மனதை மயக்கும் இன்ஸ்ட்ருமென்ட்டல் இசையில் நனைந்தபடி ரிதுராஜ் மேகாவுடன் கதைத்து கொண்டிருக்க, தன் மார்புக்கு குறுக்கே கைகள் கட்டியபடி அவர்களை பார்த்து கொண்டிருந்த தீரனின் அருகே வந்த அஷோக், “இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த?” சிறு கோபத்துடன் கேட்டான்.
“ஜஸ்ட், சும்மா ஒரு வாக். நீ ஏன் டென்க்ஷனா இருக்க?” அஷோக்கை பார்த்து இயல்பாக வினவினான் அக்னி.
“நாம ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கோம் அக்னி? வா, மேகா அப்பாகிட்ட பேசலாம்” என்றான் அஷோக்.
“அவர்கிட்ட என்ன பேசணும்?” அஷோக்கின் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டான் தீரன்.
“மேகாவ, உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு கேட்போம்.”
“உங்க பொண்ணை குடுங்கன்னு கெஞ்சச் சொல்றியா? ஹாங்!” புருவம் உயர்த்தினான் தீரன்.
“அப்படியில்லை, அவர்கிட்ட கேப்போம். ஒத்துக்கலைன்னா, மேகாவை கூட்டிட்டு கிளம்பலாம்” ‘எங்கே நண்பனின் ஆசை நிறைவேறாது போய்விடுமோ’ என்ற துடிப்பு அஷோக்கின் தீவிரமான பேச்சிலே அக்னிக்கு புரிந்தது.
“நான் பேசவேண்டியது மேகாகிட்ட, அவ அப்பாகிட்ட இல்லை. மேகாகிட்ட என்ன பேசணுமோ பேசிட்டேன். முடிவு அவகிட்ட இருக்கு, அவளுடைய முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துக்கிறேன்” என்றான் தீரன், குரலில் மறந்தும் கூட கோபம் இல்லை.
“அப்போ அவ்வளவு தானா! உன் மேகாவ விட்டு கொடுக்கப் போறியா தீரா?” என ஆவேசத்துடன் அஷோக் அக்னியிடம் கேட்டான்.
அஷோக்கின் சிவந்த முகத்தை பார்த்து புன்னகைத்த தீரன், “ரிலாக்ஸ் மேன்! ஏன் இவ்வளவு டென்ஷன்? பங்ஷன் போய்ட்டு இருக்கு, என்ஜாய் பண்ணு! நான் காஃபி குடிக்க போறேன், உனக்கு வேணுமா?” என்ற தீரன் இயல்பாக நடந்துகொள்ள, அஷோக் தான் மிகவும் குழப்பமுற்றான். ‘இது தீரன் அல்ல’ என அஷோக்கின் மனம் அடித்துக் கூற, தீரனின் எண்ணத்தை அஷோக்கால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அலைபேசியில் இருந்து அழைப்பு வந்ததும் மண்டபத்தில் இருந்து உடனே கிளம்பிவிட்டார் கோபாலகிருஷ்ணன். உள்ளே ஒருவித படபடப்பு இருந்தாலும் அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
காஃபியை சுவைத்தபடி மேடையை வெறித்துக் கொண்டிருந்த அக்னியிடம், “சாரி அக்னி சார், ஒரு முக்கியமான கால். அதான் பேசிட்டு வந்தேன், எல்லாம் ஓகேதானே? உங்களுக்கு ஏதாவது வேணுமா?” மீண்டும் பல்லைக் காட்டியபடி கனகராஜ் இவர்களுடன் ஒட்டிக்கொள்ள, அக்னி தன் புருவத்தை தேய்த்த விதமே அவன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருப்பதைக் கூறியது.
“எல்லாம் ஓகே சார்” நண்பனின் கோபம் உணர்ந்து கனகராஜூக்கு பதில் கூறிய அஷோக், “உங்க பையன எங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ண மாட்டிங்களா?” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“அட ஆமா, இதோ இப்பவே அழைச்சிட்டு வரேன்!” என்றவரை தடுத்த அக்னி, “நோ நோ, இன்னைக்கு ஷோவோட ஸ்டார், நம்மளை தேடி வந்தா நல்லா இருக்காது” என்றவன் மேடையை நோக்கி முன்னேறி நடக்க, கனகராஜும் அஷோக்கும் அவனுடனே வந்தனர்.
மேடையில், “ஏன் அக்கா பேய் அறைஞ்ச மாதிரியே இருக்க?” மேகாவின் தங்கை மயூரி தொடங்கி அவள் தாய், ரிதுராஜ், இஷிதா என அவளுக்கு தெரிந்த பலர் மேகாவிடம் கேட்டு விட்டனர்.
ஆனால் மேகாவோ, ‘ஒன்றுமில்லை’ என கடைசி வரை சாதித்தவள், ‘தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது’ என்று எண்ணி, அக்னி தன்னுடன் நடந்து கொண்டதை இஷிதாவிடம் இருந்து கூட மறைத்துவிட்டு கடமைக்காக சிரித்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அக்னி ரிதுராஜை பார்த்தபடி மேடையை நோக்கி அழுத்தமான நடையுடன் நடந்துவர, மேகாவின் இதயத்தில் முரசு கொட்டத் துவங்கியது. தீரன் மேடையை நெருங்கி ரிதுராஜின் அருகே வந்ததுமே மேகாவின் கரம் தானாக இஷிதாவின் கரத்தை பற்றுக்கோலாக பற்றிக்கொள்ள, இஷிதாவோ, “ரிலாக்ஸ்டி!” என தோழிக்கு சொல்லுவது போல தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டாள்.
கனகராஜோ, “ரிதுராஜ், சார்தான் அக்னிதீரன்!” என்று தொடங்கி அக்னியைப் பற்றி, அது இது என ஒரு முழு பக்கத்து புகழுரையை வாசித்து முடிக்க, மேகாவிற்கு தான் அவனது அருகாமை ஏதேதோ செய்தது.
அந்த மொத்த மேடையையும் அவனே ஆக்கிரமித்து இருப்பது போல தோன்ற, அனைவரின் முன்பும் ஏதாவது செய்துவிடுவானோ என்கின்ற பயத்தில் கரத்தைப் பிசைந்தாள். சரிந்து விழாத கற்றைமுடியை அடிக்கடி காதோரம் ஒதுக்கியவளுக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு மூடிய அறையில், அவன் நடந்து கொண்டது நினைவில் வர, முடிந்தளவு அவனைப் பார்ப்பதை தவிர்த்து தன் பார்வையை வேறெங்கோ வீசியபடி நின்றிருந்தாள்.
அவளது உடல் மொழியே, ‘நான் பயப்படுகிறேன், மிகவும் பதட்டமாக இருக்கிறேன்!’ என்பதை அப்பட்டமாக கூறியது. “நீங்க?” கேட்ட கணீர் குரலில் சட்டென்று நிமிர்ந்து தீரனை பார்த்தாள். அவன் பார்வை அவளை துளைத்தெடுத்து அவள் ஆன்மாவைத் தொட்டது. உடனே அவன் பார்வையை தவிர்த்தாள்.
“ம்ம், நீங்க, உங்க பேரு?” நெற்றியில் புருவம் சுருங்க யோசிப்பது போல மேகாவை ஆழ்ந்து பார்த்தான். மீண்டும் அவனது பொல்லாத பார்வை அவளுக்குள் ஊடுருவ முயல, அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாது மிகுந்த சங்கடத்தில் இருந்தாள்.
“உங்க பேரு கூட ஏதோ, உங்கபேர் என்ன?” கண்களை மூடி ஆழ்ந்து சிந்திப்பது போன்ற பாவனையில் நிர்மலமான முகத்துடன் கேட்டான்.
அவன் கேட்ட கேள்வியில் இஷிதாவே ஒரு கணம் அதிர்ந்து விழிக்க, கனகராஜிற்கே, ‘அதற்குள் இவள் பெயரை மறந்துவிட்டானா?’ என சிறு அதிர்ச்சி தான். பிறகு, ‘கோடிக்கணக்கில் பிஸ்னஸ் செய்கிறான். தினமும் பலபேரை சந்திக்கிறான். இவள் பெயரெல்லாம் இவன் மனதில் இருக்குமா?’ என்று எண்ணியவர், அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
“மேகவர்ஷினி”, ‘உன் பெயரை அவனால் எப்படி மறக்க முடியும்? அவன் நடிக்கிறான் மேகா!’ என அவள் மனம் சொல்லுவதைக் கூட கேட்காமல் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அவன் கேட்டதும் தன் பெயரை சொன்னாள் மேகா.
“ஆங், மேகவர்ஷினி!” அவளது பதற்றம் ஜனித்த முகம் பார்த்து நமட்டு சிரிப்புடன் அவளது பெயரை இழுத்து ராகம் போட்டவன், “வாழ்த்துகள் மேகவர்ஷினி!” மீசைக்குள் மறைந்திருந்த வஞ்சப் புன்னகையுடன் கூறியவன், மேகா முன்பு தன் கரங்களை நீட்டினான்.
உள்ளுக்குள் உதறல் எடுக்கக் கலவரத்துடன் ரிதுராஜை பார்த்தாள், முகம் முழுவதும் புன்னகையோடு நின்றிருந்தான். படபடப்புடன் தன் ஒரு கரத்தால் இஷிதாவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, “தேங்க்யூ!” தட்டுத் தடுமாற கூறியவள் மறுகரத்தால் அவனது கரத்தை பற்றி குலுக்கினாள்.

Author: Naemira
Article Title: மிருதன் 16.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.