- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
ஆரி அர்ஜுனனின் இல்லத்தில் ஜானகி, தன் மகனையும் மருமகளையும், ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, வலது கால் எடுத்து வைத்து, தன் கணவனின் கரம் பிடித்தபடி, தளம்பலான மனநிலையுடன், தன் புகுந்த வீட்டிற்குள் வந்தாள் யாத்ரா.
பின்பு ஜானகி யாத்ராவின் கையால், பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல, ஏற்கனவே ஒருவித பதற்றத்தில் இருந்த யாத்ராவுக்கு, கைநடுக்கம் காரணமாக அந்த நேரம் பார்த்து தீக்குச்சியை பற்றவைப்பது பெரும் சவாலாக இருந்தது.
அப்பொழுது ஆரியின் அத்தை ஒருவர்,
"என்ன ஜானகி, உன் மருமகளுக்கு விளக்கேத்தவே, ஒரு நாள் தேவை படும் போலவே" என விளையாட்டாக சொல்லி அனைவரையும் பார்த்து சிரிக்கவும், யாத்ராவை ஒரு கணம் பார்த்துவிட்டு, அவளது கரத்தை பிடித்துக்கொண்டான் ஆரி.
ஆரி தன் கரத்தை பற்றவும் திடுகிட்ட யாத்ரா, அதிர்ச்சியுடன் ஆரியை பார்க்க, தன்னவளின் அதிர்ந்த பார்வையை உள்வாங்கிக் கொண்ட ஆரியோ, புன்னகையுடன் அவளை முன்னால் பார்க்கும்படி தன் விழிகளால் செய்கை செய்தான்.
பெண்ணவளது கரத்தில் இருந்த நடுக்கம் ஆரியின் வலிய கரத்திற்குள்ளே அடங்கி போக, ஆரியோ மிக நிதானமாக, தன் மனைவியுடன் இணைந்து அவளுக்கு தீக்குச்சியை பற்றவைக்க உதவி செய்து, அவளுடன் இணைந்தே விளக்கேற்றி, எப்பொழுதும் உனக்கு நான் இருக்கிறேன் என்பதை வார்த்தையால் சொல்லாது, செயலில் காட்டினான்.
"ம்கும் மாப்பிள்ளை விளக்கேத்துறது உன் வீட்ல தான் நடக்குது ஜானகி" என மீண்டும் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வர, அது யாத்ராவுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
"யாத்ரா ஆரிக்கிட்ட இருந்து வாங்கி, நீ பண்ணுடா மா" என்று ஜானகி யாத்ராவிடம் கூறினார்.
ஆரியோ தன் தாயிடம், "இருக்கட்டும் மா" என்றவன் தன் அத்தையிடம்,
"இதுல என்ன அத்தை இருக்கு, ரெண்டு பெரும் சேர்ந்து தான் வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ண போறோம், அப்படி இருக்கும் பொழுது சேர்ந்து விளக்கேத்துறதுல என்ன தப்பு இருக்கு?" என்று கூறி புன்னகைக்க, அதன் பிறகு நடந்த எந்த சடங்கிலும் ஒருவரும் வாய் திறக்க வில்லை.
அடுப்பறையில் பால்காயிச்சியது முதல், அதை விருந்தினருக்கு கொடுத்து வரை, ஆரி யாத்ரா இருவரும் சேர்ந்தே தான் செய்தனர்.
அனைவரும் ஒருபுறம் ஆரியை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, யாத்ராவும் அதே ஆச்சரியத்துடன் தான் ஆரியை பார்த்திருந்தாள். அவனது இந்த பரிமாணம் அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
'இது கூட தெரியாதா? உனக்கு என்ன தான் தெரியும்?' என்று இது போல இன்னும் பல கடினமான வார்த்தைகள், யாத்ராவின் செவியில் வந்து அழுத்தமாக மோதவும், யாத்ராவின் மனமோ சில நொடிகளுக்கு முன்பு அடுப்பைறையில்,
"ஏய் சூடா இருக்கு கிளிப் யூஸ் பண்ணிக்கோ" என்ற ஆரி யாத்ரா தடுமாறவும்,
"கண்ணம்மா விட்டுடு, நீ போய் சக்கரை எடு நான் பார்த்துகிறேன்" என்று கூறி அவனே அனைத்தும் செய்ததை இப்பொழுது இந்த நிமிடம் நினைத்து பார்த்து ஆச்சரியப்பட்டது.
சிறிய விடயம் தான், ஒரு ஆண் அதுவும் இந்த காலத்தில், சமையல் வேலைகளை செய்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லையே, ஆனால் அதற்கே யாத்ராவின் மனம் ஒரு கணம்,
'பரவாயில்லையே இதெல்லாம் செய்யிறான்' என ஆரியை பாராட்டியது.
சடங்குகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்து, சொந்தங்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.
அப்பொழுது தன் தாய் தந்தையரை பிரிந்து வந்ததால் அவர்களை எண்ணி யாத்ராவின் முகம் வாட்டமாக இருக்க, யாத்ராவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக, ஜானகி அவள் அருந்த காஃபியை கொடுத்துவிட்டு அவளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருக்க, பதிலுக்கு புன்னகைத்து கொண்டிருந்த யாத்ராவோ, மனதிற்குள் இரவை பற்றிய தயக்கத்துடம் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அங்கே வந்த ஆரி, தன் தாயிடம் மகிழ்ச்சியுடன் உறவாடிக்கொண்டிருந்த தன் காதல் மனைவியை, 'இவள் என்னவள்' என்கின்ற கர்வத்துடன், சில நொடிகள் ரசித்தவன் தன் தாயிடம்,
"ம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் சீக்கிரமா வந்திடுவேன்" என்று யாத்ராவை பார்த்தபடி கூறினான்.
அதை கேட்ட ஜானகியோ,
"என்ன வெளியே போறியா, உனக்கென்ன பைத்தியமா!? இன்னைக்கு தான் டா உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு, எந்த வேலை இருந்தாலும் அதை நாளைக்கு பார்த்துக்கலாம்" என்று அதட்டினார்.
ஆனால் ஆரியோ யாத்ராவை பார்த்து, 'போய்ட்டு வரேன்' என்பது போல தலையசைத்துவிட்டு, "சாரி ம்மா வேலை இருக்கு" மறுத்து பேச முடியாதளவுக்கு உறுதியாக கூறியவன், அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தபடி, தன் ஜீப்பை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஆரி செல்லவும், யாத்ராவின் முகத்தை பார்த்து கவலை கொண்ட ஜானகி,
"தப்பா எடுத்துக்காத மா, அவன் வேலை அப்படி" என்று யாத்ராவை சமாளிக்கும் எண்ணத்தில் அப்படி கூறினார்.
ஜானகி தனக்காக வருந்துவதை உணர்ந்து கொண்ட யாத்ராவோ, "பரவாயில்ல அத்தை, நான் தப்பா நினைக்கல" என்று தன் மாமியாரை சமாதானம் செய்தாள்.
வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அந்த நிமிடம் வரை இன்றைய இரவை பத்தின படப்படப்பில் இருந்த யாத்ராவுக்கு, ஆரி சென்றது, மனதிற்கு நிம்மதியை கொடுத்தது.
"சரி வாடா, உன்னை உன் ரூம்ல விடுறேன், உன் திங்க்ஸ் எல்லாம் அங்க தான் இருக்கு, ஏதும் வேணும்னா கேளு சரியா" என்ற ஜானகிக்கு மகனின் செயலை எண்ணி கோபமாக வந்தது.
ஜானகியோ கவலை தொனித்த முகத்துடன் அங்கிருந்து சென்று விட, அர்ஜுனன் தன் அருகில் இல்லை என்கின்ற உணர்வே பென்னவளுக்குள் இருந்த படபடப்பை குறைத்திருக்க, பல வித சிந்தனையுடன் சென்று கட்டில் மேல் அமர்ந்திருந்தாள்.
@@@@@@
"டேய் ஆரி இங்க என்னடா பண்ற? இன்னைக்கு தான் டா உனக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. நானும் அழலனும் பார்த்திருக்கிறோம், நீ வராதன்னு சொன்னேன்ல, நீ முதல்ல போ டா" அகரன் ஆரியை விரட்டினான்.
"எனக்கு மட்டும் அவளை அங்க தனியா விட்டுட்டு, இங்க வரணும்னு ஆசையா, என்ன பண்றது? இவன் மாட்டணும்னு தானே இவ்வளவு நாளா காத்திருந்தோம். இப்போ சிக்கி இருக்கும் பொழுது சும்மா விட முடியுமா?" என ஆரி தன் முழு கையை சட்டையை முட்டி வரை ஏற்றி விட்டபடி அகரனிடம் கூறினான்.
"டேய் நீ கடமை வீரன்னு ஒத்துக்குறேன். ஆனா எந்த புது மாப்பிள்ளையும் இப்படி பண்ண மாட்டான்டா. அதுவும் ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டு, சும்மா என்ஜாய் பண்ண வேண்டாமா"என்ற அகரனிடம் ஆரி,
"இவன் கதையை முடிச்சா தான் எனக்கு நிம்மதி" என்று தன் துப்பாக்கியை லோட் செய்தபடி கூறினான்.
"டேய் உன்னை பார்த்தாலே பயமா இருக்கு, இப்போ எதுக்கு துப்பாக்கியை லோட் பண்ற?என்ன செய்ய போறேன்னு சொல்லிட்டாவது செய், செல்வாக்கு உள்ள இடம் டா பிரச்சனை வரும். முறையா நாம இன்னும் எதுவுமே பண்ணல, பார்த்து ஹாண்டில் பண்ணு ஆரி, பெரிய ரிஸ்க் ஆகிடும்"
"அதுக்கு என்ன பண்ண சொல்ற, அவன் பண்ணின காரியத்துக்கு அவனை அப்படியே விட சொல்றியா. இவனை விட்டா நாம போலிஸ்னு சொல்றதுக்கே அர்த்தம் கிடையாது" என்ற ஆரியின் விழிகள் அனலை கொட்டியது.
அப்பொழுது, "ஆரி" என ஏதோ பேச வந்த அகரனை தன் கரம் உயர்த்தி தடுத்த அர்ஜுனன், "அந்த இடத்துல வேற யாரும் இருந்தாங்களா? நம்ம பசங்கள யாரும் பார்த்தாங்கலாமா" என்று வினவினான்.
"இல்லை டா ஊருக்கு அவுட்டர், சிவிலியன்ஸ் யாரும் இல்லை" என்றான் அகரன்.
"எத்தனை பேர்"
"அவனோட சேர்த்து மூணு பேர் செம போதை, இப்போ தான் மயக்கம் லேசா தெளிய ஆரம்பிச்சிருக்கு"என்ற அகரனிடம்,
"மொத்தமா மாட்டிக்கிட்டாங்கனு சொல்லு" என தன் மீசையை முறுக்கிய ஆரி, "வா டா இப்போ நான் தர போறது தான், என் கல்யாணக்குக்கு எல்லாருக்கும் நான் தர்ற உண்மையான ட்ரீட்டு" என்று உற்சாகமாக உள்ளே நுழைந்து, அவர்களை அழுத்தமான பார்வை பார்த்தான்.
அவர்களோ பாதி மயக்கம் தெளிந்த நிலையில், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, அவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்துக் கொண்டிருந்த அழலன், உள்ளே நுழைந்த அர்ஜுனன் மற்றும் அகரனை ஒரு கணம் பார்த்தவன், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரகளை செய்து கொண்டிருந்தவர்களிடம்,
"உண்மைய சொல்லாம உங்கள இங்க இருந்து அனுப்ப முடியாது, பிளாட்ஃபார்ம்ல கடை வச்சிருக்க, வைதேகியோட பொண்ணு ரோஜாவ என்ன பண்ணுனீங்க?" ரெக்கார்டரை ஆன் செய்து டேபிள் மீது வைத்தபடி தனது விசாரணையை அழலன் துவங்கினான்.
அப்பொழுது, "இப்போ என்னங்கடா? நாங்க தான் அன்னைக்கு நைட், பிளாட்ஃபார்ம்ல தூங்கிட்டு இருந்த அந்த பொண்ணை, தூக்கிட்டு போய் ரேப் பண்ணினோம், நாங்க மூணு பேர் மட்டும் இல்லை, செத்து போன எங்க ட்ரைவோரட சேர்த்து, நாங்க நாலு பேர் சேர்ந்து தான் இதை செஞ்சோம், இன்னும் செய்வோம். இப்போ எங்களை விடலைனா, உங்கள வீட்டு பொண்ணுங்க மேலையும் கை வைப்போம், உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க டா" என்று அந்த கூட்டத்தின் தலைவனும் தொழிலதிபரின் மகனுமான சர்வேஷ் சொல்லி முடிக்கவும், தன் அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஆவேசமாக வந்த ஆரி, அவனது தலையில் ஓங்கி அடிக்க, ஒரே அடியில் கீழே விழுந்தவனோ வலியில் துடிதுடித்து அலறிவிட்டான்.
சர்வேஷின் நிலையை கண்ட மற்ற இருவரும், பயத்தில் நடுங்கி கொண்டிருக்க, அர்ஜுனனோ ஒருவனையும் விட வில்லை.
அழலனும், அகரனும் எவ்வளவோ தடுத்தும், ஆரி யாரையும் வைத்து பார்க்கவில்லை.
அவர்களின் உயிர் உடலில் இருந்து பிரியும் வரை அவர்களை இறங்கமின்றி தாக்கிய ஆரி அர்ஜுனனை, "அர்ஜுனா விடு டா" என்று மிகவும் சிரமப்பட்டு தடுத்த அழலன்,
"என்ன டா இது? கண்ட்ரோலே இல்லாம, ஏன்டா இவ்வளவு கோப்படுற? எல்லாத்திலையும் அடாவடி தனம் தான். அவனுங்க தான் உண்மைய சொல்லிட்டாங்கல. லீகள் அக்சஷன்ஸ் எடுத்திருக்கலாமே டா" என்றான் கோபமாக.
"என்ன சொன்னாங்கனு கேட்டல்ல, நம்ம வீட்டு பொண்ணுங்களையும் விடமாட்டானுங்கலாம். எவ்வளவு திமிரு இருக்கணும். இவனுங்கள அந்த இடத்துலேயே அறுத்து போடுறத விட்டுட்டு, லீகள் ஆக்ஷன்ஸ் எடுக்கணும் சொல்லிட்டு இருக்க. அடிச்சி சொல்றேன் ஒரு வாரத்துல வெளிய வந்திருவானுங்க, கேஸ் சுத்தமா நிக்காது, நீ பார்க்காததா" ஆரி ரௌத்திரமாக கூறினான்.
"ஆனா தண்டனை கொடுக்குறது சட்டத்தோட வேலை" என்று அர்ஜுனனுடன் வாதிட்ட அழலனே வருங்காலத்தில், ஒருநாள் தானும் இதுபோல சட்டத்தை தன் கையில் எடுப்போம் என்பதை அறிந்திருந்தால், இன்று அர்ஜுனனுடன் இவ்வாறு வாதிட்டிருக்க மாட்டான்.
"தப்பு செஞ்சா நான் தண்டனை கொடுப்பேன், அது யாரா இருந்தாலும் சரி. சட்டம் தண்டனை குடுக்கும்னு என்னால காத்துகிட்டு எல்லாம் இருக்க முடியாது" என அர்ஜுனன் ஆவேசமாக கூற, அழலனை பார்த்து கண்ணை காட்டிய அகரன்,
"டேய் அழலா, நீ சொன்னா அவன் கேட்கவா போறான் விடு டா, சாகவேண்டியவனுங்க எப்போ எப்படி செத்தா என்ன? ஒரு சின்ன பொண்ணுக்கு நடந்த அநியாயத்துக்கு, போலீசா நியாயம் பண்ணியாச்சு. அடுத்த வேலையை பார்ப்போம்." என்று கூறினான்.
அகரன் கூறியதை கேட்டு பெருமூச்சை வெளியிட்ட அழலன்,
"அர்ஜுனா நீ இங்க இருக்க வேண்டாம், வீட்டுக்கு கிளம்பு, நானும் அகரனும் பார்த்துக்குறோம்" என்று சொல்ல, இல்லை என்று மறுத்த அர்ஜுனனை நண்பர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க, சிறிதும் குறையாத கோபத்துடன் ஆரி வீட்டிற்கு வந்தான்.
அங்கிருந்து கிளம்பியது முதல் அந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்த ஆரிக்கு, வீட்டிற்கு வந்தபிறகு தான் இறுக்கம் மெல்ல மெல்ல குறைந்து, யாத்ராவின் முகம் நினைவுக்கு வர, இப்பொழுது அவனது இதழ் தானாக புன்னகைத்து கொண்டது.
'தூங்கிருப்பாளா இல்லை முழிச்சிருப்பாளா?' என்னும் சிந்தனையுடன் தன் அறைக்கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்களில், தன் உடலை குறுக்கிக்கொண்டு பாதுகாப்பை தேடும் குழந்தையை போல படுத்திருக்கும் தன் மனைவியின் முகம் பட, எஞ்சியிருந்த சொற்ப கோபம் கூட வந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது.
புன்னகைத்தபடி அவளை நெருங்கியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, 'சாரி முக்கியமான வேலை அதான் உன்கிட்ட சரியா சொல்லாம கிளம்பிட்டேன்' என்று கூறி, மனைவியின் கேசத்தை வருடி கொடுத்தவன், எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
நிமிடங்கள் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கவும், எழுந்து கொண்ட யாத்ராவோ, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை அருந்திக்கொண்டிருக்கும் பொழுதே பால்கனியில் குரல் கேட்கவும்,
'இது ஆரியோட குரலே வந்துட்டாரா?' என்ற சிந்தனையுடன் எட்டிப்பார்க்க, பால்கனியின் கதவில் சாய்ந்தபடி, தன்னையே பார்த்திருந்த ஆரி அர்ஜுனனை கண்டு திகைப்படைந்தாள்.
அவனது அழுத்தமான பார்வையை பார்க்க இயலாது சிறு படபடப்புடன் அமர்ந்திருந்தவள், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,
"வந்துடீங்களா?" சம்பிரதாயம் பொருட்டு வினாவினாள்.
"ஏன்டா வந்தனு கேக்குறது போல இருக்கே கண்ணம்மா" ஒற்றை கண்ணடித்தபடி நக்கலாக கேட்டான் அர்ஜுனன்.
'ச்ச மனசுல கூட ஒன்னும் நினைக்க முடியல' என அவனை மனதிற்குள் திட்டிகொண்டவள், "அதெல்லாம் இல்லை" சின்ன குரலில் மழுப்பலாக கூறினாள்.
"என்ன அதெல்லாம் இல்லையா, அப்போ நான் எப்ப வருவேனு ஏங்கிட்டு இருந்திருக்க சரியா" என்று ஆரி அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்கவும், அதிர்ந்து விழித்தவள் அவனது விழிகளை பார்க்க இயலாது மீண்டும் குனிந்து கொண்டாள்.
பதில் சொல்லாது தன் கரங்களை பிசைந்தபடி குனிந்திருந்தவளை, ஆரி இரெண்டு எட்டில் நெருங்யிருக்க, அவன் நெருக்கம் கண்டு பெண்ணவள் நான்கு எட்டு பின்னால் நகர்ந்து, கட்டிலின் விளிம்பு வரை சென்றுவிட, தன்னவள் விழுந்து விடாமல் இருப்பதற்காக, சட்டென்று அவளை அவளது இடையுடன் வளைத்து பிடித்துக் கொண்ட ஆரி, யாத்ரா தன்னை அதிர்ந்து பார்க்கவும், கண்களாலே கட்டிலின் விளிம்பை காட்டியவன், தான் அணைத்ததிற்கான காரணத்தை சொல்லாமல் சொன்னான்.
பதற்றத்தில் கட்டிலின் விளிம்பு வரை தான் வந்திருப்பதை புரிந்துகொண்ட யாத்ரா சற்று தள்ளி அமர, தன்னவளது பதற்றம் உணர்ந்து, அவளின் இடையில் இருந்த தன் கரத்தை எடுத்துக் கொண்ட ஆரியோ,
"நான் ஒன்னு கேட்டேன் அதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை" என்றவன் பேச்சோடு பேச்சாக தன் பார்வையாலே அவளை மிக மிக நிதானமாக அளவெடுத்தான்.
நீல நிற காட்டன் புடவையில் ஒப்பனைகள் ஏதும் இன்றி விரித்து விடப்பட்ட கூந்தல் ஆங்காங்கே கலைந்திருக்க, குண்டு விழிகளை உருட்டிக்கொண்டு ஆணவனை மிகவும் இம்சித்து கொண்டிருந்தாள். 'ம்ம் திறமையான திருடி தான்! பார்வையாலே என் இதயத்தை கொள்ளையடித்துவிட்டாளே!' மனதிற்குள் தன்னவனை மெச்சிக்கொண்டான்.
விழிகளில் தாராளமாக வழியும் தாபத்துடன் தன் முன்னே இருந்தவனை, கண்டு இனி என்ன நடக்கும் என்பதை எண்ணி பதறியவளுக்கு, அதரங்கள் தானாக துடிக்க துவங்கியது.
இந்த நிமிடம் அர்ஜுனனின் கண்களில் அவள் பார்க்கும் உணர்ச்சி புதிது, பார்த்தே பெண்ணவளின் உடலுக்குள் ஆணவன் பலவித மாற்றத்தை ஏற்படுத்த, தேகம் தளிர்த்தவள்,
"எனக்கு லைட்டா தூக்கம் வருது" என கூறி அப்படியே படுக்கையில் படுத்து கண்களை இறுக்கமாக மூடி கொள்ள, பொங்கி எழுந்த சிரிப்பை தனக்குள்ளே கட்டுப்படுத்திக்கொண்டவன், சத்தமின்றி அவள் அருகிலே வந்து படுத்துக்கொண்டான்.
தனக்கு மிக அருகில் தன்னவனின் அருகாமையை உணர்ந்த யாத்ராவுக்கு, இதயம் பந்தைய குதிரையின் வேகத்தில் துடிக்க துவங்கவும், அவள் தன் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
யாத்ராவின் அருகே படுத்திருந்த ஆரியிடம் இப்பொழுது சிறிய மாற்றம், மெல்லமாக அவள் பக்கம் சரிந்து ஒருகரத்தை தன் தலைக்கு கொடுத்து, அண்ணாமலை பார்த்தபடி திரும்பி படுத்தான்.
பின்பு தன்னவளின் மேல் உதட்டில், துளிர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைக்கும் சாக்கில், மென்மையாக தன் விரல் கொண்டு அவளது இதழை வருடினான். பெண்ணவளோ தன் நெற்றி சுருங்க தன் கண்களை முடிந்த வரை இறுக்கமாக மூடி கொள்ள, இப்பொழுது புன்னகையுடன் அடுத்த கட்டமாக அவளது முகத்தை வருடியவன்,
"தூங்கிட்டியா கண்ணம்மா" என்று கேட்டான்.
"ஆமா" வேகமாக அவனது கண்ணம்மாவிடம் இருந்து பதில் வந்தது,
"ஆஹான்" என்ற அவனது கேலி குரலில் தன் நடிப்பை அவன் கண்டுகொண்டான் என்பதை புரிந்துகொண்டவள் தன் நாக்கை கடித்துக்கொண்டாள்.
ஆரியோ மென்னகையுடன் தன் பணியை தொடர, திசைமாறி வழிமறந்து பயணித்த அவனது விரல்கள், பெண்ணவளின் தேகத்தில் மின்னலை பாய்ச்ச, உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்த பெண்ணவளோ, சட்டென்று அவனது கரத்தை பிடித்துக்கொண்டாள்.
ஆனால் ஆரியோ மிக லாவகமாக, அவள் பற்றியிருந்த தன் கரத்தின் விரல்களுடன் அவளது கரத்தின் விரல்களை ஆழமாக கோர்த்துக்கொள்ள, இப்பொழுது இதயம் படபடக்க, வேறுபக்கமாக திரும்ப முயன்ற தன்னவளிடம்,
"ப்ளீஸ் கண்ணம்மா" என்றவன் அவளது வதனம் பற்றி தன் பக்கமாக திருப்பின்னான்.
இப்பொழுது ஆரியின் தேகம் தாரளமாக தன்னவளின் தேகத்துடன் தொட்டும் தொடாமலும் உரசிக்கொள்ள, அவனது உதடுகள் அவளது கழுத்து வளைவில் புதைந்து புதையலை தேடியது.
யாத்ராவோ அவனுடன் நெருங்கவும் முடியாது அவனை விலக்கவும் முடியாது ஒருவித பிரித்தெறிய முடியாத உணர்வுகளுக்குள் சிக்கி தவித்து கொண்டிருக்க, ஆணவனின் வழிமாறி பயணித்த ஈர இதழ்கள் பெண்ணவளை மேலும் உணர்வுக்குவியலுக்குள் இழுத்துச் சென்று தவிக்க வைத்தது.
ஆரியின் வலிய கரங்கள் அவளது மென் இடையில் யாழ் இசைத்து கொண்டிருந்தது. அவனது ஒவ்வொரு அணுவும் அவளுடன் ஒன்னாக கலந்து, எல்லையற்ற காதல் இன்பத்தை காண துடிக்க ஆரம்பிக்க, ஆரி தன்னை மறந்து காதலில் மூழ்கியிருந்த நேரம், சட்டென்று அவனிடம் இருந்து விலகி யாத்ரா எழுந்து அமர,
தன்னவனின் கணப்பொழுது விலகலை கூட தாங்கிக் கொள்ள முடியாதவனோ, "கண்ணம்மா" என்றபடி அவளது கரத்தை பிடித்திழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனவளோ அவனது அரவணைப்புக்குள் சிறைப்பட்டு கிடந்தாள்.
ஏற்கனவே குழப்பமான மனநிலையில் இருந்த பெண்ணவளோ,
"ப்ளீஸ்" என காற்று குரலில் அவனிடம் கெஞ்ச, யாத்ராவை தன்னோடு நெருக்கமாக அணைத்துக்கொண்டவன், அவளின் வதனத்துடன் தன் வதனத்தை வைத்து மென்மையாக உரசியபடியே,
"வாட்" என காதல் தளும்பும் குரலில் கேட்க, அவனது குரலில் சில நொடிகள் தன் சுயத்தை தொலைத்தவள், தன்னை மறந்து கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, மீண்டும் அவளுக்குள் உணர்வு குவியல்கள்.
குழப்பமுற்ற மனம் தனிமையை நாடியது. ஆனால் அதே நேரம் உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் பெண்ணவளின் இதயமும், அதில் இருக்கும் மென் உணர்வுகளும் தன்னவனின் அணைப்பில் இருந்து விடுபட முடிந்தாலும், விடுபடாது அவனுக்குள் அடங்கிவிட, மனைவியின் மனதில் இருக்கும் தவிப்பை, அவளின் முக வாட்டத்தை வைத்தே உள்வாங்கியவன், இறுக்கமாக மூடியிருந்த அவளது இரு விழிகளிலும் முத்தமிட்டு, "பயம் வேண்டாம், நான் இருக்கேன்" என்றான்.
பின்பு அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தவன், "எனக்கு இப்போ நீ வேணும், எடுத்துக்கவா" என்று தென்றலை விட மென்மையாக அவளது காதில் கேட்க, ஏற்கனவே அவனது அருகாமையில் உருகி கொண்டிருப்பவளுக்கோ, அவன் கொடுத்த ஒற்றை உச்சந்தலை முத்தம் அனைத்தையும், மறக்கச் செய்திருக்க, சரி என்பதாய் தன்னை மறந்து அணிச்சையாக தலையசைத்தாள்.
உரிமையான தன்னவனின் சம்மதம் கிடைத்த பிறகு ஆணவனுக்கு தடை ஏது? என் மனைவி என்னும் உரிமையில் அவளது பிறை முதலில் முத்தத்தை பதித்தபடியே, இன்னும் பல முத்தங்களை அவளது தேகத்தில் முத்திரையாக பதிக்க துவங்கினான் ஆரி அர்ஜுனன்.
முத்தம் ஓர் அழாகான, அற்புதமான, புனிதமான கணவன் மனைவி உறவுக்கு முதல் அச்சாரம், அதை அர்ஜுனன் சரியாக செய்தான். தன்னவளின் முகத்தில் விளையாடிக்கொண்டிருந்த முடி கற்றையை எடுத்து காதோரமாக சொருகியவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டான் .
தனது மென்மையான கன்னத்தில் தன்னவனது தாடியும் மீசையும் ஏற்படுத்திய தீண்டல்கள், அவளுக்குள் மாற்றங்களை உண்டாக்கியது. ஆணவனின் மென் தீண்டலில் அவளது பெண்மை கரைந்து கொண்டிருக்க, வழக்கம் போல அவனது அருகாமையில் செயலற்று போகும் தன் இயலாமையை எண்ணி வருந்தியவளாய் தனது இதழ்களை அழுந்த கடித்து கொண்டாள்.
அவனது காதலில் அவள் கிரங்காமல் இல்லை, ஆனால் ஏனோ மனம் ஏற்க மறுத்தது என்பதை விட, அவள் மனம் ஆரியை நம்ப மறுத்தது.
ஆணவனது சின்ன சின்ன அத்துமீறல்கள், இப்பொழுது எல்லையை கடக்க, தன்னவளின் அருகாமை கொடுத்த இன்பத்தில் இருந்து வெளிவர விரும்பாதவனாய், கொஞ்சம் கொஞ்சமாக தன்னவளை கொள்ளையிட்டு முழுவதும் ஆட்கொண்டவன்.
"தேங்க்ஸ் கண்ணம்மா" என்று அவளது காதில் காதலோடு கூறி அவளின் நெற்றியில் முத்தமிட, உணர்வின் பிடியிலிருந்து வெளிவந்த பெண்ணவளோ, ஆரியை பார்த்து முறைத்தபடி போர்வையை இழுத்து, போர்த்தி கொண்டு விலகி படுக்க, அவளது செயலில் இதழ் இசைத்தவனோ, வம்பாக அவளது போர்வைக்குள் நுழைந்து, தன்னவளின் செல்ல திமிறல்களை அழகாக அடக்கியபடி தன்னவளை தன்னுடன் நெருக்கமாக இழுத்து அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டான்.
கொஞ்ச நேரம் எதையோ சிந்தித்தபடி அவனது அணைப்பிற்குள் கிடந்த யாத்ராவோ, அவனது இதயத்துடிப்பை கேட்டபடி அவனின் சூடான சுவாசத்தை சுவாசித்துக்கொண்டே தானும் உறங்கினாள்.
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.
அத்தியாயம் 6

Last edited:
Author: Naemira
Article Title: அத்தியாயம் 5
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.