- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
Very sorry for late update friends
ஹால் டிக்கெட்டை வாங்கிவிட்டு ரெஸ்டாரண்டில் அமர்ந்து நண்பர்கள் மூவரும் அரட்டை அடித்து கொண்டு தாங்கள் ஆர்டர் செய்த உணவிற்காக காத்திருக்க,
"ஏய் யாத்ரா நானும் காலையில இருந்து பார்க்கிறேன் அண்ணாவை பத்தி உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா டி" என்றாள் மதனா.
மதனா அவ்வாறு கேட்கவும் அவளை ஒரு பார்வை பார்த்த யாத்ரா,
"உன் அண்ணாக்கு என்னடி நல்லா தானே இருக்கார்" என்றாள் சலிப்புடன்.
"ஒரு ஃபோன் பண்ணி சாப்டீங்களா? என்ன பண்றீங்க? இப்படி ஏதாவது கேட்டியாடி" என்ற தோழியிடம்,
"அதெல்லாம் கேட்டு பழக்கம் இல்லை டி" என்று மீண்டும் சலித்து கொண்ட யாத்ராவின் கைபேசியை பறித்து அவள் தடுக்க தடுக்க, ஆரியின் எண்ணை டயல் செய்த மதனா,
"ரிங் போகுது பேசு" என்று சொல்லி அலைபேசியை கொடுக்க,
"ஏய் என்ன பண்ற மதனா ப்ச்" முறைத்தாள் யாத்ரா.
"பேசு டி" என்று மதனாவும் கார்த்திக்கும் கேலியாக சிரிக்கவும் அவர்களை முறைத்த யாத்ரா, அவர்கள் முன்பு தன்னவனுடன் பேச விருப்பம் இல்லாதது போல சலித்து கொண்டாலும், உள்ளுக்குள் ஆரி அழைப்பை ஏற்றதும் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து கொண்டவள், அவன் என்ன நினைப்பானோ என்ற சிறு அச்சத்துடன் அவன் அழைப்பை ஏற்பதற்காக காத்திருக்க, இறுதி ரிங்கில் அட்டென்ட் செய்த ஆரி என்ன ஏது என்று எதுவும் கேட்காமல்,
"யாத்ரா நான் கொஞ்சம் முக்கியமான வேலையா இருக்கேன் அப்புறம் பேசுறேன்" என்று வைத்துவிட, பெண்ணவளின் மனம் ஏமாற்றத்தில் சுணங்கி விட்டது. ஆனாலும் வெளியே காட்டிகொள்ளாதவள்,
"வச்சிட்டாரு ஏதோ முக்கியமான வேலையா இருக்காராம்" என கூறி நண்பர்களை பார்த்து சிரித்தவள்,
"இதுக்கு தான் சொன்னேன்" என்று மதனாவை பார்த்து சொல்லிவிட்டு, "ஏய் அங்க பாருங்க நாம ஆர்டர் பண்ணினது வந்துட்டு ஜாலி" என குதூகலித்தாலும்,
'ஒருவார்த்தை பேசினா தான் என்னவாம் முக்கியமான வேலையாம் ம்ஹ்ம்' என யாத்ராவின் மனம் அவளையும் அறியாமல் தன்னவனுடன் செல்ல ஊடல் கொண்டது.
ஆனந்தியின் கேஸ் விடயமாக அவள் படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி கொண்டிருந்த ஆரிக்கு மஹிஷாவிடம் இருந்து அழைப்பு வரவும், உடனே அங்கிருந்து கிளம்பியவன் தன் புல்லட்டில் சன்ஷைன் பிளாசா என்று எழுதியிருந்த ரெசார்ட்டின் முன்பு வந்து இறங்கி, நேராக உள்ளே சென்று தனக்கு வலதுபுறம் இருந்த லிஃப்ட்டிற்குள் நுழைந்து, அறை எண் 230 முன்பு வந்தவன், காலிங்கபெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க சில வினாடிகளில் கதவு மெல்ல திறக்கப்பட உள்ளே இருந்து வெளியே வந்த மகிஷா ஆரியை பார்த்து பதற்றமான குரலில்,
"டாக்டர் உள்ள தான் இருக்காங்க ஆரி எனக்கு.." என்று தொடரப்போக தன் கரம் உயர்த்தி அவளை தடுத்தவன்,
"இங்க வேண்டாம் மஹிஷா உள்ளே போய் பேசலாம்" என்றவன் அறைக்குள் நுழைந்து தங்களை யாரும் கவனிக்கிறார்களா என வெளியே ஒரு நிமிடம் பார்வையை ஓட்டவிட்டவன், தன் புருவமத்தியில் முடிச்சிட எதையோ சிந்தித்தவனாய் மீண்டும் ஒரு முறை வெளியே எட்டிப்பார்த்தான். பிறகு கதவை சாற்றிவிட்டு உள்ளே சென்றான்.
அந்த பெண்ணை பரிசோதித்து கொண்டிருந்த மருத்துவரை பார்த்து மரியாதை நிமித்தமாக தலையசைத்தவன் உள்ளறையில் இருந்த மஹிஷாவை ஹாலுக்கு அழைத்து,
"என்னாச்சு மகிஷா?"என்று வினவினான்.
"காலையில நீங்க போனதுக்கு அப்புறம் நல்லா தான் இருந்தா மதியானம் சாப்பாடு கூட சாப்பிட்டா, டாக்டர் கொடுத்த டேப்லெட் கொடுத்தேன், சாப்டுட்டு நல்லா தூங்கிட்டு இருந்தா, திடிர்னு வயிறு வலிக்குதுன்னு பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டா, உடனே டாக்டருக்கு கால் பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்ணினேன், கொஞ்சம் டென்க்ஷனா இருக்கு ஆரி அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல அவளை துரத்திட்டு வந்தவங்க யாரு இப்படி எதுவுமே தெரியல" என்ற மஹிஷாவின் குரலில் பதற்றம் எட்டி பார்க்கவும், அவளது நிலையை உணர்ந்து,
"ரிலாக்ஸ் மஹிஷா டாக்டர் என்ன சொல்லறாங்கன்னு கேட்போம்" என்று அவளை ஆசுவாசப்படுத்தி, கண்ணாடி குவளையில் தண்ணீரை நிரப்பி அவளிடம் கொடுத்தவன், மருத்துவரின் வருகைக்காக மஹிஷாவுடன் காத்திருந்தான்.
******
"யாத்ரா என்ன பண்ற முதல்ல மொபைல குடு" என்று யாத்ராவின் கரத்தில் இருந்த அலைபேசியை வாங்க முற்பட்ட மதனாவை இறுக்கமாக முறைத்த யாத்ரா, "மதனா" என்று கத்திவிட்டு கண்களில் நீர் திரள அங்கிருந்து வேகமாக நடந்து செல்ல, அவள் பின்னாலே ஓடிய மதனா யாத்ராவை தடுத்து,
"ப்ளீஸ் டி பொறுமையா இரு, முழுசா தெரியாம எந்த முடிவுக்கும் வராத" என்றாள். ஆனால் யாத்ராவோ,
"இதுக்கு மேல என்ன தெரியணும்" என்று ஆத்திரத்தில் மீண்டும் கத்திவிட,
"டென்ஷன் ஆகாம நான் சொல்றத கேளு டி"
"இன்னும் என்ன கேட்கணும் எல்லார் சொல்றதையும் கேட்டு தான் நான் இப்போ இந்த நிலைமையில நிக்கிறேன்" என்றவள் அழுது கொண்டே ரெசார்ட்டில் இருந்து வெளியேறி மதனா தடுக்க தடுக்க, அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி சென்றுவிட, இதை தன் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபடி கவனித்த கார்த்திக் மதனாவிடம் வந்து, "அவ எங்க போறா என்னாச்சு? நீ ஏன் பதற்றமா இருக்க" என கேட்க அவனிடம், "முதல்ல என் கூட வா எல்லாத்தையும் டீட்டையில்லா சொல்றேன்" என்றவளிடம்,
"நில்லு பே பண்ணிட்டு வந்திர்றேன்" என்ற கார்த்திக் விரைந்து சென்று சாப்பிட்டதிற்கு பணத்தை கொடுத்துவிட்டு மதனாவுடன் யாத்ராவின் வீட்டிற்கு சென்றான்.
