“இதெல்லாம் தேவையாடா? இப்போ எதுக்கு நாம இங்க தங்கியிருக்கோம் அக்னி?” பால்கனியில் கைகளை குறுக்கே கட்டியபடி நின்றிருந்த தீரனிடம் வினவினான் அஷோக்.
“மேகா கல்யாணத்தை அட்டென்ட் பண்றதுக்காக” முகம் கொள்ளாப் புன்னகையுடன் கூறினான் தீரன். ஆனால் அவன் சிரிப்போ வில்லனின் சிரிப்பு போல வில்லங்கமாக இருந்தது.
“தீரா, உன்னை புரிஞ்சிக்கவே முடியலடா! ஆனா பெரிய சம்பவம் ஒன்னு நடக்க போகுதுன்னு மட்டும் புரியுது” என்ற அஷோக்கின் பார்வை அக்னியின் முகத்தை ஆராய, “ஆஹாங்!” என்றவன் இப்பொழுதும் அதே போல் சிரித்தான்.
“தேவையில்லாம லேட் பண்ணிட்டு இருக்கோம் தீரா! இது பிஸ்னஸ் இல்லை, ஒன்னு போனா இன்னொன்னு போறதுக்கு. இது வாழ்க்கை, கொஞ்சம் தப்பா போனாலும் மேகாவை நீ இழந்திருவ!” நண்பனின் பயத்தையும், அவன் தன் மேல் கொண்டுள்ள அக்கறையையும் உள்வாங்கிக் கொண்ட அக்னி,
“இது நான் ரிதுராஜ்க்கு வச்சிருக்க டெஸ்ட் அஷோக், பார்க்கலாம்” என்றவன், “அதுவரை இந்த கேமை நல்லா என்ஜாய் பண்ணு!” விஷமப் புன்னகையுடன் கூறினான்.
கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாத தீரனை அஷோக்கே ஆச்சரியமாக பார்த்தான்.
சமையலறையில், “வெளித்தோற்றம் வச்சு ஒருத்தங்களை நாம எடைபோடக் கூடாது. பாருங்க, எவ்வளவு மரியாதையா பேசுறாங்க, நானும் உங்க பேச்சை கேட்டு தப்பா நினைச்சிட்டேன்! பார்க்கத்தான் தாடியும் மீசையுமா பெரிய உருவமா இருக்காங்க. பேசினாத்தான் தெரியுது அவங்க மனசு போல அவங்களும் தங்கமானவங்கன்னு! அதுல அந்த அஷோக் தம்பி பேசவே மாட்டார் போல, ரொம்ப அமைதி. அந்த அக்னி தம்பிதான் ஏதோ பேசுச்சு! எவ்வளவு தன்மையாவும் பொறுமையாவும் பேசுறாங்க. ரொம்ப சாஃப்ட் போல. நீங்க பயப்படத் தேவையே இல்லை. நல்லவங்க தான். உன் அப்பாக்கும் எனக்கும் அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு” ராதிகா தன் பங்கிற்கு பாராட்டு கடிதம் வாசிக்க, மேகாவின் முகம் சுருங்கிப் போனது.
இஷிதாவோ, ‘ஆமா ஆமா. ரொம்ப சாஃப்ட், ஒருநாள் அவனுங்க கூட தங்கிப் பாருங்க, நெஞ்சுவலியே வந்திரும் உங்களுக்கு’ என மனதிற்குள் புலம்பியவள், ராதிகாவிடம், “ஆனா ஆன்ட்டி வயசு பொண்ணுங்க, மூனு பேர் இருக்கும் பொழுது, பேச்சிலர் ஆம்பளைங்க தங்குறது சரியில்லை தானே?” என்று கூறினாள்.
“ஏய், அந்த மாதிரி தப்பான ஆளா இருந்தா, உன் அப்பா தங்க வைக்கச் சொல்லிருப்பாங்களா? அந்த பசங்கள பார்த்தா அப்படித் தெரியல. நீங்க தேவையில்லாம கற்பனை பண்ணாம சீக்கிரம் போய் தூங்குங்க. நாளைக்கு நகை கடைக்கு போகணும், காலையிலே ரெடி ஆகுங்க! அப்படியே புடவை கடைக்கும் போகணும்” என்றவர் அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தபடி அங்கிருந்து சென்றுவிட, இருவரும் சோர்வான முகத்துடன் தங்களின் அறைக்குள் வந்து அடைந்து கொண்டனர்.
“உன் அப்பாவும், அக்னியும் இவ்வளவு க்ளோசாடி? இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு இஷு!” மெத்தையில் படுத்திருந்த மேகாவுக்கு உறக்கம் மட்டும் எங்கோ சென்றிருக்க, அவன் என்ன செய்வானோ என்கிற பீதியிலே வினவினாள்.
