மேகாவின் முகமாற்றத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டான் தீரன். அவள் வதனம் பயத்தில் சிவந்திருந்தது. தடுமாற்றத்தால் அதரங்கள் துடித்தது. ‘தடுமாறுகிறாள், இதுதான் வேண்டும். என்னையா ஏமாற்றுகிறாய்? நான் யார் என்று காட்டுகிறேன்!’ அவளுடைய படபடப்பை ஆனந்தமாய் ரசித்தவன், “என்ஜாய் யுவர் டே, ஸ்டே ஹேப்பி மேகா!” என வாழ்த்தினான்.
‘சந்தோஷமா இருந்திருவ? இருந்துதான் பாரேன்!’ என்றது அவனது பார்வை. திகைப்புடன் அவனை பார்த்தாள். புன்னகையுடன் ரிதுராஜை கட்டித் தழுவிவிட்டு, “டேக் கேர் ரிதுராஜ்!” இருபொருள்பட கூறினான் தீரன்.
மேகாவின் வெளிறிய முகத்தை திருப்தியுடன் பார்த்து ரசித்து, ரிதுராஜின் தோளை தட்டிவிட்டு கீழே இறங்கினான். பீதியுடன் பனிக்கட்டி சிற்பம் போல உறைந்த நிலையில் நின்றிருந்தாள் மேகா.
“அக்னி சார், நீங்க வருவது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, எல்லா ஏற்பாடும் இன்னும் கிராண்டா செஞ்சிருப்பேன். உங்களுக்கு ஏற்ற மாதிரி ஏற்பாடு எதுவும் நான் பண்ணல. அதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கு. ஆனால் டெல்லில ரிசப்ஷன் பயங்கர கிராண்டா பிளான் பண்ணிருக்கேன், ஜமாய்ச்சிடலாம் அக்னி சார்!” பெருமிதத்துடன் கூறினார் கனகராஜ்.
எப்படியாவது அக்னியை தன் கைக்குள்ளே போட்டுக்கொண்டு, தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தில், அக்னியின் கணக்கு புரியாமல், தன் மனதில் ஒரு கணக்கை போட்டு கொண்டு ஆதாயத்திற்காக அவர்களுடன் அட்டை போல ஒட்டிக்கொண்டே திரிந்தார்.
“பொண்ணு வீட்ல நம்ம ஸ்டேட்டஸுக்கு ரொம்பவே கம்மிதான். அவங்க இது பண்ணுனதே பெரிய விஷயம். அங்கே ஒன்னும் இல்லை சார். என்ன செய்ய? பையனுக்காக ஒத்துக்கிட்டேன்!” பெண் வீட்டை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசியவர், அக்னியின் பார்வை மாற்றத்தை கவனிக்க தவறி, தன் போக்கிலே பேசிக் கொண்டிருந்தார்.
“இந்த பொண்ணுதான் வேணும்னு அடம்பிடிச்சிட்டான். லவ் பண்றானாம் லவ்! ஆனா அவ, அப்பா சம்மதிச்சாதான் கல்யாணம்னு கண்டிஷன் போட்டா! நான், என் பையனுக்காக என் ஸ்டேட்ஸுக்கு விட்டு இறங்கி வந்து பொண்ணு கேட்டேன். எல்லாம் தலையெழுத்து” கையில் பழச்சாறு அடங்கிய கோப்பையுடன் அளவளாவிய கனகராஜ் வெளிப்படையாக தன் நெற்றியில் கைவைக்க, தீரனின் கை முஷ்டி இறுகியது.
“கடைசியில என்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறவ, என் மருமகளா வரணும்னு என் விதியில எழுதியிருக்கு. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எப்படி செட்டில் ஆகணும்னு நல்லா தெரிஞ்சிருக்கு. அதை இதைப் பண்ணி பணக்கார பசங்களை ஈஸியா கைக்குள்ள போட்டுக்கறாங்க! இந்த பொண்ணை ரொம்ப அப்பாவின்னு நினைச்சேன். ஆனா விவரமாத்தான் இருந்திருக்கா!” என கனகராஜ் பழச்சாறை விழுங்கியபடி மேடையில் நிற்கும் மேகாவை பார்த்துக்கொண்டே தன் மனதில் உள்ள மொத்த ஆதங்கத்தையும் கூற, அக்னியின் முகம் விகாரமாய் மாறியது.
சட்டையை முழங்கை வரை ஏற்றி கனகராஜை வெளுத்து வாங்குவதற்காக தயாராய் நின்றவனின் தோரணையைக் கண்ட அஷோக்கோ, அமைதியாக இருக்கும்படி கண்ணசைக்க, தீரேனோ அதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
“பேசணும் வா!”கனகராஜை ஒருமையில் விளித்த தீரன், அவனைத் தன் கண்கள் இடுங்க பார்த்தபடி முன்னே நடந்து செல்ல, தீரனின், ‘வா’ என்ற விளிப்பில் அதிர்ச்சியடைந்த கனகராஜ்,
“என்ன பேசணும்? ஏன் அவர் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என அஷோக்கிடம் கேட்க,
“உங்களுக்கே தெரியும்” என்றவன் அவரை முன்னே போகும்படி செய்கை செய்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து மண்டபம் திரும்பினார் கோபாலகிருஷ்ணன். விழிகள் பயங்கரமாய் சிவந்திருந்தது.
“எங்கே போயிருந்தீங்க கிருஷ்ணா? கால் பண்ணினா கட் பண்றீங்க! சம்பந்தி உங்களை தேடிட்டே இருந்தாரு, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” தவிப்புடன் கேட்டார் ராதிகா.
“ஒன்னும் இல்லை, ஒரு சின்ன வேலை. நான்தான் கூட்டிட்டு போயிருந்தேன்” என்றார் கோபாலகிருஷ்ணனின் நண்பர் நிலவன்.
“வாங்க அண்ணா, லேட்டா வந்திருக்கீங்க, வொய்ஃப் புள்ளைங்களை எல்லாம் கூட்டிட்டு வரலையா?”
“இல்லைமா. அவ புள்ளைங்களை கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு போயிருக்கா!”
“சரி, வாங்க அண்ணா!” என்ற ராதிகா, “கிருஷ்ணா, சம்பந்தி ஏதோ பேசணும்னு சொன்னாரு” என்றவர் கணவனின் வாடிய முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.
ஆக எப்படி நடக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நிச்சயதார்த்தம், எந்தவித தடங்கலும் இன்றி இனிதே நடைபெற்று முடிந்திருந்தது. மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரின் தூரத்து நண்பர்கள் அனைவரும் அந்த ரெசார்ட்டிலே தங்கிவிட, மேகா தன் தோழி இஷிதா மற்றும் தன் குடும்பத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள்.
செல்லும் வழியெல்லாம் மேகா நடுக்கத்துடனே அமர்ந்திருக்க, இஷிதாவோ, “என் அப்பாக்கு அறிவு கிடையாது, அது தெரிஞ்சதுதான். உன் அப்பாக்கு எங்கேடி போச்சு அறிவு? இப்படி பண்ணிட்டாங்க!” என்று பற்களை கடித்தபடி கூறினாள்.
“இப்போ என்னடி பண்றது?” மேகாவுக்கு எங்கேயாவது சென்று மறைந்து கொள்ளலாம் போல இருந்தது. இஷிதாவுக்கோ அவ்வளவு ஆத்திரம் வர, மேகாவின் வீட்டார் முன்பு கோபத்தை வெளிப்படுத்த இயலாது காரில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ரிசார்ட்டில் தனக்கான அறையில் உள்ள ரெஸ்ட்ரூமில் இருந்து பூத்துவாலையால் தன் முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ரிதுராஜ், விடாமல் மாறி மாறி ஒலிக்கும் காலிங்பெல் மற்றும் கதவு தட்டும் சத்தம் கேட்டு சிறு பதற்றத்துடன் கதவை திறந்தவன், அதிர்ச்சியடைந்தான்!

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 16.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.