*******
சில மணி துளிகள் கடந்த பிறகு செத்தோஸ்க்கோப்பை தன் கழுத்தில் அணிந்தபடி பதற்றத்துடன் அங்கே வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மருத்துவர் சாருபாலாவிடம்,
"என்னாச்சு டாக்டர்?" என்று கேட்ட ஆரியிடம்,
"ஷீ இஸ் இன் ய வெறி க்ரிட்டிக்கல் பொஷிஷன், பேசுறதுக்கு டைம் இல்லை ஆரி ஷீ நீட் டூ பீ ஹாஸ்பிடலைஸிட் இமீடியட்டலி, என் ஹாஸ்பிடலுக்கே கூட்டிட்டு போய்டலாம் அம்பியூலன்ஸ்க்காக வெயிட் பண்ண முடியாது" என்றவரின் குரலில் தெரிந்த தீவிரத்தில் நிலைமையின் வீரியத்தை உணர்ந்த ஆரி, உடனே தன் கல்லூரி கால நண்பனான ரெசார்ட்டின் சேர்மென்னுக்கு அழைத்து பேசி யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் உதவியுடன் ரேசர்ட்டின் பின்பக்க வழியை பயன்படுத்தி அந்த பெண்ணை தன் கையில் ஏந்தி கொண்டு மஹிஷா மற்றும் மருத்துவருடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
மருத்துவமனையில் இரெண்டு மணிநேரம் கழித்து ஆரியையும் மஹிஷாவையும் தன் அறைக்கு அழைத்த மருத்துவர்,
"எக்டோபிக் ப்ரக்நனன்சி ஆரி, சீக்கிரமா கண்டு புடிச்சிருந்தா இந்தப் பெயின் இருந்திருக்காது, லேட் ஆனதுனால ரப்ச்சர் ஆகிடுச்சு கருமுட்டை குழாய் வெடிச்சு இரத்தக்கசிவு ஏற்பட்டுடுச்சு, வேற வழியில்லாததுனால இடது பக்க ஃபளப்பியன் ட்யூபை ரீமூவ் பண்ணியிருக்கோம். " என்றார்.
"இப்போ அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைல" என்ற ஆரியிடம், "ஹெல்த் வைஸ் சீக்கிரம் ரெகவர் ஆகிடுவாங்க ஆனா வேற ஒரு பிராப்லெம் இருக்கு" என்ற மருத்துவர்,
"இந்த பொண்ணு தோற்றதுல தான் டீனேஜ் போல இருக்கா மத்தபடி இவ ரொம்ப சின்ன பொண்ணு என் கணிப்பு படி இவளுக்கு 12 இல்லை 14 வயசுகுள்ள தான் இருக்கும்" என்று கூறினார்.
"12 வயசா! ஆனா பார்த்தா டீனேஜ் மாதிரி தானே இருக்கா டாகடர்" என மஹிஷா மருத்துவர் சொன்னதை கேட்டு ஆச்சர்யத்துடன் வினவ, இருவரின் சம்பாஷணையையும் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த ஆரியின் நெற்றி அடுத்த கட்ட சிந்தனையில் சுருங்கி விரிந்தது.
"இல்லை மஹிஷா வாய்ப்பே இல்லை" என்றதுமே மஹிஷா அதிர்ச்சியுடன் மருத்துவரைப் பார்க்க ,
"யு மீன் ஃபோர்ஸ்ட் பியூபெர்ட்டி?" என்று மருத்துவரை பார்த்து கேட்டான் ஆரி.
"ம்ம்" என்று மருத்துவர் தலையசைக்க மஹிஷாவுக்கு எதுவுமே புரியவில்லை ஆனால் அந்த சிறுமிக்கு ஏதோ அநீதி நடந்திருப்பது மட்டும் புரிய அவளுக்காக மிகவும் வருந்தினாள்.
"நான் அவ கிட்ட பேசலாமா, கொஞ்சம் என்க்யூரி பண்ணனும்"
"நோ வே, ஹை டிப்ரெஷன்ல இருக்காங்க ஆரி பேசுறதெல்லாம் ரொம்ப கஷ்டம். போதா குறைக்கு அந்த பொண்ணு ரொம்ப பயப்படுறா இன்ஜெக்ஷ்ன்ஸ் எல்லாம் பார்த்தா அலறி துடிக்கிறா, அவ நிறைய பாதிக்க பட்டிருக்கா. சோ இப்போதைக்கு அவ உங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பான்னு எனக்கு தோணல. மஹிஷா காப்பாத்தினதால ரைட் நவ் அவ மஹிஷாவை மட்டும் தான் நம்புறா"
"ஏதாவது கவுன்செலிங் கொடுத்து பார்க்கலாமா டாக்டர்" என்று கேட்ட ஆரியிடம்,
"கண்டிப்பா ஆனா இப்போதைக்கு ஷீ நீட் ரெஸ்ட்."
"நீங்க சொல்றபடி பார்த்தா அவ ஒரு குழந்தை டாக்டர், அவளை போய் ச்ச ரொம்ப பாவம் டாக்டர்" என்று வருத்தத்துடன் கூறிய மஹிஷாவிடம்,
"இவ நீங்க பார்க்கிற ஒரு பொண்ணு மஹிஷா, ஆனா இது போல பல குழந்தைங்க இதுல பாதிக்க படுறாங்க. இந்த பொண்ணை தேட கூட ஆள் இருக்கான்னு தெரியல. சொல்ல போனா இவ ரொம்ப லக்கி எப்படியோ தப்பிச்சிட்டா, ஆனா பல பொண்ணுங்க வாழ்கை நாசமா போயிடுது, ஃப்ளஷ் ட்ரேட் பெரிய செக்ஸ் ராக்கெட், தினம் தினம் பல பெண்கள் பல குழந்தைகள் சின்ன வயசுலே இருந்தே பாதிக்கப்படுறாங்க" என்று வருத்தத்துடன் கூறிய மருத்துவரிடம்,
"இதுக்கு முடிவே கிடையாதா அந்த பொண்ணுங்களுக்கு நியாயம் வாங்கி கொடுக்கவே முடியாதா, தப்பு செய்யிறவங்க எப்போ தான் திருந்துவாங்க" என்று மஹிஷா கோபமாக கேட்க, ஆரியை ஒருகணம் பார்த்த மருத்துவர்,
"அதுக்கு நம்ம ஊர் போலீஸ்காரங்களும் அரசியல்வாதிகளும் நேர்மையானவங்களா இருக்கனும் மஹிஷா" என்றார்.
