“என்ன சாப்பிடுறீங்க?” மேகாவின் குரலில் ஆர்வம் இல்லை. அவளுக்கு அவன், ‘எப்போ போவான்?’ என்று இருந்தது.
“எது உன்னால சீக்கிரமா செய்ய முடியுமோ, அது!” கனலை மட்டுமே கக்கிய கண்கள் இன்று கதை பேசியது.
“உடனேன்னா எக் தான் செய்ய முடியும். சாப்பிடுவீங்களா?” எனக் கேட்டாள்.
“ம்ம்! பட், உனக்கு புடிக்காதே?” அவனது பார்வை அவளை தாண்டி எங்கும் செல்லவில்லை.
“சாப்பிடத்தான் மாட்டேன், செய்யத்தானே போறேன். இஷிதாக்கு செஞ்சி கொடுத்திருக்கேன்” என்றாள்.
“அப்போ ஓகே, ஐ அம் வெயிட்டிங்!” என்றவன் சட்டையின் முன் இரண்டு பட்டன்களை திறந்துவிட்டு டையை தளர்த்தியவன், கை சட்டையை தன் முழங்கை வரை ஏற்றிவிட்டு, கிட்சன் திண்டில் ஏறி அமர்ந்து நாடியில் கைகுற்றி, அவள் வேலை செய்யும் அழகை பார்த்துக்கொண்டே இருந்தான்.
மனதில் பொல்லாத ஆசைகள் எல்லாம் எட்டிப் பார்க்க, ஏதேதோ எண்ணமெல்லாம் அவனது உணர்வுகளை தட்டி எழுப்ப, அவன் விழிகளில் அவன் இதுவரை அறிந்திராத காதல் பொங்கி வழிந்தது.
“சாப்பிடுங்க!” தட்டை அவனிடம் நீட்டியவள், அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள். அவளது விலகலும், ஒட்டுதல் இல்லாத பார்வையும் அவனுக்குள் ஏதோ ஒரு ஏமாற்றத்தை கொடுக்க, அது கோபமாக மாற, தட்டை கீழே வைத்தான்.
அவளிடம் நெருங்கி, “நான் இங்கே வர்றது உனக்கு புடிக்கலையா வரு?” எனக் கேட்டான். ‘ச்ச, உங்களை புடிக்காம போகுமா தீரான்னு ஒரு தடவை சொல்லுடி!’ என அவனது இதயம் ஆசையில் ஏங்கியது.
“அப்படியெல்லாம் இல்லை தீரன், சாப்பிடுங்க!” என்றாளே தவிர, ‘உங்களைப் புடிக்கும்’ என்ற வார்த்தை மேகாவின் வாயில் இருந்து வரவே இல்லை. ‘சரி விழிகளிலாவது தெரியுதா?’ என பார்த்தான். அதிலும் தோல்வி தான்.
பயத்தை தாண்டி ஒன்றும் தெரியவில்லை. இடுப்பில் கைகுற்றி ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியிட்டான். அவனது நெருக்கமும், செயல்களும் அவளுக்குள் பயத்தை உண்டாக்க, மேகா தீரனிடம் இருந்து விலகி நிற்க முயற்சித்தாள்.
“இந்த மாதிரி என்னை விட்டு விலகாதே வரு, எனக்கு கோபமா வருது!” பற்களை நறநறத்தபடி கத்தினான். அவனது குரலுக்கே திகில் அடைந்தவள், பதற்றத்தில் இரண்டடி பின்னால் செல்ல, கண்கள் நீர் பொழிய ஆயத்தமானது.
“ஐயோ வரு, அழுதுட்டே அப்படி பார்க்காதடி!” முகத்தை அழுத்தமாக துடைத்து தன் கோபத்தை குறைக்க முயற்சித்தவன், “வரு எப்படி சொல்றது? உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என்னென்னல்லாமோ தோணுதுடி! உன்னை கட்டிப்புடிச்சிக்கணும், கைக்குள்ளையே வச்சுக்கணும்... மேகா!” என மூச்சை இழுத்து வெளியே விட்டான்.
“ஐ நீட் யூ, எனக்கு நீ வேணும். ஐ நீட் யூ டாமிட்!” என்றவன் கண்களில் தான் எத்தனை காதல்! சொல்லில் தான் எத்தனை ஆக்ரோஷம்! ஆனால் மேகாவிற்கோ அவன் பேச்சில் சர்வமும் ஒடுங்கிய நிலை. அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆத்திரம், பயம் என இருவேறு உணர்வுகள் அவளைப் படுத்தியெடுத்தது.
“லவ் பண்றீங்களா தீரன்?” சிறுகோபத்துடன் திக்கித் திணறிக் கேட்டாள்.
“லவ்? நோ வரு! அதெல்லாம் கொஞ்சநாள் இருக்கும், அப்புறம் அவ்வளவு தான். ஆனா, நாம அதெல்லாம் விட வேற, இது வேற மேகா! சொல்ல தெரியல. நீ வேணும், அது மட்டும் தெரியுது.”
‘அவள் காட்டிய பரிவின் விளைவுதான் இது’ என்று அவளுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. ஆனால், அவனுக்கு புரியவைக்க வேண்டுமே! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இதெல்லாம் ஜஸ்ட் ஒருவித அட்ராக்ஷன் தான் தீரன். நான் கவனிச்சிக்கிட்டதுனால உங்களுக்கு என்மேல ஒரு ஃபீல்” என மேகா சொல்லி முடிக்கவில்லை,
“நோ!” அறையே அதிரும் அளவு கத்தினான். நடுக்கத்தில் தன் காதை மூடிக்கொண்டாள்.
“புரிஞ்சிக்கோடி!” பற்களை கடித்தான்.
“சாரி தீரன், எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்லை” பயந்தால் வேலைக்காகாது என்பதால் முளையிலே கிள்ளி எறிந்தாள்.
“அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா தானா வரும். நீதான்னு முடிவு பண்ணிட்டேன். உன் கண்ணு, அந்த உதடு, உன் முத்தம் இப்படி மொத்தமா எனக்கு மட்டும்தான், நீ வேணும் வரு!” அதற்குமேல் அவன் பேசிய அந்தரங்கப் பேச்சில் காதை மூடியவளுக்கு கோபமும் பயமும் தொற்றிக்கொள்ள, “ப்ளீஸ், வெளிய போங்க சார்!” கண்களில் நீர்கோர்க்க கதறினாள்.
“வரு, தள்ளிப் போகாதே!” அவனது அதிகாரமிக்க குரல் அவளது கால்களை கட்டிப்போட அசையாது நின்றாள். அவள் கண்களில் தெரிந்த அப்பட்டமான பயம் அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது.
“ஏன் இந்த பயம்?” அவளது கண்களைப் பார்த்துக் கேட்டான்.
“ப்ளீஸ்!”
“நான் வேண்டாமா?”
“ம்ம், வேண்டாம் ப்ளீஸ்” குரல் கம்மியது.
“ஏன் வேண்டாம்?” உடல் இறுகியது.
“அப்பாக்கு லவ் பண்றதெல்லாம் புடிக்காது.”
“அப்பாகிட்ட பேசலாம். ஒத்துக்கிட்டா அவர் முன்னாடி கல்யாணம், இல்லைனா நாம தனியா பண்ணிக்கலாம். ஆனா கல்யாணம் நடக்கும். இதை தடுக்க யாரு முயற்சி பண்ணினாலும் அவங்களை முடிச்சிட்டு, உன்னை கல்யாணம் பண்ணுவேன். நீ எனக்கு வேணும்” தன் முடிவிலே உறுதியாய் நின்றான்.
குரலில் அடைந்தே தீரும் ஒருவித பிடிவாதம் தெரிந்தது. ‘அவங்களை முடிச்சிட்டு உன்னை கல்யாணம் பண்ணுவேன்’ என அக்னி ரௌத்திர விழிகளுடன் சொல்ல, மேகாவிற்கோ அவளது இரத்தநாளங்கள் உறைந்து விட்டது போல குளிரெடுத்தது.