“அக்னி, கனகராஜுக்கு ஃபைனான்ஸ் பண்ணிருக்கான்னு தெரியும். ஆனா அந்த ஆளும் அக்னியும் இவ்வளவு க்ளோஸ்ன்னு சத்தியமா தெரியாதுடி! அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவரை விட்டு வந்துட்டேன்னா, அதான் அவரை பத்தி எனக்கு எதுவும் தெரியல. ஆனா பயப்படாதே, அவன் ஏதாவது செய்யணும்னா உன்னை பார்த்த அந்த நிமிஷமே உன்னை கூட்டிட்டு போயிருக்க முடியும். அவன் எதுக்கும் அசராத ஆளுதான். ஆனா, அவன் அப்படி எதுவும் செய்யலையே! ஸோ பயப்படாம தூங்கு பார்த்துக்கலாம்” என்றாள் இஷிதா.
‘என்னதான் தன் தோழிக்கு தைரியம் கொடுத்தாலும், அக்னி மற்றும் அஷோக்கின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்? ஏன் அவன் பொறுமையாக இருக்கிறான்? அவன் திட்டம் என்ன?’ என்னும் பயமும் குழப்பமும் அவளை படுத்தி எடுத்தது. மேகாவோ தீரனின் மிரட்டலை எண்ணியபடியே கண்மூடிக் கிடந்தாள்.
வெகுநேரமாக கண்களை மூடியபடி படுத்திருந்த இஷிதா, மேகா தூங்கியதும் மெல்ல எழுந்தவள், நேரே சென்றது என்னவோ அஷோக்கின் அறைக்கு தான். கோபத்தில் வேகமாக கதவை தட்டப் போனவள்,
“ஏய் மெண்டல், கதவு திறந்து தான் இருக்கு. வா!” என்னும் அஷோக்கின் குரல் கேட்டு மேலும் எரிச்சல் அடைந்து புயல் வேகத்தில் நுழைந்தாள்.
அவனோ விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை தோரணையில், மெத்தையில் அமர்ந்திருந்து கால்களை நன்றாக நீட்டி, கையில் உள்ள திராட்சை பழங்களை ஒவ்வொன்றாய் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“வருவேன்னு தெரியும். ஆனா இவ்வளவு லேட் ஆகும்னு நினைக்கல!” என்றவன் கடுங்கோபத்தில் நின்றிருந்தவளை பார்த்து,
“என்னடி அதுக்குள்ள டிரெஸ் மாத்திட்டியா? ம்ம், லெஹெங்கால செமையா இருந்த, உன்கூட ஒரு செல்ஃபி எடுக்கலாம்னு நினைச்சிருந்தேன். சரி, என்ன வெறும் கையா வந்திருக்க, கைல பால் சொம்பெல்லாம் எதுவும் கொண்டு வரலையா?” என தன் கால்களை ஆட்டிக்கொண்டே கேட்க,
பொங்கி எழுந்தவள், “சொம்பா? இதோ தரேன்!” என அருகில் இருந்து தண்ணீர் பாட்டிலை அவன் மீது எறிய, அதை லாவகமாக பிடித்தவன், பாய்ந்து அவள் அருகே வந்தான்.
“என்ன மேடோம், உங்க வயலன்ட்டான ஆக்ஷன்ஸ் பார்த்தா, இன்னைக்கு செம ஸீன் இருக்கும் போலயே?” என கண்களை சிமிட்டி கூற,
அவளோ, “அஷோக், நான் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன்” என்றாள்.
“முக்கியமான விஷயம். அப்படின்னா, இம்பார்ட்டண்ட் மேட்டர் தானே?” சுண்டு விரலால் காதை குடைந்தபடி கேட்டவன், மீண்டும் மெத்தை மீது அமர்ந்துகொள்ள, இவளுக்குத்தான் பொறுமை எங்கோ பறந்து சென்றிருந்தது.
“ஆமா” பற்களை கடித்தபடி கூறினாள்.
“சரி, கதவை பூட்டிட்டு வா! வசதியா மெத்தை தானே போட்டு வச்சிருக்காங்க. சாவகாசமா படுத்துட்டே பேசலாம், ஒரே டயர்டா இருக்கு!” என கண்களை சிமிட்டியவன், அவளது கரம் பிடித்து இழுத்தான்.
அவனை அனல் தெறிக்கப் பார்த்தவள், “நான் அவ்வளவு சொல்லியும், உன் ஃப்ரண்ட கூட்டிட்டு ஏன்டா இங்க வந்த?” சற்றே உயர்த்திய குரலில், அதீத கோபத்தில் சீறினாள்.
“நான் அவ்வளவு சொல்லியும் உன் அண்ணன் கூட மேகாவுக்கு ஏன்டி கல்யாணம் ஏற்பாடு செஞ்ச?” அவளுக்கு மிஞ்சிய கோபத்தில், உச்சக்கட்ட ஆத்திரத்தில் உறுமினான்.
“ஐயோ எத்தனை தடவை சொல்றது, மேகாவுக்கு இதுல கொஞ்சமும் விருப்பம் இல்லைன்னு!” மூச்சு வாங்க கத்தியவளின் கரம் பிடித்து கட்டிலில் அமர வைத்தவன், குடிக்க தண்ணீர் கொடுத்தான்.
அவள் ஆசுவாசம் அடைந்த பிறகு, “இப்போ ஸ்டார்ட் பண்ணு!” என்றவன் கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நிற்க, அவன் நின்ற தோரணையில் அவனிடம் போராடும் உத்வேகத்தை இழந்தவள், ‘இவனிடம் கோபம் கொண்டால் வேலைக்காது’ என்பதை உணர்ந்து, அவன் கரம் பிடித்து தன் அருகே அமர்த்தியவள், “இங்க பாரு அஷோக்!” பொறுமையாக தன் உரையாடலை துவங்கினாள்.
“ம்ம், பார்த்துட்டு தான் இருக்கேன்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறியவனின் பார்வை போகும் திசையைக் கண்டவள், “என் முகத்தை பாரு அஷோக்!” சட்டென்று எழுச்சியுற்ற ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கூறினாள்.
“ம்ம், பார்க்கிறேன்” என்றவன் அவளது முகத்தையே பார்த்தான்.
“மேகா பாவம்பா! லவ் இல்லாம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா லைஃப் நல்லா இருக்காது.”
“ம்ம்”
“மேகாவிற்கு அக்னி மேல லவ் இல்லை.”
“ஓ” என்றவனின் பார்வை அவளது செவ்விதழை நோக்கி தன் பயணத்தை மேற்கொள்ள, கண்களை மூடி ஆழமான மூச்சை வெளியிட்டாள்.
அவனது முகத்தை தன் கைகளில் ஏந்தி, தனது விழிகளை அவனது விழிகளுடன் கலக்க விட்டபடி, “ப்ளீஸ் அக்னியை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பிரு! நாம மறுபடியும் சேரலாம். எல்லாத்தையும் மறந்துட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
“பிஸ்னஸ் பேசுறீங்களா ரிப்போர்ட்டர் மேடோம்?” அவனது குரலில் ஏகத்துக்கும் நக்கல் விரவியிருக்க,
“இல்லை, உண்மைய சொல்றேன். உனக்கு நம்ம காதல் வேணும்னா ஒழுங்கா அக்னியை கூட்டிட்டு கிளம்பு!” என தீர்க்கமாக கூறியவள் தன் முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து எழுந்துகொள்ள, அவளது கரம் பிடித்து அமர வைத்தான்.
அவளது தாடையை இறுக்கமாக பிடித்து, “மேகா, அக்னி முதன்முதல்ல நேசிச்ச பொண்ணு. ஸோ மேகா, அக்னிக்கு தான். யார் தடுத்தாலும் அவங்க கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன்” என்றவன் அவளது இதழில் அழுத்தமான முத்தம் பதித்து, “நீ எனக்கு தான், எவ்வளவு விலகினாலும், நான் விடமாட்டேன்” என்று கூறி அவளை பிடித்து தள்ளினான்.
“இனிமே நம்ம காதலை வச்சு பேரம் பேச என்கிட்ட வராதே! உயிரே போனாலும் என் அக்னிக்கு நான் துரோகம் பண்ணமாட்டேன். எனக்கு நேத்ராவும் நீயும் எப்படியோ அப்படித்தான் அக்னியும்” என்றான் உறுதியாக.
“ரிதுராஜ்க்கும் மேகாவுக்கும் என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு. இன்னும் ஒன் வீக்ல கல்யாணம். ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற?”
“நீ ஏன் இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற? கல்யாணத்துக்கு இன்னும் ஏழு நாள் இருக்கு. என் நண்பனுக்காக நான் முயற்சி பண்றேன், உன் அண்ணனுக்காக நீ முயற்சி பண்ணு. மேகா ரிதுராஜ்க்கு தான்னு கடவுளே முடிவு பண்ணிருந்தா, நான் என்ன, அக்னியே தடுத்தாலும் யாராலும் அதை மாத்த முடியாது. உன் அண்ணன் உண்மையாவே மேகாவை நேசிச்சா என்ன நடந்தாலும் அவன் பின்வாங்காம மேகாவை கல்யாணம் செய்வான். அவன் கல்யாணம் நடக்கும். ஸோ ரிலாக்ஸா நடக்குறதை வேடிக்கை பாரு. இதுல யார் காதல் ஜெயிக்குதுன்னு பார்ப்போம்!” என்ற அஷோக்,
“போறதுக்கு முன்னாடி லைட்டை ஆஃப் பண்ணிருடி!” என்றவன் குப்புறபடுத்து உறங்க, கோபத்தில் இஷிதா தலையணையை தூக்கி எறிந்தாள்.
“தேங்க்ஸ்டி!” என்றபடி அதை எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு அவன் உறங்க, கோபத்தில் கால்களை ஓங்கி மிதித்தவள், கதவை அடித்து சாற்றிவிட்டு செல்ல, கண் விழித்து மெத்தையில் அமர்ந்திருந்த மித்ரனுக்கு இஷிதா தங்களின் காதலை வைத்து பேரம் பேசியது மனதிற்குள் வலியை ஏற்படுத்த, “எத்தனை தடவைதான் என் காதலை உதாசீனப்படுத்துவடி!” என்றவன் உறக்கம் தொலைந்து போக, எழுந்து சென்று பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்றான்.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 17.3
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.