அவரது கூற்றில் முதலில் வெகுண்டெழுந்த ஆரி, பின்பு அவரது வயதை மனதில் வைத்து கொண்டு,
"என்ன மேம் இப்படி சொல்லிடீங்க நேர்மையான போலீசும் இருக்காங்க, ஒருத்தர் ரெண்டு பேரை வச்சு மொத்த டிபார்ட்மென்ட்டையும் நீங்க குறை சொல்றது தப்பு" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற, அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்த மருத்துவர் சாருபாலா,
"எத்தனை பேர் அர்ஜுனன்? இந்தியால மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து பெண் குழந்தைங்க கடத்த படுறாங்க, 80 மேல பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்க படுறாங்க.
நீங்க சொல்றபடி பார்த்தா அந்த ஒருத்தர் ரெண்டு பேரை விட்டுடுவோம் மத்த போலீஸ்காரங்க நேர்மையா அவங்க வேலைய பார்த்திருந்தா நாட்டுல குற்றம் குறைஞ்சிருக்கணுமே ஆனா வருஷம் வருஷம் ஏறிட்டு தானே இருக்கு.
அரசியல்வாதிங்க அப்புறம் போலீஸ் இவங்க ரெண்டு பேரோட சப்போர்ட் இல்லாம இந்த மாதிரியான கேங்கால எப்படி இவ்வளவு தெளிவா செயல்பட முடியும் ஆரி? சொல்லுங்க. சரி அதை விடுங்க நீங்க ஏன் இந்த பொண்ணை டிபார்ட்மெண்ட்க்கு தெரியாம பாதுகாப்பபா மறைச்சி வச்சிருக்கீங்க?இந்த பொண்ணை பத்தின நியூஸ் வெளிய போனா இந்த பொண்ணோட உயிருக்கு ஆபத்துன்னு தானே" என்றவர் ஆரியின் இறுகிய முகத்தை பார்த்து பெருமூச்சை வெளியிட்டு,
"நான் சொல்றது கசப்பா இருந்தாலும் இது தான் உண்மை அர்ஜுனன், பதிவியில இருக்கிறவங்களும், நம்ம நாட்டோட சட்ட திட்டங்களும் மாறாத வரை குற்றவாளிகளும் மாறமாட்டாங்க குற்றங்களோட எண்ணிகையும் குறையாது."என்று கூறி கசப்பாக புன்னகைத்தவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து,
"உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அர்ஜுனன், இந்த பொண்ணை எப்படியாவது காப்பாத்திருங்க, என்ன தான் இந்த பொண்ணு பயந்து போய் இருந்தாலும் அவ கண்ணுல நாம தப்பிச்சிட்டோம் இனிமே நமக்கு எதுவும் இல்லைன்னு சின்ன நம்பிக்கை தெரியுது அந்த நம்பிக்கை பொய்யாகிட கூடாது. அந்த மாதிரி சதை வெறி புடிச்ச மிருக கூட்டத்தில இருந்து, ஒரு பொண்ணு தப்பிச்சு வர்றதுலாம் சாதாரணம் விஷயம் கிடையாது அதுவும் இவ ஒரு குழந்தை எப்படியாவது இந்த பொண்ணை சேவ் பண்ணிடுங்க" என்று சொல்லவும், அவரது முகத்தை பார்த்தவன் அவரது வார்த்தையில் இருந்த வேதனையை உணர்ந்து ,
"இந்த பொண்ணை மட்டும் இல்லை, இதுல பாதிக்க பட்ட அத்தனை பொண்ணுங்களையும் காப்பாத்துவேன். அதுமட்டும் இல்லை இதுக்கு காரணமா இருந்த ஒருத்தரையும் விட மாட்டேன் தண்டனை வாங்கி கொடுப்பேன்." என்ற ஆரி அர்ஜுனனின் தோளை தட்டினார்.
"இப்பவும் நம்புறேன்! உங்க டிபார்மெண்டை இல்லை உங்களை" என்றவர்,
"இந்த கேஸ்ல எப்போ எந்த ஹெல்ப் வேணும்ன்னாலும் நான் பண்றேன் ஆரி" என்று சொல்ல, அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டு மஹிஷாவுடன் வெளியே வந்த ஆரியின் மூளை அடுத்து என்ன? என்பதை சிந்திக்க துவங்கியது.
நேற்று மஹிஷா அழைத்து விடயத்தை கூறும் பொழுது கூட அவன் பிரச்சனை இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று எண்ணவில்லை.
வட மாநில பெண் ! கடத்தப்பட்டிருக்கிறாள் !
அவர்களிடம் இருந்து தப்பி வந்த பொழுது மஹிஷாவின் கார் முன்பு விழுந்துவிட்டாள். சரி ஒரு நாள் கழித்து அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, பேசி அவளது பெற்றோர்களிடம் பத்திரமாக கொண்டு சேர்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு, மருத்துவரின் கூற்று அதிர்ச்சியை கொடுத்தது.
இரெண்டாயிரத்து பத்தில் வடமாநிலத்தை சார்ந்து பேடியா மற்றும் நட் பிரிவினர் நாடு முழுவதும் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் பெண் பிள்ளைகளை கடத்தி சிகப்பு விளக்கு பகுதிகளான ராஜஸ்தானில் உள்ள சோடாவாஸ் மற்றும் கிர்வாஸ் கிராமங்களில் அவர்களை விற்று ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களுக்கு ஆக்சிடாக்சின் செலுத்தி சீக்கிரமே அவர்களை பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தார்கள். அந்த கும்பலை போலீசார் வெகு ஆண்டுகளுக்கு பிறகு கைதுசெய்து உள்ளனர். என்ற செய்தி நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது.
அதன் பிறகும் பெண் பிள்ளைகள் கடத்தப்படுவது நடந்து கொண்டு தான் இருந்தது ஆரி பொறுப்பிற்கு வந்த பிறகு கூட எத்தனையோ கடத்தல் சம்பவங்களையும் பார்த்துவிட்டான். இது போன்ற செய்திகளையும் கேள்வி பட்டு கொந்தளித்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் இதுவரை ஆக்சிடாக்சின் பயன் படுத்தி சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடு படுத்தவதெல்லாம் வடமாநிலத்தில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது இன்று தமிழ்நாட்டில் நடக்கின்றது என்பது அவனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யோசித்து பாருங்கள் சிறு வயதிலோ இல்லை பிறக்கும் பொழுதேவோ கடத்தப்படும் சிறுமிகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்களுக்கு ஆக்சிடோசின் மருந்தை செலுத்தி அவர்களை விரைவாக பருவமடையச் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை! இந்த இழிவான செயலுக்கு பின்னால் இருக்கும் கயவர்களை பற்றி நினைக்கும் பொழுது அவனுக்குள் அவ்வளவு கோபம் கிளர்ந்தெழுந்து. அவன் இப்பொழுது இருக்கும் மனநிலையில் அவர்களை மட்டும் அவன் நேரில் கண்டான் என்றால் தன் இருக்கரங்களாலே அவர்களது நெஞ்சை கிழித்து போட்டுவிடுவான்.
ஆரியின் மனம் ஆறவே இல்லை. அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் வெறும் கோபத்தை மட்டும் வைத்து கொண்டு எந்த பயனும் இல்லை என்பதால் தன்னை நிதானப்படுத்தியவன், தனக்குள் இருக்கும் கோபத்தையெல்லாம் நஞ்சை போல தன் நெஞ்சில் சேமித்துக்கொண்டவன் அந்த கயவர்களை சம்காரம் செய்யப்போகும் நேரத்திற்காக ஆவலாக இருந்தான்.
இப்பொழுது அவனது சிந்தனை முழுவதும் இந்த குற்றத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை சுற்றி தான் வளம் வந்தது.
நிச்சயம் குற்றவாளிகள் இப்பெண்ணை நெருங்க முயற்சிப்பார்கள் அவர்களால் இப்பெண்ணிற்கு ஆபத்து ஏதும் வரும் முன்பு கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது எளிதல்லவே? எண்ணியதும் முடிக்க கூடிய வழக்கு இதுவல்ல நிச்சயம் இந்த வழக்கு தன் வாழ்க்கையில் பெரிய சவாலாக தான் இருக்கும் என்பதை கணித்துவிட்டவன், என்ன ஆனாலும் இதற்கு பின்னால் இருப்பவர்கள் யாரையும் விட கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.
குற்றம் புரிந்தவர்களை கண்டுபிடிக்கும் முன், இந்த பெண்ணின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்! என்று சிந்தித்தவன் உடனே நிமிர்ந்து மஹிஷாவை தான் பார்த்தான்.
ஆரி தன்னை பார்த்த பார்வையிலே மஹிஷாவுக்கு ஓரளவு அவன் சொல்ல வரும் விடயம் புரிந்து விட,
"எந்த தயக்கமும் வேண்டாம் ஆரி நான் இன்னைக்கு மானத்தோட இருக்கேன்னா அதுக்கு நீங்க மட்டும் தான் காரணம் எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க கண்டிப்பா செய்வேன்" என்றாள் முழுமனதுடன். ஆரிக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,
"தேங்க் யு மஹிஷா"
"இட்ஸ் ஓகே ஆரி சொல்லுங்க நான் என்ன பண்ணனும்"
"நீங்க அந்த பொண்ணு கூட இருக்கனும் மஹிஷா இப்போ இருக்கிற சூழ்நிலையில அவ உங்களை மட்டும் தான் நம்புறா சோ நீங்க அவ கூட இருந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும், உங்க மூலமா விசாரணை நடத்தினா எனக்கு ஈஸியா இருக்கும் குற்றவாளிகளையும் சீக்கிரமே நெருங்கிடலாம்."
"ஓகே ஆரி நீங்க சொல்ற வர நான் சென்னையிலையே இருக்கேன்"
"தேங்க் யு மஹிஷா, அந்த பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் நீங்களும் அவ கூட ஹாஸ்ப்பிட்டல்லையே இருங்க, அதுக்கப்புறம் நீங்க எங்க தங்கணும்ன்னு நான் சொல்றேன். உங்க பாதுகாப்புக்கு ஹாஸ்ப்பிட்டல்ல மஃப்டில இரெண்டு போலீஸ் நான் அசைன் பண்ணிருவேன் சோ நீங்க ரிலாக்ஸ்சா இருங்க என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுங்க" என்றவன் மஹிஷாவிடம் விடைபெற்று விட்டு அடுத்தது தொடர்பு கொண்டது அவனது நண்பர்களை தான்.
******
ஆதித்தன் இன்று காலை ஒரு கேஸ் விடயமாக திடிரென்று வெளியூர் சென்றிருப்பதால் அகரனிடம் பேசிய ஆரி, அவனை உடனே ஸ்டேஷன் வந்து தன்னை சந்திக்குமாறு கூறினான்.
பிறகு தனது டீமில் தனக்கு விசுவாசமாக இருக்கும் திறமையான இரெண்டு போலீஸ்காரர்களை தொடர்புகொண்டு விடயத்தை மேலோட்டமாக கூறியவன் மஹிஷாவிடம் கூறியது போலவே அவர்களை அவர்கள் இருவருக்கும் காவலுக்கு அமர்த்திவிட்டு அங்கிருந்து சென்றான்.
*****
தன் கடந்த காலத்தால் காதல் திருமணம் போன்ற பந்தத்தை நம்ப மறுத்தவளுக்குள் இப்போது புதிதாக சந்தேகப்பேய் புகுந்து கொள்ள அது யாத்ராவை படுத்தி எடுத்தது.
ஏற்கனவே மஹிஷா நேற்று இரவு ஆரிக்கு அழைத்த பொழுதே கோபமாக இருந்தவள் ஆரியிடம் அதை குறித்து பேசாவிட்டாலும் உள்ளுக்குள் கொந்தளித்து கொண்டு தான் இருந்தாள், ஆனால் ஆரியே இன்று யாத்ராவிடம் மஹிஷா தன் தோழி என்றும் அவளுக்கு சிறு பிரச்சனை என்றும் சொல்லவும் ஆசுவாசம் அடைந்தவள் அதன் பிறகு ஒரு நொடி கூட மஹிஷாவை பற்றி சிந்திக்கவில்லை.
ஆனால் ஹோட்டலில் மதனாவுடன் ரெஸ்ட் ரூமை பயன்படுத்திவிட்டு வரும் வழியில் ஆரி வேகமாக உள்ளே வருவதை பார்த்தவள், சற்று முன்பு தான் அலைபேசியில் தொடர்புகொண்ட பொழுது, 'நான் முக்கியமான வேலையா இருக்கேன்' என்றவன் இப்பொழுது இந்த நேரத்தில் இங்கு ஹோட்டலில் என்ன செய்கிறான் என்று எண்ணியவள், பின்பு என்ன நினைத்தாளோ அவனை பின்தொடர்ந்து செல்ல, அங்கே ஒரு அறையின் கதவை திறந்து கொண்டு முக்காடு அணிந்தபடி மஹிஷா நிற்கவும், அதை பார்த்த யாத்ராவின் உடல் கோபத்தில் நடுங்கியது.
அவள் ஏதோ சொல்ல வருகிறாள், இவன் வேண்டாம் என்பது போல செய்கை செய்கிறான். பின்பு சுற்றி முற்றி தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று எட்டி பார்த்துவிட்டு உள்ளே நுழைய போகிறான். பின்பு நின்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளே சென்று கதவை சாற்றி விட்டான். பத்து பதினைந்து நொடிகளுக்குள் நடந்தேறிய இந்த காட்சியை தான் வீட்டிற்கு வரும் வழி துவங்கி வந்ததில் இருந்து இப்பொழுது இந்த நொடி வரை அவளது மனம் நினைந்து கொண்டே இருக்கிறது.
வந்ததுக்கு அவளது கோபம் நேரம் ஆக ஆக பன்மடங்காக பெருகியிருந்தது. மதனாவும் கார்த்திக்கும் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள், அவசரப்படவேண்டாம் என்று, ஆனால் அவள் மனம் அதையெல்லாம் கேட்க்கும் நிலையில் இருந்து எப்பொழுதோ கடந்திருந்தது.
எதையோ இழந்த உணர்வு அவளை படுத்தி எடுத்தது. மீண்டும் எதிலோ தோற்று போன உணர்வு அவளது மனதை ஊசியால் குத்தி குத்தி ரணமாக்கிக்கொண்டிருந்தது.
'இவ்வளவு தானா இவன்?' ஒரு மனம் ஏனோ அவனை தவறாக பார்க்க தயங்கியது, காரணம் அந்த விபத்திற்கு பிறகு ஆரி அவளிடம் காட்டிய அக்கறையும் அன்பும் முற்றிலும் வேறு விதமாக அல்லவா இருந்தது. அக்கறையுடன் அவன் செய்த ஒவ்வொரு செய்கையும் அவளது உயிரை தொட்டதே.
ஆனால் இப்பொழுது தான் பார்த்த காட்சி தலை வலி உயிர் போனது. கண்களை மூடி திறந்தாள். மீண்டும் அதே காட்சி கண் முன் வளம் வந்தது, கூடுதலாக முன் தினம் இரவு மஹிஷாவின் அழைப்பு வந்ததும் அவன் அவசரமாக ஓடிய காட்சியும் கண் முன் வந்து போக,
'ஒருவன் எவ்வளவு நாளுக்கு தான் நல்லவன் வேஷம் போட முடியும்!' இப்பொழுது அவளது இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தது. 'ஆக போட்ட வேஷம் களைந்து விட்டது!'என தவறாக யோசித்து தன்னையே குழப்பிக் கொண்டாள்.
அவள் இதழ்கள் இகழ்ச்சியில் வளைய, அவளின் இதயம் வேகமாக துடிக்க, அவளது கண்களில் திரண்ட நீர் எப்பொழுது வேண்டுமானாலும் விழி தாண்டி விடுவேன் என்னும் நிலையில் இமையோர விளிம்பில் இருக்க,
'நோ யாத்ரா நோ அழாத இவனுக்காக நீ அழனுமா? நோ நோ நீ அழவே கூடாது' என மிக சிரமப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்தவள். மொட்டை மாடியில் தென்றல் முகத்தில் வீச கறுத்து கிடந்த வானத்தை வெறித்தபடி நின்றிருந்தாள், உணர்வற்று இருந்தது அவளது பார்வை.
ஆரி வீடு திரும்பிக்கொண்டிருக்கும் பொழுது சிறு தூறலுடன் ஆரம்பித்த மழை இப்பொழுது பேரிரைச்சலுடன் அருவியாக கொட்டிக்கொண்டிருக்க, வீட்டிற்கு வந்தவனின் கண்கள் தன் மனைவியை தான் தேடியது.
கீழே சமையலறையை எட்டி பார்த்தவன் அங்கே அவள் இல்லை என்றதும் தன் அறைக்கு சென்றவன் அங்கையும் அவள் இல்லாமல் போகவும், 'எங்க போயிருப்பா?' என முதலில் யோசித்தவன் பிறகு வெளியே கேட்கும் மழையின் இரைச்சல் சத்தத்தை வைத்து, 'ம்ம் நம்ம ஆளு தான் சரியான மழை பைத்தியமாச்சே மொட்டை மாடியில தான் இருப்பா' என்று எண்ணியவன், கேஸ் விடயமாக தொடர்ந்து உறக்கம் இல்லாமல் சுற்றியதால் சோர்வாக இருந்த பொழுதும் தன் காக்கி உடையை கூட மாற்றாது தன்னவளை காண சென்றவன், அங்கு வேகமாக கொட்டும் மழை நீரை கண்களை மூடியபடி தன் முகத்தில் வாங்கிக்கொண்டு அழகிய சிற்பம் போல நின்றிருந்த தன்னவளை கண்டு கண்ணிமைக்க முடியாமல் அப்படியே நின்றுவிட்டான் ஆரி.
என்னவள் தான் எத்தனை அழகானவள் எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை! அவனது பார்வை ரசனையாக அவள் மீது படிந்தது. அன்று போலவே இன்றும் அழகாக இருந்தாள். என்ன அன்று குதூகலமாக முகத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருந்தாள் ஆனால் இன்று அவளது முகம் மிகவும் அமைதியாக காணப்பட்டது அவளது உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட வதனத்தில் அவனால் அவளது மனதை படிக்க முடியவில்லை தான், இருந்தும் என்றும் போல அவன் மனதை மயக்கினாள்! அவனும் மயங்கினான்! ஆனால் அவன் அவசரப்படவில்லை!
அவளோடு முழுவதுமாக ஆழ்ந்து விட வேண்டும் என்று மனம் தவிக்க தான் செய்தது, இருந்தும் முன்னேறாமல் அப்படியே நின்றிருந்தான்.
இது இன்று மட்டும் அல்ல யாத்ராவுக்கு விபத்து நடந்த அடுத்த நாளில் இருந்து ஆரி தன் உணர்வுகள் தன்னவளிடம் வெளிப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறான். சொல்ல போனால் இப்பொழுதெல்லாம் தொட்டு கூட பேசுவதில்லை. அவளது உடலை நெருங்குவதை விட அவளது உள்ளதை நெருங்குவது தான் முக்கியம் என்று நினைத்தானோ என்னவோ அவளை கண்ணாடி பாத்திரம் போல அவ்வளவு பத்திரமாக கையாண்டுகொண்டிருக்கிறான்.
கஷ்டம் தான்! மனம் முழுவதும் ஆசையும் காதலையும் வைத்து கொண்டு மனைவியிடம் இருந்து விலகி இருப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனாலும் இத்தனை நாளாக தன் உணர்வுகளை அழகாக கட்டுப்படுத்தி வந்தவன், இப்பொழுது இந்த நொடி தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் தவித்தான்.
வந்த பொழுது இருந்த கட்டுப்பாடு நேரம் போக போக கொஞ்சம் கொஞ்சம் தளர்ந்து கொண்டிருக்க, அவனது கண்கள் அவனது கட்டுப்பாட்டையும் தன்னவளை காதலோடு மையம் கொண்டது. ஏற்கனவே வெளியே குளிர் உள்ளே அனல் என்ற நிலையில் தவித்து கொண்டிருந்தவனை பெண்ணவளின் ஈர இதழ்களில் இருந்த வரிகள், வாரி சுருட்டி கொள்ள அதில் விழுந்தவனின் உயிர் தரிகெட்டு ஓட, முதலில் தன்னை மறந்தான், பின் சுற்றம் மறந்தான், தான் கொண்டுள்ள உறுதியை மறந்தான் இறுதியாக அவளது நிலையை மறந்தான், விளைவு! தனக்கு அவளிடம் மட்டுமே தூண்டப்படும் உணர்வின் தாக்கத்தில் தன்னை மறந்து அவளருகில் சென்று அவளின் பின்னந்தோளில் தன் சூடான இதழ்களைப் பதித்திருந்தான் ஆரி அர்ஜுனன்.
தன் மீது கொட்டிக் கொண்டிருந்த குளுமையான மழை நீருக்கு நடுவே அவள் உணர்ந்த அவனது இதழின் வெம்மையில் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டு அவனிடம் இருந்து விலகாமல் அப்படியே அசையாமல் நின்றாள் யாத்ரா.
ஒற்றை முத்தத்தில் முடிந்துவிடும் தேடலா அவனது? பெண்ணவளின் அமைதியில் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் இன்னும் முன்னேறியவனின் கரங்கள் சுகந்திரமாக வலம் வந்த நேரம், "நீ செல்லம் டி.." என காதலோடு சொல்லி முடிக்கவில்லை,
"இப்ப நான் இதுக்கெல்லாம் ஓகே சொல்லலைன்னா அந்த அவ அவகிட்ட அந்த மஹிஷா கிட்ட போய்டுவீங்கல்ல"வார்த்தைகள் தடுமாற உதடுகள் துடிக்க என்ன பேசுகின்றோம் என்று கூட உணராமல் அமிலமென வார்த்தைகளை வீசினாள் யாத்ரா.
தீச்சுட்டாற்போலச் சற்று முன் இருந்த தன் உணர்வலைகளை அறுத்துக் கொண்டு அவளிடமிருந்து விலகிய ஆரி மனதளவில் பெரிதாக அடிவாங்கினான். அது அவனது சுயஒழுக்கத்தில் மேல் விழுந்த அடி. அவள் மேல் அவன் கொண்ட எல்லை இல்லா காதல் மேல் விழுந்த அடி. வாழ்க்கையில் மறக்க முடியாத அடி.
யாத்ரா மீது அவ்வளவு கோபம் வந்தது, அவன் எவ்வளவு பெரிய கேசில் தன் மண்டையை உடைத்து கொண்டிருக்கிறான் மஹிஷா அவனுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறாள் அவளை போய் 'ச்ச' ஆத்திரத்தில் பல்லை கடித்தவன், அடிப்பதற்கு துடித்து கொண்டிருந்த கரத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கியவன், கோபத்தை வெளிக்காட்டாமல் அப்படியே நின்றிருந்தான்.
"நீ என்ன நினைக்கிற?நான் போயிருவேன்னு நினைக்கிறியா" என மிகவும் நிதானமாக கேட்டவனின் குரலில் தான் எத்தனை இறுக்கம்? எத்தனை அழுத்தம்?
"இதுல நான் நினைக்க என்ன இருக்கு அதான் எல்லாத்தையும் நான் பார்த்தேனே கடைசியில நீங்களும் ஆம்பளை தானே உங்க புத்தி வேற எப்படி இருக்கும்" என்று மீண்டும் வார்த்தைகளை விட, அவனது கோபம் இன்னும் பன்மடங்கு பெருகியது. இருந்தும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் கரங்களை குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான், ஏனோ அவனுக்கு இப்பொழுது அவளிடம் கோபம் பட தோன்ற வில்லை என்பதை விட பிடிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
காதலையும் நம்பிக்கையும் சொல்லியா புரியவைக்க முடியும் என்று எண்ணினானோ என்னவோ தன் இயல்பை தாண்டி அமைதியாக இருந்தவன்,
"யு ஆர் ரைட், ரொம்ப தேங்க்ஸ் யாத்ரா, என்னை ரொம்ப சரியா புரிஞ்சி வச்சிருக்க" என்று உணர்வுகளை அடக்கிய குரலில் கூறியவன் தன் மொத்த ரௌத்திரத்தையும் அருகில் இருந்த சுவற்றில் காட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேற, செல்லும் அவனையே ஒருவித வெறுப்புடன் பார்த்தவள் வேதனையில் துடித்த தன் இதழ்களை மடக்கி தன் கேவலை அடக்கியபடி அப்படியே சுவற்றில் தலை சாய்ந்து நிற்க, வானுடன் சேர்ந்து அவளது விழிகளும் நீரை கொட்டியது.
யாத்ராவிடம் தன் கோபத்தை காட்டாமல் பொறுமையாக வந்துவிட்டவன் தனிமையில் மிகவும் வருந்தினான். வாழ்க்கையில் பெரிதாக தோற்றுவிட்டோமோ என்னும் உணர்வு அவன் மனதை மிகவும் வருத்தியது.
எத்தனை காதல் அவள் மீது வைத்துள்ளேன் அதை ஏன் அவளுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை? என் மீது அவ்வளவு தான் நம்பிக்கையா? அப்படியென்றால் என் காதல், வாழ்ந்த வாழ்க்கையும் அனைத்தும் அழலில் விழுந்த நீரா? அவ்வளவு தானா? அடி வாங்கிய அவனது அடிபட்ட மனம் தவியாய் தவித்தது.
பணியில் கூட எத்தனையோ சிக்கல்களை அசராமல் சமாளித்த ஆரிக்கு, அடுத்து என்ன? என்று யாத்ராவுடனான அவனது வாழ்க்கையை பற்றி யோசிக்க யோசிக்க கண்கட்டிக்கொண்டு வந்தது. அவளை எப்படி கையாள்வது என்று அவனுக்கு சத்தியமாக புரியவில்லை, வெகு நேரம் கழித்து உடல் சோர்வுற சோஃபாவில் வந்து படுத்து கண்களை மூடியவனுக்கு அவளுள் ஆழ்ந்து அவளுடன் கழித்த பல தூங்கா இரவுகள் அவனது நினைவில் தோன்றி அவனின் தூக்கத்தை பறிக்க, சுமை ஏறிய மனதுடன் மிகவும் சிரமப்பட்டு வலுக்கட்டயமாக கண்களை மூடினான்.
ஆரியிடம் இருந்து சரியான விளக்கத்தை யாத்ரா எதிர்பார்த்திருக்க, ஆனால் அவனோ, 'ஆமாம் நான் இப்படி தான்' என்பது போல ஒன்றை சொல்லிட்டு அமைதியாக செல்லவும் மொத்தமாக உடைந்து போனவளுக்கு அவன் மீது அத்தனை ஆத்திரம் வர, அதே ஆத்திரத்துடன் கீழே இறங்கி வந்தவள், அறைக்குள் நுழைந்ததும் சோஃபாவில் படுத்திருந்தவனை தான் பார்த்தாள், அவள் பார்க்கும் பொழுதே அவனும் தொப்பலாக நனைந்த படி உள்ளே வந்தவளை தான் பார்த்தான். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்ட தருணம் அது,
"என் மீது அவ்வளவு தான் நம்பிக்கையை" என்று ஆணின் விழிகள் அவளை கேள்வி கேட்க, "உன்னை நம்பினேனே இறுதியில் ஏமாற்றி விட்டாயே" என பெண்ணவளின் விழிகள் அவனை குற்றம் சுமத்தியது. இப்பொழுதாவது எதாவது சொல்லுவான் என அவள் எதிர்பார்த்திருக்க அவனோ அவளில் இருந்து தன் பார்வையை அகற்றியவன் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள அவனது செய்கையில் இன்னுமே கொதித்து போனவள் குளியல் அறை சென்று உடையை மாற்றிக்கொண்டு நேராக வந்து படுத்து கொள்ள அவளுக்கு தூக்கம் வரவே இல்லை.
பின்னிரவு வேளையில் தான் கண் அயர்ந்தாள்.இரவு தாமதமாக உறங்கியதால் காலையில் அயர்ந்து தூங்கியவள் விடாமல் ஒலித்த காலிங் பெல் சத்தத்தில் தான் மெல்ல கண் விழிக்க,
அப்பொழுது ஆரியை தேடியவள் குளியல் அறையில் சத்தம் கேட்டதும் சிறு சலிப்புடன் தானே கீழே சென்று கதவைத் திறந்தாள். அங்கே ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க கைம்பெண் ஒருவர் வாசலில் நிற்க அவரின் அருகில் ஒரு சிறுமி அவரது கையைப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
அவர்களைப் பார்த்ததுமே உள்ளே அழைத்த யாத்ரா "யார் நீங்க??" என்று விசாரித்தாள்.
அப்பொழுது, "ஹாய் யாத்ரா" என்றபடி அகரனும் உள்ளே நுழைய அவனைப் புன்னகையுடன் வரவேற்றவள்,
"அண்ணா நீங்களா!? வாங்க எப்படி இருக்கீங்க? என்று கேட்டாள்.
"நல்லா இருக்கேன் மா, நீ எப்படி இருக்க?அப்புறம் மா இவங்க தான் அன்னலஷ்மி இது அவங்க பொண்ணு பவித்ரா. ஆரிய பார்க்கணும்ன்னு சொன்னாங்க அதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன், அவனுக்குக் கால் பண்ணினேன் எடுக்கல அவனை எங்க?" என்று கேட்க,
"குளிச்சிட்டு இருக்காருண்ணா" என்றாள்.
அப்பொழுது "அக்கா இது தான் ஆரியோட வைஃப் யாத்ரா" என அகரன் யாத்ராவை அன்னலஷ்மிக்கு அறிமுகம் செய்தது தான் தாமதம்,
யாத்ரா சுதாரிப்பதற்குள் அன்னலட்சுமி,
"அம்மா நீங்க நல்லா இருக்கனும்" என்று உரக்க கத்தியவர். அவளது காலில் விழுந்து கும்பிட்டார் .இதைச் சற்றும் எதிர்பாராது திகைத்துப் போன யாத்ராவோ,
"என்னமா என்ன பண்றீங்க? ப்ளீஸ் எழுந்துருங்க" என்று கூற அதற்குள் அகரன் வந்து அவரை எழுப்பிவிட்டான். இதை அவனும் எதிர் பார்க்கவில்லை என்பதால் அவனும் திகைப்புடன் இருக்க,
யாத்ராவோ சங்கடமாக அகரனையும் அன்னலக்ஷ்மியையும் பார்க்க, அவரோ ஏங்கி ஏங்கி அழுதபடி
"எம்மா புண்ணியவதி நீ குழந்தை குட்டின்னு எப்பவும் பூவு பொட்டோட நல்லா இருக்கணுமா. எங்க அய்யா உங்கள நல்லா பார்த்துக்குவாரு மா" என உணர்ச்சி பொங்க அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு கூறியவர் கண்களில் தான் எவ்வளவு கண்ணீர்.
யாத்ராவோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அகரனை பார்த்து முழிக்க, அன்னலக்ஷ்மியை சமாதானம் செய்த அகரன் அவரை ஆசுவாசப்படுத்தி அவரை அமருமாறு கூறி அவர் அருந்த தண்ணீர் கொடுத்து கொண்டிருக்க, ஆனால் இது எதையுமே கண்டும் காணாதது போல முகத்தில் எந்த வித உணர்வுகளுமின்றி எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்த அந்த சிறுமியைப் பார்க்க தான் யாத்ராவுக்கு வித்தியாசமாய் இருந்தது. ஏனோ அவளை பார்க்க பார்க்க யாத்ராவின் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அந்நேரம் ஆரி கீழே வரவும் அன்னலட்சுமி ஓடி சென்று அவன் காலில் விழ போக,
"அக்கா என்ன இது" என அவரை உடனே தடுத்து தூக்கி விட்டவன்,
"எத்தனை தடவை சொல்றது இப்படி பண்ணாதீங்கன்னு முதல்ல கண்ணைத் துடைங்க" என்று அதட்டியவன் அவரை இருக்கையில் அமரச் செய்தவன்,
"இப்போ சொல்லுங்க எப்படி இருக்கீங்க ??பாப்பா எப்படி இருக்கா?" என அச்சிறுமியை பார்த்து கேட்டவன் மெல்ல அவளது தலையை தடவி கொடுக்க, நிமிர்ந்து பார்த்த அச்சிறுமியின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி அதுவரை ஜடம் போல அமர்ந்திருந்த அச்சிறுமி உடனே எழுந்து "மாமா " என்று அழைத்தபடி அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள,
ஆரி அவளது தலையை வருடி கொடுத்தபடி "எப்படி இருக்கீங்க ?" என புன்னகையோடு கேட்க
"ம்ம்" என தன் தலையை மட்டும் அசைத்தவள். அவனது கையை பற்றிக்கொண்டு அவன் விரலை பிடித்து இழுத்து இழுத்து விளையாடிக்கொண்டிருந்தாள் .
"ஏய் பவி மா, அப்படி பண்ணதா இங்க வா" என்று அன்னம் தன் மகளை சத்தம் போட,
" விடுக்கா" என்றவன்,
"என்ன விஷயம் அக்கா நல்லா இருக்கீங்கள்ல வேற ஏதும் பிரச்சனையா "எனக் கேட்க,
"இல்லை தம்பி ... இவ இன்னும் அப்படியே இருக்கா ... உன்னை தவிர வேற யாரையும் முகம் குடுத்து கூட பார்க்க மாட்டிக்கிறா என்னையும் தான் ... நாள் ஆனா சரியாகிரும்ன்னு டாக்டர் சொன்னாங்க ஆனா ... எந்த முன்னேற்றமும் இல்லை பா அதான் என்ன பண்றதுன்னு தெரியல நேத்து உனக்கு ஃபோன் போட்டேன் நீ எடுக்கல அதான் அகரன் தம்பிகிட்ட உன்னை பார்க்கணும்ன்னு சொன்னேன் அவர்தான் கூட்டிட்டு வந்தாரு" என்று மகளை பார்த்தபடி தவிப்புடன் கூற,
உடனே ஆரி,
"அக்கா நீ இப்படி அவளை வீட்லையே வைச்சிருந்தா அப்படி தான் இருப்பா, முதல்ல ஸ்கூலுக்கு அனுப்பு" என்று அவன் கூறவும்,
"எப்படி பா எல்லாரும் ஏதாவது சொல்ல மாட்டாங்க" என்ற அன்னலஷ்மியின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்க தன் முந்தானையால் வாயை மூடி கொண்டு விசும்பியவருக்கு வேதனை நெஞ்சை அடைத்தது.
"அக்கா முதல்ல அழுகைய நிப்பாட்டு ப்ச் சொல்றேன்ல" என்றவன் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு,
"யாரு என்ன சொல்லுவாங்க? இவ மேல என்ன தப்பு இருக்கு.அப்படியேனாலும் பழைய ஸ்கூல்க்கு அனுப்ப வேண்டாம் நாம புது ஸ்கூலுக்கு அனுப்புவோம். எல்லார் கூடவும் பழகட்டும். பெரிய பெரிய தப்பு பண்றவங்களே குற்ற உணர்ச்சி இல்லாம வெளிய சுத்தும் பொழுது. தப்பே பண்ணாத இவளை ஏன் நீ அடைச்சு வச்சு தண்டிக்கிற. இவ இதெல்லாத்தையும் தாண்டி வரணுமா இல்லையா, நீ விடு சீக்கிரமா நானே நல்ல ஸ்கூல்ல சேர்த்து விடுறேன், அவ்வளவு தான் இனிமே இவ முன்னாடி இப்படி அழுது வடியாத, முதல்ல காஃபிய குடி" என்ற ஆரி யாத்ரா கொண்டு வந்த காஃபியை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அந்தச் சிறுமியுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்க.
ஆரியின் இந்த பரிமாணம் அவனவளுக்கு வியப்பை கொடுத்தது. அப்படி என்ன தான் அவளுக்கு நடந்திருக்கும்? தன் தாயிடம் கூட நெருங்க மறுக்கும் அச்சிறுமி ஆரியிடம் மட்டும் எப்படி இவ்வளவு இணக்கமாக இருக்கிறாள்? அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று அவர்களையே யாத்ரா அதிசயமாக பார்த்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது, "சரி அக்கா நீ வெயிட் பண்ணு நானும் நான் ரெடியாகிட்டு வரேன். நானும் அகரனும் கேஸ் விஷயமா வெளில போறோம் அப்படியே போற வழியில்லை உன்னையும் விட்டுட்டு போயிடுறோம்" என்றவன் அங்கிருந்து கிளம்பவும், அந்த சிறுமி உண்பதற்கு தின்பண்டங்களை கொடுத்த யாத்ரா அகரனை கொஞ்சம் வருமாறு அழைக்க, அன்னலக்ஷிமியிடம் சொல்லிவிட்டு தனியாக வந்தவன்,
"என்னாச்சு மா" என்று யாத்ராவிடம் வினவினான்.
"அவங்களுக்கு என்ன பிரச்சனை அண்ணா? ஏன் அந்த பொண்ணு ஒருமாதிரி இருக்கா?" என யாத்ரா கேட்கவும் நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன் அவளை சற்று தள்ளி வருமாறு அழைத்து ஒருவித தயக்கத்துடன், "ரொம்ப பாவம் டா அவங்க" என்று சொல்லவும் அவள் அவனை பார்க்க அகரனோ அன்னலக்ஷ்மியையும் அவரது மகள் பவித்ராவையும் பார்த்தபடி,
"அந்த அக்கா புருஷன் கஞ்சா கேஸ்ல உள்ள போய் ரொம்ப கஷ்ட பட்டாங்க டா, ஆரி நான் ஆதித்தன் எல்லாரும் சேர்ந்து தான் அவங்களுக்கு கடை வச்சு கொடுத்தோம். ஆரியோட ஸ்டேஷன் இருக்குற ஏரியா பக்கம் தான் இட்லி கடை வச்சிருக்காங்க, பல நேரம் எங்களுக்கு காலையில டிபன் அங்க தான் டா. அது மூலமாவே அவங்க கூட ரொம்ப நல்லா பழக்கம். அந்த பொண்ணு எப்படி பேசும் தெரியுமா எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கும். மாமா மாமான்னு ஆரிக்கிட்ட அவ்வளவு அன்பா இருக்கும். அவனுக்கும் பவின்னா ரொம்ப பிடிக்கும். பிளாட்ஃபார்ம்ல அவங்க தான் வீடு. ஒருநாள் நைட் மூணு நாய்ங்க தூக்கிட்டு போய் நாசம் பண்ணிட்டு ரோட்ல தூக்கி போட்டுட்டு போய்ட்டானுங்க. ஆரி தான் அந்த கேஸை ஹாண்டில் பண்ணினான். உனக்கு நியாபகம் இருக்கா ஒருத்தன் ரோட்ல அடிபட்டு கிடந்தப்போ நீ ஹெல்ப் பண்ணுணியே அவனை கூட அன்னைக்கு ஆரி ஷூட் பண்ணினானே அவனும் இதுக்கு உடந்தை. ஸமென்(semen) ட்ரேசஸ் எல்லாத்தையும் அழிச்சிட்டானுங்க சோ கேஸ் போட்டா நிக்காதுன்னு தான் நாங்க மூணு பேரும் இந்த கேஸை அன் அபிசியலா டீல் பண்ணினோம். ஆனா அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்த மாதிரி ஒரே வாரத்துல அந்த பொண்ண சீரழிச்ச அத்தனை பேருக்கும் என்ன செய்யணுமோ ஆரி செஞ்சிட்டான். இது தான் ஆரி, அவன் கோபக்காரன் தான் ஆனா நல்லவன். ரொம்ப நேர்மையானவன் அவனை மாதிரி ஒருத்தன் நண்பனா கிடைச்சதுக்கு எனக்கு இப்பவும் பெருமையா இருக்கு" என்றவனின் பார்வை இப்பொழுது யாத்ராவை பார்க்க அவளது கண்களில் இருந்து இரெண்டு துளி நீர் கசிந்தது . கொஞ்சம் நேரத்திற்கு அவளுக்குப் பேச்சே வரவில்லை. அகரனின் தொடர் அழைப்பில் சுயம் பெற்றவள் ஒருவித தயத்துடன் அகரனை பார்த்து,
"ஆரி அவ்வளவு நல்லவரா அண்ணா" என்று கேட்க,
இது என்ன கேள்வி என்பது போல அவளை விசித்திரமாக பார்த்தவனுக்கு இருவருக்குள்ளும் எதோ பிரச்சனை என்று மட்டும் புரிய அதை குறித்து அவளிடம் கேட்காது,
"அந்த சந்தேகமே வேண்டாம் டா அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் டா மா" என்று மட்டும் சிறு புன்னகையுடன் கூறியவன் ஆரி கீழே வரவும் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு ஆரியை நோக்கி சென்றுவிட,
அந்த நொடி யாத்ரா ஆரியை பார்க்கும் பார்வையே மாறியது.
அன்னம்மாவை மதித்து பாங்காக அவரை தேற்றிய விதம், ஏழை என்று கூட பார்க்காமல் அவரை தனக்கு சரிநிகராக நடத்தியது, அந்த சிறுமியை தன் மகள் போல அரவணைத்து அன்பு காட்டியது முக்கியமாக எதை பற்றியும் யோசிக்காமல் அந்தச் சிறுமிக்கு நியாயம் தீர்த்த விதம் என யாத்ராவை மொத்தமாக தன் பக்கம் ஈர்த்து, அவளது மனதை முழுவதும் ஆக்கிரமித்தூவிட்டான் ஆரி அர்ஜுனன்.
எந்த ஒரு பெண்ணுமே தன் கணவன் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவார்களோ அதன் பிரதிபலிப்பாய் மின்னிக் கொண்டிருந்தான் அவளின் அவன்.
தன் மீது அவன் காட்டும் நேசத்தினை அலட்சியப்படுத்தியவளுக்கு,பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் அவன் காட்டும் பாசத்தினை அப்படி அலட்சியப்படுத்த முடியவில்லை. ஒரு சிறுமிக்காக இவ்வளவு செய்பவன் நிச்சயம் தனக்கு துரோகம் செய்யமாட்டான் என இப்பொழுது மனதார நம்பினாள். நேற்று அவனை சந்தேகப்பட்டு அவன் மீது வார்த்தைகளை அனலாய் கொட்டியதை எண்ணி இப்பொழுது மிகவும் வருந்தினாள். நம்ப மறுத்த அவனது நேசத்தை இப்பொழுது அவள் மனம் நம்பியது. அலட்சியப்படுத்திய அவனது நெருக்கத்துக்காக அவள் இதயம் இப்பொழுது ஏங்கியது.
முன்பெல்லாம் காக்கி உடையில் அவனை கண்டாலே ஒருவித வெறுப்புடன் முகத்தை திருப்பி கொள்பவள், இன்று முதன் முதலாக அவளையும் மீறி தன்னவனை மனதார ரசிக்கத் தொடங்கினாள்.

Last edited:
Author: Naemira
Article Title: அத்தியாயம் 13
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.