logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

ஆதவன் 17

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
ஆதவன் 17

ஏற்கனவே ஆதித்தும் வருணிக்காவும் பிரிவதற்கு காரணம் தான் என்கிற குற்ற உணர்வில், மனோதின் ஓரம் ஒருவித கலக்கதுடன் இருந்தவளை, வருணிக்காவின் இந்த தற்கொலை முயற்சி மேலும் கலங்கடித்ததில் குற்ற உணர்வு மேலிட மனதளவில் மிகவும் நொறுங்கிப் போன வர்ஷா, வருணிக்காவிற்காக மிகவும் வருந்தினாள்.

கண்ணை மூடினாலும் திறந்தாலும் ரத்தம் சொட்ட அரை மயக்கத்தில் வருணிக்கா தரையில் விழுந்து கிடந்ததே நினைவிற்கு வர, மெல்லிய குணம் கொண்ட வர்ஷா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டாள்.

@@@@@@

"பைத்தியமாடி நீ, கொஞ்சம் ஆழமா வெட்டிருந்தாலும் உயிர் போயிருக்கும். என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க, என் உயிரை வாங்குறதுக்குனே வந்து பொறந்திருக்கியா நீ" கட்டிலில் சோர்வுடன் அமர்ந்திருந்த வருணிக்காவை திட்டியபடி அடிக்கப் பாய்ந்த ஊர்மிளாவை,

"என்ன பண்ணிட்டு இருக்க ஊர்மி அவளே மைண்ட் அளவுல அப்செட்டா இருக்கா, இப்போ போய் அடிக்க போற" என்று தேவராஜ் தடுக்க வேதவல்லி, சத்யபாலன் உட்பட அனைவருமே ஊர்மிளாவை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினர்.

தன் மகளை இந்த நிலைமையில் பார்க்க முடியாது கண்களை துடைத்தபடி வெளியே வந்த ராஜேந்திரனுக்கு ரவி, தேவராஜ் மற்றும் மஹாலக்ஷ்மி தான் ஆறுதல் அளித்துகொண்டிருக்க, அவர்கள் அனைவரையும் தூரம் நின்றபடி பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்திடம் ஆகாஷ் டீ கப்பை நீட்ட,


"தேங்க்ஸ் டா தலை ரொம்ப வலிக்குது" என்றபடி வாங்கிகொண்டான்.

"நல்லவேளை மண்டபத்துல நம்மள தவிர வேற யாரும் இல்ல. டாக்டரும் நமக்கு தெரிஞ்சவரு அதனால எல்லாம் ஸ்மூத்தா போயிடுச்சு. ப்ரெஸ் முன்னாடி மட்டும் இப்படி அவ பண்ணி இருந்தா, எவ்வளவு பெரிய இஷ்யூ ஆயிருக்கும் தெரியுமா? ஏண்டா இந்த வருணிக்கா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா, வேண்டாம்னு அவ தானே போனா அப்படியே போக வேண்டியது தானே சும்மா மனுஷங்கள டார்ச்சர் பண்ணிக்கிட்டு" டீயை அருந்தியபடி கடுப்புடன் கூறிய ஆகாஷிடம்,


"அவ என்னை வேண்டாம்னு சொன்னப்போ, நான் அவ பின்னாடியே போவேன்னு நினைச்சா ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் அவளால ஏத்துக்க முடியல. இதெல்லாம் செஞ்சா நான் மறுபடியும் அவளை ஏத்துக்குவேன்னு நினைக்கிறா. என்ன பண்ணினாலும் என் மனசு மாறாதுன்னு சொல்லிட்டேன் ஆனா கேட்க மாட்டிக்கிறா. இப்போ இவளால தாத்தா பாட்டி ரொம்ப வருத்த படுவாங்க, எரிச்சலா இருக்கு" என்று சலிப்புடன் கூறினான் ஆதித்.

அப்பொழுது அங்கு வந்த தேவராஜ் ஆதித்திடம்,

" டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க, நம்ம வீட்டுக்கு தான் கூட்டிட்டு வர்றோம்" என்று கூறினார்.

"அத்தை மாமாட்ட கேடீங்களா? அவங்க ஏதும் சொல்ல போறாங்க" நாகரிகமாக தனது பிடித்தமின்மையை கூறினான் ஆதித்.

மகன் கூறியதை புரிந்து கொண்ட தேவராஜ், "புரியுது ஆதி ஏன் எனக்கும் உன் அம்மாவுக்குமே அதுல விருப்பம் இல்லை தான், ஆனா உன் பாட்டி ஆசை படுறாங்க என்னால ஒன்னும் சொல்ல முடியல." என்று தனது இயலாமையை எடுத்து கூறியவர்,

"நான் உன் அம்மா தாத்தா மாமா உன் சித்தப்பா சித்தி ஆறு பேரும் உன் கார்ல வர்றோம்" என்றவர் ஆகாஷை பார்த்து,

"நீ மத்தவங்கள கூட்டிட்டு வந்திருப்பா" என்க அவர்கள் சரி என்பதாய் தலையசைக்கவும் தேவராஜ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

@@@@

அகஷை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த ஆதித்,
"எல்லாருமே ரொம்ப டயர்டா இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க" என்று வருணிக்காவை தவிர ஹாலில் இருந்த அனைவரையும் பார்த்து கூறியவன் மறந்தும் கூட அவளை பார்க்காது வேகமாக தன் அறைக்கு செல்ல, அவன் கண்முன்னே தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்தால் நிச்சயம் அவன் மனம் மாறும் என்கின்ற நம்பிக்கையில் இப்படி ஒரு காரியத்தை செய்தவளுக்கு, ஆதித்தின் பாராமுகம் கோபத்தை கொடுக்க, அதே கோபத்துடன் எழுந்துகொண்டவள் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லவும், அனன்யா உதவினாள்.

@@@@@@@

ஏற்கனவே அன்று வருணிக்கா வர்ஷாவிடம் நடந்து கொண்டதில் அவள் மீது அதீத கோபத்தில் இருந்த ஆதித், இன்று அறையில் வைத்து அவள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தில் அவள் மீது வெறுப்படைந்திருக்க, இப்பொழுது அவளது இந்த தற்கொலை முயற்சியால் மொத்தமாக அவளை தன் மனதில் இருந்து நீக்கியிருந்த ஆதித்திற்கு இப்பொழுது வருணிக்கா மீது வெறுப்பு கூட இல்லை.

ஆரம்பத்தில் அவள் மீது கோபத்தில் இருந்த பொழுது கூட, தாங்கள் காதலித்த நாட்களை எண்ணி பார்த்து தன்னை அவள் விட்டுச் சென்றதற்காக பலமுறை தனிமையில் வேதனைப்பட்டிருக்கிறான்.

ஆனால் இன்று அரை மயக்கத்தில் தன் கரங்களில் ரத்தம் சொட்ட அவள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது கூட ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற மனிதாபிமானம் மட்டுமே அவனுக்குள் இருந்ததே தவிர, வேறு எந்த உணர்வும் அவள் மீது அவனுக்கு ஏற்படவில்லை.

ஏன் ஒரு சொட்டு கண்ணீர் கூட அவன் கண்களில் இருந்து அவளுக்காக வரவில்லை. கண்ணீர் ஏன் இப்பொழுது வருணிக்கா மீது கோபப்பட கூட ஆதித்திற்கு தோன்றவில்லை, உரிமை இருக்கும் இடத்தில் தானே கோபம் கூட வரும்.

ஆக ஆதித்தின் மனதை பொறுத்தவரை மற்ற உறவிக்கார பெண்களை போல அவளும் ஒருத்தி என்னும் எண்ணம் மட்டுமே இருக்க, வருணிக்கா உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த மறுக்கணமே அவளை பற்றி சிந்திப்பதை மறந்திருந்தவனின் எண்ணம் முழுவதும் இப்பொழுது அவன் எடுக்க போகும் அடுத்த திரைப்படத்தை பற்றியே ஓடிக்கொண்டிருக்க அதே சிந்தனையுடன் அறைக்கு வந்தவன்,
அறைக்குள் விளக்கு எறிந்து கொண்டிருப்பதை கண்டு வர்ஷாவை பார்த்தான் அணிந்திருந்த ரிசெப்ஷன் உடையை கூட மாற்றாது கட்டிலில் ஒரு ஓரமாக ஒருகளித்து படுத்திருந்தாள்.
'டையர்ட் போல' என்று எண்ணியவன் அறையின் விளக்கை அணைத்து விட்டு டேபிள் லைட்டை மட்டும் போட்டவன், ரத்த கரை படிந்திருந்த தனது சட்டையை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.

@@@@@@@

ஆதித் குளியல் அறைக்குள் நுழைந்து கிட்ட தட்ட ஒரு ஐந்து நிமிடங்கள் தான் கடந்திருக்கும், கீழே அப்படி ஒரு சத்தம். உடனே குளியலரியில் இருந்து வெளியே வந்தவனுக்கு இப்பொழுது சத்தம் இன்னும் தெளிவாய் கேட்டது.

ஊர்மிளாவின் குரல் அவன் மனம் அடித்து சொல்லியது, எதையோ சொல்லி பயங்கரமாக கத்திகொண்டிருந்தார்.

"இந்த நேரத்துல ஏன் சண்டை போடுறாங்க" என சலிப்புடன் நெற்றியை நீவியவன் அப்பொழுது தான் மெத்தை காலியாக இருப்பதை பார்த்தான், பார்த்ததுமே அவனுக்கு ஏதோ தோன்ற சட்டென்று திறந்திருந்த சட்டை பொத்தானை போட்டபடி வேகமாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்த பொழுது அவன் எண்ணியது போல ஊர்மிளா வர்ஷாவை தாறுமாறாக திட்டிகொண்டிருக்க, மொத்த குடும்பமும் ஊர்மிளாவை அமைதியாக இருக்கும்படி கூறிக்கொண்டிருந்தனர்.

உடனே கொஞ்சமும் தாமதிக்காது அங்கே வந்தான்.
பின்பு ஊர்மிளாவை பார்த்து

"நிறுத்துங்க அத்தை இப்போ எதுக்கு வர்ஷாகிட்ட கத்திகிட்டு இருக்கீங்க?" என்று சீரியவன், திரும்பி வர்ஷாவை பார்த்தான்.

அவளோ முகத்தில் ஆங்காங்கே காய்ந்த நிலையில் இருந்த ரத்த கரையுடன் நின்றிருக்க அவள் இருந்த கோலத்தை கண்டு முதலில் அதிர்ந்த ஆதித் பின்பு தன்னை நிலைப்படுத்திகொண்டவன்,

"என் பொண்ணு இப்படி பண்ணினதுக்கு காரணமே நீ தான், இப்போ எதுக்குடி அவ ரூம்க்கு வந்த? அவகிட்ட உனக்கு என்னடி முக்கியமா பேசணும்? வெளிய போ" என்று வர்ஷாவை திட்டியபடி தள்ளிவிட்ட ஊர்மிளாவை பார்த்து, "அத்தை என்ன பண்றீங்க" என்று ஆரோஷமாக கேட்டபடி வர்ஷாவை கீழே விழாமல் பிடித்துக்கொண்ட ஆதித் ஊர்மிளாவை ஏதோ திட்ட போகவும், முந்திகொண்ட மஹாலக்ஷ்மி,

"ஆதி வர்ஷா ரொம்ப டிஸ்டர்பா இருக்கா, இப்போ எதுவும் வேண்டாம் ரூம்க்கு கூட்டிட்டு போ? என்று கூறினார். அதை கேட்டு,

"ஆனா அம்மா" என்று எதோ பேச வந்த மகனிடம்,

"புரிஞ்சிக்கோ டா கூட்டிட்டு போ" என்று மகாலட்சுமி மீண்டும் சொல்லவும் ஊர்மிளாவை முறைத்தபடி ஒரு பார்வை பார்த்தவன் வர்ஷாவுடன் தனது அறைக்கு சென்றான்.

"அதான் வர்ஷா கிளம்பிட்டாள்ல இன்னும் ஏன் நீ இங்க நின்னுட்டு இருக்க? உன் ரூம்க்கு போ" என்று தேவராஜ் ஊர்மிளாவை அதட்டவும், "போறேன் ஆனா அவ என் பொண்ணோட முகத்தை கூட பார்க்க கூடாது" என்று கண்டிப்புடன் கூறிய ஊர்மிளா அங்கிருந்து செல்ல,

"எங்க ரெண்டு பேரையும் பத்தி உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும், நீங்க நினைக்கிறது போல எல்லாம் நாங்க கிடையாது" சற்று முன் தன்னை சந்திக்க வந்த நேரம் வர்ஷா இவ்வாறு சொன்னதை இப்பொழுது பொறுமையாக எண்ணிப் பார்த்த வருணிகாவின். மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

@@@@@@

"உன்னை யாரு இப்போ வருணிக்காவை பார்க்க போக சொன்னது. அத்தை ஏதாவது சொல்லுவாங்கன்னு தான் ஹாஸ்பிட்டளுக்கே உன்னை வரவேண்டாம்ன்னு சொல்லி அனன்யா கூட வீட்டுக்கு அனுப்பி வச்சேன். தூங்கிட்டு தான இருந்த எப்போ முழிச்ச?" என்று ஆதித் ஆதங்கத்துடன் கேட்க,


"அவங்க பாவம்" என்றாள் வர்ஷா. தான் கேட்டதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாது பதிலளித்தவளை சலிப்புடன் பார்த்த ஆதித்,

"அவ நல்லா தான் இருக்கா நீ தான்" என்றவன் அவளை அப்படியே திருப்பி கண்ணாடி முன்பு நிப்பாட்டி,

"ட்ரெஸ் சேஞ் பண்ணாம, ஏன் முகத்தை கூட கழுவாம பித்துப்பிடிச்சது போல இருக்க. போ டிரஸ் சேஞ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா" என்றான்.

அவன் சொன்ன பிறகே கண்ணாடியில் தனது முகத்தை பார்த்த வர்ஷா அதில் ஆங்காங்கே இருந்த ரத்த கரைகளை தன் விரல்களால் வருடியவள் திரும்பி அவனை பார்த்து,


"இதெல்லாம் அவங்க ரத்தம்ல" கண்கள் கலங்க கூறினாள்.

"அவ இப்போ நல்லா இருக்கா வர்ஷா" ஆதித் சமாதானப்படுத்தினான்.

ஆனால் ஆதித்தையே பார்த்துக்கொண்டிருந்த வர்ஷாவோ சட்டென்று அவனை நெருங்கி அவன் சட்டையில் மார்பு பகுதியோரம் இருந்த ரத்த கரையில் கை வைத்தவள்,

"உங்க மேலையும் அவங்க ரத்தம்" குரல் தளு தளுக்க அவன் விழிகளை பார்த்து கூறினாள்.

"ஆனா இப்போ அவ நல்லா இருக்கா எல்லாம் சரியாடுச்சு" மீண்டும் கூறினான் ஆதித்.

அதற்கு,
"நோ" என்று கத்தியவள் தலையை மறுப்பாக அசைத்து, "எதுவும் சரியாகல, சரி பண்ணவும் முடியாது. நான் போனா மட்டும் தான் எல்லாமே சரியாகும்" என்று கண்ணீருடன் அவன் விழிகளை பார்த்து கூறினாள். அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.

"எவ்வளவு ரத்தம்! அவங்க பாவம் நான் போயிடுறேன்" அழுதபடி வெளியேச்செல்வதற்காக அவள் கதவை திறக்கவும், வேகமாக வர்ஷாவை நெருங்கிய ஆதித் அவளை தடுத்தபடி, "எங்கையும் போக முடியாது" என்றான் கோபமாக,
"உங்களுக்கு புரியலையா, உங்களுக்காக அவங்க சாக போயிருக்காங்க" என அவனிடம் பயங்கரமாக கத்தியவளுக்கு இப்பொழுது அழுகையும் பதற்றமும் அதிகமானது.

"வர்ஷா ரிலாஸ்" அவளை அமைதி படுத்த முயன்றான் ஆதித்.

"ஐயோ என்னை விடுங்க உங்க மேல ரத்தம், என் மேல ரத்தம்" என்று கத்தியப்படி மீண்டும் கதவை திறக்க முயன்றவளை தடுத்த ஆதித், "வர்ஷா என்ன பண்ற?" என்று அதட்டியபடி வாழுகட்டாயமாக பிடித்துக்கொண்டான்.

"என்னை விடுங்க நான் போகணும், அவங்க பாவாம்" மூச்சை இழுத்து இழுத்துவிட்டப்படி சொன்னதையே சொல்லி அவனிடம் இருந்து விலக போராடினாள்.

ஆனால் ஆதித் தன் பிடியை தளர்த்தாது இன்னும் அவளை அணைத்து பிடித்துக்கொண்டு, "வருணிக்காவுக்கு ஒன்னும் இல்லை டா" என்றான்.

"இந்த ரத்தம் எல்லாம் அவங்களோடதுங்க" அவனது அணைப்புக்குள் அடங்கியப்படி அழுத்துக்கொண்டே கூறினாள்.

"நீயே பார்த்தல்ல ஷி இஸ் பைஃன்" அவளுக்கு புரியவைக்க மிகவும் போராடினான்.

ஆனால் அது எதுவும் அவள் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை, சொன்னதையே திரும்ப திரும்ப கூறியவளின் அழுகையும், நடுக்கமும், புலம்பலும் அதிகரித்துக்கொண்டே போக, வருணிக்காவின் தற்கொலை முயற்சியால் மனதளவில் வர்ஷா மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஆதித், இந்த பாதிப்பிலிருந்து எப்படி அவளை வெளிக்கொண்டு வருவது என்று தெரியாமல் மிகவும் தவித்தான்.

இந்த தவிப்பு ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் அவளது கண்ணீரும், போராட்டமும் அவன் மனதை மிகவும் வருத்தியது.

இப்படியே அழுது கொண்டிருந்தால் மனதளவில் வர்ஷா இன்னும் பாதிக்கப்பட கூடும் என்பதால் தூங்கினால் அவள் மனம் கொஞ்சம் நிதானமடையும் என்று எண்ணியவன், அவளை அணைத்தபடியே அழைத்து வந்து கட்டிலில் படுக்கவைத்து, ட்ராவை திறந்து வெட் டிஷுவை எடுத்து அவளது வதனத்தில் ஆங்காங்கே இருந்த சின்ன சின்ன ரத்த கரைகளை சுத்தம் செய்ய, அவனையே விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருந்த வர்ஷா சட்டென்று, "எனக்கு சம்மதம்" என்றாள்.

ஒரு கணம் நிமிர்ந்து அவளது விழிகளை பார்த்தவன் பின்பு குனிந்து,
"எதுக்கு சம்மதம்?" நாடிப்பக்கம் இருந்த கரையை மென்மையாக துடைத்தபடி கேட்டான்.

"உங்க கண்டிஷனுக்கு" என்றாள், நிமிர்ந்து அவளை பார்த்தான். ஆனால் இப்பொழுது அவள் அவனை பார்க்கவில்லை அவளது பார்வை எங்கோ வெறித்திருந்தது.

முதலில் அவள் சொன்னதற்கான அர்த்தம் அவனுக்கு புரியவில்லை, ஆனால் புரிந்த நொடி அவனிடம் இருந்த பொறுமை எங்கோ சென்றிருக்க முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
ஆத்திரத்தில் பல்லை கடித்தபடி எதையோ சொல்ல வாய் எடுத்தவன் அவளது நிலைமையை உணர்ந்து அமைதியாக இருந்துவிட, அப்பொழுது ஆதித்தின் பக்கம் திரும்பிய வர்ஷா, அவனது பதிலை எதிர்பார்த்து அவன் விழிகளை பார்க்க, அதை புரிந்து கொண்டவன், அவளது விழிகளை அழுத்தமாக பார்த்தபடி, "எனக்கு ஓகே" என்றான்.

அவனது பதிலில் குப்பென்று அவளுக்கு வியர்த்துவிட, இருந்தும் தனக்குள் ஏற்பட்ட திடீர் பதற்றத்தை மறைப்பதற்காக அவள் தன் தலையை தாழ்த்திக்கொள்ளவும்,

"எவ்வளவு நேரத்துக்கு கீழ பார்த்துட்டே இருக்கிறதா ஐடியா? எப்ப ஸ்டார்ட் பண்ண போற?" கூர்மையாக அவளை பார்த்தபடி வினவினான் ஆதித்.

அவனது கேள்வியில் உடலெங்கு ஒருவித அதிர்வு பரவ, "நானா" என்றாள், குரலில் அத்தனை பயம் இருந்தது.

"தேவை உனக்கு இருக்கா? இல்லை எனக்கு இருக்கா? கேட்டது நீயா? இல்லை நானா?" சூடாக வந்தது வார்த்தைகள். வர்ஷா மௌனம் ஆகிவிட்டாள்.
"ஏய் ஸ்டார்ட் பண்றியா இல்ல நான் போகவா" எரிச்சலுடன் எழுந்து கொள்ளப் போனவனின் சட்டையை இறுக்கமாக பற்றியவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவனது இதழை நெருங்கிய தருணம் அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிய துவங்கியது.
இறுக்கமாக மூடிய இமைகளுக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த கருவிழிகள் அவளுக்குள் இருக்கும் போராட்டத்தை ஆதித்திற்கு உணர்த்த, என்ன நினைத்தானோ சட்டென்று இரு விழிகளிலும் மாறி மாறி முத்தமிட்டான்.

அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காத வர்ஷா அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனுமே அவளது விழிகளை பார்த்தபடி அப்படியே அவளை படுக்கவைத்தவன், கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள அவளோ பதறியபடி அவனது கையை பற்றி கொண்டவள்,

"நான் ஸ்டார்ட் பண்ணிருவேன்" என்றாள் வேகமாக, அதைக்கேட்டு மெலிதாக சிரித்த ஆதித் குனிந்து அவளது நெற்றியில் முத்தம் பதித்து, "தூங்குடி" என்றான்.

"அவங்க ரொம்ப பாவங்க, உங்களை ரொம்ப லவ் பண்றாங்க" என்றாள் அவள்.

"என்னை நம்பு எல்லாமே சரி பண்ணிடுவேன்" என்றான் அவன்.

அதற்கு இல்லை என்பதாய் தலையை அசைத்தவள், "நான் போனா தான் சரியாகும், நான் போனா மட்டும் தான் சரியாகும், ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க என்னால முடியல" என்ற வர்ஷா ஆதித்தின் சட்டையை பற்றிக்கொண்டு அவனை எங்கும் போக விடாது தேம்பி தேம்பி அழுதாள்.


அவளது வார்த்தைகளுக்கும் செயளுக்கும் இடையே இருந்த முரணை கண்ட ஆதித் பெருமூச்சுடன் அவளை பார்த்து "சரி எதுனாலும் நாளைக்கு பார்த்துக்கலாம், இப்ப தூங்கு" மென்மையாக அவளது சிகையை வருடியபடி கூறினான், அவளும் அவனை பார்த்தபடியே சில நொடிகளில் கண்களை மூடினாள்.

அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


ஆதவன் 18
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 17
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top