Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 67, 68 & 69

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 67

ரிப்போர்ட்டர்ஸ் சமீரிடம் வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப் பட்டிருப்பதைப் பற்றிக் கேட்க, “இந்தியாவுல நீதி இன்னும் சாகலைன்னு நான் நம்புறேன்.” என்று ஒரே ஒரு வரியில், வெற்றி தன் பக்கம்தான் என்பது போலக் கூறிவிட்டு சென்றான் மிடுக்காக.

தன் எதிரே உருக்குலைந்து போய் வந்த ஜியாவைப் பார்த்தவாறு அவள் முன் நடந்து வந்தவன், அவர்களைக் கடக்கும் நேரம் ஆஷிக்கின் காதில்,

"எப்படியும் தோத்துப் போகத் தானே போற, உன் ஆசை வொய்ஃப்ப என்கிட்ட விட்டுட்டு போ, நான் பார்த்துக்கறேன்.” என்று அருவெறுப்பான வார்த்தைகளைப் பேச, ஏற்கனவே அடக்கி வைத்திருந்த கோபம் அக்னி பிழம்பாய் வெகுண்டெழ, நீதிமன்றம் என்று கூடப் பார்க்காமல் அனைவரும் முன்னிலையில் ஆஷிக், சமீரிடம் வெறித்தனமாய் நடந்து கொண்டான்.

ஜியா, தன் நண்பர்கள் என்று யார் தடுத்தும் கேட்காமல் ஆஷிக், சமீரை புரட்டி எடுக்க இறுதியில் அவனைத் தடுக்க வந்த போலீசையும் கீழே தள்ளிவிட்டு சமீரைப் பார்த்து, “உன்னைக் கொல்லாம விட மாட்டேன். உன் சாவு என் கையில தான்!” என்று சீறிபாய,

நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக ஆஷிக்கை போலீசார் கைது செய்ய ஆதர்ஷ், ரோஹித் இருவரும் செய்வதறியாது அஸாத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

ஜியா போலீசாரிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர்கள் ஆஷிக்கை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்ல, கண்களில் கண்ணீர் பெருக பரிதாபமாக ஆஷிக்கின் பெயரை கூறியவாறு ஜியா தரையில் வீழ்ந்தவாறு கதறினாள். ஹாஜரா, ஆயிஷா, தியா, நடாஷா என்று யாருடைய சமாதானத்தையும் கேட்காதவள் கதறி கதறி தன் உடம்பில் உள்ள ஜீவனை இழந்து மயங்கி வீழ்ந்தாள்.

ஆஷிக், சமீரை பார்த்து ஆக்ரோஷமாக முழங்கிய காட்சி எல்லா சேனலிலும் காட்டுத் தீயை போலப் பயங்கரமாகப் பரவ, அதைப் பார்த்த சமீரின் முகம் புன்னகையில் விரிந்தது.

ஆஷிக்கின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் சமீர்... அவனது மகிழ்ச்சி நீடிக்குமா இல்லை, அவன் ஏற்படுத்திய புயலில் அவனே சிக்கிக்கொள்வானா?

ஆஷிக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும் முன்பே அஸாத் அங்கே வந்துவிட, நிமிடத்தில் அஸாத் தன் செல்வாக்கை பயன்படுத்தி ஆஷிக்கை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

காரில் வரும் வழியெல்லாம் இருவருக்கும் இடையே அமைதியே நிலவ, ஆஷிக்கின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது.

எப்பொழுதும் தான் செய்யும் காரியத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டி தன்னை மட்டம் தட்டும் அஸாத் அஹமத். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னிடம் உள்ள குறையைக் கண்டுபிடித்துத் தன்னை வசைபாடும் அஸாத் அஹமத். இப்பொழுது கொஞ்ச தினங்களாகத் தன்னிடம் மிகவும் பொறுமையாக நடந்து கொள்வது அவனை மிகவும் குழப்பியது. ஆஷிக்கிடம் எதைப் பற்றியும் பேச கூடாது என்று, தன் உணர்வுகளை உள்ளடக்கியவாறு காரை ஓட்டுவதிலே அஸாத் கவனமாக இருந்தார்.

அவரால் சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போக, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் தன் காரை நிறுத்திய அஸாத் தன் மௌனத்தைக் கலைத்து,

"இதெல்லாம் தேவையா? ரொம்ப அசிங்கமா இருக்குடா, வெளியில தலை காட்ட முடியல. கண்டவன் எல்லாம் கேள்வி கேக்குறான். கோர்ட் கேஸ்ன்னா அவ்வளவு ஈஸியா போச்சா? முதல் ஹியரிங்க்கே மயங்கி விழுந்துட்டா.” என்று கூறிய மறுநொடி விழிகளில் பீதியோடு நிமிர்ந்து பார்த்த ஆஷிக்,

"என்னாச்சு ஜியாக்கு?" என்று பதற்றமடைய,

"ஒன்னும் இல்லை, டாக்டர் செக் பண்ணிட்டாங்க. ஸ்ட்ரெஸ்தான், இப்போ ஓகேனு உங்க அம்மா சொன்னா.” என்று அவர் கூறிய பிறகும் சமாதானம் அடையாதவன்,

"நான் வீட்டுக்கு போகணும், ஜியாவை பார்க்கணும்.” என்றவனின் குரலில் கலக்கத்தோடு சேர்த்து ஒருவித படபடப்பும் தொற்றிக்கொள்ள, சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவர் அதில் தன் மனைவியின் நம்பரை டயல் செய்து, ஹாஜரா எடுத்ததும் அலைபேசியை ஆஷிக்கிடம் கொடுக்க, பதற்றத்தோடு வாங்கியவன் மூச்சை உள்ளே இழுத்தவாறு,

"ஜியா எப்படி இருக்கா, நல்லா இருக்காதானே?” என்று முகத்தில் கலவரம் தொனிக்கக் கேட்க,

"நல்லா இருக்கா, நீ எங்க இருக்க?” என்று கேட்ட தாயின் கேள்வியைப் புறம் தள்ளியவன் முகத்தில் கலவரம் குறையாமல்,

"மூக்... மூக்குல... மறுபடியும் ப்ளட்... அது ரத்தம் வர்லல...?” என்று கேட்டவாறு தன் தாய் என்ன கூறுவாரா என்கின்ற பயத்தில் தன் கண்களை மூடிக்கொள்ள,

"இல்லபா வர்ல, டாக்டர் செக் பண்ணிட்டு ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொல்லி டேப்லெட் குடுத்துட்டு போயிருக்காங்க. நான் அவ பக்கத்துல தான் இருக்கேன், நல்லா தூங்கிட்டு இருக்கா."

