- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 9
நடாஷா அவ்வளவு சமாதானம் கூறிய பின்பும் ஜியாவின் கோபம் மட்டும் சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது. விமானம் தரையிறங்குவதற்காகத் தயாராக இருக்க, ஆதர்ஷ் ஜெய்ப்பூர் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலர்க்கு (ATC) தொடர்புகொண்டு,
"ATC ஜெய்ப்பூர் திஸ் ஐஸ் CJ 345 டெல்லி டு ஜெய்ப்பூர் ரெடி ஃபார் லேண்டிங், ஓவர் அண்ட் ஓவுட்.” என்று அனுமதி கேட்க, அங்கே பதிலுக்கு அவர்கள், “எஸ் CJ 345 ட்ராபிக் வாஸ் கிளீயர்ட், லேண்டிங் இஸ் க்ராண்ட்டட்.” என்று அவர்கள் அனுமதி கொடுக்க,
பயணிகளுக்கும் கேபின் க்ரூவ் மெம்பெர்ஸ்க்கு அறிவிப்பை பின்வருமாறு தன் பாணியில்,
"லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ், நவ் வீ ஆர் ரெடி ஃபார் லேண்டிங் இன் ஜெய்ப்பூர் கேபின் க்ரூவ் ப்ளீஸ் பிரிப்பர் ஃபார் லேண்டிங்.” என்று கூறினான். அவனது அறிவிப்பிற்குப் பிறகு அவர்கள் மீண்டும் பயணிகளைத் தங்களின் இருக்கைகளில் அமர சொல்லி, சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளுமாறு அறிவுப்பு கொடுத்தனர்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மிகவும் பத்திரமாக விமானம் தரையிறங்க, நடாஷாவிடம் தவறாகப் பேசிய அந்த நபர், நடாஷாவையும் ஜியாவையும் ஏளனமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல முனையும் நேரம் பார்த்து, ஏர்போர்ட் போலீஸ் செக்யூரிட்டி அவனைக் கைது செய்ய,
அவன் அவர்களிடம், "என்ன சார், என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க?” என்று போலீஸிடம் கேட்க,
அவர்கள், "ஏர்ஹோஸ்டஸ்கிட்ட தகாத முறையில பேசினதுக்காக உங்க மேல மிஸ் நடாஷா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க, ஸோ நீங்க கோஆப்ரேட் பண்ணிதான் ஆகணும்.” என்று கூறி, அவனை விசாரணை அறைக்கு இழுத்து செல்ல நடாஷா, ஜியா, ஆஷிக், ஆதர்ஷ் மற்றும் அவர்களுடன் இருந்த சக பணியாளர்களும் உடன் சென்றார்கள்.
விசாரணை அறையில் கைது செய்யப்பட்ட அந்த நபர், "சார் என் பேரு திலீப், டெல்லியில சாப்ட்வெர் என்ஜினீயர். லீவ்ல அம்மா, அப்பாவை பார்க்க வந்திருக்கேன். நான் ரொம்ப நல்லவன், நீங்க நினைக்கிற மாதிரியான ஆளு நான் இல்லை. இவங்க பொய் சொல்றாங்க, நியாயப்படி கம்ப்ளெயின்ட் நான்தான் குடுக்கணும்.
இவங்கதான் என் கன்னத்துல அறைஞ்சாங்க.” என்று ஜியாவைக் கை காட்ட, போலீஸ் ஆதிகாரிகள் அவனிடம், "அவங்க அடிக்கிற அளவுக்கு நீ என்ன பண்ணினனு சொல்லு."
"நான் ஒன்னும் பண்ணலை, குடிக்கத் தண்ணி கிடைக்குமானுதான் கேட்டேன்.” என்று அவன் கூற,
ஜியா ஆவேசத்துடன், "டேய் பொய் சொன்ன அவ்வளவுதான்...!” என்று மிரட்ட,
நடாஷா, "அவன் பொய் சொல்றான். சாப்பாடு குடுக்கும் போது வேணும்னே என் கையைப் பிடிச்சான். அப்புறம் சீட் பெல்ட் போடும் போது ஷார்ட் ட்ரெஸ்ல அழகா இருக்க, இன்னைக்கு நைட் நான் ப்ரீதான் கம்பெனி குடுக்குறியா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்னு சொன்னான். அதனாலதான் ஜியா மேடம் இவனை அறைஞ்சாங்க."
"ஆமா சார், நடாஷா சரியாதான் சொல்றாங்க. அவன் அப்படித்தான் கேட்டான், அதை என் கண்ணால நான் பார்த்தேன்.” என்று ஜியா கூற,
நடாஷா, திலீப்பிடம், "நான் ஏர் ஹோஸ்டஸ்தான், என்னோட வேலை கஸ்டமர்ஸ்குச் செர்வ் பண்றதுதான். ஆனா அதுக்காக என்னுடைய நிலைமைய யூஸ் பண்ணிக்க நினைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன். டூ யு கெட் தட்!” என்று கண்களில் கோபம் தெறிக்க கூறியவளைக் கண்டு சில நொடிகள் ஆதர்ஷ் பிரமித்துப் போனான். பிரச்சனை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் வடிக்கும் பெண்களின் மத்தியில் நடாஷாவின் செயல் ஆதர்ஷை கட்டி போட்டது என்றுதான் கூறவேண்டும்.
டொமஸ்டிக் ஏர் போலீஸ் ஸ்டேக்ஷனில் உள்ள போலீஸ் அதிகாரி, திலிப் மீது IPC செக்ஷன் 509 (பெண்ணைத் தகாத வார்த்தையாலும் தவறான செய்கையாலும் இழிவுப்படுத்துதல்) மற்றும் IPC 345A (பாலியல் துன்புறுத்தல்) பிரிவின் கீழ் FIR பதிவு செய்து, அவனை கைது செய்தனர்.
சக ஊழியர்கள் அனைவரும் நடாஷாவின் துணிச்சலையும் அறிவுபூர்வமான செயலையும் கண்டு வியந்து பாராட்டினர்.
அப்பொழுது நேஹா நடாஷாவிடம், "இந்த மாதிரி எங்களுக்கு நடந்த அப்போ எல்லாம் நாங்க கோபப்படுவோம், அழுவோம். அப்புறம் மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவோம். ஆனா நீ பண்ணின மாதிரி இவ்வளவு பொறுமையா நாங்க ஹேண்டில் பண்ணினதே இல்லை. உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் இவனை மாதிரி ஆளுங்கள்லாம் ஏன் சகிச்சுக்கணும்னு தோனுது. எங்க எல்லாருக்கும் இது ஒரு நல்ல இன்ஸ்பிரெஷன்.” என்று கட்டி தழுவிக்கொள்ள,
நடாஷா, ஜியாவிடம், "பல நேரங்கள்ல பிரச்சனைகளை எமோஷனலா திங்க் பண்ணாம இன்டெலிஜென்ட்டா சால்வ் பண்ண வேண்டிருக்க, நீங்க எமோஷன்ல அவனை அடிச்சுட்டீங்க. பதிலுக்கு அவன் உங்களை ஏதாவது பண்ணிருந்தா என்னால யோசிக்கக் கூட முடியலை மேம். நான் ரொம்பப் பயந்துட்டேன். ஆனா எனக்கு நீங்க ரொம்ப சப்போர்ட் பண்ணுனீங்க, அதுக்கு எப்பவும் நான் கடன்பட்டிருக்கேன்.” என்று நடாஷா கூற,
ஆஷிக் அவளிடம், "இதையெல்லாம் நீ ஒரு இன்டெலிஜென்ட்டான ஆளுகிட்ட சொல்லணும் நடாஷா.” என்று ஜியாவை ஓரக்கண்ணால் பார்க்க,
ஜியா, ஆஷிக்கை பார்த்தவாறே, "எல்லாருக்கும் இன்டெலிஜென்ட்டா ஹேண்டில் பண்ண கூடிய ப்ராப்ளம் மட்டுமே வர்றது இல்லை நடாஷா.” என்று அவளது தோளில் மெல்ல தட்டி, மெலிதாய் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் நடாஷா, ஆஷிக்கைப் பார்த்து, "என்ன சார் நீங்க, பாருங்க மேம் கோபமா போறாங்க."
"உங்க மேம்கு கோபப்பட சொல்லித்தரணுமா என்ன? என் பேரை சொன்னாலே அவளுக்கு ஆட்டோமெட்டிக்கா கோபம் வரும், அவளை விடு.” என்றவன், "கங்கிராட்ஸ் நடாஷா! ஐயம் ஸோ ப்ரவுட் ஆப் யு.” என்று தன் பங்கிற்கு நடாஷாவைப் பாராட்டிவிட்டு, ஆதர்ஷிடம் வாஷ் ரூமிற்க்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
தன்னைப் பார்வையாலையே ஆதர்ஷ் விழுங்கி கொண்டிருப்பதைக் கண்ட நடாஷாவிற்கு உள்ளுக்குள் எதோ செய்ய, ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவள் பதிலுக்குத் தானும் பார்க்க, அந்தப் பூவையின் காந்த பார்வையின் வீச்சைத் தாங்க முடியாதவன், உதட்டில் புன்னகையைத் தழுவ விட்டவாறே அவளின் அருகில் வந்து,
"அழகா இருக்கனு சொன்னா ஒரு குற்றமா? அதுக்குப் போய் அந்தப் பையனை ஜெயிலுக்கு அனுப்பிட்டியேமா?” என்று கூற, பதிலுக்கு அவள் செல்லமாய் முறைப்பது தெரிய,
"ஏய் சாரி, சும்மா கிண்டல் பண்ணினேன். எல்லாரும் உன்னைப் பாராட்டினாங்க, நானும் அதையே சொன்னா உனக்குப் போரடிச்சுரும் அதான் சும்மா...” என்ற ஆதர்ஷை பார்த்து புன்னகைக்க,
ஆதர்ஷ் அவளிடம், "ஒன்னு சொல்லட்டா?"
"ம்ம்..."
"நீ சிரிக்கும் பொழுது அழகா இருக்க. ஆனா என்னை ஜெயிலுக்கெல்லாம் அனுப்பிறாத.” என்று சிரித்தவனைப் பார்த்து சிரிக்க,
ஆதர்ஷ் அவளிடம், "என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடுறியா?” என்று சிறு தயக்கத்துடன் கேட்க,
"ஆனா ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடுச்சே?” என்றவளைப் பார்த்து ஆதர்ஷ்,
"அதுக்கு இன்னும் டைம் இருக்கு, ஒரு கப் காஃபி தானே?” என்றவனைப் பார்த்து புன்னகைக்க, இருவரும் சென்று ஒரு டேபிளில் அமர்ந்துகொண்டு காஃபிக்காகக் காத்துக்கொண்டிருக்க அப்பொழுது ஆதர்ஷ் அவளிடம்,
"இருந்தாலும் நீ பண்ணினது ரொம்ப பெரிய விஷயம்னுதான் சொல்லணும். இப்படி ஒரு சூழ்நிலையை இவ்வளவு பொறுமையாவும் பக்குவமாவும் தைரியமாவும் நீ ஹேண்டில் பண்ணுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை.
எல்லாப் பொண்ணுங்களும் தங்களோட பிரச்சனைய ஹேண்டில் பண்றதுக்கான மனவலிமையைக் கண்டிப்பா வளர்த்துக்கணும். அது பொண்ணுங்களுக்கும் ரொம்பவே அவசியம்.” என்றவனை, நொடிப்பொழுது கூடக் கண்ணிமைக்காமல் நடாஷா பார்த்துக்கொண்டிருக்க,
ஆதர்ஷ் அவளிடம், "ஏய் என்னாச்சு? அப்படிப் பார்க்குற? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?"
"என்னால நம்ப முடியலை."
"எதை நம்ப முடியலை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தவனைப் பார்த்து,
"இதை, இந்த நிமிஷத்தை, நீங்க என்கூட உட்கார்ந்து காஃபி சாப்பிடுறத, நீங்க இதுவரை தனியா ஒரு பொண்ணுகூட இப்படி காஃபி சாப்பிட்டு நான் பார்த்தது இல்லை.” என்று ஆச்சரியமாய் விழி விரித்தவளிடம் மிகவும் இயல்பாக,
"மனசுக்கு தோனணும்ல...” என்று ஆதர்ஷ் கூறியதில் மெலிதாய் புன்னகைக்க,
ஆதர்ஷ் காஃபியை அருந்தியவாறே, "ஆமா நடாஷா, உனக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியுமா என்ன?” என்று கேட்க, அதற்கு நடாஷா என்ன பதில் கூறவேண்டும் என்று புரியாமல் பார்க்க, ஆதர்ஷ் தன் புருவத்தை உயர்த்தி, ‘நான் கேட்டதற்குப் பதில் எங்கே' என்பது போல் தன் கண்களாலே பார்க்க,
"டைம் ஆகிடுச்சு.” என்று எழுந்தவளைப் பார்த்து ஆதர்ஷ்,
"ம்ம் நில்லு, நானும் உன்கூடத் தானே வரப்போறேன் சேர்ந்தே போகலாம்.” என்று அவளுடன் செல்ல, இருவருக்கும் இடையே இருக்கரங்கள் உரசுகின்ற அளவிற்கு மட்டுமே இடைவெளி இருந்தாலும், அங்கே மௌனம் மட்டுமே வார்த்தையாகி கண்களாலே பேசிக்கொண்டனர். இருவருக்குமே இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.
அவர்களிடம் வாஷ்ரூமிற்கு சென்று வருவதாகக் கூறியவன், ஜியாவைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தான். எங்கே தேடியும் கிடைக்காத ஜியா லேடிஸ் வாஷ்ரூமில் இருந்து விமான ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் செல்வதைக் கண்ட ஆஷிக் புன்னகைத்தவாறே, அவள் பின்னாலே சென்று அவளது காதில் சட்டென்று, "ஹாய்!” என்று கூற,
அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் செல்ல, மீண்டும் சென்று அவளது முன்னாள் நின்றவன், "நான் ஒன்னும் பண்ணமாட்டேன்.” என்று கண்ணடிக்க,
"என்ன வேணும் உனக்கு?"
"அது நிறையா வேணும், இப்போதைக்கு ஒன்னே ஒன்னு..."
"என்னைத் தொல்லை பண்ணாம நேரடியா விஷயத்துக்கு வா."
"சரி கூல் கூல்... அந்தப் பையனை ஒரு வழி பண்ணிட்ட போல?"
"இதைக் கேட்கதான் வந்தியா?” என்றவள் அங்கிருந்து செல்ல போக,
"இல்லை இல்லை... வேற ஒன்னும் கேட்கணும். அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன், நீ லண்டன் ரிடர்ன்ஸ்னு எல்லாரும் சொன்னாங்க. என்ன ஏதும் வெள்ளைக்காரனையோ கருப்பனையோ உஷார் பண்ணிட்டியா?” என்று அவளைக் கிண்டல் செய்வது போல் நினைத்துக் கொண்டு தன் மனதில் உள்ளதைக் கேட்க,
அவன் ஏன் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள், "ஆமா, ஆனா அவரு வெள்ளைக்காரனும் இல்லை கருப்பனும் இல்லை. அவருக்கு நம்ம ஊர், என்கூட ஒன்னா ஒர்க் பண்ணினவரு. அவரு இப்போ ஆஸ்திரேலியால இருக்காரு, குழந்தைங்க படிப்புக்காக நான் இந்தியால. அவரு நெக்ஸ்ட் இயர்ல இருந்து இந்தியாவே வந்திருவேன்னு சொல்லிருக்காரு.” என்றவள், அவன் ஏதும் பதில் கூறுவதற்குள் மேலும் தொடர்ந்து,
"பையன் ஃபர்ஸ்ட் படிக்கிறான், பொண்ணு LKG. ரெண்டு பேரையும் விக்காசுலதான் சேர்த்திருக்கேன்." என்றவள் தன் கை கடிகாரத்தைப் பார்த்து,
"ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு ஆஷிக், நான் போகணும்." என்று இதை அனைத்தையும் கொஞ்சம் கூடச் சிறு உளறல் இல்லாமல் அவனது கண்களையேப் பார்த்து ஜியா கூற, ஆஷிக்கின் முகத்தில் சோகம் குடிகொண்டது.
அவளோ அதை ரசித்தவாறு அங்கிருந்து செல்ல, சில நொடிகளில் அவன் பக்கம் திரும்பி, "பாரு நீயும் நானும் ஒரே ஃப்ளைட்டுக்குதான் போகணும், ஆனா நான் மட்டும் எதோ தனியா போற மாதிரி சொல்றேன். உனக்கும் டைம் ஆச்சுல, வா சேர்ந்தே போகலாம்.” என்று வேண்டும் என்றே கேட்க, கவலையாய் இருந்த ஆஷிக் அவளிடம்
"இல்லை ஜியா நீ போ, நான் ஆதர்ஷ் கூட வந்துருவேன்.” என்று கூற,
"ஓகே, பாய் ஆஷிக்!” என்று தன் புன்னகையை அடக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றவள், கொஞ்சம் யோசித்துவிட்டு அவன் பக்கம் திரும்பி, "ஆஷிக் என் ஹப்பி பேரு கார்த்திக், ஸோ இனிமே என்னைக் கூப்பிடும் போது ஜியா கார்த்திக்குனே கூப்பிடு, ஐ லைக் தட்.” என்று அவள் கூறியதைக் கேட்ட ஆஷிக் நொறுங்கி போனான். பதில் ஏதும் கூற முடியாமல் விக்கி விதைத்து, வாய் வார்த்தை ஏதும் இன்றி மௌனமாய் நின்றான்.
***
நிலவே 10
இரவு ஒரு பத்து மணி அளவில் ஆஷிக், ஆதர்ஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த,
கதவைத் திறந்த ஆதர்ஷ், "டேய் ஆஷிக், இங்க என்னடா பண்ற?"
"ஏன் வர கூடாதா?"
"இல்லடா, தியா கூட மூவி போறேன்னு சொன்னியே, அதான் கேட்டேன்."
"ஆமா போனேன், அப்புறம் வந்துட்டேன் இப்போ என்ன? உள்ள வரலாமா இல்லை இங்கையே விசாரிச்சுட்டு இருக்கப் போறியா?” என்று அவனை இடித்துவிட்டு உள்ளே வந்து சோபா மீது அமர்ந்துகொண்டு ஆதர்ஷிடம்,
"டேய் நான் உன்கிட்ட ஒன்னு கேக்க போறேன்?"
"இது பத்தாவது தடவ..."
"என்ன?”
“நான் உன்கிட்ட ஒன்னு கேட்க போறேன்னு நீ சொல்றது' முடியலடா என்னால..."
"ஜியா என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் இத்தனை நாள்ல நான் பொண்ணுங்க கூடச் சுத்திருக்கேன், ஆனா ஜஸ்ட் ஃப்ரண்ட்லியா. டேய்...” என்று ஆதர்ஷைத் தட்டியவன்,
"அமைதியா இருக்காத, ஆமானு சொல்லுடா. அப்போதான் எனக்குச் சொல்ல வரும்."
"ஆமா"
"இதுவரை நான் யார்கூடயும் கமிட் ஆகல."
"ம், டேய் விஷயத்தைச் சொல்லுடா."
"சொல்றேன், நான் இன்னும் யாரையும் கல்யாணமும் பண்ணிக்கல."
"அட ச்ச... சொல்லி தொலையேன்டா..."
"ஜியா இருக்காள்ல...” என்று ஆரம்பிக்க,
"மறுபடியும் முதல்ல இருந்தா?" என்று கலங்கியவன், சட்டென்று டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து ஆஷிக்கின் கழுத்தில் வைக்க,
"என்னடா பண்ற?"
"என் பொறுமையை நீ ரொம்பச் சோதிக்குற, டர்ன் அரௌண்ட் ட்ரிப் பாத்துட்டு செம டயர்டுல இருக்கேன். என்னைக் கொலைகாரனா ஆக்காத. சொல்ல வந்ததை ரெண்டு நிமிஷத்துல சொல்லு.” என்று கெடு விதிக்க,
ஆஷிக் நடந்த எல்லாவற்றையும் கூறி முடிக்க, "இதுல என்னடா இருக்கு?"
"நான் இன்னும் கல்யாணம் பண்ணல, அவ மட்டும்..."
"நீ பண்ணலனா அவ ஏன்டா பண்ண கூடாது? ஏய் வெயிட் பண்ணு, அவதான் உனக்கு வேண்டாமே அப்புறம் என்ன வெங்காயத்துக்கு இதெல்லாம் கேக்க? வா, வந்து படு எனக்குத் தூக்கம் வருது."
"டேய் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் ஆமா இல்லைனு பதில் சொல்லிட்டு போடா."
"ஆ... என்ன?"
"கல்யாணம் ஆகிருக்குமா, இல்லையா?"
"என்கிட்ட கேக்குற?"
"சொல்லுடா"
"ஒன்னு பண்ணு, நேரா அவ வீட்டுக்குப் போய் குழந்தைங்க இருக்காங்களா, இல்லையானு நீயே பார்த்துட்டு வா."
"செம ஐடியாடா! வாடா ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்திருவோம்.” என்று கூற,
கடுப்பான ஆதர்ஷ், “வாடா...” என்றவாறு அவனை ஹாலில் தள்ளி கதவை சாத்திவிட்டு, தான் சென்று படுத்துக்கொண்டான்.
"டேய் கதவைத் திறடா."
"நீ எவ்ளோ தட்டினாலும் நான் திறக்கமாட்டேன்.” என்று கூறிவிட்டு, தலையணையை வைத்து தன் காதை மூடியவாறு தூங்க,
"டேய், உனக்கு அவ்ளோ ஆகிப்போச்சா? என்னைக்காவது உனக்கும் என் உதவி தேவைப்படும்டா, அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். எனக்கு யார் உதவியும் தேவை இல்லை.” என்றவன் தன் காரில் ஏறி அமர, அப்பொழுதுதான் அவனுக்கு ரோஹித்தின் ஞாபகம் வர அவனுக்குக் கால் செய்தான்.
கடைசி ரிங்கில் எடுத்தவன், "என்னடா இந்த நேரத்துல?” என்று தூக்க கலக்கத்தில் கேட்க,
"சந்தீப் சாருக்கு கால் பண்ணினேன், அவரு அட்டென்ட் பண்ணலை. பத்து நிமிஷத்துல அவரைக் கூட்டிட்டு ஆபிஸ்க்கு வா.” என்றதுடன் தன் ஃபோனை துண்டிக்க,
"இப்பவா?” என்றவனுக்கு அங்கிருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்கவே, அவன் தன் காலை துண்டித்தது தெரிய தன்னை நொந்துகொண்டவாறு, பாதித் தூங்கியும் தூங்காமலும் சந்தீப்பை அழைத்துக்கொண்டு ரோஹித் அங்கே சென்றான். குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் அவர்களைக் கண்டதும்,
"என்ன இது இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கீங்க? பத்து நிமிஷத்துல வர சொன்னா பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வந்திருக்கீங்க. சார் நீங்களாவது கொஞ்சம் பொறுப்பா இருக்க வேண்டாம்?” என்றவனைப் பார்த்து ரோஹித் முறைக்க,
சந்தீப் அவனிடம், "ஏன்பா கேட்கமாட்ட? என்னை விஷயம்பா? சொல்லு, இந்த நேரத்துல வர சொல்லிருக்க?"
"நம்மகிட்ட வேலை பார்க்குறவங்களோட ஸ்டாப் பயோடேட்டா வேணும்.” என்று கூற,
"அதை வச்சுட்டு நீ என்னடா பண்ண போற?” என்ற ரோஹித்திடம், "உன் நண்பனுக்கு இதுகூடத் தரமாட்டியாடா? நட்புனா என்னனு தெரியுமா? நீ என் தளபதிடா!” என்று கூற,
ரோஹித், “டேய் போதும்டா, தூக்கம் வேற கண்ணைக் கட்டுதுடா. என்னால முடியலை, சார் அவன் கேட்டதை எடுத்துட்டு வாங்க.” என்று சந்தீப்பிற்கு உத்தரவு கொடுக்க,
அவர் வாட்ச்மேனின் உதவியோடு அத்தனை ஃபைல்ஸையும் கொண்டுவந்து கொடுக்க, ஆஷிக்கோ சற்று எரிச்சல் அடைந்தான். இத்தனையும் பார்க்கும் அளவுக்குப் பொறுமைசாலியாக இருந்திருந்தால், இவன் இந்த ராத்திரி இப்படி எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்திருக்க மாட்டானே?
சந்தீப்பின் முன்னால் எதுவும் கூற முடியாதவன், அவர்களைப் பார்த்து அசடு வழிய, அவர்களுக்கும் இவனது செய்கை ஒன்றும் புரியாமல் போக இவனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர். நேரடியாகத் தனக்கு வேண்டியதைக் கூற முடியாமல் ஒவ்வொரு ஃபைலாகப் பார்க்க, அவன் தேடிய எதுவும் கிடைக்காமல் போக,
"என்ன சார் இது, பாதி ஜென்ஸ் ப்ரொஃபைலா இருக்கு."
"நம்மளோடது ஏர்லைன்ஸ்பா, இங்க பொண்ணுங்க ரிஷப்ஷனிஸ்ட் அப்புறம் ஏர் ஹோஸ்டர்ஸ் மட்டும்தான் லேடிசா இருப்பாங்க. மத்தவங்க எல்லாரும் ஜென்ஸ்தான இருப்பாங்க."
"இல்ல ரிஷப்ஷனிஸ்ட், ஏர்ஹோஸ்டர்ஸ் இவங்க எல்லாரையும் தாண்டியும் வேலைப் பார்ப்பாங்கள்ல, நல்லா யோசிங்க."
"ஆமா பாத்ரூம் கிளீன் பண்றவங்க..."
"என்ன பாத்ரூம் ச்சீ... என்ன சார் நீங்க?” என்று அவன் எரிச்சல் அடைய,
"சார் எக்ஸாக்ட்டா என்ன வேணும்னு சொன்னீங்கனா எங்களுக்கு ஈஸியா இருக்கும்."
"டாக்டர்ஸ்...” என்று மெல்லமாகக் கூற, தன் நண்பன் யாரைப் பற்றி கூறுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட ரோஹித் கேலியாக ஆஷிக்கைப் பார்க்க ஆஷிக், ரோஹித்தைப் பார்த்து அசடு வழிந்தவாறு நிற்க, சந்தீப் அவன் கேட்ட ஃபைலை எடுத்து வந்து கொடுக்க, ஒவ்வொன்றாகப் பேருக்கு புரட்டியவன் ஜியாவின் ப்ரொஃபைல் வந்தவுடன் நேராக அவளது பெயரைப் பார்க்க, வெறும் ஜியா என்று மற்றும் இருக்க, பின்பு பெர்சனல் டீடைல்ஸ் பக்கம் பார்க்க, அவளுக்கு மட்டும் எதுவும் இல்லாமல் இருக்க,
"என்ன பர்சனல் டீடெயில்ஸ் எதுவும் இல்ல?"
"அது அவங்க இப்போதான் ஜாயிண்ட் பண்ணினாங்க, நாளைக்குத் தரேன்னு சொன்னாங்க.” என்று சந்தீப் கூற,
எரிச்சலோடு சோபா மீது அமர்ந்தான். பின்பு அங்கிருந்து எழும்பியவன் ஃபைலை எடுக்க, "தம்பி விடுங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று கூற,
"சரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்ட,
அப்பொழுது சந்தீப், "ஆஷிக்!” என்று அழைக்க,
"ம்ம் சொல்லுங்க சார்."
"ஜியா மேடம்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அவங்க இன்னும் சிங்கிள்தான். கிரீன் வில்லா ரெஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட்லதான் இருக்காங்க."
"இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?"
"தெரியும் தம்பி, இதுதான்னா ஃபோன்லையே கேட்டிருக்கலாம்.” என்று அவர் கூற, “சாரி அங்கிள்” என்று அசடு வழிந்தவன், தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித்திடம்,
"பார்த்தியாடா, என்கிட்ட கல்யாணம் ஆகிட்டுனு பொய் சொல்லிருக்கா. ஆனா நான்தான் கண்டுபுடிச்சுட்டேனே..." என்று கண்சிமிட்ட,
அவனைப் பார்த்து முறைத்த ரோஹித், "கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்காடா? அவளுக்குக் கல்யாணம் ஆகிட்டானு தெரிஞ்சிக்கவாடா எங்க எல்லாருடைய தூக்கத்தைக் கெடுத்த? டேய் இன்னைக்கு அவ உன் கூடத் தானே டெல்லி ஃப்ளைட்ல வந்தா, பேசஞ்சர் லிஸ்ட்டை பார்த்திருப்ப தானடா, ஏன்டா சாகடிக்கிற?” என்று புலம்பிய ரோஹித்தின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன்,
"சாரிடா செல்லம், கோபப்படாதடா.” என்று கொஞ்ச, ரோஹித் ஆஷிக்கிடம்,
"கொஞ்சினதெல்லாம் போதும், என்னடா நடக்குது?” என்று கேட்க, அவன் கேட்ட எதையும் தன் காதில் வாங்காதது போல,
"சரிடா நாளைக்குப் பார்ப்போம், நல்லா தூங்கு பாய்.” என்று கூறி, ரோஹித்தைப் பார்த்து கண்சிமிட்டியவாறே அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்றதும் ரோஹதித், ‘நீ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும் பொழுது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குடா. ஆனா, மறுபடியும் நீ கவலைப்படுற மாதிரி எதுவும் நடத்துற கூடாது. இதே சந்தோஷம் எப்பவும் நிலைக்கணும்டா.’ என்று தன் மனதிற்குள் ஆஷிக்கை நினைத்து கவலை கொண்டிருக்க, ஆனால் ஆஷிக்கோ இது எதைப் பற்றியும் யோசிக்காமல், புன்னகை தன் முகத்தில் தாண்டவம் ஆட, ஜியாவிற்குக் கல்யாணம் ஆகாததை எண்ணி சந்தோஷமாக இருந்தான்.
காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு நினைவிற்கு வர, "ரெண்டு குழந்தைங்களா? ம்ம்... கிரீன் வில்லா ரெஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட் தானே, இதோ வரேன்டி...” என்றவன், சில மணி நேரத்தில் அபார்ட்மென்டின் வாயிலை அடைந்தான்.
ஆஷிக் அபார்ட்மென்டின் உள்ளே செல்வதைப் பார்த்த வாட்ச்மேன், "சார் இந்த நேரத்துல எங்க போறீங்க, நீங்க யாரு?"
"நான் இந்த அபார்ட்மெண்ட்...” என்று அவன் முடிப்பதற்குள்,
"நீங்க இந்த அபார்ட்மெண்ட் இல்லையே?” என்றவரிடம்,
"ஆமா, இல்லை... நான் இந்த அபார்ட்மெண்ட் இல்லை. நான் பக்கத்து அபார்ட்மெண்ட்.” என்று உள்ளே செல்ல போனவனை தடுத்தவர்,
"சார் எங்க போறீங்க? யாரை பார்க்கணும்?”
"ஜியா... ஜியாவ பார்க்கணும்."
"அவங்களை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. காலையில...” என்பதற்குள் ஆஷிக் அவனுக்கு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டி, "இப்போதும் நான் காலையிலதான் வரணுமா?"
"இல்ல சார், இது உங்க அபார்ட்மெண்ட். எப்ப வேணும்னாலும் வரலாம்.” என்று அசடு வழிய,
"சரி அவங்க எந்த ப்ளாக்?"
"இது உள்ள போறதுக்கு மட்டும்தான் சார்.” என்று அவன் தலையைச் சொரிய, அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்த ஆஷிக், மறுபடியும் இன்னொரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்ட,
"பி பிளாக், டவெல்த் ப்ளோர், நம்பர் 75.” என்று ஒப்பிக்க,
அவன் ஆஷிக்கைப் பார்த்து, “சார் அடிக்கடி வாங்க.” என்று கூற, இவன் சிரித்தவாறே உள்ளே சென்றான்.
ஜியாவின் இல்லத்தில்...
"என்ன டாக்டர் சொல்றீங்க, நான் ப்ரக்னென்டா இருக்கேனா? இது எப்படி முடிஞ்சிது?” என்ற பெண்மனி மயங்கி விழ, சிறிது நேரத்தில் பெட்டில் மயக்க நிலையில் இருந்த பெண் கண் முழித்து,
“ஏன் இப்படிப் பண்ணுனீங்க?” என்ற கேட்டுவிட்டு மீண்டும் மயக்க நிலையை அடைய, யாரோ இருவர் ஜியாவைப் பின்னால் இருந்து தள்ளிவிட்டனர்.
அங்கே வந்த ஆஷிக் அவளது வீட்டின் காலிங் பெல்லை அழுத்த ஜியா, “நோ, என்னை விட்ருங்க.” என்று பயத்தில் கத்த,
முகமெல்லாம் வியர்த்த நிலையில் இருந்தவளுக்கு அப்பொழுதான் தான் கண்டது அனைத்தும் கனவு என்று புரிய, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்திக்கொண்டிருக்க, காலிங் பெல்லின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
சத்தத்தைக் கேட்டவள் சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, அது சரியாக மணி பன்னிரெண்டை காட்டியது.
"இந்த நேரத்துல யாரா இருக்கும்?” என்றவாறு கதவின் அருகில் சென்றவள்,
"வரேன்..." என்றவாறு சிறு தயக்கத்துடன் கதவை லேசாகத் திறந்தவள், செக்யூரிட்டி லென்ஸ் வழியாகப் பார்க்க,
ஆஷிக், “ஹாய்!” என்று புன்னகைக்க,
"நீயா?” என்று ஜியா எரிச்சல் அடைய,
"ஆமா நான்தான்...” என்ற ஆஷிக்கிடம் கோபமாய்,
"என்ன வேணும்?” என்று ஜியா கேட்டாள்.
"உன் குழந்தைங்களைப் பார்க்கலாம்னு வந்திருக்கேன்."
"இப்போவா? அவங்க தூங்குறாங்க."
"நான்தான பார்க்க போறேன்."
"ஆஷிக், நான் திறக்க மாட்டேன், வெளியவே கிட.” என்று கதவை மூட போனவளைப் பார்த்து,
"சரி, இப்போ நீ திறக்கலைனா நான் கத்தி ஊரை கூட்டுவேன். உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே.” என்று கத்த,
உடனே ஜியா கதவைத் திறந்து ஆஷிக்கை உள்ளே இழுத்து கதவை சாற்றினாள்.
"என்ன வேணும் உனக்கு?"
"ஜியா, சாரி சாரி... மிஸ்ட்டரஸ் ஜியா கார்த்திக் சரியா? உங்க குழந்தைங்களை எங்க? தூங்கிட்டாங்களா?"
"இப்போ நீ வெளிய போகப்போறியா, இல்லையா?” என்று அவள் கூற, அதைப் பொருட்படுத்தாதவன் மேலும் முன்னேற, தன் கரங்கள் கொண்டு அவனைத் தடுக்க, புன்னகைத்தவன் சட்டென்று அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, அறையின் கதவைத் திறக்க மெத்தை வெறுமையாகய் இருந்ததைக் கண்டு,
"என்ன குழந்தைங்க நைட் ஸ்டடி பண்ண போயிருக்காங்களா?"
"அது வந்து... அவங்க..."
"அவங்க..."
"எப்படி எப்படி... பெரியவன் ஃபர்ஸ்ட் படிக்கிறான், சின்னப் பொண்ணு LKG செம... ஆனா பேபி, ஞாபகம் இருக்கா லவ் பண்ணும் போது நீ பையன் மட்டும் போதும்னு சொன்ன, நான்தான் பையன், பொண்ணு ரெண்டு பேரும் வேணும்னு சொன்னேன். கடைசில என் டெசிஷன்கு மாறிட்ட போல?"
"ஷட் அப்!"
"ஓகே ஜியா, நீ இந்த மாதிரியெல்லாம் ட்ராமா பண்ணி என்ன ப்ரூவ் பண்ணணும்னு நினைக்கிற? நீ இந்த மாதிரியெல்லாம் சொன்னா நான் ஜெலஸ் ஆவேன்னு நினைக்கிறியா?"
"நான் நினைக்கிறது என்ன, அதான் உன் முகத்திலேயே தெரியுதே?"
"ஸோ, உனக்கு என்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லைனு சொல்ற?"
"கண்டிப்பா."
"அப்படினா என் கண்ணைப் பார்த்து சொல்லு, நான் நம்புறேன்."
"ஆஷிக் எனக்கு உன்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை, நான் எப்பவோ மூவ் ஆன் பண்ணிட்டேன்.” என்று ஜியா அவனது கண்ணைப் பார்த்து கூற,
ஆஷிக், "நான் நம்ப மாட்டேன்."
"லுக், நீ மூவ் ஆன் பண்ணலனா நான் ஒன்னும் பண்ண முடியாது."
"பொய் சொல்ற, நீ மூவ் ஆன் பண்ணல. நீ மூவ் ஆன் பண்ணிருந்தா, இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம தனியாவே இருக்க?"
"யார் சொன்னாங்க, தனியா இருக்கேன்னு? எனக்குக் கல்யாணம் ஆகல, ஆனா எனக்குப் பாய் ஃப்ரெண்ட் இருக்காங்க. நான் மூவ் ஆன் பண்ணிட்டேன்ங்கிறது உண்மைதான். அதை நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.” என்று அவள் செல்ல போக அவளது கரம் பிடித்திழுத்தவன்,
"உன் லைஃப்ல வேற ஒருத்தன் இருக்கான்னு நீ சொல்றத நான் நம்பணும், நல்லாவே பொய் சொல்ற. ஆனா அதை கொஞ்சம் உன் கண்ணுக்கும் சொல்லிக் குடு. பாவம், அதால பொய் சொல்ல முடியலை. இப்பவும் உன் கண்ல எனக்கான காதலை நான் பார்க்குறேன். எப்படி உனக்கான காதல் என் கண்ல தெரியுதோ, அதே மாதிரி."
"முட்டாள் தனம்..."
"இல்லை, இதுதான் உண்மை. ரெண்டு பேருமே உண்மையா காதலிச்சோம்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என்னால மூவ் ஆன் பண்ண முடியலைனா உன்னாலையும் பண்ண முடியாது."
"உண்மை அதுவும் உன்கிட்ட? ஆஷிக், நான் மூவ் ஆன் பண்ணிட்டேன்."
"அப்படியா? இத்தனை வருஷம் கழிச்சு என்னைப் பார்க்கும் போது உனக்கு ஒன்னுமே தோனலை?"
"இல்லை"
"நான் உன்னைச் சுத்தி சுத்தி வரும் போது உனக்கு எதுவும் தோனலை?"
"இல்லை"
"உன்கிட்ட நெருக்கமா வரும் போது கூடவா?"
"இல்லை... இல்லை... எத்தனை தடவை சொல்றது, எனக்கு எந்தப் பீலிங்ஸும் இல்லை.” என்றாள் அழுத்தமாக.
"அப்படியா? அப்போ நிரூபிச்சு காட்டு."
"சரி, என்ன பண்ணணும்?"
"பத்து நிமிஷம் நீ என் கண்ணை மட்டும் பார்க்கணும்."
"சரி” என்று அவள் அவனது கண்ணையேப் பார்க்க,
அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி முன்னேறி வர, தனக்குள் ஏற்பட்ட படபடப்பை அவள் வெளிகாட்டாமல் நின்ற இடத்திலே நிற்க, இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருந்தது.
"இப்போ கூட உனக்கு எதுவுமே தோனலையா?"
"இல்லை...” என்றாள். ஆனால் முன்பை விட இந்த முறை அழுத்தத்தில் சிறிது தளர்வு.
அவன் மெல்ல அவளது கரத்தைத் தன் கரம் கொண்டு கோர்க்க, அவளது பார்வை சற்று கீழே செல்ல, ‘நோ, லுக் இன் டூ மை ஐஸ்.’ என்று அவன் செய்கை செய்ய,
இவளது இதயத் துடிப்பின் வேகம் இன்னும் அதிகரிக்க, கோர்த்த அவளது கைகளை மெல்ல தன் இதழால் ஒற்றி எடுத்தவன்,
முன்னால் கிடந்த அவளது கேசத்தை ஒதுக்கிவிட்டு மெல்ல அவளது கழுத்தின் மிக அருகில் சென்று இதழ் பதிக்க, அவ்வளவுதான், அவனது காதுக்கு கேட்கும் அளவிற்கு அவளது இதயத் துடிப்பின் வேகம் கூடியது.
"இப்பவும் ஒன்னும் தோனலையா?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சில நொடிகள் கழித்து அதுவும் மெல்லமாக விட்டு விட்டு, "இல்... லை...” என்று வர,
லேசாய் புன்னகைத்தவன் மேலும் அவளை நெருங்க, அவளை அறியாமலே அவளது கால்கள் பின்னோக்கி சென்று சுவற்றின் மீது மோதி நிற்க, தன் இருக்கரங்களைச் சுவற்றின் மீது வைத்து ஜியாவின் முன்னால் வந்து நின்றவன்,
தன் விரல் கொண்டு அவளது முகத்தில் வருட, ஆஷிக்கின் வருடலால் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் மேனி சிலிர்த்தவள், தன் இரு கண்களையும் மூட,
"நோ, ஐஸ் ஓபன்.” என்ற ஆஷிக்,
மெல்ல தன் இதழை குவித்து அவளது கன்னத்தை நோக்கி ஊத, மேனி சிலிர்த்தவள் தாபமாய், "ஆஷிக்!” என்று மென்மையாகக் கூற, இவளது பெண்மையின் மென்மையில் தன் ஆண்மையைத் தொலைத்து மெல்ல கிறங்கியவன், அவளது கன்னங்கள் உரசியவாறு அவளது காது மடல்களில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு, "என்ன?” என்று கிசுகிசுக்க,
"பத்து நிமிஷம்...” என்று அவள் கூறியதில் லேசாக சிரித்தவன்,
"இன்னும் தர்ட்டி செகண்ட்ஸ் இருக்கு.” என்று கூறி அவளது கன்னங்களை உரசியவாறே,
"இன்னும் உனக்கு எதுவும் தோனலையா?” என்றவனது கேள்விக்கு அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, புன்னகைத்தவாறே மெல்ல அவளது இதழ் நோக்கி குனிய, அதைத் தடுக்க நினைத்த அவளது மூளையை, அவளது உணர்வுகள் வெல்ல தன் கண்களை மட்டும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
சிறிது நேரம் அதை ரசித்தவன், அவளது மூக்கின் நுனியை தன் விரல் கொண்டு தட்ட, சட்டென்று தன் கண்களைத் திறந்தவள் அவனைப் பார்க்க,
"பத்து நிமிஷம் முடிஞ்சிருச்சு, எனக்கான பதிலும் கிடைச்சிருச்சு.” என்று கண்சிமிட்டிய ஆஷிக்கை, ஜியா வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள, அவர்களது மோன நிலையைக் கலைக்கும் விதமாய் ஜியா வீட்டின் கதவை ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தம்பதியர் தட்டினர்.
