- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
கனவெல்லாம் வந்து காதல் செய்கிறாய் !
விழித்துக்கொண்டால் மறைந்து விடுகிறாய்!
நெஞ்சமெல்லாம் உன் நினைவுகள் கனக்குதடி!
விழிகள் உன்னை தேடி அலையுதடி!
நான் அறியாமல் என் மனதை பறித்துக்கொண்டாய்!
நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையே என்னை சிக்கவைத்தாய்!
உனக்காக ஏங்கி நித்தமும் தவிக்கிறேனடி!
உன் நியாபகங்கள் என்னை வதைக்குதடி!
என கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே தவிக்கும் இவன் "அமர வேந்தன்"
காலங்கள் கடந்து ஓடினாலும்!
யுகங்கள் பல கண்டாலும்!
உயிர் பிரிந்து போனாலும்!
ஜென்மங்கள் பல தாண்டி !
உன்னை தொடர்வேனடா!
என்றும் உன்னை நான் மறவேனடா!
என நாயகனின்
தவிப்பை நீக்கி காதலை கொடுக்க வரும் இவள் "மகிழ்மதி".
யுகம் யுகமாய், தங்களின் காதலை அடைய முடியாமல், தவிக்கும் அமர வேந்தனும். அவனவள் மகிழ்மதியும். யுகங்கள் பல தாண்டி, ஜென்மங்கள் பல கடந்து, வஞ்சங்களை வென்று, இணைவார்களா? காலங்கள் பல கடந்தும், இவர்களின் காதல், காவியம் படைக்குமா?
என்பதை கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.