- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
கட்டி கொள்ள நானும் வந்தால்
விலகி செல்கிறாய்
ஏனென்று நானும் கேட்டால்
நெருங்காதே என்கிறாய்
விலகி செல்ல நானும் நினைத்தால்
நெருங்க இழுக்கிறாய்
காதலா என்று நான் கேட்டால்
வஞ்சகமாய் சிரிக்கிறாய்
என் காதலை நானும் காட்டினால்
நெருப்பாய் சுடுகிறாய்
வலியால் துடித்தால் முத்தமிட்டு
என்னை அதிர செய்கிறாய்
புரியாமல் நானும் முழித்தால்
என் கன்னம் கிள்ளுகிறாய்
வெட்கத்தில் நானும் சிவக்க
ஏளனமாய் சிரிக்கிறாய்
காதலை என்னிடம் சொல்லாமல்
காதலால் ஏன் கொல்கிறாய்
அரக்கனாய் பெண்ணை வதைக்கிறாய்
அன்பனாய் என்னை அணைக்கிறாய்
சுடும் நெருப்பாய் பல நேரம்
பனி துளியாய் சில நேரம்
கடும் வெயிலாய் பல நேரம்
மழை துளியாய் சில நேரம்
குத்தும் முள்ளாய் பல நேரம்
சிறு பூவாய் சில நேரம்
என்னை கடத்தும்
ராவணனாய் பல நேரம்
என்னை காக்கும்
ராமனாய் சில நேரம்
வீரம் கொண்ட
அர்ஜுனனாய் பல நேரம்
ஆதரவை கொடுக்கும்
கண்ணனாய் சில நேரம்
என்னை சூறையாடும்
துச்சாதனனாய் பல நேரம்
கேட்டதை கொடுக்கும்
கர்ணனாய் சில நேரம்
அழகனே என் அசுரனே
என்னை அடக்கும் உன் முரட்டு முத்தத்திற்குள்
அடங்கி சிலிர்க்கும் ரசிகையடா " நான் "
யாரடா" நீ "??
நெருப்பில் சிறு ஜோதி நீ
உன்னை அணைக்கும் புயல் நான்
கடலில் சிறு மீன் நீ
உன்னை விழுங்கும் திமிங்கலம் நான்
புல்லில் சிறு பனி துளி நீ
உன்னை வதைக்கும் சூரியன் நான்
இரவில் நிலவு நீ
உன்னை கடத்தும் அம்மாவாசை நான்
நீரில் அழகிய மழைச்சாரல் நீ
உன்னை மிரட்டும் எரிமலை நான்
பூவில் சிறிய அனிச்சம் மலர் நீ
உன்னை ரணமாக்கும் கள்ளிச்செடி நான்
பெண்மையில் தேவதை நீ
உன்னை வேட்டையாடும் அசுரன் நான்
இதில் எதில் நீ காதலை கண்டாய்
கனலை கக்கும் என் விழிகளிலா
வேண்டாம் பெண்ணே மயங்காதே
அது உன்னை எரிக்க துடிக்கும் கனல் விழிகள்
இல்லை புன்னகை சிந்தும் என் இதழ்களிலா
வேண்டவே வேண்டாம் அது உனக்காக நான்
விரிந்திருக்கும் மரணப்படுக்கை ..
இல்லை நான் கொடுக்கும் முத்தத்திலா
பேதையே அது முதல்ல உன்னை
வதைக்கும் ஆலகால விஷம்
நீ காதலாய் காணுவது அனைத்தும்
கானலே !!
உன்னை காக்க
நான் ராகவனும் இல்லை
உன்னை கடத்த
நான் இலங்கை வேந்தனும் இல்லை
வீரம் கொண்டு வெல்ல
நான் பார்த்தனும் இல்லை
ஆதரவாய் அரவணைக்க
நான் மாயக்கண்ணனும் இல்லை
உன்னை சூறையாட
நான் துச்சாதனனும் இல்லை
கேட்டதை கொடுக்க
நான் கர்ணனும் இல்லை
அழகியே என் அரக்கியே
என்னை மயக்கும் உன் மென்மையான இதழில்
மயங்கி கிடைக்கும் ரசிகன் தான் "நான் "
ஆனாலும் நான் உன்னவன் இல்லை
"நான் அவன் இல்லை!!"