அனைவரும் நகைகளை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தும் எதையும் தேர்வு செய்யாமல் இருக்க, அஷோக்குடன் கடையை சுற்றி வந்த தீரனின் பார்வை போகும் திசையை கண்ட அஷோக் மெல்லிய புன்னகையுடன் நண்பனின் தோளை தட்டிவிட்டு ஒதுங்கிவிட, யாரோ இருவர் தங்களின் நகைகளை பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல, அந்த காலியான இடத்தில் சென்று அமர்ந்தான் தீரன்.
“என்ன சார் பார்க்கிறீங்க?” என கேட்ட கடை சிப்பந்தியின் முகத்தை ஒரு கணம் பார்த்தவன், தன் சட்டைப் பைக்குள் இருந்து சிறு பெட்டியை எடுக்க, அவனுக்கு திடீரென்று ஒருவித நடுக்கம்! எட்டி மேகா இருக்கும் திசையை பார்த்தான். அவள் தாய் ஏதோ கூற தலையசைத்து கொண்டிருந்தாள்.
கண்களை இறுக்கமாக முடிக்கொண்டவனின் செவியில், ஒரு குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது. கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டான். தீரனின் கண்கள் கலங்கியது.
“எந்தப் பொண்ண பார்த்தா உன் மனசு துடிக்குதோ, எந்தப் பொண்ணு உன்னைவிட, உன் பணத்தைவிட, உன் மனசை நேசிக்கிறாளோ, எந்த பொண்ணு நீ எந்த நிலையில இருந்தாலும் உன்னை அப்படியே ஏத்துக்கிறாளோ, எந்த பொண்ணை பார்த்தா அவ இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு தோணுதோ, அவதான் உனக்கானவ! அப்படி ஒருத்திய பார்க்கும்பொழுது அவகிட்ட உன் மனசோட சேர்த்து இதையும் குடு! அவ இன்பத்துலயும் துன்பத்துலயும் உன் கூடவே இருப்பா, உன்னைவிட்டு என்னைக்கும் போக மாட்டா!” தீரனின் தந்தையின் இறுதி வார்த்தைகள்.
அவனுக்காக அவர் விட்டுச் சென்ற பொன்மொழிகள். ஒவ்வொரு வரிகளும் அவன் மனதில் ஆழப்பதிந்திருக்க, கண்மூடி அதன் அர்த்தத்தை உணர்ந்தவனுக்கு ஒருவித உணர்வு. அது, ‘சலனமா, பயமா! சந்தேகமா?’ என தெரியவில்லை. ஆனால் அவன் மனதிற்குள் இவ்வாறு தோன்றியது.
‘தான் செய்யப் போகும் செயல் சரியா! தவறா?’ என எண்ணிய தீரனின் கரங்கள் நடுங்கியது. இதயம் வேகமாக துடிக்க மீண்டும் மேகாவைத் தேடினான். தேர்ந்தெடுக்கபட்ட தங்கநகைளில் தேவதையாக காட்சி அளித்தாள்.
அப்படியே அள்ளிக்கொள்ள அவன் கைகள் துடித்தது. ‘கம்பீரமான என் அருகில் என்னவள் இருந்தால் எப்படி இருக்கும்?’ எண்ணும்பொழுதே ஒருவித பரவசம். கர்வத்துடன் தன் எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து தன் மீசையின் நுனியை முறுக்கி கொண்டவன், வெகு நேரமாக தன்னையே பார்த்து கொண்டிருந்த சிப்பந்தியிடம் டப்பாவை நீட்டினான்.
“இதோட வேலைப்பாடு ரொம்பவே அழகா இருக்கு சார்! இதெல்லாமே பியூரான நவரத்தினங்களா? ரொம்பவே யூனிக்கா இருக்கு” சிப்பந்தி ஆச்சரியத்துடன் விழிவிரித்து கூறினான்.
“ம்ம்” தீரனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் மனம் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தது.
“இதை என்ன சார் பண்ணணும்?”
“இதுல...” தயங்கியவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி சொல்லி முடிக்க, தன் கைகளை அசைத்தபடி அங்கே ரிதுராஜ் வந்திருந்தான்.
மேகாவைப் பார்த்தான் தீரன். மெல்லியகீற்று போல புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது. மனதில் மீண்டும் ஒருவித தடுமாற்றம், ‘தான் செய்வது பிழையாகி விட்டால்?’ எண்ணும்பொழுதே அவனது இதயம் வேகமாக துடித்தது. தன் கரம் வைத்து நெஞ்சை அழுத்தமாய் பிடித்துக் கொண்டான்.
