கருப்புநிற ஹுடட் ஜெர்கின் அணிந்திருந்த அவன் சட்டென்று, தன் முதுகில் இருந்த பிஸ்டலை எடுத்து இமைக்கும் நொடிக்குள் இஷிதாவையும் மேகாவையும் நோக்கி மீண்டும் மீண்டும் சுட்டான். மேகா அலறித் துடிக்க சுட்டான்.
ஆனால் அவர்களோ குருதி சிந்தாமல், மிரட்சியுடன் கையில் இருந்த பாப்கார்னை வாயில் போட்டு மென்றபடி எதிரே இருந்த டிவியில் ஓடிய சண்டைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது இஷிதாவின் கையில் இருந்த ரிமோட்டை பிரித்த மேகா,
“இஷு, உனக்கு பார்க்க வேற ப்ரோக்ராமே இல்லையா? மாத்துடி, இப்போதான் ஒருத்தன் தொல்லை போய் நிம்மதியா இருக்கேன். மறுபடியும் அவனை ஞாபகப்படுத்துற மாதிரி சீனை வச்சிட்டு, மாத்து முதல்ல” என்றாள் கண்களில் மிரட்சி குறையாமல்.
“ஏய், ரிமோட்டை குடு! முக்கியமான கட்டம், இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும்” என இஷிதா ரிமோட்டை அவளிடம் இருந்து வாங்கி தன் கண்களில் கொஞ்சம்கூட பயமில்லாமல் அந்த சண்டைக் காட்சியை ரசிக்க, மேகாவிற்கோ அன்று இரவு அக்னியோடு இருக்கும்பொழுது நடந்த துப்பாக்கி சுடும் சம்பவம் நினைவில் வர, கண்களை மூடி மூச்செடுத்தவள், இஷிதாவிடம் இருந்து ரிமோட்டை வாங்கி,
“நைட் இந்த மாதிரி படம் பார்க்காதேன்னு சொன்னா கேட்குறியா?” என்றவள் மியூசிக் சேனலை வைக்க, இஷிதா, மேகாவை முறைத்துப் பார்த்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அவனை அரெஸ்ட் பண்ணிருப்பான். அந்த சீன் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைபட்டேன்” இஷிதாவின் குரல் குற்றம்சாட்டியது.
“அதை விடு, அந்த படம் நல்லாவே இல்லை, சும்மா அடிச்சிட்டே இருக்கான். இந்த பாட்டு பாரு எவ்வளவு நல்லா இருக்குனு!” என்று கூறி, ‘எங்கேயும் போகாமல், தினம் வீட்டிலேயே நீ வேண்டும்’ என்ற பாடலை மேகா முணுமுணுத்தபடி, தன்னை முறைத்து பார்க்கும் இஷிதாவின் முகத்தை டிவியை நோக்கித் திருப்ப, அவளது கையை தட்டிவிட்ட இஷிதா,
“வீட்லயே இருந்தா, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றது? பாட்ட பாரு” என்று கலாய்த்தபடி பாப்கார்னை விழுங்க, மேகாவின் பார்வை இஷிதாவை முறைக்கத் தவறவில்லை.
“எவ்வளவு அழகான ரொமான்டிக் லைன் இது, அதை ரசிக்கிறத விட்டுட்டு சும்மா கலாய்ச்சிட்டே இருக்க!” என்றாள் மேகா.
“அழகான ரொமான்டிக் லைன் தான். ஆனா கொஞ்சமாவது எதார்த்தம் வேண்டாமா?” என்றாள் இஷிதா.
“அம்மா தாயே! நானே ரொம்பநாள் கழிச்சு இன்னைக்கு தான் நிம்மதியா மூச்சுவிடுறேன். உன்கிட்ட ஆர்க்யூ பண்ண எனக்கு தெம்பில்லை பா, நான் தூங்க போறேன்” என்று எழுந்த மேகாவின் கரம்பிடித்து அமரவைத்த இஷிதா, டிவியை அணைத்துவிட்டு,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“ம்ம், சொல்லுடி!” பாப்கானை ஒவ்வொன்றாய் சுவைத்தபடி கூறினாள்.
“வாட் யூ திங்க் அபௌட் அக்னி?” மேகாவின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டாள்.
“இப்போ எதுக்குடி அவர் பேச்சு? நானே இப்போதான் கொஞ்சம் நார்மலா இருக்கேன்”
“சொல்லு மேகா!”
“அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்குடி? அவர் ஒரு பேஷண்ட், அவரை பார்த்துகிற பொறுப்பை கனகராஜ் சார், என்கிட்ட குடுத்தாங்க! நான் அதை செஞ்சேன், அவ்வளவுதான்!” முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லை.
“நிஜமாவா! அதை தாண்டி எந்த பீலிங்க்ஸும் உனக்கு இல்லையா?” என்று கேட்டாள் இஷிதா.
“இல்லைடி, உனக்கு என்னை பத்தி தெரியாதா?”
அழுத்தமாக கூறினாள்.
“தெரியும்டி. ஆனா அவர் உன்னை ரொம்ப கேர் எடுத்துகிட்டாரே, அதான் கேட்டேன்” என இஷிதா இழுக்கவும், அவளது முகத்தை பார்த்தாள் மேகா.
“இஷு, நான் அவருக்கு கேர் டேக் பண்ணினேன். அவர் பதிலுக்கு என்னை கேர் பண்ணினாரு. தேங்க்ஸ்னு வார்த்தையால சொல்லாம செயல்ல செஞ்சார் அவ்வளவுதான். ஒவ்வொரு பேஷண்ட்ஸ் ஒவ்வொரு விதமா நன்றி சொல்லுவாங்க! சில பேர் பொக்கே குடுத்து தேங்க் பண்ணுவாங்க. சிலர் ஸ்வீட்ஸ் குடுப்பாங்க, இதெல்லாம் நார்மல் பேஷண்ட்ஸ் பண்றது.
பட், அக்னி ரொம்பவே வித்தாயசமான ஆளு. அதிகமா உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு மனுஷன். அதான் அவரோட செய்கை எல்லாமே அதிரடியா இருக்கு. மே பீ அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி இருக்கலாம். இந்த மாதிரி பேஷண்ட்ஸையும் நான் பாத்திருக்கேன். சட்டுன்னு யார்கூடயும் மிங்கில் ஆக மாட்டாங்க. ரொம்ப அக்ரசிவா இருப்பாங்க. ஆனா புடிச்சிட்டா அவ்வளவு கேரிங்கா இருப்பாங்க, சின்ன குழந்தைங்க மாதிரி” என்று மேகா கூறவும் புன்னகைத்த இஷிதா,
‘டேய் அண்ணா, உன் ரூட் க்ளியரா இருக்கு. மேகாவை சம்மதிக்க வைக்கிறது உன் கையிலதான் இருக்கு’ என மனதிற்குள் குதூகலித்துவிட்டு மேகாவிடம்,
“நீ தெளிவா இருந்தா, சரிதான் மச்சி!” என்றவள், மேலும் தொடர்ந்து,
“நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள்.
“என்ன சர்ப்ரைஸ்டி?” என கேட்டாள் மேகா.
“நாளைக்கு உனக்கே தெரியும்” என்று இஷிதா புன்னகைக்க, தன் தோழியின் பிரகாசமான முகத்தை பார்த்த மேகா,
“என்னவோ இருக்கு, சொல்ல மாட்டேங்கிற!” என்று கூறி, உறங்குவதற்காக தன் அறைக்குள் சென்றாள்.
இஷிதாவிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த மேகா, சில நாட்காளாக தனக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்து, ஏதோ இப்பொழுதுதான் சுதந்திரக்காற்றை சுவாசிப்பது போல மிகவும் நிம்மதியாக காணப்பட்டாள்.
“இப்போதான் இது நம்ம ரூம் மாதிரி இருக்கு” என்றபடி இரவு உடைக்கு மாறிவிட்டு கண்ணாடி முன்னே வந்து நின்றவளுக்கு இத்தனை நாட்களாக காணாமல் போயிருந்த கன்னக்குழி புன்னகை மீண்டும் வந்து உறவாடியது. நிம்மதியாக மெத்தை மீது வந்து அமர்ந்தவள், வழமை போல தன் தாய், தங்கை மற்றும் தம்பியிடம் உரையாடிவிட்டு, நாற்காலியில் அமர்ந்தபடி கதை புத்தகத்தை புரட்டினாள்.
மேகா சென்றதும் தன் அறைக்கு வந்த இஷிதா, தன் தமையனுக்கு அழைப்பு விடுத்து, “டேய் அண்ணா, ஒழுங்கா நாளைக்கு சொதப்பாம அவகிட்ட பேசிரு!”
“கண்டிப்பா இஷு, சரி என்னை பத்தி ஏதும் சொன்னியா?” ஆர்வத்துடன் கேட்டான் ரிதுராஜ்.
“டேய் அண்ணா, உன் லவ்க்கு உதவிதான் செய்யமுடியும். நானே ப்ரபோசும் பண்ணினா அதை விட கன்றாவி வேற எதுவும் கிடையாது.”
“சரி சரி, என்னைப் பத்தி எதுவும் சொல்லுவாளா?” அதே ஆர்வத்துடன் கேட்டான்.
“அதெல்லாம் சொன்னதில்லை.”
“ஓ!” குரல் உள்ளே சென்றது.
“ரித்து உன்கிட்ட ஒரு விஷயத்தை இப்பவே சொல்லிடுறேன். என்னதான் அவ டெல்லி, சென்னைன்னு சிட்டில வளர்ந்திருந்தாலும் அப்பா பாக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன், கல்யாணத்துக்கு அப்புறம்தான் லவ் பண்ணுவேன்னு சொல்ற சாதாரண டிபிகல் தமிழ் பொண்ணு. ஸோ, நீ ப்ரபோஸ் பண்ணினதும் அக்செப்ட் பண்ணுவான்னு எல்லாம் சொல்லமுடியாது. எல்லாத்துக்கும் ரெடியா இரு, சரியா?” என்றாள் இஷிதா.
“அதெல்லாம் ஓகே சொல்லுவா! நீயே பாரு, சீக்கிரமாவே நாங்க ஜோடியா பைக்ல போவோம்” என்ற ரிதுராஜ் தங்கையிடம் நலம் விசாரித்து விட்டு மேகாவின் போட்டோவை பார்த்தபடி கண் உறங்கினான்.
நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்க, போர்வைக்குள் சுருண்டபடி மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மேகாவுக்கு திடீரென்று மின்சாரம் நின்றதில் மின்விசிறி தடைபட, முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பியது.
நிமிடங்கள் கடக்கக் கடக்க அதிகமாக வியர்க்கவும் தூக்கத்திலே அவள் புரண்டு படுக்க முயற்சித்தாள். திடீரென்று விட்டுவிட்டு வீசிய மெல்லியகாற்று ஒருவித இதம் அளிக்க, உறக்கத்திலே புன்னகைத்தவளுக்கு ஏனோ உறக்கம் தடைப்பட்டது. அரை உறக்கத்திலே லைட்டை போட சுவிட்ச் போர்ட் பக்கம் கையை தடவ, அறையில் மெல்லிய வெளிச்சம் பரவியது.
உறக்கத்திலே கண்ணை கசக்கியபடி விழித்தவளுக்கு அருகே மெத்தையில், ஒரு கையால் புத்தகத்தை வைத்து அவளுக்கு விசிறிக்கொண்டு, மறு கையை கன்னத்தில் வைத்தபடி அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் அக்னிதீரன். அவன் அருகே மொபைல் டார்ச் லைட்டை ஒளிரவிட்டபடி நின்றிருந்த அஷோக்கை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள் இஷிதா.
நேற்றிரவு முக்கியமான வேலையாக, வெளியூர் செல்ல வேண்டியிருப்பதாக கூறி அஷோக், அக்னியை அழைக்க, மனமே இல்லாமல் அவர்களின் வீட்டைவிட்டு கிளம்பிய தீரன் போவதற்குள், ‘வருவை இப்படி பார்த்துக்கோ, அப்படி பார்த்துக்கோ, அத சாப்பிட சொல்லு, இதை சாப்பிட சொல்லு!’ என இஷிதாவை படுத்திவிட்டுச் சென்றிருக்க, ‘ஷப்பா, இனி இவன் தொல்லை இல்லை’ என ஆனந்தக்களிப்பில் இருந்த மேகா, இன்று நள்ளிரவில் அவனைத் தன் அறையில் பார்த்ததும் பதறிவிட்டாள்.
மெல்லிய மொபைல் வெளிச்சத்தில், தீரனை மிக அருகில் கண்ட மேகாவுக்கு தூக்கிவாரிப்போட, அரண்டு எழுந்து அமர்ந்தவள், “ஸ்... தீ... தீர்... தீரன்... என் ரூம்ல என்ன பண்றீங்க?” சிக்கல் விழுந்த நூல் போல சிக்கி விழுந்தது வார்த்தைகள்.
“அடிபட்ட இடத்துல ஒரே வலி, அதான் வந்தேன் வரு. நீ தூங்கிட்டு இருந்தியா, அதான் அப்படியே பார்த்துட்டு இருந்தேன். நீ தூங்கு, நான் வீசுறேன்” என்றான் இயல்பாக. அவளுக்கோ மீண்டும் திகில் பங்களாவில் மாட்டிக்கொண்ட உணர்வு.
அப்பொழுது பார்த்து மயங்கி இருந்த மின்சாரம் மீண்டும் கண்விழித்துக் கொள்ள, அறை சட்டென்று பிரகாசம் ஆனது. ஏற்கனவே பயத்தில் இருந்த மேகாவுக்கு, அறை திடீரென்று பிரகாசம் ஆனதும், தேகத்தில் சிறு அதிர்ச்சியுடன் நெற்றியை நீவியவள், அறையில் இஷிதா மற்றும் அஷோக்கை பார்த்து மீண்டும் அதிர்ந்தாள்.
இஷிதா, ‘என்னடி இது?’ என்பது போல பற்களை கடிக்க, மேகாவிற்கோ விழிபிதுங்கியது.
“சார்” மூச்சு வாங்க அவனைப் பார்த்தாள்.
“தீரன்!” கண்கள் கோபத்தில் பளபளத்தது.
“தீரன்... தீரன்” திருத்திக் கொண்டாள்.
“ம்ம், சொல்லு வரு!” நாடியில் கைவைத்துக் கொண்டு அவளை பார்த்தபடியே கேட்டான்.
“வலிக்குதுன்னா கனகராஜ் சாரை வரச் சொல்லிருக்கலாமே?” தயங்கியபடி கேட்டாள்.
“வந்தான் வந்தான். அவன் பாக்குறது எதுவும் சரியில்ல. யாருக்கும் உன் அளவுக்கு டேலண்ட் இல்ல வரு” கழுத்தில் கை வைத்து நெட்டி முறித்தபடி கூறினான்.
இஷிதா பல்லைக் கடித்தபடி அஷோக்கை பார்க்க, அவளது பார்வையை புறந்தள்ளிய அஷோக்கால் ஏனோ மேகாவின் கெஞ்சல் பார்வையை ஒதுக்க முடியவில்லை. என்ன நினைத்தானோ, சட்டென்று மேகாவிடம்,
“மேகா, கொஞ்சம் வலிக்குதுன்னு சொல்றான் என்னனு பாக்குறீங்களா?” என்றான்.
வேறு வழியில்லாமல் சரி என்பதாய் தலையசைத்தவள் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு, அவனுக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டிருக்க, கண்களை விரித்து முறைத்தபடி நின்ற இஷிதாவை பார்த்து சொடக்கிட்ட தீரன்,
“ஏய் நீ தான், கிளம்பு! அதான் வரு முழிச்சிட்டால்ல” என்றான் அதட்டலாக.
மேகா புரியாமல் பார்க்க, “அது ஒன்னும் இல்லை வரு” என்று கட்டிலில் வந்து அமர்ந்தபடி தொடர்ந்தவன்,
“நீ தூங்கும்பொழுது என்னை உன் ரூம்குள்ள விடமாட்டேன்னு, உன் ஃப்ரண்ட் சொன்னா! நான்தான் அப்போ நீயும் உள்ள வான்னு இழுத்துட்டு வந்துட்டேன். ஆனா இப்போதான் நீ முழிச்சிட்டியே! அதான் அவளை போகச் சொல்றேன்” என்று கூறினான்.
இஷிதாவை பார்த்து, “போ!” என்று சொல்லிவிட்டு அஷோக்கை பார்க்க, அவன் பார்வையிலே அவன் சொல்ல வந்ததை உணர்ந்த அஷோக் அங்கிருந்து கிளம்பிவிட, இஷிதாவும் கிளம்பியிருந்தாள்.
ஹாலில் அலைபேசியை பார்த்தபடி நின்றிருந்த அஷோக்கை பார்த்து இஷிதா தீவிரமாக முறைக்க, ‘ம்ம், ஆரம்பி!’ என்று அவள் முகம் பார்க்காமலேயே செய்கை செய்தவனது விழிகள், அலைபேசியை விட்டு நொடி கூட அகலவில்லை.
“என்ன அஷோக் இதெல்லாம்?”
“என்னனு சொன்னாத்தானே தெரியும்?” பார்வை அலைபேசியில் தான் இருந்து.
“தெரியாத மாதிரி நடிக்காதீங்க!” இப்பொழுது இருவரது பார்வையும் சந்தித்துக்கொள்ள, தன் இடையில் கைகுற்றி ஆழ்ந்த மூச்சை வெளியிட்ட அஷோக்,
“தீரன்கிட்ட இதை பத்தி பேசுறேன்” என்றான்.
“பேசுறதுக்கு எதுவும் இல்லை. தயவுசெஞ்சு எங்களை விட்டு விலகிப் போயிடுங்க!” என கை எடுத்து கும்பிட்டவள், அவனை பார்த்து முறைத்துவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொள்ள முனையவும், கதவுக்கிடையில் தன் கால் வைத்து தடுத்தான் அஷோக்.
“அஷோக், கால் எடுங்க!” சீறினாள்.
“உள்ள விடுடி!” கட்டளையிட்டான்.
“மித்ரன் ப்ளீஸ்!”
“உள்ள விடுடி!” கத்தினான்.
“கத்தாதீங்க, மேகாவிற்கு நம்மளை பத்தி தெரியாது” என்று அவள் கூறவும், அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன்,
“என்ன சொன்ன? விலகிப் போகணுமா? அது நீ, என்னை நெருங்குறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்” என்றான் அவளை சுவற்றோடு சிறைவைத்தபடி.
அவன் மூச்சுக் காற்றோ அவள் முகத்தில் பட்டுத் தெறிக்க, கண்களை மூடித் திறந்தவள், “மித்ரன், லீவ் மீ!” என்றாள்.
“முடியாதுடி!” என்றவன் அவள் இதழ்நோக்கி குனிய,
“தென், ஐ அம் ஸாரி மித்ரன், எனக்கு வேற வழி தெரியலை” என்றவள் தன் முட்டியை தூக்கி அஷோக்கை அடிக்கப் போக, அவனோ லேசாக விலகி சட்டென்று தன் உள்ளங்கையை அவளது ஓங்கிய முட்டியில் வைத்து அழுத்தம் கொடுத்தவன், “யார்கிட்ட?” என ஒற்றை புருவம் உயர்த்தினான்.
தனது அதிரடியான செயலில் தடுமாறி நின்றவளின் இடைபிடித்து தன்னோடு இழுத்துக்கொண்டு தான் எண்ணியதை செயல்படுத்திவிட்டே விலகியவன், “விலகிப் போறதெல்லாம் நடக்காத காரியம்” என்று தீர்க்கமாக கூறி கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.
அவளோ அவன் முதுகை அடக்கப்பட்ட கோபத்துடன் வெறித்து பார்த்தவள், தன் இதழை அருகில் இருந்த டவலால் அழுத்தமாக துடைத்தாள். கண்கள் கண்ணீரில் நனைந்தது.
“எங்கே வலிக்குது தீரன்?” என்றபடி அவன் காயத்தை ஆராய்ந்த மேகா, “என்ன இது? பிளட் லீக் ஆகியிருக்கு தீரன். ஏதாவது ஸ்ட்ரெயின் பண்ணுனீங்களா?” காயத்தை சுத்தம் செய்தபடி கேட்டாள்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேகாவையே ரசித்து கொண்டிருந்த தீரன், சிலமணி நேரத்திற்கு முன்பு மேகாவை பார்ப்பதற்காக தன் வீட்டில் இருந்து வெளியேற, அப்பொழுது அவனைத் தடுத்த அஷோக் அவசியம் இல்லாமல் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தினான்.
உடனே தன் ஜிம் அறைக்குள் சென்றுவிட்டு, ஐந்தே நிமிடத்தில் கீழே வந்தவன் ரத்தம் கசிந்த தன் காயத்தை காட்டி,
“இப்போ போகலாமா?” என கேட்க, அஷோக் அக்னியின் செயலை கண்டு வியந்தான்.
பின்பு, ‘அவனுக்கு ஏதாவது நேரிடுமோ’ என்று பயந்து அவனை அழைத்துக் கொண்டு வேகமாக இங்கே வந்ததை எண்ணிப் பார்த்து புன்னகைத்தான்.
அப்பொழுது, “கொஞ்சம் வலிக்கும் தீரன், பொறுத்துக்கோங்க!” என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் புன்னகைப்பதை பார்த்ததும், “வலிக்கலையா?” அதிர்ச்சியாக கேட்டாள்.
“அது என்னவோ வரு, நீ என்ன செஞ்சாலும் வலிக்க மாட்டேங்குது!” குரலில் அநியாயத்துக்கு நேசம் பொங்கியது.
“ஓ!” என்ன செய்வதென்று புரியாமல் கோபத்தில் இருந்தவள், தன் பணியைத் தொடர, அவன் தன் பணியை தொடர்ந்தான்.
“வலிக்குதா?” குற்ற உணர்வுடன் கேட்டான். அவன் பார்வை தன் ஐவிரலால் சிவந்திருந்த அவளது கழுத்தை சுற்றி வட்டமிட்டது. இன்றுதான் கவனித்தான். அன்று அவளது கழுத்தை நெரித்து தள்ளிவிட்டது ஞாபகம் வந்தது.
நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வை போன திசை கண்டு, “இல்லை தீரன், அந்த செகண்ட் தான் வலிச்சுது. இப்போ லேசா எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கு” தீரனின் வருத்தம் உணர்ந்து, அவன் குணம் அறிந்து அழகாய் சமாளித்தாள்.
“வலிக்குது வரு!” என்றான். கனல் விழிகளில்தான் அவ்வளவு வலி.
“அச்சோ, வேகமாக பண்ணிட்டேனா?” பதறியவள், அவனது வலிக்கான காரணம் புரியாமல் கேட்டாள்.
“ம்ஹூம்!” அவள் வெகுளித்தனம் கண்டு புன்னகைத்தவன், “நீ ரொம்ப அப்பாவி வரு! ரொம்ப நல்லபொண்ணு. அந்த மழைத்துளி மாதிரி, பச்சைக்குழந்தை மாதிரி ரொம்ப தூய்மையானவ நீ!” என தன் உள்ளம் உருக பேசியவனுக்கு ஏனோ, இந்த நொடியே அவளை கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதிக்கும் ஆசை, அடி நெஞ்சில் இருந்து பொங்கி வழிந்தது.
அவளுக்கோ அவனது பார்வை மாற்றமும் பேச்சும், ஒருவித சங்கடத்தை கொடுக்க, முடிந்தளவு அவனது பார்வையை தவிர்த்தபடி அமர்ந்திருந்தாள்.
முதன்முறையாக அவன் கண்கள் இன்று அவனது கட்டுப்பாட்டை தாண்டி அவள் மீது ஊர்வலம் வர, அவளால் அவனுக்குள் தூண்டிவிடபட்ட உணர்ச்சியை அவளிடமும் காட்டமுடியாமல், அதை கட்டுப்படுத்தவும் முடியாமல் மிகவும் போராடினான்.
வேறுவழியின்றி மனமே இல்லாமல் சட்டென்று அவளிடம் இருந்து விலகினான். விலகியவன் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றும் இருந்தான்.
அவனது விசித்திர நடவடிக்கைகளை கண்ட மேகாவிற்கு முதன்முறையாக அக்னியின் செயல் நெருடலை கொடுத்தது. மேகாவை விட்டு வந்துவிட்டான். அவள் இங்கு இல்லை. இது அவன் இல்லம், அவன் அறை!
ஏனோ இந்த நொடி அவனது விசாலமான, ஆடம்பரமான அறை கூட வெறுமையாக இருந்தது. புரண்டு புரண்டு படுத்தான் உறக்கம் வரவில்லை. உடலை வளைத்து தாறுமாறாய் நீந்தினான். மன அழுத்தம் தீரவில்லை. மனம் அவளையே நாடியது.
உடலை வருத்தி ஜிம்மில் மணிக்கணக்காக பயிற்சி செய்தான். அடங்காத மனம் அவளைத்தான் நாடியது. அவளது நினைவுகள் அலையைப் போல அவனை அடித்துச் செல்ல, மிரண்ட விழிகள், கொஞ்சும் இதழ்கள் என்று அவளைச் சார்ந்த அனைத்தும் அவனை இம்சித்தது. மனம் அவளது அருகாமையை தேடியது. அவள் அணைப்பிற்குள் அடங்கிக் கிடக்க வேண்டுமென்று மனம் பொல்லாத ஆசை கொண்டு தவித்தது.
என்னதான் மேகா, தான் ஆசை வைத்த பெண்ணாக இருந்தாலும், தான் உரிமையாக்கும் முன்பு, அவளை ஸ்பரிசிக்க நினைத்த தன் கரங்களை எண்ணி ஆத்திரம் கொண்டவனுக்கு, இது போன்ற உணர்வுகள் அனைத்தும் மிகவும் புதிதாக இருக்க மிகவும் திணறிய தீரன், அவளுடன் கழித்த ஒவ்வொரு மணித்துளிகளை எண்ணிப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 9
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.