அங்கே பஃபே முறைப்படி அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட, சிலர் நின்று கொண்டும், சிலர் நாற்காலியில் அமர்ந்து மற்றவருடன் பேசிக்கொண்டும், உணவை சாப்பிட்டு கொண்டிருக்க, அக்னியின் கவனத்தை ஈர்த்தது என்னவோ ரிதுராஜின் சிரிப்பொலி தான்.
ரிதுராஜின் நண்பர்கள் அவனையும் மேகாவையும் கைகாட்டி ஏதோ சொல்லி சிரிக்க, இவன் மேகாவின் காதில் ஏதோ சொல்லிவிட்டு நண்பர்களைப் பார்த்து ஏதோ சொல்ல, அந்த இடத்தை அவர்களது சிரிப்பொலி அமர்களப்படுத்தியது.
தீரனை எண்ணி கவலையில் இருந்தவளுக்கு அவர்களது கேலிப்பேச்சு ஒருவித இதமான உணர்வை கொடுக்க மெலிதாய் புன்னகைத்தவளுக்கு மீண்டும் ஏதோ ஒரு நெருடல். மனம் அடித்து சொல்லியது, ‘அவனே தான்!’ சுற்றுமுற்றும் தலைதிருப்பி பார்த்தாள்.
‘இங்கேதான் இருக்கான்’ மனம் அடித்துக் கொண்டது. உதட்டில் இருந்த மெல்லிய புன்னகையும் மறைந்துபோக, ‘அவன் என்ன செய்வானோ?’ என்கிற பயம் வந்து தொற்றிக் கொண்டது.
மீண்டும் அவனைத் தேடினாள். குத்துக்கரண்டியால் மாமிசத்துண்டை குத்திக் கொண்டிருந்தான். விழிகள் ரிதுராஜை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் ரிதுராஜை பார்த்த பார்வைக்கான அர்த்தம் உணர்ந்தவள் அதிர்ந்தே விட்டாள். தானாக ரிதுராஜிடம் இருந்து விலகி நின்றவளுக்கு, ஒரு பருக்கை சோறுகூட தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது. தலைசுற்றிக் கொண்டு வந்தது. நா வறண்டு போக, தன் தோழியை தேடினாள்.
தன் தாயுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தாள். தங்கையைத் தேடினாள், அவளும் தோழியருடன் கதைத்து கொண்டிருந்தாள். இங்கிருந்து சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்போல் தோன்ற ரிதுராஜிடம் கூறிவிட்டு அங்கிருந்து ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தவளுக்கு அப்பொழுது தான் இயல்பாகவே சுவாசிக்க முடிந்தது.
சில நிமிடங்கள் கண்களை மூடிய நிலையிலே நின்றவளுக்கு, ‘எப்படி அவனை எதிர்கொள்ள போகிறோம்?’ என்கிற அச்சமே மனம் முழுவதும் பரவியிருக்க, முகத்தை தண்ணீரால் கழுவியவள், சில மணித்துளிகள் கழித்து வெளியே வந்தாள். அப்பொழுது அக்னியை அங்கே காணவில்லை என்றதும் பதறியவள், உடனே ரிதுராஜை தேடினாள். நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தான் அவளுக்கு நிம்மதியே வர, மேலும் கீழும் மூச்சு வாங்க தன் நெஞ்சில் கைவைத்தவளுக்கு, மறுபடியும் அதே உணர்வு. அவன் தான், தீரன் தனக்கு மிக அருகில் நிற்பது போல ஒருவித நெருடல்! மெல்ல தன் தலையை அவள் திருப்பவும், “தேடுறியா வரு?” தீரனின் சூடான மூச்சுக்காற்று அவளது செவிமடலை சுட்டது.
சுவாசம் தடைபட, பட்டென்று திரும்பினாள். தனக்கு மிக அருகில் நின்றிருந்த தீரனை கண்டு அரண்டு போனவள், அவனை விட்டு தள்ளி சென்று நிலைகொள்ள முடியாமல் சுவற்றை பிடித்துக் கொண்டாள். அவளை சில நொடிகள் வெறித்தவன், அவளது கரம் பிடித்து இழுத்து கீழே இருந்த ஒரு அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டான்.
‘ஏன் வரு?’ அவன் பார்வை அவளை கேள்வி கேட்டது.
‘ப்ளீஸ் தீரன்!’ அவள் பார்வை இறைஞ்சியது.
“ப்ளீஸ்!” அவன் முன்பு கைகூப்பி வாய்விட்டே கெஞ்சினாள்.
“ஹவ் டெர் யூ? ப்ளடி ஹெல்!” அவளது தோள்கள் இரண்டையும் வன்மையாக பிடித்து பின்னால் தள்ளிவிட்டான்.
“ம்மா!” நொடிப்பொழுதில் தன்னிலை தடுமாறி சுவற்றில், முட்டி கீழே விழுந்தாள் மேகா.
“ஏன்?” அவளது வதனத்தை பிடித்து காட்டுக் கத்து கத்தினான். அடிபட்டதால் வலி உயிர் போனது. மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் கோபம் கொப்பளிக்க கோரப்பசியில் இருக்கும் சிங்கம் போன்று உக்கிரமாக முறைத்தான் தீரன்.
தன் உயரத்திற்கு நிமிர்ந்து ஆஜானுபாகுவாய் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நிற்பவனை தலை உயர்த்தி பார்த்த மேகா, அவன் தோற்றத்திற்கு முன்பு கீழே விழுந்து கிடக்கும் தன்னை சிறு துரும்பாக உணர்ந்தாள்.
‘கடவுளே’ அடி வயிற்றில் இருந்து எழுந்து வந்த ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சூல் கொள்ள, வெளிறிய வதனத்துடன் மிரண்ட மான்குட்டி போல அவனை பார்த்தாள். வழக்கம்போல உடல் வெடவெடத்தது.
“எந்திருச்சு நில்லுடி!” சொடக்கிட்டு கத்தினான். வேகமாக எழுந்தாள். வலுவிழந்த கால்கள் பின்னிக்கொள்ள சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
“என்ன சொல்லப் போற? ஏன் எனக்கு துரோகம் செஞ்ச? நம்புனேன்டி உன்னை, சொல்லு!” வெறி பிடித்தவன் போல கத்தினான்.
“தப்புதான் தீரன்” குரல் மெலிந்து ஒலித்தது.
“ஷட்டப், என் பேரை சொல்லாதே!” சுவற்றில் ஓங்கி குத்தினான்.
“ப்ளீஸ் பொறுமையா இருங்க. ஐ கேன் எக்ஸ்பிளையின்” பதற்றத்தில் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, வார்த்தைகள் முன்னுக்கும் பின்னுக்கும் ஊஞ்சல் ஆடியது.
“ஆஹாங், பொறுமையா இருக்கணும்!” எள்ளலுடன் கூறியவன், முகத்தை அழுத்தமாய் துடைத்து, தன் பின்னங்கழுத்தை தேய்த்து, நச்சுக்குழலை வாயில் வைத்தபடி ஊதித் தள்ளிய தீரன், “இந்த பொறுமை போதுமா?” தன் முகத்தை அவளது முகத்துக்கு நேராக கொண்டு சென்று கேட்டான்.
சில நொடிகள் கழித்து, “எக்ஸ்பிளேயின் யூ, டாமிட்!” நச்சுக்குழலை காலில் போட்டு மிதித்தபடி உச்சத்தில் கத்தினான்.
“ம்மா!” அலறி மீண்டும் தரையில் விழுந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவள் அழுகிறாள், தாங்க முடியவில்லை. அவன் கண்களும் கலங்கியது. அவளது மிரண்ட முகம் அவனை வருத்தியது. சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டான். வழிந்த இரண்டு சொட்டு கண்ணீரை அவள் அறியாமல் துடைத்துக் கொண்டான்.
பல வருடத்திற்கு முன்பு அழுதது, அதன் பிறகு இன்றுதான் அழுகிறான். அன்றும் வலித்தது, இன்றும் வலிக்கிறது. அன்று ஒருவிதமான ஏமாற்றம், இன்று ஒருவிதமான ஏமாற்றம். இதயம் பயங்கரமாய் வலிக்க, தன் கரங்களால் நெஞ்சுப் பகுதியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
அறையில் கனத்த மௌனம் நிலவியது. “ஏன் மேகா?” அவனே மௌனத்தை உடைத்தெறிந்தான்.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“அன்னைக்கு நைட் என்னை புடிக்கும்னு சொன்னியே! அது உண்மையா? பொய்யா?” அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு கொண்டே கேட்டான்.
மௌனமாக தலை கவிழ்ந்தாள்.
“என்னை புடிக்காதுல?” அவனது பார்வை அவளது உயிரை தொட்டது.
“உன்னால என்னை மறக்க முடியுமா?”, ‘முடியாதென்று சொல்லிவிடமாட்டாளா!’ ஒருவித நப்பாசையில் கேட்டான்.
“நான்தான் உங்களை நினைக்கவே இல்லையே!” இனியும் பொய் கூற விரும்பாது, நடப்பது நடக்கட்டும் என்று உண்மையை கூறிவிட்டாள். அக்னியின் முகம் விகாரமாய் மாறியது. அவன் நெருங்கினான். இவள் விலகினாள்.
அவனது பார்வையில் ஒருவித மாற்றம், கண்டுகொண்டாள். அவனது நெருக்கம் அவள் மனதிற்குள் ஏதோ தப்பாகத் தோன்ற, வேகமாக கதவை திறக்க போனவளின் இடைபிடித்திழுத்து தடுத்தவன், தன்னுடன் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். அதிர்ச்சியில் அவனிடம் இருந்து விலகியவள், அவனைத் தள்ளிவிட, தீரனின் உடல் இறுகியது.
இந்தமுறை அவள்மேல் வலுக்கட்டாயமாக படர்ந்த தீரனோ, மேகாவின் கரங்களை அழுத்தி பிடித்தவாறு கோபத்துடன் அவளது எலும்புகள் யாவும் நொறுங்கும் வண்ணம் அழுத்தி அணைத்தான்.
“ம்மா... ஆ! வலிக்குது விடுங்க!” என அவனை பிடித்து தள்ளினாள்.
அடுத்தநொடியே அவளை நெருங்கியவன் இன்னும் வன்மையாக அவளைப் பிடித்து அவள் இதழ்களை இழுத்து முரட்டுத்தனமாக முத்தமிட நெருங்கினான்.
“ப்ளீஸ், இப்படி பண்ணாதீங்க!” என்றவள் அவனது செயலை தாங்க முடியாது அவனைத் தள்ளமுயல, அவளது கரங்களை வளைத்து பிடித்தவன் அவளது இதழ்களை நோக்கி நெருங்கினான். முகத்தை திருப்பிக்கொண்டு அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.
அவள் உயிரையே தனக்குள் இழுப்பது போல அவளை முரட்டுத்தனமாக அணைத்திருந்தான் அக்னிதீரன். வலியில் கண்ணீர் சிந்தியவள் அவனை தன் முழுபலம் கொண்டு தள்ளியபடி, “இப்படி பண்ணாதீங்க!” என கதறினாள்.
அவளை ஆவேசமாக பிடித்து கொண்டவன், “உன் வாழ்க்கையில என்னை நீ மறக்கவே கூடாது. யாரை பார்த்தாலும் உனக்கு என் முகம் மட்டும்தான் தெரியணும்” என பற்களை கடித்தபடி கூறியவன், அவளது இதழை நெருங்கிய தருணம், இருவருக்கும் இடையே நூலளவு மட்டுமே இடைவெளி மிச்சம் இருந்தது.
கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள், “இதுவரை நீங்க எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம். கொலை பண்ணிருக்கலாம், கொள்ளை அடிச்சிருக்கலாம். ஆனா இப்படி மிருகமா மட்டும் என்னைக்குமே இருக்காதீங்க தீரன்! உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை” அவன் விழிகளை சந்தித்தபடி கூறினாள்.
தீரனின் உடல்மொழியில் ஒருவித சிலிர்ப்பு. ஆனால் அது ஒருநொடியே நீடித்தது, மீண்டும் ஆக்ரோஷமாக அவள் இதழை நெருங்கினான். இந்தமுறை இடைவெளி இல்லை. கொஞ்சம் நெருங்கினாலும் உரசிவிடும் தூரத்தில் இருந்தது இருவரது இதழும், அவளது இதயம் முரசு கொட்டியது.
“உங்களுக்கு உரிமையில்லாத பொண்ணை என்னைக்கும் தொடாதீங்க தீரன். என் அப்பாக்கு அப்புறம் நான் நம்புன ஒரே ஆம்பளை நீங்கதான் தீரன். இப்படி மட்டும் பண்ணிறாதீங்க!” அவன் கனல் விழிகளின் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு மேகா சொல்லிய மறுகணம், அவளை விட்டுத் தள்ளி நின்ற தீரனுக்கு அவளது வார்த்தைகள் அவனுள் ஆழமாய் தாக்கியது.
கண்களை இறுக்கமாக மூடி மூச்சை வெளியிட்டவன், சில நொடிகள் கழித்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மேகாவிடம், “எனக்கு உரிமை இல்லாத பொண்ணை தொடுற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை மேகா” என்ற தீரன் அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
“அதேநேரம் எனக்கு உரிமையானவங்க மேல, வேற ஒருத்தரோட நகம் படுறதை கூட என்னால தாங்கிக்க முடியாது. இனிமே அவன் விரல் நகம் உன்மேல பட்டா கூட அவன் விரல் அவனுக்கு இருக்காது. சீக்கிரமே உன்மேல எனக்கு இன்னும் என்னென்ன உரிமை இருக்குன்னு காட்டுறேன்!” என எச்சரித்த தீரன் பட்டென்று கதவைத் திறந்து அவள் முகம் பார்க்காமலே வெளியேறினான். மேகா தரையில் மடிந்து கதறி அழுதாள்.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 15.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.