- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
title_reserved
ராதை_இங்கே_கண்ணன்_எங்கே
டீசர்_2
இந்த கதை நான் இன்னும் எழுதல ஜஸ்ட் டீசர் தான் போடுறேன் உத்திரவின்றி முத்தமிடு முடிச்சிட்டு இது ஸ்டார்ட் பண்ணுவேன். இந்த கதைக்காக யோசிக்கும் பொழுது மைண்ட் ரொம்ப ரிலாக்சா இருக்கு. அதனால தான் டீசர் போடுறேன்.
Happy Reading லடூஸ்❤️
"நில்லு டா உன் இஷ்டத்துக்கு போயிட்டு இருக்க, தியாவெல்லாம் பார்க்க முடியாது, முதல்ல கிளம்பு" என்று கூறி, தன் மார்பில் கரம் வைத்து தன்னை தடுத்தப்படி கோபமாக சீறிய ரகுவை தனது நாடியை நீவியப்படி புருவம் சுருக்கி பார்த்தான் அபய விஜயன்.
பின்பு, "அதை சொல்ல நீ யார்? நீ என்ன என் பொண்டாட்டியா ம்ம்" என்றபடி தன் மார்பில் இருந்த ரகுவின் கரத்தை தட்டிவிட்டு,
"என்னை பார்க்க முடியுமா, முடியாதான்னு என் பொண்டாட்டி சொல்லட்டும், நீ முதல்ல கிளம்பு" என்றவன், தன் முன்னால் பல்லை கடித்தபடி நின்றியிருந்த ரகுவை அலட்சியமாக பார்த்துவிட்டு, அவனை தன் வலிய கரத்தால் தள்ளி நிறுத்தியபடி வேகமாக ஆராத்யாவின் முன்னால் வந்து நின்றான் அபய விஜயன்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இருப்பக்க பேண்ட் பாக்கெட்டினுள் தன் கரங்களை நுழைத்தபடி நின்றிருந்த அபய விஜயனிடம்,
"அடங்கவே மாட்டியாடா" பல்லை கடித்தபடி எரிச்சலுடன் வினவினாள் ஆராத்யா.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த தன்னவளை, தன் இதழை பிதுக்கி பார்த்தவன், இரண்டு எட்டுக்களில் தியாவை நெருங்கி, "என்கிட்ட கேட்டா எப்படி? வேணும்னா அடங்குறேனா இல்லையானு நீ அடக்கி பார்த்துட்டு சொல்லு" என்றவன் அவள் தீயாய் தன்னை முறைக்கவும், அவளின் உயரத்திற்கு சற்று குனிந்து, பட்டும் படாமல் தன் இதழ்கள் மெல்ல அவள் காதில் உரச,
"டெஸ்ட் பண்ணி பாக்குறியா?" என்று ரகசிமாய் கேட்டான்.
அவன் அப்படி கேட்கவும்,
"ச்ச உன்கிட்ட பேசினேன் பார்த்தியா என்னை சொல்லணும்" என்றவள் ஆரோஷமாக அவனை பார்க்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கையறு நிலையில் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலைமையில் நின்றிருப்பவளின் மொத்த கோபமும் இப்பொழுது அபயனின் மீது திரும்ப,
"சிரிடா சிரி" தன் எதிரே சிரித்துக் கொண்டு நின்றிருந்த அபயனை பார்த்து பல்லை கடித்தாள் ஆராத்யா.
அதற்கு அபய விஜயனோ, "ம் சரி" என்று இன்னும் சிரிக்க, எரிச்சல் அடைந்தவளோ,
"இந்த விளையாட்டெல்லாம் எத்தனை நாளைக்குனு பாக்கலாம், என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திடலாம் மட்டும் நினைக்காதே, உனக்கு நரகத்தை காட்டுவேண்டா" பெண்ணவள் கண்கள் சிவக்க ஆவேசமாக கூறினாள்.
அதைக் கேட்டு இதழை பிதுகியவனோ, "அவ்வளவு தானா! ம்ம் வேற என்னவெல்லாம் காட்டுவ" என்று விஷமமாய் கேட்க, பற்களை கடித்தப்படி அவனைப் பார்த்தவளோ, "யூ.. உன்னை விட மாட்டேன் டா" என்றாள் சீற்றமாக.
ஆராத்யா அப்படி கூறவும் அவளை நெருங்கிய அபயவிஜயனோ,
"ப்ளீஸ் ப்ளீஸ் என்னை விட்டுடாத" என்று தன் கண்களை சுருக்கி கெஞ்சவும், விஜயின் முகத்தில் தெரிந்த விஷமத்தை வைத்து, அவனது கேலியை உணர்ந்துக்கொண்டவளோ அவனை முறைத்து விட்டு கடந்து செல்ல, விஜயின் அட்டகாசமான சிரிப்பு சத்தம் ஆராத்யாவை பின்தொடர்ந்தது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
"அதான் உன் பொண்டாட்டி வந்துட்டால்ல இன்னும் ஏண்டா என் பொண்டாட்டிக்கு குடுக்குற, இனிமே முத்தம் கொடுக்குறது அப்புறம் குங்குமம் வச்சிக்கிறது எல்லாம் உன் பொண்டாட்டியோட நிப்பாட்டிக்க" என்ற தன் தாத்தாவை முறைத்தவன் அவனது பாட்டி பார்க்க, அவரோ, "என்னை பாக்குற நேரத்துக்கு உன் பொண்டாட்டிய பாரு டா" என்று கூறிவிட்டு அவரும் அங்கிருந்து அகன்றயிருக்க.
இப்பொழுது அங்கே அவனும் அவளும் மட்டுமே இருந்தனர்.
இது வரை வேலை விடயமாக எப்பொழுது வெளியே சென்றாலும், பாட்டி தாத்தா இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, பாட்டி கையால் தன் நெற்றியில் குங்குமம் பூசிய பின்பு, அவரது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சென்றே பழகிய விஜயனுக்கு, குங்குமம் பூசாமல் தன் பாட்டிக்கு முத்தமிடாமல் செல்ல விருப்பம் இல்லை, அதிலும் இன்று முக்கிய டீல் ஒன்றும் இருப்பதால் என்ன செய்வது என்று புரியாமல் தன் நெற்றியை நீவியவனுக்கு, அதே நேரம் பாட்டி சொல்வது போல ஆராத்யாவிடம் கேட்டு அவளை சங்கடப்படுத்துவத்திலும் விருப்பம் இல்லை.
சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன் ஒரு முடிவுடன் வாசலை நோக்கி நடந்த பொழுது, அவனது காதில் கேட்ட சொடக்கு சத்தத்தில் அவன் நடை தடை பெற, சத்தம் வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தான்.
குத்து கரண்டியால் அண்ணாசி பழத் துண்டை தன் செவ்விதழுக்குள் வைத்து மென்றபடி நிதானமாக அவன் முகம் பார்த்த ஆராத்யா,
"பாட்டி சொல்றதுக்காக, இதெல்லாம் கனவுளையும் என்கிட்டே எதிர்பார்த்துராத" என்றவளோ, அவனை பார்த்து இகழ்ச்சியாக இதழ் வளைத்து,
"இந்த கான்றாக்ட் உனக்கு நிச்சயம் கிடைக்காது, தோத்து தான் போக போற" என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
ஆராத்யாவின் முகபாவனை துவங்கி, அவளது ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக மிக நிதானமாக கேட்ட அபய விஜயன், தன் இதழ்களை அலட்சியமாய் பிதுக்கியபடி,
"ஆஹான்" என்றவன், தன்னவளது கூர் விழிகளை அழுத்தமாக பார்த்தபடி ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்து அவள் முன்னே வந்து நின்றான்.
திடீரென்று தனக்கு மிக நெருக்கமாக அபய விஜயன் தன் முன்னால் வந்து நின்றதில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளோ சற்று பதறி இருந்தாலும், அதை அவனிடம் காட்டிக் கொள்ளாதவள், உடனே நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ள முனையவும், அவன் தன் வலிமையான இரு கரங்களாலும் இரண்டு பக்க நாற்காலியின் கைபிடிகளையும் பிடித்துக் கொள்ள, பாதி எழுந்திருந்தவளோ அவனது அதிரடியில் அவன் விழிகளை அதிர்ச்சியுடன் பார்த்தவள், தன் முகத்தில் பட்டு தெறிக்கும் தன்னவனின் சூடான மூச்சுக்காற்றை சுவாசித்தப்படியே நாற்காலியில் மீண்டும் அமர்ந்தாள்.
பெண்ணவளின் விழிகளை அழுத்தமாக பார்த்தபடி அவள் முன்பு சற்று குனிந்து நின்றிருந்த அபய விஜயனோ, ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவள் விழிகளில் தோன்றிய பதற்றத்தை மட்டும் திருப்தியாக உள்வாங்கிக் கொண்டவன்,
"தோற்றுப் போனாலும் என் பொண்டாட்டி கிட்ட தானே தோத்து போவேன், ஒன்னும் பிரச்சனை இல்ல பொண்டாட்டி, விட்டதையும் சேர்த்து வட்டியோட எப்படி எடுத்துக்கணும்னு எனக்கு தெரியும்" என்று கண்ணடித்துக் கூறியவன், அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் இதழில் மென் முத்தம் ஒன்றை பதித்து விலகியவன், அப்படியே அவளது உச்சந்தலையில் இருந்த குங்குமத்தின் மேல் தன் நெற்றி பதியும்படி தனது நெற்றியை அவளது உச்சந்தலையுடன் அழுத்தமாக வைத்தான்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️