கண்களை மூடித்திறந்த அக்னிக்கு, ‘எது எப்படி இருந்தாலும் இனி இவள் இன்றி இந்த தீரன் இல்லை’ என்பது மட்டும் தெளிவாய் புரிய, சிப்பந்தியிடம் தன் தேவையை ஒருமுறைக்கு இரண்டுமுறை தெளிவுபடுத்தினான்.
அப்பொழுது தீரனின் தோள்மீது கை வைத்த அஷோக், “இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். பாரு, வந்து நிக்கிறான். அந்த கனகராஜை!” என சீறிய அஷோக்கின் தோள்மீது கை போட்டு,
“விளையாட்ட தனியா ஆடுனா சுவாரசியமாவே இல்லை அஷோக்” என்ற தீரனை கடுமையாக பார்த்த அஷோக், “இது விளையாட்டு இல்லை அக்னி. எதிரியை எப்பவுமே வீக்கா நினைக்கக்கூடாது. ரிதுராஜை வீக்கா நினைக்காதே!”
“ஆஹாங், அதுக்கு அவன் முதல்ல என் எதிரியா இருக்கணுமே?” என விஷமமாய் புன்னகைத்த அக்னியின் சிரிப்பில் ஒளிந்திருந்த அர்த்தத்தை உணர்ந்த அஷோக், தீரனை அழுத்தமாக பார்க்க, தீரனின் பார்வையோ மேகா மற்றும் ரிதுராஜிடமே தேங்கி இருந்தது.
கடையை வட்டமிட்டபடியே வந்த அஷோக்கின் கண்ணில் பட்ட ஒரு நகை மட்டும் சுவாரசியத்தை கூட்ட, கடை சிப்பந்தியிடம் அதை பற்றி வினவியவனின் விழிகள் பொங்கி வழியும் தாபத்துடன் தன்னவளை கண்டதும், சிப்பந்தியிடம், “இதை பேக் பண்ணி அதோ நிக்கிறாங்களே!” என ஏதோ கூறியவனின் இதழ்கள் குறும்பாய் வளைந்தது.
“யார் குடுத்தாங்க?” பேக்கிங் செய்யப்பட்ட பார்சலை நீட்டிய கடை ஊழியரிடம் வினவினாள் இஷிதா.
“அதோ அந்த சார்!” என்ற அந்தப்பெண், அதை இஷிதாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட, அஷோக்கை முறைத்தபடி பேக்கிங்கை பிரித்தவள், அதில் இருந்த பொருளைக் கண்டதும் அவளது முகம் குப்பென்று சிவந்துவிட கஷ்டப்பட்டு முறைத்தவள்,
“பொறுக்கி, புத்தி எங்கே போகுது பாரு? எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிருவான் போல, நல்லவேளை யாரும் பார்க்கல!” என அவனை திட்டிவிட்டு சென்றுவிட, அஷோக்கோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான்.
எல்லாருக்கும் பிடித்த வகையில் நகைகளை வாங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியபோது கண்ணாடி பெட்டிக்குள், பொம்மைக்கு போடப்பட்டிருந்த ஒரே ஒரு வெள்ளை கல் பதித்த நூல் போன்ற கழுத்து சங்கிலி ஒன்று, மேகாவின் கவனத்தை வெகுவாய் கவர்ந்தது.
பொதுவாக நகைகளில் அவளுக்கு பெரிய ஆர்வம் கிடையாது. உடுத்திய உடைக்கு ஏற்றது போல இமிடேஷன் நகைகள் அணிவதிலேயே ஆர்வம் கொண்டவளுக்கு, ஏனோ இன்று இந்த நகை ஆசையை உண்டாக்க, சிறு புன்னகையுடன் அதன் அருகே சென்றவள், அதன் அருகே இருந்த ஊழியரிடம் அதைப் பற்றிக் கேட்க, “சாலிட்டர் டைமண்ட் மேம், ஜஸ்ட் ட்வெல் லாக்ஸ்” அவர் புன்னகையுடன் கூற, மேகாவின் முகம் விழுந்துவிட்டது.
“புடிச்சிருக்கா?” ரிதுராஜின் கேள்வியில் விழித்துக் கொண்டவள்,
“நோ, ஜஸ்ட் பார்த்தேன்.”
“புடிச்சிருந்தா வாங்கிக்கோ! விலையைப் பத்தி யோசிக்காதே, உன்னை விட இது ஒன்னும் முக்கியம் இல்லை” புன்னகையுடன் அவளது விழிகளை நோக்கி கூறினான் ரிதுராஜ்.
“இல்லை, வேண்டாம் போகலாம்” என்றாள் மேகா.
“தென் ஓகே!” என தன் தோளை குலுக்கியவன் முன்னேறிச் செல்ல, மேகா இஷிதாவுடன் இணைந்து கொண்டாள். ஆனால் அந்த நகையை, அவள் ஆசை ததும்ப பார்த்ததையும், அந்த ஊழியர் சொன்னதும் அதை வேண்டாம் என்று கூறியதையும், அவளை விடாமல் துரத்தும் தீரனின் இரு விழிகள் கண்டுகொண்டதை மேகா அறியவில்லை.
நகை வாங்கி முடிக்கவே மணி இரண்டைத் தாண்டியிருக்க, அந்த கடையின் மேல்தளத்தில் உள்ள ரெஸ்டாரன்டில் மதிய உணவை முடித்து கொண்டவர்கள், அடுத்து முற்றுகையிட்டது என்னவோ புடவைகள் இருக்கும் தளத்தில்தான்.
தன் தந்தை, ரிதுராஜ் என தன் மொத்த குடும்பமும் தன்னுடன் இருந்தாலும் தீரனின் விடாமல் துரத்தும் பார்வையால் ஒருவித நடுக்கத்துடனே இருந்த மேகாவுக்கு பயத்தின் பாதிப்பால், எதிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள முடியவில்லை. நகை போல புடவையிலும் மற்றவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டாள்.
அப்பொழுது ரிதுராஜ், “உன் விருப்பப்படி எதுவுமே வேண்டாமா, ம்ம்? நாங்க என்ன சொன்னாலும் ஓகே சொல்ற! வா, உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு பாரு!” சட்டென்று ரிதுராஜ் மேகாவின் கரத்தை பிடிக்க வந்தான்.
அன்று பூட்டிய அறையில் தீரன் விடுத்த எச்சரிக்கை, மேகாவின் நினைவிற்கு வர, சுற்றும் முற்றும் தீரனின் விழிகளை தேடியவள், அவனை காணாது ஆசுவாசம் அடைந்து தன் கைகளை விலகிக் கொண்டாள்.
“ரொம்பத்தான் வெட்கப்படுற! பாப்போம் எத்தனை நாளைக்குன்னு?” என ரிதுராஜ் மென்னகையுடன் கூற, தலைகுனிந்து கொண்டவளுக்கு அதற்கு என்ன பதில் கூறவேண்டும் என்று சுத்தமாகத் தெரியவில்லை.
மேகாவோ பட்டுப்புடவை விடுத்து ரிதுராஜுடன் பார்ட்டி வியர் புடவை செக்ஷனுக்கு சென்று, அங்குள்ள புடவைகளை பார்த்துக்கொண்டு இருக்க, ரிதுராஜும் நடந்துகொண்டே அவளைவிட்டு தள்ளிச் சென்றபடி பார்வையிட்டு கொண்டிருக்க, அந்நேரம் அங்கு வந்த சேல்ஸ்மேன் தனியாக நின்ற மேகாவிடம் எப்படியான புடவை வேண்டும் என கதையளந்து கொண்டிருந்தான்.
மேகா தன் தேவையை கூற, “அங்கே வாங்க மேடம், நீங்க கேட்டது, அந்த செக்ஷன்லதான் இருக்கு?” அவனும் அவள் கேட்டது போல ஆடைகளை எடுத்து காட்டியவன்,
“மேல வச்சிப் பாருங்க மேடம், அப்போதான் நல்லா இருக்கும்” என்றவன் மேகா சுதாரிப்பதற்குள் ஒவ்வொன்றாய் தூக்கி அவள் மேலே வைத்துக்காட்ட, அவனது கரங்கள் தாராளமாக மேகா மேல் உரச, முதலில் தவறுதலாய் கை பட்டிருக்கும் என்று எண்ணியவளுக்கு, அவனது பார்வையின் அர்த்தம் கிலியை உண்டாக்கியது.
பதறி விலகியவளின் விழிகள் தன்னை மறந்து, சுற்றிச்சுற்றி உதவியை நாடியது என்னவோ, இனி பார்க்கவே கூடாது என்று நித்தமும் வேண்டிக்கொள்ளும், அவன் வேண்டவே வேண்டாம் என ஒவ்வொரு நொடியும் மேகா வெறுக்கும், அனல் தெறிக்கும் தீரனின் விழிகளைத்தான்!
“எனக்கு வேண்டாம்” என்றவள் சேல்ஸ்மேனை முறைத்தபடி அங்கிருந்து நகரப்போக,
“என்னாச்சு மேடம்? இந்த கலர் இன்னும் நல்லா இருக்கும்” புடவையுடன் அவனது கரங்கள் அவளை நோக்கி வர, அன்று கேஸ் ஏஜென்சிகாரன் தன்னை தவறாக பார்த்தது நினைவிற்கு வர நடுங்கியவள், ‘தீரன்’ என வாய்விட்டு சொல்ல வரவும், தீரனின் கரங்கள் சிப்பந்தியின் கரத்தை பிடித்திருந்தது.
ரிதுராஜ் மற்றும் மேகா இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த தீரன். ரிதுராஜ் மேகாவை தனியே விடுத்து செல்லும் பொழுதே தன் பார்வையை கூர்மையாக்கினான். அந்த சேல்ஸ்மேன் மேகாவிடம் ஏதோ சிரித்துப் பேசி, தனியே ஒரு ஓரமாய் அழைத்துப் போவதை கண்டு புருவம் சுருக்கிய தீரனுக்கு கோபம் வர, தன் இருக்கையில் இருந்து எழுந்து விறுவிறுவென அவ்விடத்திற்கு வந்தான்.
சேல்ஸ்மேன் புடவையை மேகா மீது வைக்கும் பொழுதே ஆத்திரம் கொண்டவன், மேகா பதறி விலகியும் அவன் மீண்டும் அவளை நெருங்கவும், பொங்கி எழுந்த தீரன் ஆக்ரோஷமாக அவனது கரத்தை பிடித்திருந்தான்.
“என்னடா?” சிம்மக்குரலில் அக்னி கர்ஜிக்க, அவனோ நடுங்கியே விட்டான்.
“ஒன்னும் இல்லை சார்” தீரனின் பிடியில் வலி எடுக்க, குரல் நலிந்து ஒலித்தது. தீரனின் ருத்ர தாண்டவத்தை ஏற்கனவே ஒருமுறை கண்டிருந்த மேகாவுக்கு பயம் எடுக்க, ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே தடுத்துவிட எண்ணியவள், “விடுங்க சார், அவர் ஜஸ்ட் புடவைதான் காட்டிட்டு இருந்தார்” தயங்கியபடி கூறினாள்.
“அப்படியாடா?” தீரனின் பார்வை அவனை எரித்தது.
“ஆமா சார்!”
“விடுங்க சார், ப்ளீஸ்!” என்ற மேகாவை ஒரு கணம் பார்த்தவன், கண்களால் சேல்ஸ்மேனை எச்சரித்தபடி அவனது கரத்தை விடுவிக்க, அவளும் உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
“நீ தீரன்னு என்னை கூப்பிட்டல?” என்றான் அவளது முகத்தை பார்த்தபடி.
அவன் மனதிற்குள் தன்னவள் தன்னை அழைத்தது போல ஒருவித பிரமை. அதனால் கேட்டு விட்டான்.
ஏற்கனவே, அப்பாவையோ, ‘ரிதுராஜையோ இல்லை விக்ரமையோ நினைக்காமல், ஏன் இவனை நினைத்தோம்?’ என உள்ளுக்குள் மருகி கொண்டிருந்த மேகாவுக்கு, தீரனின் கேள்வி தூக்கிவாரிப்போட முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டவள்,
“நோ, நான் ரிதுராஜை தான் கூப்பிட்டேன்” தீரனின் முகத்தை பார்த்து கூட பேசாது, கையில் புடவையுடன் தன்னை நோக்கி வரும் ரிதுராஜை கைகாட்டியவள், ஏதோ தீரனிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ரிதுராஜை நோக்கி ஓடாத குறையாக செல்ல, ‘என் முகத்தை பார்த்து கூட பேசமாட்டாளா?’ தீரனுக்கோ காலை போல மீண்டும் அவமானப்பட்ட உணர்வு.
“இந்த புடவை நல்லா இருக்கா? நான் உனக்காக செலெக்ட் பண்ணினேன்” என்றான் ரிதுராஜ்.
“தேங்க்யூ, நல்லா இருக்கு” என்றவள் பதற்றமாக இருப்பதை பார்த்து,
“என்னாச்சு?” எனக் கேட்க,
“கொஞ்சம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு” என்றாள்.
“சரி வா, ரெஸ்டாரண்ட் போகலாம். ஏதாவது ஜூஸ் குடி! உனக்கு பெட்டரா இருக்கும்” என்ற ரிதுராஜ் மேகாவை அழைத்துக்கொண்டு சென்றான்.

Author: Naemira
Article Title: மிருதன் 19.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.