"நான் வர்ற வரைக்கும்..." என்று தொடரவும்,

"பக்கத்துலயே இருக்கேன், நீ கவலைப்படாத, சீக்கிரமா வீட்டுக்கு வா. அவர் எதுவும் சொன்னாலும் சண்டை போடாத.” என்று அவன் தாய் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. 'நல்லா தூங்கிட்டு இருக்கா, பக்கத்துலயே இருக்கேன்.' என்ற வரிகளைக் கேட்ட பின்பே உள்ளே இழுத்த மூச்சை வெளியிட்டவன், கண் இமையோரம் கண்ணீர் வடிய விழி மூடிய நிலையிலே காரின் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

அவனது ஒவ்வொரு முக அசைவையும் கவனித்த அஸாத் ஆஷிக்கிடம்,

"இன்னும் எவ்வளவு தூரம் ஓட போறீங்க? எத்தனை பேருக்கு தான் பதில் சொல்ல போறீங்க? ஜியாவ அவ்வளவு விரும்புற, அவ கூட வேறே எங்கையாவது போய் புதுசா உன் வாழ்க்கைய ஆரம்பி. உனக்கு என்ன வேணும், சமீருக்குத் தண்டனை கிடைக்கணும் அப்படித் தானே? நீ கவலைய விடு, நான் சொல்றத கேட்டு ஜியாவோட வெளிநாடு கிளம்பு.

சமீரை நீ என்ன பண்ணணும்னு நினைக்கிறியோ, அதை நான் பார்த்துக்கறேன். வேண்டிய ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க. இப்போதைக்கு நிலைமை சரியில்ல, கொஞ்ச நாள் அவனை விட்டு புடிச்சு அவன் கதைய முடிச்சுரலாம். கேஸே வராம நான் பார்த்துக்கறேன். சொன்னா கேளு, இப்பவும் என்னை உன் எதிரியாவே பார்க்காத." என்ற அஸாத்திடம்,

வெறுமை கலந்த வேதனையோடு புன்னகைத்தவன் இயலாமையோடு அவரை நோக்கி, "நொறுங்கி போய் இருக்கா, சரியா கூடப் பேசமாட்டிக்கிறா. அப்போ அப்போ கத்துறா, என்னை விட்டு விலகி விலகி போறா. அவளை இந்த வேதனையில இருந்து வெளிய கொண்டுவர்றதுக்கு இதை விட்டா எனக்கு வழியில்லை.

எங்க அவளை இழந்துருவேனோன்னு பயமா இருக்கு. அவ போனா எல்லாமே போயிரும்... என் சந்தோசம், என் வாழ்க்கை, நான்... ஜியா எனக்கு வேணும்பா. ப்ளீஸ் அப்பா... உங்க கிட்டயும் சண்டை போட எனக்குத் தெம்பில்லை.” என்று விரக்தியுடன் வெளிப்பட்ட அவனது வார்த்தைகள் அவரது இதயத்தைக் கசக்கி பிழிந்தது.

"ப்ளீஸ் அப்பா... உங்ககிட்டயும் சண்டை போட எனக்குத் தெம்பில்லை.” என்று ஆஷிக் கூறிய வரிகள் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும், ரண வேதனையை அவருக்குப் புரியவைத்தது. எவ்வளவு வலி உள்ளே இருந்திருந்தால், இப்படி ஒரு வார்த்தை அவனது வாயில் இருந்து வந்திருக்கும், கலங்கினார்.

'ப்ளீஸ் அப்பா' கேட்டு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும். சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு ஆஷிக் தன்னை அப்பா என்று அழைத்ததும், அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு திரண்டு வந்தது. ‘எப்பொழுதும் தன் முன் மிடுக்காக நின்று கொண்டு திமிராகப் பேசுபவன், இன்று தன் முன் ஜீவன் அற்று உருக்குலைந்து இருப்பது அவரைக் காயப்படுத்தியது. மகனை அப்படி அவரால் காணயிலவில்லை.

ஏன் சமீரை உருத்தெரியாமல் அழிக்க அவருக்கு வெகு நேரம் எடுக்காது. சமீரின் மொத்த குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்த அவருக்கு வெகு நேரம் ஆகாது. ஏன், இந்த கேஸை ஒரே ஹியரிங்கில் முடித்திருக்க முடியும். அதெல்லாம் ஆஷிக், சமீரைத் தாக்கும் வீடியோ வெளியில் வரமால் இருந்திருந்தால்.

ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு. சமீரை என்ன செய்தாலும் அது ஜியா, ஆஷிக்கின் தலையில் தான் வந்து விழும். அதனால் தான் அவர் முடிந்த வரை பொறுமையாக இருக்கிறார். ஆனாலும் அவர் அமைதியாக இல்லை, இந்தப் பிரச்சனை ஆரம்பித்தத்தில் இருந்து தன்னால் முடிந்த முயற்சியை அவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சமீர் இவர் கணித்ததை விட மிகவும் பயங்கரமானவனாக இருப்பதால், அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியையே சந்திக்கின்றன. சமீர் மக்களின் மத்தியில் நல்லவன் என்கின்ற பெயரை வாங்கியதால், தடாலடியான முடிவுகள் எதையும் அஸாத்தால் எடுக்க முடியவில்லை.

ஆனால் தன் அனுபவத்தின் மூலமாகச் சமீர், ஆஷிக்கின் கோபத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக மக்களிடையே அனுதாபத்தைச் சம்பாதிக்கிறான், என்பதை நன்கு புரிந்த கொண்ட அஸாத் தன் மனதிற்குள்,

‘என்னோட கணிப்பு சரியா இருந்தா இன்னைக்கு நடந்த பிரச்சனைய வச்சு சமீர் கண்டிப்பா புது டிராமா பண்ணுவான்.’ என்று எண்ணியவர்,

ஆஷிக்கிடம் இப்போதைக்கு இதைப் பற்றிக் கூறி மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், தளர்ந்து போய் இருந்த அவனது கரத்தை தன் கரத்துக்குள் மூடி வைத்துக்கொண்டு, “சரியாகிரும், டோன்'ட் லூஸ் யுவர் ஹோப்!" என்று தன்மையாக ஆறுதல் கூற, ஆஷிக்கும் மறுக்காமல் தன் தலையை லேசாய் அசைத்து ஏற்றுக்கொண்டான். அவன் இருக்கும் இந்த நிலைக்கு அந்த அரவணைப்பு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது.

***





நிலவே 68

ஆஷிக்கைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்ட ஹாஜரா, "இந்த கேஸ் எல்லாம் எதுவும் வேண்டாம். அப்பா சொல்றத கேளு, அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. பார்த்தவரை போதும், என்னால இதுக்கு மேல எதையும் தாங்கிக்க முடியாது.” என்று அழுதுகொண்டே பிடிவாதமாய் கூற,

தன் நெற்றியை நீவியபடி, "அம்மா நீங்க ஏன்...” என்று சலிப்புடன் ஆரம்பித்தவனை அஸாத், “நீ உன் ரூம்க்கு போ." என்று அனுப்பி வைக்க,

அஸாத், “ரூம்க்கு போ” என்று சொன்ன மறுநொடி ஏன், எதற்கு என்று கேட்காமல், சரி என்றவாறு ஆஷிக் அங்கிருந்து சென்றதை இமை தட்டாமல் பார்த்த ஹாஜரா, இது எப்படிச் சாத்தியம் ஆனது என்கின்ற குழப்பத்தோடு தன் கணவரைக் காண, மனைவியின் மனதை படித்த அஸாத் நடந்த அத்தனையும் தன் மனைவியிடம் கூறி,

"அவன் ரொம்ப உடைஞ்சி போயிருக்கான். ஜியா ரொம்பப் பாவம். இந்த நேரத்துல அவங்க டெசிஷன்ஸ்ல விடுறது தான் சரி. நாம சப்போர்ட் பண்ணுவோம். மத்தவங்க என்னப் பேசுவாங்கன்னு யோசிக்கிறோம். ஆனா ஜியாவோட நிலைமையில இருந்து பாரு. மத்தவங்க பேசுறது எல்லாம் ஒரு விஷயமா இருக்காது. ஆஷிக் அதைத் தான் பண்றான். நாமளும் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு காத்திருப்போம்.

எனக்கு இதுல விருப்பம் இல்லைதான், ஆனா அதுதான் அவங்க முடிவுன்னா நாம அவங்களுக்கு உதவிதான் பண்ணணும். மீடியா ரொம்ப இன்வால்வ் ஆகிருக்குன்னு எல்லாரும் யோசிக்கிறாங்க. எல்லாத்துக்கும் மேல சமீர் அப்பா ஷாஹித் பார்ட்டில முக்கியமான பதவியில இருக்காரு.

ஜியா வேற மதம், ஸோ பிரச்சனை ரீலீஜியஸ் பேஸிஸ்ல திரும்பிட்டா வேற மாதிரியான ப்ராப்ளம் வருமோனு யோசிக்கிறாங்க. ப்ளஸ் அந்த மெடிக்கல் விவகாரம், அதான் எல்லாரும் முன்வர தயங்குறாங்க. ஆஷிக் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தான்னா, சமீர வேற மாதிரி டீல் பண்ணிருக்கலாம். இப்போ தப்பெல்லாம் நம்ம பக்கம் இருக்கிற மாதிரி ஆகிடுச்சு. சமீரை எல்லாரும் அப்பாவினு சொல்றாங்க.

பத்தா குறைக்கு ஆஷிக்கை எப்படி ப்ரோவோக் பண்ணினா, அவன் ரியாக்ட் பண்ணுவான்னு சமீர் நல்லா தெரிஞ்சி வச்சுருக்கான். நீ கவலைப்படாத, நான் சும்மா இருக்க மாட்டேன். மேல் இடத்துல பேசிட்டு தான் இருக்கேன். சமீருக்கு எதிரா ஒரு எவிடென்ஸ் கிடைச்சாலும் அவனை உண்டு இல்லன்னு பண்ணிடலாம்.” என்று அஸாத் ஆதங்கமாகப் பேசிக்கொண்டிருக்க, ஹாஜரா தன் கணவனின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு மனதிற்குள் நெகிழ்ந்தார்.

"என் உயிர் தந்து உன் மானம் காப்பேன்” என்று ஜியாவுக்குக் கொடுத்த வாக்குறுதி, ஆஷிக்கிற்கு ஜியாவின் கலை இழந்த முகத்தைக் காணும் பொழுதெல்லாம் நினைவிற்கு வர,

மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாமல் போனதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டான். ஜியாவைக் காணும் பொழுதெல்லாம் அவளுக்கு அநீதி இழைத்த அந்த அரக்கர்களைத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துபவன், இன்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதை எண்ணி கவலையுற்றவன், ஒருவித குற்ற உணர்வோடு தன் மனைவியைக் காண தன் அறைக்கு வந்தான்.

விழிகளை மூடியவாறு மெத்தை மீது கசக்கி எறிந்த மலர் போல வாடி வதங்கி கிடந்தாள் ஜியா. அவளைக் கண்ட மறுநொடியே அவனுக்குள் கனன்று வந்த கோபம் மேலும் அதிகரிக்க, அவளைப் பார்த்தவாறே மேலும் முன்னேறாமல் அறையின் ஓரமாக நின்றான்.

உறக்கத்திலே அவள் ஏதேதோ முணுமுணுக்கவும் சிறு பதற்றத்தோடு உள்ளே நுழைந்தான். ஏதேதோ உளறினாள் ஒன்றும் கோர்வையாக இல்லை. "ஒன்னும் இல்லடா, நான் இருக்கேன்.” என்றவாறு கலைந்து போன கேசத்தை வருடவும், சீரான மூச்சை வெளியிட்டவாறு அவள் உறக்கத்திற்குச் செல்ல,

வதங்கி போன வதனத்தை வருத்தத்துடன் பார்த்தவாறே சற்று தள்ளி இருந்த நாற்காலியை, அவள் அருகே மிகவும் மெதுவாய் அவளது உறக்கம் கலையாமல் தூக்கி வைத்தவாறு அதில் வந்து அமர்ந்தான்.

மனதில் ஆழமாக ஆல மர வேர் போல முளைத்திருந்த ஆயிரம் கேள்விகள் மீண்டும் தலை தூக்க, மீண்டும் அதே போராட்டங்கள்... தன் சந்தோஷத்தை தின்ற அதே போராட்டங்கள், இன்னும் தின்ன துடிக்கும் அதே வேதனைகள். தப்பிக்க வழி தெரியாமல் தவித்தான்.

திடீரென்று உதறல் எடுத்த தன்னவளின் கரத்தை மென்மையாய் தனக்குள் பத்திரப்படுத்தினான். நெஞ்சுக்குழிக்குள் ஒருவித வலி உருவாகி தொண்டைக்குழியில் வந்து சிக்கிக்கொண்டு அழுத்தியது. உடைந்து கதற துடித்த இதயத்தைக் கட்டுப்படுத்தினான். பார்த்து பார்த்து ரசித்த மனைவி, இன்று கண்முன் சிதைக்கப்பட்ட சிற்பம் போலக் கலையிழந்து கிடந்தாள், நெஞ்சம் கனத்தது.

பாதத்தில் இருந்த தழும்பு உறைந்திருந்த ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது. தழும்பில் தன் இதழை அழுந்த பதித்தான். கரைபுரண்ட விழிநீர் அவளது பாதத்தை நனைத்தது.

நீதிமன்றத்தில் அவள் உடைந்து அழுத காட்சி, அவன் கண் முன் தெரிய, என்ன செய்யப் போகிறோம்? ஜியாவை பழைய நிலைக்கு எப்படிக் கொண்டுவர போகிறோம் என்பதை யோசிக்கும் பொழுதே, உள்ளத்தில் ரணவேதனை எட்டிப்பார்க்க, கண்ணீர் மீண்டும் கன்னத்தை நனைத்தது.

இரு மெல்லிய கரங்கள் உதிர்ந்த துளிகளைத் தன் கரத்திற்குள் சேமித்துக் கொண்டது. விரல் பட்ட ஸ்பரிசத்தில் விழி திறந்தவனின் விழிகள், ஜியாவின் உணர்ச்சிகளற்ற விழியைப் பார்த்த மறுநொடி உள்ளுக்குள் திரண்டு வந்த வேதனையை அடக்கிக்கொண்டு,

அவளது கேசத்தை வருடியவாறே, “இப்போ எப்படிடா இருக்க?" என்றான் முணுமுணுப்பாக.

வெறுமையோடு பார்த்தவள், “இன்னும் நான் செத்து போகல ஆஷிக்.” என்றாள் விரக்தி, வெறுப்பு, கோபம் எல்லாம் தன் முகத்தில் மின்னலை போல மாறி மாறி தோன்ற.

தவித்துப் போனான். 'நான் இன்னும் செத்து போகல' என்ற வரிகள், உயிரோடு அவனைக் கொன்றது. எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் உதட்டை அழுத்தினான். கட்டுப்பாட்டை மீறி விழிநீர் வழிந்தது. சட்டையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன், 'இல்லை. அப்படிச் சொல்லாத' என்பது போலத் தன் தலையை அசைத்து தன் மறுப்பைத் தெரிவித்தவன்,

"அப்படிச் சொல்லாத, எல்லாம் சரியாகிரும்.” என்றான் தன் மனைவியின் கரத்தை இறுக்கப் பற்றியவாறு. வெறுமையோடு புன்னகைத்தவள், “சரியாகிருமா? என்ன சரியாகும்? எப்படிச் சரியாகும் ஆஷிக்?” என்று வெறுப்போடு பேச, தனது இயலாமையை எண்ணி வருத்தப்பட்டவாறே ஜியாவை நோக்கினான்.

அபிநயம் கொஞ்சிய விழிகள் இன்று பேச மறுத்து ஊமை போல உணர்வற்று இருப்பது அவனை மேலும் கலங்கடித்தது.

"எல்லாம் முடிஞ்சு போச்சுல ஆஷிக். இனிமே வாழ்ந்து எதுக்கு?” விரக்தியின் உச்சத்தில் கண்ணீரோடு வெளிப்பட்டது வார்த்தைகள்.

"இல்லமா, எதுவும் முடிஞ்சு போகல. நான் இருக்கேன், நீ பார்க்க வேண்டிய சந்தோஷம், நான் கொடுக்க வேண்டிய சந்தோஷம், நாம வாழ வேண்டிய வாழ்க்கை நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கு. உன்கூட ரொம்ப வருஷம் வாழனும்.” என்று ஆறுதல் படுத்தினான்.

"வேண்டாம் ஆஷிக், எதுவும் வேண்டாம். என் மேல அன்பு வைக்காத. அதுக்குத் தகுதியே இல்லாத ஜென்மம் நான்...” என்று தன் தலையில் அடித்தவாறு கதறி துடித்தாள். சமாதானம் செய்தான், அடங்கவில்லை. தன்னை மறந்து வெறிப் பிடித்தது போல ஆக்ரோஷமாகக் கத்தினாள்.

"ஜியா... சொல்றத கேளு... நான் பார்த்துக்கறேன், பொறுமையா இரு.” என்று சாந்தப்படுத்த நெருங்கிய ஆஷிக்கைத் தள்ளிவிட்டு, தலையைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதாள்.

தள்ளிய வேகத்தில் தன் நிதானத்தை இழந்து சுவற்றில் மோத, ரத்த காயத்தோடு மீண்டும் அவளை நெருங்கினான்.

தன்னைத் தானே காயப்படுத்த துணிந்த நேரம், தன்னோடு இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். திமிறினாள், விடவில்லை. தன்னை மறந்து அவனது மார்பை குத்தினாள், விலகவில்லை தாங்கிக்கொண்டான்.

அவள் அலறியதைக் கேட்டு பக்கத்து அறையில் இருந்த ஆயிஷா, சரண்யா மற்றும் அவர்களைக் காண வந்த ஆதர்ஷ், ரோஹித், நடாஷா, தியாவும் வந்துவிட,

தன் மனைவியை இந்த நிலையில் மற்றவர்கள் பார்ப்பதை விரும்பாதவன், ஜியாவை ஒரு கரத்தில் தாங்கியவாறே மற்றொரு கரத்தால் கதவை சாற்றினான். அவனது விழிகளில் வெளிப்பட்ட இயலாமை அவர்களை வருத்தியது. அவனது வருகைக்காகக் காத்திருந்தனர்.

நிமிடங்கள் கழிந்திருக்க அழுது அழுது தன் ஜீவனைப் பாதி இழந்தவள், வியர்வை சிந்த அவன் மார்பிலே சரிந்தாள்.

மூக்கைப் பார்த்தான் எந்த ரத்தம் கசிவும் இல்லை, நிம்மதி அடைந்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜியா ரெண்டாவது முறையாக இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறாள்.

'பேனிக் அட்டாக், உயிர் போகும் ஆபத்து, தற்கொலை முயற்சி...' என்று மருத்துவர் கூறிய அனைத்தும் அவன் நினைவிலே வந்து இடியை போல முழங்க, அந்த ஒவ்வொரு வரிகளும் அவனது உயிரை அறுத்தது. உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும் அலறித் துடித்தது. உடனே மருத்துவரிடம் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினான்.

"லெட் ஹெர் ரெஸ்ட். ஷீ நீட் அ கம்ப்ளீட் ரெஸ்ட். அவங்களைப் பார்த்துக்கோங்க, நான் உடனே வரேன்.” என்றார்.

மூச்சு காற்று போல அவளை விட்டு அகலாது அருகிலே இருந்தான். சொன்னது போலவே உடனே வந்த மருத்துவர் ஜியாவை பரிசோதித்துவிட்டு, “இன்ஜெக்ஷன் போட்ருக்கேன், நல்லா தூங்குவாங்க. டிஸ்டர்ப் பண்ணாதீங்க, இடையில எழும்ப மாட்டாங்க. எழும்பினா சாப்பாடு குடுங்க, இல்லனா விட்ருங்க."

"என் பொண்ணு சரியாகிருவாள்ல?” என்று தடுமாற்றத்தோடு வெளிப்பட்டது ஷங்கரின் குரல். அவரது தோளை தட்டியவர்,

"காலையில நார்மலா இருப்பாங்க.” ‘இதை அவ்வளவு எளிதாய் சரி பண்ண முடியாது' என்பதை மறைமுகமாகக் கூறிய மருத்துவர், ஆஷிக்கை தனியாக வருமாறு கூறிவிட்டு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

மனமுடைந்து போய் இருந்த ஷங்கரை ஹாஜராவும் அஸாத்தும் ஆறுதல் படுத்தினர்.

முகமெல்லாம் வியர்த்திருக்க, விழிகளில் கலவரத்தோடு மருத்துவரிடம் வந்தவனின் மனமெல்லாம், ஒன்றை ஒன்றுதான் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தது. 'ஜியாவின் உடல் நிலையில் எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது' என்பதைத் தான் ஜெபித்துக் கொண்டிருந்தான். அவனது மனவோட்டத்தை உணர்ந்தவர் எடுத்த எடுப்பில் அவனைச் சங்கடப்படுத்த விரும்பாமல்,

அவனது நெற்றியில் இருந்த காயத்தைப் பற்றிக் கேட்க, என்னவென்று விளங்காமல் காயத்தில் கை வைத்ததும் வலி எடுக்க முகத்தைச் சுளித்தவனுக்கு, அப்பொழுது அடிபட்டிருந்தது நினைவிற்கு வர அவரிடம்,

"அது ஒன்னும் இல்லை, ஜஸ்ட் இக்னோர் இட்." என்றவன்,

"எதுக்குத் தனியா கூப்டீங்க? ஜியா நல்லா இருக்காள்ல?” என்று ஒருவித பயத்துடன் கேட்க,

"ஆஷிக் இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கணும்.” என்று அவர் சுற்றி வளைக்க, மேலும் கலவரம் கொண்டவன்,

"அங்கிள் ப்ளீஸ் ஜியாக்கு என்னாச்சு?"

"பிஎஸ்டிடீவோட ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கா. ஷீ நீட் டு பீ ஹாஸ்ப்பிட்டலைஸ்ட். சைக்காலஜிக்கலா...” என்று அவர் தொடர்வதற்குள் முந்திக்கொண்டவன்,

"ப்ளீஸ்... சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட் குடுக்க அவ என்ன பைத்தியமா? அண்ட் ஷீ இஸ் நாட் அ பேஷண்ட். ஆமா அவ டிப்ரெஸ்ட்டா இருக்கா, எனக்குத் தெரியும். அதுக்காகச் சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட் எல்லாம் அவளுக்குத் தேவை இல்லை.

உங்களுக்குத் தெரியுமா என் ஜியா கூட ஒரு நல்ல டாக்டர் தான். நீங்க என்ன பண்ணணுமோ என்கிட்ட சொல்லுங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் சற்றுக் கடினமாகப் பேச அதைப் பெரிது படுத்தாதவர் அவனிடம்,

"சரி உன்கிட்ட ஒன்னு கேக்குறேன், உன்னால ஜியாக்கு மறுபடியும் அட்டாக் வராம பார்த்துக்க முடியும்னு உறுதியா சொல்ல முடியுமா? முடியாது அதுதான் உண்மை. அட்டாக் வரும் போதெல்லாம் தூங்க வைக்க முடியாது. இன்னைக்கு அவளுக்குக் கொடுத்திருக்க டோஸ் வழக்கத்தை விட அதிகமானது. கண்டின்யூ ஆனா மருந்தே அவளை அழிச்சுரும்.

லாஸ்ட் ஸ்டேஜ் விட்டா, 'ஷி வில் டை' ஃபார் தி ஷ்யுர்.” மென்மையோடு அழுத்தமாய் கூறினார்.

சிலையென உணர்ச்சி அற்று நின்றான். தோளை உலுக்கி, “கேக்குறியா?” என்றவரிடம், “ம்ம்...” என்று தன் தலையை அசைக்க மேலும் தொடர்ந்தவர்,

"உனக்கு ரெண்டு ஆப்ஷன்... ஒன்னு கண்டிப்பா சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் குடுத்தே ஆகணும். இல்லன்னா மறுபடியும் அவளுக்கு அட்டாக் வராம நீ பார்த்துக்கணும். உன்னால முடியாது ஆஷிக், அந்த ஸ்டேஜெல்லாம் அவ கடந்துட்டா.

இப்போ எல்லாம் அட்டாக் வந்தா என்ன பண்றோம்னு அவளுக்கே தெரியாது, அந்த ஸ்டேஜ்ல இருக்கா. ட்ரீட்மென்ட் கொடுக்காம விட்டா நார்மலா இருக்கும் பொழுதும், தன்னை மறந்து ரியாக்ட் பண்ண ஆரம்பிப்பா.

ஜியாவ நான் பைத்தியம்னு சொல்லல, அவ அந்த ஸ்டேஜ்க்கு போயிற கூடாதுனு சொல்றேன். ஜியாக்கு இருக்கிறது டிஸிஸ் இல்லை, இட்ஸ் அ டிஸ்ஸார்டர். ஷீ நீட் அ மெண்டல் சப்போர்ட், நாட் அ மெடிசின். மெடிசினால கண்ட்ரோல் தான் பண்ண முடியும். மெடிக்கல் கவுன்சலிங்கால மட்டும்தான் அவாய்ட் பண்ண முடியும்.

இந்தியாவுல ஏழு சதவிகித மக்கள் பிஎஸ்டிடீயால பாதிக்கப் பட்ருக்காங்க. முதல் ஸ்டேஜ்ல சரியான கவுன்சலிங் எடுத்துக்கிட்டா, கண்டிப்பா இதைச் சரி பண்ணலாம். ஆனா உன்னை மாதிரி பல பேர் தப்பா நினைச்சு, ட்ரீட்மென்ட் எடுத்துக்காம இருக்கிறது தான் அதிகமான பாதிப்புக்குக் காரணம். பல பேர் சூசைட் பண்ணிக்கிறதுக்குக் காரணமே இதுதான்.” ஆஷிக்கிடம் அனைத்தையும் தெளிவாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஆஷிக்கின் கால்கள் தானாகச் சென்றது ஜியாவின் அறைக்குத்தான். பாதுகாப்பில்லாத குழந்தையைப் போல உடலை குறுக்கி கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

மருத்துவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது காதில் ரீங்காரமிட, அறையை விட்டு வெளியே வந்தான் சித்த பிரம்மை பிடித்தது போல.

"டாக்டர் என்னடா சொன்னாங்க?” என்று தன் நண்பர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், தன் தலையில் கை வைத்தவாறு சோபாவில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

மருத்துவர் கூறியது, ஜியா நினைவில்லாமல் மருத்துவமனையில் கிடந்தது, நினைவு திரும்பி கதறியது என்று அனைத்தும் அவனது நெஞ்சை கசக்கி பிழிய, விழி நீர் விடாமல் வழிந்தது.

வெகு நேரம் யோசித்தவனுக்கு இது எல்லாவற்றுக்கும் காரணமாய் இருந்த சமீர் மீது கோபம் சீறிக்கொண்டு வர, இருந்த கோபத்தில் தான் இருந்த மர சோபாவையே பின்னே தள்ளியவாறு எழுந்தவன்,

"என்னடா தப்பு பண்ணினா என் ஜியா? அவளுக்கு ஏன்டா இப்படி எல்லாம் நடக்கணும்? முடியலடா! ஒருத்தனையும் விடக் கூடாது, எதாவது பண்ணணும்...” என்று கோபமாக உறுமியவனின் வார்த்தையில், ரௌத்திரத்தை விட வலி அதிகமாகத் தென்பட்டது.

“ஆஷிக் ரிலாக்ஸ்! நீ கவலைப்படாத, நாம ஏதாவது பண்ணலாம்.” என்று ரோஹித்தும் ஆதர்ஷும் மாறி மாறி அவனுக்கு ஆறுதல் அளிக்க அசையாமல் நின்றவன்,

திடீரென்று தன் கண்களில் கனல் தெறிக்க அவர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாது, வேகமாக அங்கிருந்து சென்று வண்டியில் ஏறி வேங்கையெனச் சீறிப் பாய்ந்தான்.

***





நிலவே 69

இன்று சமீர் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள், "உன் ஆசை வொய்ஃப்பை என்கிட்ட விட்டுட்டு போ நான் பார்த்துக்கறேன்.” தன்னை மூர்க்கனாக்கிய அதே வார்த்தைகள், ஜியாவுக்கு அவன் இழைத்த கொடுமைகள், ஜியாவின் கதறல்கள் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆஷிக்கை மீண்டும் மிருகம் ஆக்க, ஆக்சிலேட்டரை ஆக்ரோஷமாக மிதித்தவாறு புயலாய் பறந்தான்.

'இன்னைக்குத் தான் உனக்குக் கடைசி நாள் சமீர். உன்னை ஒரு தடவ இல்லை, நூறு தடவ என் கையாலே அடிச்சே சாகடிக்கப் போறேன்.' என்று முழங்கியவாறே, ஆத்திரமும் கோபமும் போட்டியிட ஆக்சிலேட்டரை இன்னும் அழுத்தியவன், சாலையில் வேகமாகப் பறந்தான்.

இவன் சென்ற வேகம் வீட்டில் உள்ள அனைவரையும் கலங்கடிக்க, அவனது அலைபேசிக்கு விடமால் ரோஹித் தொடர்பு கொள்ள, எல்லா அழைப்பையும் துண்டித்தான். தன்னையும் மீறிய வேகத்தில் பயணித்தவன்,

ஜியா காலிங் என்று அலைபேசியின் தொடு திரையில் தெரியவும் ஒருவித நிதானத்துடன் அட்டென்ட் செய்தவன்,

"ஜியா...” என்று அழைப்பதற்குள்,

"நான் தியா பேசுறேன் ஆஷிக். நீ என்ன பண்ணினாலும் அது ஜியாவதான் பாதிக்கும். அவளுக்கு உன்னை விட்டா யாரு இருக்காங்க? ஸோ, எது பண்ணினாலும் ஜியாவ மனசுல வச்சுக்கிட்டு பண்ணு.” என்ற தியாவின் வார்த்தைகளில், தன் நிதானத்தை இழந்தவன் எதிரே வரும் வண்டியை கூடக் கவனிக்காது இருக்க,

பின் சுதாரித்துக் கொண்டவன், 'ஜியாவை' எண்ணியவாறு ஸ்டியரிங்கை திருப்பி, அவன் அடித்த பிரேக்கில் வண்டி நேராக இருந்த மரத்தில் மோதி நின்றது.

காரின் முன் பகுதி நொறுங்கி போய் இருக்க, என்றும் அணியாதவன் இன்று அணிந்த சீட் பெல்ட்டால் தலையில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டிருக்க, கணப் பொழுதில் உயிர் தப்பினான்.

"ஜியாக்கு உன்னை விட்டா யாரு இருக்காங்க? நீ என்ன பண்ணினாலும் அது ஜியாவதான் பாதிக்கும்." என்று தியா சொன்ன வரிகள் கிளர்ந்தெழுந்திருந்த அவனது கோபத்தை மட்டுப்படுத்தியது. நெஞ்சைப் பிடித்தவாறு முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட ஸ்டியரிங் மீது சாய்ந்தான்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிய, கலைத்து போய் வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்ட பிறகுதான் அவனது நண்பர்களுக்கு உயிரே வந்தது. அவர்கள் எதுவும் கேட்கவில்லை, அவனாகவே நடந்ததைக் கூறினான்.

‘ஏன்டா இப்படிப் பண்ணின?’ என்று எந்தக் கேள்வியும் அவர்கள் கேட்கவில்லை. அனைவரின் முகத்திலும் அவன் போனது போலத் திரும்ப வந்த நிம்மதிதான் தெரிந்தது.

"இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, என்ன பண்றது? லாயர்கிட்ட பேசுனியா, என்ன சொன்னாரு?” என்றான் ரோஹித்.

"பெரிய பெரிய லாயர்ஸ்கிட்ட எல்லாம் பேசியாச்சு, எவிடென்ஸ் இல்லைனு சொன்னதையே சொல்றாங்க.” எரிச்சலோடு கூறினான்.

இதற்கு மேல கேள்வி கேட்டு அவனைச் சங்கடப்படுத்த விரும்பாது, "ரெஸ்ட் எடு" என்ற அவனது நண்பர்கள் அவனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு சென்றனர்.

முகம் முழுவதும் வியர்வை துளிகள். இதயத் துடிப்பு எகிற, நெஞ்சை அழுத்தி பிடித்தவாறு உறக்க கலக்கத்திலே விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். அதே கனவு! தினமும் இரவு, பகல் என்று பாராது தன்னைத் துரத்தும் அதே கனவு. விழிகளில் நீர் சுரந்தது.

படுக்கையில் இருந்து தன் வலுவிழந்த கால்களை மெல்ல தரையில் ஊன்றினாள். பாதம் சரியாகத் தரையில் பதியாமல் தடுமாறியது. கட்டிலின் கால்களைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள். தட்டு தடுமாறி நடந்தாள், மருந்தின் வீரியம் தடுமாற வைக்கத் தாங்கிப் பிடித்தான் அவளது கணவன். மெதுவாகக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் வெளியில் வரும் வரை காத்திருந்தான்.

குளியல் அறையை விட்டு வெளியே வந்த தன் மனைவியை, கைத்தாங்கலாக பற்றிக்கொண்டு மெத்தையில் அமர வைத்தான். கலைந்திருந்த கேசத்தைச் சரி செய்தவாறே, “சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். நான் உனக்கு ஊட்டிவிடுவேன், நீ எல்லாத்தையும் ஒன்னு விடாம சாப்பிடணும் சரியா?” என்றான்.

"ஏன் என்னை எழுப்பலை?” சம்பந்தம் இல்லாமல் வெளிப்பட்டது கேள்வி.

அந்த நிகழ்வுக்குப் பிறகு ஜியா இப்படித் தான் சில நேரங்களில் சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ கேட்பாள். ஆனால் அதை எல்லாவற்றையும் இப்பொழுதும் போல ஆஷிக் புன்னகையோடு சமாளிப்பான்.

"அது நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அதான் எழுப்பலை.” என்று செல்லமாக அவளது கன்னத்தைத் தட்டியவன்,

"சரி வாயத் திற, சீக்கிரமா சாப்பிடு, மாத்திரை வேற போடணும்...” என்றவனைத் தன் விழிகளை அகற்றாமல் ஜியா அப்படியே பார்த்துக் கொண்டிருக்க,

"என்னாச்சுமா, ஏன் அப்படிப் பார்க்குற?” என்று ஆஷிக் ஆச்சரியமாய் கேட்க,

மெல்ல அவனது நெற்றியில் இருந்த சிகையை ஒதுக்கியவள், பின்பு தன் பிஞ்சு விரலால் மென்மையாய் தன்னவனது நுதலில் இருந்த காயத்தைத் தடவி விட்டாள். அவளது கண்கள் கரித்தது.

"எப்படி அடி பட்டது? ஏன் என்கிட்ட சொல்லல, வலிக்குதா?” என்று தவிப்போடு கேட்டவளை ஆச்சரியமாய் பார்த்தவன்,

"உனக்குச் சத்தியமா ஞாபகம் இல்லையா?” என்று கேட்க, இல்லை என்பதாய் தன் தலையைக் குறுக்கே அசைத்தவள் மீண்டும் அவனது காயத்தை வருட,

"உங்க மனைவி இப்போ லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்காங்க. அட்டாக் வரும்பொழுது அவங்க என்ன பண்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. இப்படியே போன ஷி வில்..." என்ற வரிகள் அவனது செவியில் விழ,

விழிகள் தானாகக் கலங்க வருடி கொண்டிருந்த அவளது மென்கரத்தை பற்றித் தன் கண்களில் ஒற்றி எடுத்தவன், ஜியா சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளைத் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். சில நிமிடங்கள் கழித்துக் கலங்கிய தன் கண்களைத் துடைத்து கொண்டவன் அவளையே உற்று பார்க்க,

"என்னாச்சு ஆஷிக்?” என்றவளுக்கு ஒன்றுமில்லை என்பதாய் தன் தலையை மட்டும் குறுக்க அசைத்து சிகையை வருடி கொடுத்தான்.

ஜியாவுக்கு உணவு கொடுத்துவிட்டு தன் வீட்டின் தோட்டத்தில் அவளது கரம்கோர்த்து, ஏதேதோ பேசியவாறு நடந்து கொண்டிருந்தவனின் அலைபேசி அழைத்ததும் அட்டென்ட் செய்தவன்,

"வாட்! என்ன ரோஹித் சொல்ற?"

"ஆமா, கேள்வி கேட்காம உடனே நீ கிளம்பி நடாஷா வீட்டுக்கு போயிரு, நானும் ஆதர்ஷும் அங்க வந்திடுறோம்."

"டேய், நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"போலீஸ் இப்போ உன்னைத் தேடி தான் வருவாங்க...” என்று ரோஹித் கூறும் பொழுதே, போலீஸ் அதிகாரி ஒருவர் காவலாளிகளுடன் தன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவன் ரோஹித்திடம்,

"வந்துட்டாங்க.” என்ற ஆஷிக் தன் அலைபேசியைத் துண்டித்துவிட்டு தன் வீட்டிற்குள் நுழையவும்,

அந்த அதிகாரி ஹாஜராவிடம், “உங்க பையன் ஆஷிக், அவரை வர சொல்லுங்க, அவரை அரெஸ்ட் பண்றதுக்கு என்கிட்ட வாரண்ட் இருக்கு. ஆஷிக் எங்க இருக்காருன்னு சொல்லுங்க.” என்று கூறவும்,

"நான் இங்கதான் இருக்கேன், எதுக்கு அரெஸ்ட் பண்ணணும்?” என்று கேட்டவாறே வீட்டிற்குள் நுழைந்தான்.

இன்ஸ்பெக்டரிடம் என்ன விஷயம் என்று கேட்கவும், "மிஸ்டர் சமீர்...” என்று அவர் தொடர்வதற்குள் குறுக்கிட்ட ஆஷிக்,

"என்ன செத்து போயிட்டானா? ஆனா நான் கொலை பண்ணல.” என்று எந்தவித சலனமும் இல்லாமல் அவரிடம் பதிலளிக்க,

"நீங்க பண்ணல, ஆனா ஆள ஏற்பாடு பண்ணி அவர் மேல தாக்குதல் நடத்திருக்கீங்க. இப்போ அவரு ஹாஸ்பிட்டல்ல ஆபத்தான நிலையில இருக்காரு."

"வாட்!?"

"அவரைத் தாக்குனவனைக் கண்டு புடிச்சாச்சு. விசாரிக்கும் பொழுது அவன் உங்க பேரை தான் சொல்றான். ஸோ உங்களை நாங்க அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம். கேள்வி கேட்காம வர்றீங்களா?” என்ற அதிகாரியைப் பார்த்து வெறுமையோடு சிரித்தவன்,

"நான்... நான் அந்தப் பொறுக்கிய ஆள் வச்சு கொலை பண்ண பார்த்தேனா? அவனைக் கொலை பண்ண என்னோட இந்த இரண்டு விரலே போதும். ஒரு நிமிஷம் அழுத்தினேன்னா பொட்டுன்னு போயிருவான். நான் பண்ணல, அவன் செத்தெல்லாம் போயிருக்க மாட்டான். ஹாஸ்பிடல்ல போய்ப் பாருங்க, நல்லா காலாட்டிட்டு படுத்திருப்பான். இதெல்லாம் அவனோட செட் அப்!” என்று ஆஷிக் சிடுசிடுக்க,

"அதெல்லாத்தையும் கோர்ட்ல போய் சொல்லுங்க. இப்போ என்னோட கடமையைச் செய்ய விடுங்க, நீங்களா வந்தா நல்லது..."

"வரலைன்னா என்ன பண்ணுவீங்க? ம்ம்ம்...” என்று ஆஷிக் எகிற,

அதிகாரி, "என் கடமையைச் செய்ய விடாம தடுக்குறீங்கன்னு உங்க மேல இன்னொரு கேஸ் போட வேண்டியிருக்கும்."

"என்ன அவன்கிட்ட காசை வாங்கிட்டு இங்க வந்து மிரட்டுறீங்களா? வாங்குற சம்பளத்துக்குக் கொஞ்சமாவது உண்மையா இருங்க. செய்யலன்னு சொல்லிட்டு இருக்கேன், வேணும்னா இப்போ அவன்கிட்ட என்னைக் கூட்டிட்டு போங்க. உங்க முன்னாடியே அவனைக் கொன்னு போடுறேன். அப்போ உங்க கடமையைச் செய்யுங்க.” என்று ஆஷிக் எரிச்சலோடு கடுகடுக்க,

ஆஷிக்கின் அலட்சிய பேச்சு அதிகாரியின் கோபத்தைக் கிளறியது.

"விஷயம் என்னன்னு சொல்லிட்டேன், கொலை முயற்சி பண்ணினவன் உங்களைத்தான் சொல்றான். சமீரும் உங்க மேல தான் கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு. அரெஸ்ட் வாரண்ட் கையில இருக்கு. எது பேசணுமோ அதை ஸ்டேஷனுக்கு வந்து பேசுங்க. படிச்சவர்னு மரியாதையா நடத்தினது என் தப்பு...” என்றவர் ஆஷிக்கின் கையில் விலங்கு மாட்ட முயன்ற நேரம் அவரைக் குறுக்கிட்ட ஜியா,

"இல்லை, ஆஷிக்க எங்கையும் அழைச்சுட்டு போக முடியாது. அவன் எதுவும் பண்ணிருக்க மாட்டான்.” என்று பதற்றத்துடன் அந்த அதிகாரியிடம் பேச,

"மேடம் ப்ளீஸ்... எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்க.” என்றவர் ஜியா மற்றும் ஹாஜராவின் எதிர்ப்பை மீறி அவனது கரத்தில் விலங்கிட,

துடித்துப் போன ஜியா, ஆஷிக்கை பிடித்துக்கொண்டு கதற, "பயப்படாத ஜியா, எனக்கு ஒன்னும் இல்லை. போன வேகத்துல நான் வீட்டுக்கு வந்துருவேன். நீ தைரியமா இரு, அம்மா பார்த்துக்கோங்க. ரோஹித், ஆதர்ஷ்க்கு ஃபோன் பண்ணுங்க.” என்றவன், தன்னை விடமாட்டேன் என்று இறுக்கமாக பற்றிக்கொண்ட ஜியாவின் கரத்தை விலக்கி விட்டவாறு, இன்ஸ்பெக்டருடன் ஆஷிக்... ஆஷிக்... என்று கதறிய தன் மனைவியைப் பார்த்தவாறே தவிப்புடன் சென்றான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 70, 71 & 72
 
Last edited:
Top