- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 57
அது ஜியா ஆஷிக்கைப் பிரிந்திருந்த நேரம்.
தியாவின் சூழ்ச்சியால் ஜியா, ஆஷிக் மீது சந்தேகம் கொண்டு அவனை விட்டு பிரிந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், ஒருநாள் ஆஷிக், ஜியாவை காண அவளது இல்லத்திற்கு வந்தான். வந்தவன் ஜியாவிடம் ரகளைச் செய்ததால் அவர்களின் விவரம் ஜியாவின் சித்திக்கு தெரியவர,
அதுவரை ஜியாவிடம் அன்பாக இருந்தவர் ஜியாவின் காதல் விவரம் தெரிந்ததில் இருந்து, அவளிடம் வெறுப்பை அள்ளி கொட்ட தொடங்கினார்.
அவள் பல முறை தனக்கும் ஆஷிக்குக்குமான காதல் முறிந்துவிட்டது என்று எடுத்து கூறியும், அவளை நம்பாத அவளது சித்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வசைபாடிக்கொண்டே இருந்தார்.
ஜியா, ஆஷிக்கைப் பிரிந்த வலியில் துன்பப் பட்டுக்கொண்டிருக்க, அவளது புண்பட்ட மனதை அவளது சித்தியின் கடும் சொற்கள் மேலும் காயப்படுத்திக் கொண்டிருந்தது.
அவள் வேதனையில் வதங்கி போய் இருந்த நேரம் பார்த்து, அவளுக்கு லண்டனில் உள்ள பிரபல யூனிவர்சிட்டியில் மெரிட்டில் மாஸ்டர் ஆஃப் சர்ஜெரி படிக்கும் வாய்ப்பு கிடைக்க,
இங்கையே இருந்தால் ஆஷிக்கை மறப்பது கடினமாக இருக்கும். கண்டிப்பாக ஆஷிக் தன்னைக் காண அடிக்கடி வருவான். இதனால் சித்திக்கு தன் மீது இன்னும் வெறுப்பு அதிகமாகும் என்று கருதியவள்,
தன் காதல் முறிவால் தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு, தான் லண்டன் சென்று தன் மேற்படிப்பை தொடர்வது ஒன்றே நல்ல மருந்து என்று முடிவெடுத்தாள். தன் சித்தப்பாவின் உதவியோடு லண்டனிற்கு படிக்கச் சென்றாள்.
ஆள் பழக்கம் இல்லாத ஊரில் மூன்று வருட படிப்பு அவளது வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாடமாகவும் அமைந்தது. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டாள். தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் என்று அவளுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை அது கொடுத்தது.
இதெயெல்லாம் கற்றுக்கொடுத்த அவளுக்கு ஆஷிக்கை எப்படி மறப்பது என்பதை மற்றும் அதால் கற்று கொடுக்க முடியவில்லை. பலமுறை யாருக்கும் தெரியாமல் அழுதுவிடுவாள். ஆனால் தன் வாழ்க்கையில் இனி காதல், திருமணம் என்கின்ற ஒன்று எப்பொழுதும் கிடையாது என்பதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தாள்.
இதனாலே யாரிடமும் அதிகமாக அவள் இணங்க விரும்பவில்லை. முக்கியமாக ஆண்கள்! அவளிடம் பழகும் அனைவரும் முதலில் நட்போடு பழகிவிட்டு இறுதியில் காதல் கவிதை பாட, இதனாலே எப்பொழுதும் நேர் கொண்ட கூர்மையான பார்வை, மிடுக்கான நடை, அளவான புன்னகை அதுவும் நோயாளிகளிடம் மட்டும் என்று அவள் முழுவதுமாய் மாறி இருந்தாள்.
இதனாலே அனைவரும் இவளிடம் இயல்பாகப் பேசவே தயங்கினார்கள். ஆடவர்கள் எல்லாரும் பார்வையாலே பருகிவிட்டு ஒதுங்கி கொள்வார்கள். நெருங்கினால் எச்சரிக்கையாய் முதலில் சுட்டெறிக்கும் பார்வை, மீறினால் கன்னத்தில் சூடு பறக்கும். ஆக சுடுகின்ற பூ நான், தொட்டால் தொல்லை என்பது போல மொத்தமாகத் தன்னை மாற்றிக்கொண்டாள்.
இவளது இந்த மாற்றமே இதர விஷயங்களில் கவனம் சிதறாது படிப்பில் அதிக ஈடுபாடோடு இருப்பதற்குக் காரணமாய் அமைந்தது. கடின உழைப்பு, மருத்துவம் மீதும் அதீத பற்று இவ்விரண்டும் இவளுக்கு அங்கே பெயர் வாங்குவதற்கு காரணமாய் அமைந்தது. சிறந்த மாணவியாகத் தேர்ச்சி பெற்று தன் எம்எஸ் படிப்பை வெற்றிகரமாக அவள் முடித்த நேரம், அவள் படித்த அதே கல்லூரியில் அதிகச் சம்பளத்தில் டாக்டராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அதே நேரம் பெங்களூரில் டாக்டராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்க, சற்றும் யோசிக்காமல் தான் படித்த படிப்பு தன் நாட்டு மக்களுக்குத் தான் போய்ச் சேர வேண்டும் என்று முடிவெடுத்தவள், பெங்களூரில் தன் டாக்டர் பயணத்தைத் தொடங்கினாள்.
அது புகழ் பெற்ற பெரிய மருத்துவமனை. தனியார் நிறுவனம் ஒன்று, முக்கியமாக ஏழை மக்களுக்குக்காக நடத்தி வருகின்றது. அங்கே எல்லா விதமான நோய்க்கும் மிகவும் நேர்த்தியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், மக்களின் மத்தியில் எப்போதும் அந்த மருத்துவமனைக்கென்று நல்ல அடையாளம் இருந்தது.
அங்குப் புகழ் பெற்ற பல மருத்துவர்கள் முழுநேரமாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரிவதால், அந்த மருத்துமனையில் ஒரு இன்டெர்ன்ஷிப்பாவது கிடைக்காதா என்று பல இளம் மருத்துவர்கள் ஏங்குவார்கள்.
அங்கே பணிபுரியும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது. நல்ல ரெகார்டஸ், நம்பிக்கையான நபர்களிடம் இருந்து சிபாரிசு இவ்விரண்டும் இருந்தால் மட்டுமே அங்கே பணிபுரிய முடியும்.
சொந்தமாக ஆராய்ச்சி கூடம், மருந்துகள் தயாரிப்பு நிலையம், ஒவ்வொரு விதமான நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க அந்த அந்தத் துறையில் தேர்ந்த நிபுணர்கள் என்று பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில், தான் பணிபுரிய போகிறோம் என்று நினைக்கும் பொழுதே ஜியாவுக்கு கர்வமாக இருந்தது.
எந்தச் சூழ்நிலையிலும் தன் கடமையில் இருந்து விலகாது, நேர்மையாக, பாரபட்சம் இன்றித் தன்னை நம்பி வரும் உயிரை தன் உயிரை விடப் பெரிதாய் மதித்துக் காக்க வேண்டும் என்று தனக்குள் உறுதியாய் சூழ் உரைத்தவள்,
ஒரு நொடி கூடத் தன் கடமையில் இருந்து விலகாது, மிகவும் சிரத்தையாகத் தன் பணியைச் செய்தாள். வெறும் கடமைக்கென்று இல்லாமல் உண்மையான பற்றோடு தன் பணியைச் செய்தாள். ஒவ்வொரு நோயாளிகளிடமும் அன்போடு பழகுதல், தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுதல், அதே நேரம் தவறு நடந்தால் யார் என்றாலும் சுட்டிக்காட்டுதல் என்று வந்த ஓராண்டிலே அனைவரும் போற்றும் அளவிற்குச் சிறந்து விளங்கினாள். இதயம் மற்றும் மகப்பேறு சிகிச்சையில் சிறந்து விளங்கினாள். டாக்டர் ஜியா எம்எஸ் என்றால் அந்த ஹாஸ்பிடலில் தெரியாத நபரே கிடையாது.
ஓராண்டு நன்றாகக் கடந்திருந்த நிலையில்தான் முதல் முதலாக ஜீவா, சுஜித்தை சந்தித்தாள். அந்த ஹாஸ்பிடலின் விதிமுறைபடி யாராக இருந்தாலும் புதிதாய் பொறுப்பேற்ற எந்த மருத்துவர்களும், ஒரு ஆறு மாத காலம் சீனியர் மருத்துவர்களிடம் செயல்முறை பயிற்சி கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
பயிற்சி காலத்தில் அவர்களின் திறமைகள் மற்றும் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் பொறுத்து, அவர்களுக்கு ஏத்த பணி வழங்கப்படும். இந்தப் பயிற்சி காலத்திலே தங்களின் திறமையை நிரூபித்துச் சிறந்த பெயர் வாங்கின மருத்துவர்களும் உண்டு.
ஒழுக்கயின்மை காரணமாகத் தங்களின் பெயரை கெடுத்துக் கொண்ட மருத்துவர்களும் உண்டு. அன்று அவள் புதிதாய் வந்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை பற்றிய செயல்முறை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஜீவாவும் சுஜித்தும் சற்றுத் தாமதமாக வகுப்பிற்கு வர, அவர்களை ஜியா உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டு மீண்டும் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவள் அவர்களை வெளியே அனுப்பிச் சில மணிநேரமே கடந்திருக்க, எந்தவித அனுமதியும் கேட்காமல் ஜீவாவும் சுஜித்தும் மீண்டும் உள்ளே வர கோபமுற்ற ஜியா,
"உங்களை நான் வெளியில போகச் சொன்னேன், ஏன் வந்தீங்க? அதுவும் பெர்மிஷன் இல்லாம?” என்று கடுமையாகக் கேட்க,
"பெர்மிஷனா? உன்கிட்டையா? நான் ஏன் கேட்கணும்?” என்ற சுஜித்தைத் தொடர்ந்து ஜீவா,
"வெளியில விசாரிச்சோம், நீ இந்த ஹாஸ்பிடல் வந்து ஒரு வருஷம் தான் ஆகுதாம். எங்களுக்கும் ஒன் இயர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. நாங்க இன்டெர்ன்ஸ் இல்லை, உன்னைப் பார்க்கும் பொழுது வயசான மாதிரியும் தெரியல. ஸோ எக்ஸ்பீரியன்ஸ்லையும் வயசுலயும் உனக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஸோ ஐயம் சாரி பேப்!” என்று ஜீவா கண்சிமிட்டும் பொழுதே, ஜியாவிற்குப் பளார் என்று அறைவிட வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டவள், தன்னைக் கேலிப் பார்வை பார்த்த ஜீவாவையும் சுஜித்தையும் பார்த்துக் கடுமையாக முறைத்தவாறே அங்கிருந்து செல்லவும்,
இதையெல்லாம் கவனித்த டீன் டாக்டர் மகேஷ், ஜியாவிடம் இதைப் பற்றி விசாரிக்க, இதைப் பெரிதாக்க விரும்பாத ஜியா மீண்டும் ஏதும் பிரச்சனை என்றால் கம்ப்ளெயிண்ட் செய்வதாகக் கூறி இதை அப்படியே விட்டுவிட, அதுவே அவர்களுக்குக் கொம்பு சீவி விட்டது போல ஆனது.
ஜியாவை அவர்கள் பார்வையால் சீண்டுவது, ஏதாவது கூறி கேலி செய்வது என்பது தொடர்ந்த போதிலும், அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவர்களின் சீண்டல்கள் எல்லாவற்றிற்கும் தனது ஒற்றைப் பார்வையாலே பதில் கூறிவிடுபவள், அவர்கள் இருவரையும் கணக்கிலே எடுத்து கொள்ளவில்லை.
இப்படி இருக்க, ஒரு நாள் கேன்டீனில் சுஜித் ஜீவாவிடம், “என்ன ஆனாலும் சரிடா, அந்த ஜியா செமையா இருக்காடா. என்ன பார்வைடா! அப்படியே கண்ணுக்குள்ளையே நிக்கிறா...” உருகி வழிய,
“அவளை மாதிரி பொண்ணுங்க எல்லாம் உள்ள ஒருமாதிரி இருப்பாங்க, வெளியில ஒரு மாதிரி இருப்பாங்க. மடக்குறது ரொம்ப ஈஸி.” என்றான் ஜீவா.
"இல்லை, ஷீ இஸ் நாட் தட் டைப்."
"என்ன பெட்? ரெண்டு செகண்ட்ல மடக்கி காட்றேன்."
"அப்படியா? அப்போ சரி, ரெண்டாயிரம் தரேன் மடக்கி காட்டு.” என்ற சுஜித்திடம், ஜியாவைப் பற்றி முழுதும் தெரியாமல் அவளும் தங்களுடன் பழகும் மற்ற பெண்களைப் போல என்று, தவறாக எண்ணிக்கொண்ட ஜீவா சம்மதம் தெரிவித்தான்.
அதற்கு ஏத்தது போல ஜியாவும் டீயை ஆர்டர் செய்துவிட்டு அவர்களுக்கு எதிரே இருந்த டேபிளில் வந்து அமர, சுஜித்திடம் கண்ணைக் காட்டிய ஜீவா தன் காலரை தூக்கி விட்டபடி, ஜியாவின் முன்னே காலியாக இருந்த இருக்கையில், "ஏய், ஹாய்!” என்றவாறு வந்து அமர ஜீவாவை தன் பார்வையாலே அலட்சியம் செய்தாள்.
தன் அலைபேசியிலே மூழ்கிருக்க, ஏதேதோ பேச்சு கொடுத்தவன் அவள் எதற்கும் பதில் அளிக்காமல் போக, அவளுக்கு டீ பரிமாறப்பட்டதும், "உங்களுக்கு டீதான் புடிக்குமா? டீயும் ரொம்ப ஹாட்டா இருக்கு. நீங்களும் ரொம்ப ஹாட்டா இருக்கீங்க.” என்று கூறி அஷ்டகோணலாகப் புன்னகைக்க,
அதைக் கண்டு முகம் சுளித்தவள், அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், டேபிளில் இருந்த தன் அலைபேசியின் திரையில் உள்ள குறுஞ்செய்தியை, தன் விரல்களால் நகட்டிக்கொண்டே டீயை பருகினாள்.
"நைஸ் பிங்கர்ஸ்!” என்று கிறக்கும் குரலில் கூறியவன், தன்னை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தவளைக் கண்டு புன்னகைத்தவாறு,
"இந்த அழகான கைல ஸ்டெத்தஸ்கோப், கத்தி, கிளவுஸ் இதெல்லாம் சுத்தமா நல்லா இல்லை. ஸோ ஜஸ்ட் ஹோல்ட் மை ஹான்ட்ஸ். சந்தோஷம்னா என்னன்னு உனக்குக் காட்டுறேன்.” என்றவன், விஷம புன்னகையோடு அவளது கரத்தைப் பிடிப்பதற்காகத் தன் கரத்தை கொண்டு வர, அவன் தொடுவதற்குள் சட்டென்று தன் கரத்தை எடுத்தவள், அவன் கொஞ்சமும் எதிர்பார்ப்பதற்குள் தன் கையில் இருந்த சூடான டீயை அவனது கை மேல் அப்படியே ஊற்ற, சூடு தாங்காமல், “ஆ...” என்று கத்தியவனிடம்,
"என்னைத் தொடணும்னு நினைச்சாலே சுட்டு எரிச்சுருவேன். என்கிட்ட இதெல்லாம் வேண்டாம்.” என்றவள் அவனைத் தன் பார்வையாலே எரித்தவாறு அங்கிருந்து சென்றாள்.
அப்பொழுது ஜியா முன் வந்து நின்ற ஜீவா, தகாத வார்த்தைகள் பேச தன் பொறுமையை இழந்த ஜியா பளார் என்று அவன் கன்னத்தில் சூடு பறக்க ஒன்று கொடுக்க, ஜீவாவிற்கு அனைவரின் முன்பும் அவமானமாகப் போனது.
ஜீவாவுக்குச் சாதகமாகத் தன்னிடம் சண்டையிட்ட சுஜித்தை கடுமையாக எச்சரித்தவள், அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணி, டீனிடம் அவர்கள் மீது புகார் கொடுத்தாள். ஜீவாவையும் சுஜித்தையும் கண்டித்தவர் அவர்களை ஜியாவின் முன்னிலையில்,
"ஜியா, இவங்களை நான் வார்ன் பண்ணிட்டேன். நீங்க விரும்புனீங்கனா இவங்களை ஹாஸ்பிடல்ல இருந்தே ரிஸ்ட்ரிக்ட் பண்ணிரலாம்.” என்று கூற,
அவர்கள் இருவரையும் ஏளனமாய் பார்த்த ஜியா, "இல்லை சார், அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்குக் குடுக்க வேண்டிய பனிஷ்மெண்ட நான் ஏற்கனவே குடுத்துட்டேன். இனிமே மறுபடியும் எதாவது பண்ணினாங்கன்னா பார்த்துக்கலாம்.” என்று தோரணையோடு கூறினாள்.
டீனின் அறையை விட்டு வெளியே வந்த பின் அவர்களைச் சொடக்கு போட்டு தன் அருகே அழைத்தவள், "லுக், நான் நினைச்சா உங்களோட டாக்டர் கேரியரையே காலி பண்ண முடியும். இந்த ஆறு மாசம் ட்ரேனிங்ல. ஒரு பேட் ரீமார்க்ஸ் நான் குடுத்தா போதும், இந்தத் திமிரெல்லாம் காத்தோட பறந்து போயிரும். என்கிட்ட உங்க வேலையெல்லாம் காட்டாதீங்க. உங்க ரெக்கார்டஸ் எல்லாம் நல்லா இருக்கு, அதுக்காகத் தான் உங்களை மன்னிச்சு விடுறேன். கீப் தட் இன் யுவர் மைண்ட்!” என்றவள், அவர்கள் மீது கடின பார்வை ஒன்றை வீசிவிட்டு எப்பொழுதும் போல மிடுக்காக நடந்து செல்ல, இருவரது பார்வையிலும் கோபம் தெறித்தது.
இந்தப் பிரச்சனை முடிந்து பல வாரங்கள் கடந்திருக்க, சுஜித், ஜீவா இருவரும் ஜியாவின் நிழல் இருக்கும் இடத்தில கூட அதிகமாகச் செல்ல மாட்டார்கள்.
அவர்கள் அமைதியாக இருந்ததால் ஜியாவும் அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் இந்த அமைதி தன் வாழ்க்கையில் வீசப் போகும் ஒரு பெரும் புயலுக்கு அறிகுறி என்பதை ஜியா உணர மறந்துவிட்டாள்.
இப்படி இருக்கும் பொழுது தான் ஒருநாள் கேன்டீனில், உள்ள ஒரு தூணில் சாய்ந்தவாறு ஜியா தன்னை மறந்து அலைபேசியில் யாரிடமோ தீவிரமாக இதயச் சிகிச்சையைப் பற்றிப் பேசி கொண்டிருக்க, அப்பொழுது சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு ஒரு நபர் தீக்குச்சியை அணைக்காமல் அதைத் தூக்கி எறிந்தார்.
தீக்குச்சி ஜியாவின் துப்பட்டாவில் பட்டு லேசாக எரிய ஆரம்பிக்க, இதை எதையும் கவனிக்காத ஜியா அலைபேசியிலே சிரத்தையாக இருந்தாள்.
அப்பொழுது திடீரென்று ஆறடி உயரம் கொண்ட ஒரு இளைஞன் வேகமாக ஓடி வந்து ஜியா மீதிருந்த துப்பட்டாவை பிடித்து இழுக்க, அவனைத் தவறாகப் புரிந்து கொண்டவள் நொடிபொழுது தாமதிக்காது அவனது கன்னங்களைத் தன் கைகளுக்கு இரையாக்கிய பிறகே, அவன் தன்னைக் காப்பாற்ற தான் அவ்வாறு செய்தான் என்பதைப் புரிந்து கொண்டவள் தன் செயலுக்காக மிகவும் வருந்தினாள்.
அவனிடம் மனமுருகி மன்னிப்பும் கேட்க, சிறிது நேரம் கோபமாக இருந்தவன் ஜியாவின் செயலின் பின்னால் இருந்த அவள் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டு அவளை மன்னித்து விட, ஜியாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
"இவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை மன்னிப்பீங்கனு நான் எதிர்பார்க்கல.” என்று தன் மனதில் எண்ணிய கேள்வியை ஜியா வாய் விட்டே கேட்டுவிட, அதற்கு தன் கன்னம் குழி நிரம்பப் புன்னகைத்தவன்,
"என் கேரக்டரை நீங்க கலங்க படுத்தினப்போ கோபம் வந்துச்சு, ஆனா ஒரு செகண்ட் அந்த இடத்துல எனக்கு வேண்டப்பட்ட பொண்ணு இருந்து, அவளுக்கு இப்படி ஒன்னு நடந்தா நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நினைச்சேன், கோபம் போய்டுச்சு. எனக்குப் பொண்ணுங்க உங்களை மாதிரி போல்டா இருந்தா ஒரு தனி மரியாதையே வரும். இப்போ கூட எனக்கு உங்க மேல ஒரு தனி மரியாதை தான் வந்திருக்கு.” என்றவன் அங்கிருந்து செல்ல, அவனைத் தடுத்தவள் மீண்டும் அவனிடம் மன்னிப்பு கேட்க,
"மன்னிச்சுட்டேன்ங்க, நீங்க கில்டியா எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்.” என்றவனைக் கண்டு நெகிழ்ந்தவள்,
"ஐயம் டாக்டர் ஜியா!” என்று தன் கைகளை நீட்டியவாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.
“ஓ... ஐயம் டாக்டர் சமீர், இங்க தான் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட்டா இருக்கேன்.” என்று பதிலுக்குத் தன் கரங்களை நீட்டியவாறு தன்னை அறிமுகப் படுத்தியவன், நெருப்பை அணைத்த பொழுது லேசாக உள்ளங்கையில் காயம் ஏற்பட்டிருக்க, ஜியா அவனது உள்ளங்கையைக் குலுக்கும் பொழுது ஏற்பட்ட வலியில், “ஆ...” என்று கத்த, உடனே அவனுக்கு உரிய முதலுதவியைச் செய்தவள், “எரியுதா?” என்று கேட்க,
"இந்த எரிச்சலை விட இந்த எரிச்சல் தான் பயங்கரமா இருக்கு.” என்று அவள் அடித்த தன் கன்னத்தைக் காட்டியவாறு புன்னகைக்க, ஜியாக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து ஜீவா, சுஜித், வருண் மூவரும் சமீரிடம் நலம் விசாரித்தவாறு அவனது அருகில் வர, சுஜித்தையும் ஜீவாவையும் கண்ட மறுநொடி ஜியாவின் முகம் மாறிவிட சமீர்,
ஜியாவிடம், "திஸ் இஸ் மை ஃபரண்ட் வருண் கார்த்திக் மெடிக்கல் அனலிஸ்ட்.” என்று அறிமுகப்படுத்தியவன், சுஜித்தைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்குள் ஜியா,
"தெரியும் சுஜித் குமார், சாரி டாக்டர் சுஜித் குமார், அப்புறம் சார் டாக்டர் ஜீவா ஆனந்த்.” என்றவள், சமீரிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் சமீர் தன் நண்பர்களைக் கேள்வியாகப் பார்க்க, அடுத்தநாள் ஜீவா, சுஜித் இருவரும் சமீர் முன்னிலையில் தாங்கள் செய்த தவறுக்காக ஜியாவிடம் மன்னிப்பு கேட்டனர்.
தன் நண்பர்கள் செய்த தவறுக்காகச் சமீரும் ஜியாவிடம் மன்னிப்பு கேட்க,
நண்பர்களாவே இருந்தாலும் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் சமீரின் குணம் ஜியாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. தான் சந்தித்த அனைத்து ஆண்களிலும் சமீர் மிகவும் வித்தியாசமாக இருந்தான். பேச்சில் கனிவு, செயலில் நிதானம், பெண்களிடம் பேசும் பொழுது ஓரடி தள்ளி நின்று அவர்களின் கண்களைப் பார்த்து பேசும் கண்ணியம் இவையெல்லாம் ஜியாவுக்குச் சமீரிடம் நட்பாக பழக ஒரு காரணமாக அமைந்தது. நாட்கள் ஓட ஓட சமீர், ஜியாவின் நட்பு இன்னும் பலப்பட்டுக்கொண்டே போனது.
சமீருக்காக ஜீவா, சுஜித்திடம் தான் கொண்ட வெறுப்பைப் படிப்படியாக மாற்றிக் கொண்டாலும் அவர்களிடம் அதிகம் பேசாதவள், கேட்ட கேள்விக்குப் பதில் என்று அவர்களிடம் ஒரு இடைவெளி விட்டே பழகினாள்.
ஜியா மீது ஒரு ஈர்ப்புக் கொண்ட சுஜித்திற்குச் சமீர், ஜியாவின் நட்பு கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருந்தது. எப்பொழுதாவது வருண், ஜீவாவின் கேலி பேச்சுக்கு மாட்டிக்கொண்டாலும், சமீர் முன்பு எதையும் காட்டிக்கொள்ள மாட்டான். வருண், ஜீவாவும் சமீர் முன்பு ஜியாவைப் பற்றி ஒரு வார்த்தை பேச வேண்டும் என்றாலும் மிகவும் யோசித்துத் தான் பேசுவார்கள்.
***
நிலவே 58
இப்படி அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் தற்கொலை முயற்சி செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மாளவிகா என்கின்ற பெண் அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வரப்பட்டாள்.
அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில் அவள் கருவுற்று இருப்பது தெரிய வர, எப்படியோ ஜியா குழந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தப் பாதிப்பும் வராமல் அவர்களது உயிரை காப்பாற்றினாள்.
நாட்கள் கடந்திருக்க அந்தப் பெண்ணைக் காண சொந்தம் என்று யாரும் வராமல் போக, பற்றா குறைக்குத் தற்கொலை முயற்சி. கர்பிணியாய் வேறு அந்தப் பெண் இருப்பதால், அவள் மீது ஜியாவிற்கு இரக்கம் வர, அந்தப் பெண்ணுக்குத் தன்னால் முடிந்த உதவி ஏதும் செய்ய முடிந்தால், செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் அவளை ஜியா அணுகினாள்.
அவளது உடம்பை வழக்கம் போலப் பரிசோதித்து விட்டு, "ஹலோ மாளவிகா, இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று இயல்பாகக் கேட்க,
அந்தப் பெண்ணோ எந்த உணர்வும் இல்லாமல் கடமைக்கு, "ம்ம்ம்...” என்று மட்டும் லேசாகத் தன் தலையை ஆட்டினாள்.
"உங்களை யாருமே பார்க்க வரல, உங்க வீட்ல உள்ளவங்களுக்கு நீங்க இங்க இருக்கிறது தெரியுமா?” என்று கேட்க,
"எனக்கு யாரும் இல்லை.” என்றவள் மீண்டும் அமைதியாக இருந்தாள்.
"இங்க பாருங்க மாளவிகா, வாழ்க்கையில பிரச்சனை எல்லாருக்கும் வரும். அதுக்கெல்லாம் தற்கொலை ஒரு முடிவாகாது.” என்ற ஜியாவிற்கு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தவள்,
ஜியா கடைசியாக, "எத்தனை பேர் குழந்தை இல்லைனு கஷ்டப்படுறாங்க. நீங்க வயித்துல ஒரு உயிரை சுமந்துட்டு இருக்குற நேரம் இப்படிப் பண்ணலாமா?” என்றதும் அந்தப் பெண்ணின் முகத்தில் விவரிக்க முடியாத அப்படி ஒரு உணர்வு. திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வடிய, ஜியா கணப் பொழுதில் அந்தப் பெண்ணின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டு ஒன்றும் புரியாமல் குழப்பமாக இருந்தாள்.
அந்தப் பெண் தன் கண்ணீரைத் துடைத்தவாறு ஜியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, "நிஜமாகத்தான் சொல்றீங்களா? நான் அம்மாவாகப் போறேனா?” என்றவாறு தன் வயிற்றைத் தடவியவளின் முகத்தில் ஒருவித ஆனந்தம்.
"உங்களுக்குத் தெரியாதா?” என்ற ஜியாவிடம், இல்லை என்பது போலத் தலையை அசைத்தவள்,
"என் வினித் இல்லாத இந்த உலகத்துல எப்படி வாழப் போறேன்னு தான் நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். ஏன் என்னை காப்பாத்துனீங்கனு ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனா நான் வாழ்றதுக்கு எனக்கு ஒரு அர்த்தம் கிடைச்சுருக்கு. என் வினித்தோட உயிர் இப்போ என் வயித்துல வளருது. இனிமே என் குழந்தைக்காக நான் வாழப் போறேன்.” என்றவளுக்கு ஜியா ஆறுதல் அளித்தாள்.
பிறகு அந்தப் பெண்ணின் மூலமாக அவளுக்கு ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருப்பதை அறிந்த ஜியா, அவளை முழுமையாகப் பரிசோதித்தாள்.
பரிசோதனையில் அந்தப் பெண் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பது தெரிய வர, ஜியா மிகவும் வருத்தப்பட்டாள்.
மாளவிகா இப்பொழுது கருவுற்று இருப்பதால், அறுவை சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு அவரது உடல் நிலை இல்லை. அப்படி அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பிரசவத்தின் பொழுது ஐம்பது சதவிகிதம் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு இருக்க, ஜியாவுக்கு இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையாக அமைந்தது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை அவள் கையாண்டிருக்கிறாள். ஆனால் இது மற்ற அனைத்திலும் விட மிகவும் ஆபத்தான ஒன்று.
மனச்சிக்கல் இல்லாத சூழ்நிலை, நேர்த்தியான உணவு முறை, முறையான ட்ரீட்மெண்ட், ஒழுங்கான செக் அப், மருந்து, மாத்திரை இதெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், நிச்சயமாக இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள முடியும்.
ஏன் இப்படிப்பட்ட பிரச்சனை கொண்ட எத்தனையோ பெண்கள், நல்லபடியாகக் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாரும் மனதளவில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாகக் கண்டிப்பாக அவர்களது குடும்பம் இருக்கும்.
இங்கே மாளவிகாவின் நிலைமை அப்படி அல்ல. கணவனை இழந்து, சொந்த பந்தங்கள் இன்றித் தனியே வாழ்கிறாள். உடலை விட மனதளவில் மிகவும் பலவீனமாக இருக்கிறாள். உடம்பு பலவீனமானால் மருந்து கொடுத்து சரி செய்யலாம், ஆனால் மனதிற்கு என்ன செய்வது? இப்படிப்பட்ட நேரத்தில் எந்தவித உணர்ச்சி சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் மாளவிகா மனதளவில் மிகவும் வலுவற்று இருப்பதை ஜியா நன்கு உணர்ந்திருந்தாள்.
பொதுவாக இப்படிப்பட்ட நேரத்தில் மருத்துவ விதிபடி தாயின் உயிருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால், மாளவிகாவிடம் பொறுமையாக எடுத்து சொல்ல, ஆனால் மாளவிகாவோ அபார்ஷனுக்கு முற்றிலுமாய் மறுத்துவிட்டு ஜியாவிடம் தனக்குத் தன் குழந்தை வேண்டும் என்றும், தனக்கு ட்ரீட்மண்ட் அளிக்குமாறு உதவி கேட்டு கெஞ்ச, ஜியாவிற்கு அவளைப் பார்க்கும் பொழுது மிகவும் சங்கடமாக இருந்தது.
ஜியா மாளவிகாவுக்கு ட்ரீட்மென்ட் அளிக்கத் தயங்கியதற்குக் காரணமே அவரது உடல் நிலைதான்.
அவரது உடல் நிலைக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிதான் ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும். இப்படி இங்கையே அட்மிட் ஆக வேண்டும் என்றால், ஹாஸ்பிடல் விதிபடி நோயாளிகளின் சொந்தபந்தங்களில் இருந்து, யாராவது ஒருவர் பொறுப்பெடுத்தாக வேண்டும்.
மாளவிகாவோ யாருடைய துணையும் இல்லாமல் தனியே இருக்கிறாள். மாளவிகாவைப் பார்த்து இரக்கம் கொண்ட ஜியா. மாளவிகாவிற்குத் தானே பொறுப்பெடுக்கலாம் என்று முடிவெடுக்க, ஹாஸ்பிட்டலில் ஜியாவின் முடிவுக்குப் பல பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏதும் தவறு நடந்தால் ஜியாவின் மருத்துவ வாழ்க்கைக்கே கேடு வர கூடும் என்று, அவரவர்களின் அனுபவபடி அறிவுறுத்தினர்.
இதனால் மிகவும் குழப்பத்தில் இருந்த ஜியாவுக்கு, சமீர் தான் ஆதரவாய் இருந்தான்.
ஜியா எடுக்கும் எல்லா முடிவுகளிலும் பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்தவன், அதில் கடைசி மட்டும் உறுதியாக இருந்தான்.
சமீரின் அறிவுரையால் தெளிவடைந்த ஜியா அவனுடைய ஆதரவோடு, மாளவிகாவின் கேஸை சில நிபந்தனையோடு எடுக்க முடிவு செய்தாள்.
அதன் பேரில் மாளவிகாவிடம், "உங்க கேஸ நான் எடுத்துக்கணும்னா நான் சொல்றபடி நீங்க நடந்துக்கணும். முக்கியமா உங்க மனச ரொம்ப அமைதியா வச்சுக்கணும். நீங்க கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆனாலும், அது உங்க ஹார்ட்டை தான் பாதிக்கும். உயிருக்கு ஆபத்தாகிடும்." என்றவள் மேலும் தொடர்ந்து,
"உங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குறேன். ரெண்டு வீக்ஸ்ல உங்க உடம்புல நான் எதிர்பார்க்கிற இம்ப்ரூவ்மென்ட் இருந்தா ஓகே, இல்லனா ஐயம் சாரி... ஒரு டாக்டரா நான் உங்க உயிரை தான் சூஸ் பண்ணுவேன். அதுக்கு நீங்க ஒத்துக்கணும். இதுக்கு ஓகேனா இந்த ஃபார்ம்ல சைன் பண்ணுங்க.” என்ற தன் நிபந்தனையைத் தெரிவித்த ஜியாவிடம் மாளவிகா,
"உங்கள நான் நம்புறேன், கண்டிப்பா நீங்க என்னையும் என் குழந்தையையும் காப்பாத்துவீங்க.” என்றார்.
அன்றில் இருந்து மாளவிகா, ஜியாவின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவார். முன்பை விட மாளவிகா உடலளவிலும் மனதளவிலும் தேர்ச்சி பெற்றிருக்க, ஜியா எதிர்பார்த்ததை விட அவரது உடம்பில் அதிக முன்னேற்றம் தெரியவே, ஜியாவுக்குள் புது நம்பிக்கையே பிறந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். மாளவிகாவை சந்தித்ததில் இருந்து ஒருவித கவலையிலே இருந்த ஜியாவின் முகத்தில், மீண்டும் சந்தோஷத்தை கண்ட சமீரும் மகிழ்ச்சி அடைந்தான்.
அனைத்தும் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, ஆறு மாதங்கள் ஆன நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தையிடம் வழக்கத்தை விட அதிகப்படியான வளர்ச்சி தெரிய, திடீரென்று ஏற்பட்ட இந்த மாற்றம், ஜியாவிற்கு மிகவும் குழப்பத்தை அளித்தது.
இதைப் பற்றித் தனது சீனியர் மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்தவளுக்கு, தெளிவான எந்த முடிவும் கிடைக்கவில்லை. சில பேர் "இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில பேருக்கு அப்படி இருப்பது இயல்பு.” என்று கூற,
சில பேர், “நீங்க இந்த கேஸ்ல ரொம்பவே அட்டாச்ட்டா இருக்கீங்க. அதான் எங்களுக்கு நார்மலா தெரியிற விஷயம் உங்களுக்கு அப்நார்மலா தோனுது. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, இதைப் பத்தி அதிகமா யோசிக்காதீங்க. சைக்காலஜிக்கலா நீங்க ரொம்ப அஃபக்ட் ஆகுற மாதிரி தோ னுது” என்று அவர்கள் ஜியாவை மனநலம் பாதிக்கப்பட்டவள் போலப் பார்க்க,
இன்னும் சில பேர், "நாங்க ஆரம்பிக்கும் பொழுதே இந்தக் கேஸ உங்கள அவாய்ட் பண்ண சொன்னோம். உங்க ஏஜ்ல உங்களுக்கு இந்த ரிஸ்க் தேவையா? எக்ஸ்பீரியன்ஸ் ஆன டாக்டர்ஸே இப்படிப்பட்ட கேஸ் வந்தா அவாய்ட் பண்ண தான் பார்ப்பாங்க. இது கேரியர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாச்சே, நீங்க கொஞ்சம் யோசிச்சுருக்கணும். ஆனா அந்த பேஷண்டுக்கு சொந்தம்னு யாரும் இல்லாதனால உங்களுக்குப் பெருசா எந்தப் பிரச்சனையும் வராது.
இருந்தாலும் நீங்க என்ன பண்ணுங்க, எதுக்கும் முன் எச்சரிக்கையா அந்தப் பொண்ணுகிட்ட அவங்களோட ஹெல்த்த காரணம் காட்டி, சப்போஸ் உயிருக்கு எதுவும் ஆனாலும் டாக்டரும் நிர்வாகமும் எந்தப் பொறுப்பும் இல்லைனு ஒரு சைன் வாங்கிருங்க. அது பெட்டரா இருக்கும்.” என்று கூற, ஜியாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மனுஷனோட உயிரை விட கேரியரா முக்கியம்? ஒரு டாக்டரா இருந்துட்டு இவர்களால் எப்படி இப்படி மனுஷ தன்மையே இல்லாமே பேசமுடியுது என்று கலங்கியவள், சமீரின் துணையோடு அவனுக்குத் தெரிந்த மருத்துவரிடம் ஆலோசனை எடுத்தாள்.
ரிபோர்ட்ஸை ஆராய்ந்தவர் இதில் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூற, அவளும் சற்று ஆறுதல் அடைந்தாள். ஆனால் அதெல்லாம் சிறிது காலத்துக்குத் தான்.
நாளுக்கு நாள் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் தெரிய, இதற்கு மேல் சமீரையும் தொந்தரவு செய்ய விரும்பாதவள், மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசுவதும் பயன் இல்லை என்பதை உணர்ந்து, தானே இதில் உள்ளதை கண்டறிய திட்டமிட்டாள்.
அதன் பேரில் மாளவிகாவின் அனைத்து டெஸ்ட் ரிபோர்ட்ஸையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்தவளுக்கு ஒன்றும் புலப்படாமல் போக, ஒருவேளை நான் கொடுக்கும் மருந்தால் கூட இப்படி இருக்குமோ? என்று எண்ணியவள்,
ஒரு வாரத்துக்கு மாளவிகாவுக்கு வழக்கமாகக் கொடுக்கும், எந்த மருந்து மாத்திரையும் கொடுக்க வேண்டாம் என்று நர்ஸிடம் தெளிவாகக் கூறிவிட்டாள்.
நாட்கள் கடந்திருக்க ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த ஜியாவுக்கு, குழந்தையின் வளர்ச்சி முன்பை விட நாளுக்கு நாள் வழக்கத்தை விட, அதிகரித்துக் கொண்டே போவது மேலும் பதற்றத்தை தான் அதிகரித்தது.
காரணம் ஐந்து மாதங்களே கடந்திருக்கும் மாளவிகாவிற்கு எட்டு மாத குழந்தைக்கு உரிய வளர்ச்சி தெரிய, உடனே அன்று மதியமே மாளவிகாவிற்கு அனைத்து விதமான டெஸ்ட்களையும் எடுப்பதற்கு ஏற்பாடு செய்தாள்.
மாளவிகாவின் ரிப்போர்ட்டில் தனக்குச் சந்தேகம் வந்ததில் இருந்து, ஜியா முக்கால்வாசி இரவு ஹாஸ்பிடலில் தன் அறையில் தான் தங்குவாள். அப்படி இருக்க அன்று இரவு ஒரு பன்னிரெண்டு மணியளவில் ஜியா தன்னை அறியாமல் கண் அசந்திருந்த நேரம்,
நர்ஸ், “மாள... விகா...” என்று பதறிக்கொண்டு வந்தழைத்த மறுநொடி, அங்குச் சென்ற பொழுது ஜியா கண்ட காட்சி அவளது நெஞ்சை அப்படியே உலுக்கிவிட்டது.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 59 & 60

Last edited: