அக்னிக்கு கோபமாக வந்தது, இருந்தும் அடக்கிக் கொண்டவன், மேகாவை மேலும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதால் கதவை வேகமாக திறந்து, திறந்த வேகத்தில் அடித்து சாற்றிவிட்டு ஸோஃபாவில் வந்து கண்மூடி அமர்ந்திருந்தான்.
“நீ அப்பவே சொன்னே, நான்தான் கேட்கல. எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணம். உனக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன்? வீட்ல யாருக்கும் ஏதாவது ஆகிருமோன்னு ரொம்பவே பயமா இருக்கு இஷு!” என தேம்பித் தேம்பி அழும் மேகாவை எப்படி தேற்றுவது என தெரியாமல் மிகவும் குழம்பி போயிருந்தாள் இஷிதா.
“யாருக்காவது ஏதாவது ஆகிருமோன்னு பயந்து பயந்து வாழுறதுக்கு, செத்து போயிறலாம்னு தோணுது” என மேகா சொல்லி முடிக்கவில்லை இஷிதா, மேகாவை அறைந்திருந்தாள்.
“லூசாடி நீ! எந்த தப்பும் பண்ணாம நீ ஏன்டி சாகணும்? பிரச்சனைய ஃபேஸ் பண்ணக் கத்துக்கோ!” என்று கத்தியவளுக்கு அத்தனை ஆத்திரம் அக்னி மீது வந்தது.
“என்ன பண்றதுடி? அவர் என்னை விடமாட்டார்” என்று மேகா கூறவும்,
“அதென்ன அவர்? அவன் போதும்” என்ற இஷிதா, சில நொடிகள் சிந்தித்து மேகாவிடம், “என் அண்ணன் பத்தி என்ன நினைக்கிற?” எனக் கேட்டாள்.
“அவர், உன் அண்ணன். அதை தாண்டி எனக்கு எந்த பீலிங்க்ஸும் இல்லை. நான் சம் டைம்ஸ் பேசும்பொழுது கூட அண்ணான்னு அட்ரஸ் பண்ணிருக்கேன்.”
“ப்ச், அதெல்லாம் பிரச்சனை இல்லை. பெர்சனால உனக்கு புடிச்சிருக்கான்னு கேட்குறேன்?”
“எனக்கு யார் மேலயும் அப்படி தோணலை இஷு! அப்பா விருப்பம்தான் என் விருப்பம்ங்கிறதுல ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கேன்!”
“அங்கிளுக்கு ஓகேன்னா உனக்கு ஓகேவா?”
“அப்பா சொன்னா சரிதான். அதெல்லாம் ஏன் இப்போ கேட்குற?”
“சொல்றேன்” என்ற இஷிதா, “அக்னி மேல உனக்கு ஏதாவது ஃபீலிங் இருக்கா?” மேகாவின் விழிகளை பார்த்தபடியே கேட்டாள் இஷிதா, அதிர்ந்து பார்த்தாள் மேகா.
“நோ, இல்லை. ஏன் அப்படி கேட்ட?”
“தெரிஞ்சிக்க தான் கேட்குறேன்!”
“ஃபீலிங் இருந்தா, நான் ஏன் அழப் போறேன்? அவர் மேல பயத்தை தாண்டி வேற எதுவும் இல்லை. ஆனா, அவரை பார்க்கும்பொழுது பாவமா இருக்கு. நான் சொன்னேன்ல ஒருநாள் ரொம்ப திட்டிட்டேன்னு, அவர்கூட எதுவும் பேசாம சைலெண்டா போயிட்டாருன்னு! அந்த இன்சிடெண்ட்க்கு அப்புறம் இருந்து அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர், ஏன்னு தெரியல?” தன் மனதில் உள்ளதை அப்படியே கூறினாள்.
“மேகா, முதல்ல அவன்மேல உள்ள சாஃப்ட் பீலிங்ஸ் எல்லாத்தையும் தூக்கிப் போடு! அவன் உனக்கு பாவம் பார்க்காதப்போ, நீ மட்டும் ஏன் பார்த்துட்டு இருக்க?”
