- Joined
- Dec 14, 2024
- Messages
- 90
- Thread Author
- #1
நிலவே 51
"என்னடா கிளம்பிட்டீங்களா?” என்றவாறு நுழைந்த ஆஷிக்கை,
ஆதர்ஷ், “வாடா புது மாப்பிள்ளை, எப்படி இருக்க? அப்புறம் மச்சான், நேத்து என்ன ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ஆ...” என்று ராகம் போட, ரோஹித் ஆஷிக்கைப் பார்த்து புன்னகைத்தவாறு அவர்களோடு வந்து அமர்ந்தான்.
ஆதர்ஷ், ஆஷிக்கிடம், "என்னடா பதில் சொல்ல மாட்டிக்கிற?"
“கேள்வி கேட்டா தானே பதில் சொல்ல முடியும்?” என்று நக்கலாகக் கேட்ட ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ்,
"நான் என்ன கேட்க வரேன்னு உனக்குத் தெரியலை?"
"இல்லைடா..."
"அதான்டா, நைட் ம்ம்... எல்லாம் ஓகே தானே?” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்து, “ம்ம்ம் சொல்லுடா, என்னடா நடந்துச்சு? நீ சொல்லி தான்டா ஆகணும், டென்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் பொழுதே கெமிஸ்ட்ரி புக்ல அடிச்சுச் சத்தியம் பண்ணிருக்கடா.” என்ற ஆதர்ஷிடம்,
"அப்படியா?” என்று ரோஹித்தைப் பார்த்து கண்ணடிக்க,
"இந்தக் கல்யாணம் ஆன பசங்களே இப்படித் தான். போடா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று சலித்துக்கொண்ட ஆதர்ஷைப் பார்த்து சிரித்த ஆஷிக்,
"ஒரு வழியா நடாஷாவும் நீயும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க, அடுத்தது நம்ம ரோஹித் தான். மச்சான் நீ எப்போடா குட் நியூஸ் சொல்ல போற?” என்று ரோஹித்திடம் ஆஷிக் கேட்க, ரோஹித் ஆதர்ஷைப் பார்த்தான்.
அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாது வாய்விட்டு சிரித்தபடி ஆதர்ஷ், "மச்சான் அவன்கிட்ட எதுவும் கேட்காத, அவன் கல்யாணம் ஆனாலும் பேச்சலரா தான் இருப்பான் உன்னை மாதிரி.” என்று ரோஹித்தோடு சேர்த்து ஆஷிக்கையும் ஆதர்ஷ் கேலி பேச, “டேய்!” என்றவாறு அவனை அடிக்க ஆஷிக் கை ஒங்க,
"டேய் அடிக்காதடா, சாரி... சாரி...” என்று ஆதர்ஷ் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்ள,
ஆஷிக், ரோஹித்திடம், "என்னடா அவன் அப்படிச் சொல்றான், நீ ரியாக்சனே இல்லாம இருக்க?" என்று கேட்டான்.
"டேய், அவனை ஏன் கேட்குற? என்ன கேட்கணுமா, என்னைக் கேளு.” என்ற ஆதர்ஷ் சிரித்துக்கொண்டே,
"டேய், இவனுக்கு லவ் எல்லாம் செட்டாகாது. வீட்ல பார்த்து முடிச்சு வச்சா தான் உண்டு."
"என்னதான் ஆச்சு?"
"ம்ம்... உன் ரிசெப்ஷன் பார்ட்டி அன்னைக்கு புடிச்ச பொண்ணா பார்த்து நம்பர் குடுத்து உஷார் பண்ணுனு, இவனுக்கு நான் டார்கெட் குடுத்தா இவன் என்ன பண்ணினான்னு தெரியுமா?"
"என்னடா?"
"பொண்ணோட நம்பர் வாங்குடான்னு சொன்னா, கல்யாணம் ஆகி பொண்ணு இருக்கிற ஆன்ட்டி நம்பரை வாங்கிட்டு வந்திருக்கான்டா. அதுவும் எப்படி, வாட்ஸப்புல டிசைனர் சாரீஸ் சேல்ஸ் பண்றோம், உங்க நம்பர் குடுங்கன்னு வாங்கிட்டு வந்திருக்கான். ஒரு நாளாவது இத்தனை வருஷத்துல ஒழுங்கா ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானா? ஒன்னு ஆல்ரெடி லவ் பண்ற பொண்ண காட்டி புடிச்சுருக்குன்னு சொல்லுவான். இல்லைன்னா கல்யாணம் ஆகப் போற பொண்ண சொல்லுவான். சில நேரம் கல்யாணம் ஆன பொண்ணையே சொல்லுவான். இப்போ ஒருபடி மேல போய்க் கல்யாணம் முடிஞ்சி குழந்தை இருக்கிற பொண்ண சொல்லிருக்கான். அதனாலதான் இவன் ஆன்ட்டி ஹீரோவாவே இருக்கான்.” என்று மீண்டும் சிரிக்க,
கடுப்பான ரோஹித், "நான் என்னடா தெரிஞ்சேவா பண்றேன்? இந்த முறை சரியா தான் பண்ணினேன், அந்தப் பொண்ணு என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டா.” என்றதும்,
"ஆமா ஆமா... ஆஷிக் உனக்கு இந்த விஷயம் தெரியாதுல... நான் சொல்றேன், பொண்ணு தான் செலக்ட் பண்ண தெரியலை. நீ நல்ல பொண்ணா பார்த்து சொல்லு, நான் பேசி சரி பண்ணிடுறேன்னு சொன்னான். நானும் தாஹிராவை காட்டி நடந்ததெல்லாம் சொல்லி, இப்போ அவ சிங்கிள்தான் போய் ஆதரவா பேசு செட் ஆகிரும்ன்னு சொன்னா, இவன் தாஹிராட்ட பேசாம சரண்யாகிட்ட போய்ப் பேசி பல்ப் வாங்கிட்டு வந்தான்டா.
"சரண்யாகிட்டயா? டேய் அவ என் மச்சினிச்சிடா, உனக்குப் புடிச்சுருக்கா?” என்ற ஆஷிக்கிடம் ரோஹித், “அந்த ஸீன் எல்லாம் இங்க இல்லை, பெரிய பல்ப் குடுத்துட்டு போய்ட்டா."
"உன்னைத் தாஹிராகிட்ட பேச சொன்னா, ஏன் சரண்யாகிட்ட போன? காட்டும் போதே தெளிவா சொன்னேன்ல ப்ளூ லெஹெங்கான்னு.” என்ற கேட்ட ஆதர்ஷிடம்,
"ஆனா எனக்கு ரெட் லெஹெங்கா தானே புடிச்சுருந்தது. நான் பார்த்தது சரண்யாவை தானே?” என்று முணுமுணுத்தான்.
"அப்போ ஏன்டா அவகிட்ட போய் ஆஷிக்கூட என்கேஜ்மென்ட் நின்ன கதையெல்லாம் சொன்ன?” என்று ஆதர்ஷ் கடுப்பாகக் கேட்க,
"என்ன பேசுறதுன்னு தெரியலை, அதான் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன். அவ இன்செல்ட் பண்ணிட்டா. என் பேரை முழுசா சொல்றதுக்குள்ள அப்படிச் சொல்லிட்டா.” என்ற ரோஹித்தின் குரலில் கவலை தொனித்தது.
"அப்படி என்னடா சொன்னா?” என்ற ஆஷிக்கிடம்,
"கவலையா தான் இருக்கும், திடீர்னு நாம ஆசைப்பட்டது இல்லாம போனா. கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிரும்ன்னு சொன்னேன். அவ ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்தா. நீங்க சமீர் சிஸ்டர் தாஹிரா தானேன்னு கேட்டேன். கையை குறுக்கக் கட்டிக்கிட்டு இல்லைன்னு தலையை மட்டும் ஆட்டினா. அப்போ நீங்கன்னு கேட்டேன். என்னை ஏற இறங்க பார்த்தா. அசடு வழிய ஐயம் ரோஹித் குனால்னு முழுசா என் பேரை சொல்றதுக்குள்ள, அப்பாகிட்ட சொல்லிருவேன்னு சொல்லிட்டாடா. அசிங்கமா போச்சு...” என்று பாவமாகக் கூற, இந்த முறை வாய்விட்டுச் சிரிப்பது ஆஷிக்கின் முறையாகி போனது.
ரோஹித் முறைப்பதைப் பார்த்துச் சிரிப்பை அடக்கிக்கொண்ட ஆஷிக், "உனக்குப் புடிச்சுருக்குன்னா, நான் பேசுறேன்."
"ஒன்னும் வேண்டாம், ஏன் எனக்கு எதுவுமே வேண்டாம். முக்கியமா லவ் வேண்டாம்.” என்று ரோஹித் ஒரு பெரிய கும்பிடாகப் போட, இப்படியே அவர்களது சம்பாஷணை கேலியும் சிரிப்புமாகத் தொடர்ந்தது.
அதைக் கலைக்கும் விதமாய் ஆதர்ஷின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்ததும் அவனது முகம் மாறுவதை உணர்ந்த ஆஷிக்,
"என்னடா, எடுத்து பேசுடா. ஏன் கட் பண்ற? விடாம அடிச்சுட்டே இருக்காங்க, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது."
"அது வந்து... ஆஷிக் அப்புறம் பேசிக்கிறேன்..."
"ஏன் என் முன்னால பேச மாட்டியா? உன் முகம் சரியில்லையே?” என்றதும் ஆதர்ஷ், “ஒன்னும் இல்லடா...” என்று சமாளிக்க, ஆஷிக் அவனையே உறுத்து பார்க்க,
ஆதர்ஷ் அவனிடம், “என்னடா, ஏன் அப்படிப் பார்க்குற? அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. சத்தியமா தான், நம்புடா. உன் நண்பன் மேல நம்பிக்கையில்லையா?" என்று அவன் கூறிய அனைத்துக்கும் ஆஷிக் பதில் எதுவும் பேசாமல் அவனையே உற்று பார்க்க, ஆஷிக் எதையும் நம்பவில்லை என்பதை உணர்ந்த ஆதர்ஷ்,
"தியாடா...” என்று உண்மையைக் கூறியவன், சிறிது இடைவெளி விட்டு தியா வேலையை ரிசைன் செய்துவிட்டு தன் தாய், தந்தையோடு அமெரிக்காவிலே செட்டில் ஆகப் போவதை கூற,
"இப்போ ஏன் கால் பண்ணிட்டு இருக்கா?” என்று சுள்ளென்று ஆஷிக் கேட்டதில் தயங்கியவாறே ஆதர்ஷ்,
"அவ உன்கிட்ட பேசணும்ன்னு சொல்றா. நேத்துல இருந்து சொல்றா, எனக்குத் தான் உன்கிட்ட எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.” என்றவன் ஒருவித தயக்கத்துடன்,
"பேசுறியாடா?” என்று கேட்டு, “பேசுடா, இனிமே பார்க்கவா போறோம்?” என்றவாறு அவனது கரத்தில் அலைபேசியைத் திணித்தான்.
இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆஷிக், தியா இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிலவ, அமைதியை கலைத்த தியா,
"நீ கேட்டுட்டு இருக்கன்னு எனக்குத் தெரியும் ஆஷிக், பதில் சொல்ல வேண்டாம். நான் சொல்றத மட்டும் கேளு, எங்க நீ இல்லாம போயிருவியோன்னு நினைச்சு, உனக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சுரு ஆஷிக். நான் போறேன், இனிமே உன் கண்ல படவே மாட்டேன். மார்ச் எட்டாம் தேதி டெல்லில இருந்து கிளம்புறேன். போறதுக்கு முன்னாடி உன்னை ஒருதடவை பார்க்கணும் ஆஷிக்.
ப்ளீஸ் வருவியா? உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்டா. சாரி, சொல்லாம இருக்க முடியலை, 'ஐ லவ் யு ஆஷிக்!' ப்ளீஸ். ஒரு தடவை உன்னைப் பார்க்கணும். வித் லவ் தியா!” என்றவள், அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, கனத்த மனதுடன் அழைப்பைத் துண்டித்தாள்.
அவள் பேசி முடித்ததில் இருந்து ஆஷிக்கின் முகமே வாடி விட்டது. எப்பொழுதும் ஆஷிக் ஆஷிக் என்று உற்சாகமாக இருக்கும் குரலில் தெரிந்த தளர்ச்சி அவனை எதோ செய்தது. ஆயிரம் இருந்தாலும் சிறு வயது முதல் தொடர்ந்த நட்பாச்சே! அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?
தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக் கலக்கமான குரலில், “ஏன்டா அவ அப்படிப் பண்ணினா? எவ்வளவு பெரிய துரோகம். தெரிஞ்சே முதுகுல குத்திட்டாளே! தியா மேல உண்மையான அன்போட தானே இருந்தேன், அவளே கெடுத்துகிட்டாளே... எவ்வளவு அழுதிருப்பேன், அப்போ கூட உண்மைய சொல்லலையே? கஷ்டமா இருக்குடா."
"வருவியாடா?"
"ஜியாகிட்ட சொல்லாம என்னால எதுவும் பண்ண முடியாது. சொல்லி பார்ப்பேன், ஜியா ஓகே சொன்னா வரேன். குரலை கேட்கவே ஒரு மாதிரியா இருக்கு. சரியான லூசுடா, யார்கிட்டயும் ஒழுங்கா பேச கூடத் தெரியாது. அவளுக்கும் நம்மளை விட்டா யாருமே கிடையாதுடா. அவ எப்படிடா இப்படிப் பண்ணினா? அவளை அழவச்சு ஊருக்கு அனுப்புறதுல எனக்கும் விருப்பம் இல்லை. நம்மளை விட்டா டெல்லியில அவளுக்கு யாரு இருக்காங்க? நாம தான் போகணும். ஜியாகிட்ட பேசுறேன், அவ புரிஞ்சிக்கணும். அவ எதுவும் தப்பா நினைச்சுற கூடாது. ஜியாவை என்னால ஹர்ட் பண்ண முடியாது. ஜியா நோ சொன்னா நான் வரமாட்டேன். நீயும் ரோஹித்தும் போயிருங்க.” என்றவன் மேலும் தொடர்ந்து,
"சரி உங்களுக்கு டைம் ஆச்சுல, வாங்க ஏர்போர்ட் போகலாம். இப்போ கிளம்புனா சரியா இருக்கும்.” என்று அவன் அவர்களிடம் கூறவும் ரோஹித், “நீ நாளைக்கு வரணும்னு சொன்னியே, எப்போ வரேன்னு சொல்லு, உனக்கு டிக்கெட் புக் பண்ணிடுறேன்.”
"நாளைக்கே டூட்டில ஜாயின் பண்ண போறியா என்ன?” என்ற ஆதர்ஷிடம்,
"இல்லைடா, டூட்டில ஒருவாரம் கழிச்சுதான் ஜாயின் பண்ணுவேன். வீடு அப்படி அப்படியே கிடக்கும், அதெல்லாத்தையும் சரி பண்ணணும். ஜியாக்கு நீட்டா இல்லன்னா புடிக்காது. திங்ஸ் எதுவும் இருக்காது வாங்கணும்." என்ற ஆஷிக் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் ஏர்போட்டிற்கு சென்றான்.
எழுந்ததில் இருந்து ஆஷிக் பற்றிய சிந்தனையிலே இருந்தவளுக்கு, அவன் தன் அருகில் இல்லாதது மனதிற்குள் ஏக்கமாக இருந்தது. ஆஷிக் தனக்காகப் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு, மீண்டும் அவனிடம் தன்னைப் பற்றி மறைத்துத் துரோகம் செய்கிறோமோ, என்கின்ற எண்ணம் தொத்திக்கொள்ள, மிகவும் வேதனை அடைந்தாள்.
***
நிலவே 52
கணப்பொழுது விலகலையும் தாங்கிக்கொள்ள முடியாமல், இடைவெளி இல்லாத நெருக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகவும் வருந்தினாள். அதுவும் முதலிரவில் தன் மனதில் உள்ளதை சிறு முக அசைப்பிலே புரிந்துகொண்டு, தன்னை அவன் பக்குவமாக நடத்திய விதம் அவளை இன்னும் வதைத்தது.
அவனது கனவுகளைத் தனது கடந்து கால நெருப்பில் போட்டு வதைக்கின்றோமோ என்று மிகவும் கலங்கித் தவித்தாள். பலவிதமான யோசனைக்குப் பிறகு ஆஷிக்கிடம் இன்று தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விட வேண்டும், இனிமேல் அவனை ஏமாற்றக் கூடாது. என்று அவள் உறுதி எடுக்கவும், சமீரின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த நான், தனக்காகத் தலையில் அடிப்பட்டு வந்த சமீரின் உடல்நிலை எப்படி உள்ளது? ஏன் ஒரு மன்னிப்பு கூடச் சரியாகக் கேட்கவில்லையே என்று நினைக்கவும், அவளுக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்றவாறே அலைபேசியை அட்டென்ட் செய்தவள்,
"சாரி!” என்று கூறவும், எதிர்முனையில் சமீர், “சாரி!” கேட்கவும் சரியாக இருந்தது.
லேசாகப் புன்னகைத்த சமீர், "நீ ஏன் சாரி சொல்ற?” என்று கேட்க,
ஜியாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, “கில்டியா ஃபீல் பண்றியா ஜியா?” என்று அவள் மனதில் உள்ளதை அப்படியே கூறிவிட,
"சமீர்!” என்று ஆச்சரியமாக அவள் கேட்க,
"உன்னை எனக்குத் தெரியாதா? என்கிட்ட ஏன் நீ இப்படி ஃபீல் பண்ற ம்ம்ம்... உன் சிட்டுவேஷனை கூடப் புரிஞ்சிக்காதவனா நான்?"
"ரொம்பத் தேங்க்ஸ் சமீர், உன்னை மாதிரி ஒரு நண்பனையும் ஆஷிக் மாதிரி ஒரு கணவனையும் எனக்குக் குடுத்த கடவுள், சந்தோஷமான வாழ்க்கையை எனக்குக் குடுக்காம விட்டுட்டாரே? நான் உன்னை ரொம்ப டென்ஷன் படுத்திட்டேன்ல சாரி சமீர்."
"ப்ச்... சாரி நான் தான் சொல்லணும். ஆஷிக் சொன்னது சரிதான், என்ன இருந்தாலும் அன்னைக்கு உன்கிட்ட நான் அப்படிக் கோபமா பேசியிருக்கக் கூடாது. சுஜித் மேல உள்ள கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன்."
"ஆஷிக் என்ன சொன்னான்?"
"உனக்கு ஒன்னுன்னா தாங்க மாட்டேன்னு சொன்னாரு."
"உன்கிட்ட கோபப்பட்டானா?"
"உன் மேல எவ்வளவு லவ் வச்சுருக்கிறார்னு சொன்னாரு.” என்று சமீர் கூறும் விதத்திலே புரிந்து கொண்டவள்,
"சமீர் சாரி, ஆஷிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்."
"சாரி ஏன் கேட்குற? எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. என் மேல அவர் அவரோட கோபத்தைக் காட்டுறதா நான் நினைக்கல. உன் மேல உள்ள அன்பை காட்டுறதா தான் நான் நினைச்சேன். சந்தோஷமா இருக்கு."
"தேங்க்ஸ் சமீர்."
"இட்ஸ் ஓகே, எப்போ டெல்லி வர?"
"தெரியலை, அவர்கிட்ட தான் கேட்கணும்."
"ஹ்ம்ம்... அவர்கிட்ட தான் கேட்க்கணும். ஜியா இனிமே நீ என்னை மீட் பண்ணணும்னாலும் ஆஷிக்கிட்ட கேட்கணும்ல?"
"ஆமா, ஆனா நிச்சயமா அவன் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டான்."
"இல்லை, எனக்கு என்னவோ ஆஷிக் உன்மேல ரொம்ப பொஸசிவ்வா தெரியுறாரு."
"இல்லை, அவன் என்னை அதிகமா லவ் பண்றது உனக்கு அப்படி நினைக்கத் தோனுது. ஆனா அவன் அப்படி இல்லை, அவனோட காதல் ரொம்ப வித்தியாசமானது. ரொம்ப ஆழமானது. அவனை மாதிரி யாராலையும் என்னைக் காதலிக்க முடியாது. அழகா, அன்பா, மென்மையா, ஒரு பூவை, ஒரு குழந்தைய எப்படிப் பார்த்துக்குவோம், அப்படி என்னை அவன் பார்த்து பார்த்து காதலிப்பான்.
ஆண்மையில கூட மென்மை இருக்கும்னு அவன் எனக்குப் புரியவைக்கத் தவறினதே இல்லை. என்னை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்க அவ்வளவு முயற்சி பண்ணுவான். என்னோட சின்னச் சின்ன முக அசைவ வச்சு என்னோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு புரிஞ்சிகிட்டு, அதுக்கேத்த மாதிரி என்னை ஹாண்டில் பண்ணுவான்.” என்று அவள் ஒவ்வொரு வரி ஆஷிக்கை பற்றிக் கூறும் பொழுதும், தன்னவனின் ஸ்பரிசத்தைத் தனக்குள்ளே உணர்ந்து அனுபவித்துக் கொண்டே கூறினாள்.
"வாவ்! ஜியா இவ்வளவு லவ் வச்சுட்டு தான் சாகப் போறேன்னு என்னை டார்ச்சர் பண்ணுனியா?” என்றதும் ஜியாவின் முகத்தில் வாட்டம் குடிகொள்ள அவள்,
"அதனால தான் எந்த முடிவும் எடுக்க முடியாம என்னையும் கஷ்டப்படுத்துறேன், அவனையும் கஷ்டப்படுத்துறேன். ஒரு நல்ல மனைவியா அவன்கிட்ட நடந்துக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படுறேன்."
"பழசு எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழு."
"இவ்வளவு பெரிய உண்மைய மறைச்சுட்டு என்னால அவன்கிட்ட எப்படிச் சந்தோஷமா வாழ முடியும்? அவனுக்குத் துரோகம் பண்ற மாதிரி ஆகாதா? உண்மைய சொல்லி ஒருவேளை அவன் என்னை வெறுத்து ஒதுக்கிட்டான்னா என்னால தாங்கிக்க முடியாது."
"நடந்ததை மறந்திரு, இனிமே என் நண்பர்களால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது, நீ நிம்மதியா இரு. அந்த விடீயோ பிரச்சனைய நான் பார்த்துக்கறேன். எப்படியாவது நான் அதை அவங்ககிட்ட இருந்து வாங்கிடுறேன். வீடியோ பத்தி யோசிக்காத, அந்த விடீயோவை பத்தி யோசிச்சு நீ உன் வாழ்க்கைய கெடுத்துக்காத.
அந்த வீடியோ விவகாரம் உன் வாழ்க்கையில நடந்த ஒரு விபத்து மாதிரி. அதை விட்டு நீ சீக்கிரம் வெளியில வா. ஆக்சுவலி இதைப் பண்னினதுக்கு அவங்க தான் தலை குனிஞ்சு நிக்கணும். எனக்கு இருக்கிற பவரை யூஸ் பண்ணி அடுத்த நிமிஷம் அவங்களை என்னால உள்ள தள்ள முடியும். கோபத்துல அவங்க வீடியோவ நெட்ல... சொல்லவே உடம்பெல்லாம் நடுங்குது, அப்படி ஒன்னு நடந்துட்டா... அடுத்த நிமிஷம் உன் வாழ்க்கை? உன் குடும்பம்? எல்லாத்துக்கும் மேல ஆஷிக் என்ன சொல்லுவான். உன்னை வெறுத்துற மாட்டான்! அந்த ஒரு விஷயத்துக்காகத் தான் நான் பொறுமையா இருக்கேன்.” என்று சமீர் படபடக்க,
"ஆனா சமீர் ஆஷிக்கிட்ட என்னைக்கு இருந்தாலும் ஒருநாள் சொல்லணும்ல? எனக்கென்னவோ ஆஷிக் என்னைப் புரிஞ்சுக்குவான்னு தோனுது."
"புரிஞ்சிக்கலாம், புரிஞ்சிகிட்டா ஓகே. ஒருவேளை புரிஞ்சிக்கலைன்னா? ஒருவேளை நீயும் சுஜித்தும் பெங்களூர்ல லவ் பண்ணுனீங்கன்னு சுஜித் பொய் சொன்னான்னா நாம என்ன பண்றது?"
"இல்லை... ஆஷிக் நம்பமாட்டான். என் ஆஷிக் என்னைத் தான் நம்புவான்.” என்று ஏங்கி ஏங்கி அழுத்தவாறே அவள் கூற,
"ஒரு நண்பனா உன்னைப் புரிஞ்சிகிட்டு உனக்குச் சப்போர்ட் பண்ற நான், ஒரு ஹஸ்பண்டா என் மனைவிக்குச் சப்போர்ட் பண்ணுவேனான்னு தெரியலை. அந்த நேரம் ஆஷிக்கா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி யாரா இருந்தாலும் எப்படிப்பட்ட மஹானா இருந்தாலும் கோபம் வரும், சந்தேகம் வரும். அதுக்கப்புறம் புரிஞ்சிக்கிறது எல்லாம் வேற. ஆனா முதல்ல தெரிய வரும் பொழுது எந்த ஆம்பளையாலயும் ஏத்துக்க முடியாது.
ஜியா உன்கிட்ட ஒன்னு கேட்குறேன், நீ ஏன் ஆஷிக்கப் பிரிஞ்சு போன? கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு விஷயத்துக்குத் தானே? உன்னை மாதிரி தானே அவனும் யோசிப்பான். சோ ஆஷிக்கிட்ட மறந்தும் இதைப் பத்தி பேசணும்ன்னு நினைக்காத.” என்று அழுத்தமாய் ஜியாவிடம் கூற,
ஜியாவின் மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது. ஆஷிக்குக்கு மிகப் பெரிய துரோகம் செய்வதாக உணர்ந்தாள். மீளாத்துயரத்தில் மனம் சிக்கிக்கொள்ள உள்ளுக்குள் மிகவும் வலித்தது. ஆனால் அவளது உள்ளுணர்வு ஆஷிக் நிச்சயம் தன்னைக் கைவிடமாட்டான் என்று உறுதியாகக் கூற,
விசும்பிய வாறே ஜியா, "நீ சொல்றது மத்தவங்களுக்கு வேணும்னா பொருந்தும், ஆனா என் ஆஷிக் அப்படிக் கிடையாது. இல்லைன்னா இந்த ஆறு வருஷமும் என்னையே நினைச்சுட்டு இருந்திருப்பானா? அவன் புரிஞ்சுக்குவான் சமீர்."
"நீ இவ்வளவு உறுதியா சொல்றன்னா ஓகே, ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்ற ஒரு விஷயத்தை நீ பண்ணணும்."
"என்னது?"
"இன்னைக்கு ஆஷிக்கிட்ட வேற எதுவும் கேட்க வேண்டாம் ஜஸ்ட், நீ ஏன் சமீர்கிட்ட கோபமா பேசுனன்னு கேளு. அவனோட ரியாக்சனை பாரு. அப்போ உனக்குப் புரியும், நான் சொல்றதுல எவ்வளவு உண்மை இருக்கும்னு. நான் சொன்னதைச் செய், அப்புறமும் உனக்கு ஆஷிக்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தோனுச்சுனா சொல்லு. உன் முடிவு எதுவா இருந்தாலும் அதுல நான் உன்கூட இருப்பேன். டேக் கேர்!” என்றவன் விசும்பி கொண்டே இருந்தவளை தன்னால் முடிந்தவரை ஆறுதல் படுத்திவிட்டு, அலைபேசியைத் துண்டித்த நேரமும், ஆஷிக் உள்ளே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது.
ஜியா, ஆஷிக்கிடம் சமீரை பற்றி எப்படிக் கேட்பது, ஆஷிக் எப்படி எடுத்துக்கொள்வான் என்கின்ற தயக்கத்தில் இருக்க, அங்கே ஆஷிக்கும் அப்படித் தான் இவ்வளவு நடந்த பிறகும் தியாவை பார்க்க வேண்டும் என்றால், ஜியா எப்படிச் சம்மதிப்பாள். ஒருவேளை ஜியா மீண்டும் சந்தேகப் பட்டுவிட்டால் என்ன செய்வது. புரிஞ்சிக்காமல் அவள் ஏதும் சொல்ல, பதிலுக்கு அவளிடம் தானும் சண்டை போட உறவுக்குள் விரிசல் வந்து விடுமோ என்று தயங்கினான்.
இருவரும் எப்படி ஆரம்பிப்பது என்கின்ற தயக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.
பல யோசனைக்குப் பிறகு இருவரும் பேச வந்ததைப் பேசிவிடலாம் என்று ஒன்று சேர்ந்து, “உன்கிட்ட ஒன்னு பேசணும்...” என்று கூற,
"சரி, சொல்லு ஜியா."
"இல்லை, நீ சொல்லு ஆஷிக்."
"இல்லை, நீ சொல்லு.” என்று ஆஷிக், ஜியாவைப் பார்த்து சொல்ல,
எடுத்ததும் அதைப் பற்றிக் கேட்க விரும்பாதவள், "எங்க போயிருந்த, நான் தேடுனேன்.” என்று கேட்கவும், அவள் கொண்ட முகபாவம் அவனை எதோ செய்ய, தன்னைத் தன் மனைவி தேடியிருக்கிறாள். தனது நிமிட பொழுது விலகலும் தன்னவளை பாதிக்கின்றது என்பது அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, உள்ளத்தில் இருந்த நெருடல் மறைந்து இதழோரம் புன்னகை அரும்பியது.
"ஐயோ! என் செல்லத்தை ரொம்பத் தேட விட்டுட்டேனா? என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவாறு நெருங்கி வந்து ஜியாவை அணைத்துக்கொண்டவன்,
"நீ மட்டும் தான் தேடுனன்னு நினைச்சேன், ஆனா உன்னை விட இந்த ஹனி லிப்ஸ் ரொம்ப அதிகமாவே தேடிருக்கும் போல?” என்று கிறக்கமாக அவன் கூற,
காதல் ததும்பிய அவனது பார்வையின் வீச்சைத் தாங்க இயலாது அவள் தலை தாழ்த்த, அவனுடைய புன்னகை இன்னும் அதிகமாகியது.
"எனக்கும் தேடுது.” என்று அவன் கூறவும் வெட்கத்தில் அவள் முகம் இன்னும் சிவக்க, 'எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே, உன் வெட்கத்தையே கேட்டால் எதைத் தருவாய்' என்பது போல, வெட்கத்தில் குனிந்தபடி இருந்த தன்னவளை, இமை தட்டாமல் ரசித்துக் கொண்டே,
"பதில் சொல்லு.” என்றவனிடம்,
"அப்போ ஏன் என்னை தவிக்க விட்டுட்டு போன?” என்று அவனை நிமிர்ந்து பார்த்து கூற, அவனோ அவளை விழுங்கிவிடுவது போலப் பார்த்தான்.
அவளுக்கு மீண்டும் வெட்கம் தொத்திக் கொள்ள, “ஏன் அப்படிப் பார்க்குற?” என்று கூச்சத்தில் நெளிந்தவளை இன்னும் நெருங்கி வந்து,
"ஏன் பார்க்க கூடாதா?” என்று குறும்பாகச் சிரித்தவன்,
"சரி தேடலை தீர்த்துக்குவோமா?” என்றவனின் வார்த்தையின் அர்த்தத்தை அவள் உணர்ந்த நேரம், அவன் அவளது செவ்விதழை நூலளவு இடைவெளியில் நெருங்கி இருக்க,
"சமீர்கிட்ட ஏன் கோபப்பட்ட?" என்று அவன் கண்களைப் பார்த்து கேட்டுவிட, சட்டென்று அவள் கேட்ட கேள்வியில் வெடுக்கென்று விலகியவன்,
"சமீர் ஏதாவது சொன்னானா?” என்று புருவம் சுருங்கியபடி கேட்க,
"சமீர்கிட்ட நீ அப்படிப் பேசியிருக்கக் கூடாது."
"சமீர் என்ன சொன்னான்?” குரலில் ஒருவித அழுத்தம்.
"அவன் தப்பா எதுவும் சொல்லல..."
"என்ன சொன்னான்?” குரலில் இன்னும் அழுத்தம் தொனிக்க,
"அவன் என்ன சொன்னா என்ன? நீ ஏன் அப்படிப் பேசுன?"
"நான் அப்படித் தான் பேசுவேன்."
"ஆஷிக் என்ன பதில் இது? அவன் ஏன் அப்படி நடந்துகிட்டான்னு நீ என்கிட்ட ஒரு வார்த்தை கேட்ருக்கணும், அதை விட்டுட்டு...” என்பதற்குள்,
"கேட்டாலும் நான் அப்படித் தான் பண்ணிருப்பேன்.” என்றான் கோபமாக.
"ஆஷிக்!"
"லுக், நீ என்னோட மனைவி. உன்கிட்ட யாரும் குரலை உயர்த்திப் பேசுறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது."
"அவன் யாரோ இல்லை, அவன் என் ஃப்ரண்ட்!" அதற்கு பிறகு அவள் கூறிய, “அவன் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகப் போறவன்.” என்ற வரிகள் ஆஷிக்கின் காதில் விழுந்து எழுந்து வந்த வழியே ஓடி விட, பெருகி வந்த கோபத்தை உள்ளே அடக்கியவன்,
"நீ என்னோட மனைவி.” என்றவன், “யாரா இருந்தாலும் உன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன். அவன் உன் ஃப்ரண்டா இருந்தாலும் சரி. இந்த வீடு மாப்பிள்ளையா இருந்தாலும் சரி. ஏன் இந்தியாவோட ப்ரைம் மினிஸ்டராவே இருந்தாலும் சரி.” என்பதை மூன்றே வார்த்தையிலே அழுத்தமாகக் கூறி, இதற்கு மேல் அங்கே இருந்தால் எங்கே ஜியாவிடம் கோபமாக எதுவும் பேசி விடுவோமோ, என்று எண்ணி அங்கிருந்து செல்ல முனைந்த நேரம் அவனைத் தடுத்தவள்,
"அவன் ஹர்ட் ஆகிருப்பான்னு நினைக்கிறேன்."
"அதுக்கு?"
"ஆஷிக் நீ சாரி கேளு.” அவ்வளவு தான் உள்ளே அடக்கிய கோபம் வெடிக்க,
"ஷட் அப்! ஷட் அப்!” பார்வையுடன் சேர்த்து வார்த்தையும் சுட்டது. "நான் சாரி கேட்கணுமா? எங்க உன் முன்னாடி சொன்னா அது நல்லா இருக்காதுனு நீ போனதுக்கு அப்புறம், அதுவும் ரொம்பப் பொறுமையா இப்படிப் பேசாதீங்கன்னு சொன்னேன். அது எனக்கும் அவருக்கும் நடந்தது. நான் சொன்னது அவனுக்கு ஹர்ட் ஆகிருந்தா, அவன் என்கிட்ட பேசிருக்கணும். உன்கிட்ட வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிருக்கான். இது தான் கடைசி, இனிமே சாரி கேளு அது இதுன்னு ஏதாவது சொல்லு..."
அவனது சுடு சொல்லில் அவளது மனம் புண்பட்டது. ஏங்கி ஏங்கி அழும் மனைவியை ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்த ஆஷிக்கின் மனம் வலிக்க, சமாதானம் செய்ய முனைந்தவனை ரெண்டு விஷயங்கள் தடுத்தது.
'அவன் என் ஃப்ரண்ட்' என்று அவள் கூறிய அழுத்தமான வரிகள், ‘அப்போ நான் யார்? நண்பனுக்காக என்கிட்ட கேள்வி கேட்பியா?’ என்று அவனது உள்ளத்தில் இருந்த கோபத்தை அது கிளறிவிட, அதுக்குத் தூபம் போடுவது போல ஆனது அவள் இப்போது தேம்பி தேம்பி அழுவது.
'சமீர்கிட்ட நான் கோபமா சொல்லல, பொறுமையா தான் சொன்னேன்னு சொல்றேன். என்னை நம்பாம அவனுக்காக அழுதுட்டு இருக்கா.’ என்று அவனது மனம் அவனை வேறு திசையில் இழுத்து செல்ல,
காதலும் கோபமும் இட்ட போட்டியில் கோபம் வெற்றி பெற, மனதை கல்லாக்கிக்கொண்டு விருட்டென்று எழுந்து தன் அறையை விட்டு வெளியேறினான்.
மனதிற்குள் சொல்ல முடியாத வலி சூழ்ந்து கொள்ள அது அவளை மிகவும் வருத்தியது. ஆஷிக் தன்னிடம் இப்படி நடந்துகொள்வான் என்று கனவிலும் நினைக்காதவள், அவனது கோபத்தில் இருந்த காதலைப் பார்க்காது சமீர் சொன்னதை நினைத்து,
‘நான் அப்படி என்ன சொல்லிட்டேன். இதுக்கே நீ இப்படி நடந்துக்கிறியே. என்னைப் பத்தின உண்மைய நான் சொன்னா நீ என்னை ஒதுக்கிருவல ஆஷிக். என்னன்னு தெரியலை, நீ கோபப்பட்டா எனக்கு வேதனையா இருக்கு. நீ என் பக்கத்துல இல்லைன்னா அழுகை அழுகையா வருது. நீ எனக்கு வேணும்.’ மனதிற்குள்ளே ஏங்கினாள்.
விடீயோ காலில், “இப்போ தான்டா வீட்டுக்கு வந்தேன். வீட்ல எல்லாரும் உங்க ஜோடி சூப்பர்ன்னு சொன்னாங்க.” என்று சென்ன ரோஹித்திடம்,
"ம்ம்ம்...” என்று சுரத்தே இல்லாமல் ஆஷிக் சொல்ல,
"வாய்ஸ் டல்லா இருக்கு, என்னடா ஆச்சு?"
"ஜியாகிட்ட சண்டை போட்டுட்டேன்.” என்று நடந்த அனைத்தையும் ஆஷிக் ரோஹித்திடம் கூற,
"ஏன்டா இதெல்லாம் ஒரு ரீஸன்னு அவகிட்ட சண்டை போட்டியா?"
"கில்ட்டியா இருக்கு, அழுதுட்டாடா. கொஞ்சம் கத்திட்டேன், லைட்டா பயந்துட்டா பாவமா ஆகிட்டு. லவ் பண்ணும் பொழுது நான் கோபப்பட்டா, அவ நூறு மடங்கு அதிகமா கோபப்படுவா. ஒரு நாளும் அவ என்னைப் பார்த்து பயந்ததே இல்லை. இன்னைக்குச் சட்டுன்னு அவ கை உதறுனதும் எனக்கு கஷ்டமா போச்சு. இத்தனைக்கும் கத்தலாம் இல்லை, ஷட் அப்னு சொன்னதுக்கே கண்ணு கலங்கிட்டு.
நான் ஒரு லூசு தான், யோசிக்கும் போது இது சப்பை மேட்டர்னு தெரியுது ஆனா அந்த நேரம்... சமீர்க்காக அவ சப்போர்ட் பண்ணினதும் கோபம் வந்திருச்சு.”
"சந்தேகப்படுறியா ஆஷிக்?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்ட ரோஹித்திடம்,
ஆஷிக் சட்டென்று, “ச்ச... இல்லைடா...” என்று மறுப்பு தெரிவித்தவன், "நான் போய் என் ஜியாவை... டேய் இது சந்தேகம் இல்லை, என் வைஃப் மேல உள்ள பொசெசிவ்நெஸ். இதுல ஜியா மேலயோ சமீர் மேலயோ தப்பில்லை. சரியா சொல்லணும்னா இது என்னோட இயலாமை.
சமீர் குடுக்குற கம்ஃபர்ட்நெஸ்ஸ என்னால குடுக்க முடியலை. அதனால என் மேல கோபம் அதை அவகிட்ட காட்டிட்டேன். சமீர்கிட்ட மனச விட்டு பேசுறா, சிரிக்கிறா, அழறா. ஆனா என்கிட்ட ஒரு லெவலுக்கு மேல கம்ஃபர்ட்டபிளா இருக்கவே மாட்டிக்கிறா. ஒன்னு அழறா, இல்லைன்னா பயப்படுறா. மனசு விட்டு இன்னும் பேச மாட்டிக்கிறா.
என்னை ஹஸ்பண்டாவே பார்க்குறா. அவளைப் பொறுத்த மட்டிக்கும் நான் அவளோட புருஷன் அவ்வளவு தான். என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளியே தான் இருக்குறா. ஒரு நண்பனா இருக்கணும்னு முயற்சி பண்றேன். அதை அவ புரிஞ்சிகிட்ட மாதிரியே தெரியலை. இன்னும் எங்களுக்குள்ள கண்ணுக்கு தெரியாத திரை ஒன்னு இருந்துட்டே இருக்கு.
எனக்கு அது எல்லாத்தையும் விட ஒரு விஷயம் தான் ரொம்பப் பயமா இருக்கு. இவ இப்படியே பழசையே நினைச்சுட்டு இருந்தான்னா கண்டிப்பா ஒரு நாள் பயங்கர டிப்ரெஷனுக்குப் போயிருவா. அப்புறம் காப்பாத்துறது ரொம்பக் கஷ்டமா ஆகிரும். தப்பான முடிவு எடுக்கவும் வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது."
"டேய் இப்போதைக்கு ஜியா யார்கிட்ட கம்ஃபர்ட்டா இருக்காங்கிறத விட, அவளோட டிப்ரெஷன்ல இருந்து எப்படி வெளியில வர போறாங்கிறது தான் முக்கியம். அதுக்கான முயற்சிய ஒரு நண்பனா சமீர் எடுக்கலாம். ஆனா நண்பன் என்கிற லெவலை தாண்டி அவனால என்னைக்கும் வர முடியாது.
ஆனா ஒரு ஹஸ்பண்டா உனக்கு எந்த லெவலும் இல்லை. ஜியா மேல முழு உரிமையும் இருக்கு. ஜியாவ இதுல இருந்து வெளியில கொண்டு வர வேண்டிய முழுப் பொறுப்பும் உனக்கு இருக்கு, உனக்கு மட்டும் தான் இருக்கு.
உனக்காக நான் இருக்கேன், கடைசிவரை உன்னைக் கைவிட மாட்டேன்னு, அவளோட மனசுக்கு உணர்த்து. உனக்காகச் சாக இல்லை, உனக்காகவே தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்னு புரிய வை. ஒரு பொண்ணுக்கு 'நான் இருக்கேன்' என்கிற வார்த்தை அவ்வளவு நம்பிக்கைய குடுக்கும். அதுவும் தன்னுடைய ஹஸ்பண்ட் மூலமா அந்த நம்பிக்கை கிடைக்கும் பொழுது, சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அந்தச் சந்தோஷத்தை, அந்த நம்பிக்கைய அவளுக்குக் குடு.
ஆயிரம் தான் சமீர்க்காக அவ உன்கிட்ட சண்டை போட்டாலும், அவன் கோபப்பட்டுக் கத்தும் பொழுது அவளோட மனசு வருத்தப்படலையே, கை நடுங்கலையே, கண்ணீர் வரலையே?
ஆனா உன்னோட சின்ன அதட்டல கூட அவளால தாங்கிக்க முடியலைன்னா என்ன அர்த்தம்? உன்னோட ஒவ்வொரு அசைவும் ஜியாவை பாதிக்குதுன்னு அர்த்தம். உன்னோட மனைவிக்கு நீ வேணும். அவ, 'நான் இருக்கேன் ஜியான்னு' நீ சொல்ல மாட்டியான்னு ஏங்கிட்டு இருக்கா.” என்று ரோஹித் ஒரு நண்பனாக ஆஷிக்கின் பிரச்சனைக்குத் தீர்வு கூற, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, அவனது மனதில் இருந்த குழப்பம் நீங்கி முகத்தில் தெளிவு பிறந்தது.
போனவுடன் ஜியாவிடம் மன்னிப்பு கேட்டு தேவைப்பட்டால் சமீரிடமும் மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்று எண்ணியவனுக்கு, அப்பொழுது இன்னும் ஒரு ரெண்டு மூன்று நாட்களில் வர போகும் தன் காதல் மனைவியின் பிறந்தநாளுக்காகத் தான் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ் ஞாபகத்துக்கு வர, ‘எப்படியும் நாளைக்கு டெல்லி போகணும். ஜியாகிட்ட இப்போ சமாதானம் ஆகிட்டா கண்டிப்பா அவளும் வருவேன்னு சொல்லுவா. அவளைக் கூட வச்சுட்டு கண்டிப்பா எந்தச் சர்ப்ரைஸும் பண்ண முடியாது. கண்டுபுடிச்சாலும் புடிச்சுருவா. கண்டுபுடிச்சா என் பத்து வருஷ கனவு வேஸ்ட்டா போயிரும். பேசாம ரெண்டு மூணு நாளைக்குக் கோபத்தைக் கண்டினியு பண்ணுவோம்.
கொஞ்ச நாள் தானே, அதுக்கப்புறம் நாம பொழியிற காதல் மழையில திக்கு முக்காட வச்சுருவோம். ஆனா இப்போ முழிச்சுருந்தான்னா என்ன பண்றது? சரி, எதாவது சொல்லி சமாளிப்போம். என்ன ஆனாலும் செல்லத்தோட முகத்தை மட்டும் கண்டிப்பா பார்க்க கூடாது. கோபமா முகத்தை வச்சுக்குவோம்.’ என்று கஷ்டப்பட்டுக் கோபத்தை வரவைத்துக் கொண்டு சில நொடிகள் வாசலிலே தாமதித்து நின்றவன், பின்பு மெல்ல கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
ஆனால் அவன் கஷ்டப்பட்டு வரவழைத்த கோபத்திற்கு அர்த்தமே இல்லாமல் போனது. ஜியா மெத்தையில் குழந்தையைப் போல உடலை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள். அருகில் சென்று பார்த்தான், தனக்காகக் காத்திருந்து காத்திருந்து உடுத்திருந்த புடவையைக் கூட மாற்றாமல், தன்னுடைய மேல் சட்டையையை தன் கரங்களுக்குள் இறுக்கி வைத்தவாறு, துயில் கொண்டிருந்தவளை பார்த்த பொழுது அவனுக்குள் சிலிர்த்தது.
“கொஞ்ச நேரத்துக்கே நான் இல்லாம உன்னால இருக்க முடியலையே. இன்னும் ஒரு மூணு நாள் எப்படிடி இருப்ப?” என்றவன் சரிந்த கேசத்தைக் காதோரமாய் ஒதுக்கிவைத்தான்.
அழுது அழுது சிவந்திருந்த வதனத்தைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று குத்தியது.
'ஐயம் ரியலி சாரி செல்லம், கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கோ.’ என்று அவளது உறக்கம் கலையாமல் சிகையைக் கோதிவிட்டவாறு மென்மையாய் நுதலில் இதழ் ஒற்றியவனின் விழிகளில், தன்னவளின் குவிந்த இதழ்கள் தன்னைச் சத்தமில்லாமல் கட்டி இழுக்க மெல்ல புன்னகைத்தவன்,
அவளது தூக்கம் கலையாது குளியல் அறைக்குச் சென்று தன் இரவு உடையை மாற்றிக் கொண்டு, அவளது அருகில் வந்து மெதுவாக அவளது கையில் இருந்த தன் சட்டையை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, தன் மார்பை அவளுக்கு மஞ்சமாக்கி தன்னோடு இறுக்க அணைத்தவாறு, தன் காதல் மனைவியின் உறக்கத்தை ரசித்தவாறு அவனும் உறங்கினான்.
மறுநாள் காலை தன்னை அறியாமலே அவனது கரங்கள் ஜியாவை தேடி மெத்தை மீது கோலம் போட, அதன்பிறகு அவள் இல்லாதை உணர்ந்தவனின் முகம் சற்று பொலிவிழக்க, குளியல் அறையின் கதவு திறக்கப்பட்டதும், அவனது கண்கள் தானாக மலரை போல விரிய முகத்தில் தேஜஸ் கூடியது.
ஈரத்தலையில் இருந்து சொட்ட சொட்ட நீர் வழிய, சிவப்பு நிற புடவையில் எந்தவித ஆபரணமும் எந்தவித ஒப்பனையும் இன்றி, தேவதையைப் போல எழில் கொஞ்ச வெளியே வந்தாள் ஜியா.
மேல் இருந்து கீழ் வரை பார்வையாயாலே வருடியவனுக்கு உள்ளுக்குள் ஆசை அலை அடிக்க, 'ஏன்டி என்னை இப்படிப் பந்தாடுற? உனக்கு இருக்குடி...' என்று தனக்குள் காதலாய் கோபித்தவன், அவளது முகத்தைச் சந்திக்காமலே குளியல் அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.
"ஆஷிக் இன்னைக்கே கிளம்புறானாம், அப்படி என்ன திடீர் வேலை? உன்கிட்ட எதாவது சொன்னானாமா?” என்ற ஹாஜராவிடம்,
“இல்லை அத்தை, இதோ வந்திடுறேன்.” என்றவள் வேகமாகத் தன் அறைக்குச் சென்று, கண்ணாடியின் முன்பு நின்று ஒப்பனை செய்து கொண்டிருக்கும் தன் கணவனிடம் மூச்சு வாங்க,
"இன்னைக்கே போறோமா? நான் இன்னும் பேக்கிங் பண்ணலையே? ஏன் சொல்லல, அம்மா தான் சொன்னாங்க.” என்று தன் கீழுதட்டை லேசாகக் கடித்தவாறு கோபமாய் கொஞ்சியவளை, திரும்பி பார்த்தவனின் விழிகளும் மனதும் அவளது இதழின் அழகில் சிக்கிக்கொள்ள, என்றைக்கும் விட இன்று அவளது இதழின் எழில் அவனை மிகவும் இம்சித்தது. அவனுடைய பார்வையின் வித்தியாசம் அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த வெட்கி தலை குனிந்தாள்.
அவளுடைய செந்நிற வதனம் அவனுக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை மேலும் தூண்டிவிட, 'ஐயோ முடிலடி, காலையில இருந்து ஏன்டி என்னை இப்படி இம்சை பண்ற?' என்றவனுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது.
மற்ற நாளாக இருந்தால் அவளது அனுமதி இன்றி உன் காதல் தீரும் வரை முத்தத்தால் உன் தேவையைத் தீர்த்துகொள்ளவாய். ஆனால் இப்பொழுதான் நீ கோபமாய் உள்ளாயே என்று, அவனது மனசாட்சி கேலி செய்ய, அதை கடிந்து கொண்டவன் மீண்டும் கண்ணாடியைப் பார்த்தவாறு,
"போறோம் இல்லை, போறேன். என்னோட பேக்கிங் பண்ணிட்டேன். எனக்கு அங்க வேலை இருக்கு, நான் கூப்பிடும் பொழுது வா.” என்று அழுத்தமாய் அவளது முகம் பார்க்காமல் கூறினான்.
"நானும் வரேன்னே...” செல்லமாய் கெஞ்சியவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளக் கைகள் துடிக்க,
"ஏன் சண்டை போட்டு என்னை டென்ஷன் பண்ணவா? சொல்லும் பொழுது வா. சொல்லும் பொழுது ம்ம்ம்...” என்று தன் சூட்கேஸை எடுத்தவாறு அவன் விறுவிறுவென்று கீழே செல்ல, ஜியாவின் உள்ளம் ஊமையாய் கதறியது.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 53 & 54

Last edited: