அக்னிதீரனுக்கு உறக்கமின்மை ஒன்றும் புதிதல்லவே! இரவெல்லாம் வர்ஷினியின் நினைவிலே இருந்தவன், அதிகாலை எழும்பொழுது ஒருவித தெளிந்த மனநிலையில் தன் காலை பணிகளை முடித்துவிட்டு டிராக் சூட்டுடன் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தான்.
விழித்திருப்பது அவனுக்கு பழக்கமான ஒன்று என்பதால் சிவந்த கண்களைத் தாண்டி அவனிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை. சொல்லப் போனால் என்றைக்கும் விட இன்று கொஞ்சம் அதிகமாகவே புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான்.
அதே புத்துணர்ச்சியுடன் ஹார்ட் ஜிம்மில் ஈடுபட்டவன் ஒருமணிநேரம் அதில் செலவு செய்துவிட்டு, “இன்னைக்கு என்னென்ன ப்ரோக்ராம் இருக்கு அஷோக்?” என்று கேட்டபடி பாக்சிங் ரிங்கிற்குள் நுழைந்தான் தீரன்.
“மார்னிங் டென் ஓ க்ளாக் மிஸ்ரா கம்பெனிகூட மீட்டிங் இருக்கு” என ஆரம்பித்து, வார்ம்-அப் செய்துகொண்டே ரிங்கிற்குள் பாய்ந்து இறங்கினான் அஷோக். இருவரும் நண்பர்கள் என்பதைத் தாண்டி வழமைபோல தாறுமாறாய் மோதிக் கொண்டனர். பயிற்சி தான் என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பலம் கொண்டு மோதினர்.
பயிற்சி செய்துகொண்டே, “அக்னி நம்மளுடைய கான்ட்ராக்ட் மூனும் கைவிட்டு போச்சு. அந்த பாஸ்கர் நினைச்சதை செஞ்சுட்டான்டா!” சீற்றத்துடன் தீரனின் தலைக்கு குறிவைத்தான் அஷோக்மித்ரன்.
“ஆஹாங்!” என்ற தீரன் தன் இடுப்பையும், தோள்பட்டையையும் லேசாக திருப்பி நொடிப்பொழுதில் அஷோக்கின் தாக்குதலில் இருந்து தப்பித்து, “எவ்வளவு நஷ்டம்?” என்று கேட்டான்.
“நூறு சி?” ஒரு கையால் தீரனின் முகத்தை குறி வைத்தபடி கூறிய அஷோக்கின் முகம் இறுகியது. “ம்ம்” தன் மூக்கில் வழிந்த ரத்தத்தை சிறு புன்னகையுடன் துடைத்தபடி, அஷோக்கின் எதிர் தாக்குதல்களை எளிதாகச் சமாளித்தான் தீரன்.
“அக்னி, அவனை நாம செஞ்சிருக்கணும். விட்டதுக்கு என்ன பண்ணி வச்சிருக்கான், பார்த்தியா? உன்னை அட்டாக் பண்ணின அன்னைக்கே அவனை முடிச்சிருக்கணும் அக்னி. நாம ஒதுங்கிப் போனாலும் இவனுங்க விடமாட்டானுங்க!” என்றான் அஷோக், தீரனின் விலாவை குறிவைத்தபடி.
அஷோக்கின் தாக்குதலில் இருந்து லாவகமாக நகர்ந்த தீரன், “ம்ம், செஞ்சிடலாம்” என்றவன் தன் குதிகாலால் அஷோக்கின் முகத்தை நேரடியாகத் தாக்கி அவனை கீழே வீழ்த்தி நாக் அவுட் செய்து, “மிஸ்ரா கம்பெனி மீட்டிங்கை கேன்சல் பண்ணிரு அஷோக்!” என சாதாரணமாக கூறினான்.
“வாட்? இப்போதான் நூறு சி லாஸ் ஆகியிருக்கு. இந்த மீட்டிங் கேன்சல் பண்ணினா இன்னும் லாஸ் ஆகும்” கோபமாக வினவிய அஷோக்கை பார்த்துச் சிரித்த அக்னி, அஷோக்கின் கரம்பிடித்து தூக்கி அவன் எழுந்து நிற்க உதவி செய்தான்.
“சீக்கிரமா ரெடியாகு, நாம வெளியே போகணும்” என்றவன், முறைக்கும் தன் நண்பனின் கன்னத்தை தட்டிவிட்டு,
“உனக்கு இன்னும் ப்ராக்டிஸ் வேணும்” என புன்முறுவலுடன் ஒருவித உற்சாகமான மனநிலையுடன் வெளியேறினான். அஷோக்கிற்கு அக்னியின் இந்த அலட்சியப்போக்கான நடவடிக்கை கண்டு கோபமாக வந்தது.
உயரச் செல்லவிருந்த மின்தூக்கியில் வெள்ளைநிற மேல் அங்கியை அணிந்தபடி ஓடிவந்து ஏறினாள் மேகா. உள்ளே நின்றிருந்த ரிதுராஜை பார்த்து புன்னகைத்தாள்.
“குட் மார்னிங் சார்!” என்றதும் தன்னவளின் வாயில் இருந்து வந்த, ‘சார்’ என்ற விளிப்பு மனதிற்குள் பிடித்தமில்லை என்ற போதிலும், காலையிலே தனது காதல் தேவதையின் தரிசனம் கிடைத்ததை தன் பாக்கியமாக எண்ணி, அவள் சார் என்று அழைத்ததினால் ஏற்பட்ட சோகத்தை புறந்தள்ளியவன் சந்தோஷப் புன்னகையுடன், “குட் மார்னிங் மேகா!” என்றான்.
“சிக்ஸ்த் ஃப்ளோர் தானே?” என்று அவளிடம் கேட்டபடி ஆறாவது எண்ணை அழுத்திவிட்டு அவளைப் பார்க்க, ‘நான் எந்த ஃப்ளோர் போகணும்னு இவருக்கு எப்படி தெரியும்?’ என மேகா, ரிதுராஜை கேள்வியாகப் பார்த்தாள்.
‘உன்னை பத்தி எல்லாமே தெரியும் மேகா. ஆனா உனக்குத்தான் என் பார்வைக்கான அர்த்தம் கூட தெரியமாட்டேங்குது’ என மனதிற்குள் எண்ணியவன் அவளிடம், “இங்கே ஆறு மாசமா எம்டியா இருக்கேன் மேகா. டுயூட்டி டாக்டர்ஸ் ரூம் எந்த ஃப்ளோர்ல இருக்குன்னு கூடத் தெரியாம இருந்தா சமுதாயம் என்னை கழுவி ஊத்தாது!” என சிரிப்புடன் அவள் கேட்காமலே பதில் கூறினான்.
“சாரி சார்” தெரிந்த நபர், தன் தோழியின் தமையன், என்பதற்காக லேசாக புன்னகைத்துவிட்டு கைகளை குறுக்கே கட்டியபடி நின்ற மேகாவிற்கு ரிதுராஜின் இந்த அவதாரம் மிகவும் புதிது.
அவன் இவளிடம் இவ்வளவு இயல்பாக பேசியதெல்லாம் கிடையாது. என்னதான் தோழியின் தமையனாக இருந்தாலும், ஒரே இடத்தில் இருவரும் வேலை பார்த்தாலும், முதலாளி தொழிலாளிக்கிடையில் என்ன பழக்கம் இருக்குமோ அந்தளவுக்குத் தான் இவர்களின் பழக்கம் இருந்தது.
அவள் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருக்க, அவன் அவளையே விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் மூன்று மாதங்களாக உள்ளுக்குள் தேக்கிவைத்த காதல் அவன் கண்களில் வழிந்தது.
அவனது தந்தை கனகராஜ் தான் இந்த மருத்துவமனையின் டீன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. ரிதுராஜ் வெளிநாட்டில் எம்பிஏ படித்துவிட்டு கடந்த ஆறு மாதமாக மருத்துவமனையை தந்தையுடன் இணைத்து நிர்வகித்து வருகிறான். வெளிநாட்டில் இருந்து இங்கே வந்தவனுக்கு மேகாவை பார்த்த கணமே ஒருவித ஈர்ப்பு. அதுவே நாளடைவில் காதலாக மாற, இன்று எப்படியாவது தன் மனதில் உள்ள காதலை அவளிடம் கூறிவிட வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருக்கிறான்.
அன்று இரவு கூட தன் காதலைச் சொல்லத்தான், மேகாவை தன் தங்கையின் மூலமாக அழைத்து வரச்சொல்லி இருந்தவனுக்கு, திடீரென்று ஏர்போர்ட்டில் முக்கியமான நபரை சந்திக்க வேண்டியிருந்ததால் தான், அவனால் நேரத்திற்கு வர முடியாமல் போனது. ஆக இனியும் காத்திருக்க விருப்பம் இல்லாதவன் இன்று எப்படியாவது மேகாவிடம் தன் காதலை சொல்லும் தருணம் எதிர்பார்த்து காத்திருக்கிறான்.
‘என்ன இது, நம்ம பக்கம் பார்க்கவே மாட்டேங்கிறா?’ என்று எண்ணியவன், “உங்களுக்கு உங்க வேலைய ரொம்ப புடிக்குமோ?” பேச்சு கொடுத்தான்.
அவனது இந்த திடீர் கேள்வியில் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பியவள், “ம்ம், ஆமா” என்று சிறு யோசனையாக, “ஏன் அப்படி கேட்டீங்க?” என்றாள் மேகா.
“நான் பார்த்து இங்கே ரொம்ப சின்சியரா இருக்கிறது நீங்கதான். பல நாள் வீட்டுக்கு கூட போகாம ஹாஸ்பிடல்லயே ஸ்டே பண்ணிருக்கீங்க! அதுவும் பேஷண்ட்ஸ் குழந்தைங்களா இருந்தா, ரொம்பவே கேர் எடுத்துக்கிறீங்க!” புன்னகையுடன் கூறினான்.
“ம்ம்” மெலிதாய் புன்னகைத்தாள். அவன் அடுத்து பேசுவதற்குள் மின்தூக்கி அவள் செல்ல வேண்டிய தளத்திற்கு வந்து நிற்க, அவள் வெளியேறவும், ‘என்ன அதுக்குள்ள வந்திருச்சு?’ என மனதில் கடிந்து கொண்டவன் வேகமாக அவனும் வெளியேறி அவளுடன் இணைந்து நடந்தான்.
“ரொம்ப படிப்பாளியோ?” அவளை விட மனமில்லாமல் பேச்சை வளர்த்தான்.
“ஏன் கேக்குறீங்க?” அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கைகளைக் குறுக்கே கட்டியபடி அவனை வெறித்தாள்.
“எம்பிபிஎஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களே? அதான் கேட்டேன்!”
“ஓ” அதற்குமேல் அவள் பேசவில்லை.
“நான் உங்கள மாதிரி பெரிய படிப்பாளி எல்லாம் கிடையாது, அப்பா சொன்னாரு செஞ்சேன்!” புன்னகையோடு கூறினான்.
“ஓ” அவளிடம் இருந்து ஒரு வார்த்தை பதில், சிரிக்கணுமே என்பதால் நாகரீகத்திற்காக சிக்கனமான புன்னகை மட்டுமே வர, அவனுக்கு தான் சங்கடமாகிப்போனது. ‘என்ன இவள் இப்படி இருக்கிறாள்? காசு கொடுத்தா கூட பேசமாட்டா போல, இவளை எப்படித்தான் கரெக்ட் பண்றது?’ தனக்குள்ளே புலம்பினான்.
“அது அன்னைக்கு என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்கன்னு இஷு சொன்னா, நாங்களும் வந்தோம். ஆனா பார்க்க முடியல, என்கிட்ட என்ன பேசணும் அண்ணா?” சொன்னாளே ஒரு வார்த்தை, ‘அண்ணா’ என்று! ரிதுராஜிற்கு ஹார்ட்அட்டாக் வரவில்லை அவ்வளவுதான்.
நெற்றியை நீவியபடி நின்றவன், ‘டேய் இதுக்கு மேல, நீ கொஞ்சம் லேட் பண்ணினாலும், அவ குழந்தைங்க உன்னை மாமான்னு கூப்பிடப் போறது உறுதி’ என்று எண்ணிய ரிதுராஜ், தாங்கள் நிற்கும் இடத்தை கொஞ்சம் தன் பார்வையாலே அலசினான்.
காரிடார், செவிலியர்களும் மருத்துவர்களும் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பதை கருத்தில் கொண்டவன், தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு, “பேசணும் மேகா, உனக்கு பத்து நிமிஷம் டைம், ஹாஸ்பிடல் பின்னாடி இருக்கிற பார்க்கிற்கு வா, வெயிட் பண்றேன்!” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட, மேகா புரியாமல் விழித்தாள்.

Author: Naemira
Article Title: மிருதன் 10.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.