அக்னி வீசிய கனல் பார்வையில், மிரண்டு போய் அசையாமல் அதே இடத்தில் நின்றாள் மேகா. அதே பார்வையை வீசியபடி முகத்தில் சேறு வடிய, மேகாவை இன்னும் நெருங்கினான் அவன்.
அவன் நெருங்க நெருங்க, மேகாவுக்கு தான் இதயம் தாறுமாறாய் அடித்துக் கொண்டது. மேலும் கீழுமாய் மூச்சு வாங்க நின்றவளுக்கு, அவனது அனல் வீசிய விழிகள் அச்சுறுத்தியது. தீரனை ஏறிட்டு பார்க்கவே பயந்தாள். ஆனாலும் ஏனோ ஆள் துளைக்கும் அவனது பார்வை மட்டும் உயிர் வரை தொட்டு வருவதாய் உணர்ந்தாள்.
‘இதோ ஒரே எட்டில் நெருங்கிவிட்டான், என்ன செய்யப் போகிறான்?’ இதயம் அடித்துக் கொண்டது. நூலளவு இடைவெளி இருந்தும் ஏனோ, மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சேறு படிந்திருந்தும் அவள் முகத்தில் தெரிந்த கலவரம் அவன் கண்ணில் பட்டுவிட, அது அவனை கலங்கடித்தது.
‘இத்தனை நிமிடம் நான் பார்த்து ரசித்த அவளது குழந்தைத்தனம், புன்னகை, முகத்தில் இருந்த பிரகாசம் இதெல்லாம் எங்கே? ஏன் என் முன்பு மட்டும் அவள் இயல்பாக இருக்க மறுக்கிறாள்? ஏன் பயப்படுகிறாள்? அவளது பயத்தை நேற்று நீதானே ரசித்தாய். இப்பொழுது மட்டும் என்னாயிற்று?’ என மனசாட்சி கேட்டாலும், ஏனோ அவனுக்கு இந்த நொடி மேகாவின் முகம் மாற்றம் பிடிக்கவில்லை.
‘என்கிட்ட உனக்கு என்ன பயம்? ஏன் நீ நீயா இருக்க மாட்டேங்கிற?’ தீரனின் விழிகள் கேட்டது. பதிலுக்கு கிடைத்தது அதே மருண்ட பார்வை, உள்ளுக்குள் வலித்தது. பயத்தில் துடித்துக் கொண்டிருந்த அவள் அதரத்தை நிறுத்த துடித்த தன் இதழ்களை கண்டித்தவன், இடைவெளியே இல்லாது இன்னும் அவளை நெருங்கி வந்தான்.
அவனது நெருக்கத்தை கண்டு பயந்தவள், நிலை தடுமாறி பின்னோக்கி விழப்போக, தன் வலக்கரம் கொண்டு அவளது இடையைத் தாங்கியவன், அவள் விழுந்து விடாமல் தன்னோடு இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
தீரனை மிக நெருக்கத்தில் கண்ட மேகாவிற்கு சித்தமும் முடங்கிப் போக பதற்றத்தில் விழிகளை மூடிக்கொண்டாள். அவனோ அவளது மூடிய விழிகளை பார்த்தபடி, சற்று எட்டி விக்ரமின் கரத்தில் இருந்த தண்ணீர் டியூபை வாங்கி தன்னோடு சேர்த்து மேகாவையும் நனைத்தான். அவனிடம் இருந்து இதை சற்றும் எதிர்பார்க்காதவள் விழித்திருக்க, திடீரென்று விடாமல் கொட்டிய நீரால் தடுமாறியவள், அவனது மேல் சட்டையை நன்கு பற்றியபடி அவனோடு ஐக்கியமானாள்.
தீரனோ தன் விழிகளை மேகாவின் விழிகளுடன் உறவாட விட்டவன் அவளுக்குள் மூழ்கிவிட, பொல்லாத எண்ணங்கள் எல்லாம் அவனது உள்ளத்தில் தோன்ற, அவன் மேனி சிலிர்த்து அடங்கியது. அவன் முறைக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருந்தும் அவள் கண்கள் கசிந்தன. கொட்டும் நீரிலும் அறிந்து கொண்டான் அவளவன். துடைக்கத் துடித்தன கரங்கள். துணிந்துவிட்ட நேரம், மேகாவின் விரலில் மினுமினுத்த ரிதுராஜ் அணிவித்த மோதிரம், தீரனின் கண்ணில்பட, இத்தனை நேரம் மறைந்திருந்த கோபம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
“நெவர் மேகா!” உதடுகள் அவனையும் மீறி ஏதோ முணுமுணுக்க, தன் கரத்தில் இருந்த டியூபை வீசி அடித்தவன், அதே கோபத்தோடு தன் மார்பில் பதித்திருந்த அவளது கரத்தை ஒரே ஒரு பார்வைதான் பார்த்தான். தீ தெறிக்கும் பார்வை அது. சட்டென்று கரங்களை நீக்கினாள் மேகா. அவள் கரங்களை நீக்கிய மறுகணம், உடனே அங்கிருந்து வேக நடையிட்டு சென்றிருந்தான் தீரன்.
சென்று விட்டான். அவன் இங்கில்லை. மனம் பலமுறை சொல்லி அவளை ஆறுதல்படுத்தியது. ஆனாலும் அசையாமல் அதே இடத்தில் நின்றாள். அவளை சுற்றி புதிதாய் ஏதோ ஒரு சங்கடமான உணர்வு, என்னவென்று சட்டென்று உணர முடியவில்லை. ஆனால் அந்த உணர்வு அவளை மீண்டும் மீண்டும் சங்கடப்படுத்தியது, விடாமல் துரத்தியது. மீண்டும் யோசித்தவள் அதிர்ந்தே விட்டாள். அதிர்ச்சி என்றால் அப்படியொரு பேரதிர்ச்சி!
அவனது அருகாமை! நினைக்கும்பொழுதே மனம் படபடத்தது. ‘அவன்தான் அணைத்தான் என்றால், நீ விலகியிருக்க வேண்டாமா? ச்ச, என்ன தைரியத்தில் அவனுடன் அத்தனை நெருக்கமாக நின்றாய்?’ தன்னைத்தானே குற்றம் சுமத்திக்கொண்ட மேகாவுக்கு, அவளது மனம் ஆறவே இல்லை.
இது போதாதென்று மேலும் ஒரு சிந்தனை அவளை நிலைகுலைய செய்தது. ‘அவனது வாசம், அவனது ஸ்பரிசம்!’ என சிந்திக்க துவங்கியவளுக்கு, அவனது வாசனை, அவளுடைய சவாசத்திற்குள் கலந்து அவளது நெஞ்சம் எங்கும் வேகமாக பரவிக் கொண்டிருப்பதை போல உணர்ந்தாள்.
ஒருநொடி ஒரே ஒருநொடி ஏதோ அவனே தன்மீது படர்ந்திருப்பது போன்ற எண்ணம் தோன்றிவிட உடல் அதிர, நடுங்கியே விட்டாள். ‘எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இது? ச்ச, ஒரு கணம் என்றாலும் நான் எவ்வாறு அப்படி நினைக்கலாம்? மேகா ஏன் இப்படி எல்லாம் யோசிச்ச?’ அவள் மீதே ஒருவித அருவருப்பை உணர்ந்தாள். மேகாவின் கை கால்கள் எல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது.
உடனே சற்றும் சிந்திக்காமல், தன் முகம், கழுத்து, உடம்பு என தன் உடல் பாகங்களை தன்கரம் கொண்டே அழுத்தமாக துடைத்தாள். நகம் பட்டு கழுத்தில் ரத்தம் கசிந்ததை கூட அறியாமல் துடைத்தாள். துடைத்துக் கொண்டே இருந்தாள்.
“அக்கா என்னாச்சு?” விக்ரமும் மயூரியும், மேகாவின் விசித்திர நடவடிக்கையில் குழம்பி அவளை அழைக்க, அவர்கள் குரல் எதுவும் அவளது செவியில் எட்டவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தாள். வேகமாக குனிந்து தண்ணீர் ட்யூபை எடுத்தாள், சடசடவென தண்ணீரால் தலை முதல் தன் மொத்த மேனியையும் நனைத்தாள். இரண்டு, மூன்று, நான்கு என நிமிடங்கள் அதன் போக்கிலே கழிய, மேகா அப்படியே தண்ணீரில் தொப்பலாக நனைந்தபடி நின்றாள்.
ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியது. தன்னிலை மறந்து நின்றிருந்த மேகாவை, தங்கை மற்றும் தம்பியின் தொடுகை சுயநினைவுக்கு கொண்டு வர, முதலில் அவர்கள் தன் தோளைத் தொட்டதும் பயந்தவள், பிறகு அவர்கள் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொள்ள, மயூரியும் விக்ரமும் மேகாவின் இந்த நடவடிக்கையில் மிகவும் குழம்பிப் போனார்கள்.
என்னதான் மேகா அக்னியை மறுத்தாலும், வேண்டாம் என ஒதுக்கி தள்ளினாலும், அவளது எண்ணம் முழுவதையும் தீரன் அவளது அனுமதியின்றி, அவள் அறியாமலே ஆக்கிரமிக்கத் துவங்கினான்.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 18.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.