***
நிலவே 11
கதவைத் தட்டும் சப்தம் கேட்கவும் தன்னிலை அடைந்தவள், "இந்த நேரத்துல யாரா இருக்கும்?” என்று யோசிக்க உடனே ஆஷிக்,
"மே பீ உன் ஹஸ்பண்ட் மிஸ்டர் கார்... த்திக்... கா இருக்கும்.” என்று கூறி விஷமமாய்ச் சிரிக்க, அவனைத் தன் பார்வையாலே முறைத்தவள்,
செக்யூரிட்டி லென்ஸ் வழியாகப் பார்த்த நொடி சிறிது ஐயம் கொண்டவள், "அச்சோ எதிர்வீட்டு ஆன்ட்டி வந்திருக்காங்க, இந்த நேரத்துல ஏன் வந்திருக்காங்க? ஒருவேளை உன்னைப் பார்த்திருப்பாங்களோ?” என்று புலம்ப,
"விடுடா செல்லம், ஏன் டென்ஷன் ஆகுற? உனக்குப் பயமா இருந்தா, நான் திறக்கிறேன்.” என்றவனைத் தடுத்தவள்,
"கொஞ்ச நேரம் எதுவும் பேசாத, அவங்க மட்டும் உன்னை என்கூடப் பார்த்தாங்க அவ்வளவுதான்!” என்று மீண்டும் புலம்பியவளைப் பார்த்து ஆஷிக் சிரிக்க, அவனது வாயைத் தன் கரம் கொண்டு மூடியவள், தன் கண்களால் அவனைக் கெஞ்ச, அந்தப் பெண்மணி மேலும் கதவைத் தட்ட,
அப்பொழுது அந்தப் பெண்மணியின் கணவர், "ஏய் இந்த நேரத்துல போய் கதவை தட்டிட்டு இருக்க? எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம்." என்று தன் மனைவிடம் கூற, அவரோ தன் கணவர் கூறியதைத் தன் காதில் வாங்காதவராய்,
"நீங்க சும்மா இருங்க, ஆம்பளை பேசுற சத்தம் கேட்டுதுனு சொல்லிட்டு இருக்கேன், நீங்க சொன்னதே சொல்லிட்டு இருக்கீங்க. உங்களுக்குத் தூக்கம் வந்தா போய் தூங்குங்க, என்னைத் தொல்லை பண்ணிட்டு இருக்காதீங்க. வயசு பொண்ணுங்களுக்கு வீடு குடுத்தா இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் வரும்னு சொன்னா கேட்டாதானே?" என்று தன் கணவரைக் கடிந்து கொண்டவர், “கதவைத் திறக்க இந்தப் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு நேரம்?"
"மணி என்ன, தூங்கிட்டு இருப்பா. பின்ன எல்லாரும் உன்னை மாதிரி இப்படி அடுத்தவங்க வீட்டை வேவு பார்த்துக்கிட்டா இருப்பாங்க?” என்றவர், தன் மனைவியின் ஒற்றைப் பார்வையிலே அடங்கிப்போக,
ஜியா, ஆஷிக்கைப் பார்த்தவாறே நிற்க அவன், "செல்லக்குட்டி என்னை அப்புறம் பாரு, முதல்ல போய் கதவை திற, அவங்க தட்டிகிட்டே இருக்காங்க.” என்று கூற,
"ஆஷிக் உன்னைக் கெஞ்சி கேட்டுக்கிறேன்..."
"ஏன் செல்லம், நீ கெஞ்சலாம் வேண்டாம், என்னைக் கொஞ்சினாலே போதும்.” என்று கண்சிமிட்ட,
"ப்ளீஸ்... அவங்க உன்கூட என்னைப் பார்த்தாங்கனா அவ்வளவுதான். ரொம்பக் கஷ்டப்பட்டு எனக்கு இந்த வீடு கிடைச்சிருக்கு ப்ளீஸ்..."
"சரி, மேல சொல்லு.” என்றவனிடம்,
"கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமா இரு.” என்று கெஞ்சியவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தவன்,
"ஓகே ஓகே... பாவமா இருக்கு, பொழைச்சு போ.” என்று கூற, அவனை மனதிற்குள் திட்டி தீர்த்தவள் அவன் முன்பு எதுவும் காட்டிக்காமல் மெலிதாய் புன்னகைத்தாள்.
"ஏய், என்ன எதுவும் சொல்லாம போற?” என்றவன் கேள்வியாய் பார்த்தவளைப் பார்த்து, "ஒருத்தங்க ஹெல்ப் பண்ணினா பதிலுக்கு நன்றி சொல்லணும்னு உங்க டீச்சர் சொல்லித் தரலையா?” என்று கேலியாகக் கேட்டவனைக் கண்டு முறைத்தவள்,
"ரொம்ப நன்றி!” என்று தன் இருக்கரங்களையும் கூப்பிக் கூற,
"போ போ... நன்றியை வாயால சொல்லணும்னு அவசியம் இல்லை, மனசுல வச்சுக்கோ.” என்று தன் காலரை தூக்கிவிட்டவனைக் கண்டு ஜியா கண்களில் கோபம் தெறிக்க முறைக்க,
"சரி சரி, பார்த்தது போதும் போய் கதவை திற.” என்றவன், அவளது பின்னால் உள்ள சுவற்றில் மறைவாகச் சாய்ந்து கொண்டான்.
ஜியா கதவை முழுவதுமாய் திறக்காமல் செக்யூரிட்டி செயின் வழியாகப் பார்த்து, "ஹலோ ஆன்ட்டி, எல்லாம் ஓகேவா, என்னாச்சு இந்த நேரத்துல வந்திருக்கீங்க?” என்று தூக்க கலக்கத்தில் இருப்பது போல கண்களைத் தேய்த்துக்கொண்டே கேட்க,
"அது ஒன்னும் இல்லைமா, சத்தம் கேட்டுச்சு அதான்...” என்று அந்த பெண்மனியின் கணவர் கூறி முடிப்பதற்குள், அந்தப் பெண்மனி ஜியாவின் வீட்டை நோட்டம் விட்டவாறே,
"ஆம்பளை பேசுற மாதிரி சத்தம்... சொல்றத முழுசா சொல்லுங்க.” என்று தன் கணவரை அதட்ட, அவருக்கோ தர்மசங்கடமாக இருந்தது.
ஆஷிக்கோ அடித்தது லக்கி ப்ரைஸ், என்று அவள் பின்னால் நின்றுகொண்டு அவளது முடியைப் பிடித்து இழுப்பது, இடையில் கிச்சலம் காட்டுவது என்று சீண்டிக்கொண்டிருந்தான். ஜியா அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மனி
"யாரோ உன் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்ததே? யாரும் வந்தாங்களா?" என்று கேட்க,
மேலும் முன்னேறிய ஆஷிக் அவளது முதுகில் தன் விரல் கொண்டு வீணை மீட்ட, அந்த நேரம் பார்த்து அந்தப் பெண்மனி, "உன்கிட்ட தான்மா கேட்குறேன், உன் வீட்டுக்குள்ள யாரும் வந்தாங்களா என்ன?"
"இல்ல, இல்ல ஆன்ட்டி.” என்றவாறே கூச்சம் தாங்காமல் சட்டென்று ஜியா துள்ள,
அந்தப் பெண்மணி, “என்னாச்சு, நீ ஏன் ஒருமாதிரியா இருக்க? முதல்ல கதவை திற.” என்று கூற,
ஜியா வேறு வழியில்லாமல் கதவைத் திறக்க அவரது கணவர், "ஏய் காலையில பேசிக்கலாம்டி."
"கொஞ்சம் சும்மா இருங்க.” என்றவாறு அந்தப் பெண்மனி உள்ளே வர, அதற்குள் ஆஷிக் கிச்சனுக்குள் சென்று மறைந்து கொண்டான்.
உள்ளே வந்த பெண்மனி அவளது பெட்ரூம் உட்பட எல்லா இடமும் சென்று பார்த்துவிட்டு, "பார்த்த மாதிரி இருந்துச்சு, ஆனா யாரும் இல்லை.” என்று அவர் கூறிய வார்த்தையில், கவலை தொனித்தாலும் உதட்டில் கட்டாயப் புன்னகை லேசாக மின்னலைப் போல எட்டிப் பார்த்து மறைந்தது.
அந்தப் பெண்மனியின் கணவர் ஜியாவிடம், "மன்னிச்சிருமா, இந்த நேரம் போய் டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” என்று கூற, அதற்கு ஜியா பதில் கூறுவதற்குள் அவரது மனைவி,
"பரவாயில்லங்க, ஜியா ஒன்னும் தப்பா நினைக்க மாட்டா. நாம இவ நல்லதுக்காகத் தானே பண்றோம். எல்லாத்துக்கும் மேல காலம் கெட்டுப் போய் கிடக்குது, இந்த அப்பார்ட்மென்ட்டோட ப்ரெசிடெண்ட் என்கின்ற முறையில, எல்லாம் சரியா இருக்குதானு பார்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்குல... இந்த காலத்து பொண்ணுங்களை எங்க நம்ப முடியுது?” என்றவரின் வார்த்தை ஜியாவை சுட்டெரிக்க, அந்த பெண்மனியின் கணவர்,
"கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா?"
"நான் நியாயத்தைத் தானே சொன்னேன், சரி சரி நேரம் ஆகிடுச்சு நீங்க காலையில ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்னீங்களே வாங்க.” என்று தன் கணவரை அழைத்துக் கொண்டு செல்ல போனவர் சில நொடிகள் கழித்துத் திரும்பி,
"நான் கிட்சன்குள்ள போய் பார்க்கலை.” என்று கூறவும், ஜியாவிற்குத் தூக்கிவாரி போட்டது. ஐயோ என்ன செய்வது என்று ஜியா முழிக்க, இதற்கு மேல் பொறுக்க முடியாதவராய் அந்தப் பெண்மனியின் கணவர்,
"அங்க எல்லாம் எதுவும் இல்லை, எனக்குத் தூக்கம் வருது. இப்போ நீ வரப்போறியா இல்லை...” என்றவாறு தன் மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு வேகமாகச் சென்றார்.
அவர்கள் சென்ற பிறகே நிம்மதி அடைந்தவள், நெஞ்சில் கை வைத்தவாறு தன் விழிகளை மூடி மூச்சு வாங்க நிற்க, "ஹாய்!” என்றவாறு, அவளது தோளைத் தட்டிய ஆஷிக், “யார் இவங்க? இப்படி வீட்டுக்குள்ள வந்து செக் பண்றாங்க?"
"நான் உனக்குப் பதில் சொல்லுவேன்னு எப்படி நீ நம்புற? ஆமா, நான் தெரியாமதான் கேட்குறேன் உன் மனசுல உன்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க?"
"ஹாட், டாஷிங், க்யூட், இன்டெலிஜெண்ட், ஹாண்ட்ஸம் இந்த மாதிரி நிறையா... பட் உன்னை மாதிரி குண்டா ஷேப்லஸ் அண்ட் போரிங் இல்லை." என்று கண்சிமிட்ட, கோபமுற்றவள் அவனைப் பார்த்து,
"என்ன, என்ன சொன்ன குண்டா? நான் குண்டா ஷேப்லஸ்ஸா இருக்கேனா?"
"கண்டிப்பா! நீ உன்னைக் கண்ணாடியில இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா? வெயிட், கம்." என்று அழைத்துச் சென்றவன் அவளைக் கண்ணாடியின் முன்பு நிறுத்தி,
"லுக் அட் யு, உன்னோட முகத்தைப் பாரு. முன்னாடியெல்லாம் சின்னதா இருக்கும், இப்போ பாரு நல்லா பம்கின் மாதிரி இதுல ரெண்டு கன்னமும் ரெண்டு ஆப்பிள் மாதிரி...” என்றவன், அவளது கன்னத்தைக் கிள்ளி, "அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு.
அப்புறம் உன்னோட கழுத்து முன்னாடியெல்லாம் நல்லா வளைஞ்சு சங்கு மாதிரி இருந்துச்சு, இப்போ...” என்றவாறு அவளது கழுத்தில் கை வைக்க, அவன் தன்னைக் கேலி செய்கிறான் என்று உணர்ந்தவள் அவனைத் தள்ளிவிட, அவன் நிதானம் இழந்து கீழே விழுந்தான்.
கீழே விழுந்த ஆஷிக், "அம்மா...!” என்று கத்த,
"நடிச்சது போதும், முதல்ல எந்திருச்சு இங்க இருந்து கிளம்பு."
"கீழ தள்ளிவிட்டது மட்டும் இல்லாம, என்னை நடிக்காதனு வேற சொல்றியா? என்னால எழும்ப முடியல, முதுகெல்லாம் வலிக்குதுடி.” என்று வலியில் முகத்தைச் சுளித்தபடி கூற,
"கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனையைக் குடுக்கிற?” என்று அவரைக் கடிந்தவாறு, வேண்டா வெறுப்பாக அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கட்டில் மீது ஜியா உட்கார வைத்தாள்.
"என்னால முடியல, எதாவது பண்ணு."
"நான் என்ன பண்ண?"
"நீ டாக்டர் தான, என்ன பண்றதுனு கேட்குற?"
"முதுகு வலினா ஒரு படத்துல பார்த்தேன், உலக்கை இருக்குல அதை வச்சு உருட்டுனாங்க."
"ஏய் நீ என்ன வசூல் ராஜ MBBSஸா? எதாவது மருந்தை எடுத்துட்டு வாடி, அதை விட்டுட்டு உலக்கைய வச்சு உருட்டுவியா?” என்றவனைப் பார்த்து சிரித்தவள் மருந்தை எடுத்துவந்து,
"இந்தா” என்று கையில் கொடுக்க,
"லுக் அட் மீ, நானே போடுற நிலைமையிலையா இருக்கேன்? தேச்சு விடு வலி தாங்கலை" என்றவனைப் பார்த்து முறைத்தவள், அவன் அருகில் அமர்ந்து தேய்த்து விடப் போக,
அவன், "ஏய் நீ நிஜமாவே டாக்டர்தான? வலி முதுகுல... ஷர்ட்ல இல்லை.” என்றவன், தன் மேல் சட்டையைக் கழற்ற, அவள் வேறு பக்கமாகத் தன் முகத்தை வைத்துக்கொள்ள,
"ஏய் ஹெல்ப் பண்ணுடி, என்னால கழட்ட முடியலை.” என்று அவன் பாவமாய் கூறியதும், மெல்ல இளகியவள் அவனது அருகில் அமர்ந்து மெதுவாக அவனது சட்டையின் பொத்தானை ஒவ்வொன்றாக கழற்ற, மிக நெருக்கமாக அவளது அழகிய வதனத்தையும் அதில் மெல்லிய மலரைப் போல இதழ் விரிந்திருந்த செந்நிற அதரத்தை, மிகவும் அருகில் அதுவும் நூலளவு இடைவெளியில் பார்த்தவனின் கண்களில் காதல் பொங்கி வழிந்தது.
சற்றே நிமிர்ந்தவனின் கண்களில் ஜியா தனக்கு வலிக்காமல் இருப்பதற்காக மெதுவாய் பார்த்து பார்த்து தன் மேல் சட்டையைக் கழற்றுவது பட, நாடி சிலிர்த்து மெய் மறந்தான்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 12, 13 & 14

Last edited: