New member
- Joined
- Dec 19, 2024
- Messages
- 1
- Thread Author
- #1
வேந்தனின் அளத்தியிவள்
வேந்தன்… 1
வணக்கம் நண்பர்களே
rajani எனும் பெயரில் எழுதிய நான் vaageeswari எனும் பெயரில் மாற்றி எழுதுகிறேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்💕
கோவில் சுவற்றின் மீது அவர்கள் மூணு பேரும் அமர்ந்திருந்தார்கள். கால்களை ஓயாமல் தட்டிகிட்டும், ஒண்ணுக்கொன்னு வம்பிழுத்துக்கிட்டும் பேசிகிட்டும் ஒண்ணாவேதான் சுற்றுவார்கள். மூவருக்கும் எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. ஆனால் நன்றாக ஊர் சுற்றுவார்கள். ஏதாவது ஒரு நாட்டிற்கு பயணம் சென்று காசைக் கரைப்பார்கள்.
ஆத்மா, ரவிக் இருவரும் பார்க்க பயில்வான் போலவே இருப்பார்கள் உடற்பயிற்சி ஒருநாளைக்கு இருவேளை செய்வார்கள்.
ஆனால் துருவ்வோ சாக்லேட் பாய். கிள்ளிப் பார்க்கத் தூண்டும் கன்னங்களும், சதா சர்வ நேரத்திலும் குறும்புகள் கூத்தாடும் கூர் விழிகள். கள்ளச் சிரிப்பும், நக்கல் புன்னகையும் உரைந்திருக்கும் சிவந்த உதடுகள், ஒரு நேரம் சும்மா இருக்க மாட்டான். எதையாவது துரு துருன்னு செய்துகிட்டே இருக்கணும் அவனுக்கு.
அழகோ அழகு அவன். ஆணுக்கு எதுக்கு இத்தனை அழகுன்னு பார்த்த விழிகள் விலக்கிட முடியாத அளவுக்கு கண்ணனின் குறும்புடன் ரசிக்கும்படியான சேட்டையும் செய்வான். இந்தப் பூனையும் பால் திருடிக் குடிக்குமான்னு கேக்குற அளவுக்கு வசீகரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருக்கும்.
ஆத்மா ரவிக் துருவ் மூவரும் ஒன்றாக இருக்கும் சமயத்தில், அறியாதவர் கண்களுக்கு மற்ற இருவரும் துருவ்வின் பவுன்சர்கள் போலவே காட்சியளிப்பார்கள்.
இப்போ கூட நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தன்னைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்க, இவனோ யாரைப் பத்தியோ பேசுறாங்க போலன்னு கண்டுக்காம காலை ஆட்டிக்கிட்டும், போறவங்க வரவங்களை குரங்கு சேட்டை பண்ணி கடுப்பேத்திக்கிட்டும் இருந்தான்.
“துருவ் கையை காலை வச்சிக்கிட்டு அமைதியா இரு” ன்னு ஆத்மா அவனை அதட்டிட்டு ரவிக் கூட பேசவாரம்பித்தான்..
“வயசுப்பசங்க வேல வெட்டியப் பாக்காம காலாட்டிக்கிட்டு இருந்தாக்கா பொழப்பு என்னாவறதுப்பா” ன்னு யாராவது புத்திமதின்னு அக்கறையா ரெண்டு வார்த்தை சொல்லிட்டால் போதும், அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானுங்க.
உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்கன்னா அதுக்கு அர்த்தம் சண்டைக்கெல்லாம் போகறதுன்னு இல்லைங்க. அடிதடின்னு இறங்கவும் மாட்டாங்க. வாய்ப்பேச்சில் தராதாரம் இல்லாமல் பேசவும் மாட்டாங்க. ஏன்னா வயசுத்திமிர்ல இதெல்லாம் பண்ணிடலாம். அந்தளவுக்கு தைரியமும், பலமும் அதிகமாகவே இருந்தது அவர்களுக்கு. இளமையும் செல்வமும் அளவுக்கு அதிகமாகவே இருக்க, அடித்தாலும் எளிதாக தப்பிக்கவும் முடியும் அவர்களுக்கு.
ஆனால் அதற்குப் பிறகு?...
துருவோட மாமா மூணு பேரையும் பாராபட்சம் பார்க்காம அடிப்பார். அட அதைக்கூட தாங்கிக்கலாம். ஆனால் அவரு பேசுற பேச்சில் எங்கயாச்சும் போய் முட்டிக்கலாம்னு இருக்கும். நாசுக்கா நாலு சுவத்துக்குள்ள பேசினால் கூட தேவலை. மீசையில் மண் ஒட்டாதபடிக்கு, தட்டுவிட்டுட்டு வந்துடலாம். ஆனால் அத்தனை பெரிய வீட்டின் நடு ஆசாரத்தில் வச்சு, நாலு பேர் எதிர்க்க கத்தித் தீர்ப்பார்.
மூணு பேருமே செல்வத்துல மிதக்குற செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள். அதிலும் துருவ், குறும்பே வடிவமாய் பிறப்பெடுத்திருந்தான்.
ஒருவழியாக பேசி முடிவெடுத்த நண்பர்கள் இருவரும், “டேய் மச்சான் ஒரே ஒருவாரந்தான்டா. போன சுருக்குல திரும்பி வந்துரலாம் வாடா” ரவிக் துருவ்கிட்ட கேட்க.
“இல்லடா. மாமா குடும்பத்தோட சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னார். போகணும்” மறுத்துட்டான் வருத்தமாக.
“டேய் வரியா இல்லையாடா?” இப்படி ஆத்மா துருவ்கிட்ட கெஞ்சியும் மிஞ்சியும் பார்த்துட்டான் அவன் அசையவேயில்ல.
“இவன் வரவேமாட்டான்டா. மாமா எதிர்க்க நிக்க கூட பயந்து சாவான். இவனாவது தூத்துக்குடி வரைக்கும் வரதாவது” ரவிக் தலையில் அடிச்சுகிட்டான். இருந்திருந்து நமக்கு இப்படியொரு பயந்தாம் பூச்சி நண்பனா வாய்ச்சிருக்கானேன்னு துன்பப்பட்டான்.
“இந்த நாய வச்சுக்கிட்டு எங்காவது நிம்மதியா போக முடியுதாடா. இவன் சொகுசா ஊரைச் சுத்துறதுக்கு நாம போய் அவருகிட்ட கைகட்டி நிக்கணும்” ஆத்மா கோபத்தில் கொந்தளிக்க.
“ராஜாண்ணாகிட்ட இருக்க கெத்துல பாதியாச்சும் உனக்கிருக்காடா. உனக்கெல்லாம் வெட்கமா இல்ல?” நண்பர்கள் ரெண்டுபேரும் அவன் முகத்துல காரித்துப்பாதபாட்டுக்கு பேசித் தீர்க்க.
இத்தனை பேச்சுக்களையும் வாங்கிக்கிட்டு இருந்த துருவ்வோ அப்பாவித்தனமா முகத்தை வச்சுக்கிட்டு நண்பர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்திருந்தான்.
“நீங்களே ஏதாச்சும் பண்ணி என்னைய கூட்டிட்டுப் போறதுன்னா போங்கடா. இல்லைன்னா விடுங்க. விதிப்படி நடக்கட்டும். எனக்குன்னு யார் பேசுவா” அவன் ஸ்டைலாக தோள்களை ஏற்றி இறக்க.
“சரி விடுடா. பாத்தாலும் பாவமாத்தேன் இருக்கு. ரெண்டு மாமனும் சரியான ஹிட்லர்ங்க. பாத்தாவே நடுங்கிட்டு நிப்பான் பாவத்த” ரவிதான் பரிதாபப்பட்டு நண்பனின் கோபத்திலிருந்து அவனைக் காப்பாற்றினான்.
ஆத்மா ரவிக் துருவ் மூன்று பேருமே பள்ளி நண்பர்கள்தான். காலேஜ் முடிந்தும் நட்பு பலமாய் இறுகி நிற்க ஒன்றாகத்தான் இருப்பார்கள். ஆத்மாவின் தந்தைக்கு தூத்துக்குடியில் நண்பர் இருக்க, உடல்நிலை சரியில்லாத அவரை பார்க்கறதுக்கும், அப்படியே அங்கே தொழில் நிலவரம் கத்துக்கறதுக்கும் ஆத்மா போகவேண்டி இருந்தது.
நண்பர்களையும் கூப்பிட வழக்கம் போல துருவ் தடையாய் நின்றான்.
“சரிடா வா அவருகிட்ட நானே கேட்கறேன்” ன்னு நண்பனை கையோட கூட்டிட்டுப் போனவன் அவருகிட்ட ரெண்டு வாரத்துக்கே கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கிட்டு வந்தான்.
இதோ தூத்துக்குடியும் வந்தாச்சு. வந்த வேலையை முடிச்சுக்கிட்டு சுத்தி பார்க்கறதுதான் பாக்கி இனி.
“சிலுசிலுன்னு காத்துடா. நடுங்கிட்டு வருது போ” ரவிக் உடம்பை குறுக்கி போர்வையை இழுத்து போர்த்திக்க.
“துருவ் எங்கடா போனான்” ஆத்மா பேக்கை திறந்துட்டே ரவியிடம் கேட்டான்.
“தெரிலடா” ன்னு முனகிட்டே ரவி போர்வைக்குள் சுருள.
பேக்கை திறந்து பார்க்க, காலியாக இருந்தது அது. “அடேய் டேய் ஒன்னையும் காணமேடா” ஆத்மா அலற.
“டேய் தூங்கறத்துக்கு உடுடா. நைய் நையின்னு சாவடிக்கறான்” ரவிக் காதில் போர்வையை இழுத்து வச்சு அடைச்சான்.
“எருமை மாடே உன்னோட பேக்கிலும் ஒண்ணுமில்லடா. அந்த நாயி என்னமோ வேலைய பாத்து வச்சிருக்குதாட்டம் இருக்குடா” ன்னு ஆத்மா சொல்லவே.
சரியாக அவனை போனில் கூப்பிட்ட துருவ் “டேய் மச்சான் உன்னோட வாட்ச் என்ன விலைடா” கேட்டான்.
“உனக்கு பத்தாயிரம் பணம் வேணும் அதான?” ஆத்மா பல்லை கடிச்சுகிட்டே கேட்க.
“அதேதாண்டா” துருவ் அழகாகச் சிரிக்க.
“ரூமுக்கு வந்து தொலைடா . மாத்திக்க ஜட்டிக்கூட இல்லடா” தலையில் அடிச்சுக்கிட்டு கட்டிலில் அமர.
“அப்பவே தந்து தொலைக்க வேண்டியதுதான. இப்ப போனது ஒழுங்கா வந்தாத்தான் நெசம்” ரவிக் நண்பனை சாட.
“மூடிட்டு படுடா. இன்னைக்கு இருக்கு அவனுக்கு” ஆத்மா துருவ்காக காத்துக்கிட்டு இருந்தான் கோவத்தோட.