logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 17.2

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
“அப்பா, அப்பா!” டைனிங் டேபிளில் கண்களை மூடி அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் சிந்தனையை கலைத்தது மகன் விக்ரமின் குரல்.
“கிருஷ்ணா, இன்னும் பீபி டேபிளட்டை போடாம இருக்கீங்க, இந்தாங்க!” என்றபடி மாத்திரையை கணவனின் கையில் கொடுத்தார் ராதிகா.
“சொல்லு விக்ரம்” மாத்திரையை விழுங்கிக்கொண்டே மகனிடம் வினவினார்.
“அப்பா, நீங்க சொன்னது போல மாடில உள்ள ரெண்டு ரூமையும் ரெடி பண்ணி, அவங்களை ஸ்டே பண்ண வச்சிட்டேன்” குதூகலமாக கூறிய மகனிடம்,
“என்னாச்சு, என் பையன் இன்னைக்கு ரொம்ப ஹப்பியா இருக்கான்?”
“அவங்க ரெண்டு பேரும் செம டைப், அதுல அக்னி ப்ரோ சான்ஸே இல்லை, செம பா! அவருக்கு எய்ட் பேக்ஸ் ப்பா! என்ன ஆர்ம்ஸ்ன்னு தெரியுமா? எனக்கு கூட எக்சர்சைஸ் கத்துத் தரேன்னு சொல்லிருக்காரு. பாக்சிங்கும் சொல்லி தரேன்னு சொன்னாரு. அவரோட மொபைல் லேட்டஸ்ட் ஆப்பிள் மாடல் பா, அழகா இருக்குன்னு சொன்னேன். உடனே பாருன்னு கைல குடுத்துட்டாரு!” ஆர்வத்தில் கண்கள் மின்ன கூறினான் விக்ரம்.
“நீ வாங்கினியா என்ன?” கோபாலகிருஷ்ணனின் குரல் இறுகியது.
“நோ பா, வேண்டாம்னு சொல்லிட்டேன்” தாயை பாவம் போல பார்த்த விக்ரமின் குரல் நலிந்து உள்ளே செல்ல, அதற்குமேல் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை.
“சம்பந்திக்கு ரொம்ப முக்கியமானவங்க, நீதான் அவங்க கூட இருந்து அவங்களை நல்லபடியா கவனிச்சிக்கணும். தேவை இல்லாம தொல்லை பண்ணக் கூடாது, சரியா?”
“சரி பா, டைம் ஆச்சு, நான் தூங்கப் போறேன். குட்நைட் மா, குட் நைட் பா!” என்ற விக்ரம் தன் தந்தையிடமும் தாயிடமும் விடைபெற்றுக் கொண்டு விட்டால் போதுமென்று தன் அறைக்கு ஓடினான்.
“சின்னப்பையன் பா! ஏன் இவ்வளவு முறைக்கிறீங்க? பயந்துட்டான்” என்ற மனைவியிடம்,
“அடுத்த வருஷம் கையில டிகிரி வந்திரும், அவன் சின்னப்பையனா? உனக்கு உன் பையன்னா போதுமே!” என்றவரை செல்லமாக முதுகில் அடித்த ராதிகா,
“ஏங்க ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன். அவங்க ரெண்டு பேரும் யாரு? ரொம்ப வசதியானவங்களா தெரியுது. சம்பந்திக்கு என்ன வேணுமாம்?” கணவனின் அருகே அமர்ந்தபடி தன் விசாரணையை ஆரம்பித்தார் ராதிகா.
“சம்பந்திக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களாம். அவங்க வருவாங்கன்னு எதிர் பார்க்கலையாம், திடீர்னு தான் ஃபிளைட் கிடைச்சு வந்திருக்காங்க. கல்யாணம் வர இங்கேதான் இருப்பாங்க.”
“ஓ, ஏன் அந்த ரெசார்ட்ல ஒரு ரூம் கூடவா இல்லை?” என்ற மனைவியை ஒரு கணம் அழுத்தமாய் பார்த்தார் கோபால கிருஷ்ணன், மனைவியின் பேச்சில் உள்ள அர்த்தத்தை உணர்ந்துகொண்டு,
“சம்பந்தி கேட்டுப் பார்த்தாராம், முகூர்த்த நேரம் ரூம் எதுவும் வேகண்ட்டா இல்லையாம். ரொம்ப முக்கியமானவங்க நல்லா கவனிச்சிக்கணும், உங்க வீட்ல தங்க வச்சிக்க முடியுமான்னு கேட்டாரு, சரின்னு சொல்லிட்டேன்!”
“ஓ!” என ராதிகா இழுக்கும் பொழுது, “ஷ்ஷ்...” சமையல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்க தலை திருப்பி பார்த்தவர், “என்ன?” என்றார் கண்களாலே, ‘சொல்லும்மா!’ என மேகாவும் இஷிதாவும் செய்கை செய்ய, சரி என்பதாய் தலையசைத்த ராதிகா கணவரிடம்,
“இல்லை, ரொம்ப பெரிய இடமா தெரியுறாங்களே, நம்ம வீடெல்லாம் அவங்களுக்கு வசதிபடுமா? வேற ஹோட்டல் ஏதாவது பாக்குறது!” என்றார் இழுவையாக.
“நானா கூப்பிட்டேன்? சம்பந்தி வந்து வீட்ல தங்க வைங்கன்னு சொல்லும் பொழுது, மாட்டேன்னா சொல்லமுடியும். அவங்ககிட்ட பேசினேன். நல்லா மரியாதையா தான் என்கிட்ட நடந்துக்கிட்டாங்க!” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே மாடியில் இருந்து அக்னியும், அஷோக்கும் இறங்கி வந்தனர்.
அவர்கள் வருவதை கண்டதும் பேச்சை நிறுத்திய ராதிகா தன் கணவரிடம் கண்ணைக் காட்ட, தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட கோபால கிருஷ்ணன், “நீங்க இங்கே! ஏதாவது வேணுமா சார்?” தன் கவனிப்பில் எதுவும் குறை வந்துவிட்டதோ என்று எண்ணியவர் சிறு பதற்றத்துடன் வினவினார்.
“கோபால கிருஷ்ணன் சார் ரிலாக்ஸ். எதுவும் வேண்டாம், எல்லாமே இருக்கு, ரொம்ப நல்லாவே இருக்கு. எந்த குறையும் இல்லை” என்று மென்னகையுடன் கூறிய அக்னி,
“சார் என்ன இருந்தாலும் நாங்க மூனாவது மனுஷங்க. உங்க ப்ரைவசிய டிஸ்டர்ப் பண்ற மாதிரி உங்க வீட்ல வந்து தங்கி, உங்களுக்கு கஷ்டம் கொடுக்குறோம். அது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதான் நாங்க வெளியில வேற ஹோட்டல்ஸ் ஏதாவது இருக்கான்னு” அக்னி சொல்லி முடிக்கும் முதலே,
“அச்சோ என்ன சார்? ஏன் இப்படி சொல்றீங்க? எங்க சம்பந்திக்கு வேண்டப்பட்டவங்கன்னா எங்களுக்கும் வேண்டப்பட்டவங்க தான். நீங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட், மூனாவது மனுஷங்க இல்லை. ஸோ நீங்க இங்க இருக்கிறதுல எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இது உங்க வீடு மாதிரி. எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கிக்கலாம். உங்களுக்கு இங்கே வசதி பத்துமான்னு தான் நாங்க பேசிட்டு இருந்தோம்” என்ற கோபால கிருஷ்ணனிடம்,
“உங்க வீட்டு வசதிக்கு என்ன குறை, சொர்க்கம் மாதிரி இருக்கு” என்று அக்னி முகமலர்ச்சியுடன் கூற, அஷோக்கோ புன்னகை முகம் மாறாமல் நின்றிருந்தான்.
“சம்பந்தி உங்கள பத்தி நிறைய சொன்னாங்க, அவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன் நீங்க, எந்த தலைக்கனமும் இல்லாம ரொம்ப எளிமையா பழகுறீங்க, அதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!” கோபால கிருஷ்ணன் சத்தமில்லாமல் தலையில் இறக்கிய ஐஸ்கட்டியில் அக்னி உள்ளம் குளிர்ந்து போக,
சமையல் அறைக்குள் இருந்த இஷிதாவோ, “ம்க்கும் அவன் ஹிஸ்ட்ரி தெரியாம அங்கிள் வேற!” என சலித்துக் கொண்டாள்.
“என்ன பெரிய பிஸ்னஸ்மேன் சார்? பணம் எல்லாம் இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். நீங்க கூடத்தான் பேங்க் மேனேஜரா இருக்கீங்க, மேடம் சொந்தமா மியூசிக் ஸ்கூல் நடத்திட்டு வராங்க, மூத்த பொண்ணு டாக்டர், பையன் இன்ஜினீயர், இன்னொரு பொண்ணு விஸ்காம் படிக்கிறாங்க! என் பார்வையில ஒரு பொறுப்புள்ள அப்பா அம்மாவா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப உயர்ந்த இடத்துல இருக்கீங்க!
உங்க பையன்கிட்ட என் மொபைல் கொடுத்தேன். அவன் உடனே அப்பாக்கு புடிக்காது, வேண்டாம்னு சொல்லிட்டான். அவன் கண்ணுல அவ்வளவு ஆசை இருந்துச்சு. அதே மாதிரி உங்கமேல மரியாதையும் இருந்துச்சு, பசங்கள ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க. இன்னைக்கு இந்த நொடி உங்க குடும்பத்துல நாங்களும் ஒரு ஆளா இருக்கிறோம்னு நினைக்கும் பொழுதே ரொம்ப பெருமையா இருக்கு அங்கிள்!” என்றவன் ஏதோ தவறாய் கூறியது போல நாக்கை கடித்து, “ஸ்ஸ், சாரி சார்!” சாருக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உச்சரிக்க, ஏற்கனவே அவன் பொழிந்த ஐஸ் மழையில் நனைந்திருந்த கோபால கிருஷ்ணன்,
“சாரி எதுக்கு அக்னி சார்? நீங்க என்னை அங்கிள்னே கூப்பிடலாம்” என்றார் புன்னகையுடன்.
“ஷப்பா! நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துட்டேன்.”
‘யாரு நீ பயந்துட்ட!’ என்று சொல்லாமல் சொல்லிய அஷோக்கின் பார்வையை புறந்தள்ளியவன், “எனக்கும் சார்னு கூப்பிடுறது ரொம்பவே ஃபார்மலா இருந்துச்சு, இப்போதான் ரிலாக்ஸ்சா இருக்கு, அப்போ நீங்களும் இனிமே எங்களை அக்னி, அஷோக்ன்னு பேர் சொல்லித்தான் கூப்பிடணும்” என்று அவன் கூறவும்,
“சரிப்பா!” சாவி கொடுத்த பொம்மை போல அக்னி சொன்னதும் தலையசைத்தார் கோபால கிருஷ்ணன். ஆட்டுவிப்பவன் வந்தாயிற்று இனி அவர் என்ன? அவர் குடும்பமே ஆடித்தானே ஆகவேண்டும்.
“ஓகே அங்கிள். தென், நாங்க கிளம்புறோம் குட்நைட் அங்கிள், குட் ஆன்ட்டி!” என்றவன் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அஷோக்குடன் தங்களின் அறைக்குச் சென்றான்.
“ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்கல்ல?” என்ற கணவனிடம்,
“ஆமா, நான்கூட என்னமோன்னு நினைச்சேன், நல்லவங்க தான்பா! ஒரு குறையும் தெரியாத மாதிரி நல்லா பார்த்துக்கணும்” என்றார் ராதிகா.
“சரிடி, நேரம் ஆகிடுச்சு நாளைக்கு மார்னிங் நிறைய வேலை இருக்கு, தூங்கலாம்.”

“நீங்க போங்க, நான் இதோ வரேன்!” என்றவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 17.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top