“சாரி, இனிமே பார்க்கலடி!” என்ற மேகாவுக்கு குரல் உள்ளே சென்றது.
“மேகா, இதுல இருந்து வெளிய வரணும்ன்னா ஒரே வழிதான் இருக்கு.”
“என்ன வழி?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“கொஞ்சநாள் அவன் என்ன சொன்னாலும் சம்மதமா தலையை ஆட்டு!”
“ஏய், அது தப்பு இஷு! என்னால அப்படி பண்ண முடியாது.”
“அப்போ, அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா?”
“ஐயோ முடியாது!”
“அப்போ, இதை விட்டா வேற வழியில்லை. இப்போதைக்கு நீ மட்டும் சரி சொல்லலைன்னா, அவன் தினமும் உன் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ணுவான். சோ, இப்போதைக்கு ஓகே சொல்லி வை! அப்போ தான் அவனும் அடங்குவான். நமக்கும் டென்ஷன் இல்லாம யோசிக்க முடியும்.”
“இஷு, என் மனசுக்கு சரியா வரும்னு தோணலடி! அவன் கெட்டவனாவே இருந்தாலும், அவன் உணர்வுகளோடு விளையாடுறது சரி கிடையாது” மேகா மறுத்தாள்.
“அவன் உன் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்குறானா? இல்லைல்ல! அப்போ நீ மட்டும் ஏன் அவனை பத்தி கவலைப்படுற? இதுல இருந்து வெளிய வர வழியே இல்ல மேகா! ஜஸ்ட் அவன் என்ன சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டி வை! மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கறேன். நீ நான் சொன்னதை மட்டும் பண்ணு!” என இஷிதா சொல்லி முடிக்கவும், கதவைத் திறந்து கொண்டு தீரன் நுழைந்தான்.
சில நிமிடங்கள் தன் கண்களை மூடி அமர்ந்திருந்த தீரனால் அதற்கு மேல் மேகாவை பார்க்காமல் இருக்க முடியாது போக, மீண்டும் அவளிடமே வந்தான். அவனை கண்டதும் மேகா, இஷிதாவின் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
இருவரையும் பார்த்து தீவிரமாய் முறைத்தவன், “என் வரு கூட தனியா பேசணும்” என இஷிதாவை பார்த்து கூறவும் இஷிதா எழுந்துகொள்ள, மேகாவோ கண்களாலே அவளை இருக்கச் சொல்லி கரங்களை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொள்ள, அதை தன் விழிகள் இடுங்கப் பார்த்தான்.
“கிளம்பு!” என உரக்கக் கத்த, மேகா தானாக தன் கைகளை விலகிக்கொள்ள, அழுது கொண்டிருக்கும் மேகாவை பார்த்தபடியே அறையை விட்டு வெளியேறினாள் இஷிதா.
இஷிதா சென்றதும் மேகாவின் அருகில் வந்து அமர்ந்த அக்னி, “வரு, என்னை பாரு!” என்றான். அவனது கணீர்குரலில் மெலிதாய் மென்மை படர்ந்திருக்க, அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது மருண்ட விழிகளை தனது மிதக்கும் விழிகளுடன் கலக்க விட்டவன், “என் கண்ணைப் பாரு, பார்த்துட்டே இரு! நான் சொல்லிப் புரியாத என் உணர்வுகள் எல்லாம் என் கண்ணை பார்த்தா உனக்கு புரியும். புரிஞ்சிக்கோ வரு! நான் மனுஷனா மாறணும்னு ஆசைப்படுறேன். என்னை மிருகமா மாத்திடாதே!” என்றவனின் பார்வை அவளது சிவந்திருந்த மணிக்கட்டின் மீது விழ, அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை.
சில நொடிகள் அவள் அருகிலே அவள் முகம் பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தவன் சிறு செருமலுடன், “இந்த கண்ணீர், இந்த காயம்!” என மேகாவின் கண்களில் இருந்து விழ ஆயத்தமாக இருந்த கண்ணீரை சுட்டிக்காட்டியவன், அவளது சிவந்திருந்த மணிக்கட்டை காட்டி, “இனிமே வரக்கூடாதுன்னு நான் ஆசைப்படுறேன் மேகா! கல்யாணம் பண்ணிக்குவோம்டா, நல்லா பார்த்துக்குவேன். என்னை நம்பி வா, கடைசி வரை கைவிட மாட்டேன்!” சொல்லும் பொழுதே அக்னியின் குரல் கரகரத்தது.
அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது அமைதி அவனது பொறுமையை மிகவும் சோதித்தது. “உன் பிரச்சனை தான் என்ன வரு? நீ யாரையும் விரும்பலைன்னு எனக்கு தெரியும். அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இவ்வளவு யோசிக்கிற?” என்றான்.
அவனிடம் பேசவே ஐயம் கொண்ட மேகா அமைதியாக இருந்தாள்.
“பதில் சொல்லித் தொலைடி!” திடீரென்று ஆக்ரோஷமாக கத்தியவன், அவள் பயப்படுவதை பார்த்து தன் கண்களை மூடித் திறந்தான்.
“நீ எனக்கானவ மேகா, என்னை புரிஞ்சிக்க டிரை பண்ணு! உனக்கு என்னை புடிக்கும்” என்று நிதானமாய் ஆரம்பித்தவன், “புடிக்கணும், புடிச்சே ஆகணும்! உனக்கு நாளைக்கு மார்னிங் வர டைம். சரி சொன்னா, உன் குடும்பம் முன்னாடி நம்ம கல்யாணம். இல்லைன்னு சொன்னா, நான் சொல்லமாட்டேன் செய்வேன்! உன் அப்பா, உன் அம்மா, உன் தம்பி, தங்கச்சினு உன்னை சார்ந்த யாரையும் சும்மா விடமாட்டேன்!” குரலில், ‘செய்தே தீருவேன்’ என்கிற தீவிரம் தெரிய, பேசமுடியாமல் விக்கித்து நின்றாள்.
“ஏன்டி என்னைப் புடிக்கலை? படுத்துற வரு நீ! இப்போ நீ அழுது அழுது என்னை மிருகமா மாத்திட்டு இருக்க” தாறுமாறாய் கத்தியவனின் கரத்தில் அகப்பட்ட பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்தது.
“இவ்வளவு சொல்றேன் என் மனசு உனக்கு புரியலையா?”
அவளிடம் கண்ணீர் மௌனம்.
“இஷிதா, அதான் உன் ஃப்ரண்ட், அவ என்னை பத்தி உங்கிட்ட ஏதோ சொல்லிருக்கா! அதான் நீ இப்படி இருக்க, அவளை ஏதாவது!” என ஆக்ரோஷமா திரும்பியவனை, “தீரன் ப்ளீஸ்” என தடுத்தவள், “அவ எதுவும் சொல்லலை” என்றாள்.
“அப்போ வேற என்ன? ஏன் என்மேல இவ்வளவு வெறுப்பு?”
“ம்ஹூம்” இடவலமாக தன் தலையை அசைத்தாள்.
“என்னை வெறுக்கலையா?” அவளது முகத்தை ஆராய்ந்தபடி வினவினான்.
‘ம்ஹூம்’ தலையை மட்டும் அசைத்தாள். அவன் முகத்தில் மெல்லிய பூரிப்பு. கழுத்தை தேய்த்தவன், “என்னை புடிக்குமா வரு?” ஆர்வத்துடன் கேட்டான்.
தலையை மட்டும் அசைத்தாள். பயத்தில் கைகள் தானாக நடுங்கியது. ஏனோ அவன் முகம் பார்க்க தைரியம் இல்லை, குனிந்து கொண்டாள். அவனோ குனிந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தான். அவள் உணர்வுகளை அறிந்துகொள்ளும் ஆவலில். எதுவும் பிடிபடவில்லை.
“என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மேகா?” விழிகளில் ஆசை பொங்கி வழிந்தது.
இவளுக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. திருமண விடயத்தில் பொய் சொல்ல மனம் ஒத்துக்கவில்லை. அப்படியே சிலை போல நின்றாள்.
அவன் ஏமாற்றத்துடன் அவளை நோக்கினான். தலை கவிழ்ந்தபடி நின்றாள்.
“என்னை பாரு வரு!” மெதுவாக அழைத்தான். நிமிரவில்லை.
“பாரு!” கொஞ்சம் கடுமையாக அழைத்தான். அப்படியே நின்றாள்.
“பாரு!” ஓங்கி ஒலித்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மேகா?” முகம் பாறையாக இறுகி இருக்க, அவன் பார்த்த உஷ்ணப் பார்வையிலே அரண்டவள், தன் மனசாட்சியை கொன்றுவிட்டு தலையசைத்தாள்.
அக்னி தீரனின் கண்கள் பிரகாசமானது. முகத்தில் புன்னகை விரிந்தது. ஏறிய போதை ஒரேயொரு தலையசைப்பில் இறங்கியது. மேகாவின் கரங்களை மெதுவாக பற்றி மெத்தையில் அமர வைத்தவன், அவள் அருகிலே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே ஏதேதோ உணர்வுகள் பாலைநிலத்தில் பெய்யும் திடீர் அடைமழை போல், பல நாள் தாகத்தில் கிடந்தவனுக்கு கிடைத்த பொங்கிவரும் அமிர்த ஊற்று போல், ஆனந்தத்தில் அவன் மனம் கூத்தாடியது.
அவளது கரங்களை மெல்ல தன் கரங்களுக்குள் பொத்தி வைத்து கொண்டவன், “பயப்படாத, நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்” என்று கூறி அவளது காயத்தை மெதுவாய் நீவ, தன் கரங்களுக்குள் இருந்த மேகாவின் கரம் நடுங்குவதை உணர்ந்தான். அவளது சங்கடத்தை உணர்ந்து தானாக அவளது கரத்தை விடுவித்து கண்ணியத்துடன் அவளை விட்டு விலகியே அமர்ந்தான்.
“உன் அன்பு மட்டும் எனக்கு போதும் வரு! நான் உனக்கு உண்மையா இருப்பேன். நீயும் எனக்கு உண்மையா இரு! என்கிட்ட நீ உரிமையா பழகலாம். பயப்படத் தேவை இல்லை சரியா? என்னைக்கும் என் நம்பிக்கையை மட்டும் உடைச்சிறாதே! அது மட்டும் என்னால தாங்க முடியாது. மற்றபடி நீ நீயா இருக்கலாம். நாம சந்தோஷமா இருக்கலாம்.
கொஞ்சம் வேலை இருக்கு. அநேகமா நாளைக்கு ஈவினிங் கனடா கிளம்பிருவேன். வர ரெண்டு இல்லை மூனு வாரம் ஆகும். டைம் கிடைக்கும் பொழுது நானே கூப்பிடுறேன். வேலை முடிஞ்சு வந்ததும் நானே உன் வீட்ல பேசுறேன். சரியா?” மிகவும் மென்மையாக பேசினான். காதல் அவனை பேச வைத்தது. அவளால்தான் பதில் பேச முடியவில்லை. குற்ற உணர்வு அவளை அமைதி ஆக்கியது.
“சரி, இப்போ நல்லா இருக்கல்ல?”
“ம்ம்”
“மயங்கி விழுந்திட்டியா, ரொம்பவே பயந்துட்டேன். ஹாஸ்பிடல் ஏதும் போகணுமா?”
“ம்ஹூம்” மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள்.
“சரி, நீ ரெஸ்ட் எடு, நான் கிளம்புறேன்!” என்றவன் அவள் படுத்ததும் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு, சில நிமிடங்கள் நின்று அவளது முகத்தை பார்த்த பிறகே அறையை விட்டு வெளியே வந்தான்.
வாசலிலே கைகளை பிசைந்தபடி நின்றிருந்த இஷிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசல் வரை சென்று திரும்பிய தீரன், “எங்களுக்கு நடுவுல நீ வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று எச்சரிக்கை விடுத்தவன், அவளை அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 14.3
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.