“எனக்கு புடிக்கலைன்னா?” அவனை எப்படியாவது விலக்கிவிடும் நோக்கில் பயத்தை மறந்து கேட்டு விட்டாள்.
“புடிக்கலையா என்னை?” ‘புடிக்கலைன்னு சொல்லித்தான் பாரேன்!’ என்று அவளை மிரட்டியது அவனது குரல். அவளை சுட்டுப் பொசுக்கியது அவனது அனல் மூச்சுக்காற்று.
“ப்ளீஸ், என்னை விட்ருங்க! நான் உங்களை பேஷண்டா மட்டும்தான் பார்த்தேன் சார், ப்ளீஸ்!” அவனைவிட்டு தள்ளி நின்றபடி கண்களில் கண்ணீர் தாறுமாறாய் வழியக் கதறினாள்.
தலையை அழுந்தக் கோதினான், கழுத்தை தேய்த்தான், சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தான். கோபம் வந்தால் புகை பிடிப்பான். இப்பொழுது அளவுக்கு அதிகமாகவே கோபம் வருகிறது. அதுவும் அவள் மேல் வருகிறது.
அவள் அழ அழ இவன் கண்கள் சிவக்கின்றது. ஒன்று, இரண்டு, மூன்று நச்சுப்புகை அவன் நெஞ்சாங்கூட்டை நிரப்பியதுதான் மிச்சம். கோபம் கொஞ்சமும் குறையவில்லை. ஓங்கி அறைய அவனது கரங்கள் பரபரத்தது, ஏனோ அவளை காயப்படுத்த மனம் இடம் கொடுக்கவில்லை.
சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதத்தவன், “கிட்ட வா!” ஒற்றை விரல் நீட்டி அழைத்தான், அவள் மறுத்தாள். “வா!” உறுமினான்.
‘உலகம் இப்படியே நின்றுவிட்டால் எப்படி இருக்கும்?’ மேகாவின் மனம் அடித்துகொண்டது.
“சீக்கிரம்” வந்து நின்றாள்.
அப்பொழுது தீரன் அவளது தாடையை அழுந்தப் பற்றி, “இனிமே இப்படி பேசுவ?” என அவள் இதழ் நோக்கி குனிந்தவன், பின்பு ஏதோ நினைத்து மேகாவிடம் இருந்து விலகி, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு நின்றான்.
அப்பொழுது கண்களை மூடியபடியே சட்டென்று மேகாவின் மணிக்கட்டில் தனது ஐவிரல் பதிய அழுத்தமாக பிடித்த அக்னி, பிடித்தபடி தன் பக்கம் இழுத்து, “தள்ளிப் போகாதே வரு!” ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து அவன் உச்சரித்தான். அவள் அசைவற்று நின்றாள்.
“நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ வரு!” என்றவன், “எனக்கு நாள், கிழமை, இது எதுலயும் நம்பிக்கை கிடையாது. இங்கேயே இந்த நிமிஷமே உன்னை என் பொண்டாட்டியாக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா என் வரு, சகல மரியாதையோடு மகாராணி மாதிரி என் வீட்டுக்கு வரணும். அதனால உன்னை விடுறேன்!” என்றான் தீரன்.
மீண்டும் தன் கண்களை மூடித் திறந்து மேகாவிடம், “வரு, பாருடி என்னை, லுக் அட் மீ!” மேகாவை அதட்டி தன்னைப் பார்க்க வைத்தான். விழிகள் நான்கும் சந்தித்துக் கொண்டன. அவனது பிடி இறுக மேகாவின் முகம் வலியில் சுருங்கியது.
“ஏய் மேகவர்ஷினி! நீ எனக்குத்தான். எனக்கு மட்டும்தான். நான், அக்னிதீரன்! உனக்கு தான், உனக்கு மட்டும்தான். இது ஆண்டவன் இல்லை இந்த தீரன், அக்னிதீரன் போட்ட முடிச்சு. மாத்தணும்னு நினைச்சா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் வரு!” அனல் விழிகள் மிரட்ட, கண்ணீர் விழிகள் பரிதவித்தன.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 12.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.