை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டாருன்னா?"
"அப்படி நடக்காது."
"நடந்தா?"
"அப்படி ஒன்னு நடக்குறதுக்கு முன்னாடியே நான் உன் வீட்டுக்கு வந்து உன்னைத் தூக்கிட்டு போயிருவேன்."
"நிஜமாவா?"
"ட்ரஸ்ட் மீ."
"இப்போ கூட நான் ரெடியாதான் இருக்கேன், வா வந்து தூக்கிட்டு போ.” என்று கூறியவாறு, அவனது கன்னத்தைத் தன் விரலால் தீண்ட தீண்டலில் சிலிர்த்தவன்,
"ஏய் என்னாச்சுடி? இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க."
"ஏன் பயமா இருக்கா?"
"பயமா? எனக்கா? நான்லாம் யாரு?” என்று தன் காலரை தூக்கிவிட, அவனது காலரை பற்றித் தன் பக்கம் இழுத்தவள், தன் கன்னம் கொண்டு அவனது கன்னத்தை உரச, மெல்ல சிலிர்த்தவனுக்கு இப்பொழுதே அவளைக் கடத்திக்கொண்டு போய்விடலாமா என்று தோன்றியது என்றால் அது மிகையாகாது.
"ஏய் யாராவது வந்திற போறாங்கடி...” என்று ஒப்புக்காய் கூறியவனை, தன் வார்த்தையால் சீண்ட துடித்தவள்,
"வரட்டும்.” என்று கூறி காதல் வழிய அவனைப் பார்க்க, அவளது பதிலில் சிலிர்த்தவன் அவளைக் காண, இதுவரை எதற்கும் அஞ்சாதவன் முதல்முறை ஒரு பெண்ணின் கண்களைக் காண முடியாது, உதட்டில் சிறு புன்னகை மலர வேறு எங்கோ பார்க்க, அதை ரசித்தவள் சட்டென்று அவனது சட்டையைப் பற்றித் தன் பக்கம் இழுத்து, அவனது கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழ் பதிக்க, சில நொடிகள் சொக்கிப் போனான் ஆஷிக்.
தன் மொத்த கர்வமும் அடங்கிப்போய் தன் காதல் கண் கட்ட மெய் சிலிர்த்து நின்றான். அதை ரசித்தவள் அங்கிருந்து செல்ல போக, அவளது கரம் பற்றி அவளைத் தடுத்தவனிடம், "கையை விடு, நான் போகணும்."
"இப்படிச் சொன்னா நான் விட்ருவேனா? நீ குடுத்துட்ட, நான் குடுக்க வேண்டாம்?"
"ஆஷிக்!” என்றவாறு தலை குனிய இந்த முறை வெட்கப்படுவது இவளாகி போனாள். தன்னவளை ரசித்தவாறு அவளைத் தன் கரம் கொண்டு இழுத்து, தன் மார்பின் மேல் போட்டு தன் வலக்கரம் கொண்டு இறுக்க அணைத்து கொண்டவன்,
அவளது காதோரத்தில், “என்னடி குடுக்கிற, கொசு கடிச்சமாதிரி? இப்போ நான் ஒன்னு நச்சுன்னு தரேன்.” என்று கூறியதில் அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் எதிர்பார்க்காத நொடியில் அவளது இதழ் நோக்கி குனிய, அங்கே இதழின் சேர்க்கை இனிதாய் நடந்தேறியது.
***
தன்னிலைக்கு வந்த ஆஷிக், ஜியா கலங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க, அவனது கண்களும் அவனை அறியாமல் கலங்கியது. அதை மறைத்தவன் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
"ஏய் என்னடி அப்படிப் பார்க்கிற? தப்பான எண்ணம் ஏதும் இருந்தா மனசுல இருந்து அழிச்சுடு.” என்று கூற, தன்னிலையை அடைந்த ஜியா அவனைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்து கிளம்பினாள்.
அவளைத் தடுத்தவன், "எங்க போற? நான் பேசணும்னு சொன்னேன்ல?"
"போதும் நான் பட்டது எல்லாம்..."
"என்ன ஓவரா பேசுற?"
"ஆமாபா, நான்தான் ஓவரா பேசுறேன் ஆளை விடுங்க."
"அப்படிலாம் விட முடியாது."
"என்னடா உனக்கு வேணும், ஏன் என்னை கொல்ற?” என்று அவள் அழ,
செய்வதறியாது திகைத்தவன் அவளது கரம் பற்றி இழுத்துக் கொண்டு, வாஷ் ரூமிற்குள் அழைத்துச் சென்று கதவிற்குத் தாழிட்டவனின் உள்ளம் ஜியாவின் கண்ணீரைப் பார்த்து கலங்க, ததும்பும் குரலில் ஆஷிக், ”ஜியா ப்ளீஸ் அழாத...” என்று அவன் எவ்வளவு கூறியும், அவளது அழுகை நிற்காமல் போக, எரிச்சலடைந்தவன் சற்றுக் கணீர் குரலில் மீண்டும்,
"அழாதடி...” என்று கூற,
அழுதுகொண்டே, “நீ சிரின்னா சிரிக்கணும், அழகூடாதுனா அழுகையை நிப்பாட்டிறனும். நான் என்னை சுவிட்ச் போட்டா வேலை செய்யிற மெஷினா?” என்று கூறி ஜியா மீண்டும் அழுதாள்.
"ச்ச... என்னடா இது உன்னோட பெரிய தொல்லையா போச்சு? ஓகே தப்பெல்லாம் என்னோடதுதான், சாரி... நான் அப்படிப் பண்ணிருக்கக் கூடாது. ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங்... அதான் சாரி சொல்லிட்டேன்ல?"
"சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா? நீ கொஞ்சம் கூட யோசிக்கலையா, அத்தனைப் பேர் முன்னாடி நீ அப்படிப் பண்ணும் போது நான் எப்படிப் ஃபீல் பண்ணுவேன்னு?"
"அம்மா தாயே சாரி!"
"இப்போ கூட மத்தவங்க முன்னாடி உன் இமேஜ் போயிற கூடாதுனு தான சாரி கேக்குற?"
"என்ன இமேஜா?"
"ஆமா...” என்று அவள் கூற, கோபம் தலைக்கேறியவன் அவளைச் சுவற்றோடு சாய்த்து அவளது கண்களைப் பார்த்து,
"வலிக்குதுடி, ஆறு வருஷம் ஆகிருச்சு. ஆனா இப்போ கூட எனக்கு வலிக்குது. இப்போ கூட உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா எனக்கு வலிக்கும். என் மனசும் உன் மேல நான் வச்ச அன்பும் எல்லாருக்கும் புரியும். ஆனா அது உனக்கு மட்டும் புரியாது, இமேஜ்க்காக வாழ்ற ஆளு நான் இல்லை.” என்று அவன் அழுத்தமாகக் கூற,
அவனைத் தள்ளிவிட்டவள், "நடிக்காத, உன் நடிப்பை பார்த்து ஏமாந்த ஜியா எப்பவோ செத்து போய்ட்டா."
"ஓ மை காட்! யாராவது காப்பாத்துங்க...” என்று அவன் கத்த,
அதுவரை அழுதுகொண்டிருந்தவள், அவனது இந்தச் செயலில் ஒன்றும் விளங்காமல், "ஏய் ஏன் கத்துற?"
"ப்ளீஸ் பக்கத்துல வராத..."
"ஆஷிக்!"
"ஏய் காலக் காட்டு, கால் இருக்கு. அப்போ நீ என்ன ஹாலிவுட் பேயா?” என்று கிண்டல் அடிக்க,
"யூ ஆர் டிஸ்கஸ்டிங்!"
"எஸ், ஐயம் டிஸ்கஸ்டிங்!"
"இங்க பாரு ஆஷிக், இதுவே கடைசியா இருக்கட்டும். உன் விளையாட்டெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ புரியுதா? இனிமே என்கிட்ட இப்படி பண்ணின..."
"பண்ணா என்ன செய்வ?"
"ம்ம் கொன்னுருவேன்.” என்று கூற,
"அப்படியா? எங்க கொல்லு பார்ப்போம்.” என்று அவளது பின்னால் வந்து தன் இரண்டு கரங்களால் அவளைப் பிடிக்க,
ஜியா, "ஆஷிக் லீவ் மீ..."
"நோ..."
"ஐ வில் கில் யு..."
"எப்படி?” என்று கூற, தனது கைகளை அவனிடம் இருந்து விடுவிப்பதில் மும்முரமாய் இருந்தவள், அது முடியாமல் போக அவனைச் சுட்டெரிப்பது போல் பார்க்க,
அவளைப் பார்த்து புன்னகைத்தவன், "ஆனா இப்படியே நீ என்னை பார்த்துட்டே இருந்தன்னு வச்சுக்கோயேன், நான் செத்தாலும் செத்துருவேன். என்ன கண்ணுடா இது? இப்போ கூட என்னைக் கொன்னு கடத்த துடிக்குது.” என்று விஷமமாய் பார்த்தவனிடமிருந்து எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டவள்,
"நீ திருந்தவே மாட்ட...” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போக,
“ஒன் செகண்ட்...” என்று அவளை அவன் கூப்பிட, அவளோ எதையும் காதில் வாங்காதவாறு அங்கிருந்து வேகமாய் செல்ல,
அவள் பின்னாலே ஓடிவந்தவன் மூச்சு வாங்க, “ஜியா உன்னோட ப்லௌஸ் ஹூக் விட்டுப் போயிருக்கு.” என்று கூற, சட்டென்று திரும்பியவள் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தவனைப் பார்க்க, மூச்சு வாங்க அவளது அருகில் வந்த ஆஷிக்,
"உன்னோட ஹூக் விட்டுப் போயிருக்கு." என்று இயல்பாக முகத்தில் எந்த வித சலனமும் இன்றிக் கூற, அவன் கூறியதை நம்பியவள் அவன் பக்கம் திரும்பாமலே பின்னோக்கி சென்று சுவற்றோடு ஒட்டி நின்று, தன் வெற்று முதுகில் கை வைத்தவாறு தேடி கொண்டு அங்கேயே முழித்தவாறு நிற்க, அதை அவளுக்கே தெரியாமல் ரசித்தவன் அவளிடம்,
"ஜியா என்ன இப்படி இங்கயே நிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா என்ன? நான் சரி பண்றேன்.” என்று நெருங்கி வந்தவனை,
"வேண்டாம், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ போ.” என்று கூற,
"நீ என்னத்தைப் பார்க்க? அதான் நான் எல்லாத்தையும் பார்த்துட்டேனே?" என்று மிகவும் இயல்பாகக் கூறியவனை அதிர்ச்சியாய் ஜியா பார்க்க, அவனோ அவள் யோசிப்பதற்குள் அவள் அருகில் வந்து,
"இங்க வா, இப்படிச் சுவற்றோடு சாஞ்சு நின்னா எப்படிச் சரி பண்ண?” என்றவாறு அவள் பின்னால் வர, அவன் வந்ததும் ஜியா சட்டென்று தன் முன்னால் கிடந்த கேசத்தை எடுத்து தன் பின்னால் போட்டுக்கொள்ள,
"முழுசா நனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு? அதான் நான் பார்த்துட்டேனே, என்கிட்ட உனக்கென்ன...” என்றவன்,
மெல்ல தன் கரங்களால் அவளது வெற்று முதுகில் படர்ந்திருந்த கேசத்தை எடுத்து முன்னால் போட, சில்லென்று வந்த காற்றும் ஆஷிக்கின் விரலும் சேர்ந்து, ஏற்படுத்திய சின்னச் சீண்டலில் மேனி சிலிர்த்து அங்கம் செவ்வண்ணமாய் மின்ன தன் கைகளைப் பிசைந்தவாறு நின்றாள்.
அவளது மேனியின் நிறம் அவனது ஆண்மையைத் தூண்டிவிட, தன் விரலால் அவளது வெற்று முதுகை மேல் இருந்து கீழ் வரை அளவெடுக்க, தன் கண்களை இறுக்க மூடிகொண்டவளின் காதில் மெல்ல, "டார்லிங்!” என்று அழைக்க, மூடிய விழிகளைத் திறந்தவளிடம்,
"நீ இன்னைக்கு பேக் ஹூக் வச்ச பிளவுஸ் போடலடா, இனிமே போடுற அன்னைக்கு மச்சானை கூப்பிடு ஹெல்ப் பண்றேன்.” என்று கண்ணடித்தவன், மீண்டும் அவளது வெற்று முதுகின் கீழ் இருந்து மேல் வரை மெல்ல வருட, தன் கண்கள் விரிய கோபமாய் பார்த்தவளைக் கண்டு, "ஸ்ஸ்... சாரி கை ஸ்லிப்பாகிடுச்சு.” என்று புன்னகைத்தவன் அவளது காதில்,
"பேபி நீ இன்னும் அதே கோகோ பட்டர் பிளேவர்தான் யூஸ் பண்ற போல? பட்டர் டேஸ்ட் அப்படியே உன்னை மாதிரி... ச்ச... ம்ம்ம்... இன்னும் உதட்டுல அப்படியே இருக்குது.” என்று தன் தன் இதழைத் தடவியவன்,
"இனிமே ஸ்ட்ராபெரி ட்ரை பண்ணு, இப்போலாம் எனக்கு ஸ்வீட் அண்ட் ட்ங்கி டேஸ்ட்தான் ரொம்பப் புடிக்குது.” என்று தன் கண்களில் குறும்பும் வார்த்தையில் தாபமும் கலந்தவாறு கூற,
ஜியா எதுவும் பேசமுடியாமல் அவனைக் குத்தி கிழிப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் வெளியேறிய பின்பு இன்று நடந்த நிகழ்வை நினைத்தவனின் இதழோரம், புன்னகை அலையென வந்து வந்து போக, புன்னகையைச் சிந்தியவாறே ஆஷிக் அவள் பின்னால் வர, இதைக் கண்ட தியா அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தாள்.
"ஹாய் தியா!"
"ஹாய் ஆஷிக்!"
"என்ன அப்படிப் பார்க்குற?"
"அது ஜியா தான?"
"ஆமா"
"அவ இங்க என்ன..."
"உனக்குத் தெரியாதா?” என்று அவளது தோளில் கை போட்டவன், "வா நடந்துட்டே பேசுவோம்.” என்று அவளை அழைத்துக் கொண்டு, "ஜியா இங்க டூட்டி டாக்டரா சேர்ந்திருக்கா."
"சரி, நீ அவ கூட என்ன பண்ற?"
"ஹனிமூன் கொண்டாடிட்டு இருந்தேன்."
"வாட்!"
"லூசு, என்ன பண்ணுவேன்? சும்மா கொஞ்சம் பேச வேண்டி இருந்தது பேசுனேன்."
"ஆனா ஆஷிக் அவதான் உன்னை ஏமாத்திட்டு போனவளே, உனக்குத்தான் பிடிக்காதே அவளை?"
"நான் என்ன கல்யாணமா பண்ண போறேன், சும்மா பேசிட்டு இருந்தேன்."
"என்ன பேசுனீங்க? இல்லை ரொம்பச் சந்தோஷமா இருக்கியே, அதான் கேட்டேன்."
"அப்படியா?” என்றவன், சட்டென்று தன் முகபாவனையை மாற்றித் தன் கைகளைச் சோம்பலாய் முறித்தவாறு,
"கேள்வி கேக்குறதா இருந்தா நாளைக்குக் கேளு, எனக்கு டயர்டா இருக்கு. பாய்...” என்றவன் அங்கிருந்து செல்ல,
"சரி ஆஷிக், உடம்பை பார்த்துக்கோ." என்றவள் அவன் சென்றதும், “எனக்குத் தெரியும் ஆஷிக், நீ இன்னும் அவளை மறக்கலைன்னு. ஆனா நான் உங்களை மறுபடியும் சேர விடமாட்டேன். நான் போட்ட திட்டத்தை எல்லாம் வீணாக்க விடமாட்டேன். ஜியா உன்னை என்னைக்கும் ஆஷிக்கிட்ட நெருங்க விட மாட்டேன்.” என்றவளின் கண்களில் ஜியாவைப் பழிவாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் மிகவும் உச்சத்தில் இருந்தது.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 6, 7 & 8
Last edited: