- Joined
- Dec 14, 2024
- Messages
- 90
- Thread Author
- #1
நிலவே 59
படுக்கையெல்லாம் குருதியால் நனைந்திருக்க, வலியில் கண்கள் மேலே சொருகியவாறு முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, அந்த அறையே அலறும் அளவிற்கு மாளவிகா,
"ஜியா மேடம்... ஆ... ஆ...” என்று வலியில் கதறி அழுது கொண்டிருந்தாள்.
குருதி நிற்காமல் ஓட, ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வழியிலே, ஜியாவின் கைகளை இறுக்கி பற்றிக்கொண்ட மாளவிகா,
"நீங்க எங்களைக் காப்பாத்திருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று கூறிய ஒரு சில நிமிடத்தில் பயங்கர அலறலுடன், உடல் பாதிச் சிதைந்திருக்க இறந்த நிலையில் தன் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு, அவளும் ஜியாவின் மார்பில் சாய்ந்தவாறே தன் கண்களை மூடினாள்.
"எங்களைக் காப்பாத்திருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்ற வரி ஜியாவை நிலைகுலைய செய்தது.
"அம்மா..." என்ற அலறல் அவளது காதை இரண்டாகக் கிழித்தது. பிடித்துப் பார்த்தாள், நாடியில் துடிப்பில்லை. தன் சுவாசம் அடைத்துக்கொள்ள, குருதியில் மூழ்கி உயிரற்று கிடந்த பிஞ்சு உயிரைப் பார்த்தவாறே தேகம் விரைத்து, கண்கள் சொருகி கீழே விழுந்தாள் ஜியா.
மறுநாள் நினைவு திரும்பி கண்விழித்து ஜியா பார்த்த பொழுது சமீர், சுஜித், ஜீவா, வருண் நால்வரும் அவள் அருகில் இருந்தனர். அவளுடன் வேலை பார்க்கும் அனைவரும் அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பலவாறு வார்த்தைகளைத் தயார் செய்து, தங்களின் பங்கிற்கு ஆறுதல் அளித்தனர்.
சமீர் தன்னால் முடிந்தவரை ஜியாவுடனே இருந்தான். அந்த நிலையில் அவளைத் தனியாக விடுவதில் அவனுக்கு மனமில்லை.
இரண்டு நாட்கள் கழிந்திருக்க அனைத்தும் சகஜ நிலைக்கு வந்துவிட, ஜியா மட்டும் அதிர்ச்சியிலே இருந்தாள். பார்க்கும் நோயாளிகளிடம் எல்லாம் மாளவிகாவின் முகம் கண்டாள். குழந்தைகள், ரத்தம் என்றாலே அலறினாள். காதில் மாளவிகாவின் கதறல் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்க, எதிலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை.
'மாளவிகாவிற்கு எங்கே அநியாயம் செய்து விட்டோமோ?' என்று சிந்தனைகள் கடிவாளம் இடாத குதிரையைப் போலத் தறிகெட்டு ஓடியது. மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. கண்களில் நீர் திரண்டது. முகமெல்லாம் வெளிறியது. உடம்பெல்லாம் நடுநடுங்கியது. ஆழிப்பேரலையில் சிக்கியது போல நீங்கா துயரத்தில் துடித்தாள்.
அப்பொழுது, “எக்ஸ்க்யூஸ் மீ மேம்...” என்று அனுமதி வேண்டியவாறு அவளது அறைக்குள் வந்த நர்ஸ், ஜியாவின் வெட வெடத்த முகத்தைப் பார்த்து,
"மேம் நான் வேணும்னா, அப்புறமா வரட்டுமா?” என்று கேட்க,
தன் முகத்தைக் கைகுட்டையால் துடைத்தவள், “சொல்லுங்க லலிதா, என்ன விஷயம்?” என்று தன்னை நிதானப்படுத்திகொண்டு கேட்க,
அவள் தயங்கியபடி, "மேம் இது மிஸ்ஸஸ் மாளவிகாவுக்கு லாஸ்ட்டா எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்." என்றவாறு ஜியாவிடம் மாளவிகாவின் ரிபோர்ட்ஸை நீட்ட, சுரத்தே இல்லாமல் ஆளே இல்லை, ரிப்போர்ட்ஸ்க்கு என்ன வேலை என்று கசந்த புன்னகையோடு,
"இப்படி டேபிள்ள வச்சுட்டு போங்க.” என்றுவிட்டு தன் கண்களை மூடியவளிடம்,
"அவங்களோட திங்ஸ் இன்னும் அப்படியே அவங்க ரூம்ல இருக்கு.” என்று தயங்கிய நர்ஸிடம், தன் கண்களை மூடியவாறே இடைமறித்தவள்,
"என்கிட்ட ஏன் கேட்குறீங்க?” என்று விரக்தியாகக் கேட்க,
"இல்லை மேம், ரெண்டு நாளா நீங்க அப்செட்டா இருந்தீங்க. அதனால ரூமை இன்னும் க்ளீன் பண்ணாம வச்சுருக்கோம். நீங்க ஒருவார்த்தை சொல்லிட்டீங்கன்னா க்ளீன் பண்ணிருவோம்."
"கோ அஹெட்!” என்றவள் மீண்டும் தன் கண்களை மூடிக்கொள்ள,
மாளவிகாவை கண்ட முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக அவளது நினைவிற்கு வர, மனம் ஒவ்வொன்றாக அசைபோட்டதில் நன்றாக வளர்ந்திருந்த கருவில், இந்தத் திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவளது மனம், அதே கேள்வியில் சுழன்று கொண்டிருக்க விடை மற்றும் கிடைத்தபாடில்லை.
தலையே சுற்றியது. கோபத்தில் தன் மேசையில் இருந்த ஃபைலை தட்டி விட, ஃபைலோடு சேர்த்து இதர சில பொருட்களும் அங்கிருந்து சிதறி, “மே ஐ...” என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த சுஜித்தின் கால்களில் வந்து விழ, ஜியா அதைக் குனிந்து எடுக்க முற்பட அவளைத் தடுத்த சுஜித்,
"ப்ளீஸ் ஜியா வாங்க, வந்து உட்காருங்க.” என்று நாற்காலியில் அமர வைத்து, கண்ணாடி கோப்பையில் தண்ணீர் பிடித்துக் கொடுக்க அதை வாங்காதவள் ஒருவித பதற்றத்துடனே இருக்க, அதை மேசையில் வைத்தவன்,
தானே குனிந்து அனைத்து பொருட்களையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு, சிதறிய பேப்பர்களையும் ஃபைலில் அடுக்கியவாறு அதை அவளிடம் நீட்ட,
அவன் முன்பு தன் பதற்றத்தைக் காட்ட விரும்பாதவள் மிகச் சிரமப்பட்டு, தன் கைகளின் நடுக்கத்தைக் கட்டுப்படுத்தியவாறு வாங்கிக்கொண்டு,
"என்ன விஷயம் மிஸ்டர் சுஜித்?” என்று நிதானத்துடன் கேட்க,
"வார்டு நம்பர் டூ நாட் டூ பேஷண்ட்க்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ். டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி ஆகிடுச்சு, உங்களோடு சைன் இருந்தா போதும்.” என்றதும் ஃபைலை வாங்கி ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆராய்ந்துவிட்டு சைன் போட்டு கொடுத்தவள், அவன் தன் அறையை விட்டுச் செல்லும் வரை அவனையே பார்த்து தன் புருவத்தை ஒருவித எரிச்சலோடு சுளித்தாள்.
மாளவிகாவின் ஃபைலையே பார்த்த ஜியா, ட்ரான்ஸ்பரென்ட்டான அந்த ஃபைலின் மேல் பகுதி வழியாக மங்கலாக ஏதோ வார்த்தைகள் தெரிய, அதைச் சிறிது நேரம் பார்த்தவள் ஒருவித சலிப்புடன் தண்ணீரை அருந்த முற்பட, திடீரென்று எதையோ யோசித்தவள் சட்டென்று ஃபைலை வேகமாய்ப் பிரித்து, முதல் பக்கத்தில் இருந்த பிளட் ரிப்போர்ட்டை படித்தவள் அதிர்ந்து விட்டாள்.
அதிர்ச்சியும் கோபமும் கலந்தவளாய் யாருக்கோ ஃபோன் போட்டவள், "ஆஸ்க் லலிதா டூ பீ இன் மை கேபின் ரைட் நவ்.” என்று அழுத்தமாய் கூறிய மறுநொடி, தன் அறைக்குள் நுழைந்த லலிதாவின் முகத்தில் பிளட் ரிப்போர்ட்டை காட்டி அதைப் படிக்கும்படி சொல்ல,
லலிதாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் தன் மீது எதோ ஒரு கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
"என்னாச்சு மேடம்?” என்றவளை இடைமறித்த ஜியா,
"எப்படி உங்களால இவ்வளவு இர்ரெஸ்பான்ஸிபிளா இருக்கு முடிஞ்சுது?" என்று சீற,
"என்ன... என்... னா... ச்சு... மேடம்?"
"மாளவிகாவுக்கு எந்த மெடிசினும் ஒன் வீக் குடுக்க வேண்டாம்னு சொல்லிருந்தேன், அப்புறம் எப்படிப் பிளட் ரிப்போர்ட்ல மெடிசின் ட்ரேசஸ் இருக்கு?” என்று கடுகடுக்க,
"எனக்குச் சத்தியமா தெரியாது மேடம். நீங்க சொன்ன மாதிரி நான் அன்னைக்கு எந்த மெடிசினும் குடுக்கலை.” என்று ஜியாவின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சியவளை ஜியாவால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
‘லலிதா இல்லைன்னா, வேறு யாரு இப்படிச் செஞ்சிருப்பாங்க? இப்படிப் பண்றதுனால என்ன லாபம்? ஒருவேளை இந்த மெடிசின் தான் மாளவிக்காவோட...’ என்று கேள்விகள் போட்டி போட்டு வந்தது.
‘மெடிசின் ட்ரேசஸ் ஃபவுண்ட்னு மட்டும் தான் ரிப்போர்ட்ல இருக்கு. அது என்ன மெடிசின், யார் பண்ணினாங்கன்னு எப்படிக் கண்டு புடிக்கிறது?’ என்று குழம்பினாள்.
‘நோ ஜியா, இதுல குழம்புறதுல யூஸ் இல்லை திங்க்... திங்க்...’ என்று யோசித்தவள், “மாளவிகாவோட ரூம்... நோ இதைப் பண்ணினவங்க நமக்காக நான்தான்னு க்ளூவை விட்டுட்டா போவாங்க? இல்லை தான்! ஆனா எம்ப்ட்டி இன்ஜெக்சனை கையோட கொண்டு போக மாட்டாங்க.’
அடுத்த நொடி மாளவிகாவின் அறைக்குள் நுழையவும் அங்கே ஸ்வீப்பர்கள் அறையில் உள்ளே பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க,
அவர்களைத் தடுத்தவள் எடுத்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுமாறு பணிக்க, அவர்கள் மறுபேச்சுப் பேசாமல் அங்கிருந்து சென்றனர்.
அறையைச் சோதனையிட்டவளுக்குத் துல்லியமான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல நான்கைந்து மருந்து ஊசிகள், மருந்து பாட்டில்கள், குருதி படிந்த கையுறைகளோடு சேர்த்து எதிர்பாராத ஒன்றும் கிடைத்தது.
அது, இரெண்டு முனையில் ஒரு முனை மட்டும் பாதி உடைந்த நிலையில் இருந்த வி வடிவமுள்ள சிறு டாலர்.
சிறிதும் தாமதிக்காமல் மருந்து ஊசியில் இருந்து மருந்து பாட்டில் வரை, உறைந்தும் உறையாமலும் இருக்கும் இமியளவு திரவத்தையும் தனித் தனியே பரிசோதித்தாள். கிடைத்த நான்கு மருந்து பாட்டில்களும் மாளவிகாவிற்குத் தான் பரிந்துரைத்த மருந்து என்று ஊர்ஜிதமாக, மருந்து ஊசியில் ஐந்தில் நான்கு மட்டும் தான் மாளவிகாவிற்கு வழக்கமாகக் கொடுத்த மருந்து.
மீதம் இருந்த ஒரு மருந்து ஊசியில் உள்ளது வேறு மருந்து, அதை ஜியா பரிந்துரைக்கவில்லை. அந்த மருந்து கலவையை மேலும் ஆராய்ந்து பார்த்தவள், அதில் வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஹாஸ்ட் டிஆர் இருப்பது தெரிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்.
ஏன் செய்தார்கள்? எப்படித் தடை செய்யப்பட்ட மருந்து நம் ஊரில்? என்று வரிசைகட்டி கொண்டு வந்த கேள்விகளை ஒதுக்கியவள், முதலில் யார் என்ற கேள்விக்கு விடை அறிய துடித்தாள்.
யார் அந்த ‘எக்ஸ்’ ஆணா? பெண்ணா? எப்படி தன் கேள்விக்குப் பதிலை அறிவது என்று அவள் மனம் குழம்பியது.
தடை செய்யப்பட்ட மருந்தை இவ்வளவு தைரியமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக வெல் பிளான் பண்ணிதான் பண்ணிருப்பாங்க. அப்போ எப்படி ஊசியையும் க்ளவ்ஸையும் போட்டுட்டு போனாங்க?
விழி பிதுங்கின தடயம் என்று அவளிடம் மீதம் இருப்பது உடைந்து போன டாலர் மற்றும் ஒரே ஒரு கையுறை. அது தன்னுடையது இல்லை என்பதை உறுதிப்படுத்தியவள், கையுறை நிச்சயம் அது ‘எக்ஸ்’ உடையது தான். ஏன் என்றால் நோயாளிகளைத் தொட்டு பார்த்து, பரிசோதிக்கும் பொழுதைத் தவிர மற்ற நேரங்களில் செவிலியர்கள் யாரும் கையுறை அணிவதில்லை. லலிதாவிற்கு மாளவிகாவுக்கு நேரம் தவறாமல் மருந்து கொடுப்பது மட்டும்தான் வேலை.
ஆகக் கையுறை ‘எக்ஸ்’ உடையது என்பது நூறு சதவிகிதம் ஊர்ஜிதமாயிற்று. ஆனால் கையுறையில் இருக்கும் இந்த ரத்த கறை யாருடையது? எப்படி வந்தது? என்னை செய்வது? ரத்த கறைக்கு விடை இல்லாவிட்டலும், கையுறையின் உட்புறத்தில் பதிந்திருக்கும் கை ரேகையை வைத்து குற்றவாளியை பிடித்துவிடலாம் என்றாலும், எத்தனை பேரின் கை ரேகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது? இது எப்படிச் சாத்தியம் என்று குழம்பினாள்.
சிசிடிவி ஃபுட்டேஜ் என்று யோசித்தாலும் அங்கையும் சிக்கல். காரிடரில் இரண்டு முனையிலும் கேமரா இருக்கிறது. ஆனால் மாளவிகாவின் அறை காரிடருக்கு, நேர் நடுவே செல்லும் பாதையின் உள்ளே இருப்பதால், கேமராவால் உட்புறத்தை படம் பிடிக்க முடியாது. அதனால் யார் நேரே செல்கிறார்கள், யார் திரும்பி உள்ளே செல்கிறார்கள் என்பதை மட்டும் வரை தான் பார்க்க முடியும். யார் எந்த அறைக்குச் செல்கிறார்கள், என்பதைக் கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை.
மாளவிகாவின் அறை பக்கதில் டூட்டி மருத்துவர்களின் ஒய்வு அறை மற்றும் மெடிக்கல் லேப் இருப்பதால், அங்கே டாக்டர்ஸ், நர்ஸ் அடிக்கடி செல்வார்கள். யாரை எல்லாம் சந்தேகிப்பது? மீண்டும் குழப்பம் மிஞ்ச சோர்ந்து போனாள்.
ஆனாலும் மனம் விடாமல் யோசித்தது, ‘லலிதாவையும் என்னையும் தவிர வேற யாரும் மாளவிக்காவோட ரூம்க்கு போக வேண்டிய சான்ஸ் இல்லை. அப்போ எப்படி, “எக்ஸ்’ போயிருக்க முடியும்? போயிருந்தா கண்டிப்பா மாளவிகா சொல்லிருப்பாங்க. மாளவிகா அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. அப்படின்னா மாளவிகா சுயநினைவுல இல்லாத அப்போ மட்டும் தான் இதைப் பண்ணிருக்க முடியும்.
எப்பவும் நாம குடுக்குற மருந்துடைய எஃபக்ட்ல தான் மாளவிகா தூங்குவாங்க. அன்னைக்கு மருந்து குடுக்கல, அவங்க தூங்கிருக்க மாட்டாங்க. அன்னைக்கு நான் அவங்களைக் கடைசியா நைட் ஏழு மணிக்கு...’ என்ற பொழுதே மாளவிகாவை ஏழு மணிக்கு ஜியா செக் அப் செய்யப் போன பொழுது,
"என்ன மாளவிகா நல்லா தூங்குனீங்களா?"
"எங்க டாக்டர், இன்னைக்கு மருந்து வேண்டாம்னு சொல்லிருந்தீங்களா, எப்பொழும் போல அசந்து தூங்க முடியல. ஆனாலும் வழக்கமா தூங்குறதுனால, கண்ணு அசந்திருந்தேன். எப்பவும் லலிதா ஊசி போட்டு போட்டு, இன்னைக்கும் ஊசி குத்துற மாதிரி ஒரு உணர்வு, கண் முழிச்சுட்டேன் அதுல இருந்து தூக்கம் வரல."
"நீங்க இருக்கீங்களே...” என்று சிரித்த ஜியா,
"வலி ஏதும் இருக்கா?"
"அப்படி இல்லை, ஆனா கொஞ்ச நாளா உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு."
"ஓ... இந்த மாதிரியான நேரத்துல அப்படித் தான் இருக்கும்...” இப்படித் தனக்கும் மாளவிகாவிற்கும் நடந்த உரையாடலைப் பற்றி யோசித்தவள்,
‘அப்படின்னா அந்தக் குற்றவாளி நான் இருக்கும் பொழுது கூட அங்க தான் இருந்திருக்கானா? மாளவிகாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போறவரைக்கும் உள்ளே தான் இருந்திருக்கான்.’ என்று எண்ணும் பொழுதே, ஜியாவின் கண்களில் கண்ணீரும் கோபமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.
மாளவிகா முழிப்பானு நினைச்சுருக்க மாட்டான், அவ முழிச்சதும் என்ன செய்யிறதுனு தெரியாம பாத்ரூம்க்குள்ள போய் ஒளிஞ்சிருக்கணும். மாளவிகாவை அங்கேயிருந்து அழைச்சுட்டு போனதுக்கு அப்புறம் தான் வெளியில வந்திருப்பான். இந்த ஊசியையும் ஃக்ளவ்ஸையும் ஏன் விட்டுட்டுப் போனான்? இந்த டாலர் எப்படி உடைஞ்சிருக்கும்? கண்டிப்பா குனிஞ்சிருக்க மாட்டான்.
அப்படினா பாத்ரூமை விட்டு வெளியில வந்ததும் கோபத்துல கையைச் சுவத்துல தட்டிருப்பான். அதுல டாலர் உடைஞ்சி கீழ விழுந்திருக்கும். கையில அடிபட்டதுனால ரத்தம் வந்திருக்கு, அதனால ஃக்ளவ்ஸை கலட்டிருக்கான், டென்ஷன்ல மறந்து போய் ஊசியையும் ஃக்ளவ்ஸையும் அங்கையே விட்டுட்டான்.
ஸோ இது செயின்ல உள்ளதில்லை, ப்ரேஸ்லெட்ல உள்ள டாலர்.’ என்று தன் மனம் போனபோக்கிலே ஊகித்தவள்,
‘இனிமேல் என்ன நடந்தாலும் சரி, மாளவிகா அவளது அப்பாவி குழந்தை இவர்களின் மரணத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும்.’ என்று உறுதியாய் முடிவெடுத்தாள்.
சமீரிடம் இதைப் பற்றிப் பேச எண்ணியவள் பின்பு தானே குற்றவாளியைக் கண்டறிய திட்டமிட்டாள். அதன்படி இரண்டாவது தளத்தின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தாள்.
அதில் இன்னும் குழம்பியது தான் மிச்சம். அங்கே வி என்கின்ற எழுத்தில் பெயர் கொண்ட யாரும் அந்த நேரத்தில் அந்த வழியில் கூடச் செல்லவில்லை.
தெளிய தெளிய குழப்பம் அதிகரித்துக் கொண்டே போக, சித்தம் கலங்க தன் தலையில் கை வைத்தவாறு குழப்பமாய் இருந்தாள்.
‘அது வி ஆகத் தான் இருக்க வேண்டுமா என்ன? வி, எம், டபிள்யூ, இசட், என் ஏன் எஸ் வடிவத்தின் முனைகள் கூர்மையாக இருந்தால்...? இந்த உடைந்த துண்டு எழுத்தின் ஒருபகுதியாக இருந்தால்...’ என்று அவளது மனம் சரியான நேரத்தில் சரியான கேள்வியை எழுப்ப,
குற்றவாளியைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி விழியில் மின்னி மறைய, அடுத்த நொடி அவனது சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் பளார் என்று அறைய, அவளது கரங்களும் விழிகளும் கோபத்தில் துடித்தன. சிசிடிவி ஆப்ரேட்டரிடம் அவருக்குப் போட வேண்டியதை போட்டுவிட்டு, ஃபுட்டேஜில் தனக்கு ஒரு காப்பி போட்டுக் கொண்டாள்.
***
நிலவே 60
அடுத்தநாள் சாயங்கால வேளையில் ஃபாரென்சிக் லேபில் இருந்து கைரேகை டெஸ்ட் ரிபோர்ட்டும் வந்துவிட, இனி குற்றவாளி தப்பவே முடியாது என்கின்ற நிலையில், மாளவிகாவிற்கு எதிராக நடந்த குற்றத்துக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ஜியாவிற்கு, சமீரை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
இதைச் சமீரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்று மிகவும் வருந்தினாள். மேலிடத்துக்குப் போகும் முன்பு ஒரு நல்ல தோழியாகச் சமீரிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று முடிவெடுத்தவள், சமீரிடம் அலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டாள்.
தனக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சி பற்றித் தெரியாமல், ஜியா ஏன் திடீர்னு ஹாஸ்பிடல் வர சொல்றா என்கின்ற சிந்தனையோடு, ஜியாவைக் காண அவளது அறைக்கு வந்த சமீர்,
"என்னாச்சு ஜியா? எட்டு மணிக்கு என்னைப் பார்க்கணும்னு வர சொல்லிருக்க? எல்லாம் ஓகே தானே?” என்று அக்கறையோடு கேட்க, அவனை இருக்கையில் உட்கார வலியுறுத்தியவள் நடந்த அனைத்தையும் மூச்சு விடாமல் கூற, அவள் கூறியதைக் கேட்க கேட்க அவனது முகம் ஒளி இழந்து காணப்பட்டது. மேலும் அவள் தொடர்வதற்குள்,
"ஸ்டாப் இட் ஜியா!” என்று தன் நாற்காலியில் இருந்து வெகுண்டெழுந்தவன் கோபத்தில் நாற்காலியைத் தட்டிவிட,
"சமீர் ரிலாக்ஸ்! நான் சொல்றத கொஞ்சம்..."
"எனாஃப்! இஸ் ஈனாஃப்! இதுக்கு மேல எதுவும் பேசாத. சுஜித் என்னோட ஃப்ரண்ட், அவன் கண்டிப்பா இப்படிப் பண்ணிருக்க மாட்டான். நீ அவன் மேல உள்ள கோபத்துல பேசிட்டு இருக்க. சின்னச் சின்னத் தப்புப் பண்ணுவான், ஆனா இத கண்டிப்பா அவன் பண்ணிருக்க மாட்டான்.” என்றவனைத் தடுத்தவள்,
"சமீர் நான் சொல்ற அத்தனைக்கும் என்கிட்ட ப்ரூப் இருக்கு. சிசிடிவி ஃபுட்டேஜ நீயே பாரு, மத்தியானம் ஒருமணியில இருந்து நான் போற வரைக்கும் அங்க போனவங்க பதினொரு பேர். டாக்டர் சதிஷ், டாக்டர் ஜீவா, நர்ஸ் சாருமதி, மகேஷ் சார், டூட்டி டாக்டர் நிதின், ஸ்வீப்பர் மணி, டூட்டி டாக்டர் ஓவியா, நர்ஸ் லலிதா, ஸ்வீப்பர் மரியம், டூட்டி டாக்டர் விக்னேஷ், அப்புறம் சுஜித்.இவங்களோட அல்பபெட் எஸ், ஜே, சி, எம், என், ஓ, எல், வி, எஸ். டாலர் க்ளூபடி சாருமதி, கவிதா, லலிதா கிடையாது. மீதி இருக்கிறது எட்டு பேர். அதுல சதிஷ், ஜீவா, மகேஷ், நிதின், மணி இவங்க அஞ்சு பேரும் நான் போறதுக்கு முன்னாடியே திரும்ப வந்துட்டாங்க.
நான் மாளவிகாவ செக்கப் பண்ணிட்டு திரும்பி வந்த ரெண்டு மணிநேரம், அதாவது சரியா சொல்லணும்னா ஒன்பது மணி பத்து நிமிஷத்துல மரியமும் விக்னேஷும் வந்துட்டாங்க.
திரும்ப வராதது சுஜித் மட்டும் தான். பன்னிரெண்டு மணிக்கு லலிதா என்னை வந்து கூப்பிட்டதும், நான் மாளவிகாவோட ரூமுக்கு போன ஃபுட்டேஜ் இது. நான் போன கொஞ்ச நேரத்துல மாளவிகாவ ஆப்ரேஷன்காக அழைச்சுட்டு வெளியில வர்ற ஃபுட்டேஜ் இது. நாங்க வந்த பத்து நிமிஷத்துல சுஜித் வெளியில வரான். ஜூம் பண்ணி பாரு, அவனோட கையில ரத்தக்கறை. ஃக்ளவ்ஸ்ல இருக்குற அதே ரத்தக்கற.
இன்னும் நல்லா பாரு, அவனோட கையில உள்ள ப்ரேஸ்லெட்டை பாரு. அவனோட பேரோட முதல் எழுத்து எஸ் பாதி உடைஞ்சிருக்கு, இதோ என்கிட்ட.
ஃக்ளவ்ஸ்ல இருக்கிற கைரேகையும் சுஜித்தோட கைரேகையும் மேட்ச் ஆனா ரிப்போர்ட் இது.
என்கிட்ட எல்லா எவிடென்சும் இருக்கு. ஆதாரம் இல்லாம நான் எதுவும் பேசல சமீர். சுஜித்தான் இதெல்லாம் பண்ணிருக்கான். இதைச் சுஜித் மட்டும் தனியா பண்ணிருக்க முடியாது. எனக்கு என்னவோ ஜீவா, வருணும் இவங்களுக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்கனு தோனுது." என்று ஜியா கூறிய ஒவ்வொன்றையும் கேட்ட சமீருக்கு தலையே சுற்றியது. தன் நண்பர்கள் இப்படி ஒரு காரியம் செய்து விட்டார்களே என்று மிகவும் வேதனைப் பட்டான். தன்னை ஆசுவாசப்படுத்தியவன் ஜியாவைப் பார்த்து,
"இதனால அவங்களுக்கு என்ன லாபம்?"
"ஸிட்டா டி நாற்பத்து ஐந்து சதவீதம் அப்புறம் ஹாலின் ஆர் ஐம்பத்தைந்து சதவீதம், இந்த இரண்டு மருந்துடைய கலவை தான், ஹாஸ்ட் டிஆர். இந்த மெடிசின் ஹாஸ்ட் டிஆர் பத்தி ஆர்டிக்கள்ல படிச்சேன். இந்த ரெண்டு கலவையில ஒன்றான ஸிட்டா டியை சுவேறியாவை சார்ந்த ஸிட்டா என்கிற பெண் சயின்டிஸ்ட் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுல கண்டு புடிச்சுருக்காங்க.
ஸிட்டாட டி ஒரு ஊக்க மருந்து, அது மூளைக்குப் பூஸ்ட் மாதிரி. அது சாப்பிட்ட அரை மணி நேரத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுரும். நார்மல் மனுஷனோட மூளையை விட நாலு மடங்கு, இந்த மருந்தை சாப்பிட்டவங்களோட மூளை ரொம்ப ஆக்டிவா இருக்கும்.
நார்மலா ஐக்யூ லெவல் ஷார்ப்பா இருக்கிற மனுஷனுக்கு, ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்ண ஒரு நிமிஷம் ஆகுதுன்னா, ஸிட்டா டி சாப்பிட்ட மனுஷன் அதே ப்ராப்ளமை செகண்ட்ஸ்ல சால்வ் பண்ணுவான்.
இந்த எபிலிட்டி ஒரு குழந்தை பிறக்கும் போதே இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்ச ஸிட்டாக்கு, இதைப் பயன்படுத்தணும்னு ரொம்ப ஆசை. அந்த நேரம் பார்த்து அவங்களும் கருவுற்றுருந்தனால அந்த மருந்தை, அவங்களுக்கு அவங்களே பயன்படுத்தினாங்க. ஆனா குழந்தை பிறக்கும் பொழுதே மூளை வளர்ச்சி இல்லாம பிறந்து, பிறந்த கொஞ்ச வருஷத்துல அது இறந்தும் போக, குழந்தையோட சாவுக்கு தான் தான் காரணம்னு, அவங்க அந்தக் கவலையில மனநலம் பாதிக்கப்பட்டுட்டாங்கனு செய்தி.
ஸிட்டா டி ஒரு ஊக்கமருந்து, அப்படி இருக்கும் பொழுது எப்படிக் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லாம இருக்கும்? என்று ஏகப்பட்ட கேள்வி, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில எழுந்தது. ஆனால் சுவேறியாவுக்கும் பக்கத்துக்கு நாடான ரிமோரியாவுக்கும் நடந்த கடுமையான சண்டையில, சுவேறியா பெரிய பொருளாதார வீழ்ச்சி அடைஞ்சது. அதனால எழுந்த கேள்வியெல்லாம் எழுந்த வேகத்துல அடங்கிப்போச்சு.
அப்புறம் இரண்டாயிரத்து பத்துல சுவேறியா உலகளவுல பொருளாதாரத்துல இரெண்டாவது இடத்தைப் பிடிச்சுருந்த நேரம், அதே நாட்டைச் சார்ந்த ஹாலின் என்கிற ஆண் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஸிட்டா டியில் இருக்கிற அதிகப்படியான போதை மருந்து தான் ஸிட்டாவோட எக்ஸ்பீரிமெண்ட் வெற்றி பெறாததற்குக் காரணம் என்றவர்,
இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டுக் கண்டுபிடித்தது தான் ஹாலின் ஆர். இதைப் பத்தி சொல்லணும்னா இது ஒரு ஸ்டிமுலன்ட், அதாவது இயற்கையா சுரக்க வேண்டிய ஹார்மோன்ஸ சீக்கிரமா சுரக்க தூண்டுற ஒரு வகையான மருந்து. முக்கியமா இதை நம்ம உடம்புல செலுத்தினதும் அது நேரடியா மூளைக்குப் போய் நம்ம முளையிலே இருக்கக் கூடிய சுரப்பிய தூண்டிவிடும். அப்படி நடக்கும் பொழுது ஒரு ஐஞ்சு வயசு குழந்தைங்க பத்து வயசுக்குரிய வளர்ச்சியில இருப்பாங்க.
ஸிட்டா டியை பொருத்தமட்டிக்கும் அது குறைஞ்ச பட்சம், ரெண்டுல இருந்து ஆறு மணிநேரம் தான் உடம்புல வேலை செய்யும். ஆனா அதே ஸிட்டா டியை ஹாலின் ஆர்கூட மிக்ஸ் பண்ணி, ஒரு பொண்ணோட வயித்துல கரு உருவாகி சரியா மூளை வளர ஆரம்பிக்கும் பொழுது செலுத்துனா, அது ஹார்மோன்ஸ் கூடக் கலந்து நேரடியா மூளையில நிரந்தர மாற்றத்தை குடுக்கும்னு, அவர் நினைச்சது மூலமான கண்டுபுடிக்கப்பட்டது தான் 'ஹாஸ்ட் டிஆர்' இந்த மருந்தை கண்டு புடிச்ச நேரம் உலகளவுல பயங்கர எதிர்ப்பு இருந்தது, அதனால வெளிநாட்ல இதைத் தடை செஞ்சிட்டாங்க.
தடை செய்யப்பட்ட ஹாஸ்ட் டிஆர்தான் மாளவிகாவோட உடம்புல இல்லீகலா சோதனை பண்ணிருக்காங்க. இதுல மூணு விஷயம் இருக்கு.
இந்த எக்ஸ்பீரிமெண்ட் சக்ஸஸ் ஆனா உலகளவுல அந்த மருந்து பெரிய புரட்சிய ஏற்படுத்தும். எல்லா நாட்டு மக்களும் அதை வாங்கணும்னு நினைப்பாங்க. இயற்கைய மீறி நம்ம உடம்புல மாற்றத்தை கொண்டு வந்தா, அது மனுஷங்களுக்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். கொஞ்ச யோசிச்சு பாரு, பதினைஞ்சு வயசுக்குரிய குழந்தைக்கு இருபது வயசுக்குரிய குணம் இருந்தா, அந்தக் குழந்தையை எப்படி வேணும்னாலும் மிஸ்யூஸ் பண்ணலாம்.
இன்னொரு கோணத்துல பாரு, அதே எக்ஸ்பீரிமெண்ட் சக்ஸஸ் ஆகலைன்னா, மாளவிகாவுக்கு நடந்ததை யோசிச்சு பாரு. இப்படியே இந்த மருந்தை சட்ட விரோதமா பயன்படுத்துன்னா என்ன ஆகும்னு யோசி.
ஒரு நாட்டோட வளர்ச்சி மனித வளர்ச்சியில தான் இருக்கு. அதையே இல்லாம பண்றது ஒரு நாட்டையே தரைமட்டமா ஆக்குறதுக்குச் சமம். கிட்டத்தட்ட ஒருவகையான 'பயோ வார்' மாதிரி.
இதுல இப்படி நான் சொன்ன எந்தக் காரணமும் இல்லாம கூட இருக்கலாம். தடை செய்யப்பட்ட மருந்தை கிளினிக்கல் ட்ரையலுக்காக ஒரு எக்ஸ்பீரிமெண்டா பயன்படுத்திப் பார்க்க, சுஜித்தை யூஸ் பண்ணிருக்கலாம் அவனும் பணத்துக்காக இதைப் பண்ணிருக்கலாம்.” என்று ஜியா கூறிய அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த சமீர்,
"என்னால சுத்தமா எதையும் யோசிக்க முடியல. நீ சொல்ற எல்லாத்தையும் கேட்டா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம், இதை இத்தனை நாளா ப்ளட் ரிப்போர்ட்ல எப்படி நீ கண்டுபுடிக்காம இருந்த? ஸிட்டா டி ஒரு ஊக்க மருந்தா இருந்ததுனால கண்டிப்பா பிளட் ரிப்போர்ட்ல தெரிஞ்சிருக்குமே?"
"அதான் சமீர் இந்த மெடிசின்ல உள்ள ஸ்பெஷாலிட்டியே... இதுல ஸிட்டா டி நாற்பத்து ஐந்து சதவீதம், ஹாலின் ஆர் ஐம்பத்து ஐந்து சதவீதம் இருக்குறதுனால, ப்ளட்ல ஹாலின் ஆர்ரோட ட்ரேசஸ் தான் இருக்கும். ஸோ ரிப்போர்ட்ல மெடிசின் ட்ரேசஸ் இருக்குன்னு தான் தெரியுமே தவிர, என்ன மெடிசின்னு தெரியாது. நேரடியா மெடிசின செக் பண்ணினா தான் தெரியும்.” இதைக் கேட்க கேட்க சமீரின் நரம்புகள் கோபத்தில் புடைத்தன.
"எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணிருக்காங்கல்ல. சுஜித்தை நான் விட மாட்டேன், ரெண்டு உயிரை கொன்னுட்டு அவனால எப்படி நிம்மதியா இருக்க முடியுது?” என்று கூறும்பொழுது அவனது முகம் கோபத்தில் கன்றிக் கருத்திருந்தது.
"சமீர் நீ ரிலாக்ஸா இரு, அவங்களுக்குக் கண்டிப்பா தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்."
"அவங்களுக்குச் சட்டம் தண்டனை குடுக்கிறது இருக்கட்டும், முதல்ல நான் குடுப்பேன். ஒரு டாக்டரா இருந்துட்டு எப்படி இப்படி இருக்க முடியும்?"
"சமீர் நீ கொஞ்சம் பொறுமையா இரு."
"இல்லை ஜியா, இதெல்லாம் அவங்க உன்னை பழிவாங்க தான் பண்ணிருக்காங்க. இந்த கேஸ நீ உன் பொறுப்புல ஹாண்டில் பண்ற இதுல என்ன ப்ராப்ளம் வந்தாலும் அது உன்னைப் பாதிக்கும்னு தெரிஞ்சே பண்ணிருக்கான். அவன் எனக்குப் பதில் சொல்லி தான் ஆகணும்.” என்று வேகமாய் கிளம்பியவன் பின்னாலே சென்றவள்,
"நீ கோபத்துல போற, ஏதும் ப்ராப்ளம் ஆகிற கூடாது. நானும் உன் கூட வரேன்.” என்றவாறு அவளும் அவனுடன் சென்றாள்.
அவர்கள் சுஜித்தின் இல்லத்தை அடைந்த பொழுது மணி பத்து. அன்று நிறைந்த அமாவாசை, ஊரே இருட்டில் இருக்க தன் வாழ்க்கையும் அதே போல இருட்டாகிவிடும், என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
உள்ளே நுழைந்த சமீரைப் பார்த்து, “ஏய் வாடா! உனக்குத் தான் வெயிட்டிங். இன்னைக்கு ஏன்டா இவ்வளவு நேரம்? வருண், 'மேக் ஒன் மோர் க்ளாஸ். சமீர் உனக்கு ஐஸ் போடணும் தானே?” என்ற ஜீவாவை முறைத்து பார்த்த சமீர்,
"சுஜித் எங்க?” என்று இறுகிய முகத்துடன் கேட்க,
"அவன் உள்ள இருக்கான், நீ வாடா.” என்றவனை எரிச்சலுடன் பார்த்தவன்,
"அவனை வர சொல்லு.” என்று கடுமையாக முறைக்க,
"இதோ, இங்க தான் இருக்கேன்.” என்று மதுபானத்தைத் தன் வாயில் சரித்தபடி வந்த சுஜித், “ஹாய்டா!” என்று அவனது தோளில் கை போட, அவனது கையைச் சமீர் முறைத்து பார்க்கவும், செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவனது கண்கள் அவன் கோபமாக இருப்பதை உணர்த்த,
"என்ன மச்சான், ஒருமாதிரியா இருக்க? இதைக் குடி, எல்லாம் சரியாகிரும்.” என்று மதுபான கிளாஸை அவனிடம் சுஜித் நீட்ட, அதைத் தரையில் ஒங்கி போட்டு உடைத்தவன்,
"ஸ்டாப் இட் ஐ ஸே!” என்று காட்டு கத்து கத்தியவாறு, சற்றும் எதிர்பார்ப்பதற்குள் சுஜித்தின் கன்னத்தில், ‘பளார்’ என்று அறைந்தான்.
உள்ளே சென்ற சமீர் இன்னும் வராத நிலையில் காரில் இருந்து ஜியா இறங்கி வெளியே வர அப்பொழுது, “ஜியா ஓடு, நிற்காத.” என்று உயிர் போகும் வலியில் தடுமாறி, தன் தலையைப் பிடித்தவாறு சமீர் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தவள், அவனது அருகில் சென்று தலையில் இருந்து குபீரென்று வழிந்த ரத்தத்தைப் பார்த்து பதறியவாறு,
"என்னாச்சு சமீர்?” கேட்க, கண்கள் பாதிச் சொருகிய நிலையில்,
"டைம் இல்லை, சீக்கிரமா போகணும்.” என்ற மறுநொடி ஜீவா, வருண், சுஜித் மூவரும் அவர்களை வளைத்து பிடிக்க, சமீர் எவ்வளவோ அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தும் சுஜித்தும் ஜீவாவும் வருணும் அவனைத் தப்பிக்க விடாமல் பற்றிக்கொள்ள,
உயிர்போகும் வேதனையிலும், "ஜியா போ...” என்று அலறிய சமீரைப் பார்த்தவாறே வேறு வழியின்றித் திரும்பி திரும்பி பார்த்தவாறு, எனக்கு உதவியதால் தானே உனக்கு இந்த நிலைமை என்று உள்ளம் அழ, சுஜித் அவளைப் பின்தொடர கண்களில் குற்ற உணர்வோடு ஓடினாள்.
"சுஜித் அவளை விடாத...” என்று அவளைத் துரத்தியவனை மேலும் துரிதப்படுத்த அவனது அரக்க கூட்டாளிகள் கூச்சலிட, மின்னலென வந்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு ஓடினாள்.
சூழ்ந்திருந்த அந்த இருட்டில் திசை அறியாமல் ஓடி தவறுதலாக ஒரு பாறையின் மீது மோதி கீழே விழுந்தாள். பலமான அடி, எழ முடியவில்லை இருந்தும் எழுந்தாள் ஆனால் மீண்டும் ஓடுவதற்குள் நெருங்கினான் சுஜித்.
சிறுத்தையுடன் மான் போட்டியிட முடியுமா? அகப்பட்டாள், அந்தக் கொடிய அசுரனின் கையில். அவளைத் தன் முழுப் பலத்துடன் இறுக்கி பிடித்தான்.
"லுக், எல்லா ஆதாரத்தையும் குடு, இப்போவே விட்டுறேன். உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன்.” என்று தன்னை அழுந்த பிடித்த அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவனது கொடிய கரத்தை தன் பற்களுக்கு இரையாக்கினாள்.
விடுவானா? அவனது ரத்தம் கொதித்தது. குறைக்குப் போதை வேறு. அவனுக்குள் இருந்த கொஞ்ச மனிதனும் உறங்கிப்போக உருமாறினான் நர மாமிசனாய்.
"என்ன தைரியம் உனக்கு? என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க? உன்கிட்ட பேசிட்டு இருந்தது என் தப்பு." என்று அவளது பற்கள் பதம்பார்த்த அதே கரத்தால், அவளது கரத்தை இறுக்கி பிடித்தவாறு தன் வீட்டிற்குள் இழுத்துச் சென்றான்.
பலவாறு முயற்சித்தும் அந்தக் கயவனின் கரத்தில் இருந்து விடுபட முடியவில்லை. தன் முழு பலத்தால் அவனைத் தள்ள, வெகுண்டெழுந்தவன் அவளை வேகமாகத் தரையில் வீசினான். கசங்கி எறிந்த மலரை போலச் சுருண்டு வீழ்ந்தாள் ஜியா. ஆனாலும் விடவில்லை, மீண்டும் தட்டி தட்டி எழுந்தாள்.
"கடைசியா கேட்குறேன், எல்லாத்தையும் தந்திரு.” கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தை அடைக்கியவாறு கேட்டான். “உன்னோட... தப்புக்கு நான்... துணை போக மாட்டேன்..." என்று தடுமாறியவாறு கூறினாள்.
வெறிபிடித்தது, பற்களைக் கடித்தபடி ஓங்கியடித்தான் அவளது கன்னங்கள் அதிர. அரை மயக்கத்திற்குச் சென்றாள், "ப்ளீஸ்... என்னை விட்டுடு.” என்ற வரிகள் மட்டும் வாயில் இருந்து முனங்கலாக வந்தது.
"ஷட் அப்! ஷட் அப்! ஷட் அப்!” என்றவன், போதை வெறியில் சுவற்றோடு ஓங்கி அவளைத் தள்ள, தலை சுவற்றில் மோதி ரத்தம் குபு குபு என்று வழிய. "சு... ஜி... த்... ப்ளீ..." என்றவாறு மூச்சு பேச்சு இல்லாமல் தரையில் வீழ்ந்தாள்.
பேச்சு மூச்சில்லாமல் அவள் கிடக்க, அவனது தோள்களைப் பிடித்தவாறு ஜீவா, “என்ன மச்சான் இப்படி உன் ஆசை நாயகியை நார் நாரா கிழிச்சுட்ட. பிடிக்க தானே சொன்னேன், கொலையே பண்ணிட்டியா?” என்று நக்கலாகக் கேட்க,
"டேய் உயிர் இருக்கு, என்னடா என்கிட்டயேவா? பிரச்சனைன்னு வந்தா நான் யாருன்னு காட்ட வேண்டியிருக்கும்.” என்று சுஜித் முறைக்க,
"சண்டை போடாதீங்க, இவளை என்ன பண்றதுனு சொல்லுங்க. பேசாம இவ கதையை முடிச்சுடலாம்.” என்று பதற்றமான வருணை பார்த்து ஜீவா,
"லேடி லவ்வ என்கிட்ட குடுத்திருங்க.” என்று வன்மமாய் சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்த சுஜித்,
"சமீர்...” என்றதும் வருண், ஜீவா, சுஜித் மூவரும் சமீரை நோக்கி சென்றனர்.
நினைவிழந்து மயக்கத்தில் இருந்த ஜியா மறுநாள் காலை மிகவும் சிரமப்பட்டுக் கண்விழிக்கும் பொழுது, தலையில் ஏதோ பாறாங்கல்லை வைத்தது போல வலித்தது. தான் எங்கிருக்கிறோம் என்று யூகிப்பதற்குள், கைகளிலும் தலையிலும் கட்டுப் போட்டுக்கொண்டு, “ஜியா, ரிலாக்ஸ்...” என்றவாறு தட்டி தட்டி நடந்தவாறு, அவள் அருகில் வந்த சமீரைப் பார்த்துக் கண்கள் தானே கண்ணீர் கோர்க்க,
ஏதோ பேச வாயெடுக்க, "ஹலோ ஜியா, எப்படி இருக்க?” என்றவாறு ஜீவா, சுஜித், வருண் மூவரும் உள்ளே வந்தனர்.
சமீரைப் பார்த்து தன் கண்கள் விரிய, “ஹேய் ட்யுட்! இங்க தான் இருக்கியா?" என்ற ஜீவா, சமீரைக் கட்டி அணைக்க முற்பட, அவனது கரத்தை வெறுப்போடு தட்டிவிட்ட சமீர் பல்லைக் கடித்தவாறு அவனது சட்டையைப் பிடித்து, “கெட் அவுட்!” என்று கத்த, அவனது கையைத் தன் சட்டையில் இருந்த எடுத்த ஜீவா,
"அப்படி எப்படி போக முடியும்? என்னுடைய லேடி லவ் இங்க இருக்கும் போது...” என்றவன் அதே வன்ம புன்னகையோடு ஜியாவை நெருங்க,
"ஐ வில் கம்ப்ளெயிண்ட் டூ தி போலீஸ். உங்களைச் சும்மா விடமாட்டேன்.” என்றவளைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தவன்,
"கூப்பிடு... கூப்பிடு செல்லம்... அதுக்கு முன்னாடி நீ உன்னை பார்க்கணும்.” 'உன்னை' என்று அழுத்தியவன், தன் அலைபேசியை எடுத்து அவளிடம் காட்ட,
அதில் உள்ளதை பார்த்தவளின் கண்கள் கண்ணீர் குளமாய் திரண்டிருக்க, கைகள் தானாக நடுங்க. “இப்ச்... என்னடா ஜியா, ஒழுங்கா புடிச்சுபாரு.” என்றவன் நடுங்கிய ஜியாவின் கைகளில் தன் அலைபேசியைத் திணிக்க, அவனது கைப்பட்டதும் விருட்டென்று உதறியவள் பதற்றத்துடன் சமீரைப் பார்க்க,
"அவனை ஏன்மா பார்க்குற? அவன் ஏற்கனவே பார்த்துத்துட்டான்.” என்றவாறு சிரித்தவனின் கன்னத்தில் அடிக்கக் கை ஓங்கிய சமீரை பார்த்து ஜீவா, “அடிக்கப் போறியா? அடி... அடிடா... ஒரு அடி மேல பட்டது, நாங்க மட்டும் பார்த்த உன் அன்பு தோழியோட வீடியோவை ஊரே பார்ப்பாங்க. என்ன பார்க்க மட்டுமா...” என்றவன்,
ஜியாவின் அருகில் வந்து, “போலீசை கூப்பிடல? போ, போலீசுக்கு போ. ஆனா உன்னை இந்த உலகமே பார்க்கும், ஓகேவா?"
என்று அவன் கூறி முடிக்கவும் போலீஸ் அதிகாரியோடு டீன் மிஸ்டர் அஷோக்கும் உள்ளே வந்தார்.
வந்தவர் ஜியாவிடம், “ஜியா உங்க ஹெல்த் இப்போ எப்படி இருக்கு? தேங்க் காட்! நீங்க சுஜித், ஜீவா, வருணுக்குத் தான் நன்றி சொல்லணும். அவங்க மட்டும் சரியான நேரத்துக்கு சமீரையும் உன்னையும் இங்க அட்மிட் பண்ணலைனா பெரிய ப்ராப்ளம் ஆகியிருக்கும்.” என்றவர்,
"பை தி வே இவரு இன்ஸ்பெக்டர் தேஜ், உங்ககிட்ட இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்திருக்காரு.” என்றதும் போலீஸ் அதிகாரி,
"நீங்க எதுக்கும் பயப்படாதீங்க, உங்கள தாக்குனவங்களோட அடையாளம் எதுவும் சொல்ல முடியுமா? உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்கா? சமீர் சார் எதுவும் ஞாபகத்துல இல்லைன்னு சொல்லிட்டாரு. உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்கா?” என்றவரின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்காதவள், இல்லையென்று தன் தலையை மட்டும் ஆட்ட,
ஜியாவின் அருகில் வந்த ஜீவா, “ஜியா கொஞ்சம் யோசனை பண்ணி பாரு, யார் அவங்க? எப்படி இருந்தாங்க? எதாவது திங்க் பண்ணு, அப்போ தான் நாம அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்க முடியும்.” என்று தன் கண்ணை அசைக்க,
"ஆமா மேடம், நீங்க பயப்படாதீங்க. தைரியமா உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க. அந்த ஹைவேல அடிக்கடி இப்படி வழிப்பறி நடக்குது. கொள்ளைக்காரங்க இப்படிக் கொடூரமா தாக்கிட்டு போயிறாங்க. உங்களை மாதிரி படிச்சவங்க தைரியமா சொன்னா தானே நாங்களும் ஆக்சன் எடுக்க முடியும்.” என்று இன்ஸ்பெக்டர் தன் பங்கிற்குக் கூற,
அவர்கள் எல்லோரையும் பார்த்து, "ப்ளீஸ்... சத்தியமா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை, என்னை விட்ருங்க." என்று கண்ணீர் பெறுக தன் அதரங்கள் துடிக்கக் கூற,
"சரி மேடம், உங்களை இதுக்கு மேல டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. இதுல சைன் பண்ணிருங்க, கோஆப்ரேட் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்." என்ற இன்ஸ்பெக்டர் டாக்டர் மகேஷுடன் அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், “வாவ் பேபி குட் ஆக்டிங்!” என்றவாறு ஜீவா ஜியாவை வக்கிரத்தோடு நெருங்கி வந்து அவளது கரத்தைப் பிடிக்க, கோபத்தில் அடிக்க கை ஓங்கியவளைத் தடுத்தவன்,
"ஏற்கனவே அடிச்சதுக்கு நான் இன்னும் முழுசா பழி தீர்த்துக்கல, மறுபடியுமா? நோ பேபி... அப்புறம் என்ன சொன்ன நீ, எங்களோட டாக்டர் வாழ்க்கைய காலி பண்ணிருவியா?” என்று பல் தெரியுமாறு எக்காளமாய் சிரித்தான்.
ஜியா எவ்வளவோ கெஞ்சியும் கரையாத அந்த அரக்கர்கள், இதைப் பற்றி வெளியே கூறினால் நடக்கப் போகும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
அந்த நிகழ்வு ஜியாவை வெகுவாகப் பாதித்தது.
சமீர், தான் அன்று இரவு அங்குச் செல்லாமல் இருந்திருந்தால் ஜியாவிற்கு இப்படி நடந்திருக்காது. தன்னால் தன் நண்பர்களால் ஜியாவிற்கு இவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதே என்று மிகவும் வேதனைப் பட்டான். ஜியாவின் முகத்தில் விழிப்பதற்கே கூசினான்.
ஜியா நடை பிணமானாள், யாரிடமும் பேச முடியாமல் தனிமையில் வாடினாள். அந்த நேரம் ஆஷிக்கை மிகவும் தேடினாள். அவளது மனம் ஆறாத துன்பத்தில் ஆழ்ந்தது. தன்னை அவமான சின்னமாகக் கருதினாள். இருட்டறையில் முழங்காலுக்குள் தன் முகத்தைப் புதைத்து கொண்டவாறு கண்ணீர் வடித்தாள். தன் தலையெழுத்தை நினைத்து மிகவும் விரக்தி அடைந்தாள்.
அழுது அழுது கன்றி போய் இருந்த அவளது முகத்தைப் பார்க்கவே சமீருக்கு பரிதாபமாய் இருந்தது. அவனது எந்த ஆறுதலையும் ஏற்கும் நிலையில் அவள் இல்லை. வெட்கத்தில் கூனி குறுக்கினாள். ஒரு கட்டத்தில் மரணமே என்று அவள் முடிவெடுக்க, சரியான நேரத்தில் அவளைக் காப்பற்றிய சமீர் கலங்கினான். சரி போலீசுக்குச் சென்றுவிடலாம் என்ன நடந்தாலும் சரி என்று அவர்கள் முடிவு செய்ய,
அது எப்படியோ சுஜித்திற்கு தெரியவர, அவள் போலீசிடம் சென்றால் அவளது விடீயோவோடு சேர்த்து சமீரின் மரணச் செய்தியையும் கேட்க வேண்டியிருக்கும் என்று மிரட்ட, தன்னால் சமீரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவள், அவர்கள் முகத்தில் இனி முழிக்கக் கூடாது என்று முடிவெடுத்து, தனக்காகப் போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த சமீரிடம் கூடக் கூறாது பெங்களூரை விட்டு சென்றாள்.
பெங்களூர் விட்டு வந்த பிறகு ஒரு வருடம் சென்னையில் உள்ள ஒரு சிறிய ஹாஸ்பிடலில் பணியாற்றியவள், பிறகு கோஆன்ஏர் ஏர்லைன்ஸில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க, டெல்லியில் தன் பயணத்தைத் துவங்கினாள்.
***
இதை அனைத்தையும் இப்பொழுது நினைக்கும் பொழுது கூட நெஞ்சுக்குழியில் ஓரத்தில் அப்படி ஒரு வலி. வருடங்கள் கழிந்த பிறகும் கூடத் தன்னால் பழைய ஜியாவாக மாறமுடியவில்லையே என்று மிகவும் வருந்தினாள். சர்ஜெரி என்னும் வார்த்தையைக் கேட்டாலே உடம்பல்லாம் நடுங்கியது.
இதெல்லாவற்றையும் அப்படியே உன்கிட்ட சொல்லி உன்னைக் கட்டி புடிச்சு அழணும் ஆஷிக். ஆனா அது நடக்காதுன்னு எனக்குத் தெரியும். இதை நினைக்கும் பொழுது என் உடம்பெல்லாம் கூசுது ஆஷிக். எனக்கே என்னைப் பார்த்தா அசிங்கமா இருக்கு. இந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சா உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். ஒருவேளை நீ என்னை வெறுத்துட்டா?
இதனால தான் உன்கிட்ட என்னால நெருங்க முடியலை. உன் நெருக்கத்தையும் முழுசா அனுபவிக்க முடியலை. எங்க உனக்குத் துரோகம் பண்றோமோன்னு உள்ளுக்குள்ள குத்துது. இதுக்குத் தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். உன் வாழ்க்கையையே கெடுத்துட்டேனே. எப்படி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் குடுக்கப் போறேன்.
உன்கூட வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. மனசுக்குள்ள ஏக்கமா இருக்கு. ரொம்படா... என்று தன் முழங்காலில் தன் முகத்தைப் புதைத்தவாறே தேம்பி தேம்பி அழுதாள்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 61, 62 & 